மொ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்குள் 1
மொக்குளின் 1
மொசி 1
மொய் 4
மொய்த்த 9
மொய்த்தது 1
மொய்த்தலின் 1
மொய்த்தனர் 1
மொய்த்து 10
மொய்ப்பின் 1
மொய்ப்புற்று 1
மொய்ப்புற 1
மொய்ம்பன் 1
மொய்ம்பின் 6
மொய்ம்பினர் 1
மொய்யுற 1
மொழி 93
மொழி-தான் 1
மொழி-பொழுது 1
மொழிக்கு 1
மொழிந்த 2
மொழிந்தது 1
மொழிந்தனள் 1
மொழிந்து 6
மொழிய 3
மொழியா-மாத்திரம் 1
மொழியின் 1
மொழியினும் 2
மொழியொடு 2
மொழிவனளாக 1
மொழிவோள் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மொக்குள் (1)

செற்றுபு செறிந்தவை மொக்குள் ஆக – உஞ்ஞை:38/44

TOP


மொக்குளின் (1)

துளி பெயல் மொக்குளின் ஒளித்தல் அஞ்சுவென் – உஞ்ஞை:36/343

TOP


மொசி (1)

மொசி வாய் உழுவையும் பசி வாய் முசுவும் – இலாவாண:17/24

TOP


மொய் (4)

மெய் பனிபது போல் மொய் அவை மருள – உஞ்ஞை:37/114
முலை பூண் அழுத்திய மொய் சாந்து அகலம் – உஞ்ஞை:46/46
மொய் தழல் ஈமத்து முன்னர் காட்டிய – மகத:4/75
முதல் கோசம்பியும் மொய் புனல் யமுனையும் – மகத:22/81

TOP


மொய்த்த (9)

கற்றோர் மொய்த்த முற்று அவை நடுவண் – உஞ்ஞை:36/245
சிறாஅர் மொய்த்த அறாஅ விருப்பின் – உஞ்ஞை:38/24
மரம்-தொறும் மொய்த்த மாந்தர்த்து ஆகி – உஞ்ஞை:38/54
பல் படை மொய்த்த மல்லல் பெரும் கரை – உஞ்ஞை:39/29
கவர் கணை மொய்த்த கானத்திடை மறைத்து – உஞ்ஞை:56/247
மொய்த்த மாக்கட்டு ஆகி எ திசையும் – உஞ்ஞை:57/114
கண்ணுற மொய்த்த கழி பேர் அவாவினின்று – இலாவாண:5/124
வம்பலர் மொய்த்த அம்பலத்து அகத்தும் – இலாவாண:8/57
மொய்த்த மா நகர் முறைமுறை வருக என – நரவாண:7/69

TOP


மொய்த்தது (1)

வம்பலர் மொய்த்தது ஓர் வழி தலைப்பட்டு – உஞ்ஞை:36/222

TOP


மொய்த்தலின் (1)

மொய்த்தலின் மற்றவை மொய்ப்பின் நீங்க – உஞ்ஞை:40/307

TOP


மொய்த்தனர் (1)

வத்தவன் மறவர் மொய்த்தனர் எறிய – மகத:17/250

TOP


மொய்த்து (10)

மொய்த்து முகம் புதைதலின் முன் அடி காணார் – உஞ்ஞை:46/37
முட தாள் தாழை மொய்த்து எழு முழு சிறை – உஞ்ஞை:49/25
பனி தார் மார்பன் நிற்ப மொய்த்து உடன் – உஞ்ஞை:56/227
திணைகளும் கணக்கரும் இனையவர் மொய்த்து
நால் கயிறு அமைத்து கோல் கயிறு கொளீஇ – இலாவாண:4/37,38
மொய்த்து அழல் புதைப்பினும் புக்கு அவண் போ-மின் என்று – இலாவாண:17/77
மொய்த்து அலர் தாரோன் வைத்து நனி நோக்கி – மகத:14/98
பல்லோர் மொய்த்து செல்லிடம் பெறாஅது – மகத:16/24
வத்தவர் இறைவனொடு மொய்த்து இறைகொண்டு – மகத:17/203
முந்நூற்றறுவர் மொய்த்து ஒருங்கு ஈண்டி – மகத:19/190
முற்று உலகு எல்லாம் மொய்த்து ஒருங்கு தருதலின் – மகத:25/69

TOP


மொய்ப்பின் (1)

மொய்த்தலின் மற்றவை மொய்ப்பின் நீங்க – உஞ்ஞை:40/307

TOP


மொய்ப்புற்று (1)

எப்பால் மருங்கினும் மொய்ப்புற்று விளங்கி – உஞ்ஞை:58/26

TOP


மொய்ப்புற (1)

முத்த கலன் அணி மொய்ப்புற சேர்த்து – உஞ்ஞை:34/197

TOP


மொய்ம்பன் (1)

எறுழ் மிகு மொய்ம்பன் இழிந்து அகம் புகவே – வத்தவ:7/151

TOP


மொய்ம்பின் (6)

கூற்று உறழ் மொய்ம்பின் ஏற்று பெயர் அண்ணல் – உஞ்ஞை:54/66
ஆண்டகை மொய்ம்பின் ஓர் அரசு அடிப்படுப்பதூஉம் – இலாவாண:11/159
வலி கெழு மொய்ம்பின் வயந்தககுமரன் – மகத:9/122
வலி கெழு மொய்ம்பின் சிலத மாக்கள் – மகத:13/58
எரி சின மொய்ம்பின் தரிசகன் தங்கை – வத்தவ:7/6
மெச்சார் கடந்த மீளி மொய்ம்பின்
விச்சாதரர் உறை உலகம் விழையும் – நரவாண:3/44,45

TOP


மொய்ம்பினர் (1)

முழவு உறழ் மொய்ம்பினர் முடி அணி சென்னியர் – இலாவாண:6/127

TOP


மொய்யுற (1)

மொய்யுற தோய்ந்த நெய் தயங்கு பைம் தாள் – உஞ்ஞை:42/111

TOP


மொழி (93)

எதிர்_மொழி கொடீஇய எடுத்த சென்னியன் – உஞ்ஞை:32/31
படிற்று இயல் களைஇ பணி மொழி கிளவி – உஞ்ஞை:35/204
மாண் மொழி குருசில் ஆணை வைத்து அகம் புக – உஞ்ஞை:37/224
அச்ச பணி மொழி அமிழ்து என மிழற்றி – உஞ்ஞை:41/50
தம் மொழி கொளீஇ வெம் முரண் வென்றியொடு – உஞ்ஞை:42/6
மொழி அறி மகளிர் தொழுதனர் வணங்கி – உஞ்ஞை:42/134
துளக்கு_இல் நெஞ்சத்து துணிந்த வாய் மொழி
சால்வு அணி ஒழுக்கின் நூல் இயல் நுனித்த – உஞ்ஞை:42/163,164
எவ்வாய் அமரும் இன் மொழி கிளவி – உஞ்ஞை:44/125
அன்பு இன்று கிளந்த அருள்_இல் பொருள் மொழி
தோட்டியின் வணக்கம் வேட்டு அவன் விரும்பி – உஞ்ஞை:45/63,64
அரும் தவ மகளை திருந்து மொழி தோழன் – உஞ்ஞை:46/123
தெரிவனன் கூறிய தெளி மொழி கேட்டே – உஞ்ஞை:46/195
அடியுறை அருள் மொழி யான் பணிந்து உரைப்ப – உஞ்ஞை:47/8
அகல் மொழி தெரியும் அரு_மறை பொழுதும் – உஞ்ஞை:47/35
மகள் மொழி அல்லது மற்றைய கேளா – உஞ்ஞை:47/36
இரு நில மடந்தை திரு மொழி கேட்டு அவட்கு – உஞ்ஞை:47/60
உறு மொழி கேட்கும் உள்ளம் ஊர்தர – உஞ்ஞை:47/64
திரு ஏர் சாயலை தே மொழி துவர் வாய் – உஞ்ஞை:53/56
அம் மடி அன்றியும் ஆகும் மெய் மொழி
வருவோர்க்கு அறிய கூறி மற்று என் – உஞ்ஞை:54/97,98
அடையாள் அருள் மொழி அறிய கூறிப – உஞ்ஞை:54/105
வீர வெம் மொழி நீர்_அல பயிற்றி – உஞ்ஞை:55/138
பொய் நிலம் காட்டினர் என்பது ஓர் பொய் மொழி
வெம் நில மருங்கின் வேட்டுவர் எல்லாம் – உஞ்ஞை:56/162,163
மன் உயிர் காவலற்கு அ மொழி மெய் எனின் – உஞ்ஞை:56/167
அன்பு உடை அருள் மொழி நன்பு பல பயிற்றி – உஞ்ஞை:57/13
கிளியும் மயிலும் தெளி மொழி பூவையும் – உஞ்ஞை:57/38
கோல் தொழிலாளர் மாற்று மொழி இயம்ப – உஞ்ஞை:58/76
கண் அதிர்ந்து இயம்ப இன் மொழி பயிற்றி – இலாவாண:2/53
எண்ணாது ஈயுநர் இன் மொழி கம்பலும் – இலாவாண:2/75
ஏவல் மகளிர் வாய் மொழி கம்பலும் – இலாவாண:2/109
பொருந்து மொழி புற நிலை புணர்ந்து பலர் வாழ்த்தி – இலாவாண:3/35
தெரிவை மகளிர் தே மொழி கிளவி – இலாவாண:7/113
ஒண் தார் மார்பன் உதயணன் பணி மொழி
மந்திரமாக மகள்-மாட்டு இயைந்தவை – இலாவாண:8/35,36
கம்பலை புற மொழி நன் பல கேட்டும் – இலாவாண:8/79
ஆணை கூறாது அருள் மொழி விரவாது – இலாவாண:9/70
சில் மொழி தாதரை சேர்ந்ததற்கொண்டு – இலாவாண:9/124
மட மொழி மகளிரும் மைந்தரும் ஏறி – இலாவாண:12/38
அ மொழி கேளாது அசைந்த மாதரை – இலாவாண:16/80
உரை உடை முது_மொழி உரைத்தவற்கு உணர்த்தி – இலாவாண:17/22
வையகத்து உயர்ந்தோர் வாய் மொழி ஆதலின் – இலாவாண:17/41
வாய் மொழி வயந்தகன் இடபகன் என்ற – இலாவாண:17/152
பெருமான் பணி அன்று ஆயினும் தெரி மொழி
நூலொடு பட்ட நுனிப்பு இயல் வழாமை – இலாவாண:17/171,172
தீ உண விளியும் தே மொழி செம் வாய் – இலாவாண:18/92
வாய் மொழி வழுக்கி வரையின் விழுந்தே – இலாவாண:18/102
தே மொழி கிளவியின் திறல் வேறு ஆகி – இலாவாண:18/103
மொழி பல காட்டவும் ஒழியான் அழிய – இலாவாண:19/43
அஞ்சி அடைந்த அஞ்சில் தே மொழி
பஞ்சி மெல் அடி பாவாய் பரந்த – இலாவாண:19/168,169
நின்-கண் அ மொழி நிற்ப என்-கண் – இலாவாண:19/173
வாய் மொழி ஆக வலித்தனள் வழங்கி – இலாவாண:20/85
இன் மொழி விச்சை இலாமயன் என்னும் – மகத:1/53
வாழ்தல் ஆற்றான் வாய் மொழி அரசன் – மகத:4/64
தெரி இழை அல்குல் தே மொழி குறு_மகள் – மகத:5/73
கோல் தொழிலாளர் மாற்று மொழி விரவி – மகத:5/100
ஏயர் குருசிலை தூய் மொழி வினவ – மகத:6/188
மா மலர் கோதை மட மொழி ஊரும் – மகத:9/14
நீர் உடை வரைப்பின் நெடு மொழி நிறீஇய – மகத:9/150
அரு மொழி உணரும் பெருமொழியாளனை – மகத:12/4
வைத்துழி காட்டும் வாய் மொழி விச்சை – மகத:12/20
வாய் மொழி இசைச்சனும் வயந்தககுமரனும் – மகத:12/82
தே மொழி மாதர் தாய் முதல் கோயிலுள் – மகத:12/83
மதலை மாடத்து மட மொழி மாதரொடு – மகத:14/1
அன்பு உடை அருள் மொழி அடைந்தோர் உவப்ப – மகத:14/46
தே மொழி செ வாய் திரு_மகள் விரும்பும் – மகத:14/74
பெரு மொழி மெய் என பிரியா காதலொடு – மகத:14/254
பணி மொழி செ வாய் கணிகை மகளிரொடு – மகத:17/48
தேற காட்டி மாறு மொழி கொண்டு – மகத:19/99
கோயில் முற்றத்து உய்த்தலின் வாய் மொழி
உதயணன் தன்-மாட்டு உய்க்க இவற்றொடு – மகத:19/177,178
மாணகன் வாய் மொழி இது-ஆல் மற்று என – மகத:22/89
ஆனா நல் மொழி தான் அவள் கொண்டு – மகத:22/101
மெல் இயல் மாதர் நகு மொழி பயிற்ற – மகத:22/119
புலவி நோக்கமொடு நல மொழி நயந்து – மகத:22/179
தேன் தோய்த்து அன்ன திரு மொழி அளைஇ – மகத:24/4
அஞ்சுக என்னும் தொல் மொழி உண்மையின் – மகத:25/76
தே மொழி தேவியொடு தோழனை கண்டு – வத்தவ:4/98
மலி பெரும் காதல் மட மொழி பாவை – வத்தவ:5/94
இ நாளகத்தே சில் மொழி செ வாய் – வத்தவ:5/101
தூயன் ஆகி வாய் மொழி பயிற்றி – வத்தவ:6/80
வாய் மொழி சூழ்ச்சி தோழற்கு உணர்த்தலின் – வத்தவ:7/153
சலம்_இல் அருள் மொழி சால கூறி – வத்தவ:7/226
அழிதல் செல்லாள் மொழி எதிர் விரும்பி – வத்தவ:8/15
புல்லோர் வாய் மொழி ஒரீஇ நல்லோர் – வத்தவ:10/32
ஆணம் ஆகிய அரும் தவன் வாய் மொழி
பேணும் ஆதலின் பெருமகன் தெளிந்தவன் – வத்தவ:10/168,169
உறு தவன் புகழ்ந்து மறு_இல் வாய் மொழி
மனத்து அமர் தோழரொடு மன்னவன் போந்து – வத்தவ:10/174,175
கொடி ஏர் மருங்குல் குயில் மொழி செ வாய் – வத்தவ:13/64
சிறியோர்க்கு அருளிய உயர் மொழி வாசகம் – வத்தவ:13/116
மதித்தனன் ஆகி ஒரு மொழி கேள் இனி – வத்தவ:13/234
மெய் அன்று அ மொழி பொய் என்போரும் – வத்தவ:17/30
உரையன்-மின் இ மொழி புரையாது என்மரும் – வத்தவ:17/36
தேவ வாய் மொழி திரியாதாகலின் – நரவாண:3/105
மறாஅது அருள் என மட_மொழி உரைப்ப – நரவாண:3/167
குன்றா நல் மொழி ஒன்று அல பயிற்றி – நரவாண:3/223
வழுக்கா வாய் மொழி வல்லோர் வாழும் – நரவாண:6/21
இன்ப மொழி அவன் பல் முறை அறைந்த பின் – நரவாண:7/49
மாசு_இல் கற்பின் மட மொழி மட மகள் – நரவாண:8/61
பதர் இலை பணி மொழி பணை தோள் சில் நுதல் – நரவாண:8/68

TOP


மொழி-தான் (1)

மாறி நீங்குமோ மட_மொழி-தான் என – வத்தவ:7/122

TOP


மொழி-பொழுது (1)

வயந்தகன் மொழி-பொழுது இழிந்தது என் செயல் – வத்தவ:14/60

TOP


மொழிக்கு (1)

மாசு_இல் வீணை மட_மொழிக்கு ஈந்தோன் – உஞ்ஞை:36/308

TOP


மொழிந்த (2)

பிரிந்த பொழுதின் ஒருங்கு அவட்கு மொழிந்த
அரும் தொழில் தெளிவும் அன்பும் என்று இவை – மகத:21/3,4
ஆங்கு அவன் மொழிந்த அல்லல் நோக்கி – வத்தவ:7/199

TOP


மொழிந்தது (1)

மதியோர் மொழிந்தது இது என்று எண்ணி – உஞ்ஞை:35/13

TOP


மொழிந்தனள் (1)

மொழிந்தனள் அடக்கி முகிழ் விரல் பணை தோள் – இலாவாண:10/38

TOP


மொழிந்து (6)

தேம்பட மொழிந்து வேம்பு மனத்து அடக்கி – உஞ்ஞை:40/203
மொழிந்து இடை விலங்கி முன் நிற்போரும் – உஞ்ஞை:44/34
வயந்தககுமரனும் வாய் மொழிந்து ஆய்ந்த – மகத:19/186
கழிந்தவும் பிறவும் கட்டுரை மொழிந்து
பொன் இழை மாதரொடு இன் மகிழ்வு எய்தி – வத்தவ:2/93,94
திருமாதேவியொடும் தீவிய மொழிந்து தன் – வத்தவ:8/96
மொழிந்து அழிவோரும் – வத்தவ:15/119

TOP


மொழிய (3)

செவ்வி அறிந்து கவ்விதின் மொழிய
நள் இருள் நடை பிடி ஊர்ந்த நலிவினும் – உஞ்ஞை:57/80,81
நல் மூதாளன் பன்னினன் மொழிய
வாரி மருங்கு அற வற்றினும் அக-வயின் – மகத:12/12,13
தவ்வையை சேர்ந்து கவ்விதின் மொழிய
சென்றதும் நின்றதும் சிதைவு இன்று எண்ணி – நரவாண:1/27,28

TOP


மொழியா-மாத்திரம் (1)

எழுதும் என்று அவன் மொழியா-மாத்திரம்
கருதியது எல்லாம் கால் வல் இளையரின் – மகத:27/40,41

TOP


மொழியின் (1)

உறுதி மொழியின் உணர்த்துவனர் ஆகி – மகத:1/211

TOP


மொழியினும் (2)

ஊடிய தேவியை உணர்வினும் மொழியினும்
நாடும்-காலை நல் நுதல் மடவோய் – வத்தவ:8/100,101
சாயல் வகையினும் சால்பு உடை மொழியினும்
ஆசு_இல் வாயினும் அணி பெற நிரைத்த – வத்தவ:12/153,154

TOP


மொழியொடு (2)

திறன் அவள் மொழியொடு தெளிந்தனன் ஆகி – வத்தவ:13/21
தீவிய மொழியொடு சேதிபன் குறுகி – வத்தவ:13/152

TOP


மொழிவனளாக (1)

மொழிவனளாக முகத்தின் விரும்பி – நரவாண:8/128

TOP


மொழிவோள் (1)

கூட்டினளாகி மீட்டு அவண் மொழிவோள்
கோசலத்து அரசன் மா பெரும் தேவி – வத்தவ:13/35,36

TOP