ச – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 3
சக்கரம் 3
சகுனமும் 1
சகுனி 4
சங்க 3
சங்கம் 4
சங்கமும் 6
சங்கர 1
சங்கரன் 1
சங்கின் 1
சங்கினும் 1
சங்கு 3
சங்கும் 2
சட்டகம் 2
சடை 2
சடையினன் 1
சண்ட 1
சண்பக 1
சண்பகத்து 1
சண்பை 2
சண்பையுள் 1
சணாயும் 1
சத்தி 6
சத்தியகாயன் 1
சத்தியகாயனொடு 1
சத்தியும் 1
சத்தியூதி 1
சத்தியூதியை 1
சதங்கை 1
சதானிக 1
சதானிகன் 1
சதி 1
சதிர 1
சது 1
சதுக்கமும் 1
சதுர்த்தி 1
சதுர 2
சதுரம் 1
சதுரமும் 1
சந்த 2
சந்தன 16
சந்தனத்து 3
சந்தனம் 3
சந்தி 3
சந்திய 1
சந்தியும் 2
சந்தின் 1
சந்து 2
சந்தும் 1
சமணன் 1
சமம் 5
சமய 2
சமயத்து 1
சமயம் 1
சமயமும் 3
சமரம் 1
சமழ்த்தன 1
சமழ்த்தனன் 1
சமழ்த்து 1
சமழ்ப்பு 1
சமழ்ப்பு_இல் 1
சமிதை 2
சமிதையும் 1
சமைப்ப 1
சமைய 1
சயந்தம் 1
சயந்தி 4
சயந்தியம் 1
சரக்கினர் 1
சரம் 1
சரிதம் 1
சலசல 1
சலத்தில் 1
சலம் 4
சலம்_இல் 2
சலிப்ப 1
சவட்டி 3
சவரர் 4
சனத்திடை 1
சனத்திற்கு 1
சனத்தொடு 1
சனம் 5
சனமும் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சக்கர (3)

சத்தி முகமே சக்கர வட்டம் – இலாவாண:4/75
சக்கர நெடும் கொடி அற்றன ஆகி – மகத:27/77
சக்கர வட்டமொடு சங்கு பல பொறித்த – வத்தவ:10/93

TOP


சக்கரம் (3)

அம்பு வாய் அணிந்த பெரும் தண் சக்கரம்
சாந்தின் செய்த ஏந்து இலை எறி வேல் – உஞ்ஞை:41/9,10
பாத சக்கரம் மாறு எதிர் நீர்தர – இலாவாண:2/131
வழுக்கு_இல் சக்கரம் வல-வயின் உய்க்கும் – வத்தவ:5/106

TOP


சகுனமும் (1)

நிமித்தமும் சகுனமும் நய குணம் இன்மையும் – இலாவாண:18/39

TOP


சகுனி (4)

சகுனி கௌசிகன் வருக என தரீஇ – மகத:25/171
சகுனி கௌசிகன்-தன்னை அன்றியும் – மகத:26/10
சகுனி கௌசிகன் தன்னொடு மூவரை – மகத:26/30
சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே – மகத:26/47

TOP


சங்க (3)

சங்க படவமும் கம்பல விதானமும் – உஞ்ஞை:57/58
சங்க மன்னர்க்கு தம் படை கூட்டி – மகத:25/41
சங்க மன்னர் தம்தம் உரிமை – வத்தவ:4/14

TOP


சங்கம் (4)

தாழம் பறையொடு சங்கம் மணந்து இயம்ப – உஞ்ஞை:56/189
காமர் சங்கம் வாய்வதின் முழங்க – இலாவாண:5/19
சங்கம் ஆகி வெம் கணை வீக்கமொடு – மகத:17/38
மதி உறழ் சங்கம் நிதியம் சொரிய – நரவாண:6/29

TOP


சங்கமும் (6)

அறவோர் பள்ளி அந்தி சங்கமும்
மறவோன் சேனை வேழ சங்கமும் – உஞ்ஞை:33/77,78
மறவோன் சேனை வேழ சங்கமும்
புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும் – உஞ்ஞை:33/78,79
அரும் பொருள் உணரும் பெரும் கணி சங்கமும்
திணைகளும் கணக்கரும் இனையவர் மொய்த்து – இலாவாண:4/36,37
சங்கமும் கணையமும் சத்தியும் வாளும் – மகத:20/36
சங்கமும் முரசும் சமழ்த்தன இயம்ப – மகத:27/93
சங்கமும் துரமும் முரசினோடு இயம்ப – வத்தவ:1/18

TOP


சங்கர (1)

பொங்கு மலர் நறும் தார் சங்கர அரசனும் – மகத:17/31

TOP


சங்கரன் (1)

சங்கரன் வாழ்க என தங்கலர் எறிந்தும் – மகத:17/242

TOP


சங்கின் (1)

மதி உறழ் சங்கின் வாய்-வயின் போந்த – மகத:3/67

TOP


சங்கினும் (1)

சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை – இலாவாண:5/65

TOP


சங்கு (3)

சங்கு இசை வெரீஇ சால்பு_இல பொங்கலின – உஞ்ஞை:38/34
தத்து நீர் பெரும் கடல் சங்கு பொறை உயிர்த்த – உஞ்ஞை:47/254
சக்கர வட்டமொடு சங்கு பல பொறித்த – வத்தவ:10/93

TOP


சங்கும் (2)

வலம்புரி வட்டமும் இலங்கு ஒளி சங்கும்
வெண் கண்ணாடியும் செம் சுடர் விளக்கும் – இலாவாண:5/28,29
முரசும் சங்கும் முருடும் ஒலிப்ப – மகத:19/195

TOP


சட்டகம் (2)

கட்டளை அமைய சட்டகம் கோலி – உஞ்ஞை:41/6
உடப்பு சட்டகம் உண்டு எனில் காண்கம் – இலாவாண:19/40

TOP


சடை (2)

சீரை உடுக்கை வார் வளர் புன் சடை
ஏதம்_இல் காட்சியோர் மா தவர் உறையும் – இலாவாண:15/40,41
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை
ஏதம்_இல் காட்சி தாபதன் மட மகள் – வத்தவ:15/5,6

TOP


சடையினன் (1)

கழுவாது பிணங்கிய வழுவா சடையினன்
மற போர் ஆனையின் மதம் தவ நெருக்கி – வத்தவ:7/155,156

TOP


சண்ட (1)

கொண்டதை இது என சண்ட வேந்தற்கு – இலாவாண:9/92

TOP


சண்பக (1)

தண் பொழில் கவைஇய சண்பக காவில் – உஞ்ஞை:38/278

TOP


சண்பகத்து (1)

சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர் – உஞ்ஞை:33/22

TOP


சண்பை (2)

சண்பை பெரு நகர் சால்பொடும் விளங்கிய – இலாவாண:20/125
தண் புனல் படப்பை சண்பை பெரும் பதி – வத்தவ:4/61

TOP


சண்பையுள் (1)

சத்தியூதி முதலா சண்பையுள்
மித்திரகாமனை கண்டு மெலிவு ஓம்பி – வத்தவ:4/94,95

TOP


சணாயும் (1)

உழுந்தும் கொள்ளும் கொழுந்துபடு சணாயும்
தோரையும் துவரையும் ஆயவும் பிறவும் – உஞ்ஞை:49/107,108

TOP


சத்தி (6)

சத்தி முகமே சக்கர வட்டம் – இலாவாண:4/75
ஒத்து அமைத்து இயன்ற சத்தி கொடி உச்சி – இலாவாண:6/56
சத்தி குடத்தொடு தத்துறல் ஓம்பி – இலாவாண:20/111
ஒண் பொன் சத்தி திண் கொடி சேர்ந்து – மகத:3/32
வித்தக கைவினை சத்தி ஏறி – மகத:14/153
தாம் ஏற்று அழுத்திய சத்தி வாங்கி – மகத:20/63

TOP


சத்தியகாயன் (1)

சத்தியகாயன் மக்களை கூஉய் – வத்தவ:9/56

TOP


சத்தியகாயனொடு (1)

பத்தி பைம் பூண் சத்தியகாயனொடு
வேல் வரும் தானை நால்வரும் முதலா – மகத:23/28,29

TOP


சத்தியும் (1)

சங்கமும் கணையமும் சத்தியும் வாளும் – மகத:20/36

TOP


சத்தியூதி (1)

சத்தியூதி முதலா சண்பையுள் – வத்தவ:4/94

TOP


சத்தியூதியை (1)

தவறு_இல் செய் தொழில் சத்தியூதியை
வேண்டி கொண்டு மீண்டனன் போந்துழி – வத்தவ:4/88,89

TOP


சதங்கை (1)

மதம் கமழ் நறு மலர் சதங்கை தாமமும் – மகத:9/45

TOP


சதானிக (1)

சலம் தீர் பெரும் புகழ் சதானிக அரசனும் – மகத:18/17

TOP


சதானிகன் (1)

சாயா செங்கோல் சதானிகன் தேவி – இலாவாண:11/128

TOP


சதி (1)

வந்து அரிவையர் எதிர்வர சதி வகையால் – வத்தவ:12/171

TOP


சதிர (1)

சதிர திண்ணை தண் பூம் பந்தருள் – இலாவாண:2/69

TOP


சது (1)

சது வகை வேதமும் அறு வகை அங்கமும் – வத்தவ:3/63

TOP


சதுக்கமும் (1)

தெருவும் அந்தியும் தெய்வ சதுக்கமும்
பழ மணல் நீக்கி புது மணல் பரப்பி – மகத:5/43,44

TOP


சதுர்த்தி (1)

சதுர்த்தி இருந்து கதிர்த்த காப்பொடு – இலாவாண:3/131

TOP


சதுர (2)

சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து – உஞ்ஞை:50/7
சந்தன பலகை சதுர கூட்டமொடு – இலாவாண:15/7

TOP


சதுரம் (1)

திண் தூண் சதுரம் கொண்ட எல்லையுள் – மகத:9/39

TOP


சதுரமும் (1)

வட்டமும் சதுரமும் முக்கோண் வடிவமும் – உஞ்ஞை:42/29

TOP


சந்த (2)

சந்தன பலகையும் சந்த பேழையும் – உஞ்ஞை:57/34
சந்த கண்ணி தன் சிந்தை அறிய – மகத:8/128

TOP


சந்தன (16)

சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர் – உஞ்ஞை:33/22
சந்தன நறு நீர் மண்ணுறுத்தி ஆட்டி – உஞ்ஞை:34/188
சந்தன பீடிகை சார்வு அணை ஏறி – உஞ்ஞை:37/15
அம் தண் அகிலும் சந்தன குழையும் – உஞ்ஞை:41/32
சாதிலிங்கமும் சந்தன தேய்வையும் – உஞ்ஞை:41/130
சந்தன பலகையும் சந்த பேழையும் – உஞ்ஞை:57/34
அம் தண் பொதியில் சந்தன மரமும் – உஞ்ஞை:58/30
சந்தன பலகை சதுர கூட்டமொடு – இலாவாண:15/7
தண் நிதி பலகை சந்தன சார்வு அணை – இலாவாண:18/41
அந்தண உருவொடு சந்தன சாரல் – இலாவாண:20/44
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி – மகத:1/185
சந்தன சாந்திட்டு அன்ன தண்மையொடு – மகத:7/109
சந்தன குறையொடு சாந்திற்கு உரியவை – மகத:17/139
சந்தன பெரும் தூண் ஒன்பது நாட்டிய – மகத:22/250
வந்தனை என்று தன் சந்தன மார்பில் – வத்தவ:7/190
குளிர் கொள் சாதி சந்தன கொழும் குறை – வத்தவ:16/18

TOP


சந்தனத்து (3)

ஆன் கண் சந்தனத்து அரி கவறு பரப்பி – உஞ்ஞை:38/144
ஒண் பூம் காந்தள் உழக்கி சந்தனத்து
அம் தண் நறு மலர் அவிழ மலர்த்தி – மகத:1/189,190
குளிர் கொள் சந்தனத்து ஒளிர் மலர் காவும் – நரவாண:4/147

TOP


சந்தனம் (3)

பொதியில் சந்தனம் போழ்ந்துகொண்டு இயற்றி – இலாவாண:4/96
சீத சந்தனம் தாதோடு அப்ப – இலாவாண:9/157
சந்தனம் கலந்த அம் தண் நறு நீர் – இலாவாண:18/109

TOP


சந்தி (3)

சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து – உஞ்ஞை:50/7
சந்தி கோணமும் எந்திர ஆணியும் – உஞ்ஞை:58/51
கோண சந்தி தோரணம் கொளீஇ – இலாவாண:6/95

TOP


சந்திய (1)

மென் கிடை போழ்வை சந்திய ஆகி – உஞ்ஞை:42/36

TOP


சந்தியும் (2)

குலாவிற்கு அமைந்த கோல சந்தியும்
முகிழும் போதும் மகிழ் சுழல் அலரும் – இலாவாண:2/145,146
மன்றும் சந்தியும் ஒன்று கண்டு அன்ன – இலாவாண:8/70

TOP


சந்தின் (1)

மணி முதல் கொளீஇய மாண் பொன் சந்தின்
எரி மணி இமைக்கும் இலங்கு பொன் கோணத்து – உஞ்ஞை:46/156,157

TOP


சந்து (2)

நாட்டு சந்து இது நாம் இவண் நீந்தி – உஞ்ஞை:53/109
கோணம் கொண்ட கொளூஉ திரள் சந்து மிசை – இலாவாண:6/41

TOP


சந்தும் (1)

ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும் – உஞ்ஞை:50/32

TOP


சமணன் (1)

காள சமணன் காட்சி நிறுப்ப – உஞ்ஞை:36/248

TOP


சமம் (5)

பெரும் சின மன்னர் அரும் சமம் வாட்டி – உஞ்ஞை:42/5
இல்லை ஆதலின் வெல் சமம் பெருக்கி – உஞ்ஞை:43/29
வேக வேந்தன் வெம் சமம் முருக்கி – உஞ்ஞை:46/326
அமரா மன்னர் அரும் சமம் முருக்கி – மகத:5/4
தான் சமம் நின்று பாங்குற பகுந்து – வத்தவ:12/178

TOP


சமய (2)

சலசல மிழற்றும் சமய விகற்பமும் – உஞ்ஞை:32/4
தட கை பிணைஇ சமய காட்சியர் – மகத:18/93

TOP


சமயத்து (1)

அறு வகை சமயத்து உறு பொருள் ஒழியாது – இலாவாண:9/205

TOP


சமயம் (1)

சாங்கிய சமயம் தாங்கிய பின்னர் – உஞ்ஞை:36/252

TOP


சமயமும் (3)

அ தவப்பட்டு ஆங்கு அறு வகை சமயமும்
கட்டுரை நுனித்த காட்சியேன் ஆகி – உஞ்ஞை:36/233,234
ஆற்றுளி கிளந்த அறு வகை சமயமும்
ஏற்றல் காணும் எம் இறைவன் தான் என – உஞ்ஞை:36/242,243
ஐம் பெரும் சமயமும் அறம் தோற்றன என – உஞ்ஞை:36/249

TOP


சமரம் (1)

சாதிங்குலிகமொடு சமரம் ஒழுகிய – இலாவாண:5/22

TOP


சமழ்த்தன (1)

சங்கமும் முரசும் சமழ்த்தன இயம்ப – மகத:27/93

TOP


சமழ்த்தனன் (1)

முடித்தனன் என்று சமழ்த்தனன் நோக்கி – மகத:27/186

TOP


சமழ்த்து (1)

தன் ஒளி சமழ்த்து இவள் பெண் ஒளி புகற்ற – இலாவாண:3/155

TOP


சமழ்ப்பு (1)

சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து – உஞ்ஞை:50/7

TOP


சமழ்ப்பு_இல் (1)

சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து – உஞ்ஞை:50/7

TOP


சமிதை (2)

புண்ணிய பலாசின் கண் நிறை சமிதை
மு குழி கூட்டத்து உட்பட ஓக்கி – இலாவாண:3/14,15
சமிதை கிரிகை சால்புளி கழிப்பி – இலாவாண:3/81

TOP


சமிதையும் (1)

வேதியர் கடை தலை வேள்வி சமிதையும்
வாதிகர் கடை தலை வாச சுண்ணமும் – இலாவாண:2/94,95

TOP


சமைப்ப (1)

கொடி புரை கயிற்றொடு கொளுத்தினர் சமைப்ப
வடியின் அன்ன வாள் அரி தடம் கண் – உஞ்ஞை:55/54,55

TOP


சமைய (1)

சமைய விகற்பம் சால காட்டி – இலாவாண:8/141

TOP


சயந்தம் (1)

தவதி சயந்தம் புகுதும் புக்க பின் – மகத:25/112

TOP


சயந்தி (4)

வந்து ஒருங்கு ஈண்டிய பின்றை சயந்தி
நாடு வண்டு அரற்றும் கோடு உயர் சாரல் – உஞ்ஞை:57/20,21
சயந்தி அம் பெரும் பதி அமர்ந்து புக்கனரால் – உஞ்ஞை:58/108
சயந்தி அம் பெரும் பதி இயைந்து அகம் புகுதலின் – இலாவாண:1/1
சயந்தி அம் பதியும் பயம்படு சாரல் – வத்தவ:9/21

TOP


சயந்தியம் (1)

சயந்தியம் பெரும் பதி இயைந்து அகம் புக்கு – இலாவாண:10/4

TOP


சரக்கினர் (1)

இலைச்சினை ஒற்றிய தலை சுமை சரக்கினர்
நானம் மண்ணிய நீல் நிற குஞ்சியர் – மகத:17/152,153

TOP


சரம் (1)

சரம் பட நொந்து தளர்வுடன் அவண் ஓர் – வத்தவ:13/2

TOP


சரிதம் (1)

அறிவர் சரிதம் முறையில் சுட்டி – இலாவாண:2/134

TOP


சலசல (1)

சலசல மிழற்றும் சமய விகற்பமும் – உஞ்ஞை:32/4

TOP


சலத்தில் (1)

சால் அவை நாப்பண் சலத்தில் தீர்ந்த – நரவாண:7/92

TOP


சலம் (4)

சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை – இலாவாண:5/65
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர் – இலாவாண:9/137
சலம் தீர் பெரும் புகழ் சதானிக அரசனும் – மகத:18/17
சலம்_இல் அருள் மொழி சால கூறி – வத்தவ:7/226

TOP


சலம்_இல் (2)

சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை – இலாவாண:5/65
சலம்_இல் அருள் மொழி சால கூறி – வத்தவ:7/226

TOP


சலிப்ப (1)

சில் மலர் மிதித்து சிவந்து மிக சலிப்ப
மென்மெல இயலி வீதி போந்து – வத்தவ:17/98,99

TOP


சவட்டி (3)

வெல் போர் வேந்தன் வீரரை சவட்டி
எய்த போதுவல் ஏதம் ஆயினும் – உஞ்ஞை:43/77,78
தோகை செந்நெல் சவட்டி பாசிலை – மகத:2/18
வீசிய வாளினன் விறலோர் சவட்டி
வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் – மகத:20/106,107

TOP


சவரர் (4)

கவர் கணை வாழ்க்கை சவரர் புளிஞர் – உஞ்ஞை:55/68
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர் – இலாவாண:9/137
சவரர் புளிஞர் கவர்வுறு கடும் தொழில் – மகத:25/121
சவரர் புளிஞரும் குவடு உறை குறவரும் – மகத:27/8

TOP


சனத்திடை (1)

மயங்கிய சனத்திடை மம்மர் நெஞ்சமொடு – உஞ்ஞை:41/112

TOP


சனத்திற்கு (1)

ஈமம் ஏற்றி அவன் உரிமை சனத்திற்கு
ஏமம் ஈக என்று இடவகன் போக்க – மகத:27/190,191

TOP


சனத்தொடு (1)

கல்லா சனத்தொடு பல்லோர் சொல்ல – உஞ்ஞை:35/11

TOP


சனம் (5)

வரம்பு_இல் பல் சனம் பரந்த பழனத்து – உஞ்ஞை:38/48
மா சனம் புகழும் மணி புனைந்து இயற்றிய – வத்தவ:10/99
நிலை இடம் பெறாது நெருங்கிற்றால் சனம் என் – வத்தவ:15/151
நெருங்கிய பல் சனம் விரும்புபு நோக்க – வத்தவ:16/1
தண் கோசம்பி பெண் சனம் நோக்கி – நரவாண:8/34

TOP


சனமும் (1)

மன் பெரும் சிறப்பின் மனை பெரும் சனமும்
தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும் – வத்தவ:9/6,7

TOP