வீ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 2
வீக்கம் 5
வீக்கமொடு 2
வீக்கி 3
வீக்கிய 2
வீக்கு 1
வீக்குறு 1
வீங்கிய 1
வீங்கு 6
வீங்குபு 1
வீச்சுறு 2
வீச 4
வீசலின் 1
வீசி 15
வீசிட 1
வீசிய 3
வீசியிட்டு 1
வீசு 2
வீசுதல் 2
வீசுநர் 1
வீசுறும் 1
வீட்ட 1
வீட்ட_அரும் 1
வீட்டிடம் 1
வீட்டிய 1
வீட்டினது 1
வீட்டுதல் 1
வீடல் 1
வீடு 3
வீடும் 2
வீணை 30
வீணைக்கு 1
வீணையின் 1
வீணையும் 3
வீணையை 1
வீணையொடு 1
வீதல் 1
வீதி 10
வீதி-தொறும் 2
வீதி-தோறு 2
வீதி-தோறும் 1
வீதிய 1
வீதியில் 2
வீதியின் 3
வீதியும் 7
வீதியுள் 9
வீதியொடு 1
வீய்ந்தனன் 1
வீய 2
வீயா 7
வீர 10
வீரம் 1
வீரமும் 1
வீரமொடு 1
வீரர் 4
வீரரும் 1
வீரருள் 2
வீரரை 2
வீரன் 11
வீரனை 2
வீரிய 4
வீரியம் 2
வீரியர் 1
வீரியன் 3
வீவும் 1
வீழ் 17
வீழ்-மாத்திரம் 1
வீழ்க 2
வீழ்ச்சி 4
வீழ்ச்சியின் 2
வீழ்ச்சியும் 2
வீழ்த்த 5
வீழ்த்து 3
வீழ்தர 1
வீழ்தரு 2
வீழ்தலின் 2
வீழ்தலும் 1
வீழ்ந்த 15
வீழ்ந்த-காலை 1
வீழ்ந்ததன் 1
வீழ்ந்தது 1
வீழ்ந்தனர் 1
வீழ்ந்தனன் 2
வீழ்ந்தனையோ 1
வீழ்ந்து 6
வீழ்ந்தும் 1
வீழ்ந்தோர் 1
வீழ்பவை 1
வீழ்வது 2
வீழ்வர்-கொல் 1
வீழ 15
வீழவும் 9
வீழா 4
வீழின் 1
வீழினும் 4
வீளை 1
வீளையும் 1
வீற்றிடம் 1
வீற்றிரீஇய 1
வீற்றிருத்தற்கு 2
வீற்றிருந்த 13
வீற்றிருந்தனனால் 1
வீற்றிருந்து 2
வீற்றிருப்பதூஉம் 1
வீற்றிருப்புழி 1
வீற்று 2
வீற்றுவீற்று 1
வீறு 12
வீறுபடு 1
வீறுபெற 1
வீறோடு 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வீ (2)

விரும்பினர் கொண்டு வீ என உணரார் – இலாவாண:12/86
வீ ததை கானத்து விரதமோடு ஒழுகும் – வத்தவ:15/51

TOP


வீக்கம் (5)

வீக்கம் காணார் வேட்டுவர் எள்ளி – இலாவாண:17/59
வீக்கம் கொண்டு வெம்மைய ஆகி – மகத:5/21
வெப்ப மன்னர் வீக்கம் சாய – மகத:20/122
போக்கிய பின்றை வீக்கம் குன்றா – வத்தவ:4/30
வீக்கம் சான்றதும் விழுப்பம் அறாத – நரவாண:6/76

TOP


வீக்கமொடு (2)

போக்கிடம் இன்றி வீக்கமொடு பெருகி – உஞ்ஞை:40/209
சங்கம் ஆகி வெம் கணை வீக்கமொடு
பகை நமக்கு ஆகி பணித்து திறைகொளும் – மகத:17/38,39

TOP


வீக்கி (3)

நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி
அவி இடப்படின் என் ஆர் உயிர் வைப்பது – உஞ்ஞை:40/286,287
செம் நீர் போதொடு செறிய வீக்கி
பூம் சுமடு இரீஇ போற்றுவனர் தந்த – இலாவாண:5/48,49
பைம்பொன் பத்திரம் புளகமொடு வீக்கி
கதிர் நகை தாமம் எதிர் முகம் நாற்றி – மகத:5/51,52

TOP


வீக்கிய (2)

வீரிய தறுகணர் வீக்கிய கச்சையர் – உஞ்ஞை:46/18
செம்பொன் பாசிழை செறிய வீக்கிய
பைம் துகில் அணிந்த பரவை அல்குலள் – மகத:5/16,17

TOP


வீக்கு (1)

யாப்புறு புரி ஞாண் வீக்கு முதல் அவிழ – உஞ்ஞை:52/86

TOP


வீக்குறு (1)

வீக்குறு புரோசை வாய் பொன் பந்தத்து – உஞ்ஞை:49/12

TOP


வீங்கிய (1)

இடுகிய கரும் கண் வீங்கிய கொழும் கவுள் – மகத:8/51

TOP


வீங்கு (6)

கச்சு யாப்புறுத்த கால் வீங்கு இள முலை – உஞ்ஞை:34/202
முகிழ்ந்து வீங்கு இள முலை முத்து இடை நாற்றி – உஞ்ஞை:40/50
புடை வீங்கு இள முலை பூண் பொறை ஆற்றாது – உஞ்ஞை:42/126
பூம் கொடி புனைந்த வீங்கு முலை ஆகத்து – உஞ்ஞை:47/218
கோங்கு அரும்பு அழித்த வீங்கு இள மென் முலை – இலாவாண:2/211
கூம்பு முகிழ் அன்ன வீங்கு இள வன முலை – வத்தவ:11/75

TOP


வீங்குபு (1)

வீங்குபு செறிந்த வெம் கண் வன முலை – இலாவாண:19/109

TOP


வீச்சுறு (2)

வீச்சுறு கவரி தோற்றம் போல – உஞ்ஞை:42/246
வாய் சிறு புது புள் வீச்சுறு விழு குரல் – உஞ்ஞை:55/89

TOP


வீச (4)

மகர குண்டலம் மறிந்து வில் வீச
கிளரும் பாசிழை கிண்கிணி கணை கால் – உஞ்ஞை:40/103,104
பல் முறை வீச தொல் முறை வந்த – இலாவாண:18/115
கூன்_மகள் வீச ஆனா அகத்தே – மகத:13/84
பொங்கு மயிர் கவரி புடைபுடை வீச
கங்கை நீத்தம் கடல் மடுத்தாங்கு – வத்தவ:1/16,17

TOP


வீசலின் (1)

வேண்டேம் எனினும் ஈண்ட வீசலின்
இ நில வரைப்பில் கன்னியர்க்கு ஒத்த – மகத:13/26,27

TOP


வீசி (15)

கொல்வாள் வீசி கூற்று தலை பனிப்ப – உஞ்ஞை:43/76
பைம் தொடி பணை தோள் பைய வீசி
அம் செந்தாமரை அக இதழ அன்ன – உஞ்ஞை:53/148,149
முதிர் புலால் நாற்றமொடு முன்முன் வீசி
உதிர வழியே அதிர ஓடி – உஞ்ஞை:55/73,74
அரும் கல வெறுக்கை ஆர வீசி
விருப்புறு மனத்தவர் விண்ணவர் காப்ப – இலாவாண:4/200,201
ஏற்கும் மாந்தர்க்கு ஆற்ற வீசி
பூவினுள் பொலிந்த தாமரை போல – இலாவாண:5/125,126
விரவு மலர் போதொடு வேண்டுவ வீசி
பரவு கடன் கழித்தனன் பைம் தாரோன் என் – இலாவாண:6/169,170
பூம் கொடி கவரி புடைபுடை வீசி
தேம் கொடி பறவையும் திருந்து சிறை மிஞிறும் – இலாவாண:13/21,22
உறு பொருள் உள்ளது உவப்ப வீசி
வெறுவது விடாஅ விழு தகு நெஞ்சத்து – மகத:7/23,24
அயிலுறு வெம் படை அழல வீசி
கதுவாய் எஃகமொடு கடைமுதல்-தோறும் – மகத:24/148,149
நிழல் அணி நல் வாள் அழல வீசி
தாங்க_அரும் காதல் தம்பியர் சூழ – மகத:27/139,140
அருமறையாளர்க்கு எழு முறை வீசி
நனவில் கண்ட நல் நுதல் மாதரை – வத்தவ:7/131,132
உடையோர் இல்லோர்க்கு உறு பொருள் வீசி
உருவ தண் தழை தாபதன் மட மகள் – வத்தவ:15/100,101
தடம் தோள் வீசி தகை மாண் வீதியுள் – வத்தவ:15/134
நேர் இறை பணை தோள் வீசி போந்த – வத்தவ:17/39
மேயவை எல்லாம் காவலன் வீசி
முத்து மணல் பரந்த நல் பெரும் கோயில் – நரவாண:6/40,41

TOP


வீசிட (1)

தெரிவை மகளிர் திண் பார் வீசிட
மாலை ஓதி மடவரல் மகளிர்க்கு – இலாவாண:12/93,94

TOP


வீசிய (3)

மின் உமிழ்ந்தது போல் வீசிய வாளினர் – உஞ்ஞை:46/10
வீசிய வாளினன் விறலோர் சவட்டி – மகத:20/106
அரும் பொருள் வீசிய அங்கை மலரி – வத்தவ:15/90

TOP


வீசியிட்டு (1)

தளிர் பூம் கண்ணியும் தழையும் வீசியிட்டு
ஒளி பூம் தாமம் உள் பரிந்து சிதறி – இலாவாண:16/30,31

TOP


வீசு (2)

வெய்யொன் கதிர் ஒளி வீசு வளி நுழையா – இலாவாண:5/133
வீசு வளி கொடியின் விளங்குபு நின்ற – இலாவாண:9/97

TOP


வீசுதல் (2)

வீசுதல் ஓவா விழு தகு தட கை – இலாவாண:12/147
வெறுக்கை செல்வம் வீசுதல் ஆற்றாது – மகத:7/15

TOP


வீசுநர் (1)

மணி கை கவரி மரபின் வீசுநர்
புடை களிறு ஒருங்கு உடன் புகூஉம் அகலத்து – இலாவாண:2/63,64

TOP


வீசுறும் (1)

விளங்கு அறல் வெள்ளியின் வீசுறும் என்று அதன் – மகத:12/72

TOP


வீட்ட (1)

கேட்டும் அறியலம் வீட்ட_அரும் சிறப்பின் – மகத:4/92

TOP


வீட்ட_அரும் (1)

கேட்டும் அறியலம் வீட்ட_அரும் சிறப்பின் – மகத:4/92

TOP


வீட்டிடம் (1)

காட்டக மருங்கின் வீட்டிடம் அமைக என – உஞ்ஞை:58/79

TOP


வீட்டிய (1)

வெம் துயர் அரு வினை வீட்டிய அண்ணலை – இலாவாண:1/15

TOP


வீட்டினது (1)

வீட்டினது அளவும் விறல் படை வீரமும் – மகத:17/205

TOP


வீட்டுதல் (1)

வெற்றி காலத்து வீட்டுதல் அரிது என – வத்தவ:8/54

TOP


வீடல் (1)

மானம் வீடல் அஞ்சி தானம் – வத்தவ:2/22

TOP


வீடு (3)

வித்தக வீரன் விறல் படை வீடு என் – உஞ்ஞை:57/117
வீடு பெறல் யாது என விளங்கு_இழை வினவ – நரவாண:3/107
பலி வீடு எய்தி பரவுவனன் ஒத்து – நரவாண:4/96

TOP


வீடும் (2)

கருவிளம் கோடும் காழ் இருள் வீடும்
திரு விழை கழையும் தேக்கும் திமிசும் – உஞ்ஞை:41/33,34
யானை வாரியும் சேனை வீடும்
அடுத்தனை ஆராய்ந்து அறிய என்-வயின் – உஞ்ஞை:54/87,88

TOP


வீணை (30)

தான் பயில் வீணை தங்கையும் ஒருத்தி – உஞ்ஞை:34/51
திரு மணி வீணை இசைத்தலும் தெருமந்து – உஞ்ஞை:34/62
சீர் கெழு வீணை சிறப்பொடு காட்டி – உஞ்ஞை:34/81
போக வீணை புணர்க்க பெற்ற – உஞ்ஞை:34/177
வத்தவர் பெருமகன் வல்ல வீணை
தத்தை தனக்கே தக்கதால் என – உஞ்ஞை:34/181,182
தான் அறி வீணை தனி இடத்து எழீஇ – உஞ்ஞை:36/106
மாசு_இல் வீணை மட_மொழிக்கு ஈந்தோன் – உஞ்ஞை:36/308
இன் இசை வீணை அன்றியும் நின்-வயின் – உஞ்ஞை:38/197
இன் ஒலி வீணை பண் ஒலி வெரீஇ – உஞ்ஞை:40/117
விசித்திர வனப்பின் வீணை எழீஇயும் – உஞ்ஞை:58/67
வீணை தண்டும் வேய்படு முத்தும் – உஞ்ஞை:58/85
வீணை வித்தகம் விளங்கு_இழை கற்க என – இலாவாண:1/81
வீணை எழீஇ வீதியின் நடப்ப – இலாவாண:9/57
வீணை வித்தகன் விலாவணை தொடர்ந்து என் – இலாவாண:10/174
விலாவணை ஒழியான் வீணை கைவினை – இலாவாண:11/1
வீணை கிழத்தீ வித்தக உருவீ – இலாவாண:18/82
நூல் அமை வீணை கோல் அமை கொளீஇ – இலாவாண:19/199
வென்று அடு சிறப்பின் வீணை வித்தகன் – மகத:1/139
வீணை விச்சையொடு விழு குடி பிறவு அரிது – மகத:6/115
கோல் மணி வீணை கொண்டு இவண் இயக்க – மகத:14/196
வீணை வித்தகத்தவனினும் மிக்க தன் – மகத:15/13
மாண புணர்ந்தது ஓர் மகர வீணை
தரிசகன் தங்கைக்கு உரிது என அருளிய – மகத:15/23,24
வீணை நவின்ற விறல் வேல் உதயணன் – மகத:18/58
யானை வணக்கும் வீணை வித்தகன் – மகத:21/34
வீணை வேந்தன் வியன் நாடு கெழீஇ – வத்தவ:2/79
வீறு அமை வீணை பேறு அவன் வினாவ – வத்தவ:3/132
வனப்பு அமை வீணை வந்தது வாராய் – வத்தவ:4/6
விசை கொள் வீணை விருந்து பட பண்ணி – வத்தவ:5/7
வீணை பெற்றது விரித்து அவற்கு உரைத்து – வத்தவ:6/14
வீணை கைவலத்து இரீஇ விதியுளி – வத்தவ:6/84

TOP


வீணைக்கு (1)

வீணைக்கு ஏற்ப விசையொடு மற்று இவை – மகத:14/207

TOP


வீணையின் (1)

மகர வீணையின் மனம் மாசு கழீஇ – உஞ்ஞை:35/218

TOP


வீணையும் (3)

மணி ஒலி வீணையும் சாபமும் மரீஇ – உஞ்ஞை:35/101
கொற்ற வீணையும் கொடும்_குழை கொண்டனள் – உஞ்ஞை:37/138
அன்ன வீணையும் அரிமான் ஏறும் – மகத:14/75

TOP


வீணையை (1)

தைவரற்கு இயைந்த தான் பயில் வீணையை
கையினும் செவியினும் செவ்விதின் போற்றி – உஞ்ஞை:36/365,366

TOP


வீணையொடு (1)

தகை ஒலி வீணையொடு அவை துறைபோகி – உஞ்ஞை:37/178

TOP


வீதல் (1)

வீதல் சான்ற வெகுளி முந்துறீஇ – மகத:27/151

TOP


வீதி (10)

வெண் சுடர் வீதி விலக்குவனர் போல – உஞ்ஞை:38/18
பேதை மகளிர் வீதி முன்னினர் – இலாவாண:7/103
முத்து மணல் வீதி முற்று வலம் போகி – இலாவாண:7/142
மன்று அணி வீதி மதில் உஞ்சேனையுள் – இலாவாண:8/19
திரு மலர் வீதி போதந்து எதிர் மலர் – மகத:8/34
வீதி வட்டமொடு ஆதிய கதி-வயின் – மகத:20/41
கொடி அணி வீதி கோ நகர் வரைப்பில் – மகத:25/9
நெடும் கொடி வீதி நீந்துபு போகி – வத்தவ:7/148
பூ புரி வீதி பொலிய புகுந்து – வத்தவ:17/19
மென்மெல இயலி வீதி போந்து – வத்தவ:17/99

TOP


வீதி-தொறும் (2)

பெரும் கண் வீதி-தொறும் பிற புலம் அறிய – நரவாண:6/63
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும்
ஆனாது திரிதரு மானசவேகன் – நரவாண:8/41,42

TOP


வீதி-தோறு (2)

வென்றி முரசம் வீதி-தோறு எருக்கி – உஞ்ஞை:37/198
பூ தூய் வீதி-தோறு ஏத்தினர் எதிர்கொள – இலாவாண:9/65

TOP


வீதி-தோறும் (1)

தாது மலர் அணிந்த வீதி-தோறும்
பழு குலை கமுகும் விழு குலை வாழையும் – இலாவாண:1/2,3

TOP


வீதிய (1)

விழவொடு புணர்ந்த வீதிய ஆக என – நரவாண:6/59

TOP


வீதியில் (2)

விம்முறு விழு நகர் வீதியில் கொண்ட – உஞ்ஞை:46/81
போகு கொடி வீதியில் புகுந்து பலர் ஏத்த – நரவாண:8/75

TOP


வீதியின் (3)

இயக்கு_அரும் வீதியின் எதிர்ப்பட ஒரு நாள் – உஞ்ஞை:35/93
வேல்கெழு முற்றமொடு வீதியின் நீங்கி – உஞ்ஞை:37/2
வீணை எழீஇ வீதியின் நடப்ப – இலாவாண:9/57

TOP


வீதியும் (7)

கரப்பு_அறை வீதியும் கள்ள பூமியும் – உஞ்ஞை:33/17
குஞ்சர ஏற்றும் கொடி தேர் வீதியும்
பொங்கு மயிர் புரவியும் போர் படை புணர்ப்பும் – உஞ்ஞை:36/358,359
வெறி_களம் கடுப்ப வீதியும் முற்றமும் – இலாவாண:2/104
மன்றும் வீதியும் துன்றி வீறு எய்தி – இலாவாண:12/46
கடி செல் புரவி முடுகும் வீதியும்
அடுத்து ஒலி அறாஅ அரங்கமும் கழகமும் – மகத:4/22,23
வரவு எதிர்கொள்க என வாயிலும் வீதியும்
விரை மலர் பூம் கொடி வேறுபட உயரி – மகத:18/67,68
நெடும் தேர் வீதியும் அல்லா இடமும் – வத்தவ:15/149

TOP


வீதியுள் (9)

சேர்ந்த வீதியுள் சிறப்பொடு பொலிந்த – உஞ்ஞை:42/40
வெண் பூ நிரந்த வீதியுள் இயங்கி – இலாவாண:6/18
யாறு கண்டு அன்ன அகன் கனை வீதியுள்
காற்று உறழ் செலவில் கோல் தொழில் இளையர் – இலாவாண:7/7,8
நூலின் பரந்த கோல வீதியுள்
படை நகர் வரைப்பகம் பறை கண் எருக்கி – மகத:17/213,214
போக்கிய பின்றை அவன் புனை நகர் வீதியுள்
கேட்போர்க்கு எல்லாம் வேட்கை உடைத்தா – மகத:18/31,32
மலை தொகை அன்ன மாட வீதியுள்
சிலை பொலி தட கை சேதியன் வாழ்கென – மகத:27/216,217
இடு மணல் வீதியுள் இயங்குநள் வருக என – வத்தவ:15/115
தடம் தோள் வீசி தகை மாண் வீதியுள்
நடந்தே வருக நங்கை கோயிற்கு – வத்தவ:15/134,135
நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள்
போத்தரவு அமைந்து புகு வழி எல்லாம் – நரவாண:7/23,24

TOP


வீதியொடு (1)

மாண்ட வீதியொடு மன்றம் எல்லாம் – வத்தவ:2/40

TOP


வீய்ந்தனன் (1)

வேண்டி வந்த வேந்தனும் வீய்ந்தனன்
ஈண்டு இனி இவற்கே இயைந்த பால் வகை – மகத:20/182,183

TOP


வீய (2)

தேவி வீய தீரா அவலமொடு – மகத:18/14
வீய நூறி வெம் சினம் தணிக என – மகத:27/154

TOP


வீயா (7)

வீயா செங்கோல் விக்கிரன் ஒரு நாள் – இலாவாண:11/122
வீயா நாற்றமொடு அணி வளம் கொடுப்ப – இலாவாண:15/17
வீயா அமுதமும் வேண்டின் போய் தரும் – மகத:3/74
வீயா நண்பின் வேத மகளுழை – மகத:14/43
வீயா வென்றி விண்ணுத்தராயனோடு – வத்தவ:11/59
வீயா சிறப்பின் வியாதன் முதலா – வத்தவ:15/25
வீயா கற்பின் விரிசிகை என்னும் – வத்தவ:15/48

TOP


வீர (10)

வீர குமரரும் விரும்புவனர் ஏறிய – உஞ்ஞை:38/10
வீர வெம் மொழி நீர்_அல பயிற்றி – உஞ்ஞை:55/138
வீர வேட்டுவர் சார்தல் ஆற்றார் – உஞ்ஞை:55/145
வீர வேந்தற்கு விரைந்து அவர் ஈயா – உஞ்ஞை:56/258
வீர தானை வேந்தன் விரும்பி – உஞ்ஞை:57/15
வீர நோக்கினர் வேழமொடு வீழவும் – மகத:20/61
வித்தக வீர அது பெற்றனென் யான் என – மகத:21/103
வீர வென்றி விறல் வெம் துப்பின் – மகத:23/24
வென்றி தானை வீர வேந்த நின் – நரவாண:1/31
வீர வேந்தன் விளங்கு இழை குறு_மகள் – நரவாண:3/124

TOP


வீரம் (1)

வீரம் மிக்க விறல் தறுகண்மை – மகத:21/10

TOP


வீரமும் (1)

வீட்டினது அளவும் விறல் படை வீரமும்
கூட்ட மன்னர் குறித்தவும் பிறவும் – மகத:17/205,206

TOP


வீரமொடு (1)

வெம் முரண் வீரமொடு தம்முள் தாக்கவும் – மகத:20/29

TOP


வீரர் (4)

பெரும் சின வீரர் ஒருங்குடன் பேர்வுழி – மகத:1/138
வீரர் ஆகுவோர் வேறு திரிந்து ஒடுங்கி – மகத:19/22
நம் மேல் வந்த வெம் முரண் வீரர்
தம் மேல் சென்று தருக்கு அற நூறுதல் – மகத:19/140,141
இகழ்தல் இன்றி ஏறிய வீரர்
வெம் முரண் வீரமொடு தம்முள் தாக்கவும் – மகத:20/28,29

TOP


வீரரும் (1)

வத்தவநாட்டு வித்தக வீரரும்
மலைக்கும் மாந்தரை தலைக்கொண்டு ஓடி – உஞ்ஞை:45/90,91

TOP


வீரருள் (2)

வீரருள் வீரன் விசைபெற விடுதலின் – உஞ்ஞை:55/144
வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப – உஞ்ஞை:56/89

TOP


வீரரை (2)

வெல் போர் வேந்தன் வீரரை சவட்டி – உஞ்ஞை:43/77
வீரரை விடுத்து போர் செய போக்கி – மகத:24/146

TOP


வீரன் (11)

வேர் துளி துடைத்து வித்தக வீரன்
அரு வரை அகலத்து அஞ்சுவனள் நீட்டி – உஞ்ஞை:48/128,129
வெம் சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின் – உஞ்ஞை:54/114
வெம் சின வீரன் நின்ற-காலை – உஞ்ஞை:55/43
வீரருள் வீரன் விசைபெற விடுதலின் – உஞ்ஞை:55/144
வித்தக வீரன் விறல் படை வீடு என் – உஞ்ஞை:57/117
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி – இலாவாண:3/115
அந்தணாளரின் வெம் திறல் வீரன்
சொல் துணை தோழன் தொழில் பாராட்டி – இலாவாண:10/168,169
மந்திர சூழ்ச்சியுள் வெம் திறல் வீரன்
வள் இதழ் கோதை வாசவதத்தையை – மகத:8/90,91
வந்து இவண் இருந்த வெம் திறல் வீரன்
தன்னொடு வந்து மன்னரை ஓட்டி – மகத:19/150,151
வெம் திறல் வீரன் விளங்கிய முறுவலன் – வத்தவ:10/142
நெஞ்சகம் படுப்ப வெம் சின வீரன்
அறியாமையின் மறுகுறு சிந்தையன் – நரவாண:8/86,87

TOP


வீரனை (2)

வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப – உஞ்ஞை:56/89
வெம் சின வீரனை நெஞ்சுற கழற – நரவாண:3/23

TOP


வீரிய (4)

வீரிய வேந்தன் விடுத்து அகம் புக்க பின் – உஞ்ஞை:32/92
வீரிய இளையர் வாரியுள் வளைஇ – உஞ்ஞை:44/60
வீரிய தறுகணர் வீக்கிய கச்சையர் – உஞ்ஞை:46/18
விடுத்தமை உணரா வீரிய இளையர் – உஞ்ஞை:46/190

TOP


வீரியம் (2)

விதியோர் கொளுத்திய வீரியம் உடையது – உஞ்ஞை:38/294
விறல் புகழ் உடையது வீரியம் அமைந்தது – மகத:2/45

TOP


வீரியர் (1)

வினை கொள் விஞ்சை வீரியர் உலகின் – நரவாண:4/116

TOP


வீரியன் (3)

விரைந்தனன் ஆகிய விறல் கெழு வீரியன்
முகைந்த புறவின் முல்லை அம் பெரும் திணை – உஞ்ஞை:50/1,2
வெற்ற வெள் வேல் வீரியன் புகழ்ந்து – இலாவாண:5/74
இகல் கொள் வீரியன் இகழ்தல் செல்லா – நரவாண:8/101

TOP


வீவும் (1)

ஐது ஏந்து அல்குல் அவந்திகை வீவும்
உறு துணை தோழன் இறுதியும் நினையான் – மகத:7/57,58

TOP


வீழ் (17)

தனித்து உளம் கவல்வோன் தான் வீழ் மாதர் – உஞ்ஞை:33/36
விலங்கும் பறவையும் வீழ் துணை படர – உஞ்ஞை:33/43
திரு வீழ் கட்டில் திறத்துளி காத்த – உஞ்ஞை:34/6
தகைப்பு_அரும் காமத்து தாம் வீழ் மகளிர் – உஞ்ஞை:35/213
நெடு வீழ் ஊசல் முடி பிணி ஏறி – உஞ்ஞை:40/113
நீர் பொறை ஆற்றாது நெகிழ்ந்து வீழ் இசைந்த – உஞ்ஞை:40/194
வீழ் பூம் கொடியின் விரைந்து செல்வோரும் – உஞ்ஞை:44/40
வீழ் தரு கடும் கணை வில்லின் விலக்கி – உஞ்ஞை:56/59
மணி அறைந்து அன்ன மா வீழ் ஓதி – இலாவாண:7/17
வீழ் பூம் கொம்பின் வேங்கை நிரந்த – இலாவாண:12/98
வீழ் துணை மாதர் விளிவு நினைந்து இரங்கி – மகத:4/63
பூ வீழ் கொடியும் பொலிவு இலவாக – மகத:13/61
வீழ் அனல் கடுப்ப வெய்துயிர்த்து அலைஇ – மகத:14/128
மா வீழ் ஓதி தன் கோயில் புக்க பின் – வத்தவ:5/39
திரிபு வீழ் புள் போல் ஒரு-வயின் நில்லாது – வத்தவ:12/121
எழுந்து வீழ் பந்தோடு எழுந்து செல்வனள் போல – வத்தவ:12/122
மா வீழ் ஓதி மதனமஞ்சிகையும் – நரவாண:8/64

TOP


வீழ்-மாத்திரம் (1)

கால் வீழ்வது போல் மேல் வீழ்-மாத்திரம்
விள்ளா படையொடு வேறு நீ இருப்ப – மகத:24/141,142

TOP


வீழ்க (2)

வீழினும் வீழ்க வேதனை இல்லை – உஞ்ஞை:43/52
விசும்பு முதல் கலங்கி வீழினும் வீழ்க
கலங்க வேண்டா காவல் என் கடன் என – உஞ்ஞை:44/107,108

TOP


வீழ்ச்சி (4)

விளைவுறு தீங்கனி வீழ்ச்சி ஏய்ப்ப – உஞ்ஞை:46/21
வெண் நிற அருவி வீழ்ச்சி ஏய்ப்ப – உஞ்ஞை:48/61
குண்டு சுனை அடுக்கத்து கொழும் கனி வீழ்ச்சி
பண் அமை படை சுவர் கண் அகன்று அமைந்து – உஞ்ஞை:53/72,73
விரும்பி நீ பிடித்த வெண் மலர் வீழ்ச்சி
பொருந்தி நீ அளக்கும் பொரு_இல் போகத்து – இலாவாண:13/54,55

TOP


வீழ்ச்சியின் (2)

காம்பு இலை வீழ்ச்சியின் ஆங்கு இழிந்திட்டும் – வத்தவ:12/111
வெதிர் இலை வீழ்ச்சியின் வேண்டு இடத்து அசைஇ – நரவாண:4/115

TOP


வீழ்ச்சியும் (2)

வித்தக_குமரர் வீழ்ச்சியும் பிறவும் – உஞ்ஞை:46/341
பிடியது வீழ்ச்சியும் பெண் பால் சுவடும் – உஞ்ஞை:55/75

TOP


வீழ்த்த (5)

கள்ளம் இன்றி கட்டு ஆள் வீழ்த்த
வெள்ளை வேட்டுவீர் புள் எவன் பிழைத்தது என்று – உஞ்ஞை:56/15,16
கொடுப்போர் வீழ்த்த குங்கும குழையலும் – இலாவாண:2/92
தொடுப்போர் வீழ்த்த தூ வெள் அலரும் – இலாவாண:2/93
சிறாஅர் வீழ்த்த செம்பொன் கண்ணியும் – இலாவாண:2/98
வெம் கண் மறவர் வில்லின் வீழ்த்த
பைம் கண் வேழத்து பணை மருப்பு உலக்கையின் – இலாவாண:14/48,49

TOP


வீழ்த்து (3)

பொறி உடை ஓலை பொருக்கென வீழ்த்து
மட தகை பொருந்திய வய தகை மாதரை – உஞ்ஞை:45/30,31
வெம் முரண் வேழம் வீழ்த்து மாற்றார் – மகத:20/66
பூ வீழ்த்து எழுப்பி புறங்கையின் மற்றவை – வத்தவ:12/181

TOP


வீழ்தர (1)

உதிர புள்ளி ஊழூழ் வீழ்தர
பொதி அவிழ் முட்டையின் புறப்பட தோன்றி – உஞ்ஞை:52/104,105

TOP


வீழ்தரு (2)

வீழ்தரு கண்ணீர் விரலின் நீக்கி – உஞ்ஞை:36/72
வீழ்தரு வெம் துளி விரலின் நீக்கி – இலாவாண:10/62

TOP


வீழ்தலின் (2)

அழிவு கொண்டு ஆருணி அவிந்தனன் வீழ்தலின்
கொற்றம் பெற்றனன் குருகுலத்து இறை என – மகத:27/180,181
தேன் ஆர் தாமரை சேவடி வீழ்தலின்
திரு முயங்கு தட கையின் திண்ணிதின் பற்றி – வத்தவ:5/131,132

TOP


வீழ்தலும் (1)

புக்கது வீழ்தலும் பொருக்கென வெரீஇ – நரவாண:1/109

TOP


வீழ்ந்த (15)

வீழ்ந்த திங்களை விசும்பு கொண்டு ஏறும் – உஞ்ஞை:40/74
வித்தக கோலத்து வீழ்ந்த கிழவற்கு – உஞ்ஞை:48/65
வீழ்ந்த ஆறும் அது நோக்கிய திசையும் – உஞ்ஞை:53/29
மட பிடி வீழ்ந்த மணி மலை சாரல் – உஞ்ஞை:55/44
அம்பு பட வீழ்ந்த வெம் கண் மறவர் – உஞ்ஞை:56/207
வெம் கதிர் வீழ்ந்த தண் கதிர் மாலை – இலாவாண:9/132
வீழ்ந்த வெண் மலர் வெறு நிலம் படாது – இலாவாண:13/57
நாள் வாய் வீழ்ந்த நறு நீர் வள்ளை – இலாவாண:15/88
வான் உயர் உலகம் வழுக்குபு வீழ்ந்த
தேன் உயர் நறும் தார் திறலோன் போல – மகத:18/78,79
வீழ்ந்தனன் அவனும் வீழ்ந்த பின்னர் – மகத:27/132
விசை உடை இரும் பிடி வீழ்ந்த தானம் – வத்தவ:3/3
அடவியுள் வீழ்ந்த கடு நடை இரும் பிடி – வத்தவ:3/10
வீழ்ந்த எல்லை முதலா என்றும் – வத்தவ:3/86
குன்றக சாரல் தென் திசை வீழ்ந்த
பேரியாழ் இது என பெருமகற்கு உரைப்ப – வத்தவ:3/138,139
குன்றக சாரல் குளிறுபு வீழ்ந்த
இரும் பிடி தோற்றமும் இறுதியும் கேட்டு – நரவாண:4/4,5

TOP


வீழ்ந்த-காலை (1)

வீழ்ந்த-காலை மேயவன் அ-தலை – நரவாண:3/132

TOP


வீழ்ந்ததன் (1)

இரும் பிடி வீழ்ந்ததன் இன் உயிர் இறுதியும் – உஞ்ஞை:54/120

TOP


வீழ்ந்தது (1)

நிலம் மிசை வீழ்ந்தது நிற்க நின் பிடி என – உஞ்ஞை:52/93

TOP


வீழ்ந்தனர் (1)

வியர்த்த நுதலினர் வீழ்ந்தனர் அவியவும் – உஞ்ஞை:46/50

TOP


வீழ்ந்தனன் (2)

வென்று அடு குருசில் வீழ்ந்தனன் இரப்ப – மகத:9/169
வீழ்ந்தனன் அவனும் வீழ்ந்த பின்னர் – மகத:27/132

TOP


வீழ்ந்தனையோ (1)

நிலம் மிசை மருங்கின் வீழ்ந்தனையோ என – இலாவாண:19/89

TOP


வீழ்ந்து (6)

ஏற்ற முன்கை தொடி வீழ்ந்து அற்றால் – உஞ்ஞை:36/119
விசையின் வீழ்ந்து வெருளி ஆற்றான் – உஞ்ஞை:45/69
ஊக்கம்_இலன் இவன் வேட்கையின் வீழ்ந்து என – இலாவாண:17/58
ஒற்றி மேல் வீழ்ந்து உடைக்கும் உபாயமா – மகத:17/89
வீழ்ந்து ஒளி திகழும் விழு கொடி மூக்கின் – வத்தவ:15/8
இந்திர உலகம் இழுக்குபு வீழ்ந்து
வந்திருந்தன்று என கண்டவர் ஏத்த – நரவாண:7/55,56

TOP


வீழ்ந்தும் (1)

வீழ்ந்தும் எழுந்தும் தாழ்ந்தும் தளர்ந்தும் – இலாவாண:19/208

TOP


வீழ்ந்தோர் (1)

வீழ்ந்தோர் நல்கும் வெறுக்கை அன்றி – உஞ்ஞை:35/80

TOP


வீழ்பவை (1)

வெம் திறல் வேந்தன் வீழ்பவை காட்டி – இலாவாண:13/2

TOP


வீழ்வது (2)

நிறத்து ஏறுண்டு நிலத்து வீழ்வது போல் – மகத:20/59
கால் வீழ்வது போல் மேல் வீழ்-மாத்திரம் – மகத:24/141

TOP


வீழ்வர்-கொல் (1)

விண்ணவர் காணினும் வீழ்வர்-கொல் வியந்து என – வத்தவ:12/209

TOP


வீழ (15)

படை மலர் தடம் கண் பனி சுமந்து வீழ
இடை முலை கிடந்த ஏகவல்லி – உஞ்ஞை:46/210,211
வெருவர தாக்கி வீழ நூறி – உஞ்ஞை:48/33
ஞாழலும் புன்னையும் வீழ நூக்கி – உஞ்ஞை:51/41
வேழ வேட்டத்து வீழ நூறி – உஞ்ஞை:54/132
மை அணி இரும் பிடி வீழ மற்று நீ – உஞ்ஞை:55/134
அரும் கல வாணிகர் அ பிடி வீழ
வருத்தம் எல்லாம் ஒருப்படுத்து ஒரு வழி – உஞ்ஞை:56/80,81
மட பிடி வீழ இடர்ப்பட்டு இருளிடை – உஞ்ஞை:56/93
வேலியலாளரை வீழ நூறியும் – உஞ்ஞை:56/265
வெம் கணை வாளியுள் விளிந்தனர் வீழ
பைம் கண் வேழத்து படை திறல் வேந்தன் – உஞ்ஞை:56/266,267
ஏழேழ் மறவரை வீழ நூறலின் – இலாவாண:9/147
தண் தாமரை-கண் வெம் பனி வீழ
விண் தோய் கானத்து வேழ வேட்டத்து – இலாவாண:10/124,125
வெள் இதழ் நறு மலர் வீழ பையாந்து – இலாவாண:13/45
பரு மணல் உண்டது பண்ணுநர் வீழ
உள் காழ் ஈன்ற ஒரு கோல் அரையின் – மகத:12/69,70
வீழ நூறி வேழம் தொலைச்சி – மகத:17/247
வேற்று வேந்தனை வீழ நூறுதல் – மகத:27/156

TOP


வீழவும் (9)

அடக்க_அரும் வேழ தட கை வீழவும்
வார் பண் புதைஇய போர்ப்பு அமை வனப்பின் – மகத:20/46,47
உட்குவரு குருதியுள் உடன் பல வீழவும்
கார் முக கடு முகில் ஊர்தியாக – மகத:20/54,55
வீர நோக்கினர் வேழமொடு வீழவும்
பூண் ஏற்று அகன்ற புடை கிளர் அகலத்து – மகத:20/61,62
தம் உயிர் நீங்க தாழ்ந்தனர் வீழவும்
அடுத்து எழு பெரும் திரை அகன் கடல் நடுவண் – மகத:20/67,68
மாவொடு மறிந்து மயங்கி வீழவும்
அலை கடல் வெள்ளம் அலைய ஊழி – மகத:20/74,75
காலம் ஏய்ப்ப கரும் தலை வீழவும்
கால் வல் புரவியும் கடும் கண் யானையும் – மகத:20/79,80
இரு நில மருங்கில் சிதைவன வீழவும்
புள்ளும் நிமித்தமும் பொல்லா ஆகி – மகத:27/78,79
கொல்லை வாயில் குப்பையுள் வீழவும்
புன் புல உழவர் படை மிளிர்ந்திட்ட – வத்தவ:2/64,65
மருத மகளிர் வண்டலுள் வீழவும்
வயலோர் எடுத்த கௌவைக்கு இரும் கழி – வத்தவ:2/67,68

TOP


வீழா (4)

வீழா காதலொடும் விரும்புவனன் ஆகி – இலாவாண:11/15
வீழா நண்பின் இவன் போல் விரித்து – மகத:15/49
தார் அணி மார்பன் யானையை வீழா
கனல் சொரி மலையின் கவிய நூறி – மகத:27/169,170
வீழா விழு பொருள் மெய் பெற கண்டனை – நரவாண:1/163

TOP


வீழின் (1)

மருங்குற மண் மிசை வீழின் மற்று என் – உஞ்ஞை:53/18

TOP


வீழினும் (4)

கையது வீழினும் கணவன் அல்லது – உஞ்ஞை:36/256
வீழினும் வீழ்க வேதனை இல்லை – உஞ்ஞை:43/52
விசும்பு முதல் கலங்கி வீழினும் வீழ்க – உஞ்ஞை:44/107
வேலும் கணையமும் வீழினும் இமையார் – உஞ்ஞை:46/17

TOP


வீளை (1)

வீளை ஓட்டின் வெருவ எய்து அவர் – உஞ்ஞை:55/64

TOP


வீளையும் (1)

ஆர்ப்பும் வீளையும் அ வழி பரப்பி – உஞ்ஞை:55/114

TOP


வீற்றிடம் (1)

விண்ணவர் கிழவன் வீற்றிடம் கடுப்ப – இலாவாண:3/149

TOP


வீற்றிரீஇய (1)

வார் உகிர் குறைத்து வனப்பு வீற்றிரீஇய
ஒள் நிற கல்லின் நல் நிறம் பெறீஇ – இலாவாண:4/187,188

TOP


வீற்றிருத்தற்கு (2)

தான் வீற்றிருத்தற்கு தக்கன இவை என – வத்தவ:10/74
அச்சம்_இல் ஆழி கொண்டு அரசு வீற்றிருத்தற்கு
நச்சி நோற்ற ஓர் கச்சம்_இல் கடும் தவ – நரவாண:3/178,179

TOP


வீற்றிருந்த (13)

குடை வீற்றிருந்த குழவி போல – உஞ்ஞை:33/53
திரு வீற்றிருந்த திரு நகர் வரைப்பின் – உஞ்ஞை:40/232
வனப்பு வீற்றிருந்த வாசவதத்தை – இலாவாண:2/8
கோ வீற்றிருப்புழி பூ வீற்றிருந்த
திரு_மகள் போல ஒருமையின் ஒட்டி – இலாவாண:4/21,22
அதிரா ஞாலத்து அரசு வீற்றிருந்த
கதை உரைக்கு எல்லாம் காரணன் ஆதலின் – இலாவாண:11/79,80
வனப்பு வீற்றிருந்த வாக்கு அமை அம் வயிற்று – இலாவாண:15/69
வார் நல காதினுள் வனப்பு வீற்றிருந்த
நன் பொன் குழை நீ நல் நுதல் மாதரை – இலாவாண:19/94,95
உருவ கோலமொடு உட்கு வீற்றிருந்த
அரவு பை அன்ன ஐது ஏந்து அல்குல் – இலாவாண:19/145,146
உடுத்து வீற்றிருந்த வடு தீர் அல்குல் – மகத:3/21
நண்பு வீற்றிருந்த நல தகு குறங்கினள் – மகத:5/14
அம் கண் ஞாலத்து அழகு வீற்றிருந்த
கொங்கு அலர் கோதை எங்கையை பொருளொடு – மகத:17/54,55
ஆன் வீற்றிருந்த அரும்_பெறல் அணிகலம் – வத்தவ:10/73
வனப்பு வீற்றிருந்த வாசவதத்தையும் – வத்தவ:11/83

TOP


வீற்றிருந்தனனால் (1)

வீற்றிருந்தனனால் விளங்கு அவையிடை என் – வத்தவ:1/48

TOP


வீற்றிருந்து (2)

ஆர கம்மம் சார வீற்றிருந்து
கொள்கை கூட்டு அழல் உள்ளுற மூட்டி – இலாவாண:19/60,61
வாயிலும் வனப்பும் மேவி வீற்றிருந்து
மதில் அணி தெருவிற்று ஆகி மற்றோர்க்கு – இலாவாண:20/114,115

TOP


வீற்றிருப்பதூஉம் (1)

ஈண்டு இவண் வந்து நீ வீற்றிருப்பதூஉம்
உள்ளுறுத்து ஓதியான் உள்ளம் உவப்ப – இலாவாண:11/160,161

TOP


வீற்றிருப்புழி (1)

கோ வீற்றிருப்புழி பூ வீற்றிருந்த – இலாவாண:4/21

TOP


வீற்று (2)

வேத்தவை நடுவண் வீற்று இனிது இருத்தி – இலாவாண:11/146
விளங்கு அவை நடுவண் வீற்று இனிது இருந்த – வத்தவ:2/1

TOP


வீற்றுவீற்று (1)

காற்று பொறி கலக்க வீற்றுவீற்று ஆயின – உஞ்ஞை:44/116

TOP


வீறு (12)

விழுப்பமொடு பிறந்த வீறு உயர் தொல் குடி – உஞ்ஞை:34/64
ஏறு பெற்று இகந்த பின்றை வீறு பெற்று – உஞ்ஞை:56/277
மன்றும் வீதியும் துன்றி வீறு எய்தி – இலாவாண:12/46
வெண் கதிர் மதியின் வீறு ஒளி திகழ்ந்து – மகத:5/6
வீறு இயல் அமைச்சர் வேறா கேட்டு – மகத:19/157
வீறு ஆர் தோன்றலொடு விளங்கு மணி பொலிந்தன – மகத:26/69
வீறு அமை வீணை பேறு அவன் வினாவ – வத்தவ:3/132
வீறு பெற்றனரால் மீட்டு தலைப்புணர்ந்து என் – வத்தவ:7/245
கூறு நனி செய்து வீறு உயர் நெடுந்தகை – வத்தவ:12/10
வீறு உயர் மடந்தாய் வேண்டா செய்தனை – வத்தவ:14/97
வீறு பெறு விமானத்து விரைந்து அவர் ஏறலும் – நரவாண:4/63
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும் – நரவாண:8/41

TOP


வீறுபடு (1)

வீறுபடு கோலமொடு வியல் நகர் விழவு அணி – உஞ்ஞை:54/79

TOP


வீறுபெற (1)

வீறுபெற பண்ணி விரைந்தன வருக – மகத:19/95

TOP


வீறோடு (1)

விழு குடி பிறந்து இ வீறோடு விளங்கிய – மகத:6/116

TOP