ஏ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 2
ஏஎய் 1
ஏஎர் 3
ஏஎல் 1
ஏக 8
ஏகல் 1
ஏகவல்லி 2
ஏகி 2
ஏகினும் 2
ஏகு 1
ஏகு-மின் 1
ஏகுதும் 1
ஏங்க 1
ஏங்கவும் 1
ஏங்கி 1
ஏங்கிய 1
ஏசா 1
ஏசினன் 1
ஏசுவது 2
ஏட்டினும் 1
ஏட்டு 4
ஏடு 2
ஏண் 2
ஏணி 4
ஏணியும் 1
ஏத்த 15
ஏத்தல் 1
ஏத்தி 15
ஏத்தியலாளரும் 1
ஏத்தினர் 3
ஏத்தும் 2
ஏத்துவனர் 2
ஏதம் 28
ஏதம்_இல் 4
ஏதமாம்-கொல் 1
ஏதில் 5
ஏதிலன் 2
ஏதிலென் 1
ஏதிலை 1
ஏதின்மை 1
ஏது 4
ஏது-கொல் 1
ஏதுவாக 1
ஏந்த 3
ஏந்தல் 2
ஏந்தலும் 2
ஏந்தி 20
ஏந்திய 10
ஏந்தினள் 2
ஏந்து 33
ஏந்துவனர் 1
ஏப்பெறு 1
ஏம 16
ஏமம் 10
ஏமாக்கும் 1
ஏமாப்பு 1
ஏமுறவு 1
ஏமுறு 1
ஏய்ப்ப 21
ஏய்பு 1
ஏய 3
ஏயது 1
ஏயதை 1
ஏயர் 26
ஏயர்க்கு 2
ஏயற்கு 1
ஏயினன் 3
ஏர் 54
ஏர்தர 1
ஏர்தரும் 1
ஏர்ப்பு 1
ஏரி 1
ஏரும் 1
ஏல் 1
ஏல்வு 1
ஏலத்து 1
ஏலம் 1
ஏலமும் 3
ஏலாது 2
ஏவ 2
ஏவல் 7
ஏவலின் 4
ஏவலும் 1
ஏவற்கு 1
ஏவா 1
ஏவி 1
ஏவினேன் 1
ஏழ் 7
ஏழ்ச்சி 2
ஏழ்ச்சியும் 2
ஏழாயிரவர் 2
ஏழேழ் 1
ஏழை 1
ஏழையம் 1
ஏழையர் 1
ஏழையை 1
ஏற்கும் 4
ஏற்ப 26
ஏற்பவை 1
ஏற்பன 1
ஏற்பும் 1
ஏற்போர்க்கு 1
ஏற்ற 34
ஏற்றம் 3
ஏற்றமும் 1
ஏற்றல் 4
ஏற்றலின் 1
ஏற்றலும் 3
ஏற்றனன் 2
ஏற்றி 46
ஏற்றிய 3
ஏற்றியும் 4
ஏற்றினமால் 1
ஏற்றினரால் 1
ஏற்றினள் 1
ஏற்றினன் 1
ஏற்று 25
ஏற்று_அரு 1
ஏற்றுக 1
ஏற்றும் 4
ஏற்றுவனள் 1
ஏற்றோர் 3
ஏற 7
ஏறல் 2
ஏறலும் 3
ஏறா 2
ஏறி 52
ஏறிய 12
ஏறிய-ஞான்று 1
ஏறின் 2
ஏறினம் 1
ஏறினர் 2
ஏறினள் 2
ஏறினனால் 2
ஏறினும் 2
ஏறு 10
ஏறுக 3
ஏறுண்டு 1
ஏறுதற்கு 1
ஏறுப 1
ஏறும் 11
ஏறொடு 1
ஏன்ற 1
ஏனத்து 1
ஏனம் 1
ஏனமொடு 1
ஏனல் 2
ஏனலும் 2
ஏனவை 1
ஏனை 14
ஏனைய 7
ஏனையது 1
ஏனையர் 1
ஏனையோர் 1
ஏனோர் 6
ஏனோர்-மாட்டு 1
ஏனோர்க்கு 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஏ (2)

ஒண் நுதல் மாதர் கண் ஏ பெற்ற – உஞ்ஞை:36/323
ஏ என அஞ்சும் சாயல் நோக்கி – நரவாண:8/65

TOP


ஏஎய் (1)

எயில் மூதாளரை வயின்வயின் ஏஎய்
வாயில் சுட்டி வள நகர் அறிய – உஞ்ஞை:36/37,38

TOP


ஏஎர் (3)

ஏனைய பிறவும் ஏஎர் உடையன – உஞ்ஞை:42/87
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர்
என் கண் கவற்றிற்று என்றலோடு இயலி – மகத:9/102,103
ஏம செவ்வி ஏஎர் நுகரும் – மகத:14/91

TOP


ஏஎல் (1)

ஏஎல் பெற்று எழுந்து இருந்தனன் உரைக்க என – இலாவாண:9/158

TOP


ஏக (8)

ஏக விடு_கொடி எழில் தோள் எழுதி – உஞ்ஞை:34/201
ஏக திகிரி இரு நிலத்து இறைவன் – உஞ்ஞை:48/84
ஏக உத்தரியம் இடைச்சுவல் வருத்த – இலாவாண:4/121
இன மணி பூணும் ஏக வட்டமும் – இலாவாண:5/139
ஏக செங்கோல் ஏயர் பெருமகன் – இலாவாண:8/3
ஏக செய்த பின் ஆகு பொருள் நாடி – இலாவாண:8/130
ஏக வல்லியும் ஏற்பன அணிந்து – மகத:9/67
ஏக வாரம் இலங்கு கழுத்தினன் – நரவாண:2/26

TOP


ஏகல் (1)

ஏகல் ஆற்றீர் என் உற்றீர் என – நரவாண:2/35

TOP


ஏகவல்லி (2)

இடை முலை கிடந்த ஏகவல்லி
முற்றுறு கழங்கொடு முதல் அகடு பொருந்தி – உஞ்ஞை:46/211,212
இடைப்படீஇ பிறழும் ஏகவல்லி
அணி கலை புனைந்த அரசிலை பொன் அடர் – இலாவாண:7/22,23

TOP


ஏகி (2)

விடுத்தவள் ஏகி அடுத்ததும் உரைத்ததும் – வத்தவ:13/182
ஊழ் வினை வகையின் உடம்பு இட்டு ஏகி
நன்றி இல் விலங்கின் பிறவி நயந்து நீ – நரவாண:3/96,97

TOP


ஏகினும் (2)

வாசவதத்தையை வலிதில் கொண்டு ஏகினும்
தீது நிகழினும் ஏதம் இல் என – உஞ்ஞை:47/187,188
வேறுபட்டு ஏகினும் கூறுபட்டு இயலா – இலாவாண:8/13

TOP


ஏகு (1)

ஏகு என உய்த்து தம் இரு நலம் காட்டி – உஞ்ஞை:40/339

TOP


ஏகு-மின் (1)

இன்னே போதும் ஏகு-மின் விரைந்து என – மகத:1/88

TOP


ஏகுதும் (1)

இடத்து இட்டு ஏகுதும் எனினே எங்கும் – உஞ்ஞை:49/24

TOP


ஏங்க (1)

பெய் வளை தோளி வெய்து உயிர்த்து ஏங்க
குலம் கெழு குருசில் கொடி கை மாறி – உஞ்ஞை:56/32,33

TOP


ஏங்கவும் (1)

பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும்
கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல் – உஞ்ஞை:46/250,251

TOP


ஏங்கி (1)

தான தீயிடை தான் உழன்று ஏங்கி
காணல் செல்லாள் காஞ்சனை புலம்பி – இலாவாண:18/87,88

TOP


ஏங்கிய (1)

ஏங்கிய நினைவுடன் இனைந்து அழுது உகுத்த – வத்தவ:14/140

TOP


ஏசா (1)

பேசிய முறைமையின் ஏசா நல் எழில் – வத்தவ:12/92

TOP


ஏசினன் (1)

ஏசினன்
நவில்-தொறும் இனிய ஞானம் போல – நரவாண:7/147,148

TOP


ஏசுவது (2)

ஏசுவது இல்லா எழில்படு காரிகை – உஞ்ஞை:43/36
ஏசுவது இல்லா வாசவதத்தையும் – இலாவாண:7/120

TOP


ஏட்டினும் (1)

ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும் – இலாவாண:2/141

TOP


ஏட்டு (4)

வெள்_ஏட்டு அங்கண் வித்தகம் எழுதிய – உஞ்ஞை:32/69
ஏட்டு வினை கணக்கன் ஈடு அறிந்து ஒற்றிய – வத்தவ:10/95
கோட்டிய முடியன் ஏட்டு பொறி நீக்கி – வத்தவ:10/109
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து – நரவாண:8/17

TOP


ஏடு (2)

ஏடு கோளாளர் எனையர் என்று எண்ணி – உஞ்ஞை:37/153
இறு முனை மருங்கின் ஏடு பட திருகி – மகத:27/176

TOP


ஏண் (2)

தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய – இலாவாண:6/58
எண்ணியது உண்ணும் ஏண் தொழில் அறாஅ – வத்தவ:3/44

TOP


ஏணி (4)

நெடு நீர் மாடத்து ஏணி ஏறி – உஞ்ஞை:40/156
நகர் காண் ஏணி விரைவனர் ஏறினர் – இலாவாண:7/47
நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி – மகத:24/138
இமையோர் உலகிற்கு ஏணி ஆகிய – வத்தவ:3/70

TOP


ஏணியும் (1)

நிலை கால் ஏணியும் தலைச்சிறந்து ஏறி – மகத:20/150

TOP


ஏத்த (15)

ஏனை தாயரும் ஆனாது ஏத்த
வத்தவர் பெருமகன் வல்ல வீணை – உஞ்ஞை:34/180,181
தொல் இசையாளர் சொல் எடுத்து ஏத்த
புகழ் ஆர்வு எய்திய திகழ் முடி சென்னியன் – உஞ்ஞை:37/148,149
புது துணை மகளிர் ஒதுக்கு நடை ஏத்த
காஞ்சனமாலை பூம் புறத்து அசைஇ – உஞ்ஞை:58/72,73
கலி கெழு மூதூர் கைதொழுது ஏத்த
வலி கெழு நோன் தாள் வந்தவர் இறைவன் – இலாவாண:4/3,4
தொழுத கையர் புகுதுக என்று ஏத்த
வாயில் புக்கு கோயில் வரைப்பில் – மகத:13/72,73
காமர் சுற்றம் கை தொழுது ஏத்த
தாமரை செம் கண் தகை பெற கழீஇ – வத்தவ:7/125,126
விடுத்தனென் போகி வியன் உலகு ஏத்த
வடு தீர் மா தவம் புரிவேன் மற்று என – வத்தவ:17/6,7
வேட்டு அவள் புணர்ந்து வியன் உலகு ஏத்த
அன்பு நெகிழ்ந்து அணைஇ இன் சுவை அமிழ்தம் – வத்தவ:17/114,115
புகழ்ந்து பலர் ஏத்த பொருக்கென பெயர்த்தே – நரவாண:1/151
சிறுவன் வேண்டும் அது சிறந்தது என்று ஏத்த
பின்னை மற்று அவன் மன்னிய வேட்கையொடு – நரவாண:3/175,176
பெரியவர் ஏத்த பிறந்த நம்பிக்கு – நரவாண:6/35
நகரத்தாளரொடு நாடு புகழ்ந்து ஏத்த
நிகர்_இல் செல்வத்து நிதியம் தழீஇ – நரவாண:6/141,142
இரு கரை மருங்கினும் இ நிலம் ஏத்த
சீர்மையொடு பொருந்தி சிறப்பு முந்துறீஇ – நரவாண:7/40,41
வந்திருந்தன்று என கண்டவர் ஏத்த
வேல் நல வேந்தன் விழு பெரும் கோயிலுள் – நரவாண:7/56,57
போகு கொடி வீதியில் புகுந்து பலர் ஏத்த
அரு வரை மருங்கின் அருவி போல – நரவாண:8/75,76

TOP


ஏத்தல் (1)

யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள் – உஞ்ஞை:42/109

TOP


ஏத்தி (15)

இலங்கு சுடர் விளக்கோடு எதிர்வந்து ஏத்தி
புறங்காப்பு இளையர் புரிந்து அகம் படுப்ப – உஞ்ஞை:33/98,99
செம் முது செவிலியர் கை புனைந்து ஏத்தி
சந்தன நறு நீர் மண்ணுறுத்தி ஆட்டி – உஞ்ஞை:34/187,188
கோல்_தொடி கொண்ட கொள்கை என்று ஏத்தி
மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப – உஞ்ஞை:36/120,121
தகை முடி வேந்தன் தாள் புகழ்ந்து ஏத்தி
தகை சால் சிறப்பின் தன்னொடு நம்மிடை – உஞ்ஞை:37/55,56
இருந்தவர் தெருளார் இசை புகழ்ந்து ஏத்தி
நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே – உஞ்ஞை:37/132,133
கழுமிய காதலொடு கைதொழுது ஏத்தி
நகர மாந்தர் பகர்வரால் பரந்து என் – உஞ்ஞை:40/389,390
தோன்றும் மாதரை தோன்ற ஏத்தி
பைம் கேழ் சாந்தும் குங்கும குவையும் – உஞ்ஞை:42/65,66
பல்லோர் பல் சிறப்பு அயர்வனர் ஏத்தி
வெல் போர் வேந்தன் மட மகள் விரும்பி – உஞ்ஞை:42/80,81
கொடுக்குவ வேண்டும் என்று எடுத்து_எடுத்து ஏத்தி
அரும் திறல் காவலர் அச்சம் எய்தி – உஞ்ஞை:44/122,123
பொங்கு புகழ் வேந்தன் வென்றி ஏத்தி
விண்ணகம் ஏறின் அல்லது விரி நீர் – உஞ்ஞை:45/83,84
கயல் புரை கண்ணி இயல்பு கிளந்து ஏத்தி
பொன் அணி நகரமொடு தம் மனை புலம்ப – உஞ்ஞை:47/258,259
வழிபடு தெய்வம் வணங்குவனன் ஏத்தி
கழி பிடி வலங்கொண்டு ஒழிவிடத்து ஒழிந்து – உஞ்ஞை:53/94,95
காவலன் மகளை கைதொழுது ஏத்தி
ஆய் பத அடிசில் மேயதை ஊட்டி – உஞ்ஞை:57/101,102
வண்ண மகளிர் வழி நின்று ஏத்தி
செண்ண சேவடி போற்றி சே_இழை – மகத:5/80,81
ஒண் புகழ் உவந்தனர் ஏத்தி
வரை நிரைத்து அன்ன மாடம்-தோறும் – நரவாண:7/50,51

TOP


ஏத்தியலாளரும் (1)

ஏத்தியலாளரும் கூத்தியர் குழுவும் – நரவாண:6/88

TOP


ஏத்தினர் (3)

எவ்வழியோரும் ஏத்தினர் எதிர்கொள – இலாவாண:5/63
பூ தூய் வீதி-தோறு ஏத்தினர் எதிர்கொள – இலாவாண:9/65
இசைத்தனர் புக்கு நின்று ஏத்தினர் கூறுவர் – மகத:25/4

TOP


ஏத்தும் (2)

வழு_இல் கொள்கை வானவர் ஏத்தும்
கழி பெரும் கடவுளை வழிபடின் அல்லது – உஞ்ஞை:42/7,8
நகாஅர் பல்லவர் நலம் புகழ்ந்து ஏத்தும்
விழுப்பம் எய்தி ஒழுக்கு இயல்பு ஓம்பி – இலாவாண:11/175,176

TOP


ஏத்துவனர் (2)

எழு முறை இறைஞ்சுக என்று ஏத்துவனர் காட்ட – இலாவாண:3/66
கோப்புறு விழு கலம் ஏத்துவனர் காட்டி – இலாவாண:5/137

TOP


ஏதம் (28)

எய்த போதுவல் ஏதம் ஆயினும் – உஞ்ஞை:43/78
இ வழி மற்று இவள் நிற்றலும் ஏதம்
வருக ஈண்டு என வத்தவன் வலிப்ப – உஞ்ஞை:44/128,129
தீது நிகழினும் ஏதம் இல் என – உஞ்ஞை:47/188
ஏதம் இன்றால் இன்பம் பயத்தலின் – உஞ்ஞை:47/228
நெறி-வயின் ஏதம் குறி-வயின் காட்டி – உஞ்ஞை:49/42
இரும் புறத்து இருந்தோர்க்கு ஏதம் என்று எண்ணி – உஞ்ஞை:53/19
இன்ப காதலற்கு ஏதம் அஞ்சி – உஞ்ஞை:53/136
என்-கொல் நிகழும் ஏதம் இன்று என – உஞ்ஞை:55/41
ஏதம் பட்டனன் ஆதலின் இன்னே – உஞ்ஞை:56/217
எண்ணுவர் ஆயின் ஏதம் தரும் என – இலாவாண:8/136
ஏதம்_இல் காட்சியோர் மா தவர் உறையும் – இலாவாண:15/41
ஏதம் இன்றி இறைக்கடன் கழித்து – இலாவாண:15/48
இகப்ப எண்ணுதல் ஏதம் உடைத்தே – இலாவாண:19/17
என் காமுறலின் ஏதம் அஞ்சி – இலாவாண:19/192
காதல் கணவன் ஏதம் இன்மை – இலாவாண:20/37
ஏதம் இல்லை இவணிர் ஆ-மின் என்று – மகத:6/183
ஏதம் அதனால் நிகழ்பவை இவை என – மகத:10/40
ஏதம் இல்லை இது என தேறி – மகத:14/33
என்னதும் நோவல் ஏதம் உடைத்து என – மகத:14/118
ஏனோர்க்கு இசைப்பின் ஏதம் தரும் என – மகத:14/285
ஏதம் இன்மையும் நீதியும் வினாஅய் – மகத:18/60
போதர துணிந்தனன் ஏதம் இன்றி – மகத:19/152
வேதத்து இயற்கையின் ஏதம் தீர – மகத:22/22
ஏதம்_இல் காட்சி ஏயர் பெருமகன் – மகத:22/271
இகழ்ச்சி ஏதம் தலைத்தது எனக்கு இன்று என – மகத:24/165
ஏதம் இல் செவி முதல் இனிதின் இசைப்ப – வத்தவ:7/45
ஏதம்_இல் காட்சி தாபதன் மட மகள் – வத்தவ:15/6
ஏதம்_இல் ஒழுக்கின் மா தவர் இல் பிறந்து – வத்தவ:17/85

TOP


ஏதம்_இல் (4)

ஏதம்_இல் காட்சியோர் மா தவர் உறையும் – இலாவாண:15/41
ஏதம்_இல் காட்சி ஏயர் பெருமகன் – மகத:22/271
ஏதம்_இல் காட்சி தாபதன் மட மகள் – வத்தவ:15/6
ஏதம்_இல் ஒழுக்கின் மா தவர் இல் பிறந்து – வத்தவ:17/85

TOP


ஏதமாம்-கொல் (1)

ஏதமாம்-கொல் இஃது என்று உரைப்போரும் – வத்தவ:17/56

TOP


ஏதில் (5)

ஏதில் மன்னனை எண்ணான் தெளிந்த – உஞ்ஞை:35/6
ஏதில் மன்னர் தூதுவ மாக்கள் – உஞ்ஞை:36/299
ஏதில் வேந்தன் காதலின் வினவ – இலாவாண:9/81
ஏதில் பெரும் பொருள் நீதியுள் இன்மையின் – இலாவாண:9/217
ஏதில் மன்னன் காதலி பயந்த – இலாவாண:10/128

TOP


ஏதிலன் (2)

எம் திறம் அறியா ஏதிலன் போல – இலாவாண:9/176
ஏதிலன் நல் நாட்டு என் துறந்து இறந்தனை – மகத:9/162

TOP


ஏதிலென் (1)

ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன் – மகத:12/18

TOP


ஏதிலை (1)

என்-வயின் நினையாது ஏதிலை போல – வத்தவ:7/49

TOP


ஏதின்மை (1)

ஏதின்மை ஈனும் ஏனோர்-மாட்டு என – வத்தவ:8/7

TOP


ஏது (4)

எடுத்து இயல் கிளவியோடு ஏது காட்டி – உஞ்ஞை:35/142
தேவர் சொல்லும் அது ஏது அதை ஆக என – உஞ்ஞை:37/258
இடுக்கண் தருதற்கு ஏது ஆகி – இலாவாண:18/32
எடுத்து நிலை அரிது என ஏது காட்டி – மகத:19/89

TOP


ஏது-கொல் (1)

ஏது-கொல் உற்றது என்று எஞ்சிய நெஞ்சின் – இலாவாண:18/57

TOP


ஏதுவாக (1)

கழி பொருள் எதிர் பொருட்கு ஏதுவாக
அழி பொருள் அன்றி ஆகு பயம் கூற – இலாவாண:13/70,71

TOP


ஏந்த (3)

காஞ்சனமாலையும் கை இசைத்து ஏந்த
அளற்று எழு தாமரை அள் இலை நீரில் – உஞ்ஞை:42/118,119
தோழியர் எல்லாம் சூழ்வனர் ஏந்த
சூடுறு கிண்கிணி பாடு பெயர்ந்து அரற்ற – வத்தவ:8/17,18
யாழ அற்பு கனி ஊழ் அறிந்து ஏந்த
ஓவாது நுகர்ந்து தாவா செல்வமொடு – வத்தவ:9/77,78

TOP


ஏந்தல் (2)

யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என – உஞ்ஞை:34/70
பூம் தார் அணிந்த ஏந்தல் வெண் குடை – உஞ்ஞை:42/46

TOP


ஏந்தலும் (2)

மந்தரம் ஏந்தலும் என்று இவை பிறவும் – மகத:4/88
இரும் கண் வையகத்து ஏந்தலும் உரியன் – நரவாண:8/141

TOP


ஏந்தி (20)

கன பொன் மாசை காண ஏந்தி
மன்றமும் மறுகும் கம்பலை கழும – உஞ்ஞை:35/76,77
பூ நறும் தேறல் பொலன் வள்ளத்து ஏந்தி
ஒழுகி நிலம் பெறாஅது ஒசிந்து கடைபுடைத்து – உஞ்ஞை:35/177,178
கார் இரும் கூந்தல் கையின் ஏந்தி
அகலின் அகலும் உயிரினள் ஆகி – உஞ்ஞை:40/195,196
ஒளித்த வெம் படை வெளிப்பட ஏந்தி
மலைக்குநர் உளர் எனின் விலக்குநர் ஆகி – உஞ்ஞை:43/44,45
தந்தனையாகி என் தகை வாள் ஏந்தி
ஊறு உண்டு எனினும் உழையின் பிரியாது – உஞ்ஞை:45/59,60
அரும் கயல் அடை பை அங்கையின் ஏந்தி
பெரும் கண் பேதையர் இரும் துயர் எய்தவும் – உஞ்ஞை:46/229,230
ஒருப்படுத்து ஒழியாது விருப்பின் ஏந்தி
மலை-வயின் பிறந்த மாண்புறு பெரும் கலம் – உஞ்ஞை:51/31,32
உழை கலம் ஏந்தி உழை படர்ந்து இயல – உஞ்ஞை:56/197
முடி மிசை ஏந்தி முன்னர் நடப்ப – இலாவாண:5/35
நிறைய முகந்து முறைமையின் ஏந்தி
ஐஞ்ஞூற்று_இரட்டி அணி இதழ் தாமரை – இலாவாண:5/46,47
ஒருப்படுத்து ஊழூழ் முறைமையின் ஏந்தி
நானம் கலந்த நறு நெய் தோய்த்து – இலாவாண:5/88,89
எழு உறழ் திணி தோள் எடுத்தனர் ஏந்தி
புடை இரு பக்கமும் போதிகை பொருந்தி – இலாவாண:6/131,132
தாமரை தட கையில் தாமம் ஏந்தி
விச்சாதரர் நகர் எ சாரும் மயங்கி – இலாவாண:6/144,145
முதிர் கனி அமிர்தம் எதிர்கொண்டு ஏந்தி
மேவன பல பயின்று ஈவன போன்ற – இலாவாண:13/26,27
தழையும் கண்ணியும் விழைவன ஏந்தி
பொன் பூம் கிண்கிணி புற அடி பிறழ – இலாவாண:16/7,8
இன்னவை பிறவும் இயைய ஏந்தி
வண்ண மகளிர் வழி நின்று ஏத்தி – மகத:5/79,80
கந்துகம் ஏந்தி கசிந்த கோதைக்கு – வத்தவ:12/222
அரச மங்கலம் அமைவர ஏந்தி
பல் பூம் படாகை பரந்த நீழல் – வத்தவ:17/102,103
பிணர் படு தட கையில் பிறவும் ஏந்தி
ஒள் நுதல் இரும் பிடி ஒன்றே போல – நரவாண:3/67,68
கரி அகல் ஏந்தி கா-வயின் பெற்றோன் – நரவாண:6/117

TOP


ஏந்திய (10)

ஏந்திய நீழல் சாந்து கண் புலர்த்திய – உஞ்ஞை:38/127
நின்னை உவக்கும் நின் பெருமான் ஏந்திய
வெல் வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்து – உஞ்ஞை:42/52,53
கனல் சேர் புகை அகல் ஏந்திய கையின் – உஞ்ஞை:42/89
இகல் இரும் கும்பத்து ஏந்திய சென்னியது – உஞ்ஞை:42/225
மங்கல செப்பின் மாண ஏந்திய
குங்குமம் கொண்ட கூன் வழுக்குறவும் – உஞ்ஞை:46/255,256
ஏந்திய கையர் மாம் தளிர் மேனி – உஞ்ஞை:57/47
ஏந்திய சென்னி மாந்தர் கூடி – இலாவாண:5/68
பூம் குழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
தேம் கமழ் தேறலொடு தெளி மது மடுப்பினும் – இலாவாண:14/60,61
கோட்கு அமைந்து ஏந்திய கோல பல் மலர் – இலாவாண:15/107
யவன பேழையுள் அடைந்தோர் ஏந்திய
தமனிய பல் கலம் தளிர் இயல் மாதர் – மகத:22/213,214

TOP


ஏந்தினள் (2)

ஏந்தினள் ஏற்ற இரும் பிடி இரீஇ – உஞ்ஞை:44/151
ஏந்தினள் எடுத்திட்டு எறிவுழி முன்கையின் – வத்தவ:12/198

TOP


ஏந்து (33)

புனைந்து ஏந்து அல்குல் காசு புதையாது – உஞ்ஞை:40/147
வளர்ந்து ஏந்து இள முலை மருங்கு இவர்ந்து கிடந்த – உஞ்ஞை:40/179
எழுதி அன்ன ஏந்து நுண் புருவம் – உஞ்ஞை:40/321
சாந்தின் செய்த ஏந்து இலை எறி வேல் – உஞ்ஞை:41/10
திருந்து இழை அணிந்த பரந்து ஏந்து அல்குல் – உஞ்ஞை:45/2
ஏந்து இளம் கொங்கையும் எடுக்கல் ஆற்றாள் – உஞ்ஞை:48/78
மாம் தளிர் மேனி ஏந்து புணை ஆக – உஞ்ஞை:54/136
ஏந்து எழில் ஆகத்து இறுவரை தாழ்ந்த – உஞ்ஞை:58/7
சிலம்பு ஒலி சீறடி சென்று ஏந்து புருவத்து – இலாவாண:2/47
ஐது ஏந்து அல்குலர் செய்கையில் திரியா – இலாவாண:3/67
இடம் அமைத்து இயற்றிய ஏந்து நிலை கோணத்து – இலாவாண:5/42
மலர்ந்து ஏந்து அகலத்து இலங்கு மணி ஆரத்து – இலாவாண:6/125
வணர்ந்து ஏந்து வளர் பிறை வண்ணம் கடுப்ப – இலாவாண:7/33
சேடு ஏந்து வனப்பின் செழு மலர் தடம் கண் – இலாவாண:8/105
மோடு ஏந்து அரிவை முற்றத்து முனாது – இலாவாண:8/106
சிலை அணி அழித்த சென்று ஏந்து புருவத்து – இலாவாண:12/91
பை அழித்து அகன்ற பரந்து ஏந்து அல்குல் – இலாவாண:15/65
முரிந்து ஏந்து புருவம் பொருந்திய பூ நுதல் – இலாவாண:15/87
திரு வில் அன்ன சென்று ஏந்து புருவம் – இலாவாண:16/25
இன்பம் பொதிந்த ஏந்து அணி வன முலை – இலாவாண:16/27
முகிழ்ந்து ஏந்து இள முலை முத்தொடு முழீஇ – இலாவாண:16/85
திகழ்ந்து ஏந்து அகலத்து செம் சாந்து சிதைய – இலாவாண:16/86
அரவு பை அன்ன ஐது ஏந்து அல்குல் – இலாவாண:19/146
வேந்துபட கடந்த ஏந்து சுடர் நெடு வேல் – மகத:1/2
கூந்தல் அணிந்த ஏந்து நுதல் சென்னி – மகத:3/37
இலை பூண் திளைக்கும் ஏந்து இள முலையள் – மகத:5/22
ஏந்து இள வன முலை எழில் வளை பணை தோள் – மகத:6/157
ஐது ஏந்து அல்குல் அவந்திகை வீவும் – மகத:7/57
போந்த பொழுதின் ஏந்து நிலை மாடத்து – மகத:9/139
இலங்கு கதிர் இலை பூண் ஏந்து முலை ஆகத்து – வத்தவ:5/95
பை என கிடந்த அது ஏந்து அல்குல் – வத்தவ:11/71
ஐது ஏந்து அல்குலும் ஆகமும் அசைஇ – நரவாண:1/209
இடை சூழ் அருவி ஏந்து வரை சென்னி – நரவாண:8/45

TOP


ஏந்துவனர் (1)

இல்லின் மகளிர் ஏந்துவனர் ஈத்த – வத்தவ:16/34

TOP


ஏப்பெறு (1)

ஏப்பெறு துயரமொடு இலங்கு_இழை இறைஞ்சி – உஞ்ஞை:34/243

TOP


ஏம (16)

ஏம வெண் குடை ஏயர் மகனொடு – உஞ்ஞை:36/104
இடுக்கண் போதின் ஏம பூமியுள் – உஞ்ஞை:37/34
ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த – உஞ்ஞை:40/182
காமம் காலா ஏம நோக்கத்து – உஞ்ஞை:41/55
இன்பம் ஆகிய ஏம வெண் குடை – உஞ்ஞை:49/64
ஏம நெடும் கரை எய்தி யாமத்து – உஞ்ஞை:57/108
ஏம முரசம் இழும் என சிலைப்ப – இலாவாண:5/18
ஏம செங்கோல் ஏயர் பெருமகன் – இலாவாண:6/16
தாமம் தாழ்ந்த ஏம வெண் குடை – இலாவாண:7/122
காமம் என்னும் ஏம பெரும் கடல் – மகத:3/52
தான் மீக்கூரிய ஏம வெண் குடை – மகத:5/7
ஏம நல் நெறி ஈதல் ஆற்றார் – மகத:10/35
ஏம செவ்வி ஏஎர் நுகரும் – மகத:14/91
ஏம வெண் குடை இன் நிழல் பரப்பி – வத்தவ:2/78
ஏம வையத்து இயல்பு அன்று ஆயினும் – வத்தவ:15/72
ஏம வைகல் இயல்வது ஆம் எனின் என – நரவாண:8/144

TOP


ஏமம் (10)

எழில் மணி விளக்கின் ஏமம் போகி – உஞ்ஞை:34/2
எதிர்ப்புனல் ஆடுநர்க்கு ஏமம் ஆக – உஞ்ஞை:40/275
இன் உயிர்க்கு ஏமம் ஆகுதல் அரிது என – உஞ்ஞை:45/86
ஏமம் ஆக இவன் எய்துவன் என்று தம் – உஞ்ஞை:48/51
நின் உயிர்க்கு ஏமம் அறிந்தனை நீங்கு என – உஞ்ஞை:52/122
எம்மை கொண்டு வந்து ஏமம் சார்த்தி – இலாவாண:10/32
ஏமம் ஈக என்று இடவகன் போக்க – மகத:27/191
ஏமம் ஈத்த இயல்பினன் ஆகி – வத்தவ:1/28
யாமம் காவலர் அசைய ஏமம்
வாய்ந்த வைகறை வையக வரைப்பின் – வத்தவ:5/64,65
ஏமம் சான்ற இ நில வரைப்பின் – நரவாண:8/46

TOP


ஏமாக்கும் (1)

இடை ஏமாக்கும் என்று அடைவனர் விலக்கி – உஞ்ஞை:42/127

TOP


ஏமாப்பு (1)

ஏமாப்பு இல என எடுத்துரை நாட்டி – இலாவாண:20/32

TOP


ஏமுறவு (1)

ஏமுறவு ஒழியா ஏயர் மன்னனை – இலாவாண:11/38

TOP


ஏமுறு (1)

ஏமுறு வேட்கை ஆகும் என்பது – வத்தவ:7/135

TOP


ஏய்ப்ப (21)

சிரல் சிறகு ஏய்ப்ப சிப்பம் விரித்த – உஞ்ஞை:34/216
மை உண்டு மதர்த்த மணி ஒழுக்கு ஏய்ப்ப
கோல ஆகத்து கொடிபட எழுதிய – உஞ்ஞை:40/219,220
நிலா விடு பசும் கதிர் கலாவம் ஏய்ப்ப
நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி – உஞ்ஞை:42/142,143
எண்ணல் ஆகத்து பெண் உலகு ஏய்ப்ப
கன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு – உஞ்ஞை:42/181,182
கொடும் கால் குண்டிகை கொட்டம் ஏய்ப்ப
அறாஅது ஒழுகும் அம் முலை ஆரம் – உஞ்ஞை:43/130,131
பெரியோர்க்கு உதவிய சிறு நன்று ஏய்ப்ப
கரவாது பெருகி கை இகந்து விளங்கும் – உஞ்ஞை:44/138,139
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி ஏய்ப்ப
தளை அவிழ் தாமமொடு தலை பல புரளவும் – உஞ்ஞை:46/21,22
குமிழ்த்து எழு வெம் பனி கோங்கு அரும்பு ஏய்ப்ப
முகிழ்த்தல் முன்னிய முலை முதல் முற்றத்து – உஞ்ஞை:46/224,225
ஊர்கோள் ஏய்ப்ப சூழ்பு உடன் வளைஇய – உஞ்ஞை:46/234
வெண் நிற அருவி வீழ்ச்சி ஏய்ப்ப
மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த – உஞ்ஞை:48/61,62
ஒளி செம் சீறடி உருக்கு அரக்கு ஏய்ப்ப
உளி தலை வெம்பரல் ஊன்றுபு நலிய – உஞ்ஞை:53/163,164
எண் திசை மருங்கினும் இவர் திரை ஏய்ப்ப
கண்ட பூம் திரை காழ் முதல் கொளீஇ – இலாவாண:4/133,134
குன்று கண் கூடிய குழாஅம் ஏய்ப்ப
ஒன்று கண்டு அன்ன ஓங்கு நிலை வனப்பின் – இலாவாண:7/4,5
அளைக்கு இவர் அரவின் தளர்ச்சி ஏய்ப்ப
முளைத்து எழு முலை கச்சு அசைத்தலின் அசைந்த – இலாவாண:7/27,28
உணர்ந்தோர் கொண்ட உறு நன்று ஏய்ப்ப
வணர்ந்து ஏந்து வளர் பிறை வண்ணம் கடுப்ப – இலாவாண:7/32,33
கோடு கொள் மயிலின் குழாஅம் ஏய்ப்ப
மாடம்-தோறும் மலிந்து இறைகொண்டனர் – இலாவாண:7/93,94
அம் தண் மஞ்ஞை ஆடு இடம் ஏய்ப்ப
கோதையும் குழலும் துள்ளுபு விரிய – இலாவாண:7/101,102
பனி இறை வாவல் படர்ச்சி ஏய்ப்ப
படையினும் தொழிலினும் நடை வேறு இயன்ற – இலாவாண:8/120,121
இடை திரைக்கு அணவரூஉம் எழுச்சி ஏய்ப்ப
வாக்கு அமை பிடி வார் வலித்த கையினர் – மகத:20/70,71
காலம் ஏய்ப்ப கரும் தலை வீழவும் – மகத:20/79
பொன் கோங்கு ஏய்ப்ப நல் கலன் அணிந்த – வத்தவ:11/47

TOP


ஏய்பு (1)

தறுகண் இமையான் தருக்கினொடு உறுதி ஏய்பு
இறு முனை மருங்கின் ஏடு பட திருகி – மகத:27/175,176

TOP


ஏய (3)

தமர்-வயின் ஏய தன்மையள் ஆகி – மகத:14/50
ஏய மற்று இதுவும் இனிது என வாங்கி – வத்தவ:14/112
எரியுறு நெடு வேல் ஏய இறைவன் – நரவாண:7/152

TOP


ஏயது (1)

ஏயது மறுக்கலும் இருந்தோன் கூய் நின் – உஞ்ஞை:35/149

TOP


ஏயதை (1)

பெரு நில மன்னர் ஏயதை அல்லது – வத்தவ:8/74

TOP


ஏயர் (26)

இரு நிலத்து இறைமை ஏயர் பெருமகன் – உஞ்ஞை:36/43
ஏம வெண் குடை ஏயர் மகனொடு – உஞ்ஞை:36/104
எறி படை தானை ஏயர் பெருமகன் – உஞ்ஞை:46/139
எதிர் மலர் பைம் தார் ஏயர் பெருமகன் – உஞ்ஞை:52/82
இரு நில கிழமை ஏயர் இறைவன் – உஞ்ஞை:56/151
இன் மகிழ் இருக்கை ஏயர் மகனோடு – இலாவாண:2/4
இடி கண் முரசின் ஏயர் பெருமகன் – இலாவாண:2/166
இடி உறழ் முரசின் ஏயர் பெருமகற்கும் – இலாவாண:3/2
ஏம செங்கோல் ஏயர் பெருமகன் – இலாவாண:6/16
இரு புடை பெயரா ஏயர் பெருமகன் – இலாவாண:7/49
ஏக செங்கோல் ஏயர் பெருமகன் – இலாவாண:8/3
இடி உறழ் முரசின் ஏயர் இறைவன் – இலாவாண:8/23
ஏமுறவு ஒழியா ஏயர் மன்னனை – இலாவாண:11/38
பாய் பரி இவுளி ஏயர் பெருமகன் – இலாவாண:11/59
ஏயர் கொற்றம் இவன்-வயின் கொடுத்து – இலாவாண:11/138
ஏயர் குலமுதற்கு இறைவன் ஆகி – இலாவாண:11/147
இருள்_அறு செங்கோல் ஏயர் இறைவன் – இலாவாண:17/115
ஏயர் அற்றத்து இடுக்கண்-காலை – மகத:1/9
இசைந்த வனப்பின் ஏயர் மகற்கும் – மகத:6/61
ஏயர் குருசிலை தூய் மொழி வினவ – மகத:6/188
ஏயர் பெரும் குடிக்கு ஆகு பெயர் உண்டு என – மகத:10/18
இன்னா நீக்கலும் ஏயர் குலத்தோற்கு – மகத:18/102
ஏதம்_இல் காட்சி ஏயர் பெருமகன் – மகத:22/271
ஏயர் பெருமகன் எதிர்வது விரும்ப – மகத:27/155
ஏயர் பெருமகன் சேயது நோக்கி – வத்தவ:3/2
இமிழ் திரை வையத்து ஏயர் பெருமகன் – வத்தவ:17/66

TOP


ஏயர்க்கு (2)

ஏயர்க்கு இறை என இயற்றிய வண்ணமும் – இலாவாண:11/157
ஏற்று அலர் பைம் தார் ஏயர்க்கு என்றும் – வத்தவ:8/44

TOP


ஏயற்கு (1)

இன் இயல் மான் தேர் ஏயற்கு இயல்பு என – இலாவாண:9/54

TOP


ஏயினன் (3)

இவரே வருக என ஏயினன் அருளி – உஞ்ஞை:35/36
ஆய் புகழ் வேந்தன் ஏயினன் ஆகி – நரவாண:6/47
யூகியும் உணர ஏயினன் ஆகி – நரவாண:7/124

TOP


ஏர் (54)

மலர் ஏர் உண்கண் மாதர்க்கு அமைந்த – உஞ்ஞை:35/60
ஏர் இள மகளிர்க்கு இயற்கை என்று எண்ணி – உஞ்ஞை:35/85
ஏர் அணி எருத்தம் இறை_மகன் ஏறலும் – உஞ்ஞை:38/321
ஏர் அணி அமைந்த எழு நில நல் வினை – உஞ்ஞை:40/16
கயல் ஏர் நெடும் கண் கடும் பனி கால – உஞ்ஞை:40/359
படை ஏர் கண்ணியர் பணிந்து கை கூப்பி – உஞ்ஞை:42/125
உயிர் ஏர் கணவரை தானை பற்றி – உஞ்ஞை:44/10
ஏர் இரும் குலிக புனல் பரந்து இழிதரும் – உஞ்ஞை:44/83
வடி ஏர் தடம் கண் வாள் என மிளிரும் – உஞ்ஞை:44/153
நுண் ஏர் மருங்கின் நும் மடித்தி எம் பெருமான் – உஞ்ஞை:47/29
ஏர் வளம் படுத்த எல்லைய ஆகி – உஞ்ஞை:49/102
ஏர் இலவங்கமும் ஏலமும் இருப்பையும் – உஞ்ஞை:50/33
முத்து ஏர் முறுவல் முயங்கு கயல் தடம் கண் – உஞ்ஞை:52/22
சிலை ஏர் புருவ செம் கண் செல்வி – உஞ்ஞை:52/23
வில் ஏர் உழவர் செல் சாத்து எறிந்துழி – உஞ்ஞை:52/26
ஏர் அலர் தாரோன் ஆற்றலின் ஊர்தர – உஞ்ஞை:52/114
திரு ஏர் சாயலை தே மொழி துவர் வாய் – உஞ்ஞை:53/56
மான் ஏர் நோக்கியர் – இலாவாண:5/112
ஈர நுண் துகில் அகற்றி ஏர் உடை – இலாவாண:5/164
மூரி நிமிர்வன போல ஏர் பெற்று – இலாவாண:6/102
பெயலிடை பிறழும் மின் ஏர் சாயலர் – இலாவாண:7/96
கொடி ஏர் சாயல் கொழும் கவின் வாட – இலாவாண:10/113
கயல் ஏர் கண்ணி துயில் ஏற்று எழவே – இலாவாண:11/66
இறும்பு அமல் ஏலமும் ஏர் இலவங்கமும் – இலாவாண:12/21
குழையர் கோதையர் இழையர் ஏர் இணர் – இலாவாண:14/13
கொம்பு ஏர் மருங்குல் கோமகன் குறுகி – இலாவாண:15/109
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய – இலாவாண:19/93
ஏர் இலவங்கம் தீம் பூ ஏலம் – மகத:1/116
முளை ஏர் முறுவல் முகிழ்த்த சில் நகை – மகத:6/49
கரும்பு ஏர் கிளவி கதிர் முகை முறுவல் – மகத:14/132
வாள் ஏர் கண்ணி வல்லேன் யான் என – மகத:14/182
மான் ஏர் நோக்கி மனத்தில் கொண்டு – மகத:14/286
ஏர் அணி நெடும் குடை இறை மீக்கூரிய – மகத:17/14
இலை தார் மார்பின் ஏர் அணி தட கை – மகத:17/18
இன்னது என்னான் பொன் ஏர் தோழிக்கு – மகத:17/80
தருசகன் தங்கை தகை ஏர் சாயல் – மகத:20/179
மாசு_இல் கற்பின் மருந்து ஏர் கிளவி – வத்தவ:4/3
மான் ஏர் நோக்கி மாறி பிறந்துழி – வத்தவ:6/65
உயிர் ஏர் கிழத்தி ஆகலின் உள்ளகத்து – வத்தவ:8/14
என் நேர் என்ற மின் ஏர் சாயலை – வத்தவ:8/107
அடி நனி காண்புழி அணங்கு ஏர் சாயல் – வத்தவ:12/34
வாள் ஏர் தடம் கண் வாசவதத்தை – வத்தவ:12/135
கோள் ஏர் மதி முகம் கோட்டி நோக்க – வத்தவ:12/136
விளங்கி ஏர் பிறழ வேல்_கணி இருந்து – வத்தவ:12/174
பூண் திகழ் கொங்கை புயல் ஏர் கூந்தல் – வத்தவ:12/265
கொடி ஏர் மருங்குல் குயில் மொழி செ வாய் – வத்தவ:13/64
அருள் ஏர் வாசகம் தெருளுற அறிந்து – வத்தவ:13/155
காம்பு_ஏர்_தோளி கையின் நீக்கலும் – வத்தவ:13/224
வில்_ஏர்_நுதல் வர வேந்தன் சென்று எதிர் – வத்தவ:14/83
கயத்து உறு மகள் எனில் கயல் ஏர் கண்கள் – வத்தவ:17/43
போது ஏர் கண்ணியும் புகன்றனள் ஒழுக – நரவாண:1/166
ஏர் அணி உடைய இலாவாணகம் எனும் – நரவாண:2/4
மருந்து ஏர் கிளவி மதனமஞ்சிகை-தன் – நரவாண:8/142
என்னும் உவகையின் மின் ஏர் நுடங்கிட – நரவாண:8/104

TOP


ஏர்தர (1)

நிலம் அமர் செங்கோல் நித்திலம் ஏர்தர
தலை மலை படலை தருசகன் புகுந்து – மகத:22/253,254

TOP


ஏர்தரும் (1)

கரு முகில் மருங்கின் இருள் அறுத்து ஏர்தரும்
வெம்மை செல்வன் மேல் நிலை பெற்ற – உஞ்ஞை:58/20,21

TOP


ஏர்ப்பு (1)

ஏர்ப்பு ஒலி வளை கை இரண்டேயாயினும் – வத்தவ:12/204

TOP


ஏரி (1)

ஏரி பெரும் குளம் நீர் நிறை இலவாம் – மகத:27/18

TOP


ஏரும் (1)

பயிர்ப்பும் உட்கும் இயற்கை ஏரும்
மடனும் அன்பும் மாசு_இல் சூழ்ச்சியும் – மகத:10/68,69

TOP


ஏல் (1)

கோல கொழு விரல் ஏல் ஒளி எறிப்ப – இலாவாண:12/78

TOP


ஏல்வு (1)

ஏல்வு அன்று என்ன மேலவை கிளவா – மகத:19/28

TOP


ஏலத்து (1)

நாகத்து அல்லியும் ஏலத்து இணரும் – உஞ்ஞை:51/24

TOP


ஏலம் (1)

ஏர் இலவங்கம் தீம் பூ ஏலம்
கப்புர பளிதமொடு உட்படுத்து இயற்றிய – மகத:1/116,117

TOP


ஏலமும் (3)

ஏர் இலவங்கமும் ஏலமும் இருப்பையும் – உஞ்ஞை:50/33
இறும்பு அமல் ஏலமும் ஏர் இலவங்கமும் – இலாவாண:12/21
சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனை – மகத:17/144

TOP


ஏலாது (2)

கவிகைக்கு ஏலாது கட்டு என கலிழ்ந்தோள் – உஞ்ஞை:56/112
ஏலாது என்று அவள் சேலம் திருத்தி – வத்தவ:12/97

TOP


ஏவ (2)

இகழ்வு இல் அ தொழில் இறைவன் ஏவ
பெரு மண் வேந்தனை பிழைப்பு இன்று ஓம்புதற்கு – மகத:12/79,80
விரை செலல் இவுளி வேந்தன் ஏவ
ஓடை அணிந்த ஒண் பொன் நெற்றி – நரவாண:7/16,17

TOP


ஏவல் (7)

ஏவல் இளையர் இசைத்த மாற்றம் – உஞ்ஞை:44/105
ஏவல் இளையரும் எதிர் எழுந்து ஓடி – உஞ்ஞை:44/112
ஏவல் மகளிர் வாய் மொழி கம்பலும் – இலாவாண:2/109
ஏவல் கேட்கும் காவலர் எல்லாம் – வத்தவ:1/43
இன்னது செய்க என ஏவல் இன்றியும் – வத்தவ:10/27
ஏவல் சிலதியர்-தாம் அவர்க்கு உரைப்ப – வத்தவ:13/5
ஏவல் சிலதியை ஆவயின் கூஉய் – வத்தவ:14/113

TOP


ஏவலின் (4)

வினை மாண் இளையரை ஏவலின் விரும்பி – மகத:8/29
பொரு படை தொகுத்து போதுக என்று ஏவலின்
விருத்திகாரரும் வேண்டியது பெறூஉம் – மகத:19/56,57
தமர்களை ஏவலின் அவர் வந்து அவரை – மகத:26/49
இருவர் மாற்றமும் தெரிக என்று ஏவலின்
உருமண்ணுவா அதற்கு உறு வழக்கு உரைத்தனன் – நரவாண:1/43,44

TOP


ஏவலும் (1)

அவன்-தலை வைக்கும் ஆணை ஏவலும்
உவந்ததை எல்லாம் உரை-மின் நீர் என – உஞ்ஞை:34/108,109

TOP


ஏவற்கு (1)

ஏவற்கு அமைந்த காவல் தொழிலொடு – உஞ்ஞை:57/69

TOP


ஏவா (1)

உறு தொழில் இளையரை உதயணன் ஏவா
மறு_இல் மாதர் ஒழிய நம் கோயில் – வத்தவ:15/143,144

TOP


ஏவி (1)

இரும் சின இளையரும் வருக என ஏவி
வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும் – மகத:19/115,116

TOP


ஏவினேன் (1)

இப்படி தருக என ஏவினேன் எமர்களை – வத்தவ:10/118

TOP


ஏழ் (7)

மூ_ஏழ் திறத்தொடு முற்ற காட்டி – உஞ்ஞை:37/116
ஏழ் அடி இடுதல் ஆற்றாது ஆயினும் – உஞ்ஞை:53/132
எல்லி யாமம் ஏழ் இருள் போல – மகத:7/96
ஏழ் ஆண்டு அமைந்தன தன்மையளாயினும் – மகத:22/110
ஒண் பந்து ஓர் ஏழ் கொண்டனள் ஆகி – வத்தவ:12/54
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய – வத்தவ:12/175
ஆறு_ஏழ் நாழிகை விலக்குவல் அத்துணை – வத்தவ:14/20

TOP


ஏழ்ச்சி (2)

ஏழ்ச்சி வேண்டும் சூழ்ச்சி கொடுக்க என – இலாவாண:11/180
ஏழ்ச்சி இன்றி கீழ்ப்பட்டு ஒழுகினும் – வத்தவ:11/15

TOP


ஏழ்ச்சியும் (2)

ஏழ்ச்சியும் இறுதியும் சூழ்ச்சியும் உணர – உஞ்ஞை:58/58
ஏழ்ச்சியும் எறி படை அளவும் எம் பெருமான் – மகத:25/6

TOP


ஏழாயிரவர் (2)

ஏழாயிரவர் எறிபடையாளரும் – மகத:26/67
இடவகன் பணியின் ஏழாயிரவர்
சவரர் புளிஞரும் குவடு உறை குறவரும் – மகத:27/7,8

TOP


ஏழேழ் (1)

ஏழேழ் மறவரை வீழ நூறலின் – இலாவாண:9/147

TOP


ஏழை (1)

ஏழை மாதரை சூழ்வர நின்ற – வத்தவ:14/73

TOP


ஏழையம் (1)

இனி பொய் உண்ணும் ஏழையம் அல்லம் என்று – உஞ்ஞை:40/167

TOP


ஏழையர் (1)

எக்கர் கிளைக்கும் ஏழையர் காண்-மின் – உஞ்ஞை:40/155

TOP


ஏழையை (1)

வள்ளி மருங்கின் ஒள் இழை ஏழையை
கச்சு ஆர் வன முலை விச்சாதரியே – நரவாண:8/54,55

TOP


ஏற்கும் (4)

தண் புனலாட்டின் தக்கணை ஏற்கும்
அந்தணாளர் அடைக விரைந்து என – உஞ்ஞை:39/51,52
பொருள்-வயின் பிரிவோர் வரவு எதிர் ஏற்கும்
கற்பு உடை மாதரின் கதுமென உரறி – உஞ்ஞை:49/76,77
ஏற்கும் மாந்தர்க்கு ஆற்ற வீசி – இலாவாண:5/125
ஏற்கும் தானத்து பாற்பட அணிந்து – இலாவாண:7/153

TOP


ஏற்ப (26)

ஐயப்படூஉம் அணியிற்கு ஏற்ப
ஒண்மையும் நிறையும் ஓங்கிய ஒளியும் – உஞ்ஞை:34/150,151
மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப
தகுவன கூறும் தலைமகன் மகள் என – உஞ்ஞை:36/121,122
கூடம் குத்திய கொழும் காழ்க்கு ஏற்ப
நாசிகை தானத்து நகை முத்து அணிந்து – உஞ்ஞை:38/249,250
நால் பெரு வாயில் ஏற்ப இயற்றி – உஞ்ஞை:53/74
தொகை தொழில் ஓப்பும் தகை செவிக்கு ஏற்ப
பணைத்த எருத்தின் பைம் கண் செயிர் நோக்கு – உஞ்ஞை:58/14,15
ஏற்ப விரீஇய இலையும் கொழுந்தும் – இலாவாண:2/143
கொழுந்திற்கு ஏற்ப அழுந்துபடு குலாவும் – இலாவாண:2/144
நால் பெரு வாயில் முதல்-தொறும் ஏற்ப
தமனிய பேரில் தலை நிலம் தழீஇய – இலாவாண:4/86,87
அணி வலம் சுரிந்த அமைதிக்கு ஏற்ப
வளர் பிறை அன்ன மல்லிகை கத்திகை – இலாவாண:4/141,142
சேட்டு எழில் பொலிந்த திரு முகக்கு ஏற்ப
மூரி கொள்ளான் முனிதல் செல்லான் – இலாவாண:4/173,174
சேவடிக்கு ஏற்ப செழும் மதி பாகு என – இலாவாண:4/186
இளையவன் படிவம் ஏற்ப இயல்புறீஇ – இலாவாண:5/150
தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய – இலாவாண:6/58
எட்டு வகை பெரும் சிறப்பு ஏற்ப எழுதி – இலாவாண:6/69
உளை மயிர் அணிந்த உச்சிக்கு ஏற்ப
வாய் புகு அன்ன வந்து ஒசி கொடி போல் – இலாவாண:6/107,108
தகை மணி கோவை தன் கைக்கு ஏற்ப
பரூஉ திரள் குறங்கின் பளிக்கு மணி வள் உகிர் – இலாவாண:6/110,111
நிரல் அளவு அமைத்த விரலிற்கு ஏற்ப
செம்மையில் சிறந்து வெம்மைய ஆகி – இலாவாண:15/55,56
கண்ணிற்கு ஏற்ப நுண்ணிதின் ஒழுகி – இலாவாண:15/86
ஈய கொண்டு தன் எழில் முடிக்கு ஏற்ப
சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும் – இலாவாண:15/135,136
உச்சிக்கு ஏற்ப ஒப்பனை கொளீஇ – இலாவாண:15/140
ஆகக்கு ஏற்ப அணிகம் வாராய் – இலாவாண:19/124
ஏற்ப முடித்து பூ பிறிது அணியாள் – மகத:9/64
இரந்தனன் ஆகி ஏற்ப காட்டிய – மகத:14/135
வீணைக்கு ஏற்ப விசையொடு மற்று இவை – மகத:14/207
ஏற்ப எடுப்பித்து எல்லியும் காலையும் – வத்தவ:3/17
குலாலற்கு ஏற்ப பெரும் குயம் அருளி – வத்தவ:9/48

TOP


ஏற்பவை (1)

இருவரும் தம்முள் ஏற்பவை கூறி – மகத:18/95

TOP


ஏற்பன (1)

ஏக வல்லியும் ஏற்பன அணிந்து – மகத:9/67

TOP


ஏற்பும் (1)

தரும விகற்பமொடு தானை ஏற்பும்
கரும விகற்பமொடு காமமும் கெழீஇய – உஞ்ஞை:34/29,30

TOP


ஏற்போர்க்கு (1)

ஏற்போர்க்கு ஈக இன்றே போன்ம் என – நரவாண:7/121

TOP


ஏற்ற (34)

திண் நிலை படுகால் திருந்து அடிக்கு ஏற்ற
மணி கலம் ஒலிப்ப மாடம் ஏறி – உஞ்ஞை:33/190,191
ஏற்ற முன்கை தொடி வீழ்ந்து அற்றால் – உஞ்ஞை:36/119
ஏற்ற கோலத்து இயம்பும் கிண்கிணி – உஞ்ஞை:38/228
ஏந்தினள் ஏற்ற இரும் பிடி இரீஇ – உஞ்ஞை:44/151
காற்றினும் எரியினும் ஏற்ற ஆர்ப்பினும் – உஞ்ஞை:46/206
புடை துளைக்கு ஏற்ற இடை துளை யாப்பின் – இலாவாண:6/63
அடியிற்கு ஏற்ற முடியிற்று ஆகி – இலாவாண:6/81
திரு நுதற்கு ஏற்ற பரிசர கைவினை – இலாவாண:7/34
ஏற்ற செவ்வி மாற்றம் கூறி – இலாவாண:10/8
எருத்திற்கு ஏற்ற திரு தகு கழுத்தின் – இலாவாண:15/78
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன் – இலாவாண:15/126
சேவடிக்கு ஏற்ற செம்பொன் கிண்கிணி – இலாவாண:19/184
மாற்றோர் நுகர படாஅது ஏற்ற
பல் மணி பயின்ற ஒண் முகட்டு உச்சி – மகத:3/22,23
மம்மர் வைகறை மருங்கு துயில் ஏற்ற
அனந்தர் முரற்சி அளைஇ புதைந்த – மகத:4/51,52
இலங்கு இழை மாதர் ஏற்ற ஏறி – மகத:6/130
ஏற்ற பொழுதே இன்ப தேவியோடு – மகத:10/11
வனப்பிற்கு ஏற்ற வலியும் விச்சையும் – மகத:20/159
சூடகத்து ஏற்ற சுடர் ஒளி பவளமொடு – மகத:22/234
வதுவைக்கு ஏற்ற மங்கல பேர் அணி – மகத:22/237
மைந்தர் அழகிற்கு ஏற்ற
அழல் மணி நெடு முடி அரசருள் அரசன் – மகத:22/251,252
பத்தற்கு ஏற்ற பசை அமை போர்வை – வத்தவ:3/77
இயல்பு உடை அம் கண் ஏற்ற பின் காணாது – வத்தவ:7/92
கருவி வானில் கார் துளிக்கு ஏற்ற
அருவி வள்ளியின் அணி பெறு மருங்குலள் – வத்தவ:7/214,215
ஏற்ற கோலத்து இளமையொடு புணர்ந்தோர் – வத்தவ:11/37
மற்று அதற்கு ஏற்ற வகை பல உண்டு அவை – வத்தவ:14/31
பள்ளி ஏற்ற பின் பதன் அறிந்து வணங்கி – நரவாண:1/144
இசைந்த வெண் துகில் ஏற்ற தானையன் – நரவாண:2/21
தன்மைக்கு ஏற்ற தலை பேர் அணிகலம் – நரவாண:7/9
ஏற்ற சிறப்பின் யூகி-தன்னொடு – நரவாண:7/85
ஏற்ற முகத்தின் இறைவனும் விரும்பி – நரவாண:7/106
விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும் – நரவாண:8/100
அங்கைக்கு ஏற்ற பைம் தொடி முன்கையும் – நரவாண:8/101
முன்கைக்கு ஏற்ற நன்கு அமை தோளும் – நரவாண:8/102
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும் – நரவாண:8/103

TOP


ஏற்றம் (3)

ஏற்றம் விரும்பலும் இளம் பிடி எடுப்பி – உஞ்ஞை:45/67
கட்டில் ஏற்றம் கடந்த பின்னர் – இலாவாண:4/26
ஆனை ஏற்றம் அறிய காட்டி – இலாவாண:9/76

TOP


ஏற்றமும் (1)

ஏற்றமும் இழிவும் இடையிடை பல்கி – உஞ்ஞை:49/48

TOP


ஏற்றல் (4)

ஏற்றல் காணும் எம் இறைவன் தான் என – உஞ்ஞை:36/243
ஏற்றல் வேண்டும் என்று இரந்து ஏற்றினமால் – உஞ்ஞை:45/78
உடன் பிடி ஏற்றல் உற்றனெம் ஆகி – உஞ்ஞை:47/82
தானம் ஏற்றல் தகாஅது என்று தன் – மகத:8/115

TOP


ஏற்றலின் (1)

தனக்கு பதமாக தலைப்பெய்து ஏற்றலின்
வார் கவுள் வேழமும் வசத்தது அன்றி அவன் – மகத:27/164,165

TOP


ஏற்றலும் (3)

கால் பிடி-தன்னொடு ஏற்றுக ஏற்றலும்
வேல் படை இளையர் நால் பெரும் திசையும் – உஞ்ஞை:43/40,41
ஏற்று இனம் ஏற்றலும் காற்று என கடாஅய் – உஞ்ஞை:47/84
எண்ணாயிரம் கை ஏற்றினள் ஏற்றலும்
கண் ஆர் மாதர் மதி முகம் காணில் – வத்தவ:12/245,246

TOP


ஏற்றனன் (2)

மாக விசும்பின் இன் துயில் ஏற்றனன்
கேகயத்து அரசன் என அது கேட்டே – மகத:20/139,140
ஏற்றனன் கொண்டு வேற்றுமை இன்றி – வத்தவ:10/108

TOP


ஏற்றி (46)

நிறை_நூல் பொத்தக நெடு மணை ஏற்றி
வல்லோர் வகுத்து வாசனை வாக்கியம் – உஞ்ஞை:34/26,27
குற்றம்_இல் குறங்கில் கோ வலம் ஏற்றி
கோதை மார்பில் காதலின் ஒடுக்கி – உஞ்ஞை:34/158,159
உழை செல் மகளிர் உக்கம் ஏற்றி
சித்திரம் பயின்ற செம்பொன் ஓலை – உஞ்ஞை:34/213,214
வெண் கால் அமளி விருப்பின் ஏற்றி
அணி இழை மகளிரும் யானையும் வணக்கும் – உஞ்ஞை:35/99,100
கடிது இயல் வையம் கவ்வையின் ஏற்றி
கொடி அணி கூலம் கொண்டனன் போவுழி – உஞ்ஞை:35/151,152
எழுது நுண் புருவம் ஏற்றி இயைவித்து – உஞ்ஞை:35/179
புலவி தண்டம் தமர் வயின் ஏற்றி
இல்லையாயினும் சொல் வகை செருக்கி – உஞ்ஞை:35/191,192
பணை எருத்து ஏற்றி பண்ணின ஆகி – உஞ்ஞை:38/110
கண்ணி நெற்றி வெண் சூட்டு ஏற்றி
தூ துகில் உடுத்து தொடி உடை தட கை – உஞ்ஞை:39/20,21
விசைய வேழத்து இசை எருத்து ஏற்றி
பெரு விறல் வேந்தன் சிறுவரை எல்லாம் – உஞ்ஞை:39/39,40
நன் கலம் ஏற்றி நாள்_அணி அணிந்து – உஞ்ஞை:39/55
முழுது நுதல் நெருங்க முரிய ஏற்றி
செதும்பல் தாமரை செவ் இதழ் போல – உஞ்ஞை:40/322,323
கரும் கண்-தோறும் பசும்பொன் ஏற்றி
தொடி தலை படு கோல் பிடித்த கையர் – உஞ்ஞை:40/376,377
ஏற்றி பண்ணிய இன களிறு நிரைஇ – உஞ்ஞை:41/19
புனைவு கொண்டு ஏற்றி வினைவலர் இயற்றிய – உஞ்ஞை:42/88
நல் நகர் நடுவண் பொன் மணை ஏற்றி
பெரும் திசை நோக்கி இருந்து அவண் இறைஞ்சி – உஞ்ஞை:42/107,108
நீர் ஆடு பல் கலம் நெரிய ஏற்றி
ஆராடு தானத்து ஐந்நூறாயிரம் – உஞ்ஞை:42/113,114
இடு மணி யானை எருத்தம் ஏற்றி
அடல் முரசு அறைந்தமை அறிந்தனம் ஆதலின் – உஞ்ஞை:43/17,18
இரும் பிடி நின்னொடு ஒருங்கு உடன் ஏற்றி
கொடுக்குவ வேண்டும் என்று எடுத்து_எடுத்து ஏத்தி – உஞ்ஞை:44/121,122
உதயணகுமரன் ஒரு பிடி ஏற்றி
போவது பொருள் என காவலர் இரப்ப – உஞ்ஞை:44/136,137
பெருந்தகை அண்ணல் பிடி மிசை ஏற்றி
திருந்து இழை அணிந்த பரந்து ஏந்து அல்குல் – உஞ்ஞை:45/1,2
ஊறு களி யானை ஒருங்கு உடன் ஏற்றி
வீறுபடு கோலமொடு வியல் நகர் விழவு அணி – உஞ்ஞை:54/78,79
என் அணி பெரும் கலம் தன் அணிந்து ஏற்றி
குற்றம்_இல் பெரும் புகழ் கோப்பெருந்தேவி – உஞ்ஞை:54/81,82
பாவையை தழீஇ பண்ணு பிடி ஏற்றி
எய்தா அரும்_பொருள் எய்திய பின்றை – உஞ்ஞை:54/107,108
காப்பு பொறி ஒற்றி யாப்புற ஏற்றி
தனிமை எய்திய மன்னனும் தையலும் – உஞ்ஞை:56/199,200
பணை எருத்து ஏற்றி பல்லவர் சூழ – இலாவாண:2/38
கண் ஆர் குருசிலை கவின்பெற ஏற்றி
தகை மலர் தாரோன் தட கை பற்றி அவள் – இலாவாண:3/157,158
வாசவதத்தை மதி முகத்து ஏற்றி
சிதர் அரி மழை கண் மதர்வை நோக்கம் – இலாவாண:9/98,99
சில் அரி கண்ணியொடு சிறு பிடி ஏற்றி
செயற்படு கருமத்து இயற்கை இற்று என – இலாவாண:9/106,107
கோல எருத்தம் குலவ ஏற்றி
வள நகர் புக்கு தன் உள மனைக்கு எல்லாம் – இலாவாண:11/143,144
காட்ட காணாள் கதம் பாடு ஏற்றி
வாள் கண் பாவை மருவற்கு இன்னா – மகத:14/40,41
மெல் விரல் நோவ பல்-கால் ஏற்றி
ஆற்றாள் ஆகி அரும்_பெறல் தோழியை – மகத:14/203,204
யானை ஏற்றி அணி முரசு அறைதலும் – மகத:19/61
பவழ கொட்டை பொன் செருப்பு ஏற்றி
திகழ் செய் கோல திரு மணை இரீஇ – மகத:22/202,203
பீடத்து இரீஇய பாடு அறிந்து ஏற்றி
நறு நீர் துவர் கை வயின்வயின் உரீஇ – மகத:22/207,208
வெற்றி முரசம் வேழம் ஏற்றி
நகரினும் நாட்டினும் பகர்வனர் அறைக என – மகத:27/182,183
ஈமம் ஏற்றி அவன் உரிமை சனத்திற்கு – மகத:27/190
பிறை மருப்பு யானை பிணர் எருத்து ஏற்றி
பறை விட்டன்றால் பகை முதல் அறுத்து என் – மகத:27/219,220
முறையின் ஏற்றி பந்து நிலத்து இடலும் – வத்தவ:12/132
பொரு_இல் பக்கத்து பொன் கலம் ஏற்றி
வருக என மூவரும் ஒரு கலத்து அயில – வத்தவ:14/162,163
அரு விலை நன் கலம் அமைவர ஏற்றி
குரவர் போல கூட்டுபு கொடுப்ப – வத்தவ:17/111,112
ஆர்வ உள்ளத்து அவனுடன் ஏற்றி
ஊரப்படு நீ ஓர் இருள் எல்லையுள் – நரவாண:3/126,127
நாளும்நாளும் நன்கனம் ஏற்றி
ஊழின்ஊழின் உயர ஓட்டி – நரவாண:4/84,85
பெரும் கை யானை பிணர் எருத்து ஏற்றி
இரும் கண் அதிர – நரவாண:6/60,61
சாலங்காயனை தோல்வினை ஏற்றி
உரைத்த கிளவிக்கு ஒன்றே போல – நரவாண:7/103,104
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து – நரவாண:8/17

TOP


ஏற்றிய (3)

இடைநாள் பிறையின் ஏற்றிய திரு வில் – உஞ்ஞை:37/26
அழி கவுள் வேழத்து அணி எருத்து ஏற்றிய
இடி உமிழ் முரசின் இரும் கண் தாக்கி – மகத:5/34,35
நாற்றிய கையர் ஏற்றிய கோலமொடு – மகத:17/169

TOP


ஏற்றியும் (4)

கதுப்பு அணி புனைந்தும் கதிர் வளை ஏற்றியும்
மது களி கொண்ட மதர் அரி நெடும் கண் – இலாவாண:16/73,74
இலக்கண செ விரல் ஏற்றியும் இழித்தும் – மகத:14/272
பிடித்த பூம் பந்து அடித்து விசும்பு ஏற்றியும்
அடித்த பந்தால் விடுத்தவை ஓட்டியும் – வத்தவ:12/68,69
சூடகம் ஏற்றியும் பாடகம் திருத்தியும் – வத்தவ:12/118

TOP


ஏற்றினமால் (1)

ஏற்றல் வேண்டும் என்று இரந்து ஏற்றினமால்
கூற்ற ஆணை எம் கொற்றவன் தலைத்தாள் – உஞ்ஞை:45/78,79

TOP


ஏற்றினரால் (1)

கட்டில் ஏற்றினரால் கருதியது முடித்து என் – இலாவாண:3/167

TOP


ஏற்றினள் (1)

எண்ணாயிரம் கை ஏற்றினள் ஏற்றலும் – வத்தவ:12/245

TOP


ஏற்றினன் (1)

பிடி ஏற்றினன் ஆல் பெருந்தகை உவந்து என் – உஞ்ஞை:44/155

TOP


ஏற்று (25)

ஏற்று இனம் வரூஉம் நாற்றம் கழுமிய – உஞ்ஞை:37/212
சாற்றிட கொண்ட ஏற்று உரி முரசம் – உஞ்ஞை:38/100
ஏற்று அரி மாவின் தோற்றம் போல – உஞ்ஞை:39/37
ஏற்று உரி முரசின் இறைவன் மூதூர் – உஞ்ஞை:43/195
ஏற்று இனம் ஏற்றலும் காற்று என கடாஅய் – உஞ்ஞை:47/84
ஏற்று சிங்கத்தின் இடித்து எழுந்து உரறி – உஞ்ஞை:47/112
ஏற்று அமை இரும் பிடி இயக்கமும் எண்ணி – உஞ்ஞை:52/5
கூற்று உறழ் மொய்ம்பின் ஏற்று பெயர் அண்ணல் – உஞ்ஞை:54/66
யாப்பு உடை நண்பின் ஏற்று பெயரன் – உஞ்ஞை:56/148
ஏற்று உரி போர்த்த இடி உறழ் தழங்குரல் – இலாவாண:2/28
ஏற்று உரி அதல் மிசை ஆற்றுளி இருந்து – இலாவாண:3/122
அம் வயிற்கு ஏற்று கவ்விதின் பொலிந்து – இலாவாண:6/61
இடையிற்கு ஏற்று புடையில் பொலிந்து – இலாவாண:6/98
கயல் ஏர் கண்ணி துயில் ஏற்று எழவே – இலாவாண:11/66
ஏற்று எழுந்தனனால் இனியவரிடை என் – இலாவாண:18/119
ஏற்று எழுந்ததன் பின் இனியோர் குழீஇ – இலாவாண:19/1
ஏற்று எதிர்கொள்ளும் இன்ப கம்பலை – மகத:16/13
பூண் ஏற்று அகன்ற புடை கிளர் அகலத்து – மகத:20/62
தாம் ஏற்று அழுத்திய சத்தி வாங்கி – மகத:20/63
ஏற்று உரி முரசின் இறை_மகன் பணித்த – மகத:23/61
இசை கொள் ஓசையின் இன் துயில் ஏற்று
விசை கொள் மான் தேர் வியல் கெழு வேந்தன் – வத்தவ:5/82,83
ஏற்று அலர் பைம் தார் ஏயர்க்கு என்றும் – வத்தவ:8/44
எழுந்த மாதரொடு இறைவனும் ஏற்று
கழிந்த கங்குல் கனவினை வியந்து – நரவாண:1/110,111
நல் பெரும் கனவின் நடுங்குவனள் ஏற்று
வெள்ள தானை வியலக வேந்தன் – நரவாண:1/142,143
ஏற்று_அரு மலையும் செலற்கு_அரும் தீவும் – நரவாண:4/90

TOP


ஏற்று_அரு (1)

ஏற்று_அரு மலையும் செலற்கு_அரும் தீவும் – நரவாண:4/90

TOP


ஏற்றுக (1)

கால் பிடி-தன்னொடு ஏற்றுக ஏற்றலும் – உஞ்ஞை:43/40

TOP


ஏற்றும் (4)

குஞ்சர ஏற்றும் கொடி தேர் வீதியும் – உஞ்ஞை:36/358
பண்டி துறை ஏற்றும் பகட்டு இணை போல – உஞ்ஞை:53/54
பட்ட நெற்றியில் பொட்டிடை ஏற்றும்
மற்றது புறங்கையில் தட்டினர் எற்றியும் – வத்தவ:12/88,89
அங்கையின் ஏற்றும் புறங்கையின் ஓட்டியும் – வத்தவ:12/229

TOP


ஏற்றுவனள் (1)

போற்று பல கூற ஏற்றுவனள் இருப்ப – மகத:5/96

TOP


ஏற்றோர் (3)

ஏற்றோர் தாக்கி கூற்று உறை உலகினுள் – உஞ்ஞை:46/14
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என – மகத:27/136
ஏற்றோர் சாய்த்த இ குருகுலத்தகத்து ஓர் – வத்தவ:11/13

TOP


ஏற (7)

தானை தவிசில் தகையோன் ஏற
ஏனை தவிசில் நங்கையை இருத்தினர் – உஞ்ஞை:34/231,232
வாயின் முற்றத்து வயங்கு_இழை ஏற
பாத பீடிகை பக்கம் சேர்த்தலும் – உஞ்ஞை:38/240,241
விடற்கு_அரும் தோழர் புடை களிறு ஏற
அம் தண் பொதியில் சந்தன மரமும் – உஞ்ஞை:58/29,30
வாசவதத்தை வையம் ஏற
கோல் தொழிலாளர் மாற்று மொழி இயம்ப – உஞ்ஞை:58/75,76
கோடு உயர் மாடத்து கொடு முடி ஏற
அரத்த கொப்புளொடு வருத்தம் கொண்ட-கொல் – மகத:8/15,16
வலம்படும் நமக்கு என வலம்கொண்டு ஏற
ஒழிந்த மாந்தர் பொலிந்து புறம் காப்ப – மகத:19/191,192
ஒள் நறும் தெரியல் உதயணன் ஏற
பண்ணி செல்க பத்திராபதி என – நரவாண:3/122,123

TOP


ஏறல் (2)

மூது அறி பாகன் ஏறல் இயையான் – உஞ்ஞை:38/246
ஏறல் நன்று என கூறி வைத்தலின் – மகத:13/43

TOP


ஏறலும் (3)

பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும்
செய்யோள் அமர்ந்த செம்பொன் தாமரை – உஞ்ஞை:38/256,257
ஏர் அணி எருத்தம் இறை_மகன் ஏறலும்
தூய்மை இன்று என மா நிலத்து இயங்கா – உஞ்ஞை:38/321,322
வீறு பெறு விமானத்து விரைந்து அவர் ஏறலும்
மற்றை மூவரும் கொற்றவன் குறுகி – நரவாண:4/63,64

TOP


ஏறா (2)

ஈமம் ஏறா இயல்பு உடை அமைதியர்க்கு – வத்தவ:1/27
ஏறா கருமம் இது என எண்ணி – நரவாண:3/34

TOP


ஏறி (52)

மணி கலம் ஒலிப்ப மாடம் ஏறி
அணி கால் பவழத்து யவனர் இயற்றிய – உஞ்ஞை:33/191,192
கலன் அணி ஆயம் கைதொழ ஏறி
புலம்புகொள் மஞ்ஞையின் புல்லென சாம்பி – உஞ்ஞை:33/195,196
இழை அணி இரும் பிடி எருத்தம் ஏறி
கடை அணி ஆவணம் கைதொழ போதந்து – உஞ்ஞை:34/37,38
திரு மணி அம்பலம் கொண்டு ஒருங்கு ஏறி
இரட்டை தவிசின் இருக்கை காட்டி – உஞ்ஞை:34/41,42
அரக்கு பூமி ஆயமொடு ஏறி
பரப்பு மலர் ஒருசிறை பாவையை நிறீஇ – உஞ்ஞை:34/226,227
சந்தன பீடிகை சார்வு அணை ஏறி
பல் மயிர் கவரியொடு பரிசனம் சுற்ற – உஞ்ஞை:37/15,16
அண்ணல் யானையும் பண்ணுறுத்து ஏறி
இலைய இன பரி கொளீஇ சிலையின் – உஞ்ஞை:37/45,46
பொன் கோட்டு அம்பலம் பொலிய ஏறி
கற்றறிவாளர் சுற்றிய நடுவண் – உஞ்ஞை:37/185,186
பொய் பேய் ஏறி பொள்ளென நக்கு – உஞ்ஞை:37/241
சுற்றுபு சூழ முற்றத்து ஏறி
பிடியும் வையமும் வடிவு அமை பிடிகையும் – உஞ்ஞை:38/134,135
கோல் கொள் கன்னியர் மேல்கொண்டு ஏறி
விசி பிணியுறுத்த வெண் கோட்டு ஊர்தி – உஞ்ஞை:38/156,157
விழா மலி சுற்றமொடு வெண் மணல் ஏறி
நாள் அத்தாணி வால் அவை நடுவண் – உஞ்ஞை:38/280,281
கூட கூம்பின் நீள் திரள் ஏறி
உச்சிக்கு இவரும் கட்கு இன் கடுவன் – உஞ்ஞை:40/72,73
நெடு வீழ் ஊசல் முடி பிணி ஏறி
தொடு வேல் முற்றத்து தோழியோடு ஆடா – உஞ்ஞை:40/113,114
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி
பொறி மயில் பெடையின் பொங்குபு பாய்தலின் – உஞ்ஞை:40/156,157
வார் நீர் துடைத்து வயந்தகன் ஏறி
வானக நாள்_மீன் தானம் நோக்கி – உஞ்ஞை:52/2,3
கண் பொரி கள்ளி கவர் சினை ஏறி
கூப்பிடு குரல் இசை சேண் புலத்து இசைப்பவும் – உஞ்ஞை:52/49,50
மலிந்து அவண் ஏறி வத்தவர் பெருமகன் – உஞ்ஞை:56/281
பாகர் தருதலின் பணை எருத்து ஏறி
கரு முகில் மருங்கின் இருள் அறுத்து ஏர்தரும் – உஞ்ஞை:58/19,20
நளி வரை அன்ன நளகிரி ஏறி
ஒளி மணி கொடும் பூண் உதயணகுமரனை – இலாவாண:8/51,52
விண்ணகத்து இழிந்து விமானம் ஏறி
மண்ணகத்து இயங்கல் மனத்தின் வேண்டிய – இலாவாண:8/194,195
புலி முக மாடம் மலிர ஏறி
மையல் வேழம் அடக்கிய மன்னனை – இலாவாண:9/68,69
பாடு அமை படுகால் பைய ஏறி
நங்காய் காண் உன் பெருமான் நல் நகர் – இலாவாண:10/71,72
மட மொழி மகளிரும் மைந்தரும் ஏறி
கடல் மலை பெயரும் காலம் போல – இலாவாண:12/38,39
அடு திறல் அண்ணல் அணி பெற ஏறி
மறு_இல் மா நகர் குறுக வரு வழி – இலாவாண:18/30,31
அருமை அமைச்சர் பெரு மலை ஏறி
கொண்டு யாம் தருதும் கண்டனை தெளிக என – மகத:2/10,11
இலங்கு இழை மாதர் ஏற்ற ஏறி
பொலம் தொடி மகளிர் பொலிவொடு சூழ – மகத:6/130,131
ஆயம் சூழ அமளியுள் ஏறி
நறு மலர் காவினுள் துறுமிய பூம் துணர் – மகத:7/76,77
கோதை ஆயம் பரவ ஏறி
திரு மலர் வீதி போதந்து எதிர் மலர் – மகத:8/33,34
வான் தோய் மண்டபம் வந்து ஒருங்கு ஏறி
தேன் தோய் கோதை சில்லென உராய் – மகத:8/49,50
அலர் ததை ஐம்பால் அணி_இழை ஏறி
போந்தனள் ஆகி பூம் தண் கானத்துள் – மகத:13/12,13
வித்தக கைவினை சத்தி ஏறி
உட்கு தக உரைத்தலும் கட்கு இன் பாவை – மகத:14/153,154
இழை நிரைத்து இலங்க ஏறி இறைகொள – மகத:16/28
பொற்பு உடை புரவி பொலிய ஏறி
நல் படை நலியா நன்மையொடு பொலிந்த – மகத:17/225,226
இடு மணி இல்லது ஓர் பிடி மிசை ஏறி
படு மணி வாயில் பலரொடும் போதர – மகத:18/76,77
நிலை கால் ஏணியும் தலைச்சிறந்து ஏறி
இரும் பேர் உலகம் ஒருங்கு இயைந்தது போல் – மகத:20/150,151
மிலைச்சர் ஏறி தலை படை தருக்குவ – மகத:26/74
கான வேங்கை கவர் சினை ஏறி
அச்சம் எய்தி எத்திசை மருங்கினும் – வத்தவ:3/71,72
கொடுஞ்சி நெடும் தேர் கோல் கொள ஏறி
நெடும் கொடி வீதி நீந்துபு போகி – வத்தவ:7/147,148
பழிப்பு_இல் பள்ளி பலர் தொழ ஏறி
திரு இரண்டு ஒரு மலர் சேர்ந்து அவண் உறையும் – வத்தவ:8/27,28
நிலா விரி முற்றத்து குலாவொடு ஏறி
பந்தடி காணிய நிற்ப இப்பால் – வத்தவ:12/14,15
காவலன் பிடி மிசை காண் தக ஏறி
பல் வகை மகளிரொடு பையென சென்று தன் – வத்தவ:12/30,31
ஆடு அரங்கு ஏறி அணைந்திருந்து அவளோடு – வத்தவ:13/195
காணும் தன்மையர் காண்வர ஏறி
பிடியும் சிவிகையும் பிறவும் புகாஅள் – வத்தவ:15/113,114
திரு மாண் ஆகத்து தேவியொடு ஏறி
இருந்த-பொழுதின் பொருந்திய அல்லியுள் – நரவாண:1/91,92
வெண் மலை மீமிசை ஏறி வேட்கையின் – நரவாண:1/154
இறுவரை ஏறி இமையோடு ஆடும் – நரவாண:1/185
தானும் தேவியும் தகை பெற ஏறி
வானோர் கிழவனின் வரம்பு இன்று பொலிய – நரவாண:4/54,55
முகில் உளம் கிழிய அகல் விசும்பு ஏறி
எழுச்சி எல்லை முனிந்த பின்னர் – நரவாண:4/107,108
இடு மணி யானை எருத்தம் ஏறி
படு முகில் மீமிசை பனி மதி போல – நரவாண:8/78,79
வெள்ளி விமானம் விதிர்விதிர்த்து ஏறி
வள்ளி மருங்கின் ஒள் இழை ஏழையை – நரவாண:8/53,54
செல்வ பல் கதிர் செறிந்து வனப்பு ஏறி
இன்பம் விளைந்த நன் பெரு நெல்லின் – நரவாண:8/77,78

TOP


ஏறிய (12)

சீறடி சுவட்டு எழுத்து ஏறிய சென்னியர் – உஞ்ஞை:35/210
வீர குமரரும் விரும்புவனர் ஏறிய
மாவும் களிறும் மருப்பு இயல் ஊர்தியும் – உஞ்ஞை:38/10,11
திரு நுதல் ஆயத்து தேவியர் ஏறிய
பெரும் கோட்டு ஊர்தி பின்பின் பிணங்கி – உஞ்ஞை:38/179,180
ஏறிய வையத்து எடுத்த கஞ்சிகை – உஞ்ஞை:38/185
பெருங்கோ நங்கை பெட்ப ஏறிய
இரும் கை இளம் பிடி கட செருக்கு எய்தி – உஞ்ஞை:40/30,31
தொடி அணி தோளியர் துன்னி ஏறிய
வடிவு அமை அம்பி அடியின் உள் வானத்து – உஞ்ஞை:41/44,45
இகழ்தல் இன்றி ஏறிய வீரர் – மகத:20/28
எலிச்செவி அரசன் தம்பி ஏறிய
கொலை பெரும் களிற்றின் எருத்தத்து பாய்ந்து அவன் – மகத:20/88,89
வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் – மகத:20/107
கட்டில் ஏறிய காவல் வேந்தன் – மகத:23/1
ஏறிய யானையும் தன் மெய் கலனும் – வத்தவ:1/5
கூறி அ பகல் போய் ஏறிய பின்றை – வத்தவ:13/161

TOP


ஏறிய-ஞான்று (1)

இறும்பு புரை எருத்தம் ஏறிய-ஞான்று
கண்டது முதலா கானம் நீந்தி – வத்தவ:5/54,55

TOP


ஏறின் (2)

விண்ணகம் ஏறின் அல்லது விரி நீர் – உஞ்ஞை:45/84
வாயில் போந்து வையம் ஏறின்
சாயல் நோம் என தாய் அகட்டு எடுத்து – மகத:5/94,95

TOP


ஏறினம் (1)

ஏறினம் ஆகி இள மர காவினுள் – மகத:8/22

TOP


ஏறினர் (2)

செய் வளை மகளிர் செய் குன்று ஏறினர்
உணர்ந்தோர் கொண்ட உறு நன்று ஏய்ப்ப – இலாவாண:7/31,32
நகர் காண் ஏணி விரைவனர் ஏறினர்
ஒரு புடை அல்லது உட்குவரு செங்கோல் – இலாவாண:7/47,48

TOP


ஏறினள் (2)

வதுவை வையம் ஏறினள் போல – உஞ்ஞை:38/213
தேறிய தோழி ஏறினள் சென்று தன் – மகத:22/115

TOP


ஏறினனால் (2)

கரை ஏறினனால் கார் நீர் கடந்து என் – உஞ்ஞை:51/91
கட்டில் ஏறினனால் கருதியது முடித்து என் – மகத:22/285

TOP


ஏறினும் (2)

பாகர் ஏறினும் தோல் கயிறு இடினும் – இலாவாண:11/118
உலகம் எல்லாம் ஏறினும் ஏறுக – நரவாண:4/71

TOP


ஏறு (10)

இலக்க திண் படை ஏறு பல காட்டலும் – உஞ்ஞை:37/51
ஏறு இ இரும் பிடி என்னொடு என்று தன் – உஞ்ஞை:45/61
கவரிமான் ஏறு கண்படை கொள்ளும் – உஞ்ஞை:50/20
வரை ஏறு அரிமா போல மற்று அதன் – உஞ்ஞை:51/90
ஏறு பெற்று இகந்த பின்றை வீறு பெற்று – உஞ்ஞை:56/277
நிறத்து ஏறு எஃகின் அனைய ஆதலின் – மகத:21/97
வெண் தார் அணிந்த வெள் ஏறு கிடந்த – வத்தவ:5/74
விள்ளா விழு புகழ் வெள் ஏறு என்பதை – வத்தவ:5/115
வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ – நரவாண:1/93
மேலை அம் பாற்கடல் வெள் ஏறு கிடந்த – நரவாண:3/194

TOP


ஏறுக (3)

இரும் பிடி இனிதுழி ஏறுக சென்று என – உஞ்ஞை:53/90
ஏறுக இருவரும் என்று அவன் உரைத்தலின் – நரவாண:4/62
உலகம் எல்லாம் ஏறினும் ஏறுக
பலர் புகழ் வேந்தே என்று அவன் பணிதலும் – நரவாண:4/71,72

TOP


ஏறுண்டு (1)

நிறத்து ஏறுண்டு நிலத்து வீழ்வது போல் – மகத:20/59

TOP


ஏறுதற்கு (1)

ஏறுதற்கு அமைந்த இரும் கவுள் வேழமும் – மகத:19/94

TOP


ஏறுப (1)

ஏறுப இழிப ஆகாயம் நிற்பன – வத்தவ:12/202

TOP


ஏறும் (11)

முரசு எறி முற்றத்து முந்து வந்து ஏறும்
அரச மங்கையர் அடி மிசை கொண்ட – உஞ்ஞை:38/158,159
வீழ்ந்த திங்களை விசும்பு கொண்டு ஏறும்
தெய்வ மகாஅரின் ஐயுற தோன்றி – உஞ்ஞை:40/74,75
சீயமும் ஏறும் பாய் பரி புரவியும் – உஞ்ஞை:42/85
கடமான் ஏறும் கவரியும் கரடியும் – உஞ்ஞை:46/279
அரிமான் ஏறும் நரி மான் சூழ்ச்சியும் – உஞ்ஞை:54/29
யானையும் சுரி உளை அரிமான் ஏறும்
மானின் பெடையும் வாள் வரி உழுவையும் – இலாவாண:11/30,31
சீயமும் ஏறும் திருவும் பொய்கையும் – மகத:9/40
அன்ன வீணையும் அரிமான் ஏறும்
பல் மர காவும் பாவையும் பந்தியும் – மகத:14/75,76
உருமண்ணுவா உடன் ஏறும் அதற்கு – நரவாண:4/57
ஏறும் இடமும் இழியும் வகையும் – நரவாண:4/77
கலை மான் ஏறும் கவரியும் களித்த – நரவாண:4/138

TOP


ஏறொடு (1)

பால ஆ ஏறொடு பதினாறாயிரம் – வத்தவ:11/33

TOP


ஏன்ற (1)

இயைந்து அணி பெற்ற ஏன்ற அம் வயிற்று – இலாவாண:4/124

TOP


ஏனத்து (1)

கானத்து அகிலும் ஏனத்து எறியும் – உஞ்ஞை:58/86

TOP


ஏனம் (1)

ஏனல் பெருந்தினை ஏனம் காவலர் – உஞ்ஞை:50/51

TOP


ஏனமொடு (1)

எறி மயிர் ஏனமொடு எண்கு இனம் இரிய – உஞ்ஞை:51/59

TOP


ஏனல் (2)

ஏனல் பெருந்தினை ஏனம் காவலர் – உஞ்ஞை:50/51
ஏனல் குறவர் இரும் குடி சீறூர் – இலாவாண:14/46

TOP


ஏனலும் (2)

அருவி அறையும் உருவ ஏனலும்
குழியும் குவடும் வழி நீர் அசும்பும் – உஞ்ஞை:46/274,275
கொய் குரல் ஏனலும் குளிர் சுனை பாறையும் – இலாவாண:12/149

TOP


ஏனவை (1)

எந்திர ஊர்தியொடு ஏனவை இயற்றி – இலாவாண:8/187

TOP


ஏனை (14)

ஏனை தாயரும் ஆனாது ஏத்த – உஞ்ஞை:34/180
ஏனை தவிசில் நங்கையை இருத்தினர் – உஞ்ஞை:34/232
இறை கெழு குமரரும் ஏனை விச்சை – உஞ்ஞை:37/139
இறைகொண்டு ஈண்டிய ஏனை மாந்தரும் – உஞ்ஞை:39/49
ஏனை மாடமும் எழுந்தன்றால் எரி என் – உஞ்ஞை:43/205
ஏனை நின்ற இருபதின் எல்லையும் – உஞ்ஞை:52/112
ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன் – மகத:12/18
சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனை
காயமும் எல்லாம் ஆய்வனர் அடக்கி – மகத:17/144,145
உயர்ச்சி உள்ளத்து இசைச்சனும் ஏனை
தட வரை மார்பின் இடவகன் உளப்பட – மகத:19/187,188
யானும் வேண்டின் வருகுவன் ஏனை
சேண் நில மன்னர் கேண்மை உடையோர்க்கு – மகத:24/18,19
ஏனை கேள்வியும் இணை தனக்கு இல்லவன் – வத்தவ:3/66
ஏனை உலகமும் இவற்கே இயைக என – வத்தவ:7/35
யூகி தன்னோடு ஒழிய ஏனை
பாகு இயல் படைநர் பலரையும் விடுத்து – வத்தவ:9/61,62
ஏனை வகையின் மேல் நிலை திரியாது – நரவாண:6/104

TOP


ஏனைய (7)

கோல வை வேல் ஏனைய குமரர்க்கு – உஞ்ஞை:40/361
ஏனைய பிறவும் ஏஎர் உடையன – உஞ்ஞை:42/87
மாலை பந்தும் ஏனைய பிறவும் – உஞ்ஞை:57/46
யானையும் தானையும் ஏனைய பிறவும் – இலாவாண:2/20
ஏனைய பிறவும் ஆனா உவகையொடு – இலாவாண:11/97
நாணும் தொடரும் ஏனைய பிறவும் – இலாவாண:19/120
ஏனைய பிறவும் எழில் நகர் விழவு அணி – வத்தவ:15/112

TOP


ஏனையது (1)

வானும் வணக்குவம் ஏனையது என் என – உஞ்ஞை:43/85

TOP


ஏனையர் (1)

இ நாட்டார் அலிர் ஏனையர் போல்வீர் – மகத:6/184

TOP


ஏனையோர் (1)

ஏனையோர் பிறரும் புனைவனர் ஈண்டி – வத்தவ:15/129

TOP


ஏனோர் (6)

ஏனோர் உணர்த்துதல் நீக்கி கோமான் – உஞ்ஞை:47/153
வையத்து ஏனோர் வல்லர் அல்லா – உஞ்ஞை:48/103
ஏனோர் அறியா இயற்கைத்து ஆகி – இலாவாண:10/29
இசைச்சன் முதலா ஏனோர் பிறர்க்கும் – வத்தவ:9/38
ஏனோர் பிறர்க்கும் நாள்நாள்-தோறும் – வத்தவ:10/105
ஏனோர் பிறர்க்கும் இவை என வகுத்த – நரவாண:6/94

TOP


ஏனோர்-மாட்டு (1)

ஏதின்மை ஈனும் ஏனோர்-மாட்டு என – வத்தவ:8/7

TOP


ஏனோர்க்கு (2)

ஏனோர்க்கு இசைப்பின் ஏதம் தரும் என – மகத:14/285
ஏனோர்க்கு இன்று என எய்திய உவகையர் – வத்தவ:8/117

TOP