பே – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேஎய் 1
பேச்சினன் 1
பேச 1
பேசி 2
பேசிய 2
பேசியும் 1
பேசுவது 1
பேடாய் 1
பேடை 7
பேடையை 1
பேணல் 1
பேணா 3
பேணாது 3
பேணாய் 3
பேணார் 3
பேணான் 1
பேணி 17
பேணிய 3
பேணினென் 1
பேணுதல் 1
பேணும் 6
பேணுவனர் 1
பேணுவனன் 1
பேதாய் 3
பேதுற்று 1
பேதை 8
பேதைக்கு 1
பேதையர் 4
பேதையை 1
பேய் 3
பேயும் 1
பேர் 73
பேர்த்து 2
பேர்தல் 1
பேர்ந்தனர் 1
பேர்ந்தனன் 1
பேர்வுழி 1
பேரணி 1
பேரா 8
பேராண்மையின் 1
பேரிய 1
பேரியலாளர் 2
பேரியாழ் 13
பேரியாற்று 5
பேரியாறு 6
பேரில் 1
பேரிள 1
பேரிள_மகளிரை 1
பேரினள் 1
பேரினும் 1
பேருநர் 1
பேரும் 4
பேரொடு 1
பேழ் 2
பேழை 2
பேழையும் 6
பேழையுள் 2
பேழையொடு 3
பேறு 4

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பேஎய் (1)

பேஎய் உருவம் பெற வகுத்து எழுதிய – இலாவாண:8/110

TOP


பேச்சினன் (1)

பெரும் பெற்று அறையும் பேச்சினன் ஆகி – உஞ்ஞை:35/39

TOP


பேச (1)

கனவில் கண்டது பிறரொடு பேச
குறை போம் என்றலின் கூறினேன் அன்றியும் – வத்தவ:13/209,210

TOP


பேசி (2)

கரும காரணம் அவள்-வயின் பேசி
விண்டு அலர் கழுநீர் வென்ற கண்ணியொடு – இலாவாண:20/93,94
பந்து ஆடு இலக்கணம் நின்று பல பேசி
இளம் பிறை கோடு என குறங்கு இரு பக்கமும் – வத்தவ:12/172,173

TOP


பேசிய (2)

பேசிய முறைமையின் ஏசா நல் எழில் – வத்தவ:12/92
பேசிய இலயம் பிழையா மரபின் – வத்தவ:12/189

TOP


பேசியும் (1)

ஆழி என உருட்டியும் தோழியொடு பேசியும்
சாரி பல ஓட்டியும் வாழி என வாழ்த்தியும் – வத்தவ:12/241,242

TOP


பேசுவது (1)

பேசுவது எவரொடு பெரியோய் என்று – வத்தவ:13/212

TOP


பேடாய் (1)

மத நடை கற்கும் மா மயில் பேடாய்
சிதர் மலர் கூந்தல் செம் தீ கவர – மகத:1/155,156

TOP


பேடை (7)

மாதர் இரும் குயில் மணி நிற பேடை
காதல் சேவலை கண்டு கண்களித்து – உஞ்ஞை:33/29,30
தார் பூம் பேடை தையலர் எடுத்த – உஞ்ஞை:40/247
மேல் எழு பேடை மீண்டு வந்து ஆட – உஞ்ஞை:43/191
பொறி மயில் பேடை போத்தொடு புலம்ப – உஞ்ஞை:51/58
மணி கண் பீலி மா மயில் பேடை
அணி கவின் மெல் நடை அனுக்க அசைந்து_அசைந்து – உஞ்ஞை:53/153,154
அக மடல் வதிந்த அன்பு புரி பேடை
நரல் குரல் ஓசை அளைஇ அயல – மகத:4/47,48
குன்றி செம் கண் இன் துணை பேடை
உணர்தல் செல்லாது அகல்-தொறும் விரும்பி – மகத:6/11,12

TOP


பேடையை (1)

பிணி குரல் பயிற்றும் பேடையை காணாது – உஞ்ஞை:43/188

TOP


பேணல் (1)

பேணல் செல்லாது பெரும் தீ படுத்த – உஞ்ஞை:43/167

TOP


பேணா (3)

பிடி வழி படரும் பேணா மள்ளரை – உஞ்ஞை:46/4
கடும் சினம் பேணா கன்றிய மன்னர் – இலாவாண:19/16
பேணா செய்தல் பெண் பிறந்தோருக்கு – வத்தவ:13/119

TOP


பேணாது (3)

பெரு நிலை நிதியம் பேணாது வழங்கி – உஞ்ஞை:42/3
பேணாது பிழைத்த காவலாளன் – உஞ்ஞை:47/40
பெரு நிலம் காவல பேணாது அவர் முன் – இலாவாண:10/160

TOP


பேணாய் (3)

பின் வழி படரும் எம் பெரும் படை பேணாய்
என் வலித்தனையோ இறைவ நீ என – உஞ்ஞை:46/186,187
பெருமான் செல்வம் பேணாய் மற்று இ – உஞ்ஞை:56/121
பெயரா கழலோய் பேணாய் ஆகி – நரவாண:3/20

TOP


பேணார் (3)

பேணார் கடந்த பிரச்சோதனன்_மகள் – உஞ்ஞை:57/28
பெறு பயம் இது என பேணார் பெரியோர் – இலாவாண:20/23
பேணார் கடந்த பிரச்சோதனற்கு – மகத:25/33

TOP


பேணான் (1)

பெரு மீக்கூற்றமும் பேணான் பிறரொடு – மகத:25/83

TOP


பேணி (17)

எம்முடை அளவையில் பண்புற பேணி
நுன் பதி பெயர்க்கும் அளவையின் நும்பியர் – உஞ்ஞை:32/12,13
அன்றைய வைகல் சென்றோர் பேணி
பள்ளி மருங்கில் படிறு இன்று ஒழுகும் – உஞ்ஞை:35/89,90
விட்ட மாற்றம் பெட்டனன் பேணி
சென்ற காட்சி சிவேதனை காட்டி – உஞ்ஞை:38/303,304
மணல் இகு நெடும் துறை மங்கலம் பேணி
பெரியோர் உரைத்த பெறல்_அரும் தானம் – உஞ்ஞை:41/93,94
பொரு வேள் பேணி பொலி உஞ்சேனையுள் – உஞ்ஞை:42/55
பேணி அணிந்த நாணு கோலத்து – உஞ்ஞை:46/258
ஓங்கிய ஒழுக்கின் உயர்ந்தோர் பேணி
சாங்கியம் தாங்கிய சால்பு அணி படிமை – உஞ்ஞை:46/323,324
பொன் அயிராணி முன்-வயின் பேணி
பன்னிய பனுவல் பார்ப்பன முது_மகன் – இலாவாண:3/29,30
தெய்வம் பேணி கைவினை கம்மத்து – இலாவாண:4/74
முன் உபகாரத்து நல் நயம் பேணி
தன் உயிர் கொடுக்கும் தவ முது தாயும் – மகத:1/38,39
தெய்வம் பேணி பையென இருந்த பின் – மகத:8/8
ஒள் இழை தோழியொடு உதயணன் பேணி
கழி பெரும் காமம் களவினில் கழிப்பி – மகத:14/294,295
பேணி வாழும் பெற்றியர் ஆகி – மகத:19/20
பதுமா நங்கையை பண்பு உண பேணி
மண நல மகளிர் மரபிற்கு ஒத்தவை – மகத:22/267,268
வெம் பனி துடைத்து பண்புளி பேணி
கண்ணுற எய்திய கருமம் போல – மகத:24/127,128
காப்பொடு பேணி போற்றுவனள் உவப்பில் – வத்தவ:17/15
நூல் நெறி மரபின் வல்லோன் பேணி
கோல தேவியொடு கோமகன் வினவ – நரவாண:1/112,113

TOP


பேணிய (3)

பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின் – இலாவாண:6/167
பெரு மதர் மழை கண் இன் துயில் பேணிய
இன்ப யாமம் இயைந்த வைகறை – நரவாண:1/140,141
பேணிய அசா_நோய் தீர வேண்டி – நரவாண:4/18

TOP


பேணினென் (1)

யானும் அன்றே பேணினென் அடிகள் – உஞ்ஞை:47/234

TOP


பேணுதல் (1)

பெண்-பால் செல்வம் பேணுதல் இன்மையும் – வத்தவ:7/5

TOP


பேணும் (6)

புணர்ப்பு உள்ளுறுத்த புரை பதம் பேணும்
காம காரிகை காதல் மகளிர் – இலாவாண:11/22,23
சிறப்பு பலி அறா செல்வனின் பேணும்
பெறற்கு_அரும் பெரும் பண்பு எய்தியது எனக்கு என – இலாவாண:17/189,190
பேணும் ஆதலின் பெருமகன் தெளிந்தவன் – வத்தவ:10/169
பெருகிய வனப்பின் பேணும் தோழியர் – வத்தவ:13/10
பெரு மலை உலகம் பேணும் அவாவொடு – நரவாண:1/174
பேணும் கோலமும் பெருந்தகை கற்பும் – நரவாண:8/88

TOP


பேணுவனர் (1)

பெரு மூதாட்டியர் பேணுவனர் சூழ – உஞ்ஞை:47/183

TOP


பேணுவனன் (1)

பெரும் பொருள் ஆதலின் பேணுவனன் விரும்பி – வத்தவ:15/91

TOP


பேதாய் (3)

அம் சொல் பேதாய் அருள் என்போரும் – உஞ்ஞை:33/171
அம் சொல் பேதாய் அது இதுவாம் என – உஞ்ஞை:46/197
பெண் விளக்கு ஆகிய பெறல்_அரும் பேதாய்
பொன்னே திருவே அன்னே அரிவாய் – இலாவாண:18/79,80

TOP


பேதுற்று (1)

பெரும் பேதுற்று விளியும் மற்று அதனால் – இலாவாண:20/28

TOP


பேதை (8)

பேதை மன்னன் பின்னும் காண்பான் – உஞ்ஞை:35/7
பேதை மகளிர் சேதடி அணிந்த – உஞ்ஞை:41/57
பேதை மகளிர் வீதி முன்னினர் – இலாவாண:7/103
பிள்ளைமை கலந்த பேதை பெரும் பிணை – இலாவாண:15/99
பேர் அழல் காணிய பேதை மாந்தர் – இலாவாண:19/11
யூகி நீதியில் பேதை பிணிப்புண்டு – இலாவாண:20/54
தூதையும் முற்றிலும் பேதை மஞ்ஞையும் – மகத:5/75
ஆதரத்து உடைந்தனள் பேதை கண் துடைத்து – வத்தவ:14/155

TOP


பேதைக்கு (1)

பேதைக்கு உரைப்போன் பிழைப்பிற்று ஆகிய – நரவாண:6/6

TOP


பேதையர் (4)

பெதும்பை ஆயத்து பேதையர் வருக என – உஞ்ஞை:34/114
பெரும் கண் பேதையர் இரும் துயர் எய்தவும் – உஞ்ஞை:46/230
பெய்தல் நாடி பேதையர் பிணங்கி – இலாவாண:5/107
பிடி மிசை தோன்றலும் பேதையர் தம்தம் – வத்தவ:12/269

TOP


பேதையை (1)

பெறற்கு_அரும் பேதையை பெறுக என பரவி – இலாவாண:6/165

TOP


பேய் (3)

பொய் பேய் ஏறி பொள்ளென நக்கு – உஞ்ஞை:37/241
மெய் பேய் படிவமொடு பொய் பேய் ஆகி – இலாவாண:9/41
மெய் பேய் படிவமொடு பொய் பேய் ஆகி – இலாவாண:9/41

TOP


பேயும் (1)

பிணம் படு பெரும் காட்டு பேயும் உட்கும் – உஞ்ஞை:46/83

TOP


பேர் (73)

பேர் இயல் வையம் பின் செல அருளி – உஞ்ஞை:32/91
காரிகை உண்ட என் பேர் இசை ஆண்மை – உஞ்ஞை:33/125
தரு மணல் பேர் இல் தமரொடு புக்கு – உஞ்ஞை:33/134
பேர் எழுத்து ஓலை பெறு முறை நோக்கி – உஞ்ஞை:37/154
பேர் இசை கடவுள் பெரு நகர் தோன்றி – உஞ்ஞை:37/234
பேர் இளம் பெண்டிர் பெரும் கலி அரவமும் – உஞ்ஞை:41/106
துன்ப பேர் இருள் துமிக்க தோன்றிய – உஞ்ஞை:42/60
பெரும் சூல் பெண்டிர் பேர் அழல் நோக்கி – உஞ்ஞை:43/143
ஒரு பேர் அமைச்சன் உள் விரித்து உரைப்ப – உஞ்ஞை:47/146
மாசு_இல் திண் நிலை வாயில் பேர் அறை – உஞ்ஞை:47/210
இன்னா பேர் தேர் இயற்கைத்து எண்-மதி – உஞ்ஞை:49/45
அச்சமொடு ஒளித்த அணி தகு பேர் ஒளி – உஞ்ஞை:53/63
பிடி-கண் நின்ற பேர் அன்பு ஆனான் – உஞ்ஞை:53/98
பெரும் சிறை பள்ளி பேர் இருள் போலும் – உஞ்ஞை:54/134
வேனல் பேர் அழல் கானவர் கொளுத்தி – உஞ்ஞை:56/22
பேர் அமர் ஞாட்பினுள் பெரு முது தந்தை-தன் – உஞ்ஞை:56/56
அரும் கல பேர் அணி பெரும் கலம் கருதின் யாப்பு – உஞ்ஞை:56/126
அடல் பேர் அண்ணலை தெளிந்து கைவிட்டனன் – இலாவாண:1/83
ஈர்_எண்ணாயிரர் பேர் எணப்பட்ட – இலாவாண:4/18
கண்ணுற மொய்த்த கழி பேர் அவாவினின்று – இலாவாண:5/124
ஆர் அணங்கு ஆகிய பேர் அணிகலங்களும் – இலாவாண:5/145
பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின் – இலாவாண:6/167
இகல் அடு பேர் அரண் இலாவாணத்து அவன் – இலாவாண:9/230
கண் போல் காதல் நின் கழி பேர் அமைச்சன் – இலாவாண:11/166
அணி தகு பேர் ஒளி அரத்தம் அடுத்த – இலாவாண:15/52
அகழ் கடல் பிறந்த ஆசு_அறு பேர் ஒளி – இலாவாண:15/80
அற்பு உடை பொருள் பேர் அறிவின் காட்டி – இலாவாண:17/97
அண்_அரும் பேர் அழல் ஆக்கிய கமழ் புகை – இலாவாண:18/49
பேர் அழல் காணிய பேதை மாந்தர் – இலாவாண:19/11
பள்ளி பேர் அறை உள்ளகம் புக்காங்கு – இலாவாண:19/53
பட்ட பேர் அணி விட்டு எறிந்து இரங்கியும் – இலாவாண:19/85
கரும் பேர் கிளவி கனம் குழை திற-வயின் – இலாவாண:20/29
நீள் நிலை படுவில் பேர் புணை நீந்தி – மகத:1/135
விடு சுடர் பேர் ஒளி விமானம் போல – மகத:3/99
கண் கவர் பேர் ஒளி காகதுண்டகன் எனும் – மகத:4/69
இன்ப கிழமையும் மன் பேர் உலகினுள் – மகத:6/112
பேர் உடை மாதர்க்கு ஓர் இடம் பிறந்த – மகத:6/171
ஒடியா பேர் அன்பு உள்ளத்து ஊர்தர – மகத:8/71
முத்த பேர் அணி முழு கலம் ஒழித்து – மகத:9/65
பேர் உடை மாதர் உளள் மற்று என்பது – மகத:9/176
பேர் அத்தாணி பிரித்த பின்றை – மகத:12/31
திரு பேர் உலகம் பெற்றோன் போல – மகத:12/77
தாம் அகத்து இருக்கும் மா மணி பேர் அறை – மகத:13/15
மணம் கமழ் மார்பன் மாட பேர் அறை – மகத:13/44
பள்ளி பேர் அறை பாயலுள் அல்லது – மகத:13/55
பேர் இசை அண்ணலும் பெரு நல மாதரும் – மகத:13/91
யாமத்து எல்லையுள் மா மறை பேர் அறை – மகத:14/92
இன்ப பேர் அறை நன் பகல் பொருந்தி – மகத:14/165
ஆரா காதலின் பேர் இசை கனிய – மகத:14/265
ஒரு பேர் உலகம் படைத்த பெரியோன் – மகத:15/3
கோழ் இருவேரியும் பேர் இலவங்கமும் – மகத:17/137
விடை பேர் அமைச்சன் மேல்நாள் போக்கிய – மகத:17/178
இரும் பேர் உலகம் ஒருங்கு இயைந்தது போல் – மகத:20/151
வதுவைக்கு ஏற்ற மங்கல பேர் அணி – மகத:22/237
அடல் பேர் யானையும் அலங்கு மயிர் புரவியும் – மகத:24/35
வளை எரி பட்ட தெளி பேர் அன்பின் – மகத:24/122
பெண் பால் பேர் அணி நீக்கி திண்-பால் – மகத:24/157
விடை பேர் அமைச்சனுழை விடுத்தலின் மற்று அவன் – மகத:26/51
பெரும் பேர் மறவனும் பிரமசேன் எனும் – மகத:26/81
யானை பேர் இனத்து இடைப்பட்டு – வத்தவ:3/68
நின்ற பேர் அன்பு இன்று இவண் தாழ்த்து – வத்தவ:5/45
பள்ளி பேர் அறை உள் விளக்கு உறீஇ – வத்தவ:6/75
பள்ளி பேர் அறை பையென புகுந்து – வத்தவ:7/101
கழி பேர் உவகையொடு கண்படைகொளலும் – வத்தவ:7/107
விலை வரம்பு அறியா விழு தகு பேர் அணி – வத்தவ:7/242
பேர் அத்தாணியுள் பெரியோர் கேட்ப – வத்தவ:8/30
பெருமகன் எழுதிய பேர் அலங்கார – வத்தவ:13/98
ஆய்ந்த வேந்தன் ஆடல் பேர் அறை – வத்தவ:13/170
பேர் அத்தாணியுள் பொருந்த சென்ற பின் – நரவாண:1/5
பேர் அவள் உரைத்தலின் பெருமகன் நோக்கி – நரவாண:1/81
தன்மைக்கு ஏற்ற தலை பேர் அணிகலம் – நரவாண:7/9
கழி பேர் உவகையொடு காவல் வேந்தன் – நரவாண:7/101
பேர் இனத்தவரொடு பெரும் கிளை பிரியா – நரவாண:8/132

TOP


பேர்த்து (2)

பேர்த்து அவன் வினவிய பெரும் களிற்று இலக்கணம் – உஞ்ஞை:32/53
பெரு நகை இது என பேர்த்து உரை கொடாஅ – வத்தவ:7/113

TOP


பேர்தல் (1)

பேரா இவை என பேர்தல் செல்லா – உஞ்ஞை:40/306

TOP


பேர்ந்தனர் (1)

தேர்ந்தனர் குழீஇ பேர்ந்தனர் வருவோர் – உஞ்ஞை:33/159

TOP


பேர்ந்தனன் (1)

பேர்ந்தனன் விடுப்ப பெருமூதாளன் – உஞ்ஞை:34/110

TOP


பேர்வுழி (1)

பெரும் சின வீரர் ஒருங்குடன் பேர்வுழி
வென்று அடு சிறப்பின் வீணை வித்தகன் – மகத:1/138,139

TOP


பேரணி (1)

மறு_இன்று அமர்ந்த மங்கல பேரணி
மன்ன குமரன் தன்னோர் சூழ – இலாவாண:4/105,106

TOP


பேரா (8)

பேரா இவை என பேர்தல் செல்லா – உஞ்ஞை:40/306
பீடுடன் பேரா பெரும் துறை எங்கும் – உஞ்ஞை:41/132
பேரா காதலொடு பெரும் சிறப்பு இயற்றி – உஞ்ஞை:41/134
பெருந்தகை கிழவனை பேரா மறவரை – உஞ்ஞை:56/241
பெரு_மண் உலாவும் பேரா பல் படை – உஞ்ஞை:58/106
பேரா கழல் கால் பெருந்தகை புலம்பி – மகத:7/41
பேரா இடும்பையுள் ஆராய்ந்து அவனை – மகத:20/144
பேரா கழல் கால் பெருந்தகை வேந்தன் – நரவாண:1/240

TOP


பேராண்மையின் (1)

அற பேராண்மையின் அடக்கிய யாக்கையன் – வத்தவ:7/157

TOP


பேரிய (1)

அத்தம் பேரிய அணி நிலை மாடத்து – உஞ்ஞை:33/105

TOP


பேரியலாளர் (2)

பேரியலாளர் பிழைப்பு_இலர் நோக்கி – இலாவாண:3/6
பேரியலாளர் பிறிது திறம் காணார் – நரவாண:4/13

TOP


பேரியாழ் (13)

பெரும் களிறு அடக்கிய பெறற்கு_அரும் பேரியாழ்
கல்லா நின்றனள் கனம் குழையோள் என – உஞ்ஞை:36/44,45
தெய்வ பேரியாழ் கை-வயின் தரீஇ – உஞ்ஞை:48/104
தெய்வ பேரியாழ் கை-வயின் நீக்கி – உஞ்ஞை:49/11
தீம் தொடை பேரியாழ் திவவொடு கொளீஇ – உஞ்ஞை:52/85
பெறற்கு_அரும் பேரியாழ் கை-வயின் பிரிந்ததும் – உஞ்ஞை:53/48
பெறல்_அரும் பேரியாழ் பெற்றவாறும் – இலாவாண:11/102
நல தகு பேரியாழ் நரம்பு தொட்டு அறியா – மகத:14/271
வனப்பு உடைத்து அம்ம இ வள் உயிர் பேரியாழ்
தனக்கு இணை இல்லா வனப்பினதாகியும் – மகத:15/27,28
வலிபெற தொடுத்த வாக்கு அமை பேரியாழ்
செலவு முறை எல்லாம் செய்கையின் தெரிந்து – வத்தவ:3/54,55
படைப்ப_அரும் பேரியாழ் பண் ஒலி இது என – வத்தவ:3/120
விரைந்தனை சென்று நம் அரும்_பெறல் பேரியாழ்
இயக்கும் ஒருவனை இவண் தரல் நீ என – வத்தவ:3/127,128
பேரியாழ் இது என பெருமகற்கு உரைப்ப – வத்தவ:3/139
பண் மகிழ் பேரியாழ் பயிற்றிய கேள்வி – நரவாண:7/4

TOP


பேரியாற்று (5)

பேரியாற்று ஒரு கரை பெயர்ந்தனென் போகி – உஞ்ஞை:36/219
மற துறை பேரியாற்று மறு கரை போகி – மகத:3/59
நாவாய் தொகுத்து நளி புனல் பேரியாற்று
ஊர் மடி கங்குல் நீர் நெறி போகி – மகத:23/55,56
மலை தலை தொடுத்த மல்லல் பேரியாற்று
தலைப்பெயல் மாரியில் தவிர்தல் இன்றி – மகத:24/15,16
வரு பரிசார மணி நீர் பேரியாற்று
இரு கரை மருங்கினும் இ நிலம் ஏத்த – நரவாண:7/39,40

TOP


பேரியாறு (6)

பேரியாறு மடுத்த பெரும் கடல் போல – உஞ்ஞை:46/335
நருமதை பேரியாறு நண்ணிய பொழுதில் – உஞ்ஞை:51/79
நெடு நீர் பேரியாறு நிறைந்து விலங்கு அறுத்து – மகத:3/39
நீர் செல் பேரியாறு நிரந்து இழிந்தாங்கு – மகத:16/23
குளிர் புனல் பேரியாறு கூடிய எல்லையுள் – மகத:27/11
பேரியாறு என்ன வார் பெரும் செல்வமொடு – நரவாண:7/162

TOP


பேரில் (1)

தமனிய பேரில் தலை நிலம் தழீஇய – இலாவாண:4/87

TOP


பேரிள (1)

பேரிள_மகளிரை பெரும் குறையாக – வத்தவ:15/122

TOP


பேரிள_மகளிரை (1)

பேரிள_மகளிரை பெரும் குறையாக – வத்தவ:15/122

TOP


பேரினள் (1)

பதுமாபதி என பகர்ந்த பேரினள்
துன்ன_அரும் சிறப்பின் கன்னி-தானும் – மகத:6/176,177

TOP


பேரினும் (1)

இரு நிலம் பேரினும் திரிதல் இன்று என – மகத:21/41

TOP


பேருநர் (1)

பேருநர் பெறாஅ பெரியோர் அரவமும் – உஞ்ஞை:41/115

TOP


பேரும் (4)

பேரும் பெற்றியும் தேரும் மாத்திரம் – உஞ்ஞை:34/94
பேரும் உள்ளமொடு பிறக்கு அடி இடுதலின் – உஞ்ஞை:40/330
பெயர்த்தும் நிலை எய்தி பேரும் தழீஇ – வத்தவ:1/35
போகமும் பேரும் புகழ் மேம்பட்டதும் – நரவாண:6/132

TOP


பேரொடு (1)

முன்னை பேரொடு பெண் உருவு எய்தி – நரவாண:3/139

TOP


பேழ் (2)

பெரும் பூண் பூணியும் பேழ் வாய் கொக்கும் – உஞ்ஞை:51/69
அங்காந்து இயன்ற அழல் உமிழ் பேழ் வாய் – உஞ்ஞை:57/59

TOP


பேழை (2)

பெரும் பொறி பேழை இவை என கூறி – உஞ்ஞை:40/239
அணிகல பேழை அகம் திறந்து அன்ன – இலாவாண:14/10

TOP


பேழையும் (6)

அணிகல பேழையும் ஆடை வட்டியும் – உஞ்ஞை:38/163
கலிங்க வட்டியும் கலம் பெய் பேழையும்
பொறி ஒற்று அமைந்த குறியொடு கொண்ட – உஞ்ஞை:38/285,286
சந்தன பலகையும் சந்த பேழையும்
சாந்து அரை அம்மியும் தேம் கண் காழ் அகில் – உஞ்ஞை:57/34,35
மணி கல பேழையும் மணி கண்ணாடியும் – உஞ்ஞை:57/40
பளி காய் குப்பையும் பலம் பெய் பேழையும்
தளிர் இலை வட்டியொடு தாது பல அமைத்து – இலாவாண:2/72,73
முடி வாய் பேழையும் முரசும் கட்டிலும் – வத்தவ:10/77

TOP


பேழையுள் (2)

விளங்கு பொன் அறையுள் விழு நிதி பேழையுள்
இளம் கலம் தழீஇ எண்ணி மெய் நோக்கி – உஞ்ஞை:38/210,211
யவன பேழையுள் அடைந்தோர் ஏந்திய – மகத:22/213

TOP


பேழையொடு (3)

பொன் செய் பேழையொடு பொறி தாழ் நீக்கி – உஞ்ஞை:32/77
இசை சால் சிறப்பின் இரும் கல பேழையொடு
மணியினும் பொன்னினும் மருப்பினும் அல்லது – உஞ்ஞை:36/28,29
பொறி அமை பேழையொடு பூம் துகில் தழீஇ – உஞ்ஞை:44/36

TOP


பேறு (4)

செம்பொன் படத்து பேறு வலித்திருந்த – உஞ்ஞை:39/5
பெரும் கல கைவினை பேறு அது பெற்று – இலாவாண:8/152
பேறு அரும் கற்பின் பிரச்சோதனன் மகள் – இலாவாண:14/37
வீறு அமை வீணை பேறு அவன் வினாவ – வத்தவ:3/132

TOP