தூ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 8
தூ-பால் 1
தூஉம் 3
தூஉய் 2
தூக்க 1
தூக்கம் 1
தூக்கி 7
தூக்கிய 1
தூங்கி 2
தூங்கினும் 1
தூங்கு 1
தூங்குபு 1
தூங்கும் 1
தூசி 1
தூசு 5
தூசும் 2
தூண் 9
தூண்டில் 2
தூண்டு 1
தூணின் 1
தூணொடு 1
தூதரை 1
தூதனொடு 1
தூதால் 1
தூதின் 1
தூதினர் 1
தூது 1
தூதுவ 1
தூதுவர் 5
தூதுவன் 2
தூதையும் 2
தூப்பதம் 1
தூபத்து 1
தூம் 1
தூம்பும் 2
தூமம் 2
தூய் 2
தூய்மை 3
தூய்மைக்கு 1
தூய்மையன் 1
தூய்மையின் 1
தூய்மையுள் 1
தூய்மையொடு 1
தூய்மையோற்கு 1
தூயது 1
தூயள் 1
தூயன் 1
தூயும் 1
தூர் 1
தூர்த்த 1
தூர்த்தரும் 1
தூர்த்தனர் 1
தூவ 2
தூவவும் 1
தூவி 3
தூவியும் 2
தூற்றாது 1
தூற்றி 1
தூற்றும் 1
தூறலும் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தூ (8)

தூ துகில் உடுத்து தொடி உடை தட கை – உஞ்ஞை:39/21
தூ வெள் அரும் சிறை சேவலொடு உளரி – உஞ்ஞை:40/54
துறை மாண்பு ஒராஅ தூ மணல் அடைகரை – உஞ்ஞை:41/120
தூ நிற தண் துளி தான் நின்று சொரிந்து – உஞ்ஞை:49/87
கல்லின் காட்டிய செல்லல் தூ வழி – உஞ்ஞை:50/45
தொடுப்போர் வீழ்த்த தூ வெள் அலரும் – இலாவாண:2/93
தேன் உலை வெந்த தூ நிற துழவையும் – இலாவாண:3/39
துறை விதி நுனித்த தூ தொழிலாளர் – இலாவாண:5/129

TOP


தூ-பால் (1)

தூ-பால் அமைச்சர் மேல்-பால் அறிவின் – நரவாண:7/82

TOP


தூக்க (1)

கொண்டோன் பிழைத்த தண்டம் தூக்க
வடிக்கண் இட்டிகை பொடி துகள் அட்டி – உஞ்ஞை:36/154,155

TOP


தூக்கம் (1)

ஊக்கம் இலர் என தூக்கம் இன்றி – மகத:19/52

TOP


தூக்கி (7)

வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி
தே நவின்று ஓங்கிய திரு நாறு ஒருசிறை – உஞ்ஞை:34/222,223
தண்டம் தூக்கி தலை புனல் விழவினை – உஞ்ஞை:42/49
புடைபுடை-தோறும் தொடக்கொடு தூக்கி
கட்டி தோய்த்த காழ் அகில் நறும் புகை – மகத:5/54,55
ததர் இதழ் ஞாழல் தாழ் சினை தூக்கி
பைம் தாள் பொருந்தி செம் சாந்து உதிர – மகத:9/27,28
தோன்ற தூக்கி ஆங்கு அவை அமைத்து – மகத:17/168
கண்டவர் நடுங்க தண்டம் தூக்கி
இன் உயிர் தபுக்க என எரியகத்து இட்டதும் – மகத:26/52,53
நன்றி தூக்கி நாடிய பின்றை – வத்தவ:9/60

TOP


தூக்கிய (1)

செறி இலை பொன் குழை சிறப்பொடு தூக்கிய
சிறு துளை காதின் செம் கண் செம் நோக்கு – உஞ்ஞை:47/18,19

TOP


தூங்கி (2)

நோய் இல் இன்ப காய் பல தூங்கி
யாழ அற்பு கனி ஊழ் அறிந்து ஏந்த – வத்தவ:9/76,77
உண்டு மகிழ் தூங்கி தண்டா இன்பமொடு – வத்தவ:11/89

TOP


தூங்கினும் (1)

குரவை ஆயம் கூடி தூங்கினும்
தன் வரைத்து அல்லா விம்முறு விழுமமொடு – உஞ்ஞை:46/182,183

TOP


தூங்கு (1)

தீம் சுவை நசைஇய தூங்கு சிறை வாவல் – உஞ்ஞை:52/71

TOP


தூங்குபு (1)

தூங்குபு மறலும் உழை சிறு சிலதியர் – உஞ்ஞை:33/24

TOP


தூங்கும் (1)

மராஅம் மயிலின் மயங்குபு தூங்கும்
குழாஅம் மகளிர் குரவை காண்-மின் – உஞ்ஞை:40/145,146

TOP


தூசி (1)

சிலைத்தன தூசி மலைத்தன யானை – மகத:27/107

TOP


தூசு (5)

மேகலை விரீஇய தூசு விசி அல்குல் – உஞ்ஞை:44/6
தூசு ஆர்ந்து துளும்பும் காசு விரி கலாபத்து – உஞ்ஞை:48/107
தொட்டிமை கலந்த தூசு விரி அல்குல் – உஞ்ஞை:50/8
சொரிவனர் ஆட்டி தூசு விரித்து உடீஇ – உஞ்ஞை:57/97
தூசு குடிஞையும் துலா மண்டபமும் – இலாவாண:12/43

TOP


தூசும் (2)

பைம் கேழ் கலிங்கமும் பட்டு தூசும்
நீலமும் அரத்தமும் வால் இழை வட்டமும் – உஞ்ஞை:42/207,208
மண்ணுறு மணியும் மாலையும் தூசும்
கண்ணுற மொய்த்த கழி பேர் அவாவினின்று – இலாவாண:5/123,124

TOP


தூண் (9)

வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி – உஞ்ஞை:34/222
பொழி மணி திண் தூண் பொறிபட புடைத்து – உஞ்ஞை:47/110
பொன் குடம் பொருந்திய பொழி அமை மணி தூண்
நல் பெரும் பந்தருள் முத்து மணல் பரப்பி – உஞ்ஞை:48/87,88
புடை திரண்டு அமைந்த போதிகை பொன் தூண்
வேண்டு அக மருங்கில் காண் தக நிறீஇ – இலாவாண:6/46,47
தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய – இலாவாண:6/58
திண் தூண் சதுரம் கொண்ட எல்லையுள் – மகத:9/39
ஆயிரம் பொன் தூண் அணி மணி போதிகை – மகத:22/247
அ தூண் நடுவண் ஒத்த உருவின – மகத:22/249
சந்தன பெரும் தூண் ஒன்பது நாட்டிய – மகத:22/250

TOP


தூண்டில் (2)

தூண்டில் இரையின் துடக்கு உள்ளுறுத்து – உஞ்ஞை:35/108
காரிகை கடு நுனை தூண்டில் ஆக – இலாவாண:7/73

TOP


தூண்டு (1)

வேண்டிடம்-தோறும் தூண்டு திரி கொளீஇ – உஞ்ஞை:47/173

TOP


தூணின் (1)

பவழ பட்டத்து பளிக்கு மணி தூணின்
திகழ் பொன் போதிகை செம்பொன் செழும் சுவர் – இலாவாண:2/88,89

TOP


தூணொடு (1)

ஓவிய எழினி தூணொடு சேர்த்து – வத்தவ:14/3

TOP


தூதரை (1)

துன்ன_அரும் கோயிலுள் தூதரை விடுத்தர – உஞ்ஞை:36/49

TOP


தூதனொடு (1)

எதிர்வரு தூதனொடு அதிர கூடி – வத்தவ:4/93

TOP


தூதால் (1)

கடைக்கண் தூதால் காவலன் கடைஇ – உஞ்ஞை:37/171

TOP


தூதின் (1)

கால குறும்பர் ஓலை தூதின்
பெரும் பொறி அண்ணல் அரும் பொறி ஒற்றி – உஞ்ஞை:58/81,82

TOP


தூதினர் (1)

துறை நெறி போகிய தோழி தூதினர்
அரசர்க்கு ஆயினும் அடியர்க்கு ஆயினும் – உஞ்ஞை:35/87,88

TOP


தூது (1)

தூது செல் ஒழுக்கின் சாதகன் உரைப்ப – வத்தவ:4/84

TOP


தூதுவ (1)

ஏதில் மன்னர் தூதுவ மாக்கள் – உஞ்ஞை:36/299

TOP


தூதுவர் (5)

தூதுவர் போல மூசின குழீஇ – உஞ்ஞை:38/65
மறைந்தனர் வந்து மாற்றோன் தூதுவர்
செறிந்த சூழ்ச்சியில் செய்வது கூறலும் – மகத:26/1,2
ஆடு இயல் யானை ஆருணி தூதுவர்
மாடியம் தானை வருடகாரனொடு – மகத:26/18,19
கொற்ற வேந்தன் தூதுவர் வந்து நம் – வத்தவ:10/7
காவலன் தூதுவர் கடைத்தலையார் என – வத்தவ:14/105

TOP


தூதுவன் (2)

பரிதல் வேண்டா பகைவன் தூதுவன்
சகுனி கௌசிகன்-தன்னை அன்றியும் – மகத:26/9,10
மாதர் மனை-வயின் தூதுவன் ஆகி – நரவாண:8/120

TOP


தூதையும் (2)

பந்தும் கிளியும் பசும்பொன் தூதையும்
கந்து இயல் மயிலும் கரந்து உறை பூவையும் – உஞ்ஞை:34/160,161
தூதையும் முற்றிலும் பேதை மஞ்ஞையும் – மகத:5/75

TOP


தூப்பதம் (1)

காக்கையும் கழுகும் தூப்பதம் துறந்து – உஞ்ஞை:56/209

TOP


தூபத்து (1)

தூபத்து ஒழுக்க தாபத பள்ளி – மகத:4/61

TOP


தூம் (1)

மலர் தூம் மாடம் மயங்கிய மறுகின் – உஞ்ஞை:38/138

TOP


தூம்பும் (2)

நாழிகை தூம்பும் நறு மலர் பந்தும் – உஞ்ஞை:38/106
முரவும் தூம்பும் முழங்குபு துவைப்ப – மகத:25/16

TOP


தூமம் (2)

தூமம் நவின்ற நாம கைவினை – இலாவாண:2/83
தேவர் தூமம் மேவர எடுப்பி – இலாவாண:3/49

TOP


தூய் (2)

பூ தூய் வீதி-தோறு ஏத்தினர் எதிர்கொள – இலாவாண:9/65
ஏயர் குருசிலை தூய் மொழி வினவ – மகத:6/188

TOP


தூய்மை (3)

தூய்மை காட்டும் வாய்மை முற்றாது – உஞ்ஞை:33/59
தூய்மை இன்று என மா நிலத்து இயங்கா – உஞ்ஞை:38/322
தூய்மை உள்ளமொடு கோமகன் கூப்பும் – உஞ்ஞை:48/52

TOP


தூய்மைக்கு (1)

தூய்மைக்கு ஒத்த தொழிலன் ஆகி – உஞ்ஞை:53/88

TOP


தூய்மையன் (1)

வாய்மையின் வழாஅ தூய்மையன் ஆகி – நரவாண:2/62

TOP


தூய்மையின் (1)

துளக்கு_இல் கேள்வி தூய்மையின் முற்றி – உஞ்ஞை:37/136

TOP


தூய்மையுள் (1)

கோல் நெய் பூசி தூய்மையுள் நிறீஇ – மகத:14/110

TOP


தூய்மையொடு (1)

மெய்யில் தூய்மையொடு மேதகு வனப்பின் – இலாவாண:4/47

TOP


தூய்மையோற்கு (1)

துறத்தல் வேண்டும் தூய்மையோற்கு என – உஞ்ஞை:36/302

TOP


தூயது (1)

மேலில் தூயது காலில் கடியது – உஞ்ஞை:42/226

TOP


தூயள் (1)

தூயள் என்னா தீது உரை எய்தி – உஞ்ஞை:36/110

TOP


தூயன் (1)

தூயன் ஆகி வாய் மொழி பயிற்றி – வத்தவ:6/80

TOP


தூயும் (1)

கோதை பரிந்தும் குட நீர் தூயும்
மான் ஏர் நோக்கியர் – இலாவாண:5/111,112

TOP


தூர் (1)

பூ தூர் நிலையோடு யாப்புற அமைத்து – உஞ்ஞை:42/32

TOP


தூர்த்த (1)

தூர்த்த கள்வன்-பால் போய் கேள் என – வத்தவ:14/28

TOP


தூர்த்தரும் (1)

விடரும் தூர்த்தரும் விட்டேறு உரைப்ப – உஞ்ஞை:35/226

TOP


தூர்த்தனர் (1)

ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல் கணை – மகத:27/108

TOP


தூவ (2)

உடு அமை பகழி ஒருங்கு உடன் தூவ
விடு கணை விடலை வில்லின் விலக்கி – உஞ்ஞை:55/139,140
வண்ண மலரும் சுண்ணமும் தூவ
அநங்க தானத்து அணி மலர் காவில் – மகத:5/115,116

TOP


தூவவும் (1)

மான் துகள் அவிய மது_பலி தூவவும்
தெற்றி முது மரத்து உச்சி சேக்கும் – உஞ்ஞை:33/86,87

TOP


தூவி (3)

தூவி மஞ்ஞை தோகை விரித்து அகவ – உஞ்ஞை:43/194
வாவி புள்ளின் தூவி விம்மிய – உஞ்ஞை:56/135
காழ் அகில் புகை நிறம் கடுக்கும் தூவி
பல் சிறை புறவம் பரிந்து உடன் ஆடி – நரவாண:1/67,68

TOP


தூவியும் (2)

எறிந்தும் தூவியும் எற்றியும் தெளித்தும் – உஞ்ஞை:42/79
மதி மருள் திரு முகத்து எதிர் நீர் தூவியும்
பொதி பூம் பந்தின் எதிர் நீர் எறிந்தும் – உஞ்ஞை:42/190,191

TOP


தூற்றாது (1)

புறஞ்சொல் தூற்றாது புகழும் தன்மையள் – வத்தவ:10/31

TOP


தூற்றி (1)

விருந்தினன் போன்ம் என புரிந்து அலர் தூற்றி
விடரும் தூர்த்தரும் விட்டேறு உரைப்ப – உஞ்ஞை:35/225,226

TOP


தூற்றும் (1)

போற்றா மாக்கள் தூற்றும் பெரும் பழி – உஞ்ஞை:35/250

TOP


தூறலும் (1)

துய்_அற திரண்டு தூறலும் இலவாய் – வத்தவ:16/8

TOP


தூஉம் (3)

எதிர் நீர் தூஉம் இளையோர் திரு முகத்து – உஞ்ஞை:40/299
பாழ் நில வாழ்நர் பரவினர் தூஉம்
செம் தடி குருதி பைம் நிண கொழும் குடர் – உஞ்ஞை:52/8,9
நல்லோர் தூஉம் நறு நீர் நனைப்ப – வத்தவ:17/104

TOP


தூஉய் (2)

ஆலி வெண் மணல் அணிபெற தூஉய்
கோல வனப்பில் கோடணை போக்கி – உஞ்ஞை:49/84,85
பலி ஆர் நறு மலர் பற்பல தூஉய்
வழுக்கா மரபின் வழுத்தினன் கொண்டு – வத்தவ:3/102,103

TOP