மோ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


மோகம் (1)

தருமோ மோகம் வருமோ – காவடி:23 5/8
மேல்

மோகமுறும் (1)

சிந்து மீது மிகுந்த மோகமுறும்
சுசீல குகன் சரோருக – காவடி:22 2/12,13
மேல்

மோகன் (1)

கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர் – காவடி:3 5/3
மேல்

மோகன (1)

மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை – காவடி:5 2/2
மேல்

மோசம் (1)

சூதினால் வந்த மோசம் இனி – காவடி:10 1/9
மேல்

மோசம்போனவர் (1)

ஆனாலும் உனை போல மோசம்போனவர் உண்டோ – காவடி:19 2/11
மேல்

மோதி (1)

மோதி வாரிதி நீரை வாரி விண் மீது உலாவிய சீதளாகர – காவடி:5 2/3
மேல்

மோதுகிறாள் (1)

போதும் வைதுவைது மோதுகிறாள் பாவி என்னையே – காவடி:11 3/3
மேல்

மோனம் (1)

ஞான பரமானந்த மோனம் அடைவாமே – காவடி:2 3/4
மேல்