கி – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கிடக்கும் (1)

மயங்கி பேட்டினுடன் முயங்கியே கிடக்கும் வண்டு கள்ளை உண்டு – காவடி:6 3/4
மேல்

கிடங்கும் (1)

துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல – காவடி:3 5/1
மேல்

கிடந்து (1)

கந்தரம்-தொறும் கிடந்து கந்தரம் பயந்து ஒதுங்க – காவடி:5 3/5
மேல்

கிடையாத (2)

தேட கிடையாத சொன்னமே உயிர் – காவடி:16 4/1
அண்டம் பாதலமதிலும் கிடையாத சவுந்தர ரூபவதி – காவடி:24 3/1
மேல்

கிடையாதது (1)

தேடினும் கிடையாதது ஆகிய – காவடி:10 4/1
மேல்

கிடையாது (1)

ஆசை கொண்டவருக்கு ரோசம் கிடையாது என்பார் – காவடி:19 2/7
மேல்

கிண்ணங்கள் (1)

தங்க கிண்ணங்கள் போலே மின்னும் – காவடி:23 1/5
மேல்

கிணற்று (1)

போகுமோ கிணற்று நீரை வெள்ளமே – காவடி:20 4/6
மேல்

கிராத (2)

மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி – காவடி:1 1/10
போல ஏனலின் மீது உலாவு கிராத மாது முன் ஏகியே அடி – காவடி:5 1/3
மேல்

கிராதர்கள் (1)

காவிலே சில தாவிலே வளர் மா இறால் நடுவே கிராதர்கள்
கார் முகம் எயும் கணைகள் ஏறுமே அதில் வார் மதுவால் வாரி உவர் மாறுமே – காவடி:5 3/7,8
மேல்

கிரி (1)

சிகர கிரி பிளந்த வேலனை உமை – காவடி:1 1/5
மேல்

கிருபாகரன் (1)

வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்-தனில் – காவடி:5 1/7
மேல்

கிழவன் (1)

இல்லை கிழவன் சொல் வீணைக்காரர்க்கு – காவடி:21 4/9
மேல்

கிழிபட்டு (1)

கட்டு கதிர் பட்டு மணி வம்பு கிழிபட்டு
வழிவிட்டிட எழும்புகிற – காவடி:15 4/1,2
மேல்

கிள்ளி (1)

ஏய்ந்த முருகவேள் கிள்ளி உனை – காவடி:21 1/4
மேல்

கிள்ளை (1)

மின்னு மலர் காவதனில் துன்னு மட பூவையுடன் விள்ளும் கிள்ளை புள்ளும் – காவடி:3 2/2
மேல்

கிளி (1)

கெளிறு சிறு கிளி துண்டம் – காவடி:15 3/10
மேல்

கிளையை (1)

தேவதாருவை கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர் – காவடி:5 2/6
மேல்

கிறுகிறென்று (1)

பித்தம் கிறுகிறென்று வருகுதே – காவடி:14 3/4
மேல்