பீ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பீடர் (1)

பீடர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3120/4

மேல்


பீடினால் (1)

பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா – தேவா-சம்:2302/1

மேல்


பீடு (22)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/2
பீடு உடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன் – தேவா-சம்:527/2
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிக பெரியான் – தேவா-சம்:663/2
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
பீடு அது மணி மாட பிரமபுரத்து அரரே – தேவா-சம்:1259/4
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/2
பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை – தேவா-சம்:1610/2
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/2
பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2171/4
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2192/4
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2193/4
பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது – தேவா-சம்:2608/3
பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2697/2
பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன் – தேவா-சம்:3195/3
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான் – தேவா-சம்:3460/2
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் – தேவா-சம்:3748/2
பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே – தேவா-சம்:3782/4
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2

மேல்


பீடும் (1)

பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2173/4

மேல்


பீடை (2)

பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே – தேவா-சம்:3013/4
பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும் – தேவா-சம்:3037/2

மேல்


பீர் (1)

பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1

மேல்


பீலி (8)

பீலி மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் – தேவா-சம்:99/1
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
புத்தரும் தோகை அம் பீலி கொள் பொய்ம்மொழி – தேவா-சம்:1610/1
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும் – தேவா-சம்:2548/1
பிண்டிபாலரும் மண்டை கொள் தேரரும் பீலி கொண்டு உழல்வாரும் – தேவா-சம்:2592/1
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார் – தேவா-சம்:3414/1
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும் – தேவா-சம்:3877/1

மேல்


பீலியர் (1)

துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1

மேல்


பீலியார் (1)

பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும் – தேவா-சம்:2952/1

மேல்


பீலியும் (7)

மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி – தேவா-சம்:1873/3
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா – தேவா-சம்:2462/1
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி – தேவா-சம்:2664/1
தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின் – தேவா-சம்:2758/1
சாலம் மா பீலியும் சண்பகம் உந்தியே – தேவா-சம்:3182/2
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு – தேவா-சம்:3756/2
காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி – தேவா-சம்:3782/2

மேல்


பீலியொடு (1)

குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து – தேவா-சம்:3666/1

மேல்


பீலியோடு (1)

பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/3

மேல்


பீழ்ந்து (2)

வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனை – தேவா-சம்:544/2
மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி – தேவா-சம்:3187/1

மேல்