நோ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நோ (1)

நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3

மேல்


நோக்க (5)

அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் – தேவா-சம்:1099/2
நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால் – தேவா-சம்:1817/3
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை – தேவா-சம்:2450/1
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/4
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய – தேவா-சம்:3887/1

மேல்


நோக்கல்செய்து (1)

வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்த பின் – தேவா-சம்:2782/3

மேல்


நோக்காது (1)

கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் – தேவா-சம்:2761/1

மேல்


நோக்கி (13)

காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி
கூடாதன செய்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:330/2,3
காலனை காய்ந்து தம் கழல் அடியால் காமனை பொடிபட நோக்கி
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/3,4
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/1,2
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார் – தேவா-சம்:787/3
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார் – தேவா-சம்:2486/2
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி – தேவா-சம்:2501/1
மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் – தேவா-சம்:2902/1
பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி
பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் – தேவா-சம்:3785/1,2
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2

மேல்


நோக்கி-தன்னோடு (1)

மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே – தேவா-சம்:3418/2

மேல்


நோக்கிட (1)

உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட
மெய்யும் வண்ண கிளியன்னவூரனே – தேவா-சம்:4163/3,4

மேல்


நோக்கிய (1)

வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3042/3,4

மேல்


நோக்கில் (1)

பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே – தேவா-சம்:3382/3,4

மேல்


நோக்கின் (1)

பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1

மேல்


நோக்கு (5)

அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய – தேவா-சம்:1203/1
மான் நலம் மட நோக்கு உடையாளொடே – தேவா-சம்:3267/4
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1
கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய் – தேவா-சம்:3553/1

மேல்


நோக்கும் (2)

காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள் – தேவா-சம்:1559/1
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும்
வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2488/1,2

மேல்


நோதல் (2)

நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய – தேவா-சம்:1203/1

மேல்


நோம் (1)

நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2

மேல்


நோய் (41)

உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:102/4
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே – தேவா-சம்:160/4
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே – தேவா-சம்:161/4
விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய – தேவா-சம்:539/2
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/2
நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான் – தேவா-சம்:661/1
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/3
தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை – தேவா-சம்:781/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/2
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே – தேவா-சம்:872/4
உள் அக பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:1104/4
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே – தேவா-சம்:1107/4
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/4
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம் – தேவா-சம்:1274/2
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே – தேவா-சம்:1933/1
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் – தேவா-சம்:2316/2
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய்
உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/1,2
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் – தேவா-சம்:2547/1
கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் – தேவா-சம்:2553/1
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
மங்கு நோய் பிணி மாயுமே – தேவா-சம்:2683/4
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/4
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் – தேவா-சம்:2834/1,2
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/3
கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே – தேவா-சம்:3142/4
நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை – தேவா-சம்:3259/1
சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/2
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே – தேவா-சம்:3491/4
கொல்ல விட நோய் அகல்தர புகல் கொடுத்து அருளு கோகரணமே – தேவா-சம்:3652/4
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே – தேவா-சம்:3934/4

மேல்


நோய்க்கு (1)

பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/2,3

மேல்


நோய்கள் (5)

தளரும் உறு நோய்கள் சாரும் தவம்தானே – தேவா-சம்:899/4
உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள்
தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும் – தேவா-சம்:2128/2,3
நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள்
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/1,2
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் – தேவா-சம்:2391/3
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1

மேல்


நோய்களே (1)

ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே – தேவா-சம்:1540/4

மேல்


நோய்தாம் (1)

பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3

மேல்


நோயிலும் (1)

நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3

மேல்


நோயின் (1)

செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை – தேவா-சம்:1544/1

மேல்


நோயும் (3)

நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் – தேவா-சம்:186/2
நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:642/1
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3

மேல்


நோயே (5)

சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே – தேவா-சம்:1084/4
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே – தேவா-சம்:1829/4
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே – தேவா-சம்:2102/4
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4

மேல்


நோவாவா (1)

மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4

மேல்


நோற்றலாரேனும் (1)

நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை – தேவா-சம்:839/1

மேல்


நோன்பர் (1)

கையினில் உண்பவர் கணிக நோன்பர்
செய்வன தவம் அலா செது மதியார் – தேவா-சம்:2832/1,2

மேல்


நோன்பரும் (1)

திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும் – தேவா-சம்:2789/2

மேல்


நோன்பு (2)

படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் – தேவா-சம்:3910/1

மேல்