வை – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வைக்க 1
வைக்கப்படும் 1
வைக 1
வைகல் 11
வைகலில் 2
வைகலும் 15
வைகறை 1
வைகாவில் 1
வைகாவிலே 10
வைகி 6
வைகிய 4
வைகு 11
வைகும் 14
வைகை 6
வைகையின் 2
வைச்ச 1
வைத்த 64
வைத்தது 4
வைத்ததும் 1
வைத்ததுவும் 1
வைத்ததே 3
வைத்தல் 4
வைத்தவர் 9
வைத்தவன் 7
வைத்தாய் 1
வைத்தார் 7
வைத்தான் 10
வைத்தியால் 1
வைத்தீர் 3
வைத்து 52
வைத்துக்கொண்டு 1
வைதிகத்தின் 1
வைதிகமும் 1
வைதேவி-தன்னை 1
வைப்பார் 3
வைப்பானை 1
வைப்பு 1
வையகத்தார் 1
வையகத்தார்கள் 1
வையகத்தான் 1
வையகத்து 4
வையகத்தே 1
வையகம் 6
வையகமும் 1
வையத்தவர் 1
வையத்தவர்கள் 1
வையத்தார்க்கு 1
வையத்து 1
வையம் 20
வையம்-தன்னை 1
வையா 1
வையாத 1
வையேல் 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வைக்க (1)

சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி – தேவா-சம்:2845/3

மேல்


வைக்கப்படும் (1)

பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் – தேவா-சம்:2785/3

மேல்


வைக (1)

தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/1,2

மேல்


வைகல் (11)

வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு – தேவா-சம்:487/3
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் – தேவா-சம்:936/3
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய – தேவா-சம்:2987/3
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/3
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே – தேவா-சம்:2989/4
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் – தேவா-சம்:2994/3
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2996/3
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை – தேவா-சம்:2997/1

மேல்


வைகலில் (2)

மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/3,4
மாலை கொடு அணி மறைவாணர் வைகலில்
மால் அன மணி அணி மாடக்கோயிலே – தேவா-சம்:2995/3,4

மேல்


வைகலும் (15)

வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால் – தேவா-சம்:671/1
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/3
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும்
கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி – தேவா-சம்:1998/1,2
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும்
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி – தேவா-சம்:2000/1,2
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2031/1,2
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியா புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2042/1,2
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/3
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/1,2
கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/3,4
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/1,2
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும்
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3094/3,4
வாதினால் உரை அவை மெய் அல வைகலும்
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3116/2,3
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/4

மேல்


வைகறை (1)

மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை
பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2040/1,2

மேல்


வைகாவில் (1)

முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை – தேவா-சம்:3569/1

மேல்


வைகாவிலே (10)

வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4

மேல்


வைகி (6)

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/1,2
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/3,4
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3

மேல்


வைகிய (4)

மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/4

மேல்


வைகு (11)

கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:33/3
வாரி மாகம் வைகு திங்கள் வாள் அரவம் சூடி – தேவா-சம்:572/1
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர – தேவா-சம்:1173/1
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
மைய கண் மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2988/2
மட மொழி மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2991/2
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் – தேவா-சம்:2995/2
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே – தேவா-சம்:3919/4

மேல்


வைகும் (14)

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:149/2
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/2
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி – தேவா-சம்:1047/2
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலி காழி – தேவா-சம்:1111/2
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/2
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே – தேவா-சம்:2795/4
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3

மேல்


வைகை (6)

பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே – தேவா-சம்:697/4
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய – தேவா-சம்:958/1
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் – தேவா-சம்:3149/1

மேல்


வைகையின் (2)

வைகையின் வடகரை மருவிய ஏடகத்து – தேவா-சம்:3145/2
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற – தேவா-சம்:3147/2

மேல்


வைச்ச (1)

மை சில் முகில் வைச்ச பொழில் – தேவா-சம்:3601/3

மேல்


வைத்த (64)

நாகம் வைத்த முடியான் அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள் – தேவா-சம்:20/1
ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த – தேவா-சம்:20/2
ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன் – தேவா-சம்:190/2,3
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன் – தேவா-சம்:326/1
பிறையும் அரவும் உற வைத்த முடி மேல் – தேவா-சம்:352/1
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/2
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/2
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை – தேவா-சம்:560/2
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/2
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/1,2
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/3,4
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த
பொறையவன் புகழ் அவன் புகழ நின்ற – தேவா-சம்:1190/1,2
நனி வளர் மதியொடு நாகம் வைத்த
பனி மலர் கொன்றை அம் படர் சடையன் – தேவா-சம்:1191/1,2
சடை இடை புனல் வைத்த சதுரன் இடம் – தேவா-சம்:1204/3
ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த
கண்_நுதல் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1205/3,4
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த
மாறிலி வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1229/3,4
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான் – தேவா-சம்:1438/2
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/4
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/2
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் – தேவா-சம்:1831/2
பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே – தேவா-சம்:1854/4
வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/3,4
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் – தேவா-சம்:2368/2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/3,4
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் – தேவா-சம்:2698/2
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் – தேவா-சம்:2750/2
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/4
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
சடையிடை புனல் வைத்த சதுரன் அல்லனே – தேவா-சம்:2948/4
சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே – தேவா-சம்:2955/4
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே – தேவா-சம்:2961/4
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/3
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை – தேவா-சம்:3287/2
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/2
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/2
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3771/2
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/4
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர் – தேவா-சம்:3999/1
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் – தேவா-சம்:4070/2
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2

மேல்


வைத்தது (4)

கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3

மேல்


வைத்ததும் (1)

பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3

மேல்


வைத்ததுவும் (1)

அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/4

மேல்


வைத்ததே (3)

பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/4
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே – தேவா-சம்:1475/4
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4

மேல்


வைத்தல் (4)

வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே – தேவா-சம்:504/2
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே – தேவா-சம்:507/2
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/2
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/4

மேல்


வைத்தவர் (9)

வந்த பூம் புனல் வைத்தவர்
பைம் தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை – தேவா-சம்:1449/2,3
துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் – தேவா-சம்:1815/3
மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம் – தேவா-சம்:2572/2
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2
சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர்
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் – தேவா-சம்:2769/1,2
வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே – தேவா-சம்:2967/2
கற்றை வார் சடை வைத்தவர் காழியுள் – தேவா-சம்:3258/2
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2
செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4149/2

மேல்


வைத்தவன் (7)

தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும் – தேவா-சம்:1168/2
வைத்தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1241/4
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் – தேவா-சம்:1734/1,2
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனது ஆற்றலால் உரு – தேவா-சம்:3049/2,3
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் – தேவா-சம்:3621/2

மேல்


வைத்தாய் (1)

அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3425/4

மேல்


வைத்தார் (7)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார்
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/2,3
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே – தேவா-சம்:728/4
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை – தேவா-சம்:739/2,3
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த – தேவா-சம்:941/2,3
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார்
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/1,2

மேல்


வைத்தான் (10)

வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம் – தேவா-சம்:166/1
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/2
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான்
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/2,3
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் – தேவா-சம்:3176/2
ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் – தேவா-சம்:3177/2
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும் – தேவா-சம்:3410/2
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/2,3

மேல்


வைத்தியால் (1)

எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3

மேல்


வைத்தீர் (3)

ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை – தேவா-சம்:2062/2
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/2
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/1,2

மேல்


வைத்து (52)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:268/1,2
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து
மறையும் ஓதி மயானம் இடம் ஆக – தேவா-சம்:298/1,2
மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க – தேவா-சம்:333/1,2
ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் – தேவா-சம்:351/1,2
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/1,2
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/1,2
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/2
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார் – தேவா-சம்:734/2
வீறு ஆர் முலையாளை பாகம் மிக வைத்து
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான் – தேவா-சம்:963/1,2
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/4
மடவரலாளை ஒர்பாகம் வைத்து
குட திசை மதி அது சூடு சென்னி – தேவா-சம்:1201/2,3
மை தவழ் திருமகள் வணங்க வைத்து
பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய – தேவா-சம்:1221/2,3
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்து
கண்ணினால் காமனை காய்ந்தவன்-தன் – தேவா-சம்:1233/1,2
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை – தேவா-சம்:1294/2,3
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும் – தேவா-சம்:1783/2
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/2,3
உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று – தேவா-சம்:1837/1
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/3
அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1934/4
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் – தேவா-சம்:1967/2
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/1,2
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/3
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் – தேவா-சம்:2348/2
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/2
ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் – தேவா-சம்:2531/3
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/3
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் – தேவா-சம்:2632/1
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம் – தேவா-சம்:2728/3
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் – தேவா-சம்:3621/2
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர – தேவா-சம்:3670/1,2
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி – தேவா-சம்:3946/2
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி – தேவா-சம்:3948/1
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா – தேவா-சம்:4124/1
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு – தேவா-சம்:4132/1,2

மேல்


வைத்துக்கொண்டு (1)

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1

மேல்


வைதிகத்தின் (1)

வைதிகத்தின் வழி ஒழுகாத அ – தேவா-சம்:3957/1

மேல்


வைதிகமும் (1)

மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1

மேல்


வைதேவி-தன்னை (1)

மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் – தேவா-சம்:2902/1

மேல்


வைப்பார் (3)

நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் – தேவா-சம்:2889/3
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1

மேல்


வைப்பானை (1)

வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம் – தேவா-சம்:1585/2

மேல்


வைப்பு (1)

வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1636/3

மேல்


வையகத்தார் (1)

காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4

மேல்


வையகத்தார்கள் (1)

வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் – தேவா-சம்:1114/3

மேல்


வையகத்தான் (1)

வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/2

மேல்


வையகத்து (4)

சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும் – தேவா-சம்:3371/1
ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் – தேவா-சம்:3944/3

மேல்


வையகத்தே (1)

சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4

மேல்


வையகம் (6)

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான் – தேவா-சம்:1056/1
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் – தேவா-சம்:2436/2
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/3
கனை கடல் வையகம் தொழு கருக்குடி – தேவா-சம்:3020/3
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4

மேல்


வையகமும் (1)

சூழ்க வையகமும் துயர் தீர்கவே – தேவா-சம்:3372/4

மேல்


வையத்தவர் (1)

வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3

மேல்


வையத்தவர்கள் (1)

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1

மேல்


வையத்தார்க்கு (1)

மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே – தேவா-சம்:2069/4

மேல்


வையத்து (1)

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/1,2

மேல்


வையம் (20)

வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
வண்ண மலரானும் வையம் அளந்தானும் – தேவா-சம்:934/1
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/2
முந்தி இ வையம் தாவிய மாலும் மொய் ஒளி – தேவா-சம்:1088/1
தழல் தாமரையான் வையம் தாயவனும் – தேவா-சம்:1674/1
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் – தேவா-சம்:1914/1
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி – தேவா-சம்:2374/1
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2886/3
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:3202/3
வையம் ஆர் புகழாய் அடியார் தொழும் – தேவா-சம்:3302/1
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம்
ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல்செய்ய – தேவா-சம்:3379/1,2
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/3
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3

மேல்


வையம்-தன்னை (1)

வரி ஆய மலரானும் வையம்-தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு – தேவா-சம்:1290/1,2

மேல்


வையா (1)

ஒன்று அது ஆக வையா உணர்வினுள் – தேவா-சம்:1740/2

மேல்


வையாத (1)

பண்டம் ஆக வையாத பண்பினர் – தேவா-சம்:1751/2

மேல்


வையேல் (2)

இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/2,3
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல்
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால் – தேவா-சம்:1276/2,3

மேல்