சோ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோடைகள் 1
சோடையாய் 1
சோதி 35
சோதிக்க 1
சோதிக்கு 1
சோதிதான் 1
சோதிப்பு 1
சோதியர் 1
சோதியன் 1
சோதியனே 1
சோதியாய் 3
சோதியார் 2
சோதியான் 5
சோதியானே 1
சோதியும் 1
சோதியுள் 3
சோதியே 4
சோதியை 3
சோபுரத்தான் 1
சோபுரம் 11
சோமன் 1
சோமனும் 1
சோமனையும் 1
சோர்தரு 1
சோர்ந்திட 1
சோர்வினை 1
சோர்வு 1
சோர 9
சோலை 158
சோலை-தொறும் 1
சோலைகள் 6
சோலையில் 8
சோலையின் 2
சோழர்கள் 2
சோற்றுத்துறை 11
சோறு 5

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சோடைகள் (1)

சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2

மேல்


சோடையாய் (1)

பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு – தேவா-சம்:2324/1

மேல்


சோதி (35)

என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:168/3,4
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான் – தேவா-சம்:440/1
தயங்கு சோதி சாமவேதா காமனை காய்ந்தவனே – தேவா-சம்:538/3
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/4
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் – தேவா-சம்:884/2
சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும் – தேவா-சம்:967/2
சோதி நாமமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1038/2
நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை – தேவா-சம்:1080/1
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை – தேவா-சம்:1084/2
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகி திகழ் சோதி
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே – தேவா-சம்:1088/3,4
செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/3,4
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/3
மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் – தேவா-சம்:1533/1
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு – தேவா-சம்:1803/2
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் – தேவா-சம்:2164/2
சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும் – தேவா-சம்:2297/2
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர் – தேவா-சம்:2357/2
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் – தேவா-சம்:2368/2
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் – தேவா-சம்:2374/2
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார் – தேவா-சம்:2521/3
தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான் – தேவா-சம்:2876/2
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/2
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய் – தேவா-சம்:3356/2
சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி
மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின் – தேவா-சம்:3376/2,3
மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3458/4
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/4
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/2
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/2

மேல்


சோதிக்க (1)

சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி – தேவா-சம்:3376/2

மேல்


சோதிக்கு (1)

சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் – தேவா-சம்:2898/3

மேல்


சோதிதான் (1)

சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான்
மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/3,4

மேல்


சோதிப்பு (1)

துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/2

மேல்


சோதியர் (1)

மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/2

மேல்


சோதியன் (1)

சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க – தேவா-சம்:717/2

மேல்


சோதியனே (1)

சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே
நடு மா வயல் நாகேச்சுர நகரே – தேவா-சம்:1728/2,3

மேல்


சோதியாய் (3)

சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான் – தேவா-சம்:1530/2
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய்
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால் – தேவா-சம்:3356/2,3
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2

மேல்


சோதியார் (2)

வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் – தேவா-சம்:2332/3
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் – தேவா-சம்:2994/2

மேல்


சோதியான் (5)

சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான்
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/2,3
துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான்
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1553/2,3
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல் – தேவா-சம்:2539/3
தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான்
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர் – தேவா-சம்:2876/2,3
அன்பர் வேண்டுமவை அளி சோதியான்
வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/1,2

மேல்


சோதியானே (1)

சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2

மேல்


சோதியும் (1)

தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும்
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/2,3

மேல்


சோதியுள் (3)

சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான் – தேவா-சம்:1530/2
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய் – தேவா-சம்:3356/2

மேல்


சோதியே (4)

அன்னியூர் அமர் மன்னு சோதியே – தேவா-சம்:1036/2
சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை – தேவா-சம்:2009/3
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே – தேவா-சம்:4032/1
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/1,2

மேல்


சோதியை (3)

சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம் – தேவா-சம்:1613/1
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை – தேவா-சம்:2593/2
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2

மேல்


சோபுரத்தான் (1)

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் – தேவா-சம்:658/1

மேல்


சோபுரம் (11)

தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:548/4
தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/4
தூய வெள்ளை நீற்றினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:550/4
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/4
துற்றல் ஆன கொள்கையானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:554/4
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:555/4
தொடர்ந்து முன்னம் காணமாட்டா சோபுரம் மேயவனே – தேவா-சம்:556/4
துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:557/4
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை – தேவா-சம்:558/1

மேல்


சோமன் (1)

மன்னி மாலொடு சோமன் பணி செயும் – தேவா-சம்:600/1

மேல்


சோமனும் (1)

சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர் – தேவா-சம்:1473/3

மேல்


சோமனையும் (1)

சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும்
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க – தேவா-சம்:3410/2,3

மேல்


சோர்தரு (1)

அமையார் உடல் சோர்தரு முத்தம் – தேவா-சம்:386/3

மேல்


சோர்ந்திட (1)

சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த – தேவா-சம்:2655/2

மேல்


சோர்வினை (1)

துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்து நீர் – தேவா-சம்:2541/1

மேல்


சோர்வு (1)

சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி – தேவா-சம்:2975/3

மேல்


சோர (9)

ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3915/3
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3919/3
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/3

மேல்


சோலை (158)

கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த – தேவா-சம்:6/3
மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை
போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/3,4
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/3
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/3
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/2,3
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம் – தேவா-சம்:142/2
கொய்ம் மா மலர் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் – தேவா-சம்:146/2
குயில் ஆர் சோலை கோலக்காவையே – தேவா-சம்:243/3
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம் – தேவா-சம்:245/1
வெம் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:272/1,2
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:273/1,2
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலை
திரு கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் – தேவா-சம்:279/1,2
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை – தேவா-சம்:295/3
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/4
காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே – தேவா-சம்:468/4
கொந்து அண் பொழில் சோலை அரவின் தோன்றி கோடல் பூத்த – தேவா-சம்:483/3
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை – தேவா-சம்:484/3
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப – தேவா-சம்:506/3
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை – தேவா-சம்:514/1
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:517/4
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை – தேவா-சம்:558/1
தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/3
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே – தேவா-சம்:727/4
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் – தேவா-சம்:770/3
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் – தேவா-சம்:775/3
கடி ஆர் சோலை கலவ மயில் ஆர் காரோணத்தாரே – தேவா-சம்:777/4
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே – தேவா-சம்:789/4
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே – தேவா-சம்:790/4
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/4
தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே – தேவா-சம்:793/4
கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே – தேவா-சம்:794/4
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
கொந்து அண் பொழில் சோலை கோல வரி வண்டு – தேவா-சம்:896/1
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம் – தேவா-சம்:938/3
கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை – தேவா-சம்:947/2
பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே – தேவா-சம்:1051/4
பூ திகழ் சோலை தென்றல் உலாவும் புறவமே – தேவா-சம்:1055/4
கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம் – தேவா-சம்:1069/2
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் – தேவா-சம்:1075/1,2
குரவம்பாவை முருகு அமர் சோலை குற்றாலம் – தேவா-சம்:1077/2
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/2
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/3,4
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு – தேவா-சம்:1092/3
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன் – தேவா-சம்:1101/2
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி – தேவா-சம்:1106/2
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/2
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/4
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை
வெள்ளில் மேல் விடு கூறை கொடி விளைந்த – தேவா-சம்:1282/1,2
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான் – தேவா-சம்:1288/3
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை
முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/3,4
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/4
விரிந்த மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1438/4
மிளிர்ந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1439/4
விரிந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1441/4
விரை ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1443/4
தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய் – தேவா-சம்:1476/2
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1547/2
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி – தேவா-சம்:1634/3
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை
தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1776/3,4
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர – தேவா-சம்:1777/3
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை
தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1875/3,4
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் – தேவா-சம்:1892/2
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/2
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1900/3
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/3
கார் தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1974/3
கரும் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1980/3
கான் அமர் சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1981/1
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/3
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில் – தேவா-சம்:2097/3
பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2113/4
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/4
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/4
பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே – தேவா-சம்:2149/4
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே – தேவா-சம்:2150/4
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2159/4
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2160/4
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே – தேவா-சம்:2162/4
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2163/4
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர் – தேவா-சம்:2229/2
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல் – தேவா-சம்:2244/1
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/1,2
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள் – தேவா-சம்:2301/2
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/2
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் – தேவா-சம்:2421/3
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2442/4
ஆரும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2443/4
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2448/4
அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2449/4
அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2450/4
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2451/4
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2454/4
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/4
தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி – தேவா-சம்:2561/3
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/3
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2569/4
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/2
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2746/1
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/4
தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி – தேவா-சம்:2752/3
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/4
தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2924/3
கொந்து அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2926/3
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2928/3
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே – தேவா-சம்:3096/2
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை – தேவா-சம்:3180/1
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் – தேவா-சம்:3245/3
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/3
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3427/3
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3432/3
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3509/4
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3548/4
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/3,4
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/3,4
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை – தேவா-சம்:3871/1
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/4
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3

மேல்


சோலை-தொறும் (1)

நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3

மேல்


சோலைகள் (6)

நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து – தேவா-சம்:158/1
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே – தேவா-சம்:1130/4
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3390/3
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3872/4

மேல்


சோலையில் (8)

வாசம் கமழ் மா மலர் சோலையில் வண்டே – தேவா-சம்:342/1
கள் நின்று எழு சோலையில் வண்டு – தேவா-சம்:394/3
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த – தேவா-சம்:1134/1
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் – தேவா-சம்:1487/1
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் – தேவா-சம்:1511/1
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3

மேல்


சோலையின் (2)

மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3

மேல்


சோழர்கள் (2)

முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் – தேவா-சம்:690/3
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப – தேவா-சம்:694/3

மேல்


சோற்றுத்துறை (11)

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:294/4
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:295/4
ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:296/4
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:297/4
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:298/4
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:299/4
ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:300/4
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:301/4
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:302/4
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:303/4
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியை – தேவா-சம்:304/1

மேல்


சோறு (5)

சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன் – தேவா-சம்:1100/2
கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட – தேவா-சம்:2155/1
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு – தேவா-சம்:2520/1

மேல்