நா – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 1
நாக்கு 1
நாகணவாய்ச்சியும் 1
நாகம் 2
நாகனை 1
நாங்கள் 2
நாங்கூழு 1
நாச்சியார் 1
நாஞ்சிநாட்டு 1
நாட்டார் 1
நாட்டாரும் 1
நாட்டானபேர்க்கான 1
நாட்டி 2
நாட்டில் 6
நாட்டு 1
நாட்டும் 1
நாடகக்காரி 1
நாடகத்தை 3
நாடகம் 2
நாடாளன் 1
நாடி 1
நாடிநாடி 1
நாடு 18
நாடு-தன்னில் 1
நாடுவார் 1
நாடே 5
நாணம் 3
நாணமும் 1
நாணவே 1
நாணி 2
நாணைய 1
நாதம் 1
நாதனும் 1
நாம 1
நாயகமாகவும் 1
நாயகர் 9
நாயகன் 1
நாரி 1
நாரிபங்காளர் 1
நாரியை 1
நாரினை 1
நாரை 1
நாரையும் 2
நால் 2
நாலஞ்சு 1
நாலடி 1
நாலுகவி 1
நாலுபேர் 1
நாலுமறை 1
நாவும் 1
நாழி 1
நாள் 5
நாளாக 1
நாளில் 2
நாளிலே 1
நாளை 1
நாறும் 2
நான் 25
நான்கும் 1
நான்தானோ 1
நான்மறை 1
நான்மறையும் 1
நான்முகனும் 1
நானிலம் 1
நானிலமும் 1
நானும் 4
நானூற்றிருபத்துநாலில் 1
நானே 6

நா (1)

நா மாலை குறவஞ்சி நல் நகர் பட்டணம் முழுதும் நடக்கும் நாளில் – குற்-குறவஞ்சி:2 249/3

மேல்

நாக்கு (1)

நாக்கு துடிக்குது உன் நல் வாய் இதழுக்கு சிங்கி உன்றன் – குற்-குறவஞ்சி:2 390/1

மேல்

நாகணவாய்ச்சியும் (1)

கிள்ளையும் பஞ்சவர்ணக்கிளி கூட்டமும் கேகயப்பட்சியும் நாகணவாய்ச்சியும்
உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஓலம்செய்தே கூடி நாலஞ்சு பேதமாய் – குற்-குறவஞ்சி:2 268/2,3

மேல்

நாகம் (2)

நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டி – குற்-குறவஞ்சி:2 50/1
நாகம் என்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது – குற்-குறவஞ்சி:2 66/1

மேல்

நாகனை (1)

ஏகனை நாகனை கூவிக்கொண்டு எலியனை புலியனை ஏவிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 261/1

மேல்

நாங்கள் (2)

உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 149/2
தென்காசி ஆலயம் ஓங்க குறி செண்பகமாறற்கு சொன்ன பேர் நாங்கள்
நல் பாண்டிராச்சியம் உய்ய சொக்கநாயகர் வந்து மணக்கோலம் செய்ய – குற்-குறவஞ்சி:2 197/2,3

மேல்

நாங்கூழு (1)

நீண்டு குறுகிய நாங்கூழு போல – குற்-குறவஞ்சி:2 363/1

மேல்

நாச்சியார் (1)

தேவி குழல்வாய்மொழி பெண் நாச்சியார் கால் செண்பக கால் திருந்த மதி சூடினார் கால் – குற்-குறவஞ்சி:2 303/1

மேல்

நாஞ்சிநாட்டு (1)

தோழி மலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே – குற்-குறவஞ்சி:2 147/2

மேல்

நாட்டார் (1)

கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை – குற்-குறவஞ்சி:2 362/1

மேல்

நாட்டாரும் (1)

குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும் – குற்-குறவஞ்சி:2 376/1

மேல்

நாட்டானபேர்க்கான (1)

நாட்டானபேர்க்கான வார்த்தை நான் அறியேனோ – குற்-குறவஞ்சி:2 229/2

மேல்

நாட்டி (2)

தென்னவர் தமிழால் செயத்தம்பம் நாட்டி
மன்னவர்-தமக்கு வலதுகை நோக்கி – குற்-குறவஞ்சி:2 115/34,35
ஊர் மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி உடையவர் குற்றாலர் பூசை நைவேத்தியம் – குற்-குறவஞ்சி:2 283/2

மேல்

நாட்டில் (6)

பலவுக்குள் கனியாய் நின்ற பரமர் குற்றாலர் நாட்டில்
இலவுக்கும் சிவந்த வாயால் எனக்கு ஒரு குறிசொல்வாயே – குற்-குறவஞ்சி:2 198/3,4
ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில்
வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி – குற்-குறவஞ்சி:2 253/1,2
ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார் நல் நாட்டில்
காட்டுவிக்கும் முன் மோக கண் மாய சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 338/2,3
சேலத்து நாட்டில் குறிசொல்லி பெற்ற – குற்-குறவஞ்சி:2 360/1
இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில்
நல்லாரை காண்பவர்க்கு எல்லாம் வருமடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 384/1,2
இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா – குற்-குறவஞ்சி:2 393/2

மேல்

நாட்டு (1)

நாட்டு வளம் எனக்கு உரைத்து குற்றால நகர் வளமும் நவிலுவாயே – குற்-குறவஞ்சி:2 153/4

மேல்

நாட்டும் (1)

நல் நகர் குற்றாலம்-தன்னில் எங்கும் நாட்டும் எண்ணூற்றெண்பத்தேழு ஆண்டு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 196/1

மேல்

நாடகக்காரி (1)

நன்று நன்று குறவஞ்சி நாடகக்காரி இந்த – குற்-குறவஞ்சி:2 229/1

மேல்

நாடகத்தை (3)

சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்தி செழித்த குறவஞ்சி நாடகத்தை பாட – குற்-குறவஞ்சி:1 5/2
நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி – குற்-குறவஞ்சி:1 6/1
பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தை படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே – குற்-குறவஞ்சி:1 8/4

மேல்

நாடகம் (2)

கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
நாடகம் ஆடிய தோகை மயில் என நல் நகர் வீதியிலே அணி – குற்-குறவஞ்சி:2 42/3

மேல்

நாடாளன் (1)

வேதநாராயணவேள் குமாரன் விசை தொண்டை நாடாளன்
சீதரன் முத்துமன்னன் விசாரிப்பு சேர்ந்த புறவின் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 307/1,2

மேல்

நாடி (1)

நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடி – குற்-குறவஞ்சி:1 2/2

மேல்

நாடிநாடி (1)

சொல் நயத்தினை நாடிநாடி தோழியருடன் கூடிக்கூடி – குற்-குறவஞ்சி:2 47/2

மேல்

நாடு (18)

தக்க பூமிக்கு முன்பு உள்ள நாடு சகல தேவர்க்கும் அன்பு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 158/1
தக்க பூமிக்கு முன்பு உள்ள நாடு சகல தேவர்க்கும் அன்பு உள்ள நாடு
திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/1,2
திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/2
திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு
முக்கணான் விளையாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/2,3
முக்கணான் விளையாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/3
முக்கணான் விளையாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு
மை கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 158/3,4
அஞ்சு நூறு மகம் கொண்ட நாடு அநேக கோடி யுகம் கண்ட நாடு – குற்-குறவஞ்சி:2 159/1
அஞ்சு நூறு மகம் கொண்ட நாடு அநேக கோடி யுகம் கண்ட நாடு
கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு – குற்-குறவஞ்சி:2 159/1,2
கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு – குற்-குறவஞ்சி:2 159/2
கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு
செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு – குற்-குறவஞ்சி:2 159/2,3
செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு – குற்-குறவஞ்சி:2 159/3
செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு
வஞ்சி பாகர் திரிகூடநாதர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 159/3,4
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1,2
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/2
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு
போதம் ஊன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம்செயும் நாடு – குற்-குறவஞ்சி:2 160/2,3
போதம் ஊன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம்செயும் நாடு – குற்-குறவஞ்சி:2 160/3
போதம் ஊன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம்செயும் நாடு
நாதம் மூன்று உருவான குற்றாலநாதர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 160/3,4

மேல்

நாடு-தன்னில் (1)

கங்காளர் திரிகூட கர்த்தர் திரு நாடு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 343/1

மேல்

நாடுவார் (1)

ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார் – குற்-குறவஞ்சி:2 20/2

மேல்

நாடே (5)

கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4
மை கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 158/4
வஞ்சி பாகர் திரிகூடநாதர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 159/4
நாதம் மூன்று உருவான குற்றாலநாதர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 160/4
ஏங்க காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 161/4

மேல்

நாணம் (3)

நாணம் எல்லாம் நாளை நானும் காணவேபோறேன் – குற்-குறவஞ்சி:2 246/2
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/3
நாலுபேர் முன் எனை நாணம் குலையாதே சிங்கா – குற்-குறவஞ்சி:2 388/2

மேல்

நாணமும் (1)

நல் நகர் பெருமான் முன் போய் நாணமும் கலையும் தோற்ற – குற்-குறவஞ்சி:2 28/1

மேல்

நாணவே (1)

உல்லாச மாது ரதி போல் வசந்தவல்லி உருவசியும் நாணவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 32/2

மேல்

நாணி (2)

காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம் – குற்-குறவஞ்சி:2 155/1
மாணிக்க வசந்தவல்லி நாணி கவிழ்ந்தாள் – குற்-குறவஞ்சி:2 245/2

மேல்

நாணைய (1)

நகையும் முகமும் அவள் நாணைய கைவீச்சும் பகைவரும் திரும்பி பார்ப்பாரடா – குற்-குறவஞ்சி:2 336/1

மேல்

நாதம் (1)

நாதம் மூன்று உருவான குற்றாலநாதர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 160/4

மேல்

நாதனும் (1)

திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் பேதை – குற்-குறவஞ்சி:2 244/1

மேல்

நாம (1)

திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/2

மேல்

நாயகமாகவும் (1)

செந்நெல் மருதூர்க்கு நாயகமாகவும் தென்காசியூருக்கு தாயகமாகவும் – குற்-குறவஞ்சி:2 280/2

மேல்

நாயகர் (9)

பாடிய மறை தேடிய நாயகர் பன்னகர் பணி நல் நகர் நாயகர் – குற்-குறவஞ்சி:2 110/1
பாடிய மறை தேடிய நாயகர் பன்னகர் பணி நல் நகர் நாயகர்
பாவலர் மனு காவலர் நாயகர் பதஞ்சலி பணி தாளர் – குற்-குறவஞ்சி:2 110/1,2
பாவலர் மனு காவலர் நாயகர் பதஞ்சலி பணி தாளர் – குற்-குறவஞ்சி:2 110/2
கோடிய மதி சூடிய நாயகர் குழல்மொழி புணர் அழகிய நாயகர் – குற்-குறவஞ்சி:2 111/1
கோடிய மதி சூடிய நாயகர் குழல்மொழி புணர் அழகிய நாயகர்
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 111/1,2
குஞ்சரம் முதல் பூசித்த நாயகர் குறுமுனி தமிழ் நேசித்த நாயகர் – குற்-குறவஞ்சி:2 113/1
குஞ்சரம் முதல் பூசித்த நாயகர் குறுமுனி தமிழ் நேசித்த நாயகர்
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 113/1,2
நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1
போயினும் ஐயே நாயகர் குற்றாலர் பொல்லாத தக்கன் மகத்தை அழித்த நாள் – குற்-குறவஞ்சி:2 312/1

மேல்

நாயகன் (1)

உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே – குற்-குறவஞ்சி:2 9/4

மேல்

நாரி (1)

பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொன் பந்துகொண்டு ஆடினளே – குற்-குறவஞ்சி:2 43/4

மேல்

நாரிபங்காளர் (1)

நாரிபங்காளர் தென் ஆரியநாட்டினர் மன்மதா எங்கள் – குற்-குறவஞ்சி:2 71/3

மேல்

நாரியை (1)

சங்கீத வாரியை இங்கித நாரியை சல்லாபக்காரியை உல்லாச மோகன – குற்-குறவஞ்சி:2 328/2

மேல்

நாரினை (1)

நாரினை பொல்லாது என்றே ஞாலத்தோர் தள்ளுவாரோ – குற்-குறவஞ்சி:1 9/2

மேல்

நாரை (1)

ஆலாவும் கொக்கும் அருகே வருகுது ஆசார கள்ளர் போல் நாரை திரியுது – குற்-குறவஞ்சி:2 302/1

மேல்

நாரையும் (2)

குருகும் நாரையும் அன்னமும் தாராவும் – குற்-குறவஞ்சி:2 265/3
வன்ன பருந்து ஒரு கள்வன் கொடுபோனான் வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே – குற்-குறவஞ்சி:2 290/4

மேல்

நால் (2)

பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்து புயம் நால் மூன்றாய் – குற்-குறவஞ்சி:1 2/3
நத்து அணி கரங்கள் சேப்ப நால் அடி முன்னே ஓங்கி – குற்-குறவஞ்சி:2 39/3

மேல்

நாலஞ்சு (1)

உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஓலம்செய்தே கூடி நாலஞ்சு பேதமாய் – குற்-குறவஞ்சி:2 268/3

மேல்

நாலடி (1)

முந்தடி பிந்தடி இடை போய் மூன்றடி நாலடி நடந்து முடுகி மாதர் – குற்-குறவஞ்சி:2 44/2

மேல்

நாலுகவி (1)

நாலுகவி புலவர் புதுப்பாட்டும் சகியே – குற்-குறவஞ்சி:2 103/2

மேல்

நாலுபேர் (1)

நாலுபேர் முன் எனை நாணம் குலையாதே சிங்கா – குற்-குறவஞ்சி:2 388/2

மேல்

நாலுமறை (1)

நாலுமறை பழம் பாட்டும் மூவர் சொன்ன திருப்பாட்டும் – குற்-குறவஞ்சி:2 103/1

மேல்

நாவும் (1)

துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில் – குற்-குறவஞ்சி:2 224/3

மேல்

நாழி (1)

நிறை நாழி அளந்துவைப்பாய் இறையோனை கரம்குவிப்பாய் அம்மே குறி – குற்-குறவஞ்சி:2 210/1

மேல்

நாள் (5)

இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/3
மீறும் இலஞ்சி குறத்தியை கொண்ட செவ்வேள் குறவன் முதல் வேட்டைக்கு போன நாள்
ஆறு நாள் கூடி ஒரு கொக்கு பட்டது அகப்பட்ட கொக்கை அவித்து ஒரு சட்டியில் – குற்-குறவஞ்சி:2 291/1,2
ஆறு நாள் கூடி ஒரு கொக்கு பட்டது அகப்பட்ட கொக்கை அவித்து ஒரு சட்டியில் – குற்-குறவஞ்சி:2 291/2
போயினும் ஐயே நாயகர் குற்றாலர் பொல்லாத தக்கன் மகத்தை அழித்த நாள்
வாயில் அடிபட்டு இடிபட்டு உதைபட்டு வானவர் தானவர் போனது போலவே – குற்-குறவஞ்சி:2 312/1,2
வேடுவ கள்ளி ஓர் நாள் மெய்யிலாதவன் என்று என்னை – குற்-குறவஞ்சி:2 318/1

மேல்

நாளாக (1)

இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல் – குற்-குறவஞ்சி:2 355/1

மேல்

நாளில் (2)

வரும் நாளில் ஒரு மூன்று திருநாளும் வசந்தனும் – குற்-குறவஞ்சி:2 95/1
நா மாலை குறவஞ்சி நல் நகர் பட்டணம் முழுதும் நடக்கும் நாளில்
மா மாலை பூண்ட சிங்கன் வங்கண சிங்கியை தேடி வருகின்றானே – குற்-குறவஞ்சி:2 249/3,4

மேல்

நாளிலே (1)

முன் நாளிலே குறிசொல்லி பெற்ற மோகனமாலை பார் மோகனவல்லி – குற்-குறவஞ்சி:2 196/4

மேல்

நாளை (1)

நாணம் எல்லாம் நாளை நானும் காணவேபோறேன் – குற்-குறவஞ்சி:2 246/2

மேல்

நாறும் (2)

விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும் – குற்-குறவஞ்சி:2 138/2
நாறும் பூ குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/2

மேல்

நான் (25)

மோகம் என்பது இதுதானோ இதை முன்னமே நான் அறிவேனோ – குற்-குறவஞ்சி:2 55/2
விட்டு நான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 64/2
அடியேன் சகியாய் இருக்கையிலே அது நான் பயின்றால் ஆகாதோ – குற்-குறவஞ்சி:2 72/2
கங்கைக்கொழுந்து அணி தெய்வக்கொழுந்தை நான் கண்டு குளிர் – குற்-குறவஞ்சி:2 74/1
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3
என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே – குற்-குறவஞ்சி:2 86/4
தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று – குற்-குறவஞ்சி:2 91/4
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
நான் அறிந்த வகை சிறிது பேச கேள் அம்மே – குற்-குறவஞ்சி:2 164/2
நான் உரைப்பது அரிது உலகம் தான் உரைக்கும் அம்மே – குற்-குறவஞ்சி:2 192/2
மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4
என்ன குறியாகிலும் நான் சொல்லுவேன் அம்மே சதுர் – குற்-குறவஞ்சி:2 199/1
மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சி நான் அம்மே என்றன் – குற்-குறவஞ்சி:2 200/1
நாட்டானபேர்க்கான வார்த்தை நான் அறியேனோ – குற்-குறவஞ்சி:2 229/2
கன்னி என்று நான் இருக்க நல் நகர்க்குளே என்னை – குற்-குறவஞ்சி:2 237/1
ஆயிரம் கொக்குக்கு கண்ணியை வைத்து நான் அப்பாலே போய் ஒருமிப்பாய் இருக்கையில் – குற்-குறவஞ்சி:2 314/1
காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3
பேடை குயிலுக்கு கண்ணியை வைத்து நான்
மாட புறாவுக்கு போனேன் – குற்-குறவஞ்சி:2 322/1,2
கோல மயிலுக்கு கண்ணியை வைத்து நான்
ஆலா படுக்கவே போனேன் – குற்-குறவஞ்சி:2 323/1,2
ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான்
கோரத்தை வைத்த விழிக்கு எதிர் சென்றேன் என் கொஞ்சத்தனத்தை அறிந்து சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 329/1,2
வார் ஆடும் கொங்கைக்கு சந்தனம் பூசாள் மறுத்து நான் பூசினும் பூசலாகாது என்பாள் – குற்-குறவஞ்சி:2 331/2
ஆற்றை நான் கடத்திவிட்டால் ஆகாசமார்க்கம் ஓட – குற்-குறவஞ்சி:2 341/1
கண்டிய தேசத்தில் பண்டு நான் பெற்ற – குற்-குறவஞ்சி:2 368/1
பட்டப்பகலில் நான் எட்டி கொடுப்பேனோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 386/2
மாமனுக்கு வரிசையிட்ட மாமனை நான் வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 401/2

மேல்

நான்கும் (1)

தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/3

மேல்

நான்தானோ (1)

நல் நகரில் ஈசருக்கு நான்தானோ ஆசைகொண்டேன் மானே பல – குற்-குறவஞ்சி:2 80/1

மேல்

நான்மறை (1)

முக்கணான் விளையாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/3

மேல்

நான்மறையும் (1)

ஈராயிரங்கரத்தான் ஏற்ற சங்கும் நான்மறையும்
சீராய் இரங்க நடம்செய்தவர் குற்றால வெற்பில் – குற்-குறவஞ்சி:2 269/1,2

மேல்

நான்முகனும் (1)

இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகையால் – குற்-குறவஞ்சி:2 19/1

மேல்

நானிலம் (1)

நானிலம் சூழ் குடிசை வைத்தியநாத நரபாலன் – குற்-குறவஞ்சி:2 306/3

மேல்

நானிலமும் (1)

நானிலமும் புகழ் தாகம்தீர்த்தானுடன் நல்லூர் வரு சங்கரமூர்த்தி கட்டளை – குற்-குறவஞ்சி:2 285/3

மேல்

நானும் (4)

எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும்
ஒள்ளிய ஊணும் உறக்கமும் அற்றுவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 77/3,4
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானும் ஒரு பெண் கண்டாயே – குற்-குறவஞ்சி:2 81/4
நாணம் எல்லாம் நாளை நானும் காணவேபோறேன் – குற்-குறவஞ்சி:2 246/2
நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி – குற்-குறவஞ்சி:2 300/2

மேல்

நானூற்றிருபத்துநாலில் (1)

அன்பாய் வடகுண பாலில் கொல்லத்து ஆண்டு ஒரு நானூற்றிருபத்துநாலில்
தென்காசி ஆலயம் ஓங்க குறி செண்பகமாறற்கு சொன்ன பேர் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 197/1,2

மேல்

நானே (6)

கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூட சிங்கன் எனும் குளுவன் நானே – குற்-குறவஞ்சி:2 253/4
கோவிலில் புறவில் காவினில் அடங்கா குருவிகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 254/2
பாதகர் தோலால் பல தவில் அடித்து பறவைகள் படுக்கும் குறவனும் நானே – குற்-குறவஞ்சி:2 255/2
பல மயிர் நறுக்கி சில கண்ணி முறுக்கி பறவைகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 256/2
திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/2
மன்னன் ஒருவன் வரிசையிட்டான் கங்கை மங்கைக்கு நானே வரிசைசெய்வேன் என – குற்-குறவஞ்சி:2 266/2

மேல்