இ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 4
இக்கில் 1
இக்கு 1
இங்கித 1
இங்கு 1
இங்கே 3
இச்சைதானே 1
இசை 3
இசைத்திடாயே 1
இசைந்திட 1
இசைய 1
இசையவே 1
இட்ட 12
இட்டதடா 2
இட்டு 2
இடசாரி 1
இடத்தார் 1
இடதுகை 1
இடப 1
இடம் 3
இடிக்குது 1
இடிப்போம் 1
இடிபட்டு 1
இடியின் 1
இடு 1
இடுக்குவள் 1
இடுக்குவாயோ 1
இடுவார் 1
இடை 8
இடையினாள் 1
இணக்கிலார் 1
இணக்கினார் 1
இணங்க 1
இணங்கு 1
இணங்கும் 1
இணை 3
இணையாகும் 1
இத்தனை 3
இதழ் 1
இதழால் 1
இதழி 3
இதழினாள் 1
இதழுக்கு 1
இது 6
இதுதானோ 1
இதை 2
இந்த்ரசாபம் 1
இந்த 19
இந்திரன் 1
இந்திரையோ 1
இந்து 1
இந்நேரம் 1
இப்படி 1
இப்போது 3
இமயமலை 1
இமைப்பிலார் 1
இமைப்பினில் 1
இயம்புவோமே 1
இரங்க 1
இரங்கி 2
இரங்கிலார் 1
இரங்குவார் 1
இரண்டு 1
இரண்டுக்கும் 1
இரண்டும் 1
இரதிக்கு 1
இரதியும் 1
இரவி 1
இராக்கதப்பெருமாள் 1
இராசகுலராமன் 1
இரு 14
இருக்க 3
இருக்கவே 1
இருக்கால் 1
இருக்குதடி 2
இருக்குது 2
இருக்கும் 7
இருக்கையில் 1
இருக்கையிலே 1
இருண்ட 2
இருத்தும் 1
இருந்த 1
இருந்து 3
இருந்தோம் 1
இருபாலும் 1
இரும் 1
இருவர் 1
இருவரும் 1
இல்லாத 1
இல்லாரை 1
இல்லை 2
இலகு 1
இலங்க 3
இலங்கவே 1
இலங்கு 1
இலஞ்சி 6
இலவுக்கும் 1
இலா 3
இலையும் 1
இவ் 1
இவ்வாறு 1
இவர் 4
இவரே 1
இவள் 4
இவன் 5
இளம் 1
இளம்பிறை 1
இளைய 1
இறக்கும் 1
இறங்கும் 2
இறுக்கி 2
இறுக்கிக்கொண்டு 1
இறுக 1
இறையவர் 2
இறையோனை 2
இறைவர் 1
இன் 2
இன்ப 1
இன்பம் 1
இன்றி 2
இன்று 2
இன்னம் 3
இன்னும் 1
இனங்கள் 3
இனி 10
இனித்து 1
இனியானோ 1

இ (4)

இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/3
எண்ணிலா பகையெடுத்தார் இ நகரை நல் நகர் என்று எவர் சொன்னாரோ – குற்-குறவஞ்சி:2 67/2
இ குறி பொய்யாது என்றே இறையவர் திரிகூடத்தில் – குற்-குறவஞ்சி:2 222/3
இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா – குற்-குறவஞ்சி:2 393/2

மேல்

இக்கில் (1)

திக்கில் அடங்காது குறி இக்கில் அடங்காது மொழி – குற்-குறவஞ்சி:2 345/3

மேல்

இக்கு (1)

வசந்த உல்லாச வல்லி வல் இக்கு வல்லி பேசி – குற்-குறவஞ்சி:2 82/1

மேல்

இங்கித (1)

சங்கீத வாரியை இங்கித நாரியை சல்லாபக்காரியை உல்லாச மோகன – குற்-குறவஞ்சி:2 328/2

மேல்

இங்கு (1)

இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3

மேல்

இங்கே (3)

இங்கே வாராய் என் கண்ணே இங்கே வாராய் – குற்-குறவஞ்சி:2 349/1
இங்கே வாராய் என் கண்ணே இங்கே வாராய் – குற்-குறவஞ்சி:2 349/1
இங்கே வாராய் மலர் செம் கை தாராய் மோக – குற்-குறவஞ்சி:2 350/1

மேல்

இச்சைதானே (1)

என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே – குற்-குறவஞ்சி:2 86/4

மேல்

இசை (3)

அடியர் முழக்கிய திருப்பலாண்டு இசை அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள் – குற்-குறவஞ்சி:2 10/3
தோடி முரளி வராளி பயிரவி மோடி பெற இசை பாடியே – குற்-குறவஞ்சி:2 121/3
ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 253/1

மேல்

இசைத்திடாயே (1)

இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/4

மேல்

இசைந்திட (1)

இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/4

மேல்

இசைய (1)

இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/4

மேல்

இசையவே (1)

உடுத்த திருமருங்கு அசைய மலர் அயன் கொடுத்த பரிகலம் இசையவே – குற்-குறவஞ்சி:2 8/4

மேல்

இட்ட (12)

கையுமா ஒரு கண் இட்ட மையுமாய் வருவார் – குற்-குறவஞ்சி:2 22/2
கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1
மேல்புறத்தில் ஆந்தை இட்ட வீச்சு நன்று அம்மே – குற்-குறவஞ்சி:2 204/2
முத்திரை மோதிரம் இட்ட கையை காட்டாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 213/1
முன்கை முதாரி இட்ட கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 213/2
சித்திர சூடகம் இட்ட கையை காட்டாய் பசும் – குற்-குறவஞ்சி:2 215/1
ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/4
சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே – குற்-குறவஞ்சி:2 361/1
இட்ட சவடியடா சிங்கா இட்ட சவடியடா – குற்-குறவஞ்சி:2 376/2
இட்ட சவடியடா சிங்கா இட்ட சவடியடா – குற்-குறவஞ்சி:2 376/2
வங்காளத்தார் இட்ட சிங்கார கொப்படா சிங்கா – குற்-குறவஞ்சி:2 377/2
பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 381/1

மேல்

இட்டதடா (2)

பாடகம் இட்டதடா சிங்கா பாடகம் இட்டதடா – குற்-குறவஞ்சி:2 364/2
பாடகம் இட்டதடா சிங்கா பாடகம் இட்டதடா – குற்-குறவஞ்சி:2 364/2

மேல்

இட்டு (2)

கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு
ஒய்யாரமாக நடந்து வசந்தவல்லி ஓவியம் போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 31/1,2

மேல்

இடசாரி (1)

சந்தடியில் திருகி இடசாரி வலசாரி சுற்றி சகிமார் சூழ – குற்-குறவஞ்சி:2 44/3

மேல்

இடத்தார் (1)

குழல்மொழி_இடத்தார் குறும்பலா_உடையார் – குற்-குறவஞ்சி:2 223/1

மேல்

இடதுகை (1)

இன் நகை மடவார்க்கு இடதுகை பார்த்து – குற்-குறவஞ்சி:2 115/36

மேல்

இடப (1)

ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4

மேல்

இடம் (3)

சத்தி பயிரவி கெளரி குழல் பொழி தையலாள் இடம் இருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/4
நவநிதியும் விளையும் இடம் அவிடம் அது கடந்தால் – குற்-குறவஞ்சி:2 171/1
தும்மலும் காகமும் இடம் சொல்லுதே அம்மே சரம் – குற்-குறவஞ்சி:2 205/1

மேல்

இடிக்குது (1)

இடிக்குது குறளி அம்மே இனி குறிசொல்ல கேளே – குற்-குறவஞ்சி:2 224/4

மேல்

இடிப்போம் (1)

கிம்புரியின் கொம்பு ஒடித்து வெம்பு தினை இடிப்போம் – குற்-குறவஞ்சி:2 134/2

மேல்

இடிபட்டு (1)

வாயில் அடிபட்டு இடிபட்டு உதைபட்டு வானவர் தானவர் போனது போலவே – குற்-குறவஞ்சி:2 312/2

மேல்

இடியின் (1)

இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1

மேல்

இடு (1)

குன்றில் இடு மழை மின்கள் என நிரை குன்றி வடம் முலை தங்கவே – குற்-குறவஞ்சி:2 120/1

மேல்

இடுக்குவள் (1)

ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள்
வா என்று கைச்சுருள் தா என்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 330/2,3

மேல்

இடுக்குவாயோ (1)

கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே – குற்-குறவஞ்சி:2 247/2

மேல்

இடுவார் (1)

இந்த உடை ரவிக்கை என சந்த முலைக்கு இடுவார் – குற்-குறவஞ்சி:2 21/2

மேல்

இடை (8)

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/1,2
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3
முந்தடி பிந்தடி இடை போய் மூன்றடி நாலடி நடந்து முடுகி மாதர் – குற்-குறவஞ்சி:2 44/2
வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1
இன்னம் பருத்தால் இடை பொறுக்கமாட்டாதே – குற்-குறவஞ்சி:2 122/4
சந்த முலை துவளும் இடை தவள நகை பவள இதழ் தையலே உன் – குற்-குறவஞ்சி:2 128/3
கோட்டு வளம் முலை காட்டும் கொடியின் வளம் இடை காட்டும் குறிஞ்சி பூத்த – குற்-குறவஞ்சி:2 153/1
குன்றத்தை பார்த்தால் கொடி இடை தாங்குமோ சிங்கி தன் – குற்-குறவஞ்சி:2 383/1

மேல்

இடையினாள் (1)

துடிக்குள் அடங்கி ஒரு பிடிக்குள் அடங்கும் சின்ன இடையினாள் காம – குற்-குறவஞ்சி:2 37/1

மேல்

இணக்கிலார் (1)

பருவ மலையை கையில் இணக்கிலார் – குற்-குறவஞ்சி:2 83/4

மேல்

இணக்கினார் (1)

பருத்த மலையை கையில் இணக்கினார் கொங்கையான – குற்-குறவஞ்சி:2 83/3

மேல்

இணங்க (1)

சொன்னவர்க்கு இணங்க வார்த்தை சொல்லவும் படித்துக்கொண்டாய் – குற்-குறவஞ்சி:2 86/2

மேல்

இணங்கு (1)

சுட்டிக்கு இணங்கு நுதல் சுந்தரியாள் கொங்கையின் மேல் – குற்-குறவஞ்சி:2 286/2

மேல்

இணங்கும் (1)

கோல வண்டு இணங்கும் கொன்றை மாலிகையான் – குற்-குறவஞ்சி:2 115/16

மேல்

இணை (3)

அடி இணை மலரும் செவ் வாய் ஆம்பலும் சிவப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/1
கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
ஆடும் இரு குழை தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே – குற்-குறவஞ்சி:2 121/1

மேல்

இணையாகும் (1)

வாரை சேர்ந்த முலைக்கு இணையாகும் மலையை சேர்ந்து சிலை ஒன்று வாங்கி – குற்-குறவஞ்சி:2 155/2

மேல்

இத்தனை (3)

வயிற்றுக்கு இத்தனை போதும் கஞ்சி வார் அம்மே – குற்-குறவஞ்சி:2 200/2
இத்தனை குறிகளில் இவள் குறி இது என – குற்-குறவஞ்சி:2 223/31
இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல் – குற்-குறவஞ்சி:2 355/1

மேல்

இதழ் (1)

சந்த முலை துவளும் இடை தவள நகை பவள இதழ் தையலே உன் – குற்-குறவஞ்சி:2 128/3

மேல்

இதழால் (1)

ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2

மேல்

இதழி (3)

பூ மலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:1 1/1
கைந்நொடியில் பொன் இதழி மாலை வரும் காண் இனி – குற்-குறவஞ்சி:2 247/1
பூ மாலை இதழி பெற பொன் மாலை மணி மாலை பொலிவாய் பூண்டு – குற்-குறவஞ்சி:2 249/2

மேல்

இதழினாள் (1)

திருந்து பூ முருக்கின் அரும்பு போல் இருக்கும் இதழினாள் வரி – குற்-குறவஞ்சி:2 33/3

மேல்

இதழுக்கு (1)

நாக்கு துடிக்குது உன் நல் வாய் இதழுக்கு சிங்கி உன்றன் – குற்-குறவஞ்சி:2 390/1

மேல்

இது (6)

மை வளையும் குழல் சோர கை வளை கொண்டான் இது என்ன – குற்-குறவஞ்சி:2 27/1
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3
நாகம் என்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது
வாகு குழல் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 66/1,2
செம்மை இது நல் நிமித்தம் கண்டு பார் அம்மே திரிகூடமலை – குற்-குறவஞ்சி:2 206/1
இத்தனை குறிகளில் இவள் குறி இது என – குற்-குறவஞ்சி:2 223/31
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/4

மேல்

இதுதானோ (1)

மோகம் என்பது இதுதானோ இதை முன்னமே நான் அறிவேனோ – குற்-குறவஞ்சி:2 55/2

மேல்

இதை (2)

மோகம் என்பது இதுதானோ இதை முன்னமே நான் அறிவேனோ – குற்-குறவஞ்சி:2 55/2
பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதை பிக்கு சொல்லாமலே கொக்கு படுக்கவே – குற்-குறவஞ்சி:2 291/4

மேல்

இந்த்ரசாபம் (1)

கங்கை எனும் வட அருவி தங்கும் இந்த்ரசாபம்
கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/1,2

மேல்

இந்த (19)

இந்த உடை ரவிக்கை என சந்த முலைக்கு இடுவார் – குற்-குறவஞ்சி:2 21/2
இந்த சித்தர் ஆரோ வெகு – குற்-குறவஞ்சி:2 49/1
மோகன் வர காணேன் என்றால் வெண்ணிலாவே இந்த
வேகம் உனக்கு ஆனது என்ன வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/3,4
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த
செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/1,2
நித்திரா பாவிக்கு என்ன போட்டி நடுவே இந்த
காற்றுக்கு வந்தது ஒரு கோட்டி விரகநோய்க்கு – குற்-குறவஞ்சி:2 90/2,3
பன்றியொடு வேடன் வலம் சென்றது இந்த தலமே – குற்-குறவஞ்சி:2 178/1
நல்ல மேற்குலத்தான் இந்த நல் நகர் தலத்தான் ஆக – குற்-குறவஞ்சி:2 207/3
வீறாக நவநிதியும் விளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/1
மேன்மேலும் பால் அமுதம் அளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/2
ஆறாத சனங்கள் பசியாற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/1
அணங்கு_அனையார் வணங்கி நித்தம் போற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/2
பேறாக நல் நகரம் காக்கும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 221/1
பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 221/2
கைக்குறி பார்க்கில் இந்த கைப்பிடிப்பவர்தாம் எட்டு – குற்-குறவஞ்சி:2 222/1
நன்று நன்று குறவஞ்சி நாடகக்காரி இந்த
நாட்டானபேர்க்கான வார்த்தை நான் அறியேனோ – குற்-குறவஞ்சி:2 229/1,2
மன்றல் வரும் சேனை-தனை கண்டு பயந்தால் இந்த
மையலும் கிறுகிறுப்பும் தையலர்க்கு உண்டோ – குற்-குறவஞ்சி:2 231/1,2
நல் நகரில் ஈசர் உன்னை மேவ வருவார் இந்த
நாணம் எல்லாம் நாளை நானும் காணவேபோறேன் – குற்-குறவஞ்சி:2 246/1,2
பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த
வன்ன பணிகளின் மாணிக்கக்கல்லடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 381/1,2
பெட்டக பாம்பை பிடித்து ஆட்டவேண்டாமோ சிங்கி இந்த
வெட்டவெளியிலே கோடிப்பாம்பு ஆடுமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 385/1,2

மேல்

இந்திரன் (1)

தனதன் இந்திரன் வருணன் முதலிய சகல தேவரும் வழுத்தவே – குற்-குறவஞ்சி:2 11/4

மேல்

இந்திரையோ (1)

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மனம் – குற்-குறவஞ்சி:2 43/1

மேல்

இந்து (1)

இந்து அப்பு அணியை நீ பூண பொறுக்குமோ சிங்கி பூவில் – குற்-குறவஞ்சி:2 382/1

மேல்

இந்நேரம் (1)

வந்தால் இந்நேரம் வரச்சொல்லு வராதிருந்தால் – குற்-குறவஞ்சி:2 91/1

மேல்

இப்படி (1)

சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை – குற்-குறவஞ்சி:2 331/3

மேல்

இப்போது (3)

செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது
அம்மா என் மேனி அடங்கலுமே கறுத்தேனே – குற்-குறவஞ்சி:2 76/3,4
சலுகைக்காரர்க்கு ஆசையானேன் இப்போது – குற்-குறவஞ்சி:2 89/4
எங்கேதான் போனாள் ஐயே என் சிங்கி இப்போது
எங்கேதான் போனாள் ஐயே – குற்-குறவஞ்சி:2 342/1,2

மேல்

இமயமலை (1)

இமயமலை என்னுடைய தமயன் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 146/2

மேல்

இமைப்பிலார் (1)

தொண்டர் கூட்டமும் இமைப்பிலார் என சூழ்ந்து தனித்தனி மயங்கவே – குற்-குறவஞ்சி:2 7/2

மேல்

இமைப்பினில் (1)

எக்குறி ஆயினும் இமைப்பினில் உரைக்கும் – குற்-குறவஞ்சி:2 115/40

மேல்

இயம்புவோமே (1)

கொடிதனை திருக்குற்றால குறவஞ்சிக்கு இயம்புவோமே – குற்-குறவஞ்சி:1 7/4

மேல்

இரங்க (1)

சீராய் இரங்க நடம்செய்தவர் குற்றால வெற்பில் – குற்-குறவஞ்சி:2 269/2

மேல்

இரங்கி (2)

சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேத செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள் – குற்-குறவஞ்சி:1 8/1
செட்டிக்கு இரங்கி வினை தீர்த்தவர் குற்றாலர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 286/1

மேல்

இரங்கிலார் (1)

இரங்குவார் எனக்கு இரங்கிலார் பெண்ணே – குற்-குறவஞ்சி:2 85/4

மேல்

இரங்குவார் (1)

இரங்குவார் எனக்கு இரங்கிலார் பெண்ணே – குற்-குறவஞ்சி:2 85/4

மேல்

இரண்டு (1)

எந்தையார் வாசலில் பிள்ளையார் செய்வித்து இரண்டு குறிஞ்சி படித்துறையும் செய்த – குற்-குறவஞ்சி:2 282/2

மேல்

இரண்டுக்கும் (1)

சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில் – குற்-குறவஞ்சி:2 313/3

மேல்

இரண்டும் (1)

கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1

மேல்

இரதிக்கு (1)

மை கருங்கண்ணாள் இரதிக்கு மால் கொண்ட மன்மதா விடை – குற்-குறவஞ்சி:2 68/3

மேல்

இரதியும் (1)

ஒன்றில் இரதியும் ஒன்றில் மதனனும் ஊசலிடு குழை பொங்கவே – குற்-குறவஞ்சி:2 120/3

மேல்

இரவி (1)

வான் இரவி முழைகள்-தொறும் நுழையும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 143/2

மேல்

இராக்கதப்பெருமாள் (1)

கொந்து ஆர் புயத்தான் இராக்கதப்பெருமாள் குற்றாலநாதன் முன் உற்ற சகோதரன் – குற்-குறவஞ்சி:2 282/3

மேல்

இராசகுலராமன் (1)

ஏரிவாய் சீவலப்பேரி வடகால் இராசகுலராமன் கண்டுகொண்டான் மேலை – குற்-குறவஞ்சி:2 272/3

மேல்

இரு (14)

தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றால குறவஞ்சி தமிழ் தந்தானே – குற்-குறவஞ்சி:1 2/4
இரு தனத்து ரவிக்கைதனை அரையில் உடை தொடுவார் பின் – குற்-குறவஞ்சி:2 21/1
கச்சு கிடக்கினும் தித்திச்சுக்கிடக்கும் இரு கொங்கையாள் – குற்-குறவஞ்சி:2 36/2
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு
கொங்கை கொடும் பகை வென்றனம் என்று குழைந்து குழைந்து ஆட மலர் – குற்-குறவஞ்சி:2 40/2,3
சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆட புனை – குற்-குறவஞ்சி:2 42/1
இரு பந்து குதிகொண்டு ஆட இரு பந்து முலைகொண்டு ஆட – குற்-குறவஞ்சி:2 48/2
இரு பந்து குதிகொண்டு ஆட இரு பந்து முலைகொண்டு ஆட – குற்-குறவஞ்சி:2 48/2
பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/4
சங்கக்குழையாரை சங்க மறுகினில் கண்டு இரு
செங்கைக்குள் சங்கமும் சிந்தி மறுகிவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 74/3,4
ஆடும் இரு குழை தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே – குற்-குறவஞ்சி:2 121/1
மாறாமல் இரு நிலத்தில் அறம் வளர்க்கும் கையே – குற்-குறவஞ்சி:2 218/1
ஆ என்று ஒருக்கால் இரு கால் உதைப்பள் அதுக்கு கிடந்து கொதிக்குது என் பேய் மனம் – குற்-குறவஞ்சி:2 330/4
நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 337/2
கூடியிருக்க மருந்தும் இரு பொழுதும் கூடியிருப்பார்களை கலைக்க மருந்தும் – குற்-குறவஞ்சி:2 339/2

மேல்

இருக்க (3)

தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:1 5/1
செய்ய சடையின் மேலே திங்கள்கொழுந்து இருக்க
பையை விரிக்குது அம்மா பாம்பு சும்மா – குற்-குறவஞ்சி:2 51/3,4
கன்னி என்று நான் இருக்க நல் நகர்க்குளே என்னை – குற்-குறவஞ்சி:2 237/1

மேல்

இருக்கவே (1)

சத்தி பயிரவி கெளரி குழல் பொழி தையலாள் இடம் இருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/4

மேல்

இருக்கால் (1)

ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்கால் கூடிக்கொள்ள – குற்-குறவஞ்சி:2 353/3

மேல்

இருக்குதடி (2)

பயமா இருக்குதடி சிங்கி பயமா இருக்குதடி – குற்-குறவஞ்சி:2 357/2
பயமா இருக்குதடி சிங்கி பயமா இருக்குதடி – குற்-குறவஞ்சி:2 357/2

மேல்

இருக்குது (2)

இருக்குது இவர் செய் மாயம் ஒருக்காலே – குற்-குறவஞ்சி:2 52/4
மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது – குற்-குறவஞ்சி:2 289/4

மேல்

இருக்கும் (7)

திருந்து பூ முருக்கின் அரும்பு போல் இருக்கும் இதழினாள் வரி – குற்-குறவஞ்சி:2 33/3
அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் மங்கை பருவத்தாள் – குற்-குறவஞ்சி:2 34/2
திரிகூட பதி இருக்கும் திருநாட்டு வளம் உரைக்க தெவிட்டாது அம்மே – குற்-குறவஞ்சி:2 163/2
தவ முனிவர் கூட்டரவும் அவர் இருக்கும் குகையும் – குற்-குறவஞ்சி:2 169/1
கான மலர் மேல் இருக்கும் மோன அயனார்க்கும் – குற்-குறவஞ்சி:2 188/1
கூனி கொத்தி முக்கி விக்கி கொக்கு இருக்கும் பண்ணை எலாம் – குற்-குறவஞ்சி:2 292/2
கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1

மேல்

இருக்கையில் (1)

ஆயிரம் கொக்குக்கு கண்ணியை வைத்து நான் அப்பாலே போய் ஒருமிப்பாய் இருக்கையில்
மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே – குற்-குறவஞ்சி:2 314/1,2

மேல்

இருக்கையிலே (1)

அடியேன் சகியாய் இருக்கையிலே அது நான் பயின்றால் ஆகாதோ – குற்-குறவஞ்சி:2 72/2

மேல்

இருண்ட (2)

மோனை கொடிகளின் காடு நெடுவெளி மூடி அடங்கலும் ஓடி இருண்ட பின் – குற்-குறவஞ்சி:2 13/3
இருண்ட மேகம் சுற்றி சுருண்டு சுழியெறியும் கொண்டையாள் குழை – குற்-குறவஞ்சி:2 33/1

மேல்

இருத்தும் (1)

ஆனை_வாகனத்தானை வானுலகில் இருத்தும்
ஆகு_வாகனத்தார்க்கும் தோகை_வாகனர்க்கும் – குற்-குறவஞ்சி:2 185/1,2

மேல்

இருந்த (1)

தானே இருந்த தலமும் நன்றே செழும் தாமரை போல் – குற்-குறவஞ்சி:2 212/3

மேல்

இருந்து (3)

அருகில் இருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர் அணைத்து வாழைக்குருத்தில் கிடத்துவார் – குற்-குறவஞ்சி:2 61/1
வந்து முன் இருந்து வசந்த மோகினி பெண் – குற்-குறவஞ்சி:2 223/17
துள்ளி மடி மேல் இருந்து தோளின் மேல் ஏறியவள் – குற்-குறவஞ்சி:2 297/3

மேல்

இருந்தோம் (1)

நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி – குற்-குறவஞ்சி:2 300/2

மேல்

இருபாலும் (1)

இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகையால் – குற்-குறவஞ்சி:2 19/1

மேல்

இரும் (1)

மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே – குற்-குறவஞ்சி:2 314/2

மேல்

இருவர் (1)

ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலக மேழையும் உருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/2

மேல்

இருவரும் (1)

சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது – குற்-குறவஞ்சி:2 348/1

மேல்

இல்லாத (1)

இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில் – குற்-குறவஞ்சி:2 384/1

மேல்

இல்லாரை (1)

எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும் – குற்-குறவஞ்சி:2 77/3

மேல்

இல்லை (2)

வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1
ஆர்க்கும் பயம் இல்லை தோணின காரியம் – குற்-குறவஞ்சி:2 358/1

மேல்

இலகு (1)

இலகு நீறு அணிந்து திலகமும் எழுதி – குற்-குறவஞ்சி:2 115/19

மேல்

இலங்க (3)

எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே – குற்-குறவஞ்சி:2 8/2
கொட்டகை தூண் போல் கால் இலங்க ஒட்டகம் போலே மேல் இலங்க – குற்-குறவஞ்சி:2 262/1
கொட்டகை தூண் போல் கால் இலங்க ஒட்டகம் போலே மேல் இலங்க
கட்டான திரிகூட சிங்கன் முன்னே மட்டு ஈ வாய் நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 262/1,2

மேல்

இலங்கவே (1)

மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே
ஒன்றில் இரதியும் ஒன்றில் மதனனும் ஊசலிடு குழை பொங்கவே – குற்-குறவஞ்சி:2 120/2,3

மேல்

இலங்கு (1)

சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதலினாள் – குற்-குறவஞ்சி:2 33/4

மேல்

இலஞ்சி (6)

அருள் இலஞ்சி வேலர்-தமக்கு ஒரு பெண்ணை கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 151/1
கந்தனே இலஞ்சி கடவுளே சரணம் – குற்-குறவஞ்சி:2 223/4
செய் அம் புலியூர் இலஞ்சி மேலகரம் செங்கோட்டை சீவலநல்லூர் சிற்றம்பலம் – குற்-குறவஞ்சி:2 274/2
கொய்யும் மலர் தார் இலஞ்சி குமார குரு விளையாடும் திருவிளையாட்டத்தில் – குற்-குறவஞ்சி:2 274/4
மீறும் இலஞ்சி குறத்தியை கொண்ட செவ்வேள் குறவன் முதல் வேட்டைக்கு போன நாள் – குற்-குறவஞ்சி:2 291/1
தந்தி முகத்து ஒரு கோனை தமிழ் இலஞ்சி முருகோனை – குற்-குறவஞ்சி:2 400/1

மேல்

இலவுக்கும் (1)

இலவுக்கும் சிவந்த வாயால் எனக்கு ஒரு குறிசொல்வாயே – குற்-குறவஞ்சி:2 198/4

மேல்

இலா (3)

மறு இலா பெண்மையில் வரும் திட்டி தோடமோ – குற்-குறவஞ்சி:2 223/25
சாட்டி நிற்கும் அண்டம் எலாம் சாட்டை இலா பம்பரம் போல் – குற்-குறவஞ்சி:2 338/1
தாதை இலா திருமகனை தட மலைக்கு மருமகனை – குற்-குறவஞ்சி:2 399/1

மேல்

இலையும் (1)

தின்ன இலையும் பிளவும் அள்ளித்தா அம்மே கப்பல் – குற்-குறவஞ்சி:2 202/1

மேல்

இவ் (1)

இவ் வளை கை தோள் அழுந்த இவன் மார்பில் அழுந்தாமல் – குற்-குறவஞ்சி:2 26/1

மேல்

இவ்வாறு (1)

இவ்வாறு வந்த என் நெஞ்சின் விரகத்தை – குற்-குறவஞ்சி:2 325/1

மேல்

இவர் (4)

பண்டை நரர் இவர் தேவர் இவர் என பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும் – குற்-குறவஞ்சி:2 7/3
பண்டை நரர் இவர் தேவர் இவர் என பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும் – குற்-குறவஞ்சி:2 7/3
இருக்குது இவர் செய் மாயம் ஒருக்காலே – குற்-குறவஞ்சி:2 52/4
காமனார்-தமக்கும் இவர் மாமனார் அம்மே – குற்-குறவஞ்சி:2 188/2

மேல்

இவரே (1)

எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று – குற்-குறவஞ்சி:2 53/2

மேல்

இவள் (4)

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மனம் – குற்-குறவஞ்சி:2 43/1
வல்லி என ஒரு கொல்லிமலை-தனில் வல்லி அவளினும் மெல்லி இவள் என – குற்-குறவஞ்சி:2 119/2
மன்னர்-தாம் இவள் மேல் மயல் சொல்லிவிட்டதோ – குற்-குறவஞ்சி:2 223/27
இத்தனை குறிகளில் இவள் குறி இது என – குற்-குறவஞ்சி:2 223/31

மேல்

இவன் (5)

புரிநூலின் மார்பன் இவன் அயன் என்பார் அயன் ஆகில் – குற்-குறவஞ்சி:2 17/1
ஈசன் இவன் திரிகூடராசனே என்பார் – குற்-குறவஞ்சி:2 19/2
நிருபன் இவன் நல் நகர தெருவிலே நெடுநேரம் – குற்-குறவஞ்சி:2 23/1
பை வளைத்து கிடக்கும் இவன் மெய் வளையும் பாம்புகட்கு – குற்-குறவஞ்சி:2 25/1
இவ் வளை கை தோள் அழுந்த இவன் மார்பில் அழுந்தாமல் – குற்-குறவஞ்சி:2 26/1

மேல்

இளம் (1)

கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர் – குற்-குறவஞ்சி:2 132/1

மேல்

இளம்பிறை (1)

விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1

மேல்

இளைய (1)

கொல்லிமலை எனக்கு இளைய செல்லிமலை அம்மே – குற்-குறவஞ்சி:2 145/1

மேல்

இறக்கும் (1)

இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/3

மேல்

இறங்கும் (2)

சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே – குற்-குறவஞ்சி:2 79/4
சூழ மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலை பருகிய வாளை – குற்-குறவஞ்சி:2 156/1

மேல்

இறுக்கி (2)

தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/2
உலைந்த கண்ணியை இறுக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 295/1

மேல்

இறுக்கிக்கொண்டு (1)

தொக்கா கச்சை இறுக்கிக்கொண்டு துள்ளு மீசை முறுக்கிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/3

மேல்

இறுக (1)

தார் ஆடும் குன்றி வடத்தை ஒதுக்கி தட மார்பு இறுக தழுவ வந்தால் அவள் – குற்-குறவஞ்சி:2 331/1

மேல்

இறையவர் (2)

எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று – குற்-குறவஞ்சி:2 53/2
இ குறி பொய்யாது என்றே இறையவர் திரிகூடத்தில் – குற்-குறவஞ்சி:2 222/3

மேல்

இறையோனை (2)

நிறை நாழி அளந்துவைப்பாய் இறையோனை கரம்குவிப்பாய் அம்மே குறி – குற்-குறவஞ்சி:2 210/1
மைந்தர் எனும் இறையோனை மறையோனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 400/2

மேல்

இறைவர் (1)

சத்திபீடத்து இறைவர் நல் நகர்க்குள்ளே வந்த – குற்-குறவஞ்சி:2 216/1

மேல்

இன் (2)

இன் நகை மடவார்க்கு இடதுகை பார்த்து – குற்-குறவஞ்சி:2 115/36
இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களை கேட்டதும் சங்கத்தார் சாட்சி – குற்-குறவஞ்சி:2 197/4

மேல்

இன்ப (1)

விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/4

மேல்

இன்பம் (1)

சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில் – குற்-குறவஞ்சி:2 313/3

மேல்

இன்றி (2)

தாகம் இன்றி பூணேனே கையில் சரி வளையும் காணேனே – குற்-குறவஞ்சி:2 55/4
பின்னம் இன்றி கூழ் எனினும் கொண்டுவா அம்மே வந்தால் – குற்-குறவஞ்சி:2 201/1

மேல்

இன்று (2)

நேற்றைக்கு எல்லாம் குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் – குற்-குறவஞ்சி:2 90/1
இன்று வரை மேல் குளிரும் காய்ச்சலும் உண்டோ பின்னை – குற்-குறவஞ்சி:2 232/1

மேல்

இன்னம் (3)

மன்னவர் குற்றாலர் செய்தி இன்னம் இன்னம் கேளாயோ மானே அவர் – குற்-குறவஞ்சி:2 79/1
மன்னவர் குற்றாலர் செய்தி இன்னம் இன்னம் கேளாயோ மானே அவர் – குற்-குறவஞ்சி:2 79/1
இன்னம் பருத்தால் இடை பொறுக்கமாட்டாதே – குற்-குறவஞ்சி:2 122/4

மேல்

இன்னும் (1)

மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது – குற்-குறவஞ்சி:2 289/4

மேல்

இனங்கள் (3)

செல் இனங்கள் முழவு கொட்ட மயில் இனங்கள் ஆடும் – குற்-குறவஞ்சி:2 148/1
செல் இனங்கள் முழவு கொட்ட மயில் இனங்கள் ஆடும் – குற்-குறவஞ்சி:2 148/1
சங்க வீதியில் பரந்து சங்கு இனங்கள் மேயும் – குற்-குறவஞ்சி:2 174/1

மேல்

இனி (10)

மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டு ஓட இனி
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/2,3
என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே – குற்-குறவஞ்சி:2 86/4
மேல் இனி வரும் குறி வேண்டுவார் மனக்குறி – குற்-குறவஞ்சி:2 115/38
கீர்த்தி விசேடம் பெரிய கிளை விசேடத்தை இனி கிளத்துவாயே – குற்-குறவஞ்சி:2 180/4
இடிக்குது குறளி அம்மே இனி குறிசொல்ல கேளே – குற்-குறவஞ்சி:2 224/4
கைந்நொடியில் பொன் இதழி மாலை வரும் காண் இனி
கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே – குற்-குறவஞ்சி:2 247/1,2
நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி
பேறான சூளை மருந்தாகிலும் பிறர் பேசாமல் வாடை பொடியாகிலும் அரை – குற்-குறவஞ்சி:2 300/2,3
தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4
தொகையாய் சொன்னேன் இனி சொல்லக்கூடாது ஒரு வகையாய் வருகுது என்னை மயக்குது ஐயே – குற்-குறவஞ்சி:2 336/2
பாதம் நோக நிற்பது ஏது பாவம் இனி
கூதலோ கொடிது காதலோ கடினம் – குற்-குறவஞ்சி:2 351/2,3

மேல்

இனித்து (1)

கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல் – குற்-குறவஞ்சி:2 34/3

மேல்

இனியானோ (1)

முனி பரவும் இனியானோ வேத முழுப்பலவின் கனி-தானோ – குற்-குறவஞ்சி:2 54/1

மேல்