சொ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கநாயகர் 1
சொந்த 1
சொரிமுத்தே 1
சொரியும் 1
சொருகி 1
சொரூபமாக 1
சொல் 5
சொல்ல 8
சொல்லக்கூடாது 1
சொல்லடா 2
சொல்லடி 3
சொல்லத்தக்கதோ 1
சொல்லரிய 1
சொல்லவும் 1
சொல்லாமல் 1
சொல்லாமலே 1
சொல்லானோ 1
சொல்லி 8
சொல்லிவிட்டதோ 1
சொல்லினாள் 1
சொல்லு 1
சொல்லுதே 1
சொல்லும் 3
சொல்லுவதும் 1
சொல்லுவள் 1
சொல்லுவேன் 3
சொல்லை 1
சொல்வாயே 2
சொல்வாளே 1
சொல்வேன் 1
சொல 3
சொன்ன 7
சொன்னவர்க்கு 1
சொன்னவன் 1
சொன்னவனை 1
சொன்னாரோ 1
சொன்னேன் 2

சொக்கநாயகர் (1)

நல் பாண்டிராச்சியம் உய்ய சொக்கநாயகர் வந்து மணக்கோலம் செய்ய – குற்-குறவஞ்சி:2 197/3

மேல்

சொந்த (1)

சொந்த மலை எந்த மலை அந்த மலை வளம் எனக்கு சொல் என்றாளே – குற்-குறவஞ்சி:2 128/4

மேல்

சொரிமுத்தே (1)

ஆரியங்காவா அருள் சொரிமுத்தே
நேரிய குளத்தூர் நின்ற சேவகனே – குற்-குறவஞ்சி:2 223/9,10

மேல்

சொரியும் (1)

சூழ மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலை பருகிய வாளை – குற்-குறவஞ்சி:2 156/1

மேல்

சொருகி (1)

சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி தென் – குற்-குறவஞ்சி:2 380/1

மேல்

சொரூபமாக (1)

சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக
விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே – குற்-குறவஞ்சி:1 3/3,4

மேல்

சொல் (5)

சொல் நயத்தினை நாடிநாடி தோழியருடன் கூடிக்கூடி – குற்-குறவஞ்சி:2 47/2
படி ஏழு உடையோர் திரிகூட படை மா மதனை பயிற்றிய சொல்
அடியேன் சகியாய் இருக்கையிலே அது நான் பயின்றால் ஆகாதோ – குற்-குறவஞ்சி:2 72/1,2
சொந்த மலை எந்த மலை அந்த மலை வளம் எனக்கு சொல் என்றாளே – குற்-குறவஞ்சி:2 128/4
துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில் – குற்-குறவஞ்சி:2 224/3
சொல் அரிய குறுங்கை களாக்காடு தேடி தொன் மருதூர் அத்தாளநல்லூர் தேடி – குற்-குறவஞ்சி:2 321/3

மேல்

சொல்ல (8)

கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
செம்மையா குறிகள் சொல்ல அம்மே அம்மே என்று செல்ல – குற்-குறவஞ்சி:2 125/2
செண்பகாடவி துறையின் பண்பு சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 168/2
அம்மே அம்மே சொல்ல வாராய் வெள்ளச்சி அம்மே உனக்கு – குற்-குறவஞ்சி:2 203/1
சொல்ல கேளாய் குறிசொல்ல கேளாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 225/1
மோகன பசுங்கிளியே சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 226/2
சொல்ல பயந்திருந்தேன் சொல்லுவேன் முன்னே – குற்-குறவஞ்சி:2 234/2
பார்க்கில் அதிசயம் தோணுது சொல்ல
பயமா இருக்குதடி சிங்கி பயமா இருக்குதடி – குற்-குறவஞ்சி:2 357/1,2

மேல்

சொல்லக்கூடாது (1)

தொகையாய் சொன்னேன் இனி சொல்லக்கூடாது ஒரு வகையாய் வருகுது என்னை மயக்குது ஐயே – குற்-குறவஞ்சி:2 336/2

மேல்

சொல்லடா (2)

அஞ்சாமல் சொல்லடா சிங்கா அஞ்சாமல் சொல்லடா – குற்-குறவஞ்சி:2 358/2
அஞ்சாமல் சொல்லடா சிங்கா அஞ்சாமல் சொல்லடா – குற்-குறவஞ்சி:2 358/2

மேல்

சொல்லடி (3)

எந்த வகை என்று குறி கண்டு சொல்லடி – குற்-குறவஞ்சி:2 232/2
தாரும் சொல்லி பேரும் சொல்லி ஊரும் சொல்லடி – குற்-குறவஞ்சி:2 238/2
கண் மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி பெரும் – குற்-குறவஞ்சி:2 242/1

மேல்

சொல்லத்தக்கதோ (1)

சன்னிதி விசேஷம் சொல்லத்தக்கதோ மிக்க தோகாய் – குற்-குறவஞ்சி:2 86/3

மேல்

சொல்லரிய (1)

சொல்லரிய சாமிமலை மாமி மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 147/1

மேல்

சொல்லவும் (1)

சொன்னவர்க்கு இணங்க வார்த்தை சொல்லவும் படித்துக்கொண்டாய் – குற்-குறவஞ்சி:2 86/2

மேல்

சொல்லாமல் (1)

இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி எங்கே நடந்தாய் நீ – குற்-குறவஞ்சி:2 355/1,2

மேல்

சொல்லாமலே (1)

பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதை பிக்கு சொல்லாமலே கொக்கு படுக்கவே – குற்-குறவஞ்சி:2 291/4

மேல்

சொல்லானோ (1)

நில்லானோ ஒரு வசனம் சொல்லானோ என்பார் – குற்-குறவஞ்சி:2 23/2

மேல்

சொல்லி (8)

தூது நீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன் போய் – குற்-குறவஞ்சி:2 87/1
தூது நீ சொல்லி வாராய் – குற்-குறவஞ்சி:2 87/2
மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி
மரு மாலை வாங்கியே வாராய் சகியே – குற்-குறவஞ்சி:2 108/1,2
தாரும் சொல்லி பேரும் சொல்லி ஊரும் சொல்லடி – குற்-குறவஞ்சி:2 238/2
தாரும் சொல்லி பேரும் சொல்லி ஊரும் சொல்லடி – குற்-குறவஞ்சி:2 238/2
அங்கம் எலாம் சொல்லி அடையாளம் சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 332/4
முலையை ஒழிக்கப்பண்ணுவேன் ஒழித்த பேர்க்கு மோகினி மந்திரம் சொல்லி வரப்பண்ணுவேன் – குற்-குறவஞ்சி:2 340/2
சாற்றும் முன் மருந்து போல சகலர்க்கும் குறிகள் சொல்லி
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/3,4

மேல்

சொல்லிவிட்டதோ (1)

மன்னர்-தாம் இவள் மேல் மயல் சொல்லிவிட்டதோ
கன்னி-தான் ஒருவர் மேல் காமித்த குறியோ – குற்-குறவஞ்சி:2 223/27,28

மேல்

சொல்லினாள் (1)

கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல் – குற்-குறவஞ்சி:2 34/3

மேல்

சொல்லு (1)

துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில் – குற்-குறவஞ்சி:2 224/3

மேல்

சொல்லுதே (1)

தும்மலும் காகமும் இடம் சொல்லுதே அம்மே சரம் – குற்-குறவஞ்சி:2 205/1

மேல்

சொல்லும் (3)

அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர் – குற்-குறவஞ்சி:2 34/1
ஆகம் எல்லாம் பசந்தேனே பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே – குற்-குறவஞ்சி:2 55/3
கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும்
சீர் வளர் குறியின் மார்க்கம் தெரியவே செப்புவாயே – குற்-குறவஞ்சி:2 193/3,4

மேல்

சொல்லுவதும் (1)

ஊரும் பேரும் சொல்லுவதும் குறிமுகமோ – குற்-குறவஞ்சி:2 239/2

மேல்

சொல்லுவள் (1)

கைக்குறியும் கண்டு சொல்லுவள்
திக்கில் அடங்காது குறி இக்கில் அடங்காது மொழி – குற்-குறவஞ்சி:2 345/2,3

மேல்

சொல்லுவேன் (3)

என்ன குறியாகிலும் நான் சொல்லுவேன் அம்மே சதுர் – குற்-குறவஞ்சி:2 199/1
சொல்ல பயந்திருந்தேன் சொல்லுவேன் முன்னே – குற்-குறவஞ்சி:2 234/2
பின்னையும்-தான் உனக்காக சொல்லுவேன் அம்மே அவன் – குற்-குறவஞ்சி:2 240/1

மேல்

சொல்லை (1)

பேரினால் எனது சொல்லை பெரியவர் தள்ளார் தாமே – குற்-குறவஞ்சி:1 9/4

மேல்

சொல்வாயே (2)

அங்கம் எலாம் சொல்லி அடையாளம் சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 332/4
கூட்டுவிக்கும் பேர்களுக்கு கூலி என்ன சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 338/4

மேல்

சொல்வாளே (1)

கூழை உண்ட வாயால் குறியை விண்டு சொல்வாளே – குற்-குறவஞ்சி:2 217/4

மேல்

சொல்வேன் (1)

துரைப்பெண்ணே வசந்தவல்லி சொன்ன பேதைமைக்கு என் சொல்வேன்
வரைப்பெண்ணுக்கு ஆசை பூண்டு வளர் சங்க மறுகினூடே – குற்-குறவஞ்சி:2 78/2,3

மேல்

சொல (3)

வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
ஆசை சொல கூடாது கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 105/2
அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல – குற்-குறவஞ்சி:2 118/2

மேல்

சொன்ன (7)

துரைப்பெண்ணே வசந்தவல்லி சொன்ன பேதைமைக்கு என் சொல்வேன் – குற்-குறவஞ்சி:2 78/2
நாலுமறை பழம் பாட்டும் மூவர் சொன்ன திருப்பாட்டும் – குற்-குறவஞ்சி:2 103/1
தென்காசி ஆலயம் ஓங்க குறி செண்பகமாறற்கு சொன்ன பேர் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 197/2
விம்மு முலை கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே – குற்-குறவஞ்சி:2 204/1
சன்னையாக சொன்ன குறி சாதிப்பாயானால் அவன் – குற்-குறவஞ்சி:2 238/1
ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல் – குற்-குறவஞ்சி:2 318/2
தார் வாழி திரிகூடத்தார் வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன
பேர் வாழி அரசர் செங்கோல் வாழி நல் நகர பேரால் ஓங்கும் – குற்-குறவஞ்சி:2 410/2,3

மேல்

சொன்னவர்க்கு (1)

சொன்னவர்க்கு இணங்க வார்த்தை சொல்லவும் படித்துக்கொண்டாய் – குற்-குறவஞ்சி:2 86/2

மேல்

சொன்னவன் (1)

நல் நகர் குற்றாலத்து அந்தாதி சொன்னவன் நள்ளார் தொழும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 280/4

மேல்

சொன்னவனை (1)

ஆதி மறை சொன்னவனை அனைத்து உயிர்க்கும் முன்னவனை – குற்-குறவஞ்சி:2 409/1

மேல்

சொன்னாரோ (1)

எண்ணிலா பகையெடுத்தார் இ நகரை நல் நகர் என்று எவர் சொன்னாரோ
அண்ணலார் திரிகூடநாதர் என்பது என்னளவும் அமைந்திடாரோ – குற்-குறவஞ்சி:2 67/2,3

மேல்

சொன்னேன் (2)

என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே – குற்-குறவஞ்சி:2 86/4
தொகையாய் சொன்னேன் இனி சொல்லக்கூடாது ஒரு வகையாய் வருகுது என்னை மயக்குது ஐயே – குற்-குறவஞ்சி:2 336/2

மேல்