திருக்குற்றாலக் குறவஞ்சி நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 1245 7889 42 64 7995 4542

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, கன்னல், வேள் என்பன தனித்தனிச் சொற்கள்.ஆனால் கன்னல்வேள் என்பது ஒரே சொல்லாய்க் காமனைக் குறிக்கும் இது கன்னல்_வேள் என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் கன்னல், வேள் ஆகிய இரண்டும். எனவே கன்னல்_வேளுக்கு என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் கன்னல், வேளுக்கு, கன்னல்_வேளுக்கு ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

கன்னல் (1)
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4

வேளுக்கு (1)
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4

கன்னல்_வேளுக்கு (1)
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

காடு-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், காடு-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

காடு-தொறும் (1)
காடு-தொறும் ஓடி வரையாடு குதி பாயும் – குற்-குறவஞ்சி:2 139/1

-தொறும் (4)
வாசல்-தொறும் காத்திருக்கும் கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 100/2
காடு-தொறும் ஓடி வரையாடு குதி பாயும் – குற்-குறவஞ்சி:2 139/1
வான் இரவி முழைகள்-தொறும் நுழையும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 143/2
வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால் – குற்-குறவஞ்சி:2 303/3

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

காண்பது (14)
நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1
நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1
தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2
தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2
வீங்க காண்பது மங்கையர் கொங்கை வெடிக்க காண்பது கொல்லையின் முல்லை – குற்-குறவஞ்சி:2 161/3
வீங்க காண்பது மங்கையர் கொங்கை வெடிக்க காண்பது கொல்லையின் முல்லை – குற்-குறவஞ்சி:2 161/3
ஏங்க காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 161/4
ஓட காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்க காண்பது யோகியர் உள்ளம் – குற்-குறவஞ்சி:2 162/1
ஓட காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்க காண்பது யோகியர் உள்ளம் – குற்-குறவஞ்சி:2 162/1
வாட காண்பது மின்னார் மருங்கு வருந்த காண்பது சூலுளை சங்கு – குற்-குறவஞ்சி:2 162/2
வாட காண்பது மின்னார் மருங்கு வருந்த காண்பது சூலுளை சங்கு – குற்-குறவஞ்சி:2 162/2
போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/3
போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/3
தேட காண்பது நல் அறம் கீர்த்தி திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 162/4