உ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உகந்திருக்கும் 1
உங்கள் 1
உங்களை 1
உட்கிடை 1
உடல் 2
உடன் 1
உடுக்கு 1
உடுத்த 1
உடுத்தினேன் 2
உடுத்து 1
உடை 5
உடை-தனை 1
உடைத்து 1
உடைய 3
உடையர் 1
உடையவர் 1
உடையார் 2
உடையானை 1
உடையில் 1
உடையினாள் 1
உடையோர் 1
உண்ட 1
உண்டாமே 1
உண்டாமோ 1
உண்டானால் 1
உண்டு 2
உண்டோ 6
உண்மை 1
உதடு 1
உதவாய் 1
உதிக்கின்ற 1
உதித்த 1
உதித்து 1
உதைப்பள் 1
உதைபட்டு 1
உந்தியாள் 1
உபகாரமே 1
உபசரிப்பார் 1
உய்ய 1
உயர் 2
உயர்ந்த 3
உயிர்க்கும் 1
உரித்தவர் 1
உரித்தவனை 1
உரிய 1
உரியார் 1
உருக்க 1
உருக்கவே 1
உருக்கிப்போட்டார் 1
உருக்குது 1
உருக்குமே 1
உருகவே 1
உருகாதோ 1
உருகுதே 1
உருகுதையோ 1
உருவசி 1
உருவசியும் 1
உருவார்க்கும் 1
உருவான 1
உருவிலி 1
உரைக்க 1
உரைக்கும் 2
உரைத்த 3
உரைத்தாய் 1
உரைத்து 2
உரைப்பது 1
உரைப்பார் 1
உரையால் 1
உல்லாச 3
உலக 1
உலகம் 1
உலகு 4
உலவு 1
உலவும் 1
உலாவும் 1
உலைந்த 1
உள் 1
உள்வாய் 1
உள்ள 5
உள்ளம் 1
உள்ளாக்கி 1
உள்ளாகும் 1
உள்ளான் 1
உள்ளானும் 4
உள்ளோர் 1
உள 1
உளத்தை 1
உளப்பிப்போட்டாய் 1
உற்ற 1
உற்றதொரு 1
உற்று 1
உறக்கமும் 3
உறங்க 1
உறங்கும் 1
உறவு 1
உறுக்கி 1
உறை 5
உறைக்கிணறு 1
உறைவார் 1
உறைவானை 1
உன் 9
உன்-பால் 1
உன்றன் 1
உன்னுடைய 1
உன்னை 5
உனக்காக 1
உனக்கு 6
உனக்கும் 1
உனது 2
உனை 2

உகந்திருக்கும் (1)

உகந்திருக்கும் கொலு வேளை கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 96/2

மேல்

உங்கள் (1)

பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார் – குற்-குறவஞ்சி:2 332/2

மேல்

உங்களை (1)

மிக்கதோர் குறிக்கா வேண்டினேன் உங்களை
வந்து முன் இருந்து வசந்த மோகினி பெண் – குற்-குறவஞ்சி:2 223/16,17

மேல்

உட்கிடை (1)

துய்ய குன்றக்குடி வாழவல்லான்குடி சுரண்டையூர் முதல் உட்கிடை சுற்றியே – குற்-குறவஞ்சி:2 274/3

மேல்

உடல் (2)

தான் உடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடம் சேர்த்து – குற்-குறவஞ்சி:2 59/2
கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2

மேல்

உடன் (1)

பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன்
தீர கனிய மயக்கி முயக்கியே சிங்கார மோகனம் சிங்கி கொண்டாள் அந்த – குற்-குறவஞ்சி:2 329/3,4

மேல்

உடுக்கு (1)

கொட்டிய உடுக்கு கோடாங்கி குறி முதல் – குற்-குறவஞ்சி:2 115/29

மேல்

உடுத்த (1)

உடுத்த திருமருங்கு அசைய மலர் அயன் கொடுத்த பரிகலம் இசையவே – குற்-குறவஞ்சி:2 8/4

மேல்

உடுத்தினேன் (2)

நெறிபிடித்து உடுத்தினேன் சிங்கா நெறிபிடித்து உடுத்தினேன் – குற்-குறவஞ்சி:2 370/2
நெறிபிடித்து உடுத்தினேன் சிங்கா நெறிபிடித்து உடுத்தினேன் – குற்-குறவஞ்சி:2 370/2

மேல்

உடுத்து (1)

பூசி உடுத்து முடித்து வளையிட்டு பொட்டிட்டு மையிட்டு பொன்னிட்டு பூவிட்டு – குற்-குறவஞ்சி:2 301/1

மேல்

உடை (5)

இரு தனத்து ரவிக்கைதனை அரையில் உடை தொடுவார் பின் – குற்-குறவஞ்சி:2 21/1
இந்த உடை ரவிக்கை என சந்த முலைக்கு இடுவார் – குற்-குறவஞ்சி:2 21/2
சடைகொண்டான் உடை தான் கொண்டு தன் உடை கொடுத்தாள் ஐயன் – குற்-குறவஞ்சி:2 56/3
சடைகொண்டான் உடை தான் கொண்டு தன் உடை கொடுத்தாள் ஐயன் – குற்-குறவஞ்சி:2 56/3
உடை கொண்ட வழக்குத்தானோ ஊர்கின்ற தேர் கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 56/4

மேல்

உடை-தனை (1)

சேலை உடை-தனை சற்றே நெகிழ்க்கவா சிங்கி சும்மா – குற்-குறவஞ்சி:2 388/1

மேல்

உடைத்து (1)

தாங்காய் முப்பழம் படைத்தாய் தேங்காயும் உடைத்து வைப்பாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 208/2

மேல்

உடைய (3)

உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே – குற்-குறவஞ்சி:2 9/4
மெய் வளையும் மறு உடைய தெய்வநாயகன் முடித்த – குற்-குறவஞ்சி:2 24/1
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1

மேல்

உடையர் (1)

திக்குமே உடையர் ஆவர் செக மகராசி நீயே – குற்-குறவஞ்சி:2 222/2

மேல்

உடையவர் (1)

ஊர் மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி உடையவர் குற்றாலர் பூசை நைவேத்தியம் – குற்-குறவஞ்சி:2 283/2

மேல்

உடையார் (2)

மூக்கு எழுந்த முத்து_உடையார் அணிவகுக்கும் நல் நகர மூதூர் வீதி – குற்-குறவஞ்சி:2 4/1
குழல்மொழி_இடத்தார் குறும்பலா_உடையார் – குற்-குறவஞ்சி:2 223/1

மேல்

உடையானை (1)

கொற்ற மதி சடையானை குறும்பலா உடையானை
வெற்றி மழு படையானை விடையானை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 398/1,2

மேல்

உடையில் (1)

நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 337/2

மேல்

உடையினாள் (1)

அடுக்கு வன்ன சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் மட – குற்-குறவஞ்சி:2 37/3

மேல்

உடையோர் (1)

படி ஏழு உடையோர் திரிகூட படை மா மதனை பயிற்றிய சொல் – குற்-குறவஞ்சி:2 72/1

மேல்

உண்ட (1)

கூழை உண்ட வாயால் குறியை விண்டு சொல்வாளே – குற்-குறவஞ்சி:2 217/4

மேல்

உண்டாமே (1)

பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தை படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே – குற்-குறவஞ்சி:1 8/4

மேல்

உண்டாமோ (1)

பெற்றார் தாம் நல் நகர தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ
வற்றாத வட அருவி சாரல் நீங்கி வடகாசி குமரி மட்டும் அலைந்த சிங்கன் – குற்-குறவஞ்சி:2 326/2,3

மேல்

உண்டானால் (1)

கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால்
கொங்கண சிங்கி-தன்னை கூட்டிவா காட்டுவேனே – குற்-குறவஞ்சி:2 319/3,4

மேல்

உண்டு (2)

வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
தெய்வம் உனக்கு உண்டு காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 206/2

மேல்

உண்டோ (6)

விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார் – குற்-குறவஞ்சி:2 18/2
விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார் – குற்-குறவஞ்சி:2 18/2
வல்லார்க்கு மால் கொண்டால் பொல்லாப்பு என் மேல் உண்டோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/4
மையலும் கிறுகிறுப்பும் தையலர்க்கு உண்டோ – குற்-குறவஞ்சி:2 231/2
இன்று வரை மேல் குளிரும் காய்ச்சலும் உண்டோ பின்னை – குற்-குறவஞ்சி:2 232/1
நுங்களில் பிரிந்தால் என்ன நூவனுக்கு உண்டோ நட்டம் – குற்-குறவஞ்சி:2 319/2

மேல்

உண்மை (1)

கண் மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி பெரும் – குற்-குறவஞ்சி:2 242/1

மேல்

உதடு (1)

துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில் – குற்-குறவஞ்சி:2 224/3

மேல்

உதவாய் (1)

வள்ளிநாயகியே வந்து எனக்கு உதவாய்
அப்பனே மேலை வாசலில் அரசே – குற்-குறவஞ்சி:2 223/6,7

மேல்

உதிக்கின்ற (1)

கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு – குற்-குறவஞ்சி:2 159/2

மேல்

உதித்த (1)

அல்லார்க்கும் முன் உதித்த செல்வர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 190/2

மேல்

உதித்து (1)

முன் உதித்து வந்தவரை தமையன் என உரைப்பார் – குற்-குறவஞ்சி:2 191/1

மேல்

உதைப்பள் (1)

ஆ என்று ஒருக்கால் இரு கால் உதைப்பள் அதுக்கு கிடந்து கொதிக்குது என் பேய் மனம் – குற்-குறவஞ்சி:2 330/4

மேல்

உதைபட்டு (1)

வாயில் அடிபட்டு இடிபட்டு உதைபட்டு வானவர் தானவர் போனது போலவே – குற்-குறவஞ்சி:2 312/2

மேல்

உந்தியாள் (1)

ஒல்லும் கருத்தர் மன கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில் – குற்-குறவஞ்சி:2 36/3

மேல்

உபகாரமே (1)

தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/3,4

மேல்

உபசரிப்பார் (1)

வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல் – குற்-குறவஞ்சி:2 156/3

மேல்

உய்ய (1)

நல் பாண்டிராச்சியம் உய்ய சொக்கநாயகர் வந்து மணக்கோலம் செய்ய – குற்-குறவஞ்சி:2 197/3

மேல்

உயர் (2)

முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே உயர்
சந்திர சூடர் குறும் பலவு ஈசுரர் சங்கு அணி வீதியிலே மணி – குற்-குறவஞ்சி:2 43/2,3
உயர் மதுரை மாறனுக்கும் செய மருகர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 183/2

மேல்

உயர்ந்த (3)

ஊருணிப்பற்றும் திருப்பணி நீளம் உயர்ந்த புளியங்குளம் துவரைக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/2
ஊர் மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி உடையவர் குற்றாலர் பூசை நைவேத்தியம் – குற்-குறவஞ்சி:2 283/2
ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே – குற்-குறவஞ்சி:2 371/1

மேல்

உயிர்க்கும் (1)

ஆதி மறை சொன்னவனை அனைத்து உயிர்க்கும் முன்னவனை – குற்-குறவஞ்சி:2 409/1

மேல்

உரித்தவர் (1)

கைவேழம் உரித்தவர் குற்றாலர் கொலு அமரருக்கும் காணொணாதால் – குற்-குறவஞ்சி:2 92/3

மேல்

உரித்தவனை (1)

கட கரியை உரித்தவனை கலை மதியம் தரித்தவனை – குற்-குறவஞ்சி:2 408/1

மேல்

உரிய (1)

ஒரு குழை சங்கம் ஒரு குழை தங்கம் உரிய விநோதர் திரிகூடநாதர் – குற்-குறவஞ்சி:2 257/1

மேல்

உரியார் (1)

கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1

மேல்

உருக்க (1)

கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/2

மேல்

உருக்கவே (1)

ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலக மேழையும் உருக்கவே
மத்தளம் புயல் போல் முழங்கிட மயில்_அனார் நடம் பெருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/2,3

மேல்

உருக்கிப்போட்டார் (1)

உருக்கிப்போட்டார் கண்டவுடனே தான் – குற்-குறவஞ்சி:2 52/2

மேல்

உருக்குது (1)

நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 337/2

மேல்

உருக்குமே (1)

பீட வாசர் திரிகூடராசர் சித்தம் உருக்குமே – குற்-குறவஞ்சி:2 38/4

மேல்

உருகவே (1)

முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியை பாடி – குற்-குறவஞ்சி:1 6/2

மேல்

உருகாதோ (1)

பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/4

மேல்

உருகுதே (1)

கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2

மேல்

உருகுதையோ (1)

வாகனை கண்டு உருகுதையோ ஒரு மயக்கமதாய் வருகுதையோ – குற்-குறவஞ்சி:2 55/1

மேல்

உருவசி (1)

உருவசி அரம்பை கருவமும் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/25

மேல்

உருவசியும் (1)

உல்லாச மாது ரதி போல் வசந்தவல்லி உருவசியும் நாணவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 32/2

மேல்

உருவார்க்கும் (1)

அன்ன_வடிவெடுத்தவர்க்கும் ஏன_உருவார்க்கும் – குற்-குறவஞ்சி:2 190/1

மேல்

உருவான (1)

நாதம் மூன்று உருவான குற்றாலநாதர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 160/4

மேல்

உருவிலி (1)

ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல் – குற்-குறவஞ்சி:2 318/2

மேல்

உரைக்க (1)

திரிகூட பதி இருக்கும் திருநாட்டு வளம் உரைக்க தெவிட்டாது அம்மே – குற்-குறவஞ்சி:2 163/2

மேல்

உரைக்கும் (2)

எக்குறி ஆயினும் இமைப்பினில் உரைக்கும்
மை குறி விழி குறவஞ்சி வந்தனளே – குற்-குறவஞ்சி:2 115/40,41
நான் உரைப்பது அரிது உலகம் தான் உரைக்கும் அம்மே – குற்-குறவஞ்சி:2 192/2

மேல்

உரைத்த (3)

முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியை பாடி – குற்-குறவஞ்சி:1 6/2
ஆன துறை அயன் உரைத்த தானம் அறியாமல் – குற்-குறவஞ்சி:2 166/1
மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன் – குற்-குறவஞ்சி:2 180/2

மேல்

உரைத்தாய் (1)

தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால – குற்-குறவஞ்சி:2 180/1

மேல்

உரைத்து (2)

காட்டு வளம் குழல் காட்டும் மலை வளம்தான் நீ உரைத்து காட்டுவானேன் – குற்-குறவஞ்சி:2 153/2
நாட்டு வளம் எனக்கு உரைத்து குற்றால நகர் வளமும் நவிலுவாயே – குற்-குறவஞ்சி:2 153/4

மேல்

உரைப்பது (1)

நான் உரைப்பது அரிது உலகம் தான் உரைக்கும் அம்மே – குற்-குறவஞ்சி:2 192/2

மேல்

உரைப்பார் (1)

முன் உதித்து வந்தவரை தமையன் என உரைப்பார்
மொழிந்தாலும் மொழியலாம் பழுதிலை காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 191/1,2

மேல்

உரையால் (1)

சமனிக்கும் உரையால் சபை எலாம் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/27

மேல்

உல்லாச (3)

உல்லாச மாது ரதி போல் வசந்தவல்லி உருவசியும் நாணவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 32/2
வசந்த உல்லாச வல்லி வல் இக்கு வல்லி பேசி – குற்-குறவஞ்சி:2 82/1
சங்கீத வாரியை இங்கித நாரியை சல்லாபக்காரியை உல்லாச மோகன – குற்-குறவஞ்சி:2 328/2

மேல்

உலக (1)

ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலக மேழையும் உருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/2

மேல்

உலகம் (1)

நான் உரைப்பது அரிது உலகம் தான் உரைக்கும் அம்மே – குற்-குறவஞ்சி:2 192/2

மேல்

உலகு (4)

உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே – குற்-குறவஞ்சி:2 9/4
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3
மும்மை உலகு எங்கும் வெல்ல கொம்மை முலையார்க்கு நல்ல – குற்-குறவஞ்சி:2 125/1
நீடு உலகு எலாம் அளந்த நெடியானும் மயனும் – குற்-குறவஞ்சி:2 403/1

மேல்

உலவு (1)

கள் உலவு கொன்றை அம் தார் கர்த்தர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 297/1

மேல்

உலவும் (1)

எல் உலவும் விந்தை மலை எந்தை மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 146/1

மேல்

உலாவும் (1)

தேரின் மாரன் வசந்தன் உலாவும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 154/4

மேல்

உலைந்த (1)

உலைந்த கண்ணியை இறுக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 295/1

மேல்

உள் (1)

உள் நீரில் கூடல் உறைக்கிணறு செய்வாளே – குற்-குறவஞ்சி:2 109/4

மேல்

உள்வாய் (1)

கான குளத்து உள்வாய் கீழை புதுக்குளம் கற்பூரக்கால்பற்றும் தட்டான்குளச்சுற்றும் – குற்-குறவஞ்சி:2 279/4

மேல்

உள்ள (5)

தக்க பூமிக்கு முன்பு உள்ள நாடு சகல தேவர்க்கும் அன்பு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 158/1
தக்க பூமிக்கு முன்பு உள்ள நாடு சகல தேவர்க்கும் அன்பு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 158/1
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/2

மேல்

உள்ளம் (1)

ஓட காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்க காண்பது யோகியர் உள்ளம்
வாட காண்பது மின்னார் மருங்கு வருந்த காண்பது சூலுளை சங்கு – குற்-குறவஞ்சி:2 162/1,2

மேல்

உள்ளாக்கி (1)

கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற – குற்-குறவஞ்சி:2 267/3

மேல்

உள்ளாகும் (1)

காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3

மேல்

உள்ளான் (1)

கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான்
நல்ல மேற்குலத்தான் இந்த நல் நகர் தலத்தான் ஆக – குற்-குறவஞ்சி:2 207/2,3

மேல்

உள்ளானும் (4)

ஊர்க்குருவிக்கு கண்ணியும் கொண்டு உள்ளானும் வலியானும் எண்ணிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 259/1
உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஓலம்செய்தே கூடி நாலஞ்சு பேதமாய் – குற்-குறவஞ்சி:2 268/3
உள்ளானும் படுமே குளுவா உள்ளானும் படுமே – குற்-குறவஞ்சி:2 295/2
உள்ளானும் படுமே குளுவா உள்ளானும் படுமே – குற்-குறவஞ்சி:2 295/2

மேல்

உள்ளோர் (1)

நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகர தலத்தில் வந்து பெறுவார் பேறு – குற்-குறவஞ்சி:2 326/1

மேல்

உள (1)

எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று – குற்-குறவஞ்சி:2 53/2

மேல்

உளத்தை (1)

ஒழுங்கு கொண்டு உளத்தை விழுங்கு சிறிய ரோம பந்தியாள் – குற்-குறவஞ்சி:2 36/4

மேல்

உளப்பிப்போட்டாய் (1)

உளப்பிப்போட்டாய் குறியை குழப்பிப்போட்டாய் – குற்-குறவஞ்சி:2 230/2

மேல்

உற்ற (1)

கொந்து ஆர் புயத்தான் இராக்கதப்பெருமாள் குற்றாலநாதன் முன் உற்ற சகோதரன் – குற்-குறவஞ்சி:2 282/3

மேல்

உற்றதொரு (1)

உற்றதொரு பனிமலையின் கொற்ற வேந்தனுக்கும் – குற்-குறவஞ்சி:2 183/1

மேல்

உற்று (1)

பெற்ற தாய்தந்தை-தனை உற்று நீ கேட்கில் – குற்-குறவஞ்சி:2 182/1

மேல்

உறக்கமும் (3)

எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும் – குற்-குறவஞ்சி:2 77/3
ஒள்ளிய ஊணும் உறக்கமும் அற்றுவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 77/4
உறங்க உறக்கமும் வாராது மாயம்செய்தாரை – குற்-குறவஞ்சி:2 89/1

மேல்

உறங்க (1)

உறங்க உறக்கமும் வாராது மாயம்செய்தாரை – குற்-குறவஞ்சி:2 89/1

மேல்

உறங்கும் (1)

வெற்றி பெறும் பாற்கடலில் புற்றரவில் உறங்கும்
வித்தகர்க்கு கண்ணான மைத்துனர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 184/1,2

மேல்

உறவு (1)

உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 149/2

மேல்

உறுக்கி (1)

தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/2

மேல்

உறை (5)

அவனி போற்றிய குறும்பலா உறை மவுனநாயகர் எவனநாயகர் – குற்-குறவஞ்சி:2 6/1
பற்றாக பரமர் உறை குற்றால தலமே – குற்-குறவஞ்சி:2 178/2
செல்வர் உறை சிவசயிலம் பாவநாசம் திரிகூட சிங்கி-தனை தேடுவானே – குற்-குறவஞ்சி:2 321/4
காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரிய பூவையை ஆரிய பாவையை – குற்-குறவஞ்சி:2 331/4
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4

மேல்

உறைக்கிணறு (1)

உள் நீரில் கூடல் உறைக்கிணறு செய்வாளே – குற்-குறவஞ்சி:2 109/4

மேல்

உறைவார் (1)

தலை-தனில் பிறையார் பலவினில் உறைவார் தகையினை வணங்கார் சிகை-தனை பிடித்தே – குற்-குறவஞ்சி:2 256/1

மேல்

உறைவானை (1)

குற்றாலத்து உறைவானை குருபரனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 407/2

மேல்

உன் (9)

சந்த முலை துவளும் இடை தவள நகை பவள இதழ் தையலே உன்
சொந்த மலை எந்த மலை அந்த மலை வளம் எனக்கு சொல் என்றாளே – குற்-குறவஞ்சி:2 128/3,4
தோட்டு வளம் புரி காதர் திரிகூடமலை வளரும் தோகையே உன்
நாட்டு வளம் எனக்கு உரைத்து குற்றால நகர் வளமும் நவிலுவாயே – குற்-குறவஞ்சி:2 153/3,4
காகம் அணுகாத திரிகூடமலைக்கே உன் மேல் – குற்-குறவஞ்சி:2 235/1
வம்பாக வந்த உன் சத்தத்தை கேட்டல்லோ – குற்-குறவஞ்சி:2 299/3
சிங்கம் எலாம் ஒத்த துடி சிங்கா உன் சிங்கி-தனக்கு – குற்-குறவஞ்சி:2 332/3
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/4
மாண்ட தவளை உன் காலிலே கட்டிய – குற்-குறவஞ்சி:2 365/1
நாக்கு துடிக்குது உன் நல் வாய் இதழுக்கு சிங்கி உன்றன் – குற்-குறவஞ்சி:2 390/1
சந்தேகமோ உன் தலை பேனை கேளடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 392/2

மேல்

உன்-பால் (1)

நிசம் தரும் திருக்குற்றால நிரந்தரமூர்த்தி உன்-பால்
இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/3,4

மேல்

உன்றன் (1)

நாக்கு துடிக்குது உன் நல் வாய் இதழுக்கு சிங்கி உன்றன்
வாய்க்கு ருசிப்பது மாலை கள் அல்லவோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 390/1,2

மேல்

உன்னுடைய (1)

மோகினியே உன்னுடைய கிறுகிறுப்பை எல்லாம் அவன் – குற்-குறவஞ்சி:2 236/1

மேல்

உன்னை (5)

உன்னை போல் எனக்கு அவன் அறிமுகமோ அம்மே – குற்-குறவஞ்சி:2 239/1
நல் நகரில் ஈசர் உன்னை மேவ வருவார் இந்த – குற்-குறவஞ்சி:2 246/1
சிரித்தனை சிங்கா உன்னை சிரித்தது காம பேயே – குற்-குறவஞ்சி:2 316/4
விந்தைக்காரி உன்னை வெல்லக்கூடாதடி சிங்கி அது – குற்-குறவஞ்சி:2 392/1
தென்னாடு எல்லாம் உன்னை தேடி திரிந்தேனே சிங்கி அப்பால் – குற்-குறவஞ்சி:2 393/1

மேல்

உனக்காக (1)

பின்னையும்-தான் உனக்காக சொல்லுவேன் அம்மே அவன் – குற்-குறவஞ்சி:2 240/1

மேல்

உனக்கு (6)

வேகம் உனக்கு ஆனது என்ன வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/4
அம்மே அம்மே சொல்ல வாராய் வெள்ளச்சி அம்மே உனக்கு
ஆக்கம் வருகுது பார் வெள்ளச்சி அம்மே – குற்-குறவஞ்சி:2 203/1,2
தெய்வம் உனக்கு உண்டு காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 206/2
வல்லியே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே – குற்-குறவஞ்சி:2 207/4
நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி – குற்-குறவஞ்சி:2 300/2
கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால் – குற்-குறவஞ்சி:2 319/3

மேல்

உனக்கும் (1)

மண்ணிலே மதி மயங்கிக்கிடக்கின்றேன் உனக்கும் மதி மயக்கம் தானோ – குற்-குறவஞ்சி:2 62/2

மேல்

உனது (2)

என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே – குற்-குறவஞ்சி:2 86/4
சஞ்சீவியே உனது கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 216/2

மேல்

உனை (2)

அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசை பேய் உனை விடாது – குற்-குறவஞ்சி:2 317/3
ஆவி சோருது உனை ஆவியாவி கட்ட – குற்-குறவஞ்சி:2 352/3

மேல்