செ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கரும் 1
செக 1
செகநாதம் 1
செங்கண்மால் 2
செங்கதிரோன் 1
செங்கமல 1
செங்கால்நாரையும் 1
செங்குள 1
செங்குறிஞ்சிக்குளம் 1
செங்கை 2
செங்கைக்குள் 1
செங்கையாள் 1
செங்கையில் 1
செங்கோட்டை 1
செங்கோல் 2
செங்கோலான் 1
செச்சை 1
செஞ்சடை 1
செஞ்சி 1
செஞ்சொல் 1
செட்டி 1
செட்டிக்கு 1
செடிக்கொரு 1
செண்பக 3
செண்பகச்சோலை 1
செண்பகமாறற்கு 1
செண்பகாடவி 1
செந்தில் 1
செந்தேனோ 1
செந்நெல் 3
செப்பரு 1
செப்பலாம் 1
செப்பில் 1
செப்புவாயே 1
செப்போ 1
செப்போடு 1
செபித்த 1
செம் 4
செம்பொன் 2
செம்போ 1
செம்மை 1
செம்மையா 1
செய் 3
செய்கின்ற 1
செய்த 4
செய்தல்லவோ 1
செய்தாளோ 1
செய்தி 1
செய்தியை 1
செய்ய 4
செய்யும் 1
செய்வம் 1
செய்வாளே 1
செய்வித்து 1
செய்வேன் 1
செய 3
செயத்தம்பம் 1
செயம் 2
செயும் 1
செல் 1
செல்ல 3
செல்லிமலை 1
செல்லுவாய் 1
செல்வ 3
செல்வங்கள் 1
செல்வம் 1
செல்வர் 6
செல்வருக்கும் 1
செல்வன் 1
செலவோ 1
செவ் 2
செவ்வேள் 1
செவ்வேளை 1
செவி 1
செவிகளும் 1
செழிக்க 1
செழிக்கும் 1
செழித்த 1
செழும் 2
சென்ற 1
சென்றது 1
சென்றேன் 1
சென்னியிலே 1

செக்கரும் (1)

செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/2

மேல்

செக (1)

திக்குமே உடையர் ஆவர் செக மகராசி நீயே – குற்-குறவஞ்சி:2 222/2

மேல்

செகநாதம் (1)

குருநாடு கேதாரம் கோலக்கொண்டை கோகரணம் செகநாதம் கும்பகோணம் – குற்-குறவஞ்சி:2 320/2

மேல்

செங்கண்மால் (2)

செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு – குற்-குறவஞ்சி:2 159/3
செந்தில் வாழ் முருகா செங்கண்மால் மருகா – குற்-குறவஞ்சி:2 223/3

மேல்

செங்கதிரோன் (1)

செங்கதிரோன் பரி காலும் தேர் காலும் வழுகும் – குற்-குறவஞ்சி:2 131/2

மேல்

செங்கமல (1)

செங்கமல சங்க ரேகை கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 215/2

மேல்

செங்கால்நாரையும் (1)

கூழைக்கடாக்களும் செங்கால்நாரையும் – குற்-குறவஞ்சி:2 265/4

மேல்

செங்குள (1)

கார் ஆரும் செங்குள மேலப்பாட்டப்பற்று காடுவெட்டிப்பற்று நீடுசுண்டைப்பற்று – குற்-குறவஞ்சி:2 272/1

மேல்

செங்குறிஞ்சிக்குளம் (1)

பாரைக்குளம் தெற்கு மேல் வழுதிக்குளம் பாட்ட பெருங்குளம் செங்குறிஞ்சிக்குளம்
ஊருணிப்பற்றும் திருப்பணி நீளம் உயர்ந்த புளியங்குளம் துவரைக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/1,2

மேல்

செங்கை (2)

செங்கை மாத்திரைக்கோல் செங்கோல் நடாத்தி – குற்-குறவஞ்சி:2 115/32
ஏழைபங்கர் செங்கை மழு_ஏற்றவர் குற்றாலர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 217/1

மேல்

செங்கைக்குள் (1)

செங்கைக்குள் சங்கமும் சிந்தி மறுகிவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 74/4

மேல்

செங்கையாள் (1)

கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1

மேல்

செங்கையில் (1)

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை – குற்-குறவஞ்சி:2 40/1

மேல்

செங்கோட்டை (1)

செய் அம் புலியூர் இலஞ்சி மேலகரம் செங்கோட்டை சீவலநல்லூர் சிற்றம்பலம் – குற்-குறவஞ்சி:2 274/2

மேல்

செங்கோல் (2)

செங்கை மாத்திரைக்கோல் செங்கோல் நடாத்தி – குற்-குறவஞ்சி:2 115/32
பேர் வாழி அரசர் செங்கோல் வாழி நல் நகர பேரால் ஓங்கும் – குற்-குறவஞ்சி:2 410/3

மேல்

செங்கோலான் (1)

புரந்திடும் செங்கோலான் பிரம்புடையான் – குற்-குறவஞ்சி:2 2/2

மேல்

செச்சை (1)

சிலை நுதலில் கஸ்தூரி திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடி – குற்-குறவஞ்சி:2 116/1

மேல்

செஞ்சடை (1)

தெள் நீர் வட அருவி தீர்த்தத்தார் செஞ்சடை மேல் – குற்-குறவஞ்சி:2 109/1

மேல்

செஞ்சி (1)

செஞ்சி வடகாசி நீளம் சீனம் சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம் – குற்-குறவஞ்சி:2 195/2

மேல்

செஞ்சொல் (1)

செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு – குற்-குறவஞ்சி:2 159/3

மேல்

செட்டி (1)

செட்டி பற்றில் கண்ணிவைத்து சிங்கி நடை சாயலினால் – குற்-குறவஞ்சி:2 310/1

மேல்

செட்டிக்கு (1)

செட்டிக்கு இரங்கி வினை தீர்த்தவர் குற்றாலர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 286/1

மேல்

செடிக்கொரு (1)

செடிக்கொரு வளையம் போட்டு சிங்கியை தேடுவாயே – குற்-குறவஞ்சி:2 317/4

மேல்

செண்பக (3)

பூ வளர் செண்பக கா வளர் தம்பிரான் – குற்-குறவஞ்சி:2 115/17
சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தன காட்டுக்கும் செண்பக காவுக்கும் – குற்-குறவஞ்சி:2 271/1
தேவி குழல்வாய்மொழி பெண் நாச்சியார் கால் செண்பக கால் திருந்த மதி சூடினார் கால் – குற்-குறவஞ்சி:2 303/1

மேல்

செண்பகச்சோலை (1)

கொங்கு அலர் செண்பகச்சோலை குறும்பலா ஈசர் – குற்-குறவஞ்சி:2 175/1

மேல்

செண்பகமாறற்கு (1)

தென்காசி ஆலயம் ஓங்க குறி செண்பகமாறற்கு சொன்ன பேர் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 197/2

மேல்

செண்பகாடவி (1)

செண்பகாடவி துறையின் பண்பு சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 168/2

மேல்

செந்தில் (1)

செந்தில் வாழ் முருகா செங்கண்மால் மருகா – குற்-குறவஞ்சி:2 223/3

மேல்

செந்தேனோ (1)

கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/2

மேல்

செந்நெல் (3)

செந்நெல் காத்து அளிக்கும் நல் நகர் பதியான் – குற்-குறவஞ்சி:2 115/8
நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல்
தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/1,2
செந்நெல் மருதூர்க்கு நாயகமாகவும் தென்காசியூருக்கு தாயகமாகவும் – குற்-குறவஞ்சி:2 280/2

மேல்

செப்பரு (1)

செப்பரு மலை மேல் தெய்வகன்னியர்காள் – குற்-குறவஞ்சி:2 223/8

மேல்

செப்பலாம் (1)

திரிகூடநாதன் என்று செப்பலாம் அம்மே – குற்-குறவஞ்சி:2 244/2

மேல்

செப்பில் (1)

ஒரு பந்து கைகொண்டு ஆட ஒரு செப்பில் ஐந்து பந்தும் – குற்-குறவஞ்சி:2 48/3

மேல்

செப்புவாயே (1)

சீர் வளர் குறியின் மார்க்கம் தெரியவே செப்புவாயே – குற்-குறவஞ்சி:2 193/4

மேல்

செப்போ (1)

வைப்பொடு செப்போ வரத்தொடு செலவோ – குற்-குறவஞ்சி:2 223/23

மேல்

செப்போடு (1)

தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/3

மேல்

செபித்த (1)

சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போல – குற்-குறவஞ்சி:2 314/4

மேல்

செம் (4)

படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/3
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3
வீழி கொண்ட செம் கனி வாய் மிக்க குறவஞ்சி பழம் – குற்-குறவஞ்சி:2 217/3
இங்கே வாராய் மலர் செம் கை தாராய் மோக – குற்-குறவஞ்சி:2 350/1

மேல்

செம்பொன் (2)

செம்பொன் அரைஞாணடா சிங்கா செம்பொன் அரைஞாணடா – குற்-குறவஞ்சி:2 372/2
செம்பொன் அரைஞாணடா சிங்கா செம்பொன் அரைஞாணடா – குற்-குறவஞ்சி:2 372/2

மேல்

செம்போ (1)

வட்டிலோ செம்போ வயிரமோ முத்தோ – குற்-குறவஞ்சி:2 223/21

மேல்

செம்மை (1)

செம்மை இது நல் நிமித்தம் கண்டு பார் அம்மே திரிகூடமலை – குற்-குறவஞ்சி:2 206/1

மேல்

செம்மையா (1)

செம்மையா குறிகள் சொல்ல அம்மே அம்மே என்று செல்ல – குற்-குறவஞ்சி:2 125/2

மேல்

செய் (3)

இருக்குது இவர் செய் மாயம் ஒருக்காலே – குற்-குறவஞ்சி:2 52/4
கண்ணீர் நறும் புனலா கை வளையே செய் கரையா – குற்-குறவஞ்சி:2 109/3
செய் அம் புலியூர் இலஞ்சி மேலகரம் செங்கோட்டை சீவலநல்லூர் சிற்றம்பலம் – குற்-குறவஞ்சி:2 274/2

மேல்

செய்கின்ற (1)

தானிகன் சர்க்கரைப்பண்டாரம் என்னும் தணியாத காதல் பணிவிடை செய்கின்ற
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/1,2

மேல்

செய்த (4)

வெடித்த கடல் அமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் ஒரு – குற்-குறவஞ்சி:2 38/1
நின்று மத கரி பூசை அன்று செய்த தலமே – குற்-குறவஞ்சி:2 177/1
திரிகண்ணரானவர் செய்த கைம் மயக்கமோ – குற்-குறவஞ்சி:2 223/26
எந்தையார் வாசலில் பிள்ளையார் செய்வித்து இரண்டு குறிஞ்சி படித்துறையும் செய்த
கொந்து ஆர் புயத்தான் இராக்கதப்பெருமாள் குற்றாலநாதன் முன் உற்ற சகோதரன் – குற்-குறவஞ்சி:2 282/2,3

மேல்

செய்தல்லவோ (1)

ஆகடியம் செய்தல்லவோ வெண்ணிலாவே நீதான் – குற்-குறவஞ்சி:2 65/1

மேல்

செய்தாளோ (1)

பொன் அடியில் சேர்ந்து அணைய என்ன தவம் செய்தாளோ மானே – குற்-குறவஞ்சி:2 80/4

மேல்

செய்தி (1)

மன்னவர் குற்றாலர் செய்தி இன்னம் இன்னம் கேளாயோ மானே அவர் – குற்-குறவஞ்சி:2 79/1

மேல்

செய்தியை (1)

மையல்கொண்டேன் அந்த செய்தியை கேளாய் நீ பாங்கி – குற்-குறவஞ்சி:2 73/2

மேல்

செய்ய (4)

செய்ய சடையின் மேலே திங்கள்கொழுந்து இருக்க – குற்-குறவஞ்சி:2 51/3
செய்ய சடையும் திருக்கொன்றை மாலை அழகும் அவர் – குற்-குறவஞ்சி:2 73/3
ஆர மா முலை மின்னார் அவரவர் அல்குல் தேர்கள் அலங்காரம் செய்ய
பார மா மதி வெண்குடை மிஞ்ச பறக்கும் கிள்ளை பரிகள் முன் கொஞ்ச – குற்-குறவஞ்சி:2 154/2,3
நல் பாண்டிராச்சியம் உய்ய சொக்கநாயகர் வந்து மணக்கோலம் செய்ய
இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களை கேட்டதும் சங்கத்தார் சாட்சி – குற்-குறவஞ்சி:2 197/3,4

மேல்

செய்யும் (1)

பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார் – குற்-குறவஞ்சி:2 332/2

மேல்

செய்வம் (1)

ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1

மேல்

செய்வாளே (1)

உள் நீரில் கூடல் உறைக்கிணறு செய்வாளே – குற்-குறவஞ்சி:2 109/4

மேல்

செய்வித்து (1)

எந்தையார் வாசலில் பிள்ளையார் செய்வித்து இரண்டு குறிஞ்சி படித்துறையும் செய்த – குற்-குறவஞ்சி:2 282/2

மேல்

செய்வேன் (1)

திலத வசீகரம் செய்வேன் ஒருவருக்கும் தெரியாமல் போகவர சித்தும் அறிவேன் – குற்-குறவஞ்சி:2 340/3

மேல்

செய (3)

தொடரும் ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் செய படை தாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/1
சேவக விருது செய விடை கொடியான் – குற்-குறவஞ்சி:2 115/11
உயர் மதுரை மாறனுக்கும் செய மருகர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 183/2

மேல்

செயத்தம்பம் (1)

தென்னவர் தமிழால் செயத்தம்பம் நாட்டி – குற்-குறவஞ்சி:2 115/34

மேல்

செயம் (2)

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை – குற்-குறவஞ்சி:2 40/1
செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை – குற்-குறவஞ்சி:2 40/1

மேல்

செயும் (1)

குற்றால சிவராமநம்பி செயும் சகியே – குற்-குறவஞ்சி:2 101/2

மேல்

செல் (1)

செல் இனங்கள் முழவு கொட்ட மயில் இனங்கள் ஆடும் – குற்-குறவஞ்சி:2 148/1

மேல்

செல்ல (3)

கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1
செம்மையா குறிகள் சொல்ல அம்மே அம்மே என்று செல்ல – குற்-குறவஞ்சி:2 125/2
செல்ல பூங்கோதையே நீ பந்தடிக்கையில் அவன் – குற்-குறவஞ்சி:2 228/1

மேல்

செல்லிமலை (1)

கொல்லிமலை எனக்கு இளைய செல்லிமலை அம்மே – குற்-குறவஞ்சி:2 145/1

மேல்

செல்லுவாய் (1)

நல் நகர் குற்றாலர் முன்னமே செல்லுவாய் மன்மதா – குற்-குறவஞ்சி:2 71/4

மேல்

செல்வ (3)

திரிகூடமலை எங்கள் செல்வ மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 148/2
செல்வ கடன்_அனையான் குற்றால சிவராமநம்பி எம் கோன் – குற்-குறவஞ்சி:2 304/2
சீராளன் பிச்சைப்பிள்ளை திருப்பணி செல்வ புதுக்குளமும் – குற்-குறவஞ்சி:2 305/1

மேல்

செல்வங்கள் (1)

தம்பம் என்றே நம்பினோரை சதிபண்ணி தாம் வாழ பார்ப்பவர் செல்வங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/1

மேல்

செல்வம் (1)

சன்னதியின் பேறு அல்லவோ பொன்னுலகில் தேவர் செல்வம் மானே – குற்-குறவஞ்சி:2 79/3

மேல்

செல்வர் (6)

சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:1 9/3
தேர் கொண்ட வசந்த வீதி செல்வர் குற்றாலத்து ஈசர் – குற்-குறவஞ்சி:2 1/1
திங்களை முடித்தார் கண்டாய் திரிகூட செல்வர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 53/1
அல்லார்க்கும் முன் உதித்த செல்வர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 190/2
ஆன் ஏறும் செல்வர் திரிகூடநாதர் அணி நகர் வாழ் – குற்-குறவஞ்சி:2 212/1
செல்வர் உறை சிவசயிலம் பாவநாசம் திரிகூட சிங்கி-தனை தேடுவானே – குற்-குறவஞ்சி:2 321/4

மேல்

செல்வருக்கும் (1)

சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேத செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள் – குற்-குறவஞ்சி:1 8/1

மேல்

செல்வன் (1)

சேனை சவரிப்பெருமாள் சகோதரன் செல்வன் மருதூர் வயித்தியப்பனுடன் – குற்-குறவஞ்சி:2 279/2

மேல்

செலவோ (1)

வைப்பொடு செப்போ வரத்தொடு செலவோ
கைப்படு திரவியம் களவுபோனதுவோ – குற்-குறவஞ்சி:2 223/23,24

மேல்

செவ் (2)

அடி இணை மலரும் செவ் வாய் ஆம்பலும் சிவப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/1
செவ் வாய் கரும்பை அநுராக வஞ்சியை – குற்-குறவஞ்சி:2 325/3

மேல்

செவ்வேள் (1)

மீறும் இலஞ்சி குறத்தியை கொண்ட செவ்வேள் குறவன் முதல் வேட்டைக்கு போன நாள் – குற்-குறவஞ்சி:2 291/1

மேல்

செவ்வேளை (1)

செவ்வேளை ஈன்று அருள்வார் சிலைவேளை வென்று அருள்வார் திரும்ப தாமே – குற்-குறவஞ்சி:2 92/1

மேல்

செவி (1)

துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கையால் செவி புதைக்கவே – குற்-குறவஞ்சி:2 10/2

மேல்

செவிகளும் (1)

அடியர் முழக்கிய திருப்பலாண்டு இசை அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள் – குற்-குறவஞ்சி:2 10/3

மேல்

செழிக்க (1)

ஏரி நீர் செழிக்க வாரி நீர் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 115/5

மேல்

செழிக்கும் (1)

பொங்கு கடல் திரிவேணிசங்கம் என செழிக்கும்
பொருந்து சித்ரநதி துறைகள் பொன்னும் முத்தும் கொழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/1,2

மேல்

செழித்த (1)

சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்தி செழித்த குறவஞ்சி நாடகத்தை பாட – குற்-குறவஞ்சி:1 5/2

மேல்

செழும் (2)

செழும் குரங்கு தேமாவின் பழங்களை பந்தடிக்கும் – குற்-குறவஞ்சி:2 135/1
தானே இருந்த தலமும் நன்றே செழும் தாமரை போல் – குற்-குறவஞ்சி:2 212/3

மேல்

சென்ற (1)

நரிகூட கயிலை சென்ற திரிகூட தல மகிமை நவில கேளே – குற்-குறவஞ்சி:2 163/4

மேல்

சென்றது (1)

பன்றியொடு வேடன் வலம் சென்றது இந்த தலமே – குற்-குறவஞ்சி:2 178/1

மேல்

சென்றேன் (1)

கோரத்தை வைத்த விழிக்கு எதிர் சென்றேன் என் கொஞ்சத்தனத்தை அறிந்து சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 329/2

மேல்

சென்னியிலே (1)

சென்னியிலே புனல் கன்னியை வைத்த திரிகூடநாதர் கிரி மாது வேட்கையில் – குற்-குறவஞ்சி:2 266/1

மேல்