கி – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிஞ்சுக 2
கிஞ்சுகத்து 1
கிட்ட 2
கிட்டா 1
கிட்டாது 1
கிடக்க 2
கிடக்கில் 1
கிடக்கின்றவாறே 3
கிடக்கும் 4
கிடக்குமே 1
கிடத்தல் 1
கிடந்த 10
கிடந்தது 17
கிடந்தன 1
கிடந்தார் 2
கிடந்தான் 1
கிடந்து 13
கிடந்தும் 2
கிடந்தே 1
கிடப்பதும் 1
கிடப்பர் 1
கிடா 2
கிடைத்தால் 1
கிடைத்திடும் 1
கிணற்றகத்து 1
கிணற்று 1
கிரணங்கள் 1
கிரி 1
கிரியத்திடை 1
கிரியா 2
கிரியை 9
கிரியையில் 1
கிரியையினார்க்கே 1
கிரியையும் 1
கிரியையே 2
கிரியையோர் 2
கிரீம் 2
கிரீயும் 1
கிருமியாய் 1
கிரோங்கு 1
கிரோம் 1
கில்லேன் 1
கிலீ 1
கிலீம் 3
கிழக்கு 4
கிழக்கே 1
கிழங்காய் 1
கிழத்தி 4
கிழத்தியே 1
கிழமைக்கு 1
கிழவனை 1
கிழவி 1
கிழிந்தது 1
கிளக்குறில் 1
கிளர் 13
கிளர்ந்த 2
கிளர்ந்து 1
கிளரும் 1
கிளறி 1
கிளி 3
கிளிமொழி 1
கிளியுடன் 1
கிளியும் 1
கிளியொடு 1
கிளை 2
கிளைக்கு 1
கிளைக்கும் 1
கிளைகூட்ட 1
கிளைத்தால் 1
கிளையும் 1
கிற்ற 1
கிறியன் 1

கிஞ்சுக (2)

சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை – திருமந்:1082/2
கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே – திருமந்:2299/4
மேல்


கிஞ்சுகத்து (1)

பொன்னான மந்திரம் பொறி கிஞ்சுகத்து ஆகும் – திருமந்:906/2
மேல்


கிட்ட (2)

கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் – திருமந்:1313/3
மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது – திருமந்:1487/1
மேல்


கிட்டா (1)

கிட்டா பிராணனே செய்தால் கிடைத்திடும் – திருமந்:669/2
மேல்


கிட்டாது (1)

கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே – திருமந்:1310/4
மேல்


கிடக்க (2)

கிடக்க படுத்தார் கிடந்து ஒழிந்தாரே – திருமந்:148/4
பாரை கிடக்க படிகின்றவாறே – திருமந்:2911/4
மேல்


கிடக்கில் (1)

விட்டு கிடக்கில் விருப்பு அறியாரே – திருமந்:1884/4
மேல்


கிடக்கின்றவாறே (3)

இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே – திருமந்:2086/4
கிடக்கின்றவாறே கிளர் பயன் மூன்று – திருமந்:2407/1
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே – திருமந்:2899/4
மேல்


கிடக்கும் (4)

கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம் – திருமந்:2032/1
உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும்
பயிரும் கிடந்து உள்ள பாங்கு அறியாரே – திருமந்:2078/3,4
மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை – திருமந்:2867/2
மாறி கிடக்கும் வகை அறிவாளர்க்கு – திருமந்:2867/3
மேல்


கிடக்குமே (1)

வேதகம் ஆக விளைந்து கிடக்குமே – திருமந்:717/4
மேல்


கிடத்தல் (1)

நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ் காலே – திருமந்:325/4
மேல்


கிடந்த (10)

துன்னி கிடந்த சுடு பொடி ஆடிக்கு – திருமந்:271/3
உடலில் கிடந்த உறுதி குடிநீர் – திருமந்:845/1
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் – திருமந்:1274/3
ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய் – திருமந்:1642/1
பிறையுள் கிடந்த முயலை எறிவான் – திருமந்:2512/1
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் – திருமந்:2887/2
கோரை எழுந்து கிடந்த குளத்தினில் – திருமந்:2911/1
எல்லை மயங்கி கிடந்த இரு நெறி – திருமந்:2912/2
தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து – திருமந்:2918/2
பாசி படர்ந்து கிடந்த குளத்திடை – திருமந்:2927/1
மேல்


கிடந்தது (17)

வெந்து கிடந்தது மேல் அறியோமே – திருமந்:159/4
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை – திருமந்:162/1
படிஞ்சு கிடந்தது பதைக்கின்றவாறே – திருமந்:164/4
ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது
ஐவரும் அ செய்யை காத்து வருவார்கள் – திருமந்:188/1,2
பின்னி கிடந்தது என் பேரன்பு தானே – திருமந்:271/4
முற்றி கிடந்தது மூக்கையும் நாவையும் – திருமந்:539/2
தெற்றி கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள் – திருமந்:539/3
கிடந்தது தானே கிளர் பயன் மூன்று – திருமந்:718/1
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற – திருமந்:1159/2,3
வேறு உருவாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாயநம என்று – திருமந்:1300/2,3
தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி – திருமந்:2867/1
ஊறி கிடந்தது என் உள்ளன்பு தானே – திருமந்:2867/4
கள்ள செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ள செய் அங்கே உழவு செய்வார்கட்கு – திருமந்:2871/2,3
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது – திருமந்:2879/1
விளைந்து கிடந்தது மேலைக்கு காதம் – திருமந்:2879/2
விளைந்து கிடந்தது மேவு முக்காதமே – திருமந்:2879/4
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார் – திருமந்:2911/2,3
மேல்


கிடந்தன (1)

மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் – திருமந்:2435/2,3
மேல்


கிடந்தார் (2)

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் – திருமந்:2188/1,2
நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை – திருமந்:2936/1
மேல்


கிடந்தான் (1)

அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று – திருமந்:1762/1
மேல்


கிடந்து (13)

கிடக்க படுத்தார் கிடந்து ஒழிந்தாரே – திருமந்:148/4
மேலும் கிடந்து விரும்புவன் யானே – திருமந்:181/4
மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை – திருமந்:271/2
நின்று தொழுவன் கிடந்து எம்பிரான்-தன்னை – திருமந்:1500/1
ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது – திருமந்:1747/1,2
வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற – திருமந்:1775/3
வேண்டி கிடந்து விளக்கொளியான் நெஞ்சம் – திருமந்:1793/3
ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே – திருமந்:1793/4
பயிரும் கிடந்து உள்ள பாங்கு அறியாரே – திருமந்:2078/4
வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே – திருமந்:2887/4
பாசம் கிடந்து பதைக்கின்றவாறே – திருமந்:2927/4
வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே – திருமந்:2928/4
ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே – திருமந்:2937/4
மேல்


கிடந்தும் (2)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் – திருமந்:1985/1
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை – திருமந்:2517/1
மேல்


கிடந்தே (1)

பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்து அறியா என்னை வானவர் கோனும் – திருமந்:2585/2,3
மேல்


கிடப்பதும் (1)

சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே – திருமந்:128/2
மேல்


கிடப்பர் (1)

இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர்
குடர் பட வெம் தமர் கூப்பிடுமாறே – திருமந்:165/3,4
மேல்


கிடா (2)

கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை – திருமந்:2878/2
கிடா கொண்டு செந்நெல் அறுக்கின்றவாறே – திருமந்:2878/4
மேல்


கிடைத்தால் (1)

கிளர்ந்த பரம்சிவம் சேர கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே – திருமந்:2591/3,4
மேல்


கிடைத்திடும் (1)

கிட்டா பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடு நாடி மூலத்து அனல் பானு – திருமந்:669/2,3
மேல்


கிணற்றகத்து (1)

ஊமை கிணற்றகத்து உள்ளே உறைவது ஓர் – திருமந்:2304/1
மேல்


கிணற்று (1)

கடலில் சிறு கிணற்று ஏற்றம் இட்டால் ஒக்கும் – திருமந்:845/2
மேல்


கிரணங்கள் (1)

கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கி – திருமந்:2702/1
மேல்


கிரி (1)

ஆக தகு கிரி ஆதி சரியை ஆம் – திருமந்:1465/2
மேல்


கிரியத்திடை (1)

செண்டு வெளியில் செழும் கிரியத்திடை
கொண்டு குதிரை குசை செறுத்தாரே – திருமந்:621/3,4
மேல்


கிரியா (2)

நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே – திருமந்:1136/3
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்து – திருமந்:2007/3
மேல்


கிரியை (9)

இரு நெறி ஆன கிரியை இருந்து – திருமந்:227/3
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால் – திருமந்:382/3
கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை – திருமந்:1448/1
பத்தன் கிரியை சரியை பயில்வுற்று – திருமந்:1455/1
பண்ணும் கிரியை பரநேத்திரத்திலே – திருமந்:1744/4
செறியும் கிரியை சிவதத்துவமாம் – திருமந்:2189/1
ஞானம்-தன் மேனி கிரியை நடு அங்கம் – திருமந்:2332/1
உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம் – திருமந்:2333/2
அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே – திருமந்:2653/3,4
மேல்


கிரியையில் (1)

சமயம் கிரியையில் தன் மனம் கோயில் – திருமந்:1508/1
மேல்


கிரியையினார்க்கே (1)

அணைவாம் சரியை கிரியையினார்க்கே – திருமந்:1423/4
மேல்


கிரியையும் (1)

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனு சத்தி – திருமந்:2248/1,2
மேல்


கிரியையே (2)

தான் இ குலத்தோர் சரியை கிரியையே – திருமந்:1473/4
ஞான கிரியையே நல் முத்தி நாடலே – திருமந்:1474/4
மேல்


கிரியையோர் (2)

பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அ தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர் – திருமந்:1446/1,2
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் – திருமந்:1447/3
மேல்


கிரீம் (2)

சௌ முதல் ஔவொடு ஹௌவுடனாம் கிரீம்
கௌவுளும் ஐயுளும் கலந்து இரீம் சிரீம் என்று – திருமந்:1320/1,2
ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறாம் – திருமந்:1349/1
மேல்


கிரீயும் (1)

செம்பு பொன் ஆகும் சிரீயும் கிரீயும் என – திருமந்:903/3
மேல்


கிருமியாய் (1)

வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே – திருமந்:531/4
மேல்


கிரோங்கு (1)

இட்டு வாமத்து ஆங்கு கிரோங்கு என்று மேவிடே – திருமந்:1313/4
மேல்


கிரோம் (1)

கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் – திருமந்:1313/3
மேல்


கில்லேன் (1)

கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன் – திருமந்:313/1
மேல்


கிலீ (1)

நவாக்கரி அ கிலீ சௌ முதல் ஈறே – திருமந்:1319/4
மேல்


கிலீம் (3)

ஒவ்வில் எழும் கிலீம் மந்திர பாதமா – திருமந்:1320/3
நினைத்திடும் அ சிரீம் அ கிலீம் ஈறா – திருமந்:1324/1
முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே – திருமந்:1370/4
மேல்


கிழக்கு (4)

மேல் திசைக்கும் கிழக்கு திசை எட்டொடு – திருமந்:35/3
கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே – திருமந்:177/1
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு – திருமந்:1735/1
தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில் – திருமந்:2739/1
மேல்


கிழக்கே (1)

நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும் – திருமந்:797/2
மேல்


கிழங்காய் (1)

முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின் – திருமந்:489/1
மேல்


கிழத்தி (4)

ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை – திருமந்:1122/1
நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும் – திருமந்:1122/2
தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை – திருமந்:1122/3
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே – திருமந்:1122/4
மேல்


கிழத்தியே (1)

ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே – திருமந்:1121/4
மேல்


கிழமைக்கு (1)

எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே – திருமந்:1983/4
மேல்


கிழவனை (1)

குருட்டு கிழவனை கூடல் குறித்து – திருமந்:1514/2
மேல்


கிழவி (1)

இருட்டு அறை மூலை இருந்த கிழவி
குருட்டு கிழவனை கூடல் குறித்து – திருமந்:1514/1,2
மேல்


கிழிந்தது (1)

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை – திருமந்:209/1
மேல்


கிளக்குறில் (1)

கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில்
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள் – திருமந்:2249/1,2
மேல்


கிளர் (13)

கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர் – திருமந்:298/3
கிடந்தது தானே கிளர் பயன் மூன்று – திருமந்:718/1
எவ்வினம் மூன்றும் கிளர் தரு ஏரதாம் – திருமந்:1269/2
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே – திருமந்:1344/4
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின் – திருமந்:1356/1
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து – திருமந்:1411/3
கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி – திருமந்:1428/1
கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை – திருமந்:1448/1
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் – திருமந்:1813/3
கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம் – திருமந்:2032/1
கேவலம்-தன்னில் கிளர் விந்து சத்தியால் – திருமந்:2242/2
கிடக்கின்றவாறே கிளர் பயன் மூன்று – திருமந்:2407/1
கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட – திருமந்:2729/2
மேல்


கிளர்ந்த (2)

கேவலம்-தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர் – திருமந்:2242/1
கிளர்ந்த பரம்சிவம் சேர கிடைத்தால் – திருமந்:2591/3
மேல்


கிளர்ந்து (1)

கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கி – திருமந்:2702/1
மேல்


கிளரும் (1)

கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள் – திருமந்:2249/2
மேல்


கிளறி (1)

கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை – திருமந்:2878/2
மேல்


கிளி (3)

கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே – திருமந்:526/4
தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய் – திருமந்:1382/3
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு – திருமந்:1398/2
மேல்


கிளிமொழி (1)

கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே – திருமந்:2299/4
மேல்


கிளியுடன் (1)

நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்
பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும் – திருமந்:1403/1,2
மேல்


கிளியும் (1)

பருந்தும் கிளியும் படு பறை கொட்ட – திருமந்:2896/1
மேல்


கிளியொடு (1)

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் – திருமந்:2891/1
மேல்


கிளை (2)

கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் – திருமந்:1813/3
தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே – திருமந்:2898/4
மேல்


கிளைக்கு (1)

கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன் – திருமந்:2037/2
மேல்


கிளைக்கும் (1)

கிளைக்கும் தனக்கும் அ கேடு இல் புகழோன் – திருமந்:258/3
மேல்


கிளைகூட்ட (1)

கர்ப்பத்து கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ – திருமந்:460/1,2
மேல்


கிளைத்தால் (1)

கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே – திருமந்:2194/3,4
மேல்


கிளையும் (1)

உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே – திருமந்:1489/4
மேல்


கிற்ற (1)

கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர் – திருமந்:298/3
மேல்


கிறியன் (1)

கிறியன் மலவியாபி கேவலம் தானே – திருமந்:2247/4

மேல்