நூ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

நூபுரம் (1)

தாள் அணி நூபுரம் செம்பட்டு தான் உடை – திருமந்:1049/1
மேல்


நூல் (22)

நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம் – திருமந்:230/2
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம் – திருமந்:230/3
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே – திருமந்:230/4
மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில் – திருமந்:241/1
ஆடம்பர நூல் சிகை அறுத்தால் நன்றே – திருமந்:241/4
ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி – திருமந்:242/1
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி – திருமந்:247/2
நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார் – திருமந்:295/1
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே – திருமந்:296/4
பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள – திருமந்:1118/3
ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன் – திருமந்:1426/1
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம் – திருமந்:1640/3
நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர் – திருமந்:1642/3
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம் – திருமந்:1665/2
ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர் – திருமந்:1861/1
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி – திருமந்:1941/3
கருத்தின் நல் நூல் கற்று கால்கொத்தி பாகன் – திருமந்:2024/1
ஆகும் அ தந்திரம் அ நூல் வழிநிற்றல் – திருமந்:2379/2
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன – திருமந்:2397/1,2
துன்னிய ஆகம நூல் என தோன்றுமே – திருமந்:2403/4
தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும் – திருமந்:2562/1
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே – திருமந்:2621/4
மேல்


நூல்களில் (1)

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமமாகவே ஓதிய வேதத்தின் – திருமந்:84/1,2
மேல்


நூலவர் (1)

யாரும் அறியார் அரும் கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்பர் – திருமந்:1984/2,3
மேல்


நூலாய் (1)

இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே – திருமந்:1018/4
மேல்


நூலின் (1)

வேத ஆதி நூலின் விளங்கும் பராபரை – திருமந்:1070/2
மேல்


நூலும் (2)

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ – திருமந்:230/1
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள் – திருமந்:1665/1
மேல்


நூற்றிருபத்துநாலாய் (1)

பதிமனை நூறு நூற்றிருபத்துநாலாய்
கதி மனை உள்ளே கணைகள் பரப்பி – திருமந்:813/2,3
மேல்


நூற்று (1)

இரண்டாகும் நூற்று எட்டு உருத்திரர் என்பர் – திருமந்:495/3
மேல்


நூற்றெட்டு (3)

ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே – திருமந்:2231/4
ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே – திருமந்:2243/4
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமோடு அந்த நடானந்த நாற்பத – திருமந்:2753/2,3
மேல்


நூறாய் (1)

அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து – திருமந்:525/2
மேல்


நூறாயிரத்து (1)

ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே – திருமந்:2011/4
மேல்


நூறாயிரம் (1)

அ பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும் – திருமந்:409/1,2
மேல்


நூறு (16)

எண்ணில் இருபத்தெண் கோடி நூறு ஆயிரம் – திருமந்:58/2
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம் – திருமந்:60/3
பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும் – திருமந்:479/1
நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு – திருமந்:533/3
பத்தொடு நூறு பல ஆசனமே – திருமந்:563/4
சாத்திடு நூறு தலைப்பெய்யலாமே – திருமந்:757/4
சாத்திடும் நூறு தலைப்பெய்து நின்றவர் – திருமந்:758/1
பதிமனை நூறு நூற்றிருபத்துநாலாய் – திருமந்:813/2
நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர் – திருமந்:847/1
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள – திருமந்:1130/2
நூறு சமயம் உளவா நுவலும்-கால் – திருமந்:1537/1
கூறு-மின் நூறு சதாசிவன் எம் இறை – திருமந்:1739/1
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம் – திருமந்:1851/1
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம் – திருமந்:1851/2
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை – திருமந்:2772/2
நூறு பறவை நுனி கொம்பின் மேலன – திருமந்:2905/2
மேல்


நூறுடன் (1)

கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு – திருமந்:2011/2
மேல்


நூறும் (4)

நூறும் அறுபதும் ஆறும் வலம் வர – திருமந்:729/1
நூறும் அறுபதும் ஆறும் இடம் வர – திருமந்:729/2
நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட – திருமந்:729/3
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே – திருமந்:729/4
மேல்


நூறே (3)

தலைவன் இடம்வலம் தன்வழி நூறே – திருமந்:773/4
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் – திருமந்:2530/2
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் – திருமந்:2979/2
மேல்


நூறொடு (2)

சொல்லிடு நூறொடு நாற்பத்துநால் உரு – திருமந்:1257/3
எழுத்து அவை நூறொடு நாற்பத்துநாலும் – திருமந்:1265/1

மேல்