நெ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ 1
நெஞ்சத்தின் 1
நெஞ்சத்து 11
நெஞ்சம் 17
நெஞ்சமே 1
நெஞ்சிடை 1
நெஞ்சில் 6
நெஞ்சிலர் 1
நெஞ்சின் 2
நெஞ்சினீரே 1
நெஞ்சினுள் 6
நெஞ்சினை 1
நெஞ்சீரே 1
நெஞ்சு 12
நெஞ்சுக்கு 1
நெஞ்சுள் 1
நெஞ்சே 1
நெஞ்சொடு 1
நெடிது 1
நெடியான் 1
நெடு 6
நெடுந்தகாய் 1
நெடுந்தகையானே 1
நெடுநாடி 1
நெடுநாள் 1
நெடும் 8
நெடுமால் 4
நெய் 10
நெய்-நின்று 1
நெய்தல் 1
நெய்யும் 1
நெய்யுள் 1
நெரித்து 2
நெருக்கம் 1
நெருக்கி 1
நெருஞ்சில் 3
நெருப்பது 1
நெருப்பிடை 1
நெருப்பினில் 1
நெருப்பு 3
நெருப்புறவே 1
நெல் 1
நெல்லி 1
நெல்லியும் 1
நெல்லின் 1
நெல்லொடு 1
நெளிதரு 1
நெற்றி 5
நெற்றிக்கு 1
நெற்றியின் 1
நெறி 76
நெறிக்கு 1
நெறிக்கும் 1
நெறிக்கே 1
நெறிதான் 1
நெறிநிற்றல் 2
நெறிநின்றது 1
நெறிநின்று 1
நெறிப்பட 1
நெறியாம் 2
நெறியாமே 1
நெறியாய் 3
நெறியாய 1
நெறியால் 1
நெறியாலே 1
நெறியான 2
நெறியில் 4
நெறியின் 1
நெறியுற்று 1
நெறியே 2
நெறியை 1
நெறிவந்து 1
நெறிவழியே 2

நெகிழ (1)

நினையும் அளவின் நெகிழ வணங்கி – திருமந்:2830/1
மேல்


நெஞ்சத்தின் (1)

நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே – திருமந்:1747/4
மேல்


நெஞ்சத்து (11)

இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் – திருமந்:94/2
இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே – திருமந்:299/4
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லா குரம்பை நிலை என்று உணர்வீர்காள் – திருமந்:312/1,2
கல்லாதார் நெஞ்சத்து காண ஒண்ணாதே – திருமந்:312/4
இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே – திருமந்:614/1
உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள் – திருமந்:1117/1
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடை அது ஆகிய சாதகர் தாமே – திருமந்:1140/3,4
கூடிய நெஞ்சத்து கோயிலாய் கொள்வனே – திருமந்:1445/4
இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே – திருமந்:1643/4
முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து – திருமந்:2141/2
அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே – திருமந்:2364/4
மேல்


நெஞ்சம் (17)

ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டு – திருமந்:434/3
பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில் – திருமந்:867/1
தனிநாயகன்-தனோடு என் நெஞ்சம் நாடி – திருமந்:1252/1
கனம் அவை அற்று கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்தி அது ஆமே – திருமந்:1379/3,4
கசியாத நெஞ்சம் கசிய கசிவித்து – திருமந்:1486/2
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே – திருமந்:1748/2,3
வேண்டி கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்
ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே – திருமந்:1793/3,4
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே – திருமந்:1874/3,4
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே – திருமந்:2016/4
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே – திருமந்:2042/1
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி – திருமந்:2269/2
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே – திருமந்:2903/4
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினை பற்று அறுக்கும் விமலன் இருக்கும் – திருமந்:2970/1,2
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து – திருமந்:2973/1
தன் நெஞ்சம் இல்லா தலைவன் தலைவிதி – திருமந்:2973/3
புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம்
புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே – திருமந்:2985/3,4
கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன் – திருமந்:3015/2
மேல்


நெஞ்சமே (1)

நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே
போம் இடத்து என்னொடும் போது கண்டாயே – திருமந்:544/3,4
மேல்


நெஞ்சிடை (1)

புனம் செய்த நெஞ்சிடை போற்ற வல்லார்க்கு – திருமந்:41/2
மேல்


நெஞ்சில் (6)

விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே – திருமந்:423/4
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு – திருமந்:539/1
அது இது நெஞ்சில் தணிக்கின்றவாறே – திருமந்:1503/4
தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன் – திருமந்:2431/1,2
புறப்பட்டுப்போகும் புகுதும் என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையை தெய்வம் என்று எண்ணி – திருமந்:2560/1,2
வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்து உளே நின்று முத்தி தந்தானே – திருமந்:2614/3,4
மேல்


நெஞ்சிலர் (1)

நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே – திருமந்:2512/4
மேல்


நெஞ்சின் (2)

மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற – திருமந்:2433/2
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து – திருமந்:2915/3
மேல்


நெஞ்சினீரே (1)

நரகத்தில் நிற்றிரோ நல் நெஞ்சினீரே – திருமந்:264/4
மேல்


நெஞ்சினுள் (6)

மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே – திருமந்:33/4
மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை – திருமந்:86/3
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் – திருமந்:771/3
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகி – திருமந்:1377/3
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் – திருமந்:1827/2
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து – திருமந்:2214/3
மேல்


நெஞ்சினை (1)

விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே – திருமந்:204/4
மேல்


நெஞ்சீரே (1)

விழ கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே – திருமந்:254/4
மேல்


நெஞ்சு (12)

சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று – திருமந்:50/1
நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது – திருமந்:830/3
நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம் – திருமந்:980/2
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே – திருமந்:1736/4
நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண்ணாம் – திருமந்:1743/1
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள – திருமந்:1844/2
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர் – திருமந்:2094/1
அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது – திருமந்:2364/1
அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது – திருமந்:2364/2
நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று – திருமந்:2707/1
நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே – திருமந்:2719/4
அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும் – திருமந்:2778/3
மேல்


நெஞ்சுக்கு (1)

பகைக்கின்ற நெஞ்சுக்கு பால் இரண்டு ஆமே – திருமந்:2214/4
மேல்


நெஞ்சுள் (1)

நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு – திருமந்:2214/2
மேல்


நெஞ்சே (1)

பெருந்தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே
அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே – திருமந்:2513/3,4
மேல்


நெஞ்சொடு (1)

அறிவுடையார் நெஞ்சொடு ஆதி பிரானும் – திருமந்:2364/3
மேல்


நெடிது (1)

நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே – திருமந்:1094/3
மேல்


நெடியான் (1)

நெடியான் குறுமை செய் நேசம் அறுத்து – திருமந்:3013/2
மேல்


நெடு (6)

நிரைத்த இராசி நெடு முறை எண்ணி – திருமந்:1090/2
நாடும் இருபத நல் நெடு ருத்திரம் – திருமந்:1207/3
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே – திருமந்:1553/4
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி – திருமந்:2663/2
நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும் – திருமந்:2685/3
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே – திருமந்:2772/4
மேல்


நெடுந்தகாய் (1)

நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின் – திருமந்:1683/2,3
மேல்


நெடுந்தகையானே (1)

நீங்கல் கொடானே நெடுந்தகையானே – திருமந்:871/4
மேல்


நெடுநாடி (1)

நிலையார பாயும் நெடுநாடி ஊடே – திருமந்:589/2
மேல்


நெடுநாள் (1)

நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும் – திருமந்:1111/2
மேல்


நெடும் (8)

நெய்-நின்று எரியும் நெடும் சுடரே சென்று – திருமந்:218/1
நேர் என ஈராறு நீதி நெடும் போகம் – திருமந்:1433/3
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர் – திருமந்:2094/1
அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே – திருமந்:2147/4
நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் – திருமந்:2618/1
நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி – திருமந்:2923/1
அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே – திருமந்:2925/4
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி – திருமந்:2982/1
மேல்


நெடுமால் (4)

நீதி-கண் ஈசன் நெடுமால் அயன் என்று – திருமந்:110/3
நிழல் சேர பெற்றேன் நெடுமால் அறியா – திருமந்:1600/2
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் – திருமந்:1731/1
பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனை – திருமந்:2964/1
மேல்


நெய் (10)

புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தால் போல் – திருமந்:134/1
நெய் அட்டி சோறு உண்ணும் ஐவரும் போயினார் – திருமந்:151/2
நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே – திருமந்:503/4
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்க தான் அற – திருமந்:536/3
பூசனை சாந்து சவாது புழுகு நெய்
பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே – திருமந்:1295/3,4
போகின்ற சாந்து சவாது புழுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும் – திருமந்:1368/2,3
துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன் – திருமந்:1720/1
நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன் – திருமந்:2115/3
சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற – திருமந்:2897/3
தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும் – திருமந்:2978/2
மேல்


நெய்-நின்று (1)

நெய்-நின்று எரியும் நெடும் சுடரே சென்று – திருமந்:218/1
மேல்


நெய்தல் (1)

அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல்
வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம் – திருமந்:1003/1,2
மேல்


நெய்யும் (1)

பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும் – திருமந்:2639/2
மேல்


நெய்யுள் (1)

காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும் – திருமந்:1366/3
மேல்


நெரித்து (2)

ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின் – திருமந்:350/3
நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே – திருமந்:1094/3
மேல்


நெருக்கம் (1)

கலந்த உயிர் அது காலின் நெருக்கம்
கலந்த உயிர் அது கால் அது கட்டில் – திருமந்:592/2,3
மேல்


நெருக்கி (1)

சினத்து விளக்கினை செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரி ஒக்க தூண்ட – திருமந்:602/2,3
மேல்


நெருஞ்சில் (3)

நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான் – திருமந்:1617/1
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும் – திருமந்:1617/2
நெறியின் நெருஞ்சில் முள் பாயகிலாவே – திருமந்:1617/4
மேல்


நெருப்பது (1)

நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கருப்பை உடையது – திருமந்:2145/2,3
மேல்


நெருப்பிடை (1)

நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்தில் சோதி பிறக்கும் அ காற்றிடை – திருமந்:388/1,2
மேல்


நெருப்பினில் (1)

நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும் – திருமந்:2625/1
மேல்


நெருப்பு (3)

தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும் – திருமந்:296/2
நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு – திருமந்:2315/1
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே – திருமந்:2640/4
மேல்


நெருப்புறவே (1)

நேராக தோன்றும் நெருப்புறவே பெய்யில் – திருமந்:865/3
மேல்


நெல் (1)

கடன் கொண்டு நெல் குத்து கையரை ஊட்டி – திருமந்:2086/1
மேல்


நெல்லி (1)

கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும் – திருமந்:2992/2
மேல்


நெல்லியும் (1)

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் – திருமந்:849/3
மேல்


நெல்லின் (1)

நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை – திருமந்:739/2
மேல்


நெல்லொடு (1)

நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே – திருமந்:1324/3
மேல்


நெளிதரு (1)

நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம் – திருமந்:950/3
மேல்


நெற்றி (5)

மேலை பிறையினில் நெற்றி நேர் நின்ற – திருமந்:627/3
பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும் – திருமந்:1012/3
மலர்ந்து எழு செம் முகம் மற்றை கண் நெற்றி
உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே – திருமந்:1038/3,4
கலைத்தலை நெற்றி ஓர் கண் உடை கண்ணுள் – திருமந்:1112/1
வளங்கு ஒளி அங்கியும் அற்றை கண் நெற்றி
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே – திருமந்:2684/3,4
மேல்


நெற்றிக்கு (1)

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி – திருமந்:2770/1
மேல்


நெற்றியின் (1)

நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும் – திருமந்:3031/3
மேல்


நெறி (76)

அடிகள் உறையும் அறன் நெறி நாடில் – திருமந்:20/2
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும் – திருமந்:54/3
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும் – திருமந்:54/3
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே – திருமந்:54/4
பாட வல்லார் நெறி பாட அறிகிலேன் – திருமந்:96/1
ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன் – திருமந்:96/2
நாட வல்லார் நெறி நாட அறிகிலேன் – திருமந்:96/3
தேட வல்லார் நெறி தேடகில்லேனே – திருமந்:96/4
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல – திருமந்:119/2
இரு நெறி ஆன கிரியை இருந்து – திருமந்:227/3
நாள்-தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி
நாள்-தோறும் நாடி அவன் நெறி நாடானேல் – திருமந்:239/1,2
நாள்-தோறும் நாடி அவன் நெறி நாடானேல் – திருமந்:239/2
வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன் – திருமந்:240/1
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே – திருமந்:240/2
வேட நெறி நில்லார்-தம்மை விறல் வேந்தன் – திருமந்:240/3
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே – திருமந்:240/4
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எ தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே – திருமந்:247/2,3
கோர நெறி கொடு கொங்கு புக்காரே – திருமந்:273/4
கோ அடைந்து அ நெறி கூடலும் ஆமே – திருமந்:546/4
அ நெறி இ நெறி என்னாது அட்டாங்க – திருமந்:551/1
அ நெறி இ நெறி என்னாது அட்டாங்க – திருமந்:551/1
தன் நெறி சென்று சமாதியிலே நின்-மின் – திருமந்:551/2
நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் – திருமந்:551/3
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே – திருமந்:551/4
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில் – திருமந்:779/3
நாலாம் எழுத்து அது நல் நெறி தானே – திருமந்:971/4
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில் – திருமந்:1009/3
தொலைவில் தவம் செயும் தூய் நெறி தோகை – திருமந்:1060/2
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே – திருமந்:1228/4
தோன்றிடும் வேண்டுரு ஆகிய தூய் நெறி
ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல் கலை – திருமந்:1238/1,2
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே – திருமந்:1239/4
நெறி அதுவாய் நின்ற நேரிழையாளை – திருமந்:1240/1
நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று – திருமந்:1443/1
நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றி – திருமந்:1457/1
நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே – திருமந்:1471/4
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர் – திருமந்:1487/3
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா – திருமந்:1537/3
வீறு பரநெறி இல்லா நெறி அன்றே – திருமந்:1537/4
அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே – திருமந்:1541/4
ஆதியும் அ நெறி ஆகி நின்றானே – திருமந்:1542/4
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை – திருமந்:1543/2
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம் – திருமந்:1543/3
அ நெறி நாடி அமரர் முனிவரும் – திருமந்:1546/1
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார் – திருமந்:1546/3
செல் நெறி செல்லார் திகைக்கின்றவாறே – திருமந்:1546/4
சிர நெறி தேடி திரிந்த அந்நாளும் – திருமந்:1562/2
உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும் – திருமந்:1562/3
தர நெறி நின்ற தனிச்சுடர் தானே – திருமந்:1562/4
குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே – திருமந்:1603/4
வைத்த பசு பாச மாற்று நெறி வைகி – திருமந்:1688/1
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே – திருமந்:1696/2
வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால் – திருமந்:1702/1
பிறவா நெறி தந்த பேரருளாளன் – திருமந்:1803/1
போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி
ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை – திருமந்:1898/2,3
தூ நெறி கண்ட சுவடு நடு எழும் – திருமந்:1901/1
பூ நெறி கண்டது பொன் அகமாய் நிற்கும் – திருமந்:1901/2
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி – திருமந்:1901/3
நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே – திருமந்:1901/4
தான் இ வகையே புவியோர் நெறி தங்கி – திருமந்:1904/1
வந்த வியாபி எனலாய அ நெறி
கந்தம் அது ஆகிய காரண காரியம் – திருமந்:1927/2,3
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி
செய்க வலமிடம் தீர்ந்து விடுக்கவே – திருமந்:1941/3,4
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே – திருமந்:1944/4
கணு இன்றி வேதாகம நெறி காணான் – திருமந்:2044/2
நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே – திருமந்:2103/4
ஐம்மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர் – திருமந்:2257/3
நெறி சோகம் என்போர்க்கு – திருமந்:2476/3
தூயது வாளா வைத்தது தூ நெறி
தூயது வாளா நாதன் திருநாமம் – திருமந்:2555/1,2
தீ நெறி செல்வான் திரிகின்றவாறே – திருமந்:2562/4
ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி – திருமந்:2821/1
ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல் – திருமந்:2821/1,2
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல் – திருமந்:2821/2
ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே – திருமந்:2839/4
தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை – திருமந்:2867/1,2
எல்லை மயங்கி கிடந்த இரு நெறி
எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு – திருமந்:2912/2,3
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது – திருமந்:2931/3
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே – திருமந்:3006/4
மேல்


நெறிக்கு (1)

அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது – திருமந்:259/2
மேல்


நெறிக்கும் (1)

நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் – திருமந்:1785/2
மேல்


நெறிக்கே (1)

நாணில் நரக நெறிக்கே வழிசெயும் – திருமந்:1463/3
மேல்


நெறிதான் (1)

நெறிதான் மிக மிக நின்று அருள்செய்யும் – திருமந்:545/3
மேல்


நெறிநிற்றல் (2)

பேறு ஆன பாவனை பேணி நெறிநிற்றல்
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே – திருமந்:1434/3,4
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை – திருமந்:1849/2
மேல்


நெறிநின்றது (1)

தான் எங்குமாய் நெறிநின்றது தான் விட்டு – திருமந்:2207/3
மேல்


நெறிநின்று (1)

நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே – திருமந்:2182/4
மேல்


நெறிப்பட (1)

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில் – திருமந்:575/2
மேல்


நெறியாம் (2)

நெறியாம் பராநந்தி நீடு அருள் ஒன்றும் – திருமந்:2638/3
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும் – திருமந்:2679/2,3
மேல்


நெறியாமே (1)

துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே – திருமந்:216/4
மேல்


நெறியாய் (3)

சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை – திருமந்:2623/3
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே – திருமந்:2807/4
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள் – திருமந்:2992/3
மேல்


நெறியாய (1)

நெறியாய சித்தம் நினைந்து இருந்தாளே – திருமந்:1133/4
மேல்


நெறியால் (1)

குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து – திருமந்:227/2
மேல்


நெறியாலே (1)

குரு நெறியாலே குரு பதம் சேர்ந்து – திருமந்:232/2
மேல்


நெறியான (2)

நெறியான அன்பர் நிலை அறிந்தாரே – திருமந்:617/4
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே – திருமந்:2471/4
மேல்


நெறியில் (4)

இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்றுமுப்பத்துமூன்றுடன் அஞ்சாய் – திருமந்:701/2,3
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழ வழி நாடி – திருமந்:1560/1,2
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும் – திருமந்:1617/2
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு – திருமந்:1617/3
மேல்


நெறியின் (1)

நெறியின் நெருஞ்சில் முள் பாயகிலாவே – திருமந்:1617/4
மேல்


நெறியுற்று (1)

உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால் – திருமந்:1455/3
மேல்


நெறியே (2)

மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும் – திருமந்:244/2
ஏறு நெறியே மலத்தை எரித்தலால் – திருமந்:2066/1
மேல்


நெறியை (1)

நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான் – திருமந்:1617/1
மேல்


நெறிவந்து (1)

நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் – திருமந்:1080/2
மேல்


நெறிவழியே (2)

நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை – திருமந்:2350/2
நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று – திருமந்:2469/2

மேல்