ஈ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 6
ஈக 1
ஈகிலா 1
ஈங்கு 3
ஈச்சம் 1
ஈசத்துவம் 1
ஈசர் 3
ஈசர்க்கு 2
ஈசரை 1
ஈசற்காம் 1
ஈசற்கு 1
ஈசற்கும் 1
ஈசன் 128
ஈசனாம் 1
ஈசனும் 7
ஈசனே 2
ஈசனை 33
ஈசனோடு 2
ஈசானம் 2
ஈசானனும் 1
ஈசானனே 1
ஈசி 1
ஈட்டமும் 1
ஈட்டி 1
ஈட்டிய 1
ஈட்டியே 2
ஈட்டும் 2
ஈடாய் 1
ஈடான 1
ஈடு 1
ஈடே 1
ஈண்டி 1
ஈண்டு 1
ஈண்டே 1
ஈதலை 1
ஈதாந்தம் 1
ஈது 8
ஈந்த 4
ஈந்தால் 2
ஈந்து 2
ஈமத்துள் 1
ஈயப்பெறாதானே 1
ஈயலும் 1
ஈயார் 1
ஈயில் 2
ஈயின் 1
ஈயினும் 1
ஈர் 3
ஈர்க்கின்ற 1
ஈர்த்து 1
ஈர்ந்து 1
ஈரஞ்சு 1
ஈரண்டமே 1
ஈரம் 1
ஈரமும் 1
ஈராறாம் 1
ஈராறாய் 1
ஈராறு 18
ஈராறும் 2
ஈராறுள் 1
ஈராறே 3
ஈரிரண்டில் 1
ஈரும் 1
ஈரெட்டாம் 2
ஈரெட்டில் 1
ஈரெட்டு 4
ஈரெட்டும் 4
ஈரெட்டுள் 1
ஈரெட்டொடு 1
ஈரெண் 6
ஈரெண்மர் 1
ஈரெழுத்தாலே 1
ஈரேழில் 1
ஈரேழு 1
ஈரேழும் 3
ஈரை 1
ஈரைந்தாக 1
ஈரைந்தில் 2
ஈரைந்தினுள் 1
ஈரைந்து 6
ஈரைந்தும் 3
ஈரைந்துமே 1
ஈரைந்துள் 1
ஈரைந்தே 3
ஈரைந்தொடு 1
ஈரைந்தொடே 1
ஈரைம்பத்தெண் 1
ஈரொன்பதின்மரும் 1
ஈரொன்பான் 1
ஈவ 1
ஈவது 1
ஈவதும் 1
ஈவற்ற 1
ஈளையும் 1
ஈற்று 3
ஈறா 5
ஈறாம் 5
ஈறாய் 1
ஈறார் 1
ஈறாறின் 1
ஈறான 2
ஈறில் 1
ஈறு 16
ஈறும் 5
ஈறே 3
ஈன்ற 4
ஈன்றவள் 1
ஈன்றிட 1
ஈன்றிடும் 1
ஈன 1
ஈனம் 5
ஈனவர் 2

ஈ (6)

ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம் – திருமந்:910/2
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும் – திருமந்:911/3
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே – திருமந்:911/4
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும் – திருமந்:912/2
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும் – திருமந்:912/3
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே – திருமந்:912/4
மேல்


ஈக (1)

உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக
எள்ளத்தனையும் இடைவிடாதே நின்று – திருமந்:1693/2,3
மேல்


ஈகிலா (1)

இன்பம் அது கண்டும் ஈகிலா பேதைகள் – திருமந்:267/3
மேல்


ஈங்கு (3)

ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே – திருமந்:1749/4
இசைத்திடு பாச பற்று ஈங்கு அறுமாறே – திருமந்:2065/2
இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே – திருமந்:2585/4
மேல்


ஈச்சம் (1)

ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாறே – திருமந்:201/4
மேல்


ஈசத்துவம் (1)

ஈசத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம் – திருமந்:2063/1
மேல்


ஈசர் (3)

இடியும் முழக்கமும் ஈசர் உருவம் – திருமந்:20/3
காரிய காரண ஈசர் கடை முறை – திருமந்:398/2
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே – திருமந்:2232/4
மேல்


ஈசர்க்கு (2)

இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக – திருமந்:1855/2
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப – திருமந்:2183/3
மேல்


ஈசரை (1)

பசைந்து எழும் ஈசரை பாசத்து உள் ஏக – திருமந்:1590/2
மேல்


ஈசற்காம் (1)

ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே – திருமந்:1309/1
மேல்


ஈசற்கு (1)

அங்கி அ ஈசற்கு கை அம்பு தானே – திருமந்:421/4
மேல்


ஈசற்கும் (1)

தோம் மாறும் ஈசற்கும் தூய குரவற்கும் – திருமந்:507/2
மேல்


ஈசன் (128)

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை – திருமந்:8/2
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே – திருமந்:14/3,4
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே – திருமந்:17/4
அந்தம்_இல் ஈசன் அருள் நமக்கே என்று – திருமந்:27/2
அ பரிசு ஈசன் அருள் பெறலாமே – திருமந்:36/4
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே – திருமந்:39/4
குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும் – திருமந்:40/1
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் – திருமந்:58/3
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் – திருமந்:71/1,2
ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் – திருமந்:105/1
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார் – திருமந்:105/3
நீதி-கண் ஈசன் நெடுமால் அயன் என்று – திருமந்:110/3
சாலும் அ ஈசன் சலவியன் ஆகிலும் – திருமந்:182/3
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறிந்தான் அறியும் அளவு அறிவாரே – திருமந்:256/3,4
கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர் – திருமந்:266/1
துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர் – திருமந்:266/2
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் – திருமந்:280/1
ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை – திருமந்:288/1
ஈசன் வந்து எம்மிடை ஈட்டி நின்றானே – திருமந்:288/4
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே – திருமந்:300/3,4
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் – திருமந்:304/1
புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம் – திருமந்:308/1,2
ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி – திருமந்:323/2
கெடுகின்றது எம் பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய் – திருமந்:337/2,3
புரிவுடையாளர்க்கு பொய் அலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசு அறிவானே – திருமந்:348/3,4
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம் – திருமந்:400/3
அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது – திருமந்:421/1
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது – திருமந்:421/2
அங்கி செய்து ஈசன் அசுரரை சுட்டது – திருமந்:421/3
இலை பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலை பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி – திருமந்:467/1,2
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே – திருமந்:529/4
ஈசன் அடியார் இதயம் கலங்கிட – திருமந்:534/1
கூவிக்கொண்டு ஈசன் குடி இருந்தானே – திருமந்:579/4
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் – திருமந்:608/1
ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே – திருமந்:608/4
கதி கொன்றை ஈசன் கழல் சேரலாமே – திருமந்:610/4
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே – திருமந்:634/4
தேவருள் ஈசன் திருமால் பிரமனும் – திருமந்:657/3
பண்டை அ ஈசன் தத்துவம் ஆகுமே – திருமந்:684/4
சுழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன்
கழல் கொள் திருவடி காண்குறில் ஆங்கே – திருமந்:737/2,3
எதிரவன் ஈசன் இடம் அது தானே – திருமந்:868/4
எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம் – திருமந்:989/3
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் – திருமந்:1099/2
எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனை காண அனாதியும் ஆமே – திருமந்:1123/3,4
உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி – திருமந்:1170/2,3
படியது வாருனை பைங்கழல் ஈசன்
வடிவு அது ஆனந்தம் வந்து முறையே – திருமந்:1197/2,3
ஆம் அயன் மலரான் ஈசன் சதாசிவன் – திருமந்:1208/1
ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி – திருமந்:1241/1
மான கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே – திருமந்:1453/4
இது பணி மானுடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே – திருமந்:1454/3,4
முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன்
குடி மன்னராய் குற்றம் அற்று நின்றாரே – திருமந்:1601/3,4
இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும் – திருமந்:1641/2
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே – திருமந்:1653/4
எது உணரா வகை நின்றனன் ஈசன்
புது உணர்வான புவனங்கள் எட்டும் – திருமந்:1722/2,3
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் – திருமந்:1724/3
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும் – திருமந்:1731/1,2
என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது – திருமந்:1747/2
குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன்
அரா நின்ற செஞ்சடை அங்கியும் நீரும் – திருமந்:1761/2,3
ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே – திருமந்:1768/4
ஒன்று என கண்டே எம் ஈசன் ஒருவனை – திருமந்:1775/1
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும் – திருமந்:1791/2
இருளே வெளியே எனும் எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே – திருமந்:1806/3,4
தவம் ஆன ஐம்முகன் ஈசன் அரனும் – திருமந்:1807/2
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் – திருமந்:1827/2
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன் – திருமந்:1837/2
பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி – திருமந்:1839/2
இயங்கும் உலகினில் ஈசன் அடியார் – திருமந்:1873/1
வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன்
தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம் – திருமந்:1889/1,2
தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே – திருமந்:1908/4
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும் – திருமந்:1947/2
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி – திருமந்:1975/3
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை – திருமந்:1992/2
கனி சுடராய் நின்ற கயிலையில் ஈசன்
நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே – திருமந்:1997/3,4
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் – திருமந்:2000/3
செய் கரி ஈசன் அனாதியே செய்ததே – திருமந்:2007/4
இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி – திருமந்:2010/3
நாள்-தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார் – திருமந்:2022/1
நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார் – திருமந்:2022/2
நாள்-தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால் – திருமந்:2022/3
என் இது ஈசன் இயல்பு அறியாரே – திருமந்:2073/4
கல்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை – திருமந்:2082/2
என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும் – திருமந்:2088/2
ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம் – திருமந்:2190/2
ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம் – திருமந்:2191/2
வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே – திருமந்:2211/4
ஆன அ ஈசன் அதீதத்தில் வித்தையா – திருமந்:2218/1
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே – திருமந்:2234/4
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் – திருமந்:2305/2
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் – திருமந்:2374/2
பதியான ஈசன் பகர்ந்த இரண்டு – திருமந்:2404/2
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி – திருமந்:2417/2,3
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்கு – திருமந்:2434/3
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர் அறிவாரே – திருமந்:2480/3,4
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத்தால் அன்றி – திருமந்:2504/3
இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில் – திருமந்:2515/2
மதிக்கும் குபேரன் வட திசை ஈசன்
நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே – திருமந்:2527/3,4
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் – திருமந்:2546/2
ஈசன் இருந்த இடம் எளிதாமே – திருமந்:2613/4
தவா கடல் ஈசன் தரித்து நின்றானே – திருமந்:2617/4
அவன் இவன் ஈசன் என்று அன்புற நாடி – திருமந்:2620/1
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் – திருமந்:2620/2
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி – திருமந்:2649/2
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி – திருமந்:2684/1
களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே – திருமந்:2688/4
இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன்
துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி – திருமந்:2689/1,2
படருறு காட்சி பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில் – திருமந்:2694/2,3
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே – திருமந்:2695/4
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற – திருமந்:2696/1
உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன்
சிகராதி தான் சிவவேதமே கோண – திருமந்:2700/2,3
பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம் – திருமந்:2734/2,3
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே – திருமந்:2737/4
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை – திருமந்:2785/2
உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை – திருமந்:2804/1
குருநிலமாய் நின்ற கொள்கையான் ஈசன்
பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன் – திருமந்:2805/2,3
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனி மொழி மாதர் – திருமந்:2832/2,3
இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே – திருமந்:2909/4
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது – திருமந்:2931/3
பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனை – திருமந்:2964/1
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து – திருமந்:2973/1
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி – திருமந்:3000/2
பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன்
பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான – திருமந்:3002/2,3
நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன்
பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே – திருமந்:3007/2,3
காற்றது ஈசன் கலந்து நின்றானே – திருமந்:3009/4
ஈசன் என்று எட்டு திசையும் இயங்கின – திருமந்:3014/1
நிறம் பல எ வண்ணம் அ வண்ணம் ஈசன்
அறம் பல எ வண்ணம் அ வண்ணம் இன்பம் – திருமந்:3020/1,2
கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன்
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே – திருமந்:3034/3,4
பலவுடன் சென்ற அ பார் முழுது ஈசன்
செலவு அறிவார் இல்லை சேயன் அணியன் – திருமந்:3043/1,2
எது அறியா வகை நின்றவன் ஈசன்
பொது அது ஆன புவனங்கள் எட்டும் – திருமந்:3044/2,3
மேல்


ஈசனாம் (1)

தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே – திருமந்:2286/4
மேல்


ஈசனும் (7)

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்-கண் – திருமந்:771/1
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே – திருமந்:771/3,4
ஓரெழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே – திருமந்:970/4
ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்
மா மது மண்டலம் மாருதம் ஆதியும் – திருமந்:1223/1,2
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே – திருமந்:1728/4
நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை – திருமந்:2163/3
முடி தொழ ஈசனும் முன் நின்று அருளி – திருமந்:2583/2
மேல்


ஈசனே (2)

இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே – திருமந்:1909/4
வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே – திருமந்:2928/4
மேல்


ஈசனை (33)

எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை – திருமந்:13/2,3
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல் – திருமந்:23/2,3
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை
பின்னை உலகம் படைத்த பிரமனும் – திருமந்:97/2,3
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே – திருமந்:213/4
அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில் – திருமந்:277/3
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை
மட்டு கலப்பது மஞ்சனம் ஆமே – திருமந்:289/3,4
காண்கின்ற கண் ஒளி காதல்செய்து ஈசனை
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை – திருமந்:434/1,2
ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்று அருள்செய்திடும் ஈண்டே – திருமந்:437/1,2
கடை வைத்த ஈசனை கைகலந்தேனே – திருமந்:470/4
எளியன் என்று ஈசனை நீசர் இகழில் – திருமந்:526/3
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனை
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும் – திருமந்:769/2,3
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் – திருமந்:771/2
உணர்ந்து இலர் ஈசனை ஊழிசெய் சத்தி – திருமந்:1126/1
உணர்ந்து ஒழிந்தேன் அவனாம் எங்கள் ஈசனை
புணர்ந்து ஒழிந்தேன் புவனாபதியாரை – திருமந்:1250/1,2
கருக்கொண்ட ஈசனை கண்டுகொண்டேனே – திருமந்:1589/4
ஏத்தினர் எண்_இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று – திருமந்:1715/1,2
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே – திருமந்:1782/4
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான் அறிந்தார் அறியாது மயங்கினர் – திருமந்:1797/1,2
கனை கழல் ஈசனை காண அரிதாம் – திருமந்:1826/2
கனை கழல் ஈசனை காண்குற வல்லார் – திருமந்:1826/3
எண்_இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே – திருமந்:1828/3,4
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சு-மின் நச்சி நம என்று நாமத்தை – திருமந்:1850/1,2
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன் – திருமந்:2037/2
இ பரிசே கமலத்து உறை ஈசனை
மெய் பரிசே வினவாது இருந்தோமே – திருமந்:2092/3,4
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2102/2
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் – திருமந்:2108/2
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன் – திருமந்:2115/2,3
இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே – திருமந்:2432/4
இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில் – திருமந்:2515/2
துளங்கு ஒளி ஈசனை சொல்லும் எப்போதும் – திருமந்:2687/2
எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகு மனத்தராய் – திருமந்:2709/1,2
என் பொன் மணியை இறைவனை ஈசனை
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே – திருமந்:2980/3,4
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனை
சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே – திருமந்:3019/3,4
மேல்


ஈசனோடு (2)

உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் – திருமந்:2264/3
ஈசனோடு ஆயினும் ஆசை அறு-மின்கள் – திருமந்:2615/2
மேல்


ஈசானம் (2)

நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும் – திருமந்:1742/1
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு – திருமந்:1825/3
மேல்


ஈசானனும் (1)

ஆகிய தூய ஈசானனும் ஆமே – திருமந்:2416/4
மேல்


ஈசானனே (1)

அத்தகு கோரம் மகுடத்து ஈசானனே – திருமந்:1741/4
மேல்


ஈசி (1)

இருள் புரை ஈசி மனோன்மணி என்ன – திருமந்:1046/3
மேல்


ஈட்டமும் (1)

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும் – திருமந்:608/1,2
மேல்


ஈட்டி (1)

ஈசன் வந்து எம்மிடை ஈட்டி நின்றானே – திருமந்:288/4
மேல்


ஈட்டிய (1)

ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும் – திருமந்:171/1
மேல்


ஈட்டியே (2)

எய் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் – திருமந்:228/2
வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் – திருமந்:260/3
மேல்


ஈட்டும் (2)

ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே – திருமந்:56/4
ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே – திருமந்:2301/4
மேல்


ஈடாய் (1)

விண்-நின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு – திருமந்:113/1
மேல்


ஈடான (1)

இருந்த இடத்திடை ஈடான மாயை – திருமந்:2278/2
மேல்


ஈடு (1)

ஈடு இல் புகழோன் எழுக என்றானே – திருமந்:352/4
மேல்


ஈடே (1)

இனதாகும் தொந்த தசி பதத்து ஈடே – திருமந்:2466/4
மேல்


ஈண்டி (1)

ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே – திருமந்:1211/4
மேல்


ஈண்டு (1)

ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே – திருமந்:1793/4
மேல்


ஈண்டே (1)

வெளிப்பட்டு நின்று அருள்செய்திடும் ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை – திருமந்:437/2,3
மேல்


ஈதலை (1)

இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார் – திருமந்:264/2
மேல்


ஈதாந்தம் (1)

ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே – திருமந்:225/4
மேல்


ஈது (8)

சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே – திருமந்:532/4
ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும் – திருமந்:2209/1
ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் – திருமந்:2209/2
ஈது என்று அறியும் அறிவை அறிந்த பின் – திருமந்:2209/3
ஈது என்று அறியும் இயல்பு உடையோனே – திருமந்:2209/4
சென்னியது ஆன சிவயோகமாம் ஈது என்ன – திருமந்:2403/2
போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே – திருமந்:2846/2
ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி – திருமந்:3026/1
மேல்


ஈந்த (4)

உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை – திருமந்:259/3
எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும் – திருமந்:508/3
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த
திறம் ஏது என்று எண்ணி திகைத்து இருந்தேனே – திருமந்:1820/3,4
யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது – திருமந்:1859/2
மேல்


ஈந்தால் (2)

திலம் அத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால்
பல முத்தி சித்தி பரபோகமும் தரும் – திருமந்:501/1,2
நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும் அற்றே பரபோகமும் குன்றுமே – திருமந்:501/3,4
மேல்


ஈந்து (2)

சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே – திருமந்:505/3,4
ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி – திருமந்:1592/3
மேல்


ஈமத்துள் (1)

ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன் – திருமந்:222/2
மேல்


ஈயப்பெறாதானே (1)

பித்தான சீடனுக்கு ஈயப்பெறாதானே – திருமந்:1688/4
மேல்


ஈயலும் (1)

இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே – திருமந்:1692/4
மேல்


ஈயார் (1)

இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டி காவை வளர்க்கார் – திருமந்:264/2,3
மேல்


ஈயில் (2)

பட மாட கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாட கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா – திருமந்:1857/1,2
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் – திருமந்:1860/1
மேல்


ஈயின் (1)

நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
பட மாட கோயில் பகவற்கு அது ஆமே – திருமந்:1857/3,4
மேல்


ஈயினும் (1)

மண் மலையத்தனை மா தனம் ஈயினும்
அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய் – திருமந்:508/1,2
மேல்


ஈர் (3)

இணையார் இணை குழை ஈர் அணை முத்திரை – திருமந்:1423/2
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அ ஒளி – திருமந்:1991/1
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி – திருமந்:2759/2
மேல்


ஈர்க்கின்ற (1)

பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற
பெண் உடை ஆணிடை பேச்சு அற்றவாறே – திருமந்:1159/3,4
மேல்


ஈர்த்து (1)

இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்து
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் – திருமந்:1638/2,3
மேல்


ஈர்ந்து (1)

எண்ணுறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே – திருமந்:184/4
மேல்


ஈரஞ்சு (1)

இணையார் கழல் இணை ஈரஞ்சு அது ஆகும் – திருமந்:898/2
மேல்


ஈரண்டமே (1)

முத்தண்ட ஈரண்டமே முடி ஆயினும் – திருமந்:3004/1
மேல்


ஈரம் (1)

ஈரம் உடையவர் காண்பார் இணை அடி – திருமந்:273/2
மேல்


ஈரமும் (1)

ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து – திருமந்:2091/2
மேல்


ஈராறாம் (1)

ஏர் ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண் சித்தி – திருமந்:648/2
மேல்


ஈராறாய் (1)

மதி-தனில் ஈராறாய் மன்னும் கலையின் – திருமந்:645/1
மேல்


ஈராறு (18)

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர் – திருமந்:623/1,2
பதியும் ஈராறு ஆண்டு பற்று அற பார்க்கில் – திருமந்:645/3
திதமான ஈராறு சித்திகள் ஆமே – திருமந்:645/4
ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை – திருமந்:722/1
இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால் – திருமந்:740/2
என இருபத்தஞ்சும் ஈராறு அதனால் – திருமந்:744/2
பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே – திருமந்:776/4
ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை – திருமந்:865/1
திரு அம்பலம் ஆக ஈராறு கீறி – திருமந்:904/2
இருந்த இ வட்டங்கள் ஈராறு இரேகை – திருமந்:914/1
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி – திருமந்:914/2
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று – திருமந்:914/3
ஏன்று உள ஈராறு எழுகலை உச்சியில் – திருமந்:1187/2
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் – திருமந்:1257/1
நேர் என ஈராறு நீதி நெடும் போகம் – திருமந்:1433/3
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் – திருமந்:1705/1
சமயத்து எழுந்த இராசி ஈராறு உள – திருமந்:1734/2
இயம்புவன் ஈராறு இருநிலத்தோர்க்கே – திருமந்:2652/4
மேல்


ஈராறும் (2)

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீ கதிர் – திருமந்:856/1
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும் – திருமந்:1704/1,2
மேல்


ஈராறுள் (1)

எட்டெட்டு அனலின் கலை ஆகும் ஈராறுள்
சுட்டப்படும் கதிரோனுக்கும் சூழ் கலை – திருமந்:855/1,2
மேல்


ஈராறே (3)

நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈராறே – திருமந்:646/4
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே – திருமந்:648/4
ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே – திருமந்:2191/4
மேல்


ஈரிரண்டில் (1)

செய்திடும் மற்று அவை ஈரிரண்டில் திறம் – திருமந்:1924/3
மேல்


ஈரும் (1)

ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின் – திருமந்:1564/1
மேல்


ஈரெட்டாம் (2)

கட்டப்படும் ஈரெட்டாம் மதி கலை – திருமந்:855/3
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் – திருமந்:1705/1
மேல்


ஈரெட்டில் (1)

சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே – திருமந்:1980/4
மேல்


ஈரெட்டு (4)

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் – திருமந்:568/1
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே – திருமந்:573/1
மிக்கு ஈரெட்டு அக்கரம் அ முதல் மேல் இடே – திருமந்:1312/4
அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டு இதழாம் – திருமந்:1979/3
மேல்


ஈரெட்டும் (4)

பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈரெட்டும்
மாறா கதிர்கொள்ளும் மற்று அங்கி கூடவே – திருமந்:853/3,4
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீ கதிர் – திருமந்:856/1
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல் – திருமந்:1070/1
காந்தாரம் ஆறும் கலை முதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும் – திருமந்:1198/2,3
மேல்


ஈரெட்டுள் (1)

வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம் – திருமந்:598/1
மேல்


ஈரெட்டொடு (1)

ஆகின்ற ஈரெட்டொடு ஆறிரண்டு ஈரைந்துள் – திருமந்:852/2
மேல்


ஈரெண் (6)

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற – திருமந்:185/1
மேதாதி ஈரெண் கலை செல்லம் மீது ஒளி – திருமந்:709/3
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற – திருமந்:863/1
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி – திருமந்:1492/2
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி – திருமந்:1707/2
அகராதி ஈரெண் கலந்த பரையும் – திருமந்:2700/1
மேல்


ஈரெண்மர் (1)

வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் – திருமந்:2888/2,3
மேல்


ஈரெழுத்தாலே (1)

ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவராய் – திருமந்:885/2
மேல்


ஈரேழில் (1)

ஆடிய ஈறாறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து – திருமந்:2680/2,3
மேல்


ஈரேழு (1)

தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில் – திருமந்:1749/2
மேல்


ஈரேழும் (3)

எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிட – திருமந்:917/2,3
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் – திருமந்:1018/2
தான் ஆன ஆறும் ஈரேழும் சமகலை – திருமந்:1174/2
மேல்


ஈரை (1)

அவா அறு ஈரை வகை அங்கம் ஆறும் – திருமந்:1899/2
மேல்


ஈரைந்தாக (1)

அந்த முறை ஈரைந்தாக மதித்திட்டு – திருமந்:2490/2
மேல்


ஈரைந்தில் (2)

நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால் – திருமந்:595/1
ஈரைந்தில் பூரித்து தியான உருத்திரன் – திருமந்:648/1
மேல்


ஈரைந்தினுள் (1)

தறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே – திருமந்:469/4
மேல்


ஈரைந்து (6)

நேமி ஈரைந்து நியமத்தன் ஆமே – திருமந்:556/4
ஏகம் இருதயம் ஈரைந்து திண் புயம் – திருமந்:1217/2
சமயத்து எழுந்த அவத்தை ஈரைந்து உள – திருமந்:1734/1
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை – திருமந்:2144/1
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை – திருமந்:2144/1
ஈரைந்து அவத்தை இசை மு துரியத்துள் – திருமந்:2469/1
மேல்


ஈரைந்தும் (3)

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்று எட்டுக்கும் – திருமந்:783/1
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் – திருமந்:1704/1
மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்த கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் – திருமந்:2144/2,3
மேல்


ஈரைந்துமே (1)

ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே – திருமந்:2510/4
மேல்


ஈரைந்துள் (1)

ஆகின்ற ஈரெட்டொடு ஆறிரண்டு ஈரைந்துள்
ஏகின்ற அ கலை எல்லாம் இடைவழி – திருமந்:852/2,3
மேல்


ஈரைந்தே (3)

காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே – திருமந்:782/4
ஏதல் இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே – திருமந்:1664/4
கணுவில் இ நான்கும் கலந்த ஈரைந்தே – திருமந்:2468/4
மேல்


ஈரைந்தொடு (1)

ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறி – திருமந்:455/2
மேல்


ஈரைந்தொடே (1)

ஈறில் இனன் கலை ஈரைந்தொடே மதித்து – திருமந்:878/3
மேல்


ஈரைம்பத்தெண் (1)

எழுகின்ற ஈரைம்பத்தெண் அற்று இருந்ததே – திருமந்:742/4
மேல்


ஈரொன்பதின்மரும் (1)

வேதனும் ஈரொன்பதின்மரும் மேவி நின்று – திருமந்:1218/3
மேல்


ஈரொன்பான் (1)

பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு – திருமந்:2540/3
மேல்


ஈவ (1)

ஈவ பெரும் பிழை என்று கொளீரே – திருமந்:506/4
மேல்


ஈவது (1)

ஈவது யோக இயம நியமங்கள் – திருமந்:506/1
மேல்


ஈவதும் (1)

இடுவதும் ஈவதும் எண்ணு-மின் இன்பம் – திருமந்:268/3
மேல்


ஈவற்ற (1)

ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி – திருமந்:2932/3
மேல்


ஈளையும் (1)

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் – திருமந்:263/1
மேல்


ஈற்று (3)

ஈற்று கரடிக்கு எதிர்ப்பட்டதன் ஒக்கும் – திருமந்:1642/2
நீடிய ஈற்று பசு அது ஆமே – திருமந்:2109/4
ஈற்று பசுக்கள் இருபத்துநால் உள – திருமந்:2875/1
மேல்


ஈறா (5)

நினைத்திடும் அ சிரீம் அ கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறும் – திருமந்:1324/1,2
பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு – திருமந்:1339/1,2
மெய்ப்பொருள் ஔ முதல் ஹௌ அது ஈறா
கைப்பொருள் ஆக கலந்து எழு சக்கரம் – திருமந்:1354/1,2
விளக்கு ஒளி ஸௌ முதல் ஔ அது ஈறா
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப்பொருள் ஆகும் – திருமந்:1359/1,2
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே – திருமந்:1807/3,4
மேல்


ஈறாம் (5)

பார் அணியும் ஹிரீம் முன் ஸ்ரீம் ஈறாம்
தார் அணியும் புகழ் தையல் நல்லாள்-தனை – திருமந்:1329/2,3
தான் அது கம்இரீம் கௌ அது ஈறாம்
நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம் – திருமந்:1344/1,2
ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறாம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்கு – திருமந்:1349/1,2
ஈறாம் அதீத துரியத்து இவன் எய்த – திருமந்:2263/2
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே – திருமந்:2701/4
மேல்


ஈறாய் (1)

செப்பும் சிவம் ஈறாய் தேர்ந்து கொள்ளீரே – திருமந்:2143/4
மேல்


ஈறார் (1)

ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன் – திருமந்:2291/3
மேல்


ஈறாறின் (1)

ஆடிய ஈறாறின் அந்தமும் ஈரேழில் – திருமந்:2680/2
மேல்


ஈறான (2)

ஈறான வாசியில் கூட்டும் அது அன்றோ – திருமந்:2499/3
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்து – திருமந்:2569/2
மேல்


ஈறில் (1)

ஈறில் இனன் கலை ஈரைந்தொடே மதித்து – திருமந்:878/3
மேல்


ஈறு (16)

பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு
திண்ணிய சிந்தை-தன் தென்னனும் ஆமே – திருமந்:1078/3,4
இந்துவின் மேலுற்ற ஈறு அது தானே – திருமந்:1188/4
ஈறு அது தான் முதல் எண்ணிரண்டு ஆயிரம் – திருமந்:1189/1
இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாக – திருமந்:1190/1
அந்தமும் ஈறு முதலா நவை அற – திருமந்:1266/1
ஐ முதலாக அமர்ந்து இரீம் ஈறு ஆகும் – திருமந்:1334/2
இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில் – திருமந்:1539/3
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால் – திருமந்:2066/2
ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து – திருமந்:2160/3
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே – திருமந்:2190/4
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே – திருமந்:2197/4
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த – திருமந்:2345/2
உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து – திருமந்:2383/3
ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்திட்டு – திருமந்:2419/3
ஈறு அதில் பண்டை பரன் உண்மை செய்யுமே – திருமந்:2478/4
ஈறு ஆன கன்னி குமரியே காவிரி – திருமந்:2755/1
மேல்


ஈறும் (5)

அளவு_இல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவு இயல் காலமும் நாலும் உணரில் – திருமந்:103/1,2
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே – திருமந்:192/4
அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகல் இடத்து ஆதி பிரானை – திருமந்:1125/1,2
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறும்
நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே – திருமந்:1324/2,3
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே – திருமந்:1426/3,4
மேல்


ஈறே (3)

ஏன்றனள் ஏழிரண்டு இந்துவொடு ஈறே – திருமந்:1187/4
நவாக்கரி அ கிலீ சௌ முதல் ஈறே – திருமந்:1319/4
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே – திருமந்:2748/4
மேல்


ஈன்ற (4)

வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திட – திருமந்:719/3
கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பை குலாம் கன்னி – திருமந்:1177/1
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி – திருமந்:1227/1
தாமே சகலமும் ஈன்ற அ தையலும் – திருமந்:1342/2
மேல்


ஈன்றவள் (1)

ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை – திருமந்:2714/2
மேல்


ஈன்றிட (1)

மாயை கைத்தாயாக மா மாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே – திருமந்:2268/1,2
மேல்


ஈன்றிடும் (1)

ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல் கலை – திருமந்:1238/2
மேல்


ஈன (1)

ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி – திருமந்:2061/1
மேல்


ஈனம் (5)

ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும் – திருமந்:1481/3
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும் – திருமந்:1656/2
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே – திருமந்:2298/4
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து – திருமந்:2320/3
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை – திருமந்:2324/3
மேல்


ஈனவர் (2)

ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு – திருமந்:1072/2
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே – திருமந்:1656/4

மேல்