ஓ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 5
ஓங்க 4
ஓங்கார 2
ஓங்காரத்தால் 1
ஓங்காரத்து 4
ஓங்காரத்துள்ளே 2
ஓங்காரம் 6
ஓங்காரா 1
ஓங்காரி 1
ஓங்கி 15
ஓங்கிட 3
ஓங்கிடில் 1
ஓங்கிய 9
ஓங்கியே 2
ஓங்கின 1
ஓங்கு 4
ஓங்கும் 6
ஓங்குமே 1
ஓசமும் 1
ஓசனை 1
ஓசை 20
ஓசையில் 1
ஓசையின் 1
ஓசையின்-நின்று 1
ஓசையும் 4
ஓசையே 1
ஓசையை 1
ஓட்டமும் 1
ஓட்டி 4
ஓட்டிட 1
ஓட்டு 2
ஓட 3
ஓடா 1
ஓடாமே 1
ஓடி 17
ஓடிச்சென்று 1
ஓடிட 4
ஓடிடில் 2
ஓடிடுமாகில் 1
ஓடிப்போவர்கள் 1
ஓடிய 2
ஓடில் 5
ஓடிவந்து 1
ஓடின் 1
ஓடினன் 1
ஓடினார் 1
ஓடு 1
ஓடுதல் 1
ஓடும் 7
ஓடுமே 1
ஓடுவர் 2
ஓத்தரந்து 1
ஓத 8
ஓதம் 3
ஓதலும் 3
ஓதா 1
ஓதார் 1
ஓதி 20
ஓதிட 1
ஓதிடில் 1
ஓதிடின் 1
ஓதிடும் 3
ஓதிடே 3
ஓதிபால் 1
ஓதிய 6
ஓதியும் 1
ஓதியே 3
ஓதியை 2
ஓதில் 2
ஓதிலே 1
ஓதினள் 1
ஓதினார் 1
ஓதினால் 1
ஓதினும் 1
ஓது 2
ஓது-மின் 3
ஓதும் 21
ஓதுமே 1
ஓதுவது 1
ஓதுற்ற 1
ஓதே 1
ஓம் 27
ஓம்பா 1
ஓம்பி 2
ஓம்புகின்றான் 1
ஓம்புகின்றேனே 1
ஓம 3
ஓமத்தால் 1
ஓமத்திலே 1
ஓமத்திலேயும் 1
ஓமத்துள் 1
ஓமத்தோர் 1
ஓமம் 1
ஓமமும் 1
ஓமய 1
ஓமயம் 1
ஓய்த்திடும் 1
ஓயா 2
ஓயும் 2
ஓர் 201
ஓர்க்கின்ற 1
ஓர்ந்திடும் 2
ஓர்ந்து 6
ஓர 2
ஓரா 2
ஓராது 1
ஓராதோன் 1
ஓரார் 7
ஓரான் 2
ஓரில் 1
ஓரினும் 1
ஓரும் 7
ஓரெழுத்தாலே 2
ஓரெழுத்து 2
ஓரெழுத்துள் 1
ஓலக்கம் 2
ஓலம் 1
ஓலமிட்டு 1
ஓலை 2
ஓலையான் 1
ஓலையில் 1
ஓவ 1
ஓவல் 2
ஓவற 2
ஓவாத 1
ஓவி 1
ஓவியம் 3
ஓவியராலும் 1
ஓவினும் 1
ஓவு 1
ஓவும் 3
ஓவுறு 1

ஓ (5)

மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும் – திருமந்:911/3
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே – திருமந்:911/4
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் – திருமந்:1045/2
ஓ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே – திருமந்:2389/4
ஓ உபசாந்தம் சிவமுத்தி ஆனந்தம் – திருமந்:2474/2
மேல்


ஓங்க (4)

அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே – திருமந்:106/3,4
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெரு வலி – திருமந்:350/2
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே – திருமந்:990/3,4
உருக்கொடு தன் நடு ஓங்க இ வண்ணம் – திருமந்:3042/2
மேல்


ஓங்கார (2)

ஓங்கார உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் – திருமந்:1012/1
ஓங்கார சீவ பரசிவ ரூபமே – திருமந்:2677/4
மேல்


ஓங்காரத்தால் (1)

சூல தலையினில் சூழும் ஓங்காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து – திருமந்:926/2,3
மேல்


ஓங்காரத்து (4)

ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று – திருமந்:1556/1
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி – திருமந்:2676/1
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு – திருமந்:2676/2
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம் – திருமந்:2676/3
மேல்


ஓங்காரத்துள்ளே (2)

ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள் – திருமந்:2677/1
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம் – திருமந்:2677/2
மேல்


ஓங்காரம் (6)

படுவது ஓங்காரம் பஞ்சாக்கரங்கள் – திருமந்:893/2
ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே – திருமந்:999/4
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே – திருமந்:1665/4
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம் – திருமந்:1752/1,2
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் – திருமந்:2299/2
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே – திருமந்:2676/4
மேல்


ஓங்காரா (1)

ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன – திருமந்:2677/3
மேல்


ஓங்காரி (1)

ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை – திருமந்:1073/1
மேல்


ஓங்கி (15)

உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும் – திருமந்:53/2,3
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே – திருமந்:61/4
வழிநடப்பார் வினை ஓங்கி நின்றாரே – திருமந்:265/4
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே – திருமந்:301/4
சேணாய் வான் ஓங்கி திருவுருவாய் அண்ட – திருமந்:374/2
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அ வழி – திருமந்:419/3
உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை – திருமந்:442/1
ஓங்கி வர முத்தி முந்தியவாறே – திருமந்:650/4
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:743/3,4
வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால் – திருமந்:785/3
ஓங்கி எழும் கலைக்குள் உள் உணர்வு ஆனவள் – திருமந்:1386/2
மேலாய விந்து சதாசிவம் மிக்கு ஓங்கி
பாலாய் பிரமன் அரி அமராபதி – திருமந்:2286/2,3
வேறான தானே அகரமாய் மிக்கு ஓங்கி
ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன் – திருமந்:2291/2,3
உகார முதலாக ஓங்கி உதித்து – திருமந்:2699/2
ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட – திருமந்:2764/2
மேல்


ஓங்கிட (3)

உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி – திருமந்:491/2
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிட
பட்டது மந்திரம் பான்மொழி பாலே – திருமந்:917/3,4
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்து எழுகின்றனள் கோல்வளைதானே – திருமந்:1173/3,4
மேல்


ஓங்கிடில் (1)

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும் – திருமந்:619/1,2
மேல்


ஓங்கிய (9)

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும் – திருமந்:523/1,2
ஓங்கிய அங்கி கீழ் ஒண் சுழுமுனை செல்ல – திருமந்:659/1
ஓங்கிய தன்னை உதம்பண்ணினாரே – திருமந்:842/4
உள் ஒளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள் – திருமந்:1196/1
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி – திருமந்:1244/2
ஓங்கிய ஆதியும் அந்தமுமாம் என – திருமந்:1749/3
ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி – திருமந்:1894/3
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் – திருமந்:2532/3
சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே – திருமந்:2694/1
மேல்


ஓங்கியே (2)

ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே – திருமந்:1180/3,4
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லா சிவகதி சேர்தல் விளையாட்டே – திருமந்:2060/3,4
மேல்


ஓங்கின (1)

வன்னி எழுத்து அவை வானுற ஓங்கின
வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம் – திருமந்:1256/2,3
மேல்


ஓங்கு (4)

முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை – திருமந்:94/3
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி – திருமந்:362/3
ஓங்கு பெரும் கடல் உள்ளுறு வானொடும் – திருமந்:390/1
உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் – திருமந்:1923/1
மேல்


ஓங்கும் (6)

இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின்றேனே – திருமந்:461/3,4
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் – திருமந்:1258/2
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் – திருமந்:1271/2
ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே – திருமந்:1940/4
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும்
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே – திருமந்:1976/3,4
அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன் – திருமந்:3006/1
மேல்


ஓங்குமே (1)

ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே – திருமந்:1072/4
மேல்


ஓசமும் (1)

பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி – திருமந்:1916/3
மேல்


ஓசனை (1)

ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது – திருமந்:611/3
மேல்


ஓசை (20)

திகை தெண் நீரில் கடல் ஒலி ஓசை
மிகை கொள அங்கி மிகாமை வைத்தானே – திருமந்:365/3,4
அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன்று ஒவ்வா – திருமந்:436/1,2
கடலொடு மேகம் களிறொடும் ஓசை
அட எழும் வீணை அண்டர் அண்டத்து – திருமந்:607/1,2
சுடர் மன்னு வேணு சுரிசங்கின் ஓசை
திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே – திருமந்:607/3,4
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர் – திருமந்:608/3
ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே – திருமந்:608/4
நாடியின் ஓசை நயனம் இருதயம் – திருமந்:657/1
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும் – திருமந்:767/3
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் – திருமந்:771/2
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் – திருமந்:771/3
ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே – திருமந்:771/4
பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில் – திருமந்:867/1
நாலாம் எழுத்து ஓசை ஞாலம் உருவது – திருமந்:971/1
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள் – திருமந்:1350/3
மணந்து எழும் ஓசை ஒளி அது காணும் – திருமந்:1373/3
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே – திருமந்:1751/4
உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான் – திருமந்:1994/1
வளி மேக மின் வில்லு வானக ஓசை
தெளிய விசும்பில் திகழ்தருவாறு போல் – திருமந்:2765/1,2
ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல் – திருமந்:2824/1
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் – திருமந்:3009/2
மேல்


ஓசையில் (1)

ஓசையில் ஏழும் ஒளியின்-கண் ஐந்தும் – திருமந்:723/1
மேல்


ஓசையின் (1)

ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் – திருமந்:2436/3
மேல்


ஓசையின்-நின்று (1)

ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி – திருமந்:3014/2
மேல்


ஓசையும் (4)

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்-கண் – திருமந்:771/1
தாடித்து எழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாகமங்களும் – திருமந்:2317/2,3
ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பல ஆன நட்டமும் – திருமந்:2760/1,2
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் – திருமந்:3009/2
மேல்


ஓசையே (1)

நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே – திருமந்:770/4
மேல்


ஓசையை (1)

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை – திருமந்:2115/1,2
மேல்


ஓட்டமும் (1)

ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை – திருமந்:604/3
மேல்


ஓட்டி (4)

ஓட்டி துரந்திட்டு அது வலியார் கொள – திருமந்:171/3
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் – திருமந்:254/1
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி
நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே – திருமந்:2009/3,4
நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி
புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன் – திருமந்:2923/1,2
மேல்


ஓட்டிட (1)

மழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட
வழிநடப்பார் வினை ஓங்கி நின்றாரே – திருமந்:265/3,4
மேல்


ஓட்டு (2)

ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார்களே – திருமந்:154/4
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த – திருமந்:2745/3
மேல்


ஓட (3)

ஓட வல்லார் தமரோடு நடாவுவன் – திருமந்:543/1
சத்து அசத்து ஓட தனித்தனி பாசமும் – திருமந்:2245/2
நரிகளை ஓட துரத்திய நாதர்க்கு – திருமந்:2276/3
மேல்


ஓடா (1)

நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு – திருமந்:1962/3
மேல்


ஓடாமே (1)

வெள்ளி உருகி பொன் வழி ஓடாமே
கள்ள தட்டானார் கரி இட்டு மூடினார் – திருமந்:834/1,2
மேல்


ஓடி (17)

கல்வி உடையார் கழிந்து ஓடி போகின்றார் – திருமந்:293/1
உவந்த பெரு வழி ஓடி வந்தானே – திருமந்:357/4
உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே – திருமந்:363/3,4
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே – திருமந்:454/4
விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடி
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே – திருமந்:600/3,4
தண்டுடன் ஓடி தலைப்பட்ட யோகிக்கு – திருமந்:612/2
தண்டுடன் ஓடி தலைப்பெய்த யோகிக்கு – திருமந்:752/1
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடில் – திருமந்:776/3
நடுவு நில்லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி – திருமந்:795/1,2
மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே – திருமந்:876/3,4
உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடி
சிரம்தரு தீவினை செய்வது அகற்றி – திருமந்:1322/2,3
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் – திருமந்:1379/2
அமுத புனல் ஓடி அங்கியின் மாள – திருமந்:1959/2
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு – திருமந்:1986/1
பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி – திருமந்:2034/3
குதித்து ஓடி போகின்ற கூற்றமும் சார்வாய் – திருமந்:2099/1
மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார்கட்கு – திருமந்:2305/3
மேல்


ஓடிச்சென்று (1)

ஓடிச்சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர் – திருமந்:661/1
மேல்


ஓடிட (4)

வாங்கி இரவி மதி வழி ஓடிட
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட – திருமந்:659/2,3
கூறும் மகாரம் குழல் வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே – திருமந்:765/3,4
எ சதுரத்தும் இடம் பெற ஓடிட
கைச்சதுரத்து கடந்து உள் ஒளிபெற – திருமந்:1145/2,3
கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே – திருமந்:1985/3,4
மேல்


ஓடிடில் (2)

இ வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அ வகை ஐம்பதே என்ன அறியலாம் – திருமந்:775/1,2
ஏ இரு நாளும் இயல்புற ஓடிடில்
பாய் இரு நாளும் பகை அற நின்றிடும் – திருமந்:778/1,2
மேல்


ஓடிடுமாகில் (1)

உதித்தது வே மிக ஓடிடுமாகில்
உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே – திருமந்:794/3,4
மேல்


ஓடிப்போவர்கள் (1)

காணகிலாதார் கழிந்து ஓடிப்போவர்கள்
காணகிலாதார் நயம் பேசிவிடுவார்கள் – திருமந்:761/1,2
மேல்


ஓடிய (2)

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே – திருமந்:177/1
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் – திருமந்:2174/2
மேல்


ஓடில் (5)

பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும் – திருமந்:479/1
பாய்ந்த பின் நால் ஓடில் பாரினில் எண்பதாம் – திருமந்:479/2
அளக்கும் வகை நாலும் அ வழியே ஓடில்
விளக்கும் ஒரு நாலும் மெய் பட நிற்கும் – திருமந்:779/1,2
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில்
களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே – திருமந்:779/3,4
காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும் – திருமந்:780/1,2
மேல்


ஓடிவந்து (1)

ஓடிவந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள் – திருமந்:352/1
மேல்


ஓடின் (1)

கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம் – திருமந்:2919/2
மேல்


ஓடினன் (1)

நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி – திருமந்:1941/3
மேல்


ஓடினார் (1)

தொழுது கொண்டு ஓடினார் தோட்ட குடிகள் – திருமந்:2869/3
மேல்


ஓடு (1)

குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர் – திருமந்:158/3
மேல்


ஓடுதல் (1)

அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும் – திருமந்:794/2
மேல்


ஓடும் (7)

உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே – திருமந்:623/4
ஓடும் குதிரை குசை திண்ணம் பற்று-மின் – திருமந்:1679/1
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் – திருமந்:1983/1
ஓடும் அவரோடு உள் இருபத்தைஞ்சும் – திருமந்:2185/2
ஓடும் உலகு உயிராகி நின்றானே – திருமந்:2651/4
ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட – திருமந்:2764/2
உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும் – திருமந்:2892/3
மேல்


ஓடுமே (1)

ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே – திருமந்:1631/4
மேல்


ஓடுவர் (2)

ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம் – திருமந்:576/2
பருகுவர் ஓடுவர் பார் பயன் கொள்வர் – திருமந்:2095/3
மேல்


ஓத்தரந்து (1)

மற்று அ வியாமளம் ஆகும்-கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே – திருமந்:63/3,4
மேல்


ஓத (8)

ஓத தகும் அறம் எல்லாம் உள தர்க்க – திருமந்:51/2
சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓத
சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும் – திருமந்:981/1,2
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே – திருமந்:1099/4
நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலம் தரும் தானே – திருமந்:1321/3,4
ஓத கடலும் உயிர்களுமாய் நிற்கும் – திருமந்:1570/2
ஓத தகும் எட்டு யோகாந்த அந்தமும் – திருமந்:2370/3
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவை – திருமந்:2885/2,3
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர் – திருமந்:2987/3
மேல்


ஓதம் (3)

உதம் செய்யும் ஏழ் கடல் ஓதம் முதலாம் – திருமந்:423/2
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து – திருமந்:707/1
ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ – திருமந்:2914/2
மேல்


ஓதலும் (3)

உறை பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:86/4
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:487/4
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால் – திருமந்:1633/1
மேல்


ஓதா (1)

ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே – திருமந்:709/4
மேல்


ஓதார் (1)

வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவு அறியாரே – திருமந்:2557/3,4
மேல்


ஓதி (20)

போது இரண்டு ஓதி புரிந்து அருள்செய்திட்டு – திருமந்:217/1
சந்தியும் ஓதி சடங்கு அறுப்போர்களே – திருமந்:224/4
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே – திருமந்:301/4
மகிழ நின்று ஆதியை ஓதி உணரா – திருமந்:308/3
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற – திருமந்:319/3
நடுவுநின்றான் நல்ல நால்மறை ஓதி
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவோர் – திருமந்:321/2,3
ஆறெழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள் – திருமந்:962/2
உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே – திருமந்:1079/4
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் – திருமந்:1099/2
ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே – திருமந்:1114/4
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்கு – திருமந்:1200/2
ஓம என்று ஓதி எம் உள்ளொளியாய் நிற்கும் – திருமந்:1206/2
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே – திருமந்:1221/4
ஓதி குருவின் உபதேசம் கொண்டு – திருமந்:1311/2
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே – திருமந்:1424/4
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும் – திருமந்:1550/2,3
செறிந்து உணர்ந்து ஓதி திருவருள் பெற்றேன் – திருமந்:1588/2
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் – திருமந்:1662/3
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே – திருமந்:2703/4
தெளிய ஓதி சிவாயநம என்னும் – திருமந்:2709/3
மேல்


ஓதிட (1)

தானே அளித்த மகாரத்தை ஓதிட
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே – திருமந்:937/3,4
மேல்


ஓதிடில் (1)

தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே – திருமந்:939/3,4
மேல்


ஓதிடின் (1)

காலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின்
ஞால தலைவனை நண்ணுவர் அன்றே – திருமந்:99/3,4
மேல்


ஓதிடும் (3)

ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை – திருமந்:1218/2
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் – திருமந்:1365/1
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய – திருமந்:1919/1
மேல்


ஓதிடே (3)

பத்தாம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே – திருமந்:991/4
சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே – திருமந்:1075/4
உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே – திருமந்:2490/4
மேல்


ஓதிபால் (1)

அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின் – திருமந்:342/2,3
மேல்


ஓதிய (6)

உத்தமமாகவே ஓதிய வேதத்தின் – திருமந்:84/2
ஓதிய நந்தி உணரும் திருவருள் – திருமந்:1080/1
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை – திருமந்:1121/1
ஓதிய நாளே உணர்வது தான் என்று – திருமந்:1694/2
ஓதிய நம மலம் எல்லாம் ஒழித்திட்டு அ – திருமந்:2712/1
ஓதிய முத்தி அடைவே உயிர் பரம் – திருமந்:2864/1
மேல்


ஓதியும் (1)

ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் – திருமந்:870/2
மேல்


ஓதியே (3)

வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே – திருமந்:51/4
சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே – திருமந்:79/4
ஊரும் சகாரத்தை ஓது-மின் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னிய – திருமந்:1564/2,3
மேல்


ஓதியை (2)

ஆறு அங்கமாய் வரு மா மறை ஓதியை
கூறு அங்கம் ஆக குணம் பயில்வார் இல்லை – திருமந்:55/1,2
நம்பனை ஆதியை நால்மறை ஓதியை
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை – திருமந்:626/1,2
மேல்


ஓதில் (2)

பரமாய சியநமவ ஆம் பரத்து ஓதில்
பரம் ஆய வாசிமயநமாய் நின்றே – திருமந்:946/3,4
நவாதியில் ஆக நயந்து அது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவிலது ஆமே – திருமந்:1202/3,4
மேல்


ஓதிலே (1)

ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே – திருமந்:1665/4
மேல்


ஓதினள் (1)

ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே – திருமந்:1121/4
மேல்


ஓதினார் (1)

கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கையராய் நிற்பர் – திருமந்:935/2,3
மேல்


ஓதினால் (1)

அ திசைக்கு உள்நின்ற நவ் எழுத்து ஓதினால்
அ திசைக்கு உள்நின்ற அந்த மறையனை – திருமந்:936/2,3
மேல்


ஓதினும் (1)

அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும்
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது – திருமந்:2720/1,2
மேல்


ஓது (2)

ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு – திருமந்:2146/3
ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே – திருமந்:2487/4
மேல்


ஓது-மின் (3)

ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின் – திருமந்:301/3
ஊரும் சகாரத்தை ஓது-மின் ஓதியே – திருமந்:1564/2
நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை – திருமந்:2987/1
மேல்


ஓதும் (21)

உம்பரில் வானவர் ஓதும் தலைவனை – திருமந்:286/2
உற பெறவே நினைந்து ஓதும் சகாரம் – திருமந்:731/2
ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலார் – திருமந்:962/1
ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும் – திருமந்:963/1
காரணி மந்திரம் ஓதும் கமலத்து – திருமந்:1088/1
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே – திருமந்:1120/4
ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன் – திருமந்:1424/2
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர் – திருமந்:1631/1
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன – திருமந்:2397/2
மதியது செய்து மலர் பதம் ஓதும்
நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன் – திருமந்:2430/2,3
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு – திருமந்:2438/2
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி – திருமந்:2543/3
உரிய பரமும் முன் ஓதும் சிவமும் – திருமந்:2593/2
செறிக்கின்ற நந்தி திருவெழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும் – திருமந்:2706/2,3
ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே – திருமந்:2712/4
திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அ எழுத்தாமே – திருமந்:2714/3,4
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்ட – திருமந்:2730/3
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம் – திருமந்:2748/2
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட – திருமந்:2751/2
ஓதும் மயிர்க்கால்-தொறும் அமுது ஊறிய – திருமந்:2856/1
வேதம் அது ஓதும் சொரூபி-தன் மேன்மையே – திருமந்:2856/4
மேல்


ஓதுமே (1)

ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே – திருமந்:54/4
மேல்


ஓதுவது (1)

ஓதுவது உன் உடல் உன்மத்தம் ஆமே – திருமந்:582/4
மேல்


ஓதுற்ற (1)

ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே – திருமந்:410/4
மேல்


ஓதே (1)

உருவில் சிவாயநம என ஓதே – திருமந்:2798/4
மேல்


ஓம் (27)

ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே – திருமந்:237/4
ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புற – திருமந்:424/3
ஓம் மதியத்துள் விட்டு உரை உணர்வாலே – திருமந்:877/4
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம் – திருமந்:910/2
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும் – திருமந்:912/2
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும் – திருமந்:912/3
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே – திருமந்:912/4
உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே – திருமந்:943/4
ஓம் என்று எழுப்பி தன் உத்தம நந்தியை – திருமந்:944/1
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே – திருமந்:1222/1
ஆனவை ஓம் எனும் அ உயிர் மார்க்கமே – திருமந்:1226/4
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிட – திருமந்:1241/2
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே – திருமந்:1306/1
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே – திருமந்:1515/4
மேதாதியாலே விடாது ஓம் என தூண்டி – திருமந்:1708/1
ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி – திருமந்:1894/3
ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம் – திருமந்:2233/3
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் – திருமந்:2436/3
ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி – திருமந்:2486/1
உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே – திருமந்:2578/4
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி – திருமந்:2676/1
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு – திருமந்:2676/2
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம் – திருமந்:2676/3
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே – திருமந்:2676/4
கூடிய திண் முழவம் குழல் ஓம் என்று – திருமந்:2776/1
உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை – திருமந்:2804/1
ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல் – திருமந்:2824/1
மேல்


ஓம்பா (1)

ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே – திருமந்:1938/4
மேல்


ஓம்பி (2)

செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய் – திருமந்:224/2
உடம்பினை ஓம்பி உயிரா திரிவர் – திருமந்:2086/2
மேல்


ஓம்புகின்றான் (1)

ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று – திருமந்:2352/1
மேல்


ஓம்புகின்றேனே (1)

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே – திருமந்:725/4
மேல்


ஓம (3)

தண் சுடர் ஓம தலைவனும் ஆமே – திருமந்:221/4
ஓம பெருஞ்சுடர் உள்ளெழு நுண் புகை – திருமந்:1091/3
ஓம என்று ஓதி எம் உள்ளொளியாய் நிற்கும் – திருமந்:1206/2
மேல்


ஓமத்தால் (1)

ஓமத்தால் எட்டெட்டு கும்பிக்க உண்மையே – திருமந்:573/4
மேல்


ஓமத்திலே (1)

ஓமத்திலே உதம்பண்ணும் ஒருத்தி-தன் – திருமந்:973/2
மேல்


ஓமத்திலேயும் (1)

ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள் – திருமந்:1213/2
மேல்


ஓமத்துள் (1)

ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை – திருமந்:222/1
மேல்


ஓமத்தோர் (1)

ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள் – திருமந்:327/3
மேல்


ஓமம் (1)

ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர் – திருமந்:2987/3
மேல்


ஓமமும் (1)

காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆய்ந்தலத்து ஆம் உயிராகுதி பண்ணுமே – திருமந்:1366/3,4
மேல்


ஓமய (1)

ஓமய ஆனந்த தேறல் உணர்வு உண்டே – திருமந்:326/4
மேல்


ஓமயம் (1)

ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது – திருமந்:2158/3
மேல்


ஓய்த்திடும் (1)

ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் – திருமந்:2296/3
மேல்


ஓயா (2)

ஓயா பதி அதன் உண்மையை கூடினால் – திருமந்:643/3
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் – திருமந்:1939/2
மேல்


ஓயும் (2)

பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர் – திருமந்:1522/2
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர் – திருமந்:2014/3
மேல்


ஓர் (201)

சோதியுமாய் சுருங்காதது ஓர் தன்மையுள் – திருமந்:15/3
அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன் – திருமந்:57/1
வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய் – திருமந்:83/2
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த – திருமந்:113/3
வளத்திடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும் – திருமந்:158/1
வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளி தளிகையே – திருமந்:161/4
அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடுபேறு ஆக – திருமந்:173/3
பரு ஊசி ஐந்தும் ஓர் பையினுள் வாழும் – திருமந்:183/1
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே – திருமந்:192/4
மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர் – திருமந்:197/2
திருத்தி வளர்த்தது ஓர் தேமாம் கனியை – திருமந்:202/1
துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே – திருமந்:216/4
ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே – திருமந்:237/4
கற்றறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு – திருமந்:291/2
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு – திருமந்:378/2
சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே – திருமந்:384/4
ஓர் உடை நல் உயிர் பாதம் ஒலி சத்தி – திருமந்:388/3
ஓர் ஆயமே உலகு ஏழும் படைப்பதும் – திருமந்:407/1
ஓர் ஆயமே உலகு ஏழும் அளிப்பதும் – திருமந்:407/2
ஓர் ஆயமே உலகு ஏழும் துடைப்பதும் – திருமந்:407/3
ஓர் ஆயமே உலகோடு உயிர் தானே – திருமந்:407/4
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர்
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே – திருமந்:430/3,4
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை – திருமந்:431/2
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல் – திருமந்:449/1
அருள் இல்லை ஆதலின் அ ஓர் உயிரை – திருமந்:475/2
வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே – திருமந்:476/4
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே – திருமந்:511/4
ஓர் எழுத்து ஒரு பொருள் உணர கூறிய – திருமந்:531/1
ஊரிடை சுணங்கனாய் பிறந்து அங்கு ஓர் உகம் – திருமந்:531/3
மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர் – திருமந்:533/1
ஓர் அணை அ பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு – திருமந்:559/1
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு – திருமந்:563/2
வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு – திருமந்:593/1
பாழி பெரியது ஓர் பள்ளி அறையே – திருமந்:594/4
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர்
ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே – திருமந்:608/3,4
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டு – திருமந்:645/2
சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை – திருமந்:647/3
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை – திருமந்:650/2
ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் – திருமந்:658/1
ஒன்பது நாடி உடையது ஓர் இடம் – திருமந்:658/2
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே – திருமந்:660/4
எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால் – திருமந்:669/1
முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில் – திருமந்:673/1
கைப்பொருள் ஆக கலந்திடும் ஓர் ஆண்டின் – திருமந்:676/3
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில் – திருமந்:679/3
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில் – திருமந்:682/3
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில் – திருமந்:684/3
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின் – திருமந்:687/3
அ கொடி ஆகம் அறிந்திடில் ஓர் ஆண்டு – திருமந்:690/2
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே – திருமந்:693/4
அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை – திருமந்:735/1
உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம் – திருமந்:770/2
ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே – திருமந்:783/4
நங்கையை புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம் – திருமந்:836/2
ஒளி தரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை – திருமந்:846/2
அளக நல் நுதலாய் ஓர் அதிசயம் – திருமந்:849/1
ஏற்றுகின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே – திருமந்:884/4
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட – திருமந்:913/2
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட – திருமந்:913/3
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே – திருமந்:937/4
ந-முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள் – திருமந்:983/1
எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே – திருமந்:995/1
வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு – திருமந்:1001/3
வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே – திருமந்:1008/4
தானவன் ஆகும் ஓர் ஆசித்த தேவரே – திருமந்:1011/4
ஒளிவரு நாளில் ஓர் எட்டில் உகளும் – திருமந்:1014/2
ஒளிவரும் அ பதத்து ஓர் இரண்டு ஆகில் – திருமந்:1014/3
மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு – திருமந்:1038/2
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் – திருமந்:1045/2
தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள் – திருமந்:1047/2
பூரித்த பூ இதழ் எட்டினுக்கு உள்ளே ஓர்
ஆரியத்தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர் – திருமந்:1084/1,2
கலைத்தலை நெற்றி ஓர் கண் உடை கண்ணுள் – திருமந்:1112/1
இன்ப கலவியில் இட்டு எழுகின்றது ஓர்
அன்பில் புக வல்லனாம் எங்கள் அப்பனும் – திருமந்:1128/1,2
பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே – திருமந்:1134/4
கதி வர நின்றது ஓர் காரணம் காணார் – திருமந்:1154/2
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை – திருமந்:1218/2
துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழலுள் – திருமந்:1221/3
ஓர் ஐம்பதின்மருள் ஒன்றியே நின்றது – திருமந்:1233/1
அவி கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே – திருமந்:1243/4
ஒடுங்கி உமையொடும் ஓர் உரு ஆமே – திருமந்:1247/4
தாரகை மேல் ஓர் தழைத்தது பேரொளி – திருமந்:1272/2
பூசனை செய்ய பொருந்தி ஓர் ஆயிரம் – திருமந்:1295/1
நாலைந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம் – திருமந்:1299/1
ககராதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை – திருமந்:1307/1
அகராதி ஓர் ஆறு அரத்தமே போலும் – திருமந்:1307/2
சகராதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை – திருமந்:1307/3
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் – திருமந்:1379/2
கண்ட இ வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில் – திருமந்:1390/2
உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது – திருமந்:1402/1
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு – திருமந்:1410/3
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும் – திருமந்:1430/1
உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும் – திருமந்:1439/1
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே – திருமந்:1458/4
ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள் – திருமந்:1472/1
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது – திருமந்:1491/2,3
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும் – திருமந்:1494/2
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே – திருமந்:1539/4
வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன – திருமந்:1541/1
அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி – திருமந்:1554/1
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில் – திருமந்:1560/1
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே – திருமந்:1566/4
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே – திருமந்:1572/4
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே – திருமந்:1581/4
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை – திருமந்:1586/1
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை – திருமந்:1629/1
அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி – திருமந்:1630/3
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே – திருமந்:1665/4
மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி – திருமந்:1681/1
பவத்திடை நின்றது ஓர் பாடு அது ஆமே – திருமந்:1685/4
கடியது ஓர் உண்மை கட்டு-மின் காண்-மின் – திருமந்:1687/3
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும் – திருமந்:1706/2
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே – திருமந்:1709/4
வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும் – திருமந்:1739/2
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே – திருமந்:1846/4
இந்துவும் பானுவும் என்று எழுகின்றது ஓர்
விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே – திருமந்:1853/1,2
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே – திருமந்:1861/4
யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தியாம் – திருமந்:1897/1
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே – திருமந்:1946/4
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது – திருமந்:1991/2
வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன – திருமந்:2031/2
பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தாரே – திருமந்:2090/4
தீர வருவது ஓர் காம தொழில் நின்று – திருமந்:2091/3
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே – திருமந்:2094/4
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு – திருமந்:2113/1
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு – திருமந்:2113/2
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு – திருமந்:2113/3
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு – திருமந்:2122/2
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண் – திருமந்:2140/1
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் – திருமந்:2151/3
பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் – திருமந்:2176/1
மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் – திருமந்:2178/2
வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே – திருமந்:2184/4
ஐயைந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் – திருமந்:2208/1
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே – திருமந்:2215/4
துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி – திருமந்:2292/1
அஞ்சில் அமுதும் ஓர் ஏழின்-கண் ஆனந்தம் – திருமந்:2299/1
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் – திருமந்:2299/2
ஊமை கிணற்றகத்து உள்ளே உறைவது ஓர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள – திருமந்:2304/1,2
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே – திருமந்:2304/4
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர் – திருமந்:2337/2
பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியை – திருமந்:2360/3
முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர்
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டு – திருமந்:2369/1,2
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர் – திருமந்:2371/1
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர் – திருமந்:2371/2
அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்-தமக்கு – திருமந்:2371/3
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல் – திருமந்:2375/3
உண்மை கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும் – திருமந்:2383/1
உண்மை கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே – திருமந்:2383/4
நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன் – திருமந்:2430/3
குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்கு – திருமந்:2434/2,3
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர்
தாமம் அதனை தலைப்பட்டவாறே – திருமந்:2436/3,4
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு – திருமந்:2438/2
தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர்
மூன்று படி மண்டலத்து முதல்வனை – திருமந்:2445/1,2
ஓர் அந்தமாம் இரு பாதியை சேர்த்திடே – திருமந்:2469/4
தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே – திருமந்:2470/4
ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும் – திருமந்:2523/1
ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும் – திருமந்:2528/1
பட்டு அலர்கின்றது ஓர் பண்டு அம் கனாவே – திருமந்:2529/4
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி – திருமந்:2543/3
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி – திருமந்:2543/3
ஒன்பானில் நிற்பது ஓர் மு துரியத்துற – திருமந்:2545/3
சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் – திருமந்:2553/2
ஓர் அணையாதது ஒன்றும் இலாமையில் – திருமந்:2576/3
தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும் – திருமந்:2598/2
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே – திருமந்:2655/2
தூயது ஓர் துண்டம் இருமத்தகம் செல்லல் – திருமந்:2701/3
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும் – திருமந்:2739/2
அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆக – திருமந்:2749/1
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு – திருமந்:2753/1
மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே – திருமந்:2780/4
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை – திருமந்:2846/3
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை – திருமந்:2848/2
கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன் – திருமந்:2852/1
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் – திருமந்:2852/3
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே – திருமந்:2858/4
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம் – திருமந்:2866/2
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை – திருமந்:2868/3
ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர்
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை – திருமந்:2870/1,2
கூத்தி வளர்த்தது ஓர் கோழிப்புள் ஆமே – திருமந்:2873/4
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள – திருமந்:2874/2
மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு – திருமந்:2887/1
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர்
பாம்பு உண்டு பாம்பை துரத்தின் பார் இன்றி – திருமந்:2887/2,3
அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு – திருமந்:2899/1
கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே – திருமந்:2900/4
எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும் – திருமந்:2901/2
குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே – திருமந்:2904/4
அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி – திருமந்:2917/1
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை – திருமந்:2919/1
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி – திருமந்:2924/2
கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு – திருமந்:2928/1
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு – திருமந்:2928/2
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள் – திருமந்:2928/3
பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம் – திருமந்:2961/1
கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில் – திருமந்:2976/1
நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை – திருமந்:2987/1
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள் – திருமந்:2987/2
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர் – திருமந்:2987/3
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே – திருமந்:2987/4
ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி – திருமந்:3026/1
தண்ணவனாய் அது தன்மையின் நிற்பது ஓர்
கண்ணவன் ஆகி கலந்து நின்றானே – திருமந்:3037/3,4
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே – திருமந்:3041/4
மேல்


ஓர்க்கின்ற (1)

ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி – திருமந்:1937/2
மேல்


ஓர்ந்திடும் (2)

ஓர்ந்திடும் கந்துரு கேண்-மின்கள் பூதலத்து – திருமந்:1443/3
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே – திருமந்:1443/4
மேல்


ஓர்ந்து (6)

ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே – திருமந்:179/4
பெருநெறியான பிரணவம் ஓர்ந்து
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து – திருமந்:227/1,2
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிட – திருமந்:1173/3
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் – திருமந்:1677/3
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே – திருமந்:2055/4
ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே – திருமந்:2528/4
மேல்


ஓர (2)

உருவாய் அருளாவிடில் ஓர ஒண்ணாதே – திருமந்:1584/4
ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார்கட்கு – திருமந்:2378/2
மேல்


ஓரா (2)

வரும் கரை ஓரா வகையினில் கங்கை – திருமந்:439/3
பரம் தன்னை ஓரா பழிமொழியாளர் – திருமந்:2087/3
மேல்


ஓராது (1)

இன்மை அறியாது இளையர் என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம் – திருமந்:255/2,3
மேல்


ஓராதோன் (1)

உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன்
கணு இன்றி வேதாகம நெறி காணான் – திருமந்:2044/1,2
மேல்


ஓரார் (7)

உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம் – திருமந்:328/1
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார்
திருவின் கருக்குழி தேடி புகுந்த – திருமந்:454/2,3
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும் – திருமந்:1581/2,3
சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார்
அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார் – திருமந்:2021/1,2
பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும் தேன் நுகராது வாய் புகு தேனை – திருமந்:2097/2,3
ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே – திருமந்:2337/4
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார்
பவன் இவன் பல் வகையாம் இ பிறவி – திருமந்:2620/2,3
மேல்


ஓரான் (2)

கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான் – திருமந்:238/3
மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான் – திருமந்:1689/1,2
மேல்


ஓரில் (1)

ஓரில் இதுவே உரையும் இ தெய்வத்தை – திருமந்:1308/1
மேல்


ஓரினும் (1)

ஓரினும் மூ வகை நால் வகையும் உள – திருமந்:2234/1
மேல்


ஓரும் (7)

தான் அமர்ந்து ஓரும் தனி தெய்வம் மற்று இல்லை – திருமந்:109/3
ஒத்த விடையம்விட்டு ஓரும் உணர்வு இன்றி – திருமந்:231/2
ஊழி வலம்செய்து அங்கு ஓரும் ஒருவற்கு – திருமந்:380/1
பயம்-தனை ஓரும் பதம் அது பற்றும் – திருமந்:972/3
தக்கு எழு ஓரும் திரம் சொல்ல சொல்லவே – திருமந்:1175/2
அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்
அகம் படி கண்டவர் அல்லலில் சேரார் – திருமந்:1874/1,2
உள்ள பரிசு அறிந்து ஓரும் அவர்கட்கு – திருமந்:2500/2
மேல்


ஓரெழுத்தாலே (2)

ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி – திருமந்:885/1
ஓரெழுத்தாலே உயிர் பெறலாமே – திருமந்:962/4
மேல்


ஓரெழுத்து (2)

தாண்டவம் ஆன தனி எழுத்து ஓரெழுத்து
தாண்டவம் ஆனது அனுகிரக தொழில் – திருமந்:888/1,2
ஓரெழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே – திருமந்:970/4
மேல்


ஓரெழுத்துள் (1)

ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல் – திருமந்:2824/1
மேல்


ஓலக்கம் (2)

ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் – திருமந்:108/1
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் – திருமந்:540/1
மேல்


ஓலம் (1)

உடையான் வருக என ஓலம் என்றாரே – திருமந்:547/4
மேல்


ஓலமிட்டு (1)

உரிய வினைகள் நின்று ஓலமிட்டு அன்றே – திருமந்:2276/4
மேல்


ஓலை (2)

ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால் – திருமந்:188/3
கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை – திருமந்:2313/1
மேல்


ஓலையான் (1)

ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை – திருமந்:161/3
மேல்


ஓலையில் (1)

ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் – திருமந்:997/2
மேல்


ஓவ (1)

உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ
தெரியும் சிவ துரியத்தனும் ஆமே – திருமந்:2282/3,4
மேல்


ஓவல் (2)

ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் – திருமந்:2231/3
ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே – திருமந்:2249/4
மேல்


ஓவற (2)

ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே – திருமந்:657/4
ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம் – திருமந்:1849/3
மேல்


ஓவாத (1)

ஒத்த சிவானந்தத்து ஓவாத தேறலை – திருமந்:325/2
மேல்


ஓவி (1)

ஓவி விடும் தத்துவ மசி உண்மையே – திருமந்:2568/4
மேல்


ஓவியம் (3)

உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே – திருமந்:750/4
ஓவியம் ஆன உணர்வை அறி-மின்கள் – திருமந்:751/1
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு – திருமந்:1459/3
மேல்


ஓவியராலும் (1)

ஓவியராலும் அறிய ஒண்ணாது அது – திருமந்:956/3
மேல்


ஓவினும் (1)

ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே – திருமந்:1195/4
மேல்


ஓவு (1)

ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே – திருமந்:2475/4
மேல்


ஓவும் (3)

ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே – திருமந்:2284/3
ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே – திருமந்:2374/4
உரிய சுழுனையும் ஓவும் சிவன்-பால் – திருமந்:2444/3
மேல்


ஓவுறு (1)

ஓவுறு தாரத்தில் உள்ளும் நாதாந்தமே – திருமந்:2474/4

மேல்