சே – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சேகரி 1
சேட்டிப்ப 2
சேடத்தை 1
சேடம் 1
சேடார் 1
சேண் 2
சேணாய் 1
சேணுற்ற 1
சேதனத்து 1
சேதனன் 3
சேதிப்ப 1
சேதியுள் 1
சேம 1
சேமி 1
சேய் 3
சேய 7
சேயவன் 1
சேயன் 3
சேயன்-கொல் 1
சேயன 1
சேயனா 1
சேயிழை 3
சேயினும் 1
சேயுறு 1
சேர் 18
சேர்க்கலும் 1
சேர்க்கின்ற 1
சேர்க்கும் 1
சேர்கின்ற 3
சேர்கின்ற-போது 1
சேர்கின்றவாறே 1
சேர்த்த 2
சேர்த்திடே 1
சேர்த்து 5
சேர்த்துற்று 1
சேர்தரு 2
சேர்தல் 3
சேர்தலால் 2
சேர்தலான் 1
சேர்தலும் 2
சேர்ந்த 3
சேர்ந்தது 1
சேர்ந்தவர் 3
சேர்ந்தனர் 1
சேர்ந்தனன் 1
சேர்ந்தார் 1
சேர்ந்திட்டு 1
சேர்ந்து 18
சேர்ந்துகொண்டேனே 1
சேர்ந்துய்ய 2
சேர்ந்துற்றால் 1
சேர்ந்தே 1
சேர்ந்தோர் 1
சேர்வது 1
சேர்வரே 1
சேர்வரை 1
சேர்வன் 1
சேர்வார் 1
சேர்வார்க்கு 1
சேர்விடம் 2
சேர்வுறாமே 1
சேர்வுறார் 1
சேர 15
சேரகிலாமை 1
சேரகிலாரே 1
சேரல் 1
சேரலாமே 1
சேரலும் 1
சேரவும் 2
சேரவே 4
சேரா 1
சேராது 1
சேரார் 1
சேரான் 1
சேரில் 2
சேரின் 1
சேரு-மின் 1
சேரும் 11
சேரும்படி 1
சேருமா 1
சேருமே 1
சேருவார் 1
சேருறு 1
சேவக 1
சேவகன் 1
சேவடி 18
சேவிக்கும் 1
சேவித்து 2
சேவிப்பதன் 1
சேவியே 1
சேறு 1
சேனை 1
சேனையும் 2

சேகரி (1)

செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும் – திருமந்:1743/3
மேல்


சேட்டிப்ப (2)

ஆதித்தன்-தன் கதிரால் அவை சேட்டிப்ப
பேதித்து பேதியாவாறு அருட்பேதமே – திருமந்:2342/3,4
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும் – திருமந்:2391/3
மேல்


சேடத்தை (1)

சீர் பாக சேடத்தை மாற்றி பின் சேவியே – திருமந்:1317/4
மேல்


சேடம் (1)

சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் – திருமந்:1866/3
மேல்


சேடார் (1)

சேடார் கமல செழும் சுடருள் சென்று – திருமந்:2949/3
மேல்


சேண் (2)

சேண் படு பொய்கை செயல் அணையாரே – திருமந்:434/4
சேண் உயர் சத்தி சிவதத்துவம் ஆமே – திருமந்:500/4
மேல்


சேணாய் (1)

சேணாய் வான் ஓங்கி திருவுருவாய் அண்ட – திருமந்:374/2
மேல்


சேணுற்ற (1)

சேணுற்ற சோதி சிவானந்த கூத்தனை – திருமந்:2743/3
மேல்


சேதனத்து (1)

மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து
ஆய குரு அருளாலே அதில் தூண்ட – திருமந்:2014/1,2
மேல்


சேதனன் (3)

மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன் – திருமந்:2226/1
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து – திருமந்:2307/3
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் – திருமந்:2421/3
மேல்


சேதிப்ப (1)

பேதித்த அ வினையால் செயல் சேதிப்ப
ஆதித்தன்-தன் கதிரால் அவை சேட்டிப்ப – திருமந்:2342/2,3
மேல்


சேதியுள் (1)

தொடர்ந்தது தானே அ சேதியுள் நின்றே – திருமந்:718/4
மேல்


சேம (1)

இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும் – திருமந்:1470/1
மேல்


சேமி (1)

நீ வைத்து சேமி நினைந்தது தருமே – திருமந்:1318/4
மேல்


சேய் (3)

பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள் – திருமந்:797/3
சேய் நாடு ஒளி என சிவகதி ஐந்துமே – திருமந்:2579/4
சேய் நின்ற செஞ்சுடர் எம் பெருமான் அடி – திருமந்:2824/3
மேல்


சேய (7)

சேய அரிவை சிவானந்த சுந்தரி – திருமந்:1239/3
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது – திருமந்:2131/2
சேய கேவல விந்துடன் செல்ல சென்ற-கால் – திருமந்:2198/3
சேய விளக்கினை தேடுகின்றேனே – திருமந்:2367/4
சேய முப்பாழ் என சிவசத்தியில் சீவன் – திருமந்:2496/2
சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேரருள் – திருமந்:2577/3
சேய சிவம் மு துரியத்து சீர் பெற – திருமந்:2839/3
மேல்


சேயவன் (1)

அணுகினும் சேயவன் அங்கியில் கூடி – திருமந்:420/1
மேல்


சேயன் (3)

சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி – திருமந்:1540/1
சேயன் அணியன் தித்திக்கும் தீம் கரும்பு – திருமந்:2365/3
செலவு அறிவார் இல்லை சேயன் அணியன் – திருமந்:3043/2
மேல்


சேயன்-கொல் (1)

கரியன்-கொல் சேயன்-கொல் காண்கின்றிலேனே – திருமந்:2814/4
மேல்


சேயன (1)

சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே – திருமந்:2658/4
மேல்


சேயனா (1)

தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும் – திருமந்:1793/2
மேல்


சேயிழை (3)

சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை
கல் இயல் ஒப்பது காணும் திருமேனி – திருமந்:1082/2,3
செஞ்சொல் மடமொழி சீர் உடை சேயிழை
தஞ்சம் என்று எண்ணி தன் சேவடி போற்றுவார்க்கு – திருமந்:1109/2,3
சீற்றம் கடிந்த திருநுதல் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கோள் பைந்தொடியே – திருமந்:1150/3,4
மேல்


சேயினும் (1)

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு – திருமந்:8/3
மேல்


சேயுறு (1)

சேயுறு கண்ணி திருவெழுத்து அஞ்சையும் – திருமந்:2703/3
மேல்


சேர் (18)

முடி சேர் மலை மகனார் மகள் ஆகி – திருமந்:347/2
முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே – திருமந்:495/4
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும் – திருமந்:649/3
சித்திகள் எட்டு அன்றி சேர் எட்டியோகத்தால் – திருமந்:670/1
இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல் – திருமந்:706/2
தெக்கணம் ஆகும் வியாழத்து சேர் திசை – திருமந்:798/1
சென்னி இருப்பிடம் சேர் பதினாறுடன் – திருமந்:1168/3
கோலம் சேர் சங்கு குவிந்தகை எண் அதே – திருமந்:1398/4
சிறந்த சிவனருள் சேர் பருவத்து – திருமந்:1615/3
செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே – திருமந்:1924/4
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை – திருமந்:2234/2
நிறம் சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு – திருமந்:2313/2
தேனார் பராபரம் சேர் சிவயோகமாய் – திருமந்:2372/3
அண்ணல் அடி சேர் உபாயம் அது ஆகுமே – திருமந்:2421/4
செம்மை சிவமேரு சேர் கொடி ஆகுமே – திருமந்:2455/4
செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம் – திருமந்:2589/1
செ வழி சேர் சிவலோகத்து இருந்திடும் – திருமந்:2644/3
செப்பு பராபரம் சேர் பரமும் விட்டு – திருமந்:2945/2
மேல்


சேர்க்கலும் (1)

துண்ணென நேய நல் சேர்க்கலும் ஆமே – திருமந்:1367/4
மேல்


சேர்க்கின்ற (1)

சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே – திருமந்:1937/4
மேல்


சேர்க்கும் (1)

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும் – திருமந்:1598/2,3
மேல்


சேர்கின்ற (3)

திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே – திருமந்:862/4
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே – திருமந்:1368/4
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே – திருமந்:1380/4
மேல்


சேர்கின்ற-போது (1)

உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது
குயில் கொண்ட பேதை குலாவி உலாவி – திருமந்:2810/2,3
மேல்


சேர்கின்றவாறே (1)

சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்றவாறே – திருமந்:2936/4
மேல்


சேர்த்த (2)

அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல – திருமந்:2710/2
அவம் சேர்த்த பாசம் அணுககிலாவே – திருமந்:2710/4
மேல்


சேர்த்திடே (1)

ஓர் அந்தமாம் இரு பாதியை சேர்த்திடே – திருமந்:2469/4
மேல்


சேர்த்து (5)

சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர் – திருமந்:758/3
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி – திருமந்:1113/3
காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து
ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன் – திருமந்:1424/1,2
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே – திருமந்:1918/3,4
சித்தும் அசித்தும் சிவபரத்தே சேர்த்து
சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல் – திருமந்:2058/2,3
மேல்


சேர்த்துற்று (1)

சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும் – திருமந்:1945/3
மேல்


சேர்தரு (2)

பொருப்பு அகம் சேர்தரு பொன் கொடி போல – திருமந்:2640/2
கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும் – திருமந்:2992/2
மேல்


சேர்தல் (3)

தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே – திருமந்:639/4
சிவம் ஆகும் மாமோனம் சேர்தல் மெய்வீடே – திருமந்:1013/4
செல்லா சிவகதி சேர்தல் விளையாட்டே – திருமந்:2060/4
மேல்


சேர்தலால் (2)

பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி – திருமந்:671/2,3
செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே – திருமந்:857/3,4
மேல்


சேர்தலான் (1)

வித்து ஆம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அ முளை – திருமந்:1585/2,3
மேல்


சேர்தலும் (2)

திகழ்கின்ற வாயுவை சேர்தலும் ஆமே – திருமந்:720/4
செப்ப_அரியான் கழல் சேர்தலும் ஆமே – திருமந்:861/4
மேல்


சேர்ந்த (3)

சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இ குண்டமும் – திருமந்:1036/1
சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் – திருமந்:1447/2
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே – திருமந்:2720/4
மேல்


சேர்ந்தது (1)

திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது
விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் – திருமந்:143/2,3
மேல்


சேர்ந்தவர் (3)

சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே – திருமந்:1347/4
சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர் – திருமந்:1348/1
சேர்ந்தவர் தேவரை சென்று உணர்வாரே – திருமந்:2114/4
மேல்


சேர்ந்தனர் (1)

மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களம் கனி ஊடுபோய் – திருமந்:662/2,3
மேல்


சேர்ந்தனன் (1)

இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே – திருமந்:548/4
மேல்


சேர்ந்தார் (1)

சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அ சோதனை – திருமந்:2647/3
மேல்


சேர்ந்திட்டு (1)

திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே – திருமந்:1933/3,4
மேல்


சேர்ந்து (18)

சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே – திருமந்:78/4
சேர்ந்து இருந்தேன் சிவமங்கை-தன் பங்கனை – திருமந்:79/1
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை – திருமந்:79/2
சேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நீழலில் – திருமந்:79/3
சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே – திருமந்:79/4
குரு நெறியாலே குரு பதம் சேர்ந்து
கரும நியம் ஆதி கைவிட்டு காணும் – திருமந்:232/2,3
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால் – திருமந்:586/2
செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே – திருமந்:1035/4
தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம் – திருமந்:1285/3
தவலோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடி – திருமந்:1905/2
சிவயோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர் – திருமந்:1905/3
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே – திருமந்:2095/4
திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும் – திருமந்:2100/2
சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி – திருமந்:2156/1
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து
இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே – திருமந்:2313/3,4
சிரானந்தம் பூரித்து தென் திசை சேர்ந்து
புரானந்த போகனாய் பூவையும் தானும் – திருமந்:2750/2,3
திரமுற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று – திருமந்:2835/2
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து
முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும் – திருமந்:2973/1,2
மேல்


சேர்ந்துகொண்டேனே (1)

சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேனே – திருமந்:2770/4
மேல்


சேர்ந்துய்ய (2)

தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே – திருமந்:1478/3,4
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே – திருமந்:1567/3,4
மேல்


சேர்ந்துற்றால் (1)

செம்பொருளாகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே – திருமந்:2752/3,4
மேல்


சேர்ந்தே (1)

தேறு-மின் நாயகி சேவடி சேர்ந்தே – திருமந்:1332/4
மேல்


சேர்ந்தோர் (1)

சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால் – திருமந்:1644/2
மேல்


சேர்வது (1)

செத்து நீர் சேர்வது சித்தினை கூடிடில் – திருமந்:1907/2
மேல்


சேர்வரே (1)

சிங்காரம் ஆன திருவடி சேர்வரே – திருமந்:1666/4
மேல்


சேர்வரை (1)

செடி ஆர் வினை கெட சேர்வரை என்று என்று – திருமந்:1151/3
மேல்


சேர்வன் (1)

அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி – திருமந்:347/1
மேல்


சேர்வார் (1)

ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே – திருமந்:1903/4
மேல்


சேர்வார்க்கு (1)

செந்நெறி ஆகும் சிவகதி சேர்வார்க்கு
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே – திருமந்:1228/3,4
மேல்


சேர்விடம் (2)

சித்துக்கு சித்து அன்றி சேர்விடம் வேறு உண்டோ – திருமந்:135/2
மூன்று மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்று உள ஈராறு எழுகலை உச்சியில் – திருமந்:1187/1,2
மேல்


சேர்வுறாமே (1)

சித்தும் அசித்தும் சேர்வுறாமே நீத்த – திருமந்:1420/2
மேல்


சேர்வுறார் (1)

தெள் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே – திருமந்:328/3,4
மேல்


சேர (15)

தெரிதரு சாம்பவி கேசரி சேர
பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே – திருமந்:642/3,4
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில் – திருமந்:756/3
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர் – திருமந்:758/3
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர் – திருமந்:768/2
இடுகின்றவாறு சென்றின் பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே – திருமந்:795/3,4
சேவடி சேர செறிய இருந்தவர் – திருமந்:1333/1
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே – திருமந்:1368/4
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே – திருமந்:1452/4
அரவம்செய்யாமல் அவளுடன் சேர
பரிவொன்றில் ஆளும் பராபரை தானே – திருமந்:1528/3,4
சிவனே என அடி சேர வல்லார்க்கு – திருமந்:1580/2
நிழல் சேர பெற்றேன் நெடுமால் அறியா – திருமந்:1600/2
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்களால் என்றும் வந்து நின்றானே – திருமந்:1836/3,4
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே – திருமந்:1848/4
கிளர்ந்த பரம்சிவம் சேர கிடைத்தால் – திருமந்:2591/3
சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககிலாவே – திருமந்:2710/3,4
மேல்


சேரகிலாமை (1)

சிவன் அருளால் வினை சேரகிலாமை
சிவன் அருள் கூடின் அ சிவலோகம் ஆமே – திருமந்:1649/3,4
மேல்


சேரகிலாரே (1)

சிறுகால் அறநெறி சேரகிலாரே – திருமந்:1497/4
மேல்


சேரல் (1)

சேவடி சேரல் செயல் அறல் தானே – திருமந்:1849/4
மேல்


சேரலாமே (1)

கதி கொன்றை ஈசன் கழல் சேரலாமே – திருமந்:610/4
மேல்


சேரலும் (1)

தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே – திருமந்:633/4
மேல்


சேரவும் (2)

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் – திருமந்:724/2
துதிக்கையால் உண்பார்க்கு சேரவும் வேண்டாம் – திருமந்:801/2
மேல்


சேரவே (4)

சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும் – திருமந்:750/3
செ வகை ஒன்பதும் சேரவே நின்றிடின் – திருமந்:775/3
சென்று உயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின் – திருமந்:784/3
செறிவாய் இருந்து சேரவே மாயுமே – திருமந்:1952/4
மேல்


சேரா (1)

துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா
களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட – திருமந்:2691/2,3
மேல்


சேராது (1)

சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும் – திருமந்:1945/3
மேல்


சேரார் (1)

அகம் படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம் – திருமந்:1874/2,3
மேல்


சேரான் (1)

அறிவு இன்றி முத்தன் அராகாதி சேரான்
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி – திருமந்:2247/1,2
மேல்


சேரில் (2)

அறிவான மங்கை அருள் அது சேரில்
பிறியா அறிவு அறிவார் உளம் பேணும் – திருமந்:1133/2,3
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம் – திருமந்:1507/3
மேல்


சேரின் (1)

தெருளும் உயிரொடும் செல்வனை சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே – திருமந்:168/3,4
மேல்


சேரு-மின் (1)

உய் கண்டம் செய்த ஒருவனை சேரு-மின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் – திருமந்:1037/2,3
மேல்


சேரும் (11)

சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே – திருமந்:135/3,4
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும் புவி – திருமந்:234/2
தீய வைத்து ஆர்-மின்கள் சேரும் வினை-தனை – திருமந்:430/1
சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இ குண்டமும் – திருமந்:1036/1
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி – திருமந்:1066/2
திருத்தி இருந்தவை சேரும் நிலத்து – திருமந்:1205/2
ஆங்கு அது சேரும் அறிவுடையார்கட்கு – திருமந்:1525/3
அழல் சேரும் அங்கியுள் ஆதி பிரானும் – திருமந்:1600/3
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே – திருமந்:1600/4
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை – திருமந்:2108/3
சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் – திருமந்:2337/1
மேல்


சேரும்படி (1)

தேட்டு அற்ற அ நிலம் சேரும்படி வைத்து – திருமந்:624/2
மேல்


சேருமா (1)

கடலிடை நில்லா கலம் சேருமா போல் – திருமந்:2561/3
மேல்


சேருமே (1)

உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே – திருமந்:2336/4
மேல்


சேருவார் (1)

போர் புகழான் எந்தை பொன் அடி சேருவார்
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள்செய்யும் – திருமந்:546/2,3
மேல்


சேருறு (1)

சேருறு காலம் திசை நின்ற தேவர்கள் – திருமந்:636/1
மேல்


சேவக (1)

செம்பொன் திருமன்றுள் சேவக கூத்தனை – திருமந்:2742/2
மேல்


சேவகன் (1)

தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும் – திருமந்:1079/1
மேல்


சேவடி (18)

சேவடி ஏத்தும் செறிவு உடை வானவர் – திருமந்:376/1
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை – திருமந்:884/2,3
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே – திருமந்:1071/4
தஞ்சம் என்று எண்ணி தன் சேவடி போற்றுவார்க்கு – திருமந்:1109/3
சீர் ஏயும் சேவடி சிந்தைவைத்தாளே – திருமந்:1200/4
தேறு-மின் நாயகி சேவடி சேர்ந்தே – திருமந்:1332/4
சேவடி சேர செறிய இருந்தவர் – திருமந்:1333/1
செறிய நினைக்கிலர் சேவடி தானே – திருமந்:1554/4
பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கைதொழு – திருமந்:1566/3
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கைதொழ – திருமந்:1571/3
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன் – திருமந்:1837/2
சேவடி சேரல் செயல் அறல் தானே – திருமந்:1849/4
போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி
ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக – திருமந்:2521/1,2
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே – திருமந்:2599/4
கூடும் சிவனது கொய் மலர் சேவடி
தேட அரியன் சிறப்பு_இலி எம் இறை – திருமந்:2651/2,3
வாடா மலர் புனை சேவடி வானவர் – திருமந்:2949/1
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை – திருமந்:2988/2,3
அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே – திருமந்:3004/3,4
மேல்


சேவிக்கும் (1)

சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற – திருமந்:959/1
மேல்


சேவித்து (2)

அருந்தவ செல்வியை சேவித்து அடியேன் – திருமந்:75/3
கண்டு சேவித்து கதி பெறுவார்களே – திருமந்:2777/4
மேல்


சேவிப்பதன் (1)

சேவிப்பதன் முன்னே தேவியையும் உத்வாகனத்தால் – திருமந்:1318/1
மேல்


சேவியே (1)

சீர் பாக சேடத்தை மாற்றி பின் சேவியே – திருமந்:1317/4
மேல்


சேறு (1)

சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை – திருமந்:2535/3
மேல்


சேனை (1)

சேனை வளைந்து திசை-தொறும் கைதொழ – திருமந்:541/2
மேல்


சேனையும் (2)

சேனையும் செய் சிவசக்கரத்தானே – திருமந்:988/4
படு பர சேனையும் பாய்பரி ஐந்தும் – திருமந்:2147/2

மேல்