மீ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

மீகாமன் (1)

வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில் – திருமந்:1623/3
மேல்


மீட்கும் (1)

திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே – திருமந்:1598/3,4
மேல்


மீட்டலும் (1)

ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று – திருமந்:2061/3
மேல்


மீட்டு (3)

நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு – திருமந்:624/3
ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி – திருமந்:2061/1
உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால் – திருமந்:2977/1
மேல்


மீட்டே (1)

போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால் – திருமந்:2041/2
மேல்


மீண்ட (2)

வானோர் உலகம் வழிபட மீண்ட பின் – திருமந்:2989/3
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட
செலவு ஒத்து அமர் திகை தேவர் பிரானே – திருமந்:3001/3,4
மேல்


மீண்டது (3)

மேவித்து அமுதொடு மீண்டது காணே – திருமந்:1091/4
கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே – திருமந்:2900/4
படை கண்டு மீண்டது பாதி வழியில் – திருமந்:2925/2
மேல்


மீண்டார் (1)

மீண்டார் கமலத்துள் அங்கி மிக சென்று – திருமந்:2978/1
மேல்


மீண்டும் (3)

படி கண்டிலர் மீண்டும் பார் மிசை கூடி – திருமந்:88/2
விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் – திருமந்:143/3
இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும் – திருமந்:2341/3
மேல்


மீண்டுற்று (1)

மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று – திருமந்:2346/2
மேல்


மீதாந்த (1)

மீதாந்த காரணோபாதி ஏழ் மெய்ப்பரன் – திருமந்:2387/3
மேல்


மீதாம் (1)

மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி – திருமந்:1705/2
மேல்


மீதான (2)

மீதான தற்பரை மேவும் பரனொடு – திருமந்:709/2
மேதாதி ஆதாரம் மீதான உண்மையே – திருமந்:1705/4
மேல்


மீதானத்தே (1)

விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே
சிந்தனை சாக்கிராதீதத்தே சென்றிட்டு – திருமந்:1853/2,3
மேல்


மீதில் (2)

மீதில் இருத்தி விரித்திடுவீரே – திருமந்:1919/4
ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம் – திருமந்:1922/1
மேல்


மீதினில் (1)

மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து – திருமந்:1919/2
மேல்


மீது (15)

மேதாதி ஈரெண் கலை செல்லம் மீது ஒளி – திருமந்:709/3
ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே – திருமந்:709/4
மேவிய சக்கரம் மீது வலத்திலே – திருமந்:1314/1
மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும் – திருமந்:1731/2
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய – திருமந்:1892/3
மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும் – திருமந்:1921/1
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே – திருமந்:1921/4
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து – திருமந்:2597/1
மஞ்சு தவழும் வடவரை மீது உறை – திருமந்:2707/3
பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட – திருமந்:2751/3
வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி – திருமந்:2756/2
வினவுற ஆனந்தம் மீது ஒழிவு என்ப – திருமந்:2813/3
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து – திருமந்:2845/1
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல – திருமந்:2861/2
அரிய துரியம் அதில் மீது மூன்றாய் – திருமந்:2940/2
மேல்


மீதுற (1)

வீட்கும் பதி பசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து – திருமந்:2420/1,2
மேல்


மீதே (3)

மேதாதி நாதமும் மீதே விரிந்தன – திருமந்:1754/2
அம்பலம் ஆடரங்கு ஆக அதன் மீதே
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி – திருமந்:2759/1,2
பசும்பொன் திகழும் படர் சடை மீதே
குசும்ப மலர் கந்தம் கூடி நின்றானே – திருமந்:2818/3,4
மேல்


மீமிசை (1)

கரு முலை மீமிசை கை கீழில் காலாம் – திருமந்:1974/3
மேல்


மீள (1)

போல் உயிர் மீள புக அறியாதே – திருமந்:146/4
மேல்


மீளா (1)

மேவும் மறுமைக்கு மீளா நரகமே – திருமந்:243/4
மேல்


மீளார் (1)

ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே – திருமந்:1906/4
மேல்


மீளும் (1)

மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில் – திருமந்:826/2
மேல்


மீளுவர் (1)

ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம் – திருமந்:576/2
மேல்


மீன் (2)

பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து – திருமந்:2031/3
புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன்
விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது – திருமந்:2923/2,3

மேல்