ஐ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 10
ஐக்கியம் 1
ஐங்கருமத்தள் 1
ஐங்கருமத்து 5
ஐங்கருமம் 1
ஐங்கருமமும் 2
ஐங்கலை 1
ஐங்கலைக்கு 1
ஐங்காயம் 1
ஐங்குணமும் 1
ஐஞ்சு 3
ஐஞ்ஞூற்று 1
ஐஞ்ஞூற்றுமுப்பதோடு 1
ஐந்தாம் 3
ஐந்தாமே 1
ஐந்தால் 4
ஐந்தான் 2
ஐந்திடம் 1
ஐந்தில் 10
ஐந்தின் 8
ஐந்தினுள் 1
ஐந்து 57
ஐந்துக்கும் 1
ஐந்துடன் 3
ஐந்தும் 69
ஐந்துமே 1
ஐந்துளும் 1
ஐந்தே 3
ஐந்தையும் 5
ஐந்தொடு 2
ஐந்தொடும் 1
ஐந்தொழில் 1
ஐந்தோடு 3
ஐந்நூறு 1
ஐம் 3
ஐம்பத்தாறு 1
ஐம்பத்திரண்டு 1
ஐம்பத்திருவராய் 1
ஐம்பத்து 5
ஐம்பத்தொருவரும் 1
ஐம்பத்தொன்று 3
ஐம்பத்தொன்றும் 1
ஐம்பத்தோர் 2
ஐம்பதம் 1
ஐம்பதின் 1
ஐம்பதின்மருள் 1
ஐம்பது 11
ஐம்பதும் 2
ஐம்பதே 1
ஐம்பதோடு 2
ஐம்பாசம் 1
ஐம்பான் 1
ஐம்புல 2
ஐம்புலன் 2
ஐம்புலனுடனே 1
ஐம்புலனும் 2
ஐம்பூதங்கள் 1
ஐம்பூதத்தில் 1
ஐம்பூதத்தை 1
ஐம்பூதம் 2
ஐம்பூதமும் 3
ஐம்பொறி 1
ஐம்மல 2
ஐம்மலத்தார் 2
ஐம்மலத்தாரும் 2
ஐம்மலம் 6
ஐம்முகம் 1
ஐம்முகன் 5
ஐம்மூன்று 1
ஐம்மூன்றும் 1
ஐய 1
ஐயம் 4
ஐயமும் 1
ஐயன் 1
ஐயனார் 1
ஐயனும் 2
ஐயனை 1
ஐயா 1
ஐயிருமூன்று 1
ஐயுளும் 1
ஐயேழும் 2
ஐயைஞ்சு 2
ஐயைந்தில் 2
ஐயைந்து 9
ஐயைந்தும் 9
ஐயைந்துள் 1
ஐவகை 1
ஐவர் 10
ஐவர்-தம் 1
ஐவர்க்கு 4
ஐவர்க்கும் 3
ஐவரால் 1
ஐவருடைய 1
ஐவரும் 14
ஐவருள் 1
ஐவரை 5
ஐவிதத்தால் 1

ஐ (10)

சிவம் ஆகி ஐ வகை திண்மலம் செற்றோர் – திருமந்:497/1
மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே – திருமந்:674/4
அஞ்சனம் போன்று உடல் ஐ அறும் அந்தியில் – திருமந்:727/1
தன்னொடு தன் ஐ தலைப்பெய்ய வல்லாரேன் – திருமந்:841/3
ஐ முதலாக வளர்ந்து எழு சக்கரம் – திருமந்:1334/1
ஐ முதலாக அமர்ந்து இரீம் ஈறு ஆகும் – திருமந்:1334/2
பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா – திருமந்:1339/1
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில் – திருமந்:1383/3
இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி – திருமந்:1701/1
ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர் – திருமந்:2870/1
மேல்


ஐக்கியம் (1)

போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம்
சாதாரணம் சிவசாயுச்சியம் ஆமே – திருமந்:2392/3,4
மேல்


ஐங்கருமத்தள் (1)

ஆகும் அவள் ஐங்கருமத்தள் தானே – திருமந்:1224/4
மேல்


ஐங்கருமத்து (5)

அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார் – திருமந்:1798/3
சத்துடன் ஐங்கருமத்து இடும் தன்மையே – திருமந்:2062/4
மேனி கொண்டு ஐங்கருமத்து வித்து ஆதலான் – திருமந்:2332/3
ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக – திருமந்:2727/2
தாகாண்ட ஐங்கருமத்து ஆண்ட தற்பரத்து – திருமந்:2728/3
மேல்


ஐங்கருமம் (1)

ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன் – திருமந்:2416/3
மேல்


ஐங்கருமமும் (2)

மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே – திருமந்:1611/4
தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே – திருமந்:1927/4
மேல்


ஐங்கலை (1)

தெளியும் இவை அன்றி தேர் ஐங்கலை வேறு – திருமந்:2378/1
மேல்


ஐங்கலைக்கு (1)

உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே – திருமந்:1994/4
மேல்


ஐங்காயம் (1)

வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை – திருமந்:998/3
மேல்


ஐங்குணமும் (1)

பார் ஐங்குணமும் படைத்து நின்றானே – திருமந்:1832/4
மேல்


ஐஞ்சு (3)

கோலிங்கம் ஐஞ்சு அருள் கூடலும் ஆமே – திருமந்:378/4
ஆறது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள – திருமந்:695/2
போதனை போது ஐஞ்சு பொய் கய வாரணம் – திருமந்:1044/3
மேல்


ஐஞ்ஞூற்று (1)

கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும் – திருமந்:694/3
மேல்


ஐஞ்ஞூற்றுமுப்பதோடு (1)

ஆய் வரும் ஐஞ்ஞூற்றுமுப்பதோடு ஒன்பது – திருமந்:700/3
மேல்


ஐந்தாம் (3)

மலங்கள் ஐந்தாம் என மாற்றி அருளி – திருமந்:118/1
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று – திருமந்:1481/1
ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில் – திருமந்:2399/2
மேல்


ஐந்தாமே (1)

தெளிவு உபதேச ஞானத்தொடு ஐந்தாமே – திருமந்:2378/4
மேல்


ஐந்தால் (4)

தலங்கள் ஐந்தால் நற்சதா சிவம் ஆன – திருமந்:118/2
மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின் – திருமந்:2160/1
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி – திருமந்:2236/2
ஆகிய சத்தி சிவபர மேல் ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன் – திருமந்:2416/2,3
மேல்


ஐந்தான் (2)

புலங்கள் ஐந்தான் அ பொதுவின் உள் நந்தி – திருமந்:118/3
உண்மை கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும் – திருமந்:2383/1
மேல்


ஐந்திடம் (1)

ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் – திருமந்:910/2,3
மேல்


ஐந்தில் (10)

அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே – திருமந்:416/4
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர் – திருமந்:652/3
அ முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை – திருமந்:983/2
ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது – திருமந்:2035/1
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது – திருமந்:2035/2
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது – திருமந்:2035/3
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே – திருமந்:2035/4
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில் – திருமந்:2730/1
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் – திருமந்:2730/1,2
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே – திருமந்:2730/4
மேல்


ஐந்தின் (8)

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் – திருமந்:969/1
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் – திருமந்:969/2
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் – திருமந்:969/3
ஐந்தின் வகைசெய பாலனும் ஆமே – திருமந்:969/4
ந-முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள் – திருமந்:983/1
நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள் – திருமந்:2533/2
பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது – திருமந்:2708/1
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் – திருமந்:2730/2
மேல்


ஐந்தினுள் (1)

நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும் – திருமந்:2080/2
மேல்


ஐந்து (57)

நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர் – திருமந்:1/2,3
சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற – திருமந்:110/1
ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி – திருமந்:133/3
ஐந்து தலை பறி ஆறு சடை உள – திருமந்:159/1
துன்புறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று – திருமந்:282/3
கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து – திருமந்:299/1
தேனின்-கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய் – திருமந்:385/3
அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே – திருமந்:401/4
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம் – திருமந்:445/3
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே – திருமந்:465/3,4
எட்டினுள் ஐந்து ஆகும் இந்திரியங்களும் – திருமந்:473/1
மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து
நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே – திருமந்:557/3,4
நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால் – திருமந்:595/1
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு – திருமந்:623/1
மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி – திருமந்:740/1
தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகி – திருமந்:862/2
தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகி – திருமந்:862/2
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும் – திருமந்:915/3
இருந்த அதனுள் இரேகை ஐந்து ஆக – திருமந்:920/2
அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் – திருமந்:966/1
ஐந்து கலையில் அகராதி தன்னிலே – திருமந்:978/1
குறித்திருந்தாள் அவள் கூறிய ஐந்து
மறித்திருந்தாள் அவள் மாது நல்லாளே – திருமந்:1156/3,4
மோக முகம் ஐந்து முக்கண் முகம்-தொறும் – திருமந்:1217/3
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை – திருமந்:1218/2
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும் – திருமந்:1402/3
நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது – திருமந்:1621/1
தேடு முகம் ஐந்து செம் கணின் மூவைந்து – திருமந்:1730/3
ஆறு ஐந்து பன்னொன்றும் அன்றி சகமார்க்கம் – திருமந்:1940/1
ஆக மதத்தன ஐந்து களிறு உள – திருமந்:2023/1
புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும் – திருமந்:2025/1
புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும் – திருமந்:2025/1
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து – திருமந்:2025/2
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து – திருமந்:2025/2
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் – திருமந்:2025/2,3
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில் – திருமந்:2027/3
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே – திருமந்:2060/3
எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங்களும் – திருமந்:2124/1
முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆக – திருமந்:2143/1
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி – திருமந்:2182/2
ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு – திருமந்:2183/1
நனவில் கனவு இல்லை ஐந்து நனவில் – திருமந்:2196/1
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்கு பால் இரண்டு ஆமே – திருமந்:2214/3,4
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்தாறாய் – திருமந்:2298/2
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள – திருமந்:2304/2
அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே – திருமந்:2418/4
ஏறியவாறே மலம் ஐந்து இடை அடைத்து – திருமந்:2478/1
அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல – திருமந்:2710/2
ஆன நடம் ஐந்து அகள சகளத்தர் – திருமந்:2727/1
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும் – திருமந்:2733/2
உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள் – திருமந்:2759/3
காயம் பலகை கவறு ஐந்து கண் மூன்றாய் – திருமந்:2866/1
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள – திருமந்:2874/2
பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு – திருமந்:2883/1
கூடு புக்கு ஆனது ஐந்து குதிரையும் – திருமந்:2893/2
ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன – திருமந்:2905/1
யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே – திருமந்:2932/4
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே – திருமந்:3000/4
மேல்


ஐந்துக்கும் (1)

பார சதாசிவம் பார் முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே – திருமந்:384/3,4
மேல்


ஐந்துடன் (3)

துலை பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி – திருமந்:467/2
வெல்லகில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும் – திருமந்:2028/3
சத்திய மாயை தனு சத்தி ஐந்துடன்
சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே – திருமந்:2270/3,4
மேல்


ஐந்தும் (69)

சத்தம் முதல் ஐந்தும் தன்வழி தான் சாரில் – திருமந்:135/1
தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும் – திருமந்:140/1
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் – திருமந்:140/2
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் – திருமந்:140/3
பரு ஊசி ஐந்தும் ஓர் பையினுள் வாழும் – திருமந்:183/1
பரு ஊசி ஐந்தும் பறக்கும் விருகம் – திருமந்:183/2
பரு ஊசி ஐந்தும் பனி-தலை பட்டால் – திருமந்:183/3
அறு வகை ஆன் ஐந்தும் ஆட்ட தன் தாதை – திருமந்:351/2
தேனின்-கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய் – திருமந்:385/3
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறி – திருமந்:455/2
பிண்டத்தில் உள்ளுறு பேதை புலன் ஐந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது – திருமந்:466/1,2
உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசு உடை தூங்கு இருள் நீங்கி – திருமந்:610/1,2
ஓசையில் ஏழும் ஒளியின்-கண் ஐந்தும்
நாசியின் மூன்றும் நாவில் இரண்டும் – திருமந்:723/1,2
உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும் – திருமந்:741/1
துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில் – திருமந்:779/3
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்று எட்டுக்கும் – திருமந்:783/1
ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும்
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் – திருமந்:945/1,2
கொண்ட இ சக்கரத்துள்ளே குறி ஐந்தும்
கொண்ட இ சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும் – திருமந்:949/2,3
கொண்ட இ சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும்
கொண்ட இ சக்கரத்துள் நின்ற கூத்தே – திருமந்:949/3,4
நகைத்து எழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடும் முப்புரம் பார் அங்கியோடே – திருமந்:1016/2,3
ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும் – திருமந்:1020/2
கும்ப களிறு ஐந்தும் கோலொடு பாகனும் – திருமந்:1127/1
ககராதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை – திருமந்:1307/1
உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும்
மடலான மா மாயை மற்று உள்ள நீவ – திருமந்:1439/1,2
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும் – திருமந்:1442/2
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் – திருமந்:1646/1
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே – திருமந்:1646/4
மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான் – திருமந்:1689/1
புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக – திருமந்:1727/3
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு – திருமந்:1729/3
வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே – திருமந்:1757/4
ஆய அருள் ஐந்தும் ஆம் அருள்செய்கையே – திருமந்:1805/4
கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே – திருமந்:1823/4
ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழ – திருமந்:1832/1
தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை – திருமந்:2000/2
அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார் – திருமந்:2021/2
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி – திருமந்:2038/1
போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால் – திருமந்:2041/2
பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்துளும் – திருமந்:2146/1
படு பர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர் – திருமந்:2147/2,3
கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று – திருமந்:2153/1
கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று – திருமந்:2153/1
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து – திருமந்:2166/3
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே – திருமந்:2170/4
சாக்கிர சாக்கிரம் ஆதி-தனில் ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி – திருமந்:2182/1,2
வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே – திருமந்:2184/4
தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே – திருமந்:2186/4
வேறு ஆன ஐந்தும் விடவே நனாவினில் – திருமந்:2197/3
ஐயைந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் – திருமந்:2208/1
மேனிகள் ஐந்தும் போய் விட்டு சிவம் ஆகி – திருமந்:2218/3
துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி – திருமந்:2292/1
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்று – திருமந்:2293/1
ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும் – திருமந்:2316/1
சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கி – திருமந்:2373/2
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும்
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே – திருமந்:2443/3,4
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் – திருமந்:2541/1
கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன – திருமந்:2567/2
அவி இன்றிய மனமாதிகள் ஐந்தும்
குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து – திருமந்:2589/2,3
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே – திருமந்:2616/1
பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த – திருமந்:2636/3
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே – திருமந்:2655/2
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே – திருமந்:2685/4
பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே – திருமந்:2721/1
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான் ஐந்தும் – திருமந்:2737/1
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான் ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும் – திருமந்:2737/1,2
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக – திருமந்:2749/2
தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும் – திருமந்:2766/1
பார்ப்பான் பசு ஐந்தும் பாலா சொரியுமே – திருமந்:2883/4
ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும் – திருமந்:2884/1
மேல்


ஐந்துமே (1)

சேய் நாடு ஒளி என சிவகதி ஐந்துமே – திருமந்:2579/4
மேல்


ஐந்துளும் (1)

பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்துளும்
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை – திருமந்:2146/1,2
மேல்


ஐந்தே (3)

வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே – திருமந்:1757/4
பொய்வருடைய புலன்களும் ஐந்தே – திருமந்:2043/4
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் – திருமந்:2267/2
மேல்


ஐந்தையும் (5)

குமிழிக்குள் சுடர் ஐந்தையும் கூட்டி – திருமந்:881/2
அ இயல்பு ஆய இருமூன்று எழுத்து ஐந்தையும்
செ இயல்பு ஆக சிறந்தனன் நந்தியும் – திருமந்:942/1,2
உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும் – திருமந்:1439/1
பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை – திருமந்:1493/1
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்து – திருமந்:2575/1
மேல்


ஐந்தொடு (2)

அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே – திருமந்:2147/4
அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே – திருமந்:2925/4
மேல்


ஐந்தொடும் (1)

ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர் – திருமந்:1569/1
மேல்


ஐந்தொழில் (1)

ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே – திருமந்:2727/3
மேல்


ஐந்தோடு (3)

ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு – திருமந்:2211/2
உண்மை கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம் – திருமந்:2383/2
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே – திருமந்:2701/4
மேல்


ஐந்நூறு (1)

மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் – திருமந்:2178/2
மேல்


ஐம் (3)

பேணிய ஐம் தொழிலால் விந்துவில் பிறந்து – திருமந்:398/3
ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம் – திருமந்:447/1
குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி – திருமந்:1914/2
மேல்


ஐம்பத்தாறு (1)

இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட – திருமந்:2782/3
மேல்


ஐம்பத்திரண்டு (1)

காரணி சத்திகள் ஐம்பத்திரண்டு என – திருமந்:1389/1
மேல்


ஐம்பத்திருவராய் (1)

காரணி கன்னிகள் ஐம்பத்திருவராய்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும் – திருமந்:1389/2,3
மேல்


ஐம்பத்து (5)

முன்னுறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுமாய் – திருமந்:699/3
ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் – திருமந்:1219/1
ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள் – திருமந்:1381/2
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு – திருமந்:1381/3
ஆகின்ற ஐம்பத்து அறு வகை சூழவே – திருமந்:1381/4
மேல்


ஐம்பத்தொருவரும் (1)

அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும்
சித்தது மேவி திருந்திடுவாரே – திருமந்:1234/3,4
மேல்


ஐம்பத்தொன்று (3)

இணையார் கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும் – திருமந்:898/3
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே – திருமந்:964/4
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி – திருமந்:2699/1
மேல்


ஐம்பத்தொன்றும் (1)

அடைவின் எழுத்து ஐம்பத்தொன்றும் அமர்ந்ததே – திருமந்:924/4
மேல்


ஐம்பத்தோர் (2)

ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்துள் நிற்க – திருமந்:945/3
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம் – திருமந்:2866/2
மேல்


ஐம்பதம் (1)

வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் – திருமந்:1756/2
மேல்


ஐம்பதின் (1)

ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே – திருமந்:1709/3
மேல்


ஐம்பதின்மருள் (1)

ஓர் ஐம்பதின்மருள் ஒன்றியே நின்றது – திருமந்:1233/1
மேல்


ஐம்பது (11)

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் – திருமந்:965/1
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் – திருமந்:965/2
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் – திருமந்:965/3
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்து ஆமே – திருமந்:965/4
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும் – திருமந்:1224/2
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் – திருமந்:1710/3
ஐம்பது அறியாதவரும் அவர் சிலர் – திருமந்:2442/1
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் – திருமந்:2698/1
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் – திருமந்:2698/2
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின் – திருமந்:2698/3
ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே – திருமந்:2698/4
மேல்


ஐம்பதும் (2)

அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின் – திருமந்:924/1
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன – திருமந்:955/2
மேல்


ஐம்பதே (1)

அ வகை ஐம்பதே என்ன அறியலாம் – திருமந்:775/2
மேல்


ஐம்பதோடு (2)

இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய் – திருமந்:696/3
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர் – திருமந்:963/2
மேல்


ஐம்பாசம் (1)

அருளில் தலை நில்லார் ஐம்பாசம் நீங்கார் – திருமந்:1814/2
மேல்


ஐம்பான் (1)

மெய்த்தகு அன்னம் ஐம்பான் ஒன்று மேதினி – திருமந்:2184/2
மேல்


ஐம்புல (2)

அறிவான மாயையும் ஐம்புல கூட்டத்து – திருமந்:1133/1
மயக்கிய ஐம்புல பாசம் அறுத்து – திருமந்:2608/1
மேல்


ஐம்புலன் (2)

கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு – திருமந்:880/3
நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே – திருமந்:2610/4
மேல்


ஐம்புலனுடனே (1)

அறி ஐம்புலனுடனே நான்றது ஆகி – திருமந்:119/1
மேல்


ஐம்புலனும் (2)

வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற – திருமந்:1775/3
வென்று ஐம்புலனும் விரைந்து பிணக்கு அறுத்து – திருமந்:2517/3
மேல்


ஐம்பூதங்கள் (1)

ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம் – திருமந்:2677/1,2
மேல்


ஐம்பூதத்தில் (1)

அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்து – திருமந்:597/1
மேல்


ஐம்பூதத்தை (1)

பன்மை அது ஆக பரந்த ஐம்பூதத்தை
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின் – திருமந்:687/2,3
மேல்


ஐம்பூதம் (2)

பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து – திருமந்:597/2
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நால் திசை முக்கண்ணி நாடும் இருள்வெளி – திருமந்:1098/1,2
மேல்


ஐம்பூதமும் (3)

பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியை – திருமந்:1036/3
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
மாய பல இந்திரியம் அவற்றுடன் – திருமந்:1805/2,3
காய ஐம்பூதமும் காரிய மாயையில் – திருமந்:1928/3
மேல்


ஐம்பொறி (1)

அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று – திருமந்:2170/3
மேல்


ஐம்மல (2)

ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே – திருமந்:2253/4
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர் – திருமந்:2337/2
மேல்


ஐம்மலத்தார் (2)

ஐம்மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர் – திருமந்:2257/3
ஐம்மலத்தார் அரனார்க்கு அறிவோரே – திருமந்:2257/4
மேல்


ஐம்மலத்தாரும் (2)

ஐம்மலத்தாரும் மதித்த சகலத்தர் – திருமந்:2257/1
ஐம்மலத்தாரும் அருவினை பாசத்தார் – திருமந்:2257/2
மேல்


ஐம்மலம் (6)

உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால் – திருமந்:2059/1
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து – திருமந்:2177/3
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு – திருமந்:2207/1
அந்தி இருள் போலும் ஐம்மலம் ஆறுமே – திருமந்:2293/4
சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் – திருமந்:2337/1
அனாதி சீவன் ஐம்மலம் அற்ற பாலாய் – திருமந்:2401/1
மேல்


ஐம்முகம் (1)

சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில் – திருமந்:1741/1
மேல்


ஐம்முகன் (5)

கோலிய ஐம்முகன் கூற பரவிந்து – திருமந்:708/2
மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும் – திருமந்:1731/2
பலம் தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் – திருமந்:1776/2
தவம் ஆன ஐம்முகன் ஈசன் அரனும் – திருமந்:1807/2
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன் – திருமந்:2417/2
மேல்


ஐம்மூன்று (1)

அஞ்சு முகம் உள ஐம்மூன்று கண் உள – திருமந்:1736/1
மேல்


ஐம்மூன்றும் (1)

ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடில் – திருமந்:776/3
மேல்


ஐய (1)

ஐய சிவம் சித்தியாம் தோற்றம் அவ்வாறே – திருமந்:2238/4
மேல்


ஐயம் (4)

ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர் – திருமந்:537/2
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின் – திருமந்:1131/2
எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால் – திருமந்:1851/3
ஐயம் புகாமல் இருந்த தவசியார் – திருமந்:1891/3
மேல்


ஐயமும் (1)

ஐயமும் தான் அவன் அ துரியத்தனே – திருமந்:2208/4
மேல்


ஐயன் (1)

ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே – திருமந்:2130/4
மேல்


ஐயனார் (1)

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் – திருமந்:999/1
மேல்


ஐயனும் (2)

ஐயனும் அ வழி ஆகி நின்றானே – திருமந்:2602/4
ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே – திருமந்:2606/4
மேல்


ஐயனை (1)

அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும் – திருமந்:1874/1
மேல்


ஐயா (1)

உறங்கல் ஐயா என்று உபாயம் செய்தாளே – திருமந்:1107/4
மேல்


ஐயிருமூன்று (1)

சோதி எழுத்தினில் ஐயிருமூன்று உள – திருமந்:963/3
மேல்


ஐயுளும் (1)

கௌவுளும் ஐயுளும் கலந்து இரீம் சிரீம் என்று – திருமந்:1320/2
மேல்


ஐயேழும் (2)

அறிவு ஒன்று இலாதன ஐயேழும் ஒன்றும் – திருமந்:2181/1
அறிகின்று இலாதன ஐயேழும் ஒன்றும் – திருமந்:2323/1
மேல்


ஐயைஞ்சு (2)

அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று – திருமந்:742/1
ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சு மூன்றுக்கும் – திருமந்:746/1
மேல்


ஐயைந்தில் (2)

கருதும் ஐயைந்தில் காண்பது மூன்று ஆம் – திருமந்:781/2
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனா என்பர் – திருமந்:2200/2
மேல்


ஐயைந்து (9)

அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின் – திருமந்:924/1
அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து – திருமந்:1263/1
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம் – திருமந்:2142/1
வேறான ஐயைந்து மெய் புருடன் பரம் – திருமந்:2172/2
ஆறாறில் ஐயைந்து அகல நனா நனா – திருமந்:2197/1
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம் – திருமந்:2200/1
ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் – திருமந்:2238/1
ஆறாறும் ஆறதின் ஐயைந்து அவத்தையோடு – திருமந்:2263/1
கொடியும் படையும் கோட்சரன் ஐயைந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே – திருமந்:2917/3,4
மேல்


ஐயைந்தும் (9)

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால் – திருமந்:1034/1,2
செய்திடும் விந்து பேத திறன் ஐயைந்தும்
செய்திடும் நாத பேத திறனால் ஆறும் – திருமந்:1924/1,2
நடுங்காது இருப்பானும் ஐயைந்தும் நண்ணப்படும் – திருமந்:1942/2
ஆகின்ற நாலாறு ஐயைந்தும் மாயாவாதிக்கே – திருமந்:2179/4
அனதான ஐயைந்தும் விந்துவின் சத்தி – திருமந்:2187/2
ஐயைந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் – திருமந்:2208/1
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் – திருமந்:2239/1
ஐயைந்தும் எட்டு பகுதியும் மாயையும் – திருமந்:2294/1
ஆன்மாவும் இல்லையா ஐயைந்தும் இல்லையே – திருமந்:2306/4
மேல்


ஐயைந்துள் (1)

கோலிய ஐயைந்துள் ஆகும் குறிக்கிலே – திருமந்:2178/4
மேல்


ஐவகை (1)

அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம்-தன்னை – திருமந்:2400/1
மேல்


ஐவர் (10)

சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த – திருமந்:106/1
புவனம் படைப்பார்க்கு புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசையான் ஆய் – திருமந்:386/2,3
சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த – திருமந்:990/1
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்றறுவர்கள் – திருமந்:2027/1
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை – திருமந்:2152/3
அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில் – திருமந்:2223/3
சிவமாதி ஐவர் திண்டாட்டமும் தீர – திருமந்:2793/1
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர் – திருமந்:2888/2
அ தலை ஐவர் அமர்ந்து நின்றாரே – திருமந்:2888/4
ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும் – திருமந்:2935/2
மேல்


ஐவர்-தம் (1)

உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்-தம்
கள்ளத்தை நீக்கி கலந்து உடனே புல்கி – திருமந்:1183/1,2
மேல்


ஐவர்க்கு (4)

ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது – திருமந்:188/1
ஐவர்க்கு நாயகன் அ ஊர் தலைமகன் – திருமந்:564/1
ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே – திருமந்:2004/4
ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே – திருமந்:2027/4
மேல்


ஐவர்க்கும் (3)

ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால் – திருமந்:188/3
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரணம் ஆகி கலந்து விரிந்ததே – திருமந்:663/3,4
உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய – திருமந்:2223/1
மேல்


ஐவரால் (1)

அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை – திருமந்:1053/3
மேல்


ஐவருடைய (1)

ஐவருடைய அவாவினில் தோன்றிய – திருமந்:2043/3
மேல்


ஐவரும் (14)

நெய் அட்டி சோறு உண்ணும் ஐவரும் போயினார் – திருமந்:151/2
ஐவரும் அ செய்யை காத்து வருவார்கள் – திருமந்:188/2
ஐவரும் அ செய்யை காவல் விட்டாரே – திருமந்:188/4
அறுத்தனர் ஐவரும் எண்_இலி துன்பம் – திருமந்:213/2
ஆணவ சத்தியும் ஆம் அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடை முறை – திருமந்:398/1,2
ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள் – திருமந்:985/3
கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவி சடங்கு செய்தாரே – திருமந்:1191/3,4
கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும்
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன் – திருமந்:1618/1,2
கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர் – திருமந்:1728/1,2
ஐவரும் மைந்தரும் ஆள கருதுவர் – திருமந்:2027/2
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில் – திருமந்:2027/3
அடியுடை ஐவரும் அங்கு உறைவோரும் – திருமந்:2165/3
பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து – திருமந்:2263/3
ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே – திருமந்:2886/3,4
மேல்


ஐவருள் (1)

அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்க – திருமந்:610/3
மேல்


ஐவரை (5)

ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு – திருமந்:1073/3
துன்னி அம் ஐவரை பெற்றனள் தூய்மொழி – திருமந்:1118/2
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் – திருமந்:2042/2
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம் – திருமந்:2621/3
பொதுங்கிய ஐவரை போய் வளைத்தானே – திருமந்:2914/4
மேல்


ஐவிதத்தால் (1)

தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும் – திருமந்:2083/3

மேல்