மா – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 136
மாக்கள் 1
மாக்களே 1
மாக்களை 1
மாகமை 1
மாகாய 2
மாகுலி 1
மாங்கனி 1
மாச்சு 2
மாசு 11
மாசுணம் 1
மாட்டாதார் 6
மாட்டார் 7
மாட்டி 1
மாட்டிய 1
மாட்டு 1
மாட 2
மாடத்து 1
மாடம் 1
மாடமாய் 1
மாடி 1
மாடு 3
மாடும் 3
மாண் 1
மாண்டது 1
மாண்டவர் 1
மாண்டான் 1
மாண்டிடும் 1
மாண்பட 1
மாண்பு 3
மாணவர்-தமை 1
மாணிக்க 7
மாணிக்கத்து 2
மாணிக்கம் 4
மாணும் 1
மாணுற 1
மாத்திக்கே 1
மாத்திரை 5
மாதமும் 1
மாதர் 10
மாதர்க்கு 1
மாதர்க்கே 1
மாதரார் 1
மாதரிடத்தே 1
மாதரை 2
மாதவத்தின் 1
மாதவம் 7
மாதவர் 7
மாதவர்க்கு 1
மாதவன் 6
மாதவி 1
மாதறி 2
மாதனம் 4
மாதா 5
மாதின்-பால் 1
மாது 14
மாதுக்கு 1
மாதுடன் 1
மாதும் 1
மாதுரி 1
மாதேவன் 4
மாதேவி 1
மாதை 4
மாந்தர் 7
மாந்தர்க்கு 1
மாந்தர்கள் 1
மாந்தரை 1
மாநகர் 1
மாநிலம் 4
மாபரத்து 2
மாம்பரன்-பால் 1
மாம்பழம் 2
மாமறையாளர்-தம் 1
மாமோனம் 1
மாய் 1
மாய்க்கும் 1
மாய்கின்றது 1
மாய்த்திடு 1
மாய்தலும் 1
மாய்ந்தது 1
மாய்ந்து 2
மாய்வது 1
மாய்வர் 2
மாய 21
மாயகம் 1
மாயத்து 1
மாயத்துள் 1
மாயத்தே 1
மாயத்தை 1
மாயம் 7
மாயமும் 1
மாயமே 2
மாயல் 1
மாயவனாய் 1
மாயன் 3
மாயனும் 3
மாயனை 2
மாயா 13
மாயாபுரி 1
மாயாவாதிக்கே 1
மாயாள் 4
மாயாள்-தன்னாலே 1
மாயும் 1
மாயுமே 2
மாயே 1
மாயேயமும் 1
மாயை 65
மாயை-தன்னில் 1
மாயையாம் 1
மாயையில் 7
மாயையின் 9
மாயையினாலே 1
மாயையும் 10
மாயையுள் 2
மாயையே 2
மாயையை 1
மாயோகம் 2
மாயோதயம் 1
மார்க்க 1
மார்க்கங்கள் 2
மார்க்கத்தார்க்கும் 2
மார்க்கம் 10
மார்க்கமாம் 1
மார்க்கமும் 5
மார்க்கமே 2
மார்க்கராய் 1
மார்கழி 1
மார்பு 1
மாரணம் 3
மாரன் 1
மாரனும் 2
மாரியும் 1
மாருதத்து 1
மாருதம் 7
மாருதமாய் 2
மால் 38
மாலகு 2
மாலவன் 1
மாலாங்கன் 1
மாலாங்கனே 1
மாலினி 1
மாலுக்கு 1
மாலுக்கும் 2
மாலும் 3
மாலுற்ற 1
மாலுற்றவாறே 1
மாலை 13
மாலைக்கும் 1
மாலைகள் 1
மாலையும் 4
மாலொடு 1
மாலோகம் 1
மாவினையாளர்-தம் 1
மாள்பவர் 1
மாள 8
மாளிகை 3
மாளும் 5
மாற்கு 1
மாற்றகில்லாரே 1
மாற்றம் 1
மாற்றம்-தனை 1
மாற்றி 20
மாற்றிடும் 1
மாற்றிடும்-போதும் 1
மாற்றியே 1
மாற்றிவிட்டு 1
மாற்று 3
மாற்றும் 1
மாற்றுவன் 1
மாற 2
மாறது 1
மாறவே 1
மாறா 3
மாறாத 2
மாறாது 1
மாறி 10
மாறிடும் 2
மாறியே 1
மாறின் 1
மாறினன் 1
மாறினும் 1
மாறு 11
மாறு-மின் 1
மாறுதல் 4
மாறும் 6
மாறுமே 1
மான் 7
மான்று 1
மான்றும் 1
மான 4
மானம் 3
மானன் 1
மானனாய் 1
மானா 1
மானாபிமானம் 1
மானிடம் 1
மானிடர் 2
மானின்-கண் 1
மானுடர் 11
மானுடராம் 1
மானும் 1
மானே 2
மானேர் 1
மானை 1

மா (136)

ஆறு அங்கமாய் வரு மா மறை ஓதியை – திருமந்:55/1
நந்திகள் நால்வர் சிவயோக மா முனி – திருமந்:67/2
மாயத்தை மா மாயை-தன்னில் வரும் பரை – திருமந்:90/2
அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே – திருமந்:248/1
மயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின் – திருமந்:302/1
மா மலமும் சமயத்துள் மயலுறும் – திருமந்:326/2
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் – திருமந்:329/2
மயக்குறு மா மாயையை மாயையின் வீடு – திருமந்:329/3
வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை – திருமந்:373/3
பயன் எளிதாம் பரு மா மணி செய்ய – திருமந்:392/1
உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து – திருமந்:399/1,2
கூடும் பிறவி குணம் செய்த மா நந்தி – திருமந்:406/2
கூடு மரபில் குணஞ்செய்த மா நந்தி – திருமந்:414/2
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே – திருமந்:449/4
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே – திருமந்:449/4
மண் மலையத்தனை மா தனம் ஈயினும் – திருமந்:508/1
அதோமுகம் மா மலர் ஆயது கேளும் – திருமந்:525/1
வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும் – திருமந்:534/3
கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு – திருமந்:536/1
மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும் – திருமந்:544/2
மா சித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும் – திருமந்:581/3
மா சித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும் – திருமந்:581/3
மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய் – திருமந்:691/3
வணங்குற்ற கல்வி மா ஞானம் மிகுத்தல் – திருமந்:705/2
மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர் – திருமந்:840/2
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே – திருமந்:885/4
தராதல மூலைக்கு தற்பர மா பரன் – திருமந்:890/1
மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே – திருமந்:944/4
மா மாயை மாயை வயிந்தவம் வைகரி – திருமந்:1045/1
வரு பலவாய் நிற்கும் மா மாது தானே – திருமந்:1046/4
கார் அணி மா மணி குண்டலகாதிக்கே – திருமந்:1049/4
கண்டிகை ஆரம் கதிர் முடி மா மதி – திருமந்:1050/3
குன்றல் இல் மோகினி மா திரு குஞ்சிகை – திருமந்:1051/2
வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை – திருமந்:1052/2
பராசத்தி மா சத்தி பல வகையாலும் – திருமந்:1056/1
சிந்தை கமலத்து எழுகின்ற மா சத்தி – திருமந்:1076/3
பூசனை கந்தம் புனை மலர் மா கோடி – திருமந்:1086/1
வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயை – திருமந்:1117/3
மது விரி பூங்குழல் மா மங்கை நங்கை – திருமந்:1154/3
வெள்ளடையான் இரு மா மிகு மா மலர் – திருமந்:1158/1
வெள்ளடையான் இரு மா மிகு மா மலர் – திருமந்:1158/1
தோன்றும் இலக்குற ஆகுதல் மா மாயை – திருமந்:1187/3
மா மது மண்டலம் மாருதம் ஆதியும் – திருமந்:1223/2
மா மயம் ஆனது வந்து எய்தலாமே – திருமந்:1241/4
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி – திருமந்:1249/3
வன்னி எழுத்து அவை மா பலம் உள்ளன – திருமந்:1256/1
வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம் – திருமந்:1256/3
மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும் – திருமந்:1286/1
மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி – திருமந்:1316/3
மா அடி காணும் வகை அறிவாரே – திருமந்:1333/4
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு – திருமந்:1398/2
நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம் – திருமந்:1427/2
மடலான மா மாயை மற்று உள்ள நீவ – திருமந்:1439/2
வானுறு மா மலர் இட்டு வணங்கினும் – திருமந்:1452/2
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு – திருமந்:1474/1
வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும் – திருமந்:1506/1
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி – திருமந்:1517/3
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே – திருமந்:1553/4
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும் – திருமந்:1604/1
செம் மா தவத்தின் செயலின் பெருமையும் – திருமந்:1625/2
மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார் – திருமந்:1626/3
மனத்து உறை மா கடல் ஏழும் கைநீந்தி – திருமந்:1637/1
படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு – திருமந்:1641/1
மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று – திருமந்:1678/1
அடிவைத்த மா முடி மாய பிறவி – திருமந்:1698/2
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே – திருமந்:1729/4
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை – திருமந்:1767/3
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன் – திருமந்:1790/3
ஆயும் அறிவோடு அறியாத மா மாயை – திருமந்:1805/1
விளையும் தனி மாயை மிக்க மா மாயை – திருமந்:1813/2
வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி – திருமந்:1815/1
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர் – திருமந்:1832/3
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் – திருமந்:1833/2
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று – திருமந்:1837/1
வானுறு மா மலர் இட்டு வணங்கினும் – திருமந்:1848/2
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே – திருமந்:1852/4
மயங்கா பகிரண்ட மா முடி தானே – திருமந்:1873/4
தந்திடு மா மாயை வாகேசி தற்பரை – திருமந்:1925/2
அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே – திருமந்:1930/4
மந்திர தந்திர மா யோக ஞானமும் – திருமந்:2045/1
மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை – திருமந்:2073/2
வரை அருகு ஊறிய மா தவம் நோக்கின் – திருமந்:2100/3
சாக்கிர சொப்பனம் தன்னிடை மா மாயை – திருமந்:2167/2
போதம் கலை காலம் நியதி மா மாயை – திருமந்:2190/3
தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி – திருமந்:2218/2
கேவலம் ஆகும் சகல மா யோனியுள் – திருமந்:2226/3
ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து – திருமந்:2229/1
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே – திருமந்:2242/4
மாய சகலத்து காமிய மா மாயை – திருமந்:2243/3
பேணும் கனவும் மா மாயை திரோதாயி – திருமந்:2259/3
கருமம் உணர்ந்து மா மாயை கைக்கொண்டோர் – திருமந்:2260/3
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே – திருமந்:2267/4
மாயை கைத்தாயாக மா மாயை ஈன்றிட – திருமந்:2268/1
உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே – திருமந்:2285/4
மரத்தை மறைத்தது மா மத யானை – திருமந்:2290/1
மரத்தில் மறைந்தது மா மத யானை – திருமந்:2290/2
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு – திருமந்:2294/2
தான் மா மறை அறை தன்மை அறிகிலர் – திருமந்:2306/2
வானவர் ஆதியை மா மணி சோதியை – திருமந்:2324/2
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும் – திருமந்:2334/2
தூண்டி சிவஞான மா வினை தான் ஏறி – திருமந்:2346/3
வாசா மகோசர மா நந்தி தானே – திருமந்:2380/4
வரு சமய புற மாயை மா மாயை – திருமந்:2385/3
அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள் – திருமந்:2403/3
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும் – திருமந்:2413/3
மன்று நிறைந்தது மா பரம் ஆயது – திருமந்:2446/1
நித்த நடத்தும் நடிக்கும் மா நேயத்தே – திருமந்:2459/4
கல் ஒளி மா நிறம் சோபை கதிர் தட்ட – திருமந்:2483/1
மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு – திருமந்:2494/2
மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால் – திருமந்:2514/3
பொன்னிலும் மா மணியாய புனிதனை – திருமந்:2516/2
மா மதியாம் மதியாய் நின்ற மாதவர் – திருமந்:2524/1
மயக்குற நோக்கினும் மா தவம் செய்யார் – திருமந்:2565/1
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும் – திருமந்:2598/3
அறிவு உடையான் அரு மா மறை உள்ளே – திருமந்:2636/1
மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி – திருமந்:2665/1
சந்திடும் மா மொழி சற்குரு சன்மார்க்கம் – திருமந்:2670/2
கண்ணும் மா யோக கடவுள் இருப்பது – திருமந்:2671/2
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி – திருமந்:2690/2
வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து – திருமந்:2697/3
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர் – திருமந்:2724/2
வடமுற்ற மா வனம் மன்னவன் தானே – திருமந்:2733/4
சாரும் திலை வன தண் மா மலையத்தூடு – திருமந்:2747/3
மாயை மா மாயை கடந்து நின்றார் காண – திருமந்:2766/3
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் – திருமந்:2772/1
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை – திருமந்:2785/2
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் – திருமந்:2796/2
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின் – திருமந்:2796/3
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை – திருமந்:2827/1
மருவ சிவம் என்ற மா முப்பதத்தின் – திருமந்:2829/3
வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் – திருமந்:2850/1
பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா
சத்தியுள் நின்றோர்க்கு தத்துவம் கூடலால் – திருமந்:2862/2,3
மனம் விரிந்து குவிந்தது மா தவம் – திருமந்:2981/1
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட – திருமந்:3001/3
பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான – திருமந்:3002/3
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு – திருமந்:3021/3
மேல்


மாக்கள் (1)

ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும் – திருமந்:2884/1
மேல்


மாக்களே (1)

ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே – திருமந்:2064/4
மேல்


மாக்களை (1)

கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை
வல்லடிக்காரர் வலி கயிற்றால் கட்டி – திருமந்:198/1,2
மேல்


மாகமை (1)

வற்றாது ஒழிவது மாகமை ஆமே – திருமந்:539/4
மேல்


மாகாய (2)

மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம் – திருமந்:400/3
மாகாய மன்றுள் நடம் செய்கின்றானே – திருமந்:2774/4
மேல்


மாகுலி (1)

மாலினி மாகுலி மந்திர சண்டிகை – திருமந்:1216/3
மேல்


மாங்கனி (1)

மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே – திருமந்:1946/4
மேல்


மாச்சு (2)

மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம் – திருமந்:1160/2
மாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கி ஆள்வித்து – திருமந்:1595/2
மேல்


மாசு (11)

நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர் – திருமந்:249/3
மழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட – திருமந்:265/3
வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம் – திருமந்:554/3
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே – திருமந்:723/4
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே – திருமந்:1404/4
மன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற – திருமந்:1432/2
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை – திருமந்:1506/3
ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின் – திருமந்:1781/2
மாசு அகல் வித்தை நியதி மகா மாயை – திருமந்:2191/3
மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே – திருமந்:2296/4
மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம் – திருமந்:2957/1
மேல்


மாசுணம் (1)

ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன் – திருமந்:2809/2
மேல்


மாட்டாதார் (6)

ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர் – திருமந்:56/2,3
நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும் – திருமந்:295/1,2
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து உளாரே – திருமந்:496/3,4
கள்ள கடல் விட்டு கைதொழ மாட்டாதார்
அள்ளல் கடலுள் அழுந்துகின்றாரே – திருமந்:1834/3,4
அச்சம் கெட்டு அ செய் அறுத்து உண்ண மாட்டாதார்
இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே – திருமந்:1886/3,4
கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார்
எட்டி பழத்துக்கு இளைக்கின்றவாறே – திருமந்:2901/3,4
மேல்


மாட்டார் (7)

அரு வரை ஏறி அமுது உண்ண மாட்டார்
திரு வரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே – திருமந்:625/3,4
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே – திருமந்:724/2,3
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்
தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே – திருமந்:1480/3,4
ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள் – திருமந்:1682/1
விடிவது அறியார் வெளி காண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார் – திருமந்:1687/1,2
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உண்மை கட்டு-மின் காண்-மின் – திருமந்:1687/2,3
கறை மணிகண்டனை காண்குற மாட்டார்
நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே – திருமந்:2512/3,4
மேல்


மாட்டி (1)

மைந்தன் இவன் என்று மாட்டி கொள்ளீரே – திருமந்:1026/4
மேல்


மாட்டிய (1)

மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள் – திருமந்:1027/1
மேல்


மாட்டு (1)

வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை – திருமந்:2848/2
மேல்


மாட (2)

பட மாட கோயில் பகவற்கு ஒன்று ஈயில் – திருமந்:1857/1
பட மாட கோயில் பகவற்கு அது ஆமே – திருமந்:1857/4
மேல்


மாடத்து (1)

மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன் – திருமந்:2614/1
மேல்


மாடம் (1)

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது – திருமந்:149/1
மேல்


மாடமாய் (1)

மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தை – திருமந்:131/2,3
மேல்


மாடி (1)

மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே – திருமந்:667/4
மேல்


மாடு (3)

என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள் – திருமந்:170/2
வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு – திருமந்:593/1
மாடு இல்லை காணும் வரும்வழி கண்ட பின் – திருமந்:1356/3
மேல்


மாடும் (3)

மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே – திருமந்:151/3
மது ஊர் குழலியும் மாடும் மனையும் – திருமந்:155/1
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே – திருமந்:173/1
மேல்


மாண் (1)

மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின் – திருமந்:1131/2
மேல்


மாண்டது (1)

மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே – திருமந்:2981/4
மேல்


மாண்டவர் (1)

மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை – திருமந்:1588/3
மேல்


மாண்டான் (1)

மாண்டான் ஒருவன் கைவந்தது தானே – திருமந்:2978/4
மேல்


மாண்டிடும் (1)

அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே – திருமந்:532/3,4
மேல்


மாண்பட (1)

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றி – திருமந்:602/1
மேல்


மாண்பு (3)

வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே – திருமந்:476/4
மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும் – திருமந்:477/1
வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே – திருமந்:3003/4
மேல்


மாணவர்-தமை (1)

ஆசான் முன்னே துயில் மாணவர்-தமை
தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல் – திருமந்:2163/1,2
மேல்


மாணிக்க (7)

மன்றினில் ஆடினான் மாணிக்க கூத்தே – திருமந்:913/4
கடந்தவள் பொன் முடி மாணிக்க தோடு – திருமந்:1400/1
மாணிக்க மாலை மனம் புகுந்தானே – திருமந்:1843/4
மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம் – திருமந்:2064/1
வந்த மரகத மாணிக்க ரேகை போல் – திருமந்:2670/1
மாணிக்க கூத்தனை வண் தில்லை கூத்தனை – திருமந்:2743/1
அரதனம் மன்றினில் மாணிக்க கூத்தன் – திருமந்:2761/3
மேல்


மாணிக்கத்து (2)

மாணிக்கத்து உள்ளே மரகத சோதியாய் – திருமந்:131/1
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய் – திருமந்:131/2
மேல்


மாணிக்கம் (4)

செ வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம் – திருமந்:130/4
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் – திருமந்:1719/1
சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை – திருமந்:1843/1,2
கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம்
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை – திருமந்:2819/2,3
மேல்


மாணும் (1)

மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு – திருமந்:866/2
மேல்


மாணுற (1)

மாணுற வாமம் ஆம் சத்தி நல் பாதமே – திருமந்:1742/4
மேல்


மாத்திக்கே (1)

மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே – திருமந்:1841/4
மேல்


மாத்திரை (5)

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே – திருமந்:573/1
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின் – திருமந்:1631/2
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே – திருமந்:1663/4
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை – திருமந்:1859/1
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும் – திருமந்:2144/1,2
மேல்


மாதமும் (1)

மனையில் ஒன்று ஆகும் மாதமும் மூன்றும் – திருமந்:785/1
மேல்


மாதர் (10)

விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர்
கரும்பு தகர்த்து கடைக்கொண்ட நீர் போல் – திருமந்:180/1,2
மருள் கொண்டு மாதர் மயலுறுவார்கள் – திருமந்:203/3
இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர்
புயலுற புல்லி புணர்ந்தவர் எய்தும் – திருமந்:206/1,2
போகமும் மாதர் புலவி அது நினைந்து – திருமந்:529/1
பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர் – திருமந்:1245/1
மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர் – திருமந்:1961/3
பவளத்து முத்தும் பனி மொழி மாதர்
துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே – திருமந்:2832/3,4
திருந்திய மாதர் திருமணப்பட்டார் – திருமந்:2896/2
மாதர் இருந்தோர் மண்டலம் தானே – திருமந்:2931/4
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது – திருமந்:2990/3
மேல்


மாதர்க்கு (1)

பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே – திருமந்:480/4
மேல்


மாதர்க்கே (1)

மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே – திருமந்:1960/4
மேல்


மாதரார் (1)

வண்டி இச்சிக்கும் மலர் குழல் மாதரார்
கண்டு இச்சிக்கும் நல் காயமும் ஆமே – திருமந்:736/3,4
மேல்


மாதரிடத்தே (1)

மாதரிடத்தே செலுத்தினும் அ விந்து – திருமந்:1961/1
மேல்


மாதரை (2)

பார்க்கின்ற மாதரை பாராது அகன்று போய் – திருமந்:1937/1
மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன – திருமந்:1953/1
மேல்


மாதவத்தின் (1)

இ மாதவத்தின் இயல்பு அறியாரே – திருமந்:1625/4
மேல்


மாதவம் (7)

மருளும் பினையவன் மாதவம் அன்றே – திருமந்:168/4
மாதவம் ஆன வழிபாடு செய்திடும் – திருமந்:717/2
பட்டன மாதவம் ஆறும் பராபரம் – திருமந்:989/1
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில் – திருமந்:1369/1
வழி சென்ற மாதவம் வைகின்ற-போது – திருமந்:1549/1
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே – திருமந்:1879/4
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே – திருமந்:2095/4
மேல்


மாதவர் (7)

மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர் – திருமந்:47/1
மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர் – திருமந்:533/1,2
மன் தரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதி நின்றாளே – திருமந்:1236/3,4
ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி – திருமந்:1464/1,2
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர் – திருமந்:1542/1
மா மதியாம் மதியாய் நின்ற மாதவர்
தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம் – திருமந்:2524/1,2
மேலது வானவர் கீழது மாதவர்
தான் இடர் மானுடர் கீழது மாதனம் – திருமந்:2999/1,2
மேல்


மாதவர்க்கு (1)

வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள்செய்யும் – திருமந்:303/3
மேல்


மாதவன் (6)

இறையவன் மாதவன் இன்பம் படைத்த – திருமந்:433/1
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும் – திருமந்:1531/2,3
மறவா அருள் தந்த மாதவன் நந்தி – திருமந்:1803/2
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே – திருமந்:2091/4
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே – திருமந்:2858/3,4
மற்றவனாய் நின்ற மாதவன் தானே – திருமந்:3031/4
மேல்


மாதவி (1)

வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம் – திருமந்:1003/2
மேல்


மாதறி (2)

முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் – திருமந்:2597/2
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் – திருமந்:2845/2
மேல்


மாதனம் (4)

மாதனம் ஆக மதித்து கொள்ளீரே – திருமந்:721/4
மடியாது கண்டவர் மாதனம் ஆமே – திருமந்:1040/4
மாதனம் ஆக வளர்கின்ற வன்னியை – திருமந்:1041/1
தான் இடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ் சடை – திருமந்:2999/2,3
மேல்


மாதா (5)

பூண்பது மாதா பிதா வழி போலவே – திருமந்:477/3
மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம் – திருமந்:481/1
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம் – திருமந்:481/2
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை – திருமந்:481/3
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே – திருமந்:481/4
மேல்


மாதின்-பால் (1)

காதல் மாதின்-பால் பற்று அற விட்டு – திருமந்:1942/3
மேல்


மாது (14)

மாது குலாவிய வாள்_நுதல் பாகனை – திருமந்:16/2
மாது இரண்டாகி மகிழ்ந்து உடனே நிற்கும் – திருமந்:217/2
வகுத்த பிறவியை மாது நல்லாளும் – திருமந்:476/1
வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும் – திருமந்:629/2
மாது உகந்து ஆடிடும் மால் விடையோனே – திருமந்:632/4
மட்டு அவிழ் தாமரை மாது நல்லாளுடன் – திருமந்:918/1
வரு பலவாய் நிற்கும் மா மாது தானே – திருமந்:1046/4
மாது சமாதி மனோன்மணி மங்கலி – திருமந்:1114/3
மாது சமாதி மனோன்மணி மங்கலி – திருமந்:1120/3
மறித்திருந்தாள் அவள் மாது நல்லாளே – திருமந்:1156/4
மாது நல்லாளும் மணாளன் இருந்திட – திருமந்:1157/1
அற்கொடி மாது உமை ஆர்வ தலைமகள் – திருமந்:1245/2
மாது புனை முடி வானகம் ஆவது – திருமந்:1724/2
மாது அறியா வகை நின்று மயங்கின – திருமந்:2220/2
மேல்


மாதுக்கு (1)

நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை – திருமந்:2/2
மேல்


மாதுடன் (1)

மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் – திருமந்:662/2
மேல்


மாதும் (1)

மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும் – திருமந்:1286/1
மேல்


மாதுரி (1)

மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு – திருமந்:1204/3
மேல்


மாதேவன் (4)

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தினின் உள்ளே – திருமந்:490/3,4
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர் – திருமந்:1542/1
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே – திருமந்:2012/3,4
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தினின் உள்ளே – திருமந்:3024/3,4
மேல்


மாதேவி (1)

தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மாதேவி
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர் காவலன் – திருமந்:1055/1,2
மேல்


மாதை (4)

நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை – திருமந்:1245/3
வில் கொடி மாதை விரும்பி விளங்கே – திருமந்:1245/4
புரிவளைக்கைச்சி எம் பொன் அணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே – திருமந்:1248/3,4
மாதை அவளுக்கு மண்ணும் திலகமாய் – திருமந்:1414/3
மேல்


மாந்தர் (7)

எண் இன்றி மாந்தர் இறக்கின்றவாறே – திருமந்:143/4
விழ கண்டும் தேறார் விழி இலா மாந்தர்
குழ கன்று மூத்து எருதாய் சில நாளில் – திருமந்:177/2,3
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே – திருமந்:328/4
வரைவரை என்பவர் மதி இலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு – திருமந்:848/2,3
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர் – திருமந்:916/2,3
மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே – திருமந்:1449/4
பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் – திருமந்:1626/1,2
மேல்


மாந்தர்க்கு (1)

நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்கு
பின் அறிவு ஆகும் பிரான் அறி அ தடம் – திருமந்:1228/1,2
மேல்


மாந்தர்கள் (1)

மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள்
தேறில் இதனை தெளி உச்சி கப்பிடின் – திருமந்:847/2,3
மேல்


மாந்தரை (1)

பண் அறிவாளனை பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே – திருமந்:2518/3,4
மேல்


மாநகர் (1)

வடியுடை மாநகர் தான் வரும்-போது – திருமந்:2165/2
மேல்


மாநிலம் (4)

வளத்திடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும் – திருமந்:158/1
மலை தந்த மாநிலம் தான் வெந்ததுவே – திருமந்:422/4
வட்ட திரை அனல் மாநிலம் ஆகாயம் – திருமந்:441/2
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே – திருமந்:703/4
மேல்


மாபரத்து (2)

மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை – திருமந்:1717/2
மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும் – திருமந்:1717/3
மேல்


மாம்பரன்-பால் (1)

போதாந்த மாம்பரன்-பால் புக புக்கதால் – திருமந்:235/3
மேல்


மாம்பழம் (2)

தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே – திருமந்:624/4
தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்த-கால் – திருமந்:2933/1
மேல்


மாமறையாளர்-தம் (1)

மன்னிய சோகமாம் மாமறையாளர்-தம்
சென்னியது ஆன சிவயோகமாம் ஈது என்ன – திருமந்:2403/1,2
மேல்


மாமோனம் (1)

சிவம் ஆகும் மாமோனம் சேர்தல் மெய்வீடே – திருமந்:1013/4
மேல்


மாய் (1)

மாய் வரு வாயு வளப்புள் இருந்தே – திருமந்:700/4
மேல்


மாய்க்கும் (1)

மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் – திருமந்:1951/2
மேல்


மாய்கின்றது (1)

மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே – திருமந்:674/4
மேல்


மாய்த்திடு (1)

மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே – திருமந்:2296/4
மேல்


மாய்தலும் (1)

வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே – திருமந்:2880/4
மேல்


மாய்ந்தது (1)

மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே – திருமந்:1348/4
மேல்


மாய்ந்து (2)

மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி – திருமந்:2699/3
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி – திருமந்:2699/3
மேல்


மாய்வது (1)

பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா – திருமந்:2956/3
மேல்


மாய்வர் (2)

வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே – திருமந்:531/4
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே – திருமந்:533/4
மேல்


மாய (21)

மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன் – திருமந்:22/1
மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு – திருமந்:430/2
மன்றதுவாய் நின்ற மாய நல் நாடனை – திருமந்:948/2
மாய குழியில் விழுவர் மனை மக்கள் – திருமந்:1530/3
மாய மனிதர் மயக்கம் அது ஒழி – திருமந்:1545/2
மாய தேர் ஏறி மங்கும் அவை உணர் – திருமந்:1651/2
மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி – திருமந்:1681/1
அடிவைத்த மா முடி மாய பிறவி – திருமந்:1698/2
மாய பல இந்திரியம் அவற்றுடன் – திருமந்:1805/3
மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன – திருமந்:1953/1
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு – திருமந்:2122/2
மாய பை மண்ணா மயங்கியவாறே – திருமந்:2122/4
மண்டலம் மூன்றினுள் மாய நல் நாடனை – திருமந்:2219/1
மாய சகலத்து காமிய மா மாயை – திருமந்:2243/3
மாய விளக்கு அது நின்று மறைந்திடும் – திருமந்:2367/1
காரியம் ஏழ் கண்டு அறு மாய பாழ்விட – திருமந்:2495/1
மாய பாழ் சீவன் வியோம பாழ் மன் பரன் – திருமந்:2496/1
அரு அன்றியே நின்ற மாய பிரானை – திருமந்:2840/3
மாய கவற்றின் மறைப்பு அறியேனே – திருமந்:2866/4
மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன் – திருமந்:2939/1
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை – திருமந்:2956/2
மேல்


மாயகம் (1)

மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும் – திருமந்:42/3
மேல்


மாயத்து (1)

மன்னி நின்றாரிடை வந்த அருள் மாயத்து
முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும் – திருமந்:2360/1,2
மேல்


மாயத்துள் (1)

மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே – திருமந்:226/4
மேல்


மாயத்தே (1)

மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே – திருமந்:1935/4
மேல்


மாயத்தை (1)

மாயத்தை மா மாயை-தன்னில் வரும் பரை – திருமந்:90/2
மேல்


மாயம் (7)

மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும் – திருமந்:405/2
மாயம் கலந்த மனோலயம் ஆனதே – திருமந்:459/4
என்ன மாயம் இடி கரை நிற்குமே – திருமந்:596/4
அவ்வவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே – திருமந்:613/4
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும் – திருமந்:1239/2
மாயம் புணர்க்கும் வளர்சடையான் அடி – திருமந்:1249/1
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும் – திருமந்:1599/2
மேல்


மாயமும் (1)

அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில் – திருமந்:2714/1
மேல்


மாயமே (2)

பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே – திருமந்:191/4
மருவி இறைவன் மகிழ்வன மாயமே – திருமந்:1248/4
மேல்


மாயல் (1)

மது விட்டு போமாறு மாயல் உற்றேனே – திருமந்:740/4
மேல்


மாயவனாய் (1)

வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகி – திருமந்:111/2
மேல்


மாயன் (3)

கடந்து நின்றான் கடல்_வண்ணன் எம் மாயன்
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன் – திருமந்:14/2,3
மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த – திருமந்:165/1
மாயன் மயக்கிய மானுடராம் அவர் – திருமந்:1540/3
மேல்


மாயனும் (3)

தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே – திருமந்:415/4
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவி நல் காரணி காணே – திருமந்:1087/3,4
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய் – திருமந்:2365/1
மேல்


மாயனை (2)

மாலகு ஆகிய மாயனை கண்ட பின் – திருமந்:675/1
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி – திருமந்:2982/1
மேல்


மாயா (13)

மறப்பு_இலி மாயா விருத்தமும் ஆமே – திருமந்:25/4
வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம் – திருமந்:426/2
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி – திருமந்:492/2
மனத்து விளக்கது மாயா விளக்கே – திருமந்:602/4
ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி – திருமந்:1771/2
பற்றிய மாயா படலம் என பண்ணி – திருமந்:1817/2
வைகரி ஆதியும் மாயா மலாதியும் – திருமந்:2007/1
மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து – திருமந்:2014/1
வரும் வழி போம் வழி மாயா வழியை – திருமந்:2056/1
வேறாய மாயா தநுகரணாதிக்கு இங்கு – திருமந்:2160/2
எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின் – திருமந்:2338/1
அத்தனை மாயா அமரர் பிரான்-தன்னை – திருமந்:2623/2
ஆயும் அறிவையும் மாயா உபாதியால் – திருமந்:3026/2
மேல்


மாயாபுரி (1)

மருங்கிய மாயாபுரி அதன் உள்ளே – திருமந்:2528/2
மேல்


மாயாவாதிக்கே (1)

ஆகின்ற நாலாறு ஐயைந்தும் மாயாவாதிக்கே – திருமந்:2179/4
மேல்


மாயாள் (4)

உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா – திருமந்:399/1
கர்ப்பத்து கேவலம் மாயாள் கிளைகூட்ட – திருமந்:460/1
வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை – திருமந்:1052/2
மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில் – திருமந்:1939/1
மேல்


மாயாள்-தன்னாலே (1)

ஏசாத மாயாள்-தன்னாலே எழுப்புமே – திருமந்:2163/4
மேல்


மாயும் (1)

வன்ன திரு விந்து மாயும் காயத்திலே – திருமந்:1965/4
மேல்


மாயுமே (2)

ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே – திருமந்:1938/4
செறிவாய் இருந்து சேரவே மாயுமே – திருமந்:1952/4
மேல்


மாயே (1)

வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம் – திருமந்:460/3
மேல்


மாயேயமும் (1)

காமியம் மாயேயமும் கலவா நிற்ப – திருமந்:2229/3
மேல்


மாயை (65)

இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே – திருமந்:331/4
செறிவான மாயை சிதைத்து அருளாலே – திருமந்:617/2
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம் – திருமந்:895/3
மா மாயை மாயை வயிந்தவம் வைகரி – திருமந்:1045/1
மா மாயை மாயை வயிந்தவம் வைகரி – திருமந்:1045/1
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் – திருமந்:1045/2
மேவிய மாயை விரிசங்கு முத்திரை – திருமந்:1096/3
வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயை
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே – திருமந்:1117/3,4
என்னே இ மாயை இருள் அது தானே – திருமந்:1118/4
தோன்றும் இலக்குற ஆகுதல் மா மாயை
ஏன்றனள் ஏழிரண்டு இந்துவொடு ஈறே – திருமந்:1187/3,4
மடலான மா மாயை மற்று உள்ள நீவ – திருமந்:1439/2
ஆயும் அறிவோடு அறியாத மா மாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும் – திருமந்:1805/1,2
விளையும் தனி மாயை மிக்க மா மாயை – திருமந்:1813/2
விளையும் தனி மாயை மிக்க மா மாயை
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் – திருமந்:1813/2,3
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே – திருமந்:1856/4
தந்திடு மா மாயை வாகேசி தற்பரை – திருமந்:1925/2
அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே – திருமந்:1930/4
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே – திருமந்:2065/3
எஞ்ஞானத்தோர்க்கு தனு மாயை தான் என்ப – திருமந்:2136/2
சாக்கிர சொப்பனம் தன்னிடை மா மாயை
சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற்காமியம் – திருமந்:2167/2,3
மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின் – திருமந்:2168/1
போதம் கலை காலம் நியதி மா மாயை
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே – திருமந்:2190/3,4
மாசு அகல் வித்தை நியதி மகா மாயை
ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே – திருமந்:2191/3,4
தனல் உண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியது அதீதம் தலைவந்தே – திருமந்:2196/3,4
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே – திருமந்:2197/4
மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை
ஐயமும் தான் அவன் அ துரியத்தனே – திருமந்:2208/3,4
ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவுற்று – திருமந்:2229/2
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை – திருமந்:2234/2
பேணிய மாயை பிரளயாகலர் ஆகும் – திருமந்:2240/2
பேணிய மாயை பிரளயாகலருக்கே – திருமந்:2241/2
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே – திருமந்:2242/4
மாய சகலத்து காமிய மா மாயை
ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே – திருமந்:2243/3,4
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும் – திருமந்:2258/1,2
பேணும் கனவும் மா மாயை திரோதாயி – திருமந்:2259/3
அரன் முதலாம் மாயை தங்கி சுழுனை – திருமந்:2260/2
கருமம் உணர்ந்து மா மாயை கைக்கொண்டோர் – திருமந்:2260/3
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் – திருமந்:2267/2
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே – திருமந்:2267/4
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே – திருமந்:2267/4
மாயை கைத்தாயாக மா மாயை ஈன்றிட – திருமந்:2268/1
மாயை கைத்தாயாக மா மாயை ஈன்றிட – திருமந்:2268/1
சத்திய மாயை தனு சத்தி ஐந்துடன் – திருமந்:2270/3
ஆயும் பொய் மாயை அகம்புறமாய் நிற்கும் – திருமந்:2275/1
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் – திருமந்:2277/3
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும் – திருமந்:2278/2,3
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு – திருமந்:2294/2
உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம் – திருமந்:2333/2
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும் – திருமந்:2334/2
வரு சமய புற மாயை மா மாயை – திருமந்:2385/3
வரு சமய புற மாயை மா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே – திருமந்:2385/3,4
வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து – திருமந்:2456/2
செறிவான மாயை சிதைத்து அருளாலே – திருமந்:2471/2
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி – திருமந்:2543/3
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் – திருமந்:2548/1
மாயை மறைய வெளிப்படும் அ பொருள் – திருமந்:2548/2
மாயை மறைய மறைய வல்லார்கட்கு – திருமந்:2548/3
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் – திருமந்:2655/1
சிவன் சத்தி சீவன் செறு மல மாயை
அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல – திருமந்:2710/1,2
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும் – திருமந்:2714/2,3
மாயை மா மாயை கடந்து நின்றார் காண – திருமந்:2766/3
மாயை மா மாயை கடந்து நின்றார் காண – திருமந்:2766/3
மன மாயை மாயை இ மாயை மயக்க – திருமந்:2956/1
மன மாயை மாயை இ மாயை மயக்க – திருமந்:2956/1
மன மாயை மாயை இ மாயை மயக்க – திருமந்:2956/1
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை – திருமந்:2956/2
மேல்


மாயை-தன்னில் (1)

மாயத்தை மா மாயை-தன்னில் வரும் பரை – திருமந்:90/2
மேல்


மாயையாம் (1)

மாயையின் மற்று அது நீவு தன் மாயையாம்
கேவலம் ஆகும் சகல மா யோனியுள் – திருமந்:2226/2,3
மேல்


மாயையில் (7)

விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் – திருமந்:498/2
காயாதி பூதம் கலை கால மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே – திருமந்:643/1,2
காய ஐம்பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே – திருமந்:1928/3,4
மாயையில் வந்த புருடன் துரியத்தில் – திருமந்:2198/1
மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன் – திருமந்:2226/1
தாவிய மாயையில் தங்கும் பிரளயம் – திருமந்:2231/1
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் – திருமந்:2421/2
மேல்


மாயையின் (9)

மயக்குறு மா மாயையை மாயையின் வீடு – திருமந்:329/3
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே – திருமந்:410/4
கெட்டேன் இ மாயையின் கீழ்மை எவ்வாறே – திருமந்:486/4
மாயையின் மற்று அது நீவு தன் மாயையாம் – திருமந்:2226/2
ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து – திருமந்:2229/1
மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து – திருமந்:2243/1
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும் – திருமந்:2334/2
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு – திருமந்:2419/2
அடருறு மாயையின் ஆரிருள் வீசில் – திருமந்:2694/3
மேல்


மாயையினாலே (1)

மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே – திருமந்:485/3,4
மேல்


மாயையும் (10)

தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்து – திருமந்:1075/2
அறிவான மாயையும் ஐம்புல கூட்டத்து – திருமந்:1133/1
வார்ந்து எழு மாயையும் மந்தமதாய் நிற்கும் – திருமந்:1173/2
உண்ணும் தன் ஊடாடாது ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தி அது ஆவது – திருமந்:2161/1,2
ஆணவ மாயையும் கன்மமுமாம் மலம் – திருமந்:2192/1
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே – திருமந்:2241/3
மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ – திருமந்:2243/2
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் – திருமந்:2248/1
ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்தி பொய் காமியம் – திருமந்:2259/1,2
ஐயைந்தும் எட்டு பகுதியும் மாயையும்
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு – திருமந்:2294/1,2
மேல்


மாயையுள் (2)

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம் – திருமந்:2492/1
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி – திருமந்:2507/1,2
மேல்


மாயையே (2)

சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே – திருமந்:2167/4
ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே – திருமந்:2461/4
மேல்


மாயையை (1)

மயக்குறு மா மாயையை மாயையின் வீடு – திருமந்:329/3
மேல்


மாயோகம் (2)

மாறாத ஞான மதிப்பு அற மாயோகம்
தேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி – திருமந்:1434/1,2
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே – திருமந்:1903/3,4
மேல்


மாயோதயம் (1)

மற்றைய மூன்று மாயோதயம் விந்து – திருமந்:399/2
மேல்


மார்க்க (1)

திரு மன்னும் சற்புத்திர மார்க்க சரியை – திருமந்:1501/1
மேல்


மார்க்கங்கள் (2)

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி – திருமந்:1227/1
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட – திருமந்:2782/2
மேல்


மார்க்கத்தார்க்கும் (2)

சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும் – திருமந்:1482/2
எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ – திருமந்:1482/4
மேல்


மார்க்கம் (10)

தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு – திருமந்:535/3
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே – திருமந்:1450/4
மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது – திருமந்:1487/1
மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை – திருமந்:1487/2
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர் – திருமந்:1487/3
மார்க்கம் சன்மார்க்கமாம் சித்த யோகமே – திருமந்:1487/4
மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார் – திருமந்:1489/1
துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம் – திருமந்:1899/1
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் – திருமந்:2664/3
அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில் – திருமந்:2735/1
மேல்


மார்க்கமாம் (1)

துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம்
அவா அறு ஈரை வகை அங்கம் ஆறும் – திருமந்:1899/1,2
மேல்


மார்க்கமும் (5)

நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது – திருமந்:535/2
பல் மார்க்கமும் கெட்டு பஞ்சமும் ஆமே – திருமந்:535/4
சன்மார்க்கம் ஆக சமைதரு மார்க்கமும்
துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும் – திருமந்:1229/1,2
சோடச மார்க்கமும் சொல்லும் சன்மார்க்கிகட்கு – திருமந்:2680/1
அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன் – திருமந்:2958/3
மேல்


மார்க்கமே (2)

ஆனவை ஓம் எனும் அ உயிர் மார்க்கமே – திருமந்:1226/4
திடமாய் தனையுறல் சித்தாந்த மார்க்கமே – திருமந்:1439/4
மேல்


மார்க்கராய் (1)

சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே – திருமந்:1424/3,4
மேல்


மார்கழி (1)

இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே – திருமந்:614/4
மேல்


மார்பு (1)

பின்னிய மார்பு இடை பேராமல் ஒத்திடும் – திருமந்:750/2
மேல்


மாரணம் (3)

வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே – திருமந்:1000/4
தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம்
ஆறு இயல்பாக மதித்து கொள்வார்க்கே – திருமந்:1285/3,4
கூடிய தம்பனம் மாரணம் வசியம் – திருமந்:1287/1
மேல்


மாரன் (1)

மாரன் குழலாளும் அ பதி தானும் முன் – திருமந்:1233/3
மேல்


மாரனும் (2)

மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று – திருமந்:1191/1
மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர் – திருமந்:1238/3
மேல்


மாரியும் (1)

மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று – திருமந்:65/1
மேல்


மாருதத்து (1)

பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன் – திருமந்:3002/2
மேல்


மாருதம் (7)

மா மது மண்டலம் மாருதம் ஆதியும் – திருமந்:1223/2
வையம் புனல் அனல் மாருதம் வானகம் – திருமந்:2004/2
மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும் – திருமந்:2144/2
காரது மாருதம் கருப்பை உடையது – திருமந்:2145/3
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம்
பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம் – திருமந்:2685/1,2
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என் – திருமந்:2850/3
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் – திருமந்:3045/1,2
மேல்


மாருதமாய் (2)

தான் ஒரு-கால் சண்ட மாருதமாய் நிற்கும் – திருமந்:415/2
அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ – திருமந்:1261/3
மேல்


மால் (38)

வான பெரும் கொண்டல் மால் அயன் வானவர் – திருமந்:21/1
தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற – திருமந்:62/3
அடி முடி காண்பார் அயன் மால் இருவர் – திருமந்:88/1
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை – திருமந்:107/2
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை – திருமந்:246/3
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே – திருமந்:295/4
ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும் – திருமந்:349/1
அ பரிசே அயன் மால் முதல் தேவர்கள் – திருமந்:356/1
மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம் – திருமந்:367/1
பிரமன் மால் தங்கள் தம் பேதைமையாலே – திருமந்:372/2
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம் – திருமந்:400/3
வாழா சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம் – திருமந்:429/3
மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே – திருமந்:572/3
மாது உகந்து ஆடிடும் மால் விடையோனே – திருமந்:632/4
மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்க – திருமந்:708/1
மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர் – திருமந்:840/2
ஆதி விதம் மிக தண் தந்த மால் தங்கை – திருமந்:1069/1
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு – திருமந்:1081/3
ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி – திருமந்:1241/1
ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி – திருமந்:1241/1
மால் அது ஆக வழிபாடு செய்து நீ – திருமந்:1395/3
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும் – திருமந்:1599/2
ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி – திருமந்:1716/1
மால் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் – திருமந்:1746/1
மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன் – திருமந்:1776/1
அத்தன் அயன் மால் அருந்திய வண்ணமாம் – திருமந்:1866/2
மால் ஆனது மாள மாளும் அ விந்துவே – திருமந்:1956/4
தானே அயன் மால் என நின்று தாபிக்கும் – திருமந்:2003/2
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி – திருமந்:2155/2
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் – திருமந்:2230/3
ஆக்கிய அந்த வயிந்தவ மால் நந்த – திருமந்:2265/2
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் – திருமந்:2305/2
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி – திருமந்:2417/3
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற – திருமந்:2433/2
அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு – திருமந்:2807/3
அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள் – திருமந்:2837/1
மால் இங்கன் வைத்தது முன்பின் வழியே – திருமந்:2908/4
நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல் – திருமந்:3038/3
மேல்


மாலகு (2)

மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே – திருமந்:674/4
மாலகு ஆகிய மாயனை கண்ட பின் – திருமந்:675/1
மேல்


மாலவன் (1)

பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1976/1
மேல்


மாலாங்கன் (1)

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் – திருமந்:69/1,2
மேல்


மாலாங்கனே (1)

மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம் – திருமந்:77/1
மேல்


மாலினி (1)

மாலினி மாகுலி மந்திர சண்டிகை – திருமந்:1216/3
மேல்


மாலுக்கு (1)

கூறது செய்து கொடுத்தனன் மாலுக்கு
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்கு – திருமந்:369/2,3
மேல்


மாலுக்கும் (2)

மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்பு நீ – திருமந்:108/3
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன் – திருமந்:540/3
மேல்


மாலும் (3)

பிரமனும் மாலும் பிரானே நான் என்ன – திருமந்:372/1
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா – திருமந்:1807/3
திரு தக்க மாலும் திசைமுகன்-தானும் – திருமந்:2315/3
மேல்


மாலுற்ற (1)

மாலுற்ற மந்திரம் மாறி கொள்வார்க்கே – திருமந்:1289/4
மேல்


மாலுற்றவாறே (1)

அவனே இறை என மாலுற்றவாறே – திருமந்:3039/4
மேல்


மாலை (13)

மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறை பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே – திருமந்:86/3,4
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும் – திருமந்:182/2
மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே – திருமந்:351/4
வெண் தலை மாலை விரிசடையோற்கே – திருமந்:521/4
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன – திருமந்:955/2
விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கு இருள் நீங்க – திருமந்:1246/1,2
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும் – திருமந்:1529/1
வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை
கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே – திருமந்:1725/3,4
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் – திருமந்:1827/1
மாணிக்க மாலை மனம் புகுந்தானே – திருமந்:1843/4
மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம் – திருமந்:2064/1
அங்கி தமருகம் அக்கு மாலை பாசம் – திருமந்:2780/1
கானது கூவிள மாலை கமழ் சடை – திருமந்:2999/3
மேல்


மாலைக்கும் (1)

தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே – திருமந்:1569/3,4
மேல்


மாலைகள் (1)

கண்டனள் எண் எண் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் – திருமந்:1102/2,3
மேல்


மாலையும் (4)

வாச நறும் குழல் மாலையும் சாத்தி – திருமந்:825/2
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது – திருமந்:1423/3
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும் – திருமந்:1824/2,3
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை – திருமந்:1850/1
மேல்


மாலொடு (1)

நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி – திருமந்:3038/1
மேல்


மாலோகம் (1)

மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம் – திருமந்:1507/3
மேல்


மாவினையாளர்-தம் (1)

மாவினையாளர்-தம் மதியில் உள்ளானே – திருமந்:812/4
மேல்


மாள்பவர் (1)

வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்
காமத்தோர் காம கள் உண்டே கலங்குவர் – திருமந்:327/1,2
மேல்


மாள (8)

வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே – திருமந்:1595/4
மால் ஆனது மாள மாளும் அ விந்துவே – திருமந்:1956/4
அமுத சசி விந்து ஆம் விந்து மாள
அமுத புனல் ஓடி அங்கியின் மாள – திருமந்:1959/1,2
அமுத புனல் ஓடி அங்கியின் மாள
அமுத சிவ போகம் ஆதலால் சித்தி – திருமந்:1959/2,3
ஏன்றனன் மாள சிவமாய் இருக்குமே – திருமந்:2437/4
வந்த மலம் குணம் மாள சிவம் தோன்றின் – திருமந்:2489/3
கருதலர் மாள கருவாயில் நின்ற – திருமந்:2514/1
வரும் வழி மாள மறுக்க வல்லார்கட்கு – திருமந்:2705/3
மேல்


மாளிகை (3)

நலந்தரு மாளிகை தேவர் நாதாந்தர் – திருமந்:102/2
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம் – திருமந்:1168/2
மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் – திருமந்:2479/1
மேல்


மாளும் (5)

மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி – திருமந்:266/3
மால் ஆனது மாள மாளும் அ விந்துவே – திருமந்:1956/4
விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே – திருமந்:1963/4
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் – திருமந்:2331/2
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர் – திருமந்:2716/2,3
மேல்


மாற்கு (1)

ஆணவம் ஆதி நான்காம் மாற்கு அரனுக்கு – திருமந்:2183/2
மேல்


மாற்றகில்லாரே (1)

மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே – திருமந்:203/4
மேல்


மாற்றம் (1)

இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர் – திருமந்:2708/2
மேல்


மாற்றம்-தனை (1)

தவம் வேண்டா மாற்றம்-தனை அறியாரே – திருமந்:1632/4
மேல்


மாற்றி (20)

மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே – திருமந்:24/4
தாயினும் மும்மலம் மாற்றி தயா என்னும் – திருமந்:116/3
மலங்கள் ஐந்தாம் என மாற்றி அருளி – திருமந்:118/1
மாற்றி களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தை – திருமந்:172/3
மந்தரம் ஏறு மதி பானுவை மாற்றி
கந்தாய் குழியில் கசடு அற வல்லார்க்கு – திருமந்:672/1,2
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
துதிக்கையால் உண்பார்க்கு சேரவும் வேண்டாம் – திருமந்:801/1,2
வந்த நகராதி மாற்றி மகராதி – திருமந்:978/2
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை – திருமந்:1071/3
சீர் பாக சேடத்தை மாற்றி பின் சேவியே – திருமந்:1317/4
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு – திருமந்:1602/3
வைச்சன ஆறாறு மாற்றி எனை வைத்து – திருமந்:1608/1
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி
உய் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே – திருமந்:1612/2,3
வாழ்க்கை புனல் வழி மாற்றி சித்தாந்தத்து – திருமந்:1702/2
மன பவனங்களை மூலத்தால் மாற்றி
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றி – திருமந்:1854/1,2
ஆன அவை மாற்றி பரமத்து அடைந்திடும் – திருமந்:2134/2
முருக்கும் அசபையை மாற்றி முகந்து – திருமந்:2149/2
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை – திருமந்:2599/3
தனை மாற்றி ஆற்ற தகு ஞானி தானே – திருமந்:2612/4
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி – திருமந்:2833/1
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி
பொருளில் பொருளாய் பொருந்த உள் ஆகி – திருமந்:2952/1,2
மேல்


மாற்றிடும் (1)

நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல் வழியாளர் சுருங்கா பெரும் கொடை – திருமந்:637/1,2
மேல்


மாற்றிடும்-போதும் (1)

மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும்-போதும்
அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்து ஆமே – திருமந்:2702/3,4
மேல்


மாற்றியே (1)

மூவா பசு பாசம் மாற்றியே முத்திப்பால் – திருமந்:1577/3
மேல்


மாற்றிவிட்டு (1)

மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே – திருமந்:2525/3
மேல்


மாற்று (3)

வைத்த பசு பாச மாற்று நெறி வைகி – திருமந்:1688/1
அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில் – திருமந்:2595/3
மாற்று பசுக்கள் வரவு அறியோமே – திருமந்:2875/4
மேல்


மாற்றும் (1)

மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான் – திருமந்:1689/1
மேல்


மாற்றுவன் (1)

மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே – திருமந்:35/4
மேல்


மாற (2)

மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும் – திருமந்:458/2
சிந்தனை மாற சிவம்அகம் ஆகவே – திருமந்:1963/3
மேல்


மாறது (1)

அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது
இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம் – திருமந்:2827/2,3
மேல்


மாறவே (1)

நாலேழு மாறவே நண்ணிய முத்திரை – திருமந்:1892/1
மேல்


மாறா (3)

மாறா மலக்குதம்-தன் மேல் இரு விரல் – திருமந்:733/1
மாறா கதிர்கொள்ளும் மற்று அங்கி கூடவே – திருமந்:853/4
மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின் – திருமந்:2160/1
மேல்


மாறாத (2)

மாறாத ஞான மதிப்பு அற மாயோகம் – திருமந்:1434/1
மாறாத தென் திசை வையகம் சுத்தமே – திருமந்:2755/4
மேல்


மாறாது (1)

செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே – திருமந்:1924/4
மேல்


மாறி (10)

மாறி வரும் இருபான் மதி வெய்யவன் – திருமந்:793/1
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும் – திருமந்:1089/2
பகை நின்ற அங்கத்தை பார் என்று மாறி
தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம் – திருமந்:1093/2,3
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறி
பொருத்தி அணிவிரல் சுட்டி பிடித்து – திருமந்:1094/1,2
மாறி இருந்த வழி அறிவார் இல்லை – திருமந்:1139/2
மாலுற்ற மந்திரம் மாறி கொள்வார்க்கே – திருமந்:1289/4
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் – திருமந்:1667/2,3
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே – திருமந்:1751/4
மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை – திருமந்:2867/2
மாறி கிடக்கும் வகை அறிவாளர்க்கு – திருமந்:2867/3
மேல்


மாறிடும் (2)

ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே – திருமந்:734/3,4
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே – திருமந்:805/3,4
மேல்


மாறியே (1)

மடை படு வாயுவும் மாறியே நிற்கும் – திருமந்:665/2
மேல்


மாறின் (1)

அக்கோணம் மாறின் தலையில் ரீங்காரமிட்டு – திருமந்:1312/2
மேல்


மாறினன் (1)

தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும் – திருமந்:1781/3
மேல்


மாறினும் (1)

மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே – திருமந்:1766/4
மேல்


மாறு (11)

மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை – திருமந்:192/1
மாறு மதியும் மதித்திரு மாறு இன்றி – திருமந்:883/1
மாறு மதியும் மதித்திரு மாறு இன்றி – திருமந்:883/1
வாறே சதாசிவ மாறு இலா ஆகமம் – திருமந்:894/1
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது – திருமந்:1141/1
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும் – திருமந்:1285/2
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை – திருமந்:1331/3
மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே – திருமந்:1348/4
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே – திருமந்:1739/4
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக – திருமந்:2066/3
மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும் – திருமந்:3017/1
மேல்


மாறு-மின் (1)

மாறு-மின் வையம் வரும் வழி தன்னையும் – திருமந்:1332/3
மேல்


மாறுதல் (4)

மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே – திருமந்:568/4
மாறுதல் இன்றி மனோவசமாய் எழில் – திருமந்:1189/2
மாறுதல் இன்றி மனை புகலாமே – திருமந்:1533/4
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே – திருமந்:2905/4
மேல்


மாறும் (6)

அவிழ்கின்ற ஆறும் அது கட்டு மாறும்
சிமிட்டலை பட்டு உயிர் போகின்றவாறும் – திருமந்:66/1,2
தோம் மாறும் ஈசற்கும் தூய குரவற்கும் – திருமந்:507/2
மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள் – திருமந்:847/2
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே – திருமந்:847/4
நரைதிரை மாறும் நமனும் அங்கு இல்லையே – திருமந்:848/4
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் – திருமந்:1818/2,3
மேல்


மாறுமே (1)

கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே – திருமந்:882/4
மேல்


மான் (7)

இனம் செய்த மான் போல் இணங்கி நின்றானே – திருமந்:41/4
மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர்காள் – திருமந்:257/2
வலைப்பட்ட பாசத்து வன் பிணை மான் போல் – திருமந்:660/2
மான் கன்று நின்று வளர்கின்றவாறே – திருமந்:738/4
இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர – திருமந்:814/3
மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர் – திருமந்:1238/3
மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள – திருமந்:2882/1
மேல்


மான்று (1)

மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன – திருமந்:2435/2
மேல்


மான்றும் (1)

மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை – திருமந்:2322/2
மேல்


மான (4)

போதாந்த மான பிரணவத்துள் புக்கு – திருமந்:225/2
மான கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே – திருமந்:1453/4
மான சதாசிவன்-தன்னை ஆவாகித்து – திருமந்:1825/2
மான குணமும் பரான்மா உபாதியும் – திருமந்:2314/3
மேல்


மானம் (3)

மானம் நலம் கெடும் வையகம் பஞ்சமாம் – திருமந்:1656/3
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி – திருமந்:2155/2
உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம்
உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம் – திருமந்:2333/1,2
மேல்


மானன் (1)

அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே – திருமந்:2199/3,4
மேல்


மானனாய் (1)

மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய்
நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே – திருமந்:691/3,4
மேல்


மானா (1)

மானா கனமும் பரகாயத்தேகமும் – திருமந்:649/2
மேல்


மானாபிமானம் (1)

மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம்
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை – திருமந்:2957/1,2
மேல்


மானிடம் (1)

ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே – திருமந்:2551/4
மேல்


மானிடர் (2)

நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர்
ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே – திருமந்:195/3,4
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில் – திருமந்:253/2,3
மேல்


மானின்-கண் (1)

மானின்-கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும் – திருமந்:385/1
மேல்


மானுடர் (11)

மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய் – திருமந்:1336/3
இது பணி மானுடர் செய் பணி ஈசன் – திருமந்:1454/3
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் – திருமந்:1726/1
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் – திருமந்:1726/2
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் – திருமந்:1726/3
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே – திருமந்:1726/4
மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை – திருமந்:2030/3
தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பு அறியாரே – திருமந்:2354/3,4
கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்துறில் – திருமந்:2693/3
ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன – திருமந்:2776/2
தான் இடர் மானுடர் கீழது மாதனம் – திருமந்:2999/2
மேல்


மானுடராம் (1)

மாயன் மயக்கிய மானுடராம் அவர் – திருமந்:1540/3
மேல்


மானும் (1)

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற – திருமந்:89/1
மேல்


மானே (2)

மானே நடம் உடை மன்று அறியீரே – திருமந்:1132/4
மானே மதிவரை பத்து இட்டு வைத்த பின் – திருமந்:1364/2
மேல்


மானேர் (1)

மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும் – திருமந்:1968/3
மேல்


மானை (1)

தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும் – திருமந்:387/2

மேல்