மே – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேல் 13
மேலினும் 1
மேலை 1
மேவி 1
மேவும் 1
மேனி 4
மேனியள் 1

மேல் (13)

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல்
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – அபிராமி-அந்தாதி: 4/2,3
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே – அபிராமி-அந்தாதி: 5/3,4
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் – அபிராமி-அந்தாதி: 8/2,3
வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே – அபிராமி-அந்தாதி: 18/4
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே – அபிராமி-அந்தாதி: 31/4
வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட – அபிராமி-அந்தாதி: 32/3
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே – அபிராமி-அந்தாதி: 35/4
மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் – அபிராமி-அந்தாதி: 39/2
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே – அபிராமி-அந்தாதி: 41/4
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – அபிராமி-அந்தாதி: 72/4
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல்
அப்பும் களப அபிராமவல்லி அணி தரள – அபிராமி-அந்தாதி: 78/1,2
வார் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே – அபிராமி-அந்தாதி: 85/4
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – அபிராமி-அந்தாதி: 86/3

மேல்

மேலினும் (1)

மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு – அபிராமி-அந்தாதி: 60/3

மேல்

மேலை (1)

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் – அபிராமி-அந்தாதி: 44/3

மேல்

மேவி (1)

ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே – அபிராமி-அந்தாதி: 19/4

மேல்

மேவும் (1)

பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு – அபிராமி-அந்தாதி: 90/3

மேல்

மேனி (4)

கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே – அபிராமி-அந்தாதி:/4
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழு துணையே – அபிராமி-அந்தாதி: 1/4
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே – அபிராமி-அந்தாதி: 43/4
சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால் – அபிராமி-அந்தாதி: 96/3

மேல்

மேனியள் (1)

திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் – அபிராமி-அந்தாதி: 43/2

மேல்