செ – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செங்கண்மால் 1
செங்கதிர் 1
செந்தேன் 1
செப்பு 1
செப்பும் 1
செப்புவரே 1
செம் 9
செம்பட்டு 1
செம்பாகத்து 1
செம்மை 1
செய் 2
செய்த 3
செய்தனமே 1
செய்தார் 1
செய்தால் 1
செய்தாலும் 1
செய்து 1
செய்ய 3
செய்யவைத்தார் 1
செய்யாள் 1
செய்யினும் 2
செய்யும் 2
செய்வார் 1
செயிர் 1
செயினும் 1
செல்கதிக்கு 1
செல்லாமை 1
செல்லும் 1
செல்லேன் 1
செல்வமும் 1
செல்வமோ 1
செவ் 1
செவ்வியும் 1
செற்ற 1
செறிந்தேன் 1
சென்று 2
சென்றே 1
சென்னி 3
சென்னியது 1
சென்னியதே 1
சென்னியின் 1

செங்கண்மால் (1)

தாயே மலைமகளே செங்கண்மால் திரு தங்கைச்சியே – அபிராமி-அந்தாதி: 61/4

மேல்

செங்கதிர் (1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர் – அபிராமி-அந்தாதி: 1/1

மேல்

செந்தேன் (1)

செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே – அபிராமி-அந்தாதி: 34/4

மேல்

செப்பு (1)

பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால் – அபிராமி-அந்தாதி: 5/1

மேல்

செப்பும் (1)

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல் – அபிராமி-அந்தாதி: 78/1

மேல்

செப்புவரே (1)

செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

செம் (9)

திருத்தன பாரமும் ஆரமும் செம் கை சிலையும் அம்பும் – அபிராமி-அந்தாதி: 9/3
மங்கலை செம் கலசம் முலையாள் மலையாள் வருண – அபிராமி-அந்தாதி: 21/1
சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை – அபிராமி-அந்தாதி: 21/2
வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய – அபிராமி-அந்தாதி: 62/2
செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே – அபிராமி-அந்தாதி: 62/4
தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று என தோன்றிய மூதறிவின் – அபிராமி-அந்தாதி: 65/2,3
வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் நின் மலர் அடி செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் பசும்பொன் பொருப்பு – அபிராமி-அந்தாதி: 66/1,2
சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை – அபிராமி-அந்தாதி: 73/3
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண் நூல் – அபிராமி-அந்தாதி: 84/1,2

மேல்

செம்பட்டு (1)

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர் மதி செம் – அபிராமி-அந்தாதி: 84/1

மேல்

செம்பாகத்து (1)

எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே – அபிராமி-அந்தாதி: 43/4

மேல்

செம்மை (1)

சேமம் திருவடி செம் கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை – அபிராமி-அந்தாதி: 73/3

மேல்

செய் (2)

பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே – அபிராமி-அந்தாதி: 40/4
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய் தவமோ – அபிராமி-அந்தாதி: 45/3

மேல்

செய்த (3)

நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே – அபிராமி-அந்தாதி: 12/3,4
தகனம் முன் செய்த தவ பெருமாற்கு தட கையும் செம் – அபிராமி-அந்தாதி: 65/2
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே – அபிராமி-அந்தாதி: 65/4

மேல்

செய்தனமே (1)

புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை – அபிராமி-அந்தாதி: 41/1

மேல்

செய்தார் (1)

பண்டு செய்தார் உளரோ இலரோ அ பரிசு அடியேன் – அபிராமி-அந்தாதி: 45/2

மேல்

செய்தால் (1)

கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய் தவமோ – அபிராமி-அந்தாதி: 45/3

மேல்

செய்தாலும் (1)

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே – அபிராமி-அந்தாதி: 45/4

மேல்

செய்து (1)

பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ் நரக – அபிராமி-அந்தாதி: 79/3

மேல்

செய்ய (3)

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் – அபிராமி-அந்தாதி: 41/2
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் – அபிராமி-அந்தாதி: 53/1
செய்ய பசும் தமிழ் பாமாலையும் கொண்டுசென்று பொய்யும் – அபிராமி-அந்தாதி: 57/3

மேல்

செய்யவைத்தார் (1)

எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்கு – அபிராமி-அந்தாதி: 31/2

மேல்

செய்யாள் (1)

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பொன் கொடியே – அபிராமி-அந்தாதி: 21/4

மேல்

செய்யினும் (2)

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் – அபிராமி-அந்தாதி: 46/1
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே – அபிராமி-அந்தாதி: 46/4

மேல்

செய்யும் (2)

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து – அபிராமி-அந்தாதி: 36/1,2
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே – அபிராமி-அந்தாதி: 52/4

மேல்

செய்வார் (1)

தண் அளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம் – அபிராமி-அந்தாதி: 15/1,2

மேல்

செயிர் (1)

செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே – அபிராமி-அந்தாதி: 77/4

மேல்

செயினும் (1)

நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள் – அபிராமி-அந்தாதி: 30/2

மேல்

செல்கதிக்கு (1)

தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்கு
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம் – அபிராமி-அந்தாதி: 63/1,2

மேல்

செல்லாமை (1)

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்-மின்களே – அபிராமி-அந்தாதி: 54/4

மேல்

செல்லும் (1)

செல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே – அபிராமி-அந்தாதி: 28/4

மேல்

செல்லேன் (1)

மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்_நகையே – அபிராமி-அந்தாதி: 92/3,4

மேல்

செல்வமும் (1)

விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ – அபிராமி-அந்தாதி: 15/3

மேல்

செல்வமோ (1)

மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்-தம் – அபிராமி-அந்தாதி: 15/2

மேல்

செவ் (1)

பவள கொடியில் பழுத்த செவ் வாயும் பனி முறுவல் – அபிராமி-அந்தாதி: 38/1

மேல்

செவ்வியும் (1)

செவ்வியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 18/2

மேல்

செற்ற (1)

சிரம் ஒன்று செற்ற கையான் இட பாகம் சிறந்தவளே – அபிராமி-அந்தாதி: 88/4

மேல்

செறிந்தேன் (1)

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவி – அபிராமி-அந்தாதி: 3/2

மேல்

சென்று (2)

இல்லாமை சொல்லி ஒருவர் தம்-பால் சென்று இழிவுபட்டு – அபிராமி-அந்தாதி: 54/1
வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு – அபிராமி-அந்தாதி: 64/1

மேல்

சென்றே (1)

சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 30/3

மேல்

சென்னி (3)

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார் சடை மேல் – அபிராமி-அந்தாதி: 4/1,2
திங்கள் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 35/1
சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 89/1

மேல்

சென்னியது (1)

சென்னியது உன் பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே – அபிராமி-அந்தாதி: 6/1

மேல்

சென்னியதே (1)

திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

சென்னியின் (1)

நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே – அபிராமி-அந்தாதி: 41/4

மேல்