மோ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


மோக்க (2)

மோக்க முடிவு எய்துவார் – அறநெறிச்சாரம்:1 206/4
நிலம் மீதில் யாம் வாளா இருப்போமேல் பாவங்கள் நிறைந்து மோக்க
நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே – நீதிநூல்:43 455/3,4

மேல்

மோக்கத்தின் (1)

முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ – நீதிநூல்:43 466/2

மேல்

மோக்கத்தை (1)

நரகை மோக்கத்தை விற்க நண்ணிய வணிகர் அன்னார் – நீதிநூல்:39 387/2

மேல்

மோக்கம் (3)

தேவனே இலனேல் மோக்கம் தீ நரகு இல்லை வேதம் – நீதிநூல்:2 16/1
முதல்வி இவள் துணைவனே தெய்வம் என்றாள் அவன் சிற்றில் மோக்கம் என்றாள் – நீதிநூல்:12 123/1
முன்னு தேவு உளனேல் பாவம் புண்ணியம் மோக்கம் அள்ளல் – நீதிநூல்:43 467/2

மேல்

மோகத்தை (3)

மோகத்தை முனி – ஆத்திசூடி:1 98/1
மூளும் மோகத்தை முனி – ஆத்திசூடிவெண்பா:1 97/4
மோகத்தை ஈன்று தவம் அழிக்கும் சொல் கேட்டல் – அருங்கலச்செப்பு:1 95/1

மேல்

மோகம் (2)

மங்கல்_இல் சீர்த்தி வேட்டாய் மடம் சினம் உலோபம் மோகம்
அங்கதம் முதல் யாவிற்கும் விடைகொடுத்து அறிவு அன்பு ஈகை – நீதிநூல்:38 380/1,2
தேவர் முனிவர் மண்ணோர் தென்புலத்தார்க்கும் மோகம்
பாவ வித்து என்று ஓதும் பழ மறைகள் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 97/1,2

மேல்

மோகமுடன் (1)

தாகமுடன் கணவன் தான் வாழ்தல் மோகமுடன்
வாய்த்த கல் சாணையினில் வாரி இன்றி சந்தின் முறி – நன்மதிவெண்பா:1 97/2,3

மேல்

மோகமுற (1)

மா குரவர்-பால் ஓதா வாயும் இசை மோகமுற
தேம்பல் இன்றி பாடா வாய் சீர்மை பெறும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 99/2,3

மேல்

மோகமே (1)

மோகமே உடையார் மண் கல் முதல் கரம்கொளினும் தேவ – நீதிநூல்:43 471/2

மேல்

மோகினி (2)

அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/1
கோடி அருவருத்தும் கோணாது ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 913/1

மேல்

மோசம் (2)

முழுதும் உணர் அறிஞர்க்கு தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ – நீதிநூல்:16 196/4
புனை தாமா புன்னைவன பூபாலா மோசம்
என மாற்றானுக்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 88/3,4

மேல்

மோசம்செய்து (1)

சத்தம் இன்றி உனை மோசம்செய்து அனந்தம் பேர் கரத்தில் சாரும் சொன்னேன் – நீதிநூல்:40 414/3

மேல்

மோசமுற (1)

மோசமுற நஞ்சு உமிழ்ந்த மூர்க்கம் பார் காசினியில் – ஆத்திசூடிவெண்பா:1 77/2

மேல்

மோசியரை (1)

மோசியரை ஆய் முதலோர் முற்றும் தெளிந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/1

மேல்

மோசியார் (1)

எள்ளி நின்று மோசியார் ஏனோ வெகுளி ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/1

மேல்

மோத (1)

முனங்காலை வருடும் அவள் கரம் கோல் போல் முதுகின் மேல் மோத பூ மேல் – நீதிநூல்:44 480/1

மேல்

மோதி (9)

நண்ணிய கரம் சற்று ஓயின் நழீஇ ஒன்றோடொன்று மோதி
திண்ணிய அகில கோடி சிதைந்து உகும் என அறிந்தும் – நீதிநூல்:3 21/2,3
ஊனப்பட மோதி பழம் உதிர்ப்பார் என உலகில் – நீதிநூல்:24 283/2
கனை கழையை வேம்பு என்னில் கழைக்கும் ஓர் குறை உண்டோ கல்லில் மோதி
தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/3,4
கோது_இல் உயிர் நீத்தான் குமரேசா மோதி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/2
கோது மிக மாண்டான் குமரேசா மோதி
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/2,3
கோது அறு நட்புற்றார் குமரேசா மோதி
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/2,3
கோது செய்து மாண்டான் குமரேசா மோதி
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/2,3
கோதுடையர் என்றாள் குமரேசா மோதி வரு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/2
கோது செய்தும் என்னே குமரேசா மோதி
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1288/2,3

மேல்

மோதும் (2)

வலியரை சினப்போர் வரையினில் மோதும் மண்கலம் என உடைந்து அழிவார் – நீதிநூல்:26 292/1
கோது செய்து மாண்டான் குமரேசா மோதும்
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/2,3

மேல்

மோந்து (1)

மோந்து இன்புறுவன மூக்கு அல்ல வேந்தின் – அறநெறிச்சாரம்:1 201/2

மேல்

மோப்ப (1)

மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 90/3

மேல்

மோப்பதாம் (1)

இலங்கு இதழ் மோப்பதாம் மூக்கு – அறநெறிச்சாரம்:1 201/4

மேல்

மோவம் (1)

மோவம் இலாத உறுப்பு – அருங்கலச்செப்பு:1 20/2

மேல்

மோவமோடு (1)

மோவமோடு இன்றி உணர் – அருங்கலச்செப்பு:1 174/2

மேல்

மோன (1)

மோன ததீசி முதுகெலும்பை வானவர்-தம் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/1

மேல்

மோனத்திருக்கும் (1)

மோனத்திருக்கும் முழு வெண்மேனியான் – புதிய-ஆத்திசூடி:0 1/2

மேல்

மோனம் (2)

மோனம் என்பது ஞான வரம்பு – கொன்றைவேந்தன்:1 80/1
மோனம் போற்று – புதிய-ஆத்திசூடி:1 84/1

மேல்

மோனமாய் (1)

மோனமாய் இடுக்கண் தாங்கி முறையிட அறியாது அல்லல் – நீதிநூல்:45 515/3

மேல்