சே – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 7
சே_இழை 1
சே_இழை-மாட்டு 1
சே_இழையின் 1
சே_இழையே 1
சே_இழையை 1
சே_இழையையும் 1
சேக்கிழார் 2
சேக்கை 2
சேகரன் 1
சேகரித்த 1
சேகன் 1
சேடத்தை 1
சேடநாள் 1
சேடம் 1
சேடர் 5
சேடன் 4
சேடி 1
சேடியர் 2
சேடியர்கள் 1
சேண் 5
சேணாயின் 1
சேணிடை 1
சேணில் 1
சேதகம் 1
சேதமுற 1
சேதியம் 1
சேந்தனார் 2
சேம 3
சேமம் 2
சேமம்செய்து 1
சேமமுடன் 1
சேய் 31
சேய்த்து 1
சேயர் 5
சேயர்க்கு 1
சேயரும் 1
சேயரை 5
சேயார் 1
சேயினை 1
சேயினையும் 1
சேயும் 2
சேயை 2
சேர் 66
சேர்க்கும் 2
சேர்க்கை 2
சேர்க்கையை 1
சேர்கிலாது 1
சேர்கிலையேல் 1
சேர்த்த 1
சேர்த்தலால் 1
சேர்த்தான் 1
சேர்த்திட்டோம் 1
சேர்த்தியே 1
சேர்த்து 3
சேர்த்துவைப்பார் 1
சேர்தல் 7
சேர்ந்த 23
சேர்ந்ததனால் 2
சேர்ந்தவர் 2
சேர்ந்தவன் 1
சேர்ந்தனர் 1
சேர்ந்தார் 5
சேர்ந்தார்க்கு 5
சேர்ந்தாரை 1
சேர்ந்தால் 2
சேர்ந்தாள் 4
சேர்ந்தான் 3
சேர்ந்திட 1
சேர்ந்திடும் 1
சேர்ந்திருக்கும் 1
சேர்ந்து 31
சேர்ந்துதான் 1
சேர்ந்தும் 1
சேர்ந்தே 2
சேர்ந்தோர் 2
சேர்ப்ப 1
சேர்ப்பார் 2
சேர்ப்பானே 1
சேர்பவன் 1
சேர்வது 3
சேர்வரோ 1
சேர்வார் 1
சேர்விக்கும் 1
சேர்விடம் 1
சேர 6
சேரமான் 1
சேரர் 2
சேரல் 1
சேரலர்க்கு 1
சேரலை 1
சேரவில்லை 1
சேரவே 1
சேரன் 3
சேரனொடு 1
சேரா 4
சேராத 1
சேராதார் 3
சேராதான் 1
சேராது 2
சேராமல் 2
சேரார் 1
சேராரே 1
சேராரை 1
சேராளோ 1
சேரான் 1
சேரி 2
சேரிடம் 1
சேரில் 2
சேரின் 3
சேரும் 14
சேருமவர்க்கு 1
சேருமே 4
சேருமோ 1
சேரேல் 2
சேல் 1
சேலை 1
சேவகம் 1
சேவகமாய் 1
சேவகன் 1
சேவகன்தான் 1
சேவடி 1
சேவடியும் 1
சேவடியை 1
சேவல் 1
சேவித்தல் 1
சேவித்து 2
சேவித்தும் 1
சேறல் 4
சேறி 3
சேறு 2
சேனர் 1
சேனை 4
சேனையால் 1
சேனையுடன் 1
சேனையும் 1
சேனையே 1
சேனையை 1

சே (7)

சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/4
சிவந்த வாயுடை சே_இழையை பதி – நீதிநூல்:13 166/2
சே_இழையையும் விலைசெய்ய செய்யுமால் – நீதிநூல்:19 230/4
சே_இழையின் சேடியர் முன் எமக்கு இதம்செய்வான் புலி வெம் சின மா கோகு – நீதிநூல்:44 511/1
தூயவர் என்று எண்ணியே துன்னற்க சே_இழையே – நீதிவெண்பா:1 71/2
சே ஆள் விலைகொளல் கூறுதல் கூட்டுதல் – அருங்கலச்செப்பு:1 92/1
செறி-தோறும் சே_இழை-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/4

மேல்

சே_இழை (1)

சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/4

மேல்

சே_இழை-மாட்டு (1)

செறி-தோறும் சே_இழை-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/4

மேல்

சே_இழையின் (1)

சே_இழையின் சேடியர் முன் எமக்கு இதம்செய்வான் புலி வெம் சின மா கோகு – நீதிநூல்:44 511/1

மேல்

சே_இழையே (1)

தூயவர் என்று எண்ணியே துன்னற்க சே_இழையே
தண் ஒளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும் – நீதிவெண்பா:1 71/2,3

மேல்

சே_இழையை (1)

சிவந்த வாயுடை சே_இழையை பதி – நீதிநூல்:13 166/2

மேல்

சே_இழையையும் (1)

சே_இழையையும் விலைசெய்ய செய்யுமால் – நீதிநூல்:19 230/4

மேல்

சேக்கிழார் (2)

சேக்கிழார் சிந்தாமணி பயிற்சி தீது எனவே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/1
தேடிய சீர் சேக்கிழார் செப்பிய ஓர் சொல்லால் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/1

மேல்

சேக்கை (2)

சேக்கை விரும்பும் செழும் பொழில்-வாய் வேம்பு அன்றோ – நன்னெறி:1 24/3
சேக்கை படுத்தல் இறப்பு – அருங்கலச்செப்பு:1 127/2

மேல்

சேகரன் (1)

அன்று அரியது என்னாமல் ஆர்வமுடன் சேகரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/1

மேல்

சேகரித்த (1)

ஏகி அழித்து உய்ந்தார் இரங்கேசா சேகரித்த
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/2,3

மேல்

சேகன் (1)

சேர்ந்த சிறியர் முன் செம்மாந்து சேகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/1

மேல்

சேடத்தை (1)

பொருளின் சேடத்தை இவட்கு அளித்தோம் வாய் சேடம் எனும் பொருள் அளித்தாள் – நீதிநூல்:44 492/1

மேல்

சேடநாள் (1)

தேயும் நாள் கழிய நிற்கும் சேடநாள் அற்பம் ஆகும் – நீதிநூல்:3 30/3

மேல்

சேடம் (1)

பொருளின் சேடத்தை இவட்கு அளித்தோம் வாய் சேடம் எனும் பொருள் அளித்தாள் – நீதிநூல்:44 492/1

மேல்

சேடர் (5)

பெற்றவர்களும் உழைப்பர் பின்னவர்க்கு உழைப்பர் சேடர்
உற்ற இ தன்மை உன்னின் உழையர் ஆர் தலைவர் ஆரே – நீதிநூல்:14 180/3,4
விலை தரும் அவன்-பால் வைகி விரவுறுங்காறும் சேடர்
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/2,3
இறவு இலா கடவுள் வாழும் இதயத்தார் சேடர் அம்மா – நீதிநூல்:15 192/4
திண்ணமா எண்ணி போற்றும் சேடர் விண்_நாடர் ஆவார் – நீதிநூல்:15 193/4
தா இயலாது தக்க ததியில் யாவும் செய் சேடர்
ஆவியோ விழியோ எய்தற்கு அரும் பொனோ மணியோ யாதோ – நீதிநூல்:15 194/3,4

மேல்

சேடன் (4)

சென்று இருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே – நல்வழி:1 23/3
சேடன் மீது யான் சினமுற்ற பொழுது எதிர் திகழும் – நீதிநூல்:26 295/2
குற்றமுற்றான் சேடன் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/2
குன்றினான் சேடன் என கூர்ந்து அறிந்த வாயு அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/1

மேல்

சேடி (1)

தெள் உயிர் நீங்கிலள் என்ன சேடி நீ பொய் உரைத்தாய் – நீதிநூல்:12 137/2

மேல்

சேடியர் (2)

சே_இழையின் சேடியர் முன் எமக்கு இதம்செய்வான் புலி வெம் சின மா கோகு – நீதிநூல்:44 511/1
கேழ்வரை சேடியர் சொல் கீழ்மைக்கு இயற்படும் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/1

மேல்

சேடியர்கள் (1)

சின்ன மலர் கொண்டு சில சேடியர்கள் சூழ – விவேகசிந்தாமணி:1 37/3

மேல்

சேண் (5)

சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால் – நீதிநூல்:3 18/2
சேண் நிகரும் கல்வி இலா மாதர் அகம் படித்து உணர தீட்ட பாட – நீதிநூல்:47 594/3
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/3
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/3
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/3

மேல்

சேணாயின் (1)

இகல் அணித்தாயின் யாவும் எரிந்துபோம் சேணாயின் பார் – நீதிநூல்:47 537/2

மேல்

சேணிடை (1)

சிறுவரை போது ஓர் கல்லை சேணிடை நிறுவுவோனை – நீதிநூல்:47 600/1

மேல்

சேணில் (1)

அரன்-தனக்கு தோழன் எனும் ஆரூரன் சேணில்
பிரிந்த வழி பரவை பேசும் இரங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 170/1,2

மேல்

சேதகம் (1)

சேதகம் ஆர் மண் உழவு செய்யேல் தீ வற்கடத்தில் – நன்மதிவெண்பா:1 95/1

மேல்

சேதமுற (1)

சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே – நீதிநூல்:32 340/4

மேல்

சேதியம் (1)

சேதியம் வந்தனை பட்டினி ஆதியாய் – அருங்கலச்செப்பு:1 110/1

மேல்

சேந்தனார் (2)

ஏனோ தவம் புரியாது இல் இருந்தார் சேந்தனார்
கோனான சோமர் குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:27 263/1,2
ஒன்றும் இரவாது உழைத்து ஏனோ சேந்தனார்
குன்றாமல் உண்டார் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/1,2

மேல்

சேம (3)

சேம வைப்பாம் நமக்கு இ திரவியம் யாவும் நல்கும் – நீதிநூல்:3 25/3
சேம நல் உதவியால் சேரும் இன்பம்தான் – நீதிநூல்:39 404/3
சேம ஊண் சீரணித்து தேகம் எங்கணும் உலாவ – நீதிநூல்:47 553/3

மேல்

சேமம் (2)

சேமம் புகினும் யாமத்து உறங்கு – கொன்றைவேந்தன்:1 33/1
சேமம் செய்வாரும் சிலர் உண்டே ஏம நிழல் – நீதிவெண்பா:1 59/2

மேல்

சேமம்செய்து (1)

இவர்ந்து சேமம்செய்து எய்க்குதல் பட்டிகள் – நீதிநூல்:13 166/3

மேல்

சேமமுடன் (1)

கோமகனை வேண்டி குமரேசா சேமமுடன்
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/2,3

மேல்

சேய் (31)

அன்னையை நீத்த சேய் போல் ஐயனை நீத்தாய் நெஞ்சே – நீதிநூல்:3 29/4
தாய் அறியாத சேய் இருந்தாலும் தான் அறியாதவர் இல்லை – நீதிநூல்:4 39/1
ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மை – நீதிநூல்:8 79/2
செய்ய ஒன்று அறியா நொய்ய சிற்றுடல் சேய் வளர்ந்து இங்கு – நீதிநூல்:8 81/2
மனை தாங்கல் சூதகம் சூல் சேய் பெறுதல் வளர்த்தலொடு மாமன் மாமி – நீதிநூல்:12 119/2
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2
முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்ப செயும் இடர் அ முறை இலான் சேய்
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எ பிழைசெய்தார் பகராய் நெஞ்சே – நீதிநூல்:32 342/3,4
பிறந்த சேய் உடனே அழும் பீழைதான் – நீதிநூல்:42 436/1
மனைவி சேய் தமர் தம் முனம் மாளினும் மகியில் – நீதிநூல்:42 445/1
தனையன் ஈன்றாள் புதுமை என் என்றேன் நினை உம்மை தழுவி இ சேய்
சினையாய் எண் மதியில் இறந்தேன் இகத்தும் உனை புணர செய்த நோன்பால் – நீதிநூல்:44 503/2,3
உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே – நீதிநூல்:44 513/4
ஒரு பிதா நாம் சேய் ஆண்டான் உவன் வழித்தொண்டன் நாம் அவ் – நீதிநூல்:47 568/2
எல்லாவன்_சேய் தோற்றான் இரங்கேசா சொல்லில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/2
இன்சொல் இராமன் இயம்ப இரேணுகை சேய்
துன்பம் மொழியே புகன்றான் சோமேசா அன்புடைய – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/1,2
தூசு ஆர் துவட்டா சேய் சோமேசா பேசில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/2
துய்ய கங்கை_சேய் முதலோர் சோமேசா மெய்யே ஆம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/2
கால்_சேய் கதிர்_சேயை காத்து அரசன் நட்பு உதவி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/1
சேய் பகை ஒருவர்க்கு ஆகும் என்றனர் தெளிந்த நூலோர் – விவேகசிந்தாமணி:1 78/4
சேய் கொண்டாரும் கமல செம்மலுடனே அரவ – விவேகசிந்தாமணி:1 85/1
அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/1
அல் ஒளி சேர் கண்டத்து அரன் அருள் சேய் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 164/1
ஆதி அருள் சேய் நாண் அகன்று மட மான் மகட்கு – முதுமொழிமேல்வைப்பு:1 167/1
பரன் அருள் சேய் கேட்க பசும்பொன் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 168/1
அன்று ஏன் இரணியன் சேய் அல்லலுற்றும் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/1
பண்டு துயரம் பல செய்தும் பொன்னவன்_சேய் – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/1
மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/1
திண் தோள் இரணியன் தன் சேய் மேல் சினந்ததனால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/1
நீதி மன்னன் சேய் உயிரை நீக்க அஞ்சி ஏன் அமைச்சன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/1
கஞ்சன் சிசுபாலன் கண்ணில்லான்_சேய் வணக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 419/1
ஏனோ தருமன் சேய் என்றும் மடி இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:61 602/1

மேல்

சேய்த்து (1)

இளையாள் முயக்கு எனினும் சேய்த்து அன்றே மூத்தாள் – நீதிநெறிவிளக்கம்:1 35/3

மேல்

சேயர் (5)

செய பிறிது அறிகிலா சேயர் சுற்றுளோர் – நீதிநூல்:9 84/2
தீது நன்று அறிகிலா சேயர் என் செய்வார் – நீதிநூல்:9 87/1
நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர்
பூதல பொருள்கள் யார்க்கும் பொதுமை அல்லாது சொந்த – நீதிநூல்:14 175/1,2
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார் – நீதிநூல்:41 434/2
அருமையா எமை சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசை சேரும் – நீதிநூல்:44 499/3

மேல்

சேயர்க்கு (1)

கொண்டனன் எனல் பொய்யாம் செங்கோல் வழி நிலார் கோன் சேயர்க்கு
அண்டலர் கோனுக்கு அன்பர் ஆவரோ நற்குணங்கள் – நீதிநூல்:47 561/2,3

மேல்

சேயரும் (1)

பத்தினி சேயரும் பரிசனங்களும் – நீதிநூல்:18 221/1

மேல்

சேயரை (5)

சேயரை நன்னெறி செலுத்தல் மேன்மையே – நீதிநூல்:9 93/4
திலக வாள் நுதல் தேவியை சேயரை பிரிந்து – நீதிநூல்:17 210/1
அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா – நீதிநூல்:42 443/4
ஊமரை பித்துளாரை உணர்வு_இல் சேயரை மின்னாரை – நீதிநூல்:45 517/1
முறை_இல் சேயரை தன்னம் முனிய அஞ்சுவீர் – நீதிநூல்:47 589/1

மேல்

சேயார் (1)

சென்று தைக்கும் சேயார் முகத்து – நீதிநெறிவிளக்கம்:1 94/4

மேல்

சேயினை (1)

தயையொடும் சேயினை வளர்க்கும் தந்தை தாய் – நீதிநூல்:9 90/3

மேல்

சேயினையும் (1)

சேயினையும் தேவேந்திரன் இகழ்ந்த ஞாயம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 58/2

மேல்

சேயும் (2)

சேயும் எள்ளும் தன் சிந்தையும் எள்ளுமே – நீதிநூல்:7 70/4
கண்டு அழுதார் கண்ணப்பர் காய் கதிரோன் சேயும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/1

மேல்

சேயை (2)

செவியின் ஓதாது ஒரு சேயை பார் விடல் – நீதிநூல்:9 92/2
கால்_சேய் கதிர்_சேயை காத்து அரசன் நட்பு உதவி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/1

மேல்

சேர் (66)

சேரிடம் அறிந்து சேர் – ஆத்திசூடி:1 51/1
மெல்லி நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடி:1 94/1
வாயில் தேனும் தன் வாலில் கொடுக்கும் சேர்
ஈயின் வாயினில் இங்கித சொல்லொடும் – நீதிநூல்:7 70/1,2
சேர் இழை பல உற திரித்த தாம்பினை – நீதிநூல்:11 108/2
மற்றொருவனை சேர் மாது இறந்தாலும் வசை நிற்கும் உலகம் உள்ளளவும் – நீதிநூல்:13 169/1
சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும் – நீதிநூல்:14 174/2
குறுமை சேர் பகையினால் வெம் கொலைசெய்வர் வசையினோடும் – நீதிநூல்:19 234/2
வளம் மலி நிடதநாடு அளிக்கும் மாண்பு சேர்
நளனையும் அலைவுசெய் நாச சூதுதான் – நீதிநூல்:20 240/1,2
அரிய குணம் சேர் பெரியர்-தமக்கு அமைய கடல் சூழ் புவனம் எங்கும் – நீதிநூல்:23 267/1
கனியையும் தள்ளுவர் கயவர்-தம்மை சேர்
இனிய நற்குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே – நீதிநூல்:31 331/3,4
மண மனை சேர் மண மாலை மாண்புறும் – நீதிநூல்:31 332/1
சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே – நீதிநூல்:31 334/4
மதி இலா நரர் அன்றி கடவுளோ சொல்லுவாய் மருள் சேர் நெஞ்சே – நீதிநூல்:40 415/4
பொய்யால் செய் மெய் நம்பி ஏதேதோ நினைவுற்றாய் புரை சேர் நெஞ்சே – நீதிநூல்:41 420/2
காடு சேர் மரம் செடி பார்த்து இத்தனை நாள் நிற்கும் என கணிக்கலாம் சீர் – நீதிநூல்:41 423/1
திரு அமளி துயில மனம் பொருந்தாது பலர் எச்சம் சேர் படிக்கம் – நீதிநூல்:44 491/2
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அ பேய் – நீதிநூல்:44 504/3
கனை கடல் மணலை எணினும் வேசியர் சேர் ஆடவர்க்கு ஓர் கணிதம் உண்டோ – நீதிநூல்:44 506/1
இச்சை சேர் பழி பாவங்கள் ஈன்றவர்க்கு எய்துமாலோ – நீதிநூல்:47 591/4
எவ்வ மன கூனி இரங்கேசா அவ்வியம் சேர்
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/2,3
செய் தவம் சேர் வாணனது செல்வி கனா நிலையில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/1
தூவணம் சேர் மேனியாய் சோமேசா மேவில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 35/2
சுந்தரம் சேர் தென்குளத்தூர் சோமேசா சந்ததமும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/2
கொம்மை சேர் முலையினாளே கூறுவேன் ஒன்று கேண்மோ – விவேகசிந்தாமணி:1 24/2
உந்தியின் சுழியின் கீழ் சேர் உரோமமாம் கரிய நாகம் – விவேகசிந்தாமணி:1 100/1
பாகு சேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்க – விவேகசிந்தாமணி:1 101/3
கரம் பார்த்தான் செங்கமல கண்ணன் உரம் சேர்
மலை வளைத்த திண் புயத்து வண்ணான் சீராமன் – விவேகசிந்தாமணி:1 129/2,3
சேர்விடம் அறிந்து சேர் – ஆத்திசூடிவெண்பா:1 50/4
கழறும் முன் மால் நல் கழல் சேர் காதை பழமை அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 80/2
தலம் தீர்த்தம் தானம் தவம் சேர் சந்தானம் – ஆத்திசூடிவெண்பா:1 81/1
செய்ய மெல் இல் நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடிவெண்பா:1 93/4
பெருகு ஒளி சேர் முத்தும் பெறலாம் நரி நுழையில் – நீதிவெண்பா:1 2/2
அறிவன் பகையேனும் அன்பு சேர் நட்பு ஆம் – நீதிவெண்பா:1 3/1
வகை சேர் சுவை அருந்துமா போல் தொகை சேர் – நீதிவெண்பா:1 5/2
வகை சேர் சுவை அருந்துமா போல் தொகை சேர்
பகைவரிடம் மெய் அன்பு பாவித்து அவரால் – நீதிவெண்பா:1 5/2,3
பொன்_கொடியை சேர் துயரம் போல் – நீதிவெண்பா:1 16/4
சீர் அளித்தோன் உண்ட நாள் சேர் மேகத்துக்கு அருந்த – நீதிவெண்பா:1 36/3
பன் முகம் சேர் தீ முன் பயில் சீதம் இல்லையாம் – நீதிவெண்பா:1 48/3
கல்லார் பகை சேர் கலகம் விரும்புவார் – நீதிவெண்பா:1 82/3
செந்தாமரை இரவி சேர் உதயம் பார்க்குமே – நீதிவெண்பா:1 96/1
சந்தனத்தை சேர் தருவும் தக்க மணம் கமழும் – நீதிவெண்பா:1 99/1
தேர்ந்து உணர்ந்த அந்தணர்கள் சேர் நகரில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 7/3
அமையத்தும் ஏதிலர் சேர் ஆங்கும் சுமை இன்றி – நன்மதிவெண்பா:1 52/2
செறி பொருள் சேர் அம் பனுவல் தீம் சுவை ஆர் கீதம் – நன்மதிவெண்பா:1 65/1
செய்ய ஆதாரமாய் சேர் கிளைஞர் நைய வசை – நன்மதிவெண்பா:1 93/2
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – முதுமொழிமேல்வைப்பு:1 2/3
பொருள் சேர் புகழ் புரிந்தார்-மாட்டு – முதுமொழிமேல்வைப்பு:1 2/4
தமிழ் மணக்க பாடி அரன் தண்ணளி சேர் மைந்தன் – முதுமொழிமேல்வைப்பு:1 44/1
இறை அருள் சேர் தென்னவன் அன்று இந்திரன்-பால் சென்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 144/1
இறை அருள் சேர் தென்னன் இரும் கடலும் ஆழி – முதுமொழிமேல்வைப்பு:1 148/1
அல் ஒளி சேர் கண்டத்து அரன் அருள் சேய் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 164/1
நந்தி அருள் சேர் பரவை நம்பியை காண கிடையா – முதுமொழிமேல்வைப்பு:1 171/1
நம்பி-தனை நினைந்து நம்பர் அருள் சேர் பரவை – முதுமொழிமேல்வைப்பு:1 174/1
அரன் அருள் சேர் நம்பி பிரிவு ஆற்றாமல் ஆரூர் – முதுமொழிமேல்வைப்பு:1 178/1
இறைவர் அருள் சேர் பரவை ஏந்தல் பிரிவு ஆற்றி – முதுமொழிமேல்வைப்பு:1 180/1
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/3
பொருள் சேர் புகழ் புரிந்தார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/4
கூர் அருள் சேர் நல்லான் குமரேசா சீர் நிறைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/2
கூடல் சேர் கோவலனை கொன்றோன் இராகுலன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:32 319/1
தண்டாத இன்சொலோடு தண்ணளி சேர் போசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/1
தெள்ளிய நூல் கல்லாரை தேர் புலம் சேர் சண்பகம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/1
பூசுரர் பெய் கை நீர் போர் வலம் சேர் மந்தேகர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/1
குற்றம் சேர் கள் உண் குரங்கு அரசை ஏன் கொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/1
கண்டிருந்தும் வீடணன் சேர் காரணத்தை ஏன் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/1
மாறா வளம் சேர் வளவன் அமர் நாடு உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/1
திண் தோள் இரவிவன்மன் சேர் அலரை ஏன் விழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/1

மேல்

சேர்க்கும் (2)

ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும்
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும் – விவேகசிந்தாமணி:1 122/2,3

மேல்

சேர்க்கை (2)

ஒரு தரு மற்றொரு தருவின் உதவி இன்றி காய்க்கும் உயர் ஆண் பெண் சேர்க்கை இன்றி ஒரு மகவு உண்டாமோ – நீதிநூல்:12 156/1
சேர்க்கை அழியேல் – புதிய-ஆத்திசூடி:1 32/1

மேல்

சேர்க்கையை (1)

நயப்புறும் சேர்க்கையை விலக்கல் நன்று அரோ – நீதிநூல்:9 84/4

மேல்

சேர்கிலாது (1)

தேன் தரு மலர் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர் – நீதிநூல்:3 26/2

மேல்

சேர்கிலையேல் (1)

சிர மகுடம் நிகர் ஆமோ சேர்கிலையேல் கொல்வன் என – நீதிநூல்:12 138/2

மேல்

சேர்த்த (1)

சேர்த்த புகழாளன் ஒரு வள்ளிபங்கன் – உலகநீதி:1 6/7

மேல்

சேர்த்தலால் (1)

சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன் – நன்மதிவெண்பா:1 39/2

மேல்

சேர்த்தான் (1)

தேடி பொருள் சென்று சேர்த்தான் பகை வென்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/1

மேல்

சேர்த்திட்டோம் (1)

செங்கல் வெண்கல் கருங்கல்லை சேர்த்திட்டோம் இருவர் கல்லும் சீர்தூக்குங்கால் – நீதிநூல்:30 323/2

மேல்

சேர்த்தியே (1)

சிந்தனை தூண் பூட்டி சேர்த்தியே பந்திப்பர் – அறநெறிச்சாரம்:1 190/2

மேல்

சேர்த்து (3)

வள நகரில் சேர்த்து மனையாள் உளம் மகிழ – ஆத்திசூடிவெண்பா:1 53/2
கொண்டான் சேர்த்து என்னே குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:64 633/2
தீது செய்து கண்டகன் முன் சேர்த்து வந்தான் பின்பு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/1

மேல்

சேர்த்துவைப்பார் (1)

பந்தமுற செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன் – நீதிநூல்:44 501/3

மேல்

சேர்தல் (7)

தலைமகனில் தீர்ந்து உறைதல் தான் பிறர் இல் சேர்தல்
நிலைமை_இல் தீப்பெண்டிர் சேர்தல் கலன் அணிந்து – அறநெறிச்சாரம்:1 162/1,2
நிலைமை_இல் தீப்பெண்டிர் சேர்தல் கலன் அணிந்து – அறநெறிச்சாரம்:1 162/2
சேர்வது காணும் இல்லாள் தினம் பல புருடர் சேர்தல்
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ – நீதிநூல்:13 170/3,4
இதமொடு சேர்தல் சேர இச்சித்தல் ஆண் புணர்ச்சி – நீதிநூல்:13 172/2
இயவரை சேர்தல் போல் இல்லை தீமையே – நீதிநூல்:31 335/4
விலைமாதை சேர்தல் பிணம் தழுவியதை ஒக்கும் என்றார் வீணோ என்றாள் – நீதிநூல்:44 497/4
இனையவரை சேர்தல் பெரும் தீயினிடை மூழ்குதலை ஏய்க்கும் மாதோ – நீதிநூல்:44 506/4

மேல்

சேர்ந்த (23)

சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன் – நீதிநூல்:12 122/3
சித்திர மாது எழில் நம்பி சேர்ந்த தன் – நீதிநூல்:20 237/3
சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே – நீதிநூல்:31 334/4
பெரு வெள்ளம் சேர்ந்த பின்னர் அதை திருப்ப ஒண்ணுமோ பெருத்து நீண்ட – நீதிநூல்:43 456/1
அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள் – நீதிநூல்:44 478/3
சிந்து இடை ஏழு மதில் சேர்ந்த இலங்கைநகர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/1
கற்பகம் சேர்ந்த மார்பில் கன தனம் இரண்டும் தைத்தே – விவேகசிந்தாமணி:1 70/3
நல் ஒழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோர்க்கும் – நீதிவெண்பா:1 86/1
திரம் என உள் பூரியேல் சேர்ந்த அரிவை மிக – நன்மதிவெண்பா:1 76/2
பாவ_நெறியாரை சேர்ந்த மதிப்பு இன்மை – அருங்கலச்செப்பு:1 20/1
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 138/3
சேர்ந்த திண்ணர் வெம் பிறவி தீர்ந்தார் பின் சேராதார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 10/1
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/3
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/3,4
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/3
திண் தோள் இராசவர்மன் சேர்ந்த சுற்றத்தால் உயர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/1
சென்ற செல்வம் எல்லாம் பின் சேர்ந்த பனந்தன்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/1
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/3
கூர்ந்து களைந்தான் குமரேசா சேர்ந்த
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/2,3
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/3
சேர்ந்த சிறியர் முன் செம்மாந்து சேகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/1
சேர்ந்த எழில் கலிங்கசேனையினை ஏன் செறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/1
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா சேர்ந்த
வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:127 1268/2,3

மேல்

சேர்ந்ததனால் (2)

திண்ண துருவர் கையில் சேர்ந்ததனால் மண் உலகில் – ஆத்திசூடிவெண்பா:1 7/2
புன் பாவும் வள்ளுவர்-தம் பொன் பாவை சேர்ந்ததனால்
இன்பு ஆகும் அன்றோ இனி – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/3,4

மேல்

சேர்ந்தவர் (2)

கணமதில் சேர்ந்தவர் கனம் கொண்டு ஓங்குவர் – நீதிநூல்:31 332/3
தேர்ந்த பிரமதத்தன் சேர்ந்தவர் பின் செய் வினையை – திருக்குறள்குமரேசவெண்பா:51 509/1

மேல்

சேர்ந்தவன் (1)

கயவரை சேர்ந்தவன் கலந்த போது அவர் – நீதிநூல்:31 335/1

மேல்

சேர்ந்தனர் (1)

அன்னியர் எம் இயைபு அன்றி சேர்ந்தனர்
என்ன மின்_இடையவர் இயம்பல் சோரர்கள் – நீதிநூல்:13 159/1,2

மேல்

சேர்ந்தார் (5)

ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா சேர்ந்தார் போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/2
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலம் மிசை நீடு வாழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/3,4
அடியை சேர்ந்தார் குமரேசா ஏனோர் – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/2
சிற்றம்பலர் முத்தி சேர்ந்தார் சிவசருமர் – திருக்குறள்குமரேசவெண்பா:35 348/1
சேர்ந்தார் இழிந்து நின்றார் செய் வினையால் சம்புவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:98 972/1

மேல்

சேர்ந்தார்க்கு (5)

கற்பகத்தை சேர்ந்தார்க்கு காஞ்சிரங்காய் ஈந்ததேல் – மூதுரை-வாக்குண்டாம்:1 22/3
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – முதுமொழிமேல்வைப்பு:1 4/3
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/3,4
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/3
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/3

மேல்

சேர்ந்தாரை (1)

சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 306/3

மேல்

சேர்ந்தால் (2)

நற்றாமரை கயத்தில் நல் அன்னம் சேர்ந்தால் போல் – மூதுரை-வாக்குண்டாம்:1 24/1
பொல்லார்க்கு கல்வி வரில் கருவம் உண்டாம் அதனோடு பொருளும் சேர்ந்தால்
சொல்லாதும் சொல்லவைக்கும் சொல் சென்றால் குடிகெடுக்க துணிவர் கண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/1,2

மேல்

சேர்ந்தாள் (4)

ஆளனை கிணற்றில் தள்ளி அழகு இலா முடவன் சேர்ந்தாள்
காளம் நேர் கண்ணினாரை கனவிலும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 84/3,4
சேர்ந்தாள் பெரும் துன்பம் செய்தும் சிவகலை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/1
கோமகனை சேர்ந்தாள் குமரேசா ஏமமுறு – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/2
கோன் உவந்து சேர்ந்தாள் குமரேசா தானாக – திருக்குறள்குமரேசவெண்பா:129 1287/2

மேல்

சேர்ந்தான் (3)

சீதரனை பார்த்தன் அன்று சேர்ந்தான் அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/1
யாதவரை சேர்ந்தான் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/2
அரன் அடியை சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும் – ஆத்திசூடிவெண்பா:1 50/2

மேல்

சேர்ந்திட (1)

பைம்_தொடியே உனை சேர்ந்திட பாரில் எனக்கு உடல் வேறு இலை – நீதிநூல்:12 131/3

மேல்

சேர்ந்திடும் (1)

தண் தமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும் – விவேகசிந்தாமணி:1 31/2,3

மேல்

சேர்ந்திருக்கும் (1)

திரை மடுவில் பல் காலம் சேர்ந்திருக்கும் கொக்கு – நன்மதிவெண்பா:1 13/3

மேல்

சேர்ந்து (31)

தேவி எனும் இருவர் சேர்ந்து ஓர் உருவாம் செழு மலரும் தேனும் போல – நீதிநூல்:12 109/2
உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து
அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே – நீதிநூல்:12 112/3,4
மேதினியில் இருந்து தாய் தந்தை உடல் சேர்ந்து ஒருநாள் வெளியே வந்து அங்கு – நீதிநூல்:41 433/2
சிறந்த மா நிலம் சேர்ந்து பின் ஆருயிர் – நீதிநூல்:42 436/2
ஒரு மாது சோதரர் ஐவரை சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார் – நீதிநூல்:44 499/2
எனை அன்றி மற்றோரை சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள் – நீதிநூல்:44 503/1
சேர்ந்து திருமகளை தெள் அமுதை உம்பருக்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/1
சேர்ந்து மணம்செய்ய மறுசென்மம் உனி பக்கல் வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 132/1
தாதை அன்றி தானே துச்சந்தனை சேர்ந்து இன்னலுற்றாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/1
தேக்கு நீர் வீழ்ந்து ஒழிந்தான் சேர்ந்து – நீதிவெண்பா:1 67/4
தென்னன் இறைவர் அருள் சேர்ந்து செங்கோல்செலுத்த – முதுமொழிமேல்வைப்பு:1 100/1
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – முதுமொழிமேல்வைப்பு:1 138/4
திண் தோள் வலி மிகுந்தும் செய்ய அரண் சேர்ந்து உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/1
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/3
திண் தோள் சகரன் ஏன் சேர்ந்து பல கிளைஞர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/1
சேரல் இரும்பொறையை சேர்ந்து அன்று உலகம் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/1
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/4
தேர்ந்த விதி முன்னே சேர்ந்து நகைசெய்த கங்கை – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/1
சேர்ந்து நின்று கந்துகனை தேர்ந்து தனமித்திரன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 793/1
சேர்ந்து அனலன் சொல்லியும் பின் தேர்ந்து கொளாது ஏன் வசு முன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/1
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/4
கூர்ந்து உயர்ந்தான் என்னே குமரேசா சேர்ந்து போய் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/2
சேர்ந்து முயன்ற சிவசன்மா தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1024/1
கூர்ந்து வந்து கொண்டாள் குமரேசா சேர்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/2
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா சேர்ந்து எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/2
கூர்ந்து எழுந்தது என்னே குமரேசா சேர்ந்து
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1161/2,3
கூர்ந்து ஏன் முனிந்தாள் குமரேசா சேர்ந்து
பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/2,3
கூர்ந்து நின்றாள் என்னே குமரேசா சேர்ந்து தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/2
சேர்ந்து புலந்தார்-பால் செல்லும் என தேசிகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/1
கூர்ந்து சிவந்தாள் குமரேசா சேர்ந்து நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1313/2
கூர்ந்து வென்றான் என்னே குமரேசா சேர்ந்து எழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/2

மேல்

சேர்ந்துதான் (1)

கூர்ந்து உவந்தாள் என்னே குமரேசா சேர்ந்துதான்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:122 1211/2,3

மேல்

சேர்ந்தும் (1)

செப்பும் இரு நிதிகள் சேர்ந்தும் குபேரனுக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/1

மேல்

சேர்ந்தே (2)

கூர்ந்து அயிர்த்து நின்றான் குமரேசா சேர்ந்தே
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:83 828/2,3
கூர்ந்திருந்தார் என்னே குமரேசா சேர்ந்தே
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/2,3

மேல்

சேர்ந்தோர் (2)

விற்பன விவேகம் உள்ள வேந்தரை சேர்ந்தோர் வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 11/2
அற்பரை சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா – விவேகசிந்தாமணி:1 11/4

மேல்

சேர்ப்ப (1)

இழுக்கா எழுத்து ஒன்று இமிழ் கடல் தண் சேர்ப்ப
விழுச்சார்வு வேண்டுபவர்க்கு – அறநெறிச்சாரம்:1 209/3,4

மேல்

சேர்ப்பார் (2)

சேர்ப்பார் நிறை தாழ் செறித்து – நீதிநெறிவிளக்கம்:1 98/4
செம் கல் வெண் கல் கரும் கல்லை நவமணிகள் என செல்வர் சேர்ப்பார் யாமும் – நீதிநூல்:30 323/1

மேல்

சேர்ப்பானே (1)

பித்தரை அத்தன் கொன்று பெரு நரகு அழல் சேர்ப்பானே – நீதிநூல்:8 77/4

மேல்

சேர்பவன் (1)

ஒப்புரவு செய்து ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன்
தக்கான் தரும உரைக்கு – அறநெறிச்சாரம்:1 6/3,4

மேல்

சேர்வது (3)

சேர்வது காணும் இல்லாள் தினம் பல புருடர் சேர்தல் – நீதிநூல்:13 170/3
செம் தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர் – விவேகசிந்தாமணி:1 68/4
செல்வரும் சேர்வது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 731/4

மேல்

சேர்வரோ (1)

சீவன் நீங்கினும் அயலாரை சேர்வரோ – நீதிநூல்:10 96/4

மேல்

சேர்வார் (1)

சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரை சேர்வார் மாதோ – நீதிநூல்:44 484/4

மேல்

சேர்விக்கும் (1)

தீர்வு இல நீ கோதாதி சேர்விக்கும் தீர்வு_இல் – அறநெறிச்சாரம்:1 147/2

மேல்

சேர்விடம் (1)

சேர்விடம் அறிந்து சேர் – ஆத்திசூடிவெண்பா:1 50/4

மேல்

சேர (6)

சினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம் – உலகநீதி:1 3/6
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் – உலகநீதி:1 5/5
சேராத இடம்-தனிலே சேர வேண்டாம் – உலகநீதி:1 8/1
இதமொடு சேர்தல் சேர இச்சித்தல் ஆண் புணர்ச்சி – நீதிநூல்:13 172/2
சேர உன்னேல் நன்மதியே தீய விடக்காம் புரவி – நன்மதிவெண்பா:1 75/3
பண்டு வியாசர் பதம் சேர ஞாலம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/1

மேல்

சேரமான் (1)

தேடுகின்ற இன்பு உற்றும் சேரமான் ஏன் அன்பால் – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/1

மேல்

சேரர் (2)

பேர்படைத்த சேரர் பெருமான் போல் பார் மிசையின் – முதுமொழிமேல்வைப்பு:1 93/2
குன்றாத சேரர் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/2

மேல்

சேரல் (1)

சேரல் இரும்பொறையை சேர்ந்து அன்று உலகம் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/1

மேல்

சேரலர்க்கு (1)

சேரலர்க்கு சித்திரம் பேசேல் – ஆத்திசூடிவெண்பா:1 45/4

மேல்

சேரலை (1)

தேனீ செய் தேன் பிறரை சேரலை போல் தான் ஈதல் – நன்மதிவெண்பா:1 57/2

மேல்

சேரவில்லை (1)

வாள் புலி போல் பாய்ந்து கொன்ற வல்வினை ஏன் சேரவில்லை
கோட்புலியார்-தம்மை குமரேசா கேட்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/1,2

மேல்

சேரவே (1)

உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ – நீதிநூல்:44 491/4

மேல்

சேரன் (3)

சேரன் அமைச்சர் அல்ல செய்யாமல் ஏன் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/1
கொற்ற நெடும் சேரன் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/2
தீது பகை ஏதும் இன்றி சேரன் உயர் நாடு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/1

மேல்

சேரனொடு (1)

நாதர் அருள் சேரனொடு நம்பி ஆரூரரும் முன் – முதுமொழிமேல்வைப்பு:1 66/1

மேல்

சேரா (4)

மீக்கொள் நகையினார்-வாய் சேரா தாக்கணங்கும் – நீதிநெறிவிளக்கம்:1 23/2
சிறந்தான் தாள் சேரா தலை – அறநெறிச்சாரம்:1 204/4
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – முதுமொழிமேல்வைப்பு:1 2/3
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 5/3

மேல்

சேராத (1)

சேராத இடம்-தனிலே சேர வேண்டாம் – உலகநீதி:1 8/1

மேல்

சேராதார் (3)

இறைவன் அடி சேராதார் – முதுமொழிமேல்வைப்பு:1 5/4
சேர்ந்த திண்ணர் வெம் பிறவி தீர்ந்தார் பின் சேராதார்
கூர்ந்து ஆழ்ந்தார் என்னே குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:1 10/1,2
இறைவன் அடி சேராதார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 10/4

மேல்

சேராதான் (1)

செய்ய தமிழ் தேர்ச்சி மிக சேராதான் சொல் செய்யுள் – நன்மதிவெண்பா:1 33/1

மேல்

சேராது (2)

தேகம் சேராது இருசில் தேய்க்கும் எண்ணெய் பாகம் இன்றேல் – நன்மதிவெண்பா:1 30/2
சேராது இயல்வது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/4

மேல்

சேராமல் (2)

செல்வம் உற்றும் நல்லறிவு சேராமல் சண்டன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/1
திண் தோள் சதசித்து ஏன் தெவ்வரை உள் சேராமல்
கொண்டு அகன்றான் முன்னே குமரேசா கண்டு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/1,2

மேல்

சேரார் (1)

பங்கமுறும் பொய்யரை பொய்யரும் சேரார் தம் உளமும் பழிக்கும் அன்றோ – நீதிநூல்:16 197/4

மேல்

சேராரே (1)

சீர் எல்லாம் சூழ் செல்வரும் மந்தம் சேராரே
நேர் இல்லா மா பாதகர் தீனர் நெடும் சோரம் – நீதிநூல்:25 289/2,3

மேல்

சேராரை (1)

திண் திறல் மெய் குண்டலன் முன் சேராரை ஏன் விரைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:68 679/1

மேல்

சேராளோ (1)

காணிகொள்வாள் தனை போன்ற மடந்தையர் நா சேராளோ கதிரோன் இல் பார் – நீதிநூல்:47 594/2

மேல்

சேரான் (1)

ஆம் கடினம் ஆகில் அ திருவும் சேரான் முன் – நீதிவெண்பா:1 17/3

மேல்

சேரி (2)

கான வேட்டுவ சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர் – விவேகசிந்தாமணி:1 86/4
மனை சேரி ஊர் புலம் ஆறு அடவி காதம் – அருங்கலச்செப்பு:1 130/1

மேல்

சேரிடம் (1)

சேரிடம் அறிந்து சேர் – ஆத்திசூடி:1 51/1

மேல்

சேரில் (2)

நிந்தை இலா தூயவரும் நிந்தையரை சேரில் அவர் – நீதிவெண்பா:1 79/1
இ குணம் ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில்
அக்கணமே போம் என்று அறி – நீதிவெண்பா:1 100/3,4

மேல்

சேரின் (3)

செறிவொடு உற சூழ்வு ஆங்ஙன் சேரின் பெற அரிதாய் – நன்மதிவெண்பா:1 46/2
சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான் – முதுமொழிமேல்வைப்பு:1 83/3
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/3

மேல்

சேரும் (14)

கடையில் வெறுங்கையோடும் கழிகுவம் நடுவில் சேரும்
உடைமையால் பெருமை என்னோ ஊர்க்கு எலாம் பொதி சுமக்கும் – நீதிநூல்:30 324/2,3
செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று – நீதிநூல்:32 341/2
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எ பிழைசெய்தார் பகராய் நெஞ்சே – நீதிநூல்:32 342/4
சேம நல் உதவியால் சேரும் இன்பம்தான் – நீதிநூல்:39 404/3
கனம்கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உணராய் உயிர் தீர் காயம் சேரும்
வனம் கடுகி வா என்ன விளித்து உன்-பால் தினம் நெருங்கும் வன்மை உன்னி – நீதிநூல்:43 452/2,3
அருமையா எமை சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசை சேரும்
பொருள்மாது அ கன்னியர்க்கு எலாம் சிரோமணி என்ன புகலலாமே – நீதிநூல்:44 499/3,4
மண்டலத்தோர்கள் செய்த பாவம் மன்னவரை சேரும்
திண் திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/1,2
திண் திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியை சேரும்
தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/2,3
தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவை சேரும்
கண்டு அன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே – விவேகசிந்தாமணி:1 73/3,4
வண்டலும் அழுக்கும் சேரும் உதிரமும் மாறா வாசல் – விவேகசிந்தாமணி:1 104/2
பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா – நீதிவெண்பா:1 5/1
துன்று கிளைக்கும் துயர் சேரும் குன்றிடத்தில் – நீதிவெண்பா:1 74/2
திருவருளால் வாதவூர் சேரும் குரு நெறியில் – முதுமொழிமேல்வைப்பு:1 65/2
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/3,4

மேல்

சேருமவர்க்கு (1)

மடி சேருமவர்க்கு ஒரு நாளும் மறல் – நீதிநூல்:25 288/1

மேல்

சேருமே (4)

வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே – நல்வழி:1 23/1
செய நினைத்தவர்க்கே வந்து சேருமே – நீதிநூல்:34 356/4
செய்யின் மனத்தாபம் சேருமே செய்ய ஒரு – நீதிவெண்பா:1 16/2
தேளிற்கு வாலில் விடம் சேருமே கோளர்களாம் – நன்மதிவெண்பா:1 54/2

மேல்

சேருமோ (1)

ஈண்டு சேருமோ இதயமே சொலாய் – நீதிநூல்:27 306/4

மேல்

சேரேல் (2)

தீய குழு சேரேல் தெளிந்து – நன்மதிவெண்பா:1 72/4
கொடியரை சேரேல் – இளையார்-ஆத்திசூடி:1 29/1

மேல்

சேல் (1)

சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ – நீதிநூல்:29 318/4

மேல்

சேலை (1)

சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கி தவிப்பரே – விவேகசிந்தாமணி:1 12/4

மேல்

சேவகம் (1)

செம்மை உடையதாம் சேவகம் தம்மை – அறநெறிச்சாரம்:1 108/2

மேல்

சேவகமாய் (1)

சேவகமாய் நின்றது உடைத்து – அறநெறிச்சாரம்:1 53/4

மேல்

சேவகன் (1)

உரம் என்று எடுத்தவன் மாற்றான்-தன் சேவகன் ஒண்_தொடியே – விவேகசிந்தாமணி:1 123/4

மேல்

சேவகன்தான் (1)

சேவகன்தான் என்றும் திரியாத சூரன் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 90/2

மேல்

சேவடி (1)

செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே – நீதிநூல்:8 76/4

மேல்

சேவடியும் (1)

சேவடியும் மென் தோளும் தேவகி முன் நோக்கி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/1

மேல்

சேவடியை (1)

வென்றவன் சேவடியை வேட்டு வந்து எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 202/3

மேல்

சேவல் (1)

சேவல் போல் நிமிர்த்து நில் – இளையார்-ஆத்திசூடி:1 36/1

மேல்

சேவித்தல் (1)

நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/1

மேல்

சேவித்து (2)

உடன் பிறந்த மூவர் ஒருவனை சேவித்து
இடங்கொண்டு சின்னாள் இருப்பர் இடம் கொண்ட – அறநெறிச்சாரம்:1 205/1,2
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து ஈவார் – விவேகசிந்தாமணி:1 7/4

மேல்

சேவித்தும் (1)

சேவித்தும் சென்று இரந்தும் தெண்ணீர் கடல் கடந்தும் – நல்வழி:1 19/1

மேல்

சேறல் (4)

பிறன் வரை நின்றாள் கடைத்தலை சேறல்
அறன் அன்றே ஆயினும் ஆக சிறுவரையும் – நீதிநெறிவிளக்கம்:1 76/1,2
தெருட்டி வழி சொல்லி சேறல் திருட்டேட்டம் – அறநெறிச்சாரம்:1 48/2
சங்கைகொளும் அவ்விடத்தும் தாம் சேறல் நன்மதியே – நன்மதிவெண்பா:1 52/3
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/3

மேல்

சேறி (3)

கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/3
யார் உழை சேறி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/4
செறாஅர் என சேறி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/4

மேல்

சேறு (2)

கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது – வெற்றிவேற்கை:1 27/1
கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின் – நீதிநூல்:1 4/3

மேல்

சேனர் (1)

தேர்ந்த அறிவு இருந்தும் சீலம் இலா சேனர் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/1

மேல்

சேனை (4)

வல் அதிகன்-தன் அரணம் வாள் வளவன் சேனை செல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/1
மந்திரி இல்லா வேந்தன் மத கரி இல்லா சேனை
சுந்தர புலவர் இல்லா தொல் சபை சுதர்_இல் வாழ்வு – விவேகசிந்தாமணி:1 57/2,3
தேர்ந்த திவிட்டன்-தன் சேனை உயர் மான நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/1
தேர்ந்து திறன் அறிந்து சென்றது ஐவர் சேனை நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/1

மேல்

சேனையால் (1)

மன்னவன் வலி செங்கோலினால் அன்றி வாளினால் சேனையால் இல்லை – நீதிநூல்:4 44/1

மேல்

சேனையுடன் (1)

சென்றான் சராசரன் சேனையுடன் பின்பு ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/1

மேல்

சேனையும் (1)

சேனையும் செல்வமும் தியங்குவார்களே – விவேகசிந்தாமணி:1 52/4

மேல்

சேனையே (1)

சிரிசேன் இடபமா சேனையே பன்றி – அருங்கலச்செப்பு:1 141/1

மேல்

சேனையை (1)

நெடிய மா சேனையை நெறிசெய் மாந்தரை – நீதிநூல்:5 52/2

மேல்