தீ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 44
தீ-நின்று 1
தீக்க 1
தீக்கருமம் 1
தீக்காட்சியால் 1
தீக்கு 1
தீங்கினர்-தம் 1
தீங்கு 9
தீங்குகளால் 1
தீங்கும் 1
தீங்குற்று 1
தீச்சுடர் 1
தீச்செயல் 1
தீச்சொல் 1
தீட்ட 1
தீட்டிய 1
தீட்டின் 1
தீட்டு 1
தீட்டும் 1
தீட்டுவோன் 1
தீண்ட 3
தீண்டல் 2
தீண்டலான் 1
தீண்டா 3
தீண்டாதேனும் 1
தீண்டி 1
தீண்டிய 1
தீண்டில் 1
தீண்டுதி 1
தீத்தெய்வம் 1
தீத்தொழிற்கு 1
தீதற்றோர் 1
தீதாக 1
தீதாம் 2
தீதாமே 1
தீதால் 2
தீதிலனாய் 1
தீதிலான் 1
தீது 65
தீது_இல் 8
தீதுகள் 1
தீதுற்ற 1
தீதுறுங்கால் 1
தீதே 9
தீதேல் 1
தீதை 3
தீதொழிய 1
தீந்து 1
தீப்பால 1
தீப்புகுதல் 1
தீப்பெண்டிர் 1
தீபங்கள் 1
தீபத்திடத்தே 1
தீபத்தை 1
தீபம் 5
தீம் 8
தீமை 13
தீமைக்கு 2
தீமைகள் 1
தீமைத்தே 1
தீமையால் 2
தீமையும் 2
தீமையே 2
தீமொழி 1
தீய்க்கும் 1
தீய்ந்து 1
தீய 25
தீயகம் 1
தீயசெய்கையுளானை 1
தீயதாய் 1
தீயது 2
தீயர் 9
தீயர்-தமை 1
தீயர்-பால் 1
தீயராய் 1
தீயரும் 1
தீயவர் 3
தீயவர்-பால் 1
தீயவர்க்கா 1
தீயவர்க்கு 1
தீயவனேல் 1
தீயவும் 1
தீயவே 2
தீயவை 10
தீயன் 6
தீயன்-பால் 1
தீயன 2
தீயனவே 3
தீயனாய் 1
தீயனேல் 1
தீயார் 4
தீயார்க்கும் 1
தீயாரை 1
தீயால் 1
தீயாள் 2
தீயிட்டு 1
தீயிடல் 1
தீயிடை 1
தீயில் 2
தீயினால் 1
தீயினிடை 1
தீயினில் 1
தீயினும் 3
தீயினை 1
தீயும் 1
தீயே 1
தீயேன் 1
தீயை 2
தீயொழுக்கம் 1
தீயோர்க்கு 2
தீர் 10
தீர்க்காது 1
தீர்க்கிற்பார் 1
தீர்க்கும் 10
தீர்த்த 4
தீர்த்தத்து 1
தீர்த்ததே 1
தீர்த்தம் 2
தீர்த்தல் 1
தீர்த்தார் 1
தீர்த்தான் 4
தீர்த்திலள் 1
தீர்த்து 2
தீர்ந்த 9
தீர்ந்ததாம் 1
தீர்ந்தது 1
தீர்ந்தன்று 2
தீர்ந்தனன் 1
தீர்ந்தார் 3
தீர்ந்தார்க்கு 1
தீர்ந்தாரின் 1
தீர்ந்தாரும் 2
தீர்ந்தால் 1
தீர்ந்தான் 4
தீர்ந்து 9
தீர்ப்பதுவே 1
தீர்ப்பர் 2
தீர்ப்பார் 1
தீர்ப்பான் 1
தீர்ப்போர் 1
தீர்ப்போன் 1
தீர்வர் 1
தீர்வாம் 1
தீர்வு 3
தீர்வு_இல் 1
தீர்வும் 1
தீர 5
தீரர்க்கு 1
தீரவே 1
தீரன் 2
தீரனே 9
தீரா 11
தீராமை 1
தீரும் 2
தீருமே 1
தீவரை 1
தீவினை 9
தீவினைக்கு 1
தீவினைகள் 2
தீவினையார் 1
தீவினையை 1
தீவைப்ப 1
தீனர் 3
தீனர்க்கு 1
தீனர்க்கும் 1
தீனராய் 1
தீனி 2

தீ (44)

தீ ஓம்பி வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே – நீதிநெறிவிளக்கம்:1 96/3
மூப்பொடு தீ பிணி முன் உறீஇ பின் வந்து – அறநெறிச்சாரம்:1 22/1
தெரிவு_இல் இளமையும் தீ பிணியும் மூப்பும் – அறநெறிச்சாரம்:1 116/1
தீ கருமம் சோரவிடல் – அறநெறிச்சாரம்:1 123/4
குடி கெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவேல் செய்தல் – அறநெறிச்சாரம்:1 141/3
பரவிய புகையால் செம் தீ உளது என பகர்வார் சுற்றும் – நீதிநூல்:2 9/2
தேவனே இலனேல் மோக்கம் தீ நரகு இல்லை வேதம் – நீதிநூல்:2 16/1
சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால் – நீதிநூல்:3 18/2
போதநாயகனை உன்னா புந்தியே வெம் தீ ஒப்பாம் – நீதிநூல்:3 33/1
இடி என கொலை தொழில் இயற்றும் தீ வெடி – நீதிநூல்:34 354/3
பசி மிகுந்த பின் நெல்லை விதைப்பது போல் வீட்டில் தீ பற்றிக்கொண்டு – நீதிநூல்:43 449/1
தீ மனம் உடையோர் துன்பம்செய்வர் மானிடர்க்கும் அம்மா – நீதிநூல்:45 517/4
இளி கொள் தீ நெறி ஈன குரவரே – நீதிநூல்:47 584/4
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/3
பிள்ளையார் வைப்பினில் தீ பெய்வித்த மீனவன் தீ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/1
பிள்ளையார் வைப்பினில் தீ பெய்வித்த மீனவன் தீ
துள்ளு வெப்பு நோய் உழந்தான் சோமேசா எள்ளி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 32/1,2
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/3
குளித்தானை தீ துரீஇ அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/4
கற்பு உடை காம தீ ஆர் கன்னியை விலக்கினோரும் – விவேகசிந்தாமணி:1 114/2
பன் முகம் சேர் தீ முன் பயில் சீதம் இல்லையாம் – நீதிவெண்பா:1 48/3
பாலின் நீர் தீ அணுக பால் வெகுண்டு தீ புகுந்து – நீதிவெண்பா:1 77/1
பாலின் நீர் தீ அணுக பால் வெகுண்டு தீ புகுந்து – நீதிவெண்பா:1 77/1
செம் தீயினும் கொடிய தீ கண்டாய் செம் தீயை – நீதிவெண்பா:1 78/2
தீ உரு ஆர் கீழ்கட்கு தேகம் எலாம் வெம் காளம் – நன்மதிவெண்பா:1 54/3
ஏவருடனும் இகல்கொள்ளேல் தீ விடம் கால் – நன்மதிவெண்பா:1 87/2
சேதகம் ஆர் மண் உழவு செய்யேல் தீ வற்கடத்தில் – நன்மதிவெண்பா:1 95/1
தீ உறு தீ சிந்தை ஆம் – அருங்கலச்செப்பு:1 91/2
தீ உறு தீ சிந்தை ஆம் – அருங்கலச்செப்பு:1 91/2
தீ கருவி நஞ்சு கயிறு தடி நார்கள் – அருங்கலச்செப்பு:1 94/1
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 79/3
தீ கண்டு விலகி நில் – இளையார்-ஆத்திசூடி:1 43/1
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/3
சொல்லவில்லை என்னே ஓர் தீ சொல்லை ஏசு தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/1
தீ உழி உய்த்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/4
தீ பிணி தீண்டல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/4
பண்டு கவந்தன் பழி உடம்பும் தீ வாழ்வும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/1
செல்லா தீ வாழ்க்கையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:33 330/4
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/3
தீ எச்சம் போல தெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/4
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/3
குளித்தானை தீ துரீஇ அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/4
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/3
தீ யாண்டு பெற்றாள் இவள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1104/4
விடின் சுடல் ஆற்றுமோ தீ – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/4

மேல்

தீ-நின்று (1)

அன்று அறுவர் தீ-நின்று அகன்றார் மடி கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/1

மேல்

தீக்க (1)

அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீற – நீதிநூல்:38 379/2

மேல்

தீக்கருமம் (1)

கெடுக்கப்படுவது தீக்கருமம் நாளும் – அறநெறிச்சாரம்:1 189/1

மேல்

தீக்காட்சியால் (1)

தேவனும் நாய் ஆகும் தீக்காட்சியால் நாயும் – அருங்கலச்செப்பு:1 38/1

மேல்

தீக்கு (1)

பல வனம் எரியும் போது பற்று தீக்கு உறவாம் காற்று – விவேகசிந்தாமணி:1 79/3

மேல்

தீங்கினர்-தம் (1)

தீங்கினர்-தம் கண்ணில் தெரியாத தூரத்து – நீதிவெண்பா:1 20/3

மேல்

தீங்கு (9)

தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின் – நீதிநூல்:32 340/1
தீங்கு குறித்தமையான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/4
தேசிகனா கொண்ட சுரர் இறைக்கு தீங்கு இழைத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/1
திண் திறல் மன்னர் செய்த தீங்கு மந்திரியை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/2
சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன் – நன்மதிவெண்பா:1 39/2
ஓங்கு அதிகாரத்து வரின் ஊர் குடிகள் தீங்கு இயற்றும் – நன்மதிவெண்பா:1 85/2
திண் தோள் பரிட்சித்து தீங்கு செய்தும் ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/1
தீங்கு குறித்தமையான் – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/4
கன்றி முன் சாணூரன் கண்ணனுக்கு தீங்கு செய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:90 894/1

மேல்

தீங்குகளால் (1)

தீங்குகளால் சுடும் மனைவி தன் வாழ்வை கெடுத்தலால் செழும் கண்டத்தில் – நீதிநூல்:12 118/2

மேல்

தீங்கும் (1)

மாலான் முதல் இகழ்ந்த வானவர் தீங்கும் பொறுத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/1

மேல்

தீங்குற்று (1)

ஏளனம் பேசி தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும் – விவேகசிந்தாமணி:1 63/3

மேல்

தீச்சுடர் (1)

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நல் நீர் சொரிந்து வளர்த்து அற்றால் தன்னை – நீதிநெறிவிளக்கம்:1 18/1,2

மேல்

தீச்செயல் (1)

கயப்புறும் தீச்செயல் கற்கையால் அவர் – நீதிநூல்:9 84/3

மேல்

தீச்சொல் (1)

ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/3

மேல்

தீட்ட (1)

சேண் நிகரும் கல்வி இலா மாதர் அகம் படித்து உணர தீட்ட பாட – நீதிநூல்:47 594/3

மேல்

தீட்டிய (1)

அத்தம் ஆர் அத்தமும் அழித்தல் தீட்டிய
சித்திர மாது எழில் நம்பி சேர்ந்த தன் – நீதிநூல்:20 237/2,3

மேல்

தீட்டின் (1)

நாய் வாலை அளவெடுத்து பெருக்கி தீட்டின் நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ – விவேகசிந்தாமணி:1 14/1

மேல்

தீட்டு (1)

மண் புற சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே – நீதிநூல்:29 320/4

மேல்

தீட்டும் (1)

பகை முகத்த ஒண் வேலான் பார்வையில் தீட்டும்
நகை முகத்த நன்கு மதிப்பு – நீதிநெறிவிளக்கம்:1 38/3,4

மேல்

தீட்டுவோன் (1)

தீட்டுவோன் இன்றி ஆமோ சித்திரம் திகழ் பொன் பாவை – நீதிநூல்:2 8/1

மேல்

தீண்ட (3)

தாய் தீண்ட தூசு உடுத்து சார் எனும் சொல் தீது என்றாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/1
விரைந்து விடம் தீண்ட உயிர்விடும் வேடன் கணையால் வல்லூறும் வீழ்ந்தது – விவேகசிந்தாமணி:1 105/3
கொன்ற மீன் தீண்ட குமரேசா நன்று அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/2

மேல்

தீண்டல் (2)

மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/3
தீ பிணி தீண்டல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/4

மேல்

தீண்டலான் (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/3

மேல்

தீண்டா (3)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/3
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – முதுமொழிமேல்வைப்பு:1 18/3
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/3

மேல்

தீண்டாதேனும் (1)

பாந்தள் தீண்டாதேனும் பல் புகர் மா வாய்ந்த கடாம் – நன்மதிவெண்பா:1 31/2

மேல்

தீண்டி (1)

அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி
மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள் – நீதிநூல்:12 123/2,3

மேல்

தீண்டிய (1)

தீண்டிய கிரணமதால் தீண்டுதி எனை வெயிலே – நீதிநூல்:12 155/2

மேல்

தீண்டில் (1)

சீலம் குலம் அடியாள் தீண்டில் கெடும் கணிகை – நீதிவெண்பா:1 84/1

மேல்

தீண்டுதி (1)

தீண்டிய கிரணமதால் தீண்டுதி எனை வெயிலே – நீதிநூல்:12 155/2

மேல்

தீத்தெய்வம் (1)

மிக்க பாசண்டமே தீத்தெய்வம் மெச்சி – அறநெறிச்சாரம்:1 60/2

மேல்

தீத்தொழிற்கு (1)

பரக்கும் பழியை பாவத்தை பயக்கும் அ தீத்தொழிற்கு இசைவோர்க்கு – நீதிநூல்:19 236/3

மேல்

தீதற்றோர் (1)

சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் துன்று சுவை – நன்னெறி:1 1/2

மேல்

தீதாக (1)

தாதை சிலை ஒடிப்ப தான் மொழிந்தான் தீதாக
ஈது அடையார் செய்யார் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/1,2

மேல்

தீதாம் (2)

கோது செய்யார் என்னே குமரேசா தீதாம்
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி – திருக்குறள்குமரேசவெண்பா:86 852/2,3
கோது என்று நீத்தான் குமரேசா தீதாம்
பொதுநலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/2,3

மேல்

தீதாமே (1)

செய்யோன் கிரணம் மிக தீதாமே வெய்ய கதிர் – நீதிவெண்பா:1 93/2

மேல்

தீதால் (2)

கூடிய மான் கொன்ற கொடும் தீதால் பாண்டு மன்னன் – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/1
பண்டு உயர்ந்த காளமுனி பாண்டவர்-பால் செய் தீதால்
கொண்டான் ஏன் கேடு குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/1,2

மேல்

தீதிலனாய் (1)

தீதிலனாய் ஈட்டி முன் செல்வம் மிகு சாயலன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/1

மேல்

தீதிலான் (1)

திண்ணியன் தண்டியான்-கொல் தீதிலான் தீதை சீறாது – நீதிநூல்:47 555/3

மேல்

தீது (65)

இணங்கி இருப்பதுவும் தீது – மூதுரை-வாக்குண்டாம்:1 9/4
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும் – நல்வழி:1 38/1
தீது என்று நீப்பு அரிதால் – நீதிநெறிவிளக்கம்:1 7/4
ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால் அல்லன போல் – நீதிநெறிவிளக்கம்:1 48/3
கற்றாங்கு அறிந்து அடங்கி தீது ஒரீஇ நன்று ஆற்றி – நீதிநெறிவிளக்கம்:1 100/1
தீது இகந்து அற செய்கை முயலுவான் – நீதிநூல்:0 2/2
தீது நன்று அறிகிலா சேயர் என் செய்வார் – நீதிநூல்:9 87/1
தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின் – நீதிநூல்:32 340/1
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2
பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு – நீதிநூல்:32 343/3
நன்றினை தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும் – நீதிநூல்:38 376/3
சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது – நீதிநூல்:39 393/1
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க – நீதிநூல்:46 523/3
எண்ணிய ஈந்தோன் அ தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும் – நீதிநூல்:47 555/2
தீது அற தன்மையும் தெய்வ நேயமும் – நீதிநூல்:47 593/1
தீது_இல் ஒரு காமம் செய்பவே ஓது கலை – நன்னெறி:1 6/2
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/3
சேக்கிழார் சிந்தாமணி பயிற்சி தீது எனவே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 20/1
தாய் தீண்ட தூசு உடுத்து சார் எனும் சொல் தீது என்றாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/1
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/2
தீது பொறுத்து சிறப்புற்றார் சோதி – ஆத்திசூடிவெண்பா:1 2/2
தீரன் பகாசூரன் தீது அடக்கும் காரணம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 6/2
தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவை கொள்ள – ஆத்திசூடிவெண்பா:1 15/1
தீது வரும் என்றே தெரிந்து – நீதிவெண்பா:1 41/4
திங்கள் இலகா இரவும் தீது – நன்மதிவெண்பா:1 53/4
தேடலில் சொல் நன்மதியே தீது – நன்மதிவெண்பா:1 102/4
பேதம் அற கூடி பிரிவது போல் தீது இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 66/2
தீது இன்றி வந்த பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 118/4
கிழிந்தாடை தீது – இளையார்-ஆத்திசூடி:1 22/1
கோதுற்றார் மற்றோர் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/2
பண்டு ஏன் சகரர் பகீரதனால் தீது அகன்று – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/1
தீது அகல் இன்சொல்லால் திரிசடை ஏன் இன்பம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/1
தீது செய்தோர்-தம்முள்ளே தென் இலங்கைமன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/1
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/4
நட்டார்-கண் செய்தலின் தீது – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/4
செற்ற பகைவனுக்கும் தீது செய்யாது ஏன் விடுத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/1
உற்ற வறுமை ஒழிக்க ஒரு தீது செய்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:21 205/1
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/3
கூறினர் தீது என்றேன் குமரேசா ஆறி – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/2
கொண்டனன் தீது என்று ஏன் குமரேசா மிண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/2
கோது அடையார் என்னே குமரேசா தீது உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/2
கோது_இல் அறம் கொண்டான் குமரேசா தீது அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/2
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/3
தீது பகை ஏதும் இலா சித்தராமன் சினத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/1
சாதுவன் முன் நன்று ஆய்ந்தும் தாழ்ந்தான் பின் தீது அடைந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/1
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/3
கொண்டார் முன் தீது ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:54 531/2
கோது இன்றி நின்றான் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/2
கோது அற முன் கொன்றான் குமரேசா தீது அறவே – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/2
கோது அற முன் நின்ற குமரேசா தீது அறு சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/2
கோதுடைமையான் முன் குமரேசா தீது இலா – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/2
தீது மிகு தாரகன் முன் தேர்ந்து சிறை செய்யாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 569/1
தீது செய்து கண்டகன் முன் சேர்த்து வந்தான் பின்பு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/1
தாழ்ச்சியுள் தங்குதல் தீது – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/4
கோது ஒழிய சொன்னாள் குமரேசா தீது அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:69 688/2
தீது பகை ஏதும் இன்றி சேரன் உயர் நாடு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/1
தீது இன்றி வந்த பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/4
கோது மிக உற்றான் குமரேசா தீது மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/2
கூர்ந்து கண்டார் தீது ஏன் குமரேசா நேர்ந்து நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:83 826/2
கொள்ள நின்றான் தீது ஏன் குமரேசா உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/2
தீது ஆர் துமிரன் ஏன் தேறாமல் அங்கதன்-பால் – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/1
சூதாடல் தீது என்று ஏன் சொன்னான் சுநீதன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/1
கோது அடைந்து நொந்தார் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/2
கோது அறு கோன் கொண்டான் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/2
கோது உழந்தாள் என்னே குமரேசா தீது இலா – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/2

மேல்

தீது_இல் (8)

சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது – நீதிநூல்:39 393/1
தீது_இல் ஆங்கிலேய மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க – நீதிநூல்:46 523/3
தீது_இல் ஒரு காமம் செய்பவே ஓது கலை – நன்னெறி:1 6/2
தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவை கொள்ள – ஆத்திசூடிவெண்பா:1 15/1
கோதுற்றார் மற்றோர் குமரேசா தீது_இல்
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/2,3
கோது இன்றி நின்றான் குமரேசா தீது_இல்
இழுக்காமை யார்-மாட்டும் என்றும் வழுக்காமை – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/2,3
கோது அடைந்து நொந்தார் குமரேசா தீது_இல்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/2,3
கோது அறு கோன் கொண்டான் குமரேசா தீது_இல்
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/2,3

மேல்

தீதுகள் (1)

தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ – நீதிநூல்:21 258/4

மேல்

தீதுற்ற (1)

கோது அற்று ஏன் துய்த்தார் குமரேசா தீதுற்ற
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 94/2,3

மேல்

தீதுறுங்கால் (1)

தீதுறுங்கால் செம்பொன் திடர் உறினும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 84/3

மேல்

தீதே (9)

தீயாரை காண்பதுவும் தீதே திருவற்ற – மூதுரை-வாக்குண்டாம்:1 9/1
தீயார் சொல் கேட்பதுவும் தீதே தீயார் – மூதுரை-வாக்குண்டாம்:1 9/2
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு – மூதுரை-வாக்குண்டாம்:1 9/3
நலத்தகையார் நல்வினையும் தீதே புல பகையை – நீதிநெறிவிளக்கம்:1 17/2
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 29/3
மாதர் இன்பம் தீதே மனுநெறி பார் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 93/2
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழீஇ பொய்த்து நகை – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/3,4
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/3
இறந்த வெகுளியின் தீதே சிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:54 531/3

மேல்

தீதேல் (1)

தின்மை புரியார்களும் வழங்கும் உரை தீதேல்
புன்மையுறு தீயர் என எள்ளும் உயர் பூவே – நீதிநூல்:33 347/3,4

மேல்

தீதை (3)

நன்றினை தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும் – நீதிநூல்:38 376/3
திண்ணியன் தண்டியான்-கொல் தீதிலான் தீதை சீறாது – நீதிநூல்:47 555/3
கண்டவுடன் தன் குற்றம் காது அறுக்கும் தீதை வில்லி – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/1

மேல்

தீதொழிய (1)

தீதொழிய நன்மை செயல் – நல்வழி:1 1/4

மேல்

தீந்து (1)

அடுப்பு ஏற்றி ஆமை தீந்து அற்று – அறநெறிச்சாரம்:1 224/4

மேல்

தீப்பால (1)

தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/3

மேல்

தீப்புகுதல் (1)

வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறாடல் இன்ன – அருங்கலச்செப்பு:1 30/1

மேல்

தீப்பெண்டிர் (1)

நிலைமை_இல் தீப்பெண்டிர் சேர்தல் கலன் அணிந்து – அறநெறிச்சாரம்:1 162/2

மேல்

தீபங்கள் (1)

பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள்
சீத நீர் கடல் விருட்சாதி கணம் பூம் பொழில் உலகின் செல்வம் எல்லாம் – நீதிநூல்:40 411/1,2

மேல்

தீபத்திடத்தே (1)

தீபத்திடத்தே சிறப்பு – நீதிவெண்பா:1 40/4

மேல்

தீபத்தை (1)

வரும் பிணிக்கு ஒரு மருந்தை மனத்தின்-கண் ஒளிர் தீபத்தை
விரும்புவோர் மனோகரத்தை மேவுறார் கோ உறாரே – நீதிநூல்:47 565/3,4

மேல்

தீபம் (5)

தலைகீழுற செய்யினும் தீபம் விண்-தன்னை நோக்கும் – நீதிநூல்:6 60/1
வெயிலின் முன் இடு தீபம் மின்மினியாம் நெஞ்சே – நீதிநூல்:28 315/4
தேசது மிகுத்து ஒளிர் தீபம் போலவும் – நீதிநூல்:30 327/3
எண்ணெய் இரப்பு அஞ்சி உடலே வருத்தி தீபம் இட்டார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/1
தீபம் எனும் புன்னைவன தீரனே ஆனது கண்டே – ஆத்திசூடிவெண்பா:1 84/3

மேல்

தீம் (8)

இன்மொழியின் வாய்மையே தீம் காயா வண்மை – நீதிநெறிவிளக்கம்:1 36/2
வியன் சினை வளைவு நோக்கார் விளைந்த தீம் கனி பறிப்போர் – நீதிநூல்:1 4/2
திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாச தீம்
கனியையும் தள்ளுவர் கயவர்-தம்மை சேர் – நீதிநூல்:31 331/2,3
காய் முற்றின் தின் தீம் கனி ஆம் இளம் தளிர் நாள் – நன்னெறி:1 38/3
முற்றாத காய் துவர்ப்பு மொய்க்கும் அன்றி தீம் சுவையை – நன்மதிவெண்பா:1 32/3
இன்மொழியால் தீம் பால் எவரும் அருந்தார் சினத்து – நன்மதிவெண்பா:1 63/1
செறி பொருள் சேர் அம் பனுவல் தீம் சுவை ஆர் கீதம் – நன்மதிவெண்பா:1 65/1

மேல்

தீமை (13)

தினையனைத்தும் தீமை இன்றாகி நினையுங்கால் – அறநெறிச்சாரம்:1 8/2
நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே – அறநெறிச்சாரம்:1 73/3
விட்ட மின்னோடு ஆங்கு எய்தும் வெடி என தீமை செய்யும் – நீதிநூல்:13 173/1
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே பொன்_தொடீஇ – நன்னெறி:1 39/2
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/3
தேறும் குரு மனை-பால் தீமை செய்தான் சித்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/1
தீமை புரிந்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/4
நன்று செய்தான் தீமை நயவான் ஓர் பெண் நயந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/1
தீமை இலாத சொலல் – திருக்குறள்குமரேசவெண்பா:30 291/4
கண்டு பலன் காணாமல் காகன் ஏன் தீமை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/1
கள் அருந்தல் தீமை என காட்டியும் ஏன் காதன் உள்கொள்ளாது – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/1
என்றும் கொலை தீமை எண்ணாமல் மானர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/1
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/3,4

மேல்

தீமைக்கு (2)

ஒட்டலன் செய் தீமைக்கு ஒறாது நமர் என்று உரைத்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/1
இறந்ததன் தீமைக்கு இழித்தும் பழித்தும் – அருங்கலச்செப்பு:1 113/1

மேல்

தீமைகள் (1)

சில்லோர் யாவும் வவ்வி ஒளிக்குபு தீமைகள் செய்தலினால் – நீதிநூல்:39 396/2

மேல்

தீமைத்தே (1)

பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/3,4

மேல்

தீமையால் (2)

கலம் தீமையால் திரிந்து அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/4
கலம் தீமையால் திரிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/4

மேல்

தீமையும் (2)

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி – நீதிநெறிவிளக்கம்:1 52/2
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/3

மேல்

தீமையே (2)

இயவரை சேர்தல் போல் இல்லை தீமையே – நீதிநூல்:31 335/4
தீமையே விளைத்திடும் பிறர்க்கு செய்கின்ற – நீதிநூல்:39 404/2

மேல்

தீமொழி (1)

சிந்தனை மற்று ஓர் பொருளினில் செலுத்தான் தீமொழி கனவிலும் புகலான் – நீதிநூல்:4 37/3

மேல்

தீய்க்கும் (1)

மட்டு அலரும் கற்பகத்தை வன்னியில் தீய்க்கும் கரிக்கா – நன்மதிவெண்பா:1 58/3

மேல்

தீய்ந்து (1)

ஒளிர் கரத்தால் தீய்ந்து இறுதல் ஒப்ப தளர்வு அணுகி – நன்மதிவெண்பா:1 28/2

மேல்

தீய (25)

தெய்வம் உளது என்பார் தீய செய புகின் – நீதிநெறிவிளக்கம்:1 73/1
தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும் – நீதிநெறிவிளக்கம்:1 74/1
தீய செயினும் சில – நீதிநெறிவிளக்கம்:1 75/4
தீய விலங்கின் சிலர் – நீதிநெறிவிளக்கம்:1 79/4
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம் – நீதிநூல்:21 258/3
தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ – நீதிநூல்:26 302/2
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/3
தீய விலங்கின செய்கை நம்-கண்ணே செய தொடுத்தார் திருவை ஒப்பாள் – நீதிநூல்:44 511/3
தீயவை தீய பயத்தலால் தீயவை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/3
இல் அதனின் தீய பிற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/4
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 14/3,4
தீய என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 6/4
நல் தொழிலிலும் தீய நாடுதல் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 38/3
மாயம்செய் தட்டானை வாணிபனை தீய
நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல் – நன்மதிவெண்பா:1 62/2,3
தீய பயக்கும் என செப்பு – நன்மதிவெண்பா:1 64/4
தீய குழு சேரேல் தெளிந்து – நன்மதிவெண்பா:1 72/4
சேர உன்னேல் நன்மதியே தீய விடக்காம் புரவி – நன்மதிவெண்பா:1 75/3
காதல் மிகுதி சொல கண்டோமே தீய செழும் – முதுமொழிமேல்வைப்பு:1 166/2
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/3,4
திண் தோள் உயர் வீமன் தீய அழுக்காறு நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/1
தீயவை தீய பயத்தலான் தீயவை – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/3
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/3,4
இல் அதனின் தீய பிற – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/4
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/3,4
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/3

மேல்

தீயகம் (1)

தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே – நீதிநூல்:47 576/4

மேல்

தீயசெய்கையுளானை (1)

தீயசெய்கையுளானை தினம் சிறு – நீதிநூல்:7 70/3

மேல்

தீயதாய் (1)

சீர் இலா கண்கள்-தொறும் தீயதாய் பாரில் – நன்மதிவெண்பா:1 17/2

மேல்

தீயது (2)

படியின் மக்களையும் உண்பர் பழக்கம் போல் தீயது உண்டோ – நீதிநூல்:45 516/4
அஞ்சாத பாண்டியனும் அஞ்சினன் ஏன் தீயது என்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/1

மேல்

தீயர் (9)

சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர் தன்மையை சாற்றுமாறு எவனோ – நீதிநூல்:5 47/4
சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர் தன்மையை சாற்றுமாறு எவனோ – நீதிநூல்:5 47/4
அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும் – நீதிநூல்:5 48/2
இழுதை சொல்லி மறைக்கலாம் எனும் திடத்தால் பாதகங்கள் எல்லாம் தீயர்
பொழுதெலாம் புரிதலால் குற்றங்கள் யாவுக்கும் பொய் பிதாவாம் – நீதிநூல்:16 196/1,2
சீரியர் என்னலும் தீயர் என்னலும் – நீதிநூல்:31 334/3
சாது நீ அவர் தீயர் என்பதற்கு கரி என்ன சக்கு இலாதார் – நீதிநூல்:32 340/2
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2
புன்மையுறு தீயர் என எள்ளும் உயர் பூவே – நீதிநூல்:33 347/4
தீயர் தவம் குற்றமதை தேரான் அரசாட்சி – நன்மதிவெண்பா:1 6/3

மேல்

தீயர்-தமை (1)

தீயர்-தமை சுடும் தழலை சீலர்-தமக்கு ஒரு நிழலை – நீதிநூல்:47 577/1

மேல்

தீயர்-பால் (1)

அலை கடல் உலகியல் அழிக்கும் தீயர்-பால்
மலை என பாவமும் பழியும் மண்டுமே – நீதிநூல்:21 247/3,4

மேல்

தீயராய் (1)

தீயராய் வறியராய் சிலர் வருந்தலும் – நீதிநூல்:9 93/1

மேல்

தீயரும் (1)

தரும நற்குணத்தை தீயரும் புகழ்வார் சழக்கினை சழக்கரும் இகழ்வார் – நீதிநூல்:43 462/3

மேல்

தீயவர் (3)

தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே – நீதிநூல்:4 39/4
தீயவர்க்கு தூயவரும் தீயவர் போல் தோன்றுவரே – நீதிநூல்:23 270/4
நல்லவர் தீயவர் என்னாது எவரையுமே புவி தாங்கும் நனி நீர் நல்கும் – நீதிநூல்:32 341/1

மேல்

தீயவர்-பால் (1)

தீயவர்-பால் கல்வி சிறந்தாலும் மற்று அவரை – நீதிவெண்பா:1 71/1

மேல்

தீயவர்க்கா (1)

இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால் – நீதிநூல்:32 341/3

மேல்

தீயவர்க்கு (1)

தீயவர்க்கு தூயவரும் தீயவர் போல் தோன்றுவரே – நீதிநூல்:23 270/4

மேல்

தீயவனேல் (1)

தலைவன் தீயவனேல் அன்னான்-தனை விடுத்து ஏகல் நன்றாம் – நீதிநூல்:15 191/1

மேல்

தீயவும் (1)

நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/3,4

மேல்

தீயவே (2)

அனைத்தெவையும் தீயவே ஆகும் எனைத்துணையும் – நீதிநெறிவிளக்கம்:1 57/2
தீயவே செய்யினும் நல்லவா காண்பவே – நீதிநெறிவிளக்கம்:1 57/3

மேல்

தீயவை (10)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/3
தீயவை தீய பயத்தலால் தீயவை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/3
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/3,4
தீயவை எல்லாம் இனி செய்யேன் என்று அடங்கி – அருங்கலச்செப்பு:1 114/1
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – முதுமொழிமேல்வைப்பு:1 18/3
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/3
தீயவை தீய பயத்தலான் தீயவை – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/3
தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/3,4
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 205/3
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/3

மேல்

தீயன் (6)

செயிருற நீதியை சிதைத்து ஓர் தீயன் சாண் – நீதிநூல்:21 248/2
தீனர்க்கு வழங்காது உறை தீயன் பசியுளரால் – நீதிநூல்:24 283/3
இணங்கி இவ் ஒலிகள் எல்லாம் ஏற்கின்ற செவி ஓர் தீயன்
குணம் கெட கூறும் வன்சொல் கொண்டிடில் குறை என் நெஞ்சே – நீதிநூல்:38 378/3,4
பெருமையோன் தீயன் என அறியா முன் பேசிடார் தீயனேல் பெயர்வார் – நீதிநூல்:43 462/2
கண்டார் அறம் புகன்றும் கண்ணில்லான் தீயன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 185/1
சார்ந்து நின்ற மாயாசனகனை ஏன் தீயன் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/1

மேல்

தீயன்-பால் (1)

சினமொடு வாதித்தோர் தீயன்-பால் செலின் – நீதிநூல்:21 251/2

மேல்

தீயன (2)

தீயன தீயனவே வேறல்ல தீயன – நீதிநெறிவிளக்கம்:1 74/2
தீயன தீயனவே வேறல்ல தீயன
நல்லன ஆகாவாம் நா இன்புற நக்கி – நீதிநெறிவிளக்கம்:1 74/2,3

மேல்

தீயனவே (3)

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை – மூதுரை-வாக்குண்டாம்:1 30/1
தீயன தீயனவே வேறல்ல தீயன – நீதிநெறிவிளக்கம்:1 74/2
தீயனவே சொல்லும் சிசுபாலன் முன்பு கண்ணன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 14/1

மேல்

தீயனாய் (1)

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு – நல்வழி:1 25/3,4

மேல்

தீயனேல் (1)

பெருமையோன் தீயன் என அறியா முன் பேசிடார் தீயனேல் பெயர்வார் – நீதிநூல்:43 462/2

மேல்

தீயார் (4)

ஈயார் தேட்டை தீயார் கொள்வர் – கொன்றைவேந்தன்:1 4/1
தீயார் சொல் கேட்பதுவும் தீதே தீயார் – மூதுரை-வாக்குண்டாம்:1 9/2
தீயார் சொல் கேட்பதுவும் தீதே தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு – மூதுரை-வாக்குண்டாம்:1 9/2,3
திருந்தார் பொருள் வரவும் தீயார் தொடர்பும் – அருங்கலச்செப்பு:1 118/1

மேல்

தீயார்க்கும் (1)

ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன் – அறநெறிச்சாரம்:1 109/1

மேல்

தீயாரை (1)

தீயாரை காண்பதுவும் தீதே திருவற்ற – மூதுரை-வாக்குண்டாம்:1 9/1

மேல்

தீயால் (1)

தீயால் வளருமோ செப்பு – நீதிவெண்பா:1 57/4

மேல்

தீயாள் (2)

திசை முகமும் நோக்கலால் திசைமுகன் ஆனோம் வாயில் தீயாள் இட்ட – நீதிநூல்:44 486/2
மனை தீயாள் ஆதல் வறுமையுறல் மூப்பில் – நன்மதிவெண்பா:1 27/3

மேல்

தீயிட்டு (1)

மேவலர் தீயிட்டு அன்னான் விபவம் எல்லாம் சிதைத்து – நீதிநூல்:2 16/3

மேல்

தீயிடல் (1)

மனையினில் தீயிடல் மண்ணில் தற்கொலல் – நீதிநூல்:18 216/3

மேல்

தீயிடை (1)

தீயிடை மூழ்கினோன் சிங்கி உண்டவன் – நீதிநூல்:18 222/1

மேல்

தீயில் (2)

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை – விவேகசிந்தாமணி:1 63/1
நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/3

மேல்

தீயினால் (1)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/3

மேல்

தீயினிடை (1)

இனையவரை சேர்தல் பெரும் தீயினிடை மூழ்குதலை ஏய்க்கும் மாதோ – நீதிநூல்:44 506/4

மேல்

தீயினில் (1)

முழுதும் தீயினில் சுடச்சுட ஒளிருமால் மொழியும் – நீதிநூல்:42 440/2

மேல்

தீயினும் (3)

தீயினும் அஞ்சப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/4
செம் தீயினும் கொடிய தீ கண்டாய் செம் தீயை – நீதிவெண்பா:1 78/2
தீயினும் அஞ்சப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/4

மேல்

தீயினை (1)

தலையினை சொறிதலும் தகிக்கும் தீயினை
எலியினுக்கு அஞ்சி இல் இடலும் ஏய்க்குமே – நீதிநூல்:13 163/3,4

மேல்

தீயும் (1)

ஏனோ வெம் தீயும் இனிது என்றாள் மான வதி – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/1

மேல்

தீயே (1)

கட்டென சொல்லியக்கால் கல் பிளப்பில் தீயே போல் – அறநெறிச்சாரம்:1 206/1

மேல்

தீயேன் (1)

ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன்
வெறுப்பார்க்கும் நான் மடங்கேன் என்பர் ஒறுத்தியேல் – அறநெறிச்சாரம்:1 109/1,2

மேல்

தீயை (2)

தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அ தீயை
வேயும் பல் பொருட்குள் வைத்து வேட்டவாறு அளிப்போன் யாரோ – நீதிநூல்:47 544/3,4
செம் தீயினும் கொடிய தீ கண்டாய் செம் தீயை
நீங்கில் சுடாதே நெடும் தூரம் போனாலும் – நீதிவெண்பா:1 78/2,3

மேல்

தீயொழுக்கம் (1)

நோய் தீயொழுக்கம் – இளையார்-ஆத்திசூடி:1 61/1

மேல்

தீயோர்க்கு (2)

நன்று அறியா தீயோர்க்கு இடங்கொடுத்த நல்லோர்க்கும் – நீதிவெண்பா:1 74/1
தீயோர்க்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 45/1

மேல்

தீர் (10)

கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார் – நீதிநூல்:3 26/4
பழி தீர் கலை யாவும் உணர்ந்தும் பலர்க்கு உரைத்தும் – நீதிநூல்:7 68/1
வினைப்பகை தீர் பெரியர் இல்வாழ்வினில் கலந்துநின்றாலும் வேதநாதன்-தனை – நீதிநூல்:12 121/1
பதவி தீர் மிடியர்க்கு பரிவின் தாம் செயும் – நீதிநூல்:39 403/3
கனம்கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உணராய் உயிர் தீர் காயம் சேரும் – நீதிநூல்:43 452/2
இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே – நீதிநூல்:43 462/4
சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம் – நீதிநூல்:44 474/2
நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும் – நீதிநூல்:44 484/3
பரன் அருள் தீர் மாமறையோன் பண்பின் நுவலும் – முதுமொழிமேல்வைப்பு:1 159/2
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/3

மேல்

தீர்க்காது (1)

கருவி விவாதம் தீர்க்காது காலங்கழித்தல் சோம்பலினால் – நீதிநூல்:21 257/2

மேல்

தீர்க்கிற்பார் (1)

வெம் குறை தீர்க்கிற்பார் விழுமியோர் திங்கள் – நன்னெறி:1 10/2

மேல்

தீர்க்கும் (10)

மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அ மருந்து போல்வாரும் உண்டு – மூதுரை-வாக்குண்டாம்:1 20/3,4
வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும் மெய் பொடிப்ப – நீதிநெறிவிளக்கம்:1 58/3
மெய்வாதியர்-பால் கொண்டு அவர்க்கு விவாதம் தீர்க்கும் நிலை எற்றேல் – நீதிநூல்:21 256/2
சிந்தாகுலம் தீர்க்கும் செல்வமே நல் வளமே – நீதிநூல்:47 573/1
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/4
தீரா வினை தீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும் – அருங்கலச்செப்பு:1 180/1
தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/2
எவ்வநோய் தீர்க்கும் மருந்து – முதுமொழிமேல்வைப்பு:1 178/4
எவ்வநோய் தீர்க்கும் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:125 1241/4
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1275/4

மேல்

தீர்த்த (4)

வேங்கை வரி புலி நோய் தீர்த்த விடகாரி – மூதுரை-வாக்குண்டாம்:1 15/1
மகா நோவு-தனை தீர்த்த மருத்துவன்-தன் கூலி – உலகநீதி:1 11/6
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய் விந்தமலை – நன்னெறி:1 37/3
வேங்கை வரி புலிக்கு தீர்த்த விடதாரி என – ஆத்திசூடிவெண்பா:1 92/1

மேல்

தீர்த்தத்து (1)

தீர்த்தத்து இயலும் திறம் நின்றார் நீர் தடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 94/2

மேல்

தீர்த்ததே (1)

வந்த பீழை யாவும் அன்பர் மந்தகாசம் தீர்த்ததே – நீதிநூல்:12 132/4

மேல்

தீர்த்தம் (2)

பாபத்தை தீரா தீர்த்தம் பயன் இல்லை ஏழும்தானே – விவேகசிந்தாமணி:1 1/4
தலம் தீர்த்தம் தானம் தவம் சேர் சந்தானம் – ஆத்திசூடிவெண்பா:1 81/1

மேல்

தீர்த்தல் (1)

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/3

மேல்

தீர்த்தார் (1)

குற்றம் அற தீர்த்தார் குமரேசா முற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/2

மேல்

தீர்த்தான் (4)

எருத்தம் மிசை தந்தையினை சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரை தீர்த்தான்
ஒருத்தன் தன் தந்தைக்கே உயிர் கொடுத்தான் என பலவா உரோமை நாட்டின் – நீதிநூல்:8 83/2,3
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான்
மறி கவசங்கள் இல்லம் வனைந்திட அறிந்த மாக்கள் – நீதிநூல்:47 546/2,3
அனை இடர் தீர்த்தான் கருடன் அந்தணன் செங்கந்தை-தனை – ஆத்திசூடிவெண்பா:1 20/1
கூற்று எனவே தீர்த்தான் குமரேசா ஆற்றலொடு – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/2

மேல்

தீர்த்திலள் (1)

வாடி வந்த நல்லதங்கை வன் பசியை தீர்த்திலள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/1

மேல்

தீர்த்து (2)

காசு அதிகம்-தனை கருதி வாதம் தீர்த்து
ஏசு அற ஏழைகட்கு இடர்செய்வோன் தனம் – நீதிநூல்:21 250/1,2
கொல்லிய பசியை தீர்த்து ரட்சித்த குரங்கை கொன்றான் – விவேகசிந்தாமணி:1 95/2

மேல்

தீர்ந்த (9)

பூண்பதே தீர்ந்த பொருள் – நீதிநெறிவிளக்கம்:1 101/4
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/3,4
நல் அறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள் – அருங்கலச்செப்பு:1 40/1
புரை தீர்ந்த காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 53/2
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/3
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/3,4
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/3,4
கூர்ந்து இழிந்தார் என்னே குமரேசா தீர்ந்த
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/2,3
கூர்ந்து மிகுந்தான் குமரேசா தீர்ந்த
அக பட்டி ஆவாரை காணின் அவரின் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/2,3

மேல்

தீர்ந்ததாம் (1)

செற்றத்தை தீர்ந்ததாம் நெஞ்சு – அறநெறிச்சாரம்:1 103/4

மேல்

தீர்ந்தது (1)

இறைவர்க்கு தொண்டாய் இடர் தீர்ந்தது அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 108/1

மேல்

தீர்ந்தன்று (2)

தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து – நன்னெறி:1 37/4
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/4

மேல்

தீர்ந்தனன் (1)

தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ – நீதிநூல்:24 284/4

மேல்

தீர்ந்தார் (3)

சேர்ந்த திண்ணர் வெம் பிறவி தீர்ந்தார் பின் சேராதார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 10/1
கொண்ட சீர் தீர்ந்தார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/2
கொண்டனவும் தீர்ந்தார் குமரேசா அண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/2

மேல்

தீர்ந்தார்க்கு (1)

இருள் தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம் – அருங்கலச்செப்பு:1 77/2

மேல்

தீர்ந்தாரின் (1)

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:62 612/4

மேல்

தீர்ந்தாரும் (2)

ஒழுக்கத்தில் தீர்ந்தாரும் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 32/4
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/4

மேல்

தீர்ந்தால் (1)

உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரை தேடார் – விவேகசிந்தாமணி:1 2/4

மேல்

தீர்ந்தான் (4)

சொல்கேட்டு நோய் தீர்ந்தான் சோமேசா தற்காக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/2
கொண்ட உயிர் தீர்ந்தான் குமரேசா மண்டுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/2
குற்றமுற தீர்ந்தான் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:31 306/2
கூர்ந்த துன்பு ஏன் தீர்ந்தான் குமரேசா சார்ந்து நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:42 414/2

மேல்

தீர்ந்து (9)

ஒண்மையில் தீர்ந்து ஒழுகலார் – நீதிநெறிவிளக்கம்:1 69/4
தலைமகனில் தீர்ந்து உறைதல் தான் பிறர் இல் சேர்தல் – அறநெறிச்சாரம்:1 162/1
பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது – அறநெறிச்சாரம்:1 217/3,4
என்ன பொருளாசையுளான் பிறர் இச்சை தீர்ந்து
மன்ன திருஞானம் உரைத்தல் மற்றோர் துறக்கும் – நீதிநூல்:7 69/2,3
தரம் அறு தருமம்-தன்னை சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 560/4
சொல்லரசர் தீர்ந்து உய்ந்தார் சோமேசா புல்லிய – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/2
தண்டி உணர்த்த தலைவி புலவி தீர்ந்து
அண்டி பெருமான் அணைந்த அளவில் கண்டு அருளும் – முதுமொழிமேல்வைப்பு:1 186/1,2
திண் தோள் குலேசனை முன் தீர்ந்து அகன்றான் பின்பு அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/1
தேர்ந்து உணரா அந்தகன் ஏன் தீர்ந்து ஒழியும் அவ்வளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/1

மேல்

தீர்ப்பதுவே (1)

பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே பார்த்திபன் கடமையாம் அன்றோ – நீதிநூல்:4 43/4

மேல்

தீர்ப்பர் (2)

மானிடர் துயரை சொல்வர் மற்றுளோர் அதனை தீர்ப்பர்
ஆனவர் உறு நோய் நீக்க அனந்தமாம் பரிகாரங்கள் – நீதிநூல்:45 515/1,2
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு – நன்னெறி:1 16/3

மேல்

தீர்ப்பார் (1)

இன் உயிர் உதவியேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே – நீதிநூல்:39 390/4

மேல்

தீர்ப்பான் (1)

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/3

மேல்

தீர்ப்போர் (1)

கயவர்க்கு நேர் துன்பம் காதலித்து தீர்ப்போர்
துயருறுவர் என்றல் துணிபாம் உயர் அனலில் – நன்மதிவெண்பா:1 80/1,2

மேல்

தீர்ப்போன் (1)

ஒரு நகரிற்கு ஓர் கணக்கன் ஓர் வழக்கு தீர்ப்போன்
ஒருவனே ஆகாமல் ஊரின் வரு வழக்கம் – நன்மதிவெண்பா:1 22/1,2

மேல்

தீர்வர் (1)

உற்றுழி தீர்வர் உறவல்லர் அ குளத்தில் – மூதுரை-வாக்குண்டாம்:1 17/2

மேல்

தீர்வாம் (1)

இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/3

மேல்

தீர்வு (3)

தீர்வு இல நீ கோதாதி சேர்விக்கும் தீர்வு_இல் – அறநெறிச்சாரம்:1 147/2
தீர்வு இல நீ கோதாதி சேர்விக்கும் தீர்வு_இல் – அறநெறிச்சாரம்:1 147/2
தம் குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறூஉம் – நன்னெறி:1 10/1

மேல்

தீர்வு_இல் (1)

தீர்வு இல நீ கோதாதி சேர்விக்கும் தீர்வு_இல்
பழி இன்மை எய்தின் பறையாத பாவம் – அறநெறிச்சாரம்:1 147/2,3

மேல்

தீர்வும் (1)

அனையனை கொல்க நல் தீர்வும் ஆற்றுக – நீதிநூல்:18 225/4

மேல்

தீர (5)

சிந்தை தீர அப்பியத்தின் மேல் ஆக்கல் பந்தம் – அறநெறிச்சாரம்:1 44/2
தீர ஆராய்ந்து தெளிந்திடல் ஆம் நேருற்று – நன்மதிவெண்பா:1 98/2
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 56/3
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:35 348/3
இருள் தீர எண்ணி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/4

மேல்

தீரர்க்கு (1)

தீரர்க்கு இயற்று உதவி தெங்கு இளநீருள் நிறையும் – நன்மதிவெண்பா:1 60/1

மேல்

தீரவே (1)

தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர்தாமே – விவேகசிந்தாமணி:1 69/4

மேல்

தீரன் (2)

தீரன் பகாசூரன் தீது அடக்கும் காரணம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 6/2
திண் தோள் அபிமன் உயர் தீரன் என ஏன் கழல் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/1

மேல்

தீரனே (9)

தேக்கு புகழ் புன்னைவன தீரனே யா உறினும் – ஆத்திசூடிவெண்பா:1 6/3
தென் பாகை புன்னைவன தீரனே யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 17/3
சீர் ஆரும் புன்னைவன தீரனே நாள்-தோறும் – ஆத்திசூடிவெண்பா:1 20/3
தேன் கால் சொல் புன்னைவன தீரனே ஐம்புலனை – ஆத்திசூடிவெண்பா:1 33/3
செய்தது பார் புன்னைவன தீரனே அப்படி சீர் – ஆத்திசூடிவெண்பா:1 44/3
தென் பாகை புன்னைவன தீரனே எள்ளளவும் – ஆத்திசூடிவெண்பா:1 69/3
செய்ய புகழ் புன்னைவன தீரனே நீயும் இந்த – ஆத்திசூடிவெண்பா:1 80/3
தீபம் எனும் புன்னைவன தீரனே ஆனது கண்டே – ஆத்திசூடிவெண்பா:1 84/3
தேன் பொழி சொல் புன்னைவன தீரனே நீ என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 85/3

மேல்

தீரா (11)

தீரா கோபம் போரா முடியும் – கொன்றைவேந்தன்:1 40/1
செயிர் கொள் வினை குயவனாக செயிர் தீரா
எண் அரு நல் யாக்கை கலம் வனையும் மற்று அதனுள் – அறநெறிச்சாரம்:1 153/2,3
தீரா இடும்பை தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/4
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/3
தீரா இடும்பை தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/4
தாபத்தை தீரா தண்ணீர் தரித்திரம் அறியா பெண்டிர் – விவேகசிந்தாமணி:1 1/2
பாபத்தை தீரா தீர்த்தம் பயன் இல்லை ஏழும்தானே – விவேகசிந்தாமணி:1 1/4
தீரா வினை தீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும் – அருங்கலச்செப்பு:1 180/1
தீரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/4
தீரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/4
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1201/3

மேல்

தீராமை (1)

தீராமை ஆர்க்கும் கயிறு – திருக்குறள்குமரேசவெண்பா:49 482/4

மேல்

தீரும் (2)

தேங்கும் உயிர் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே – நீதிநூல்:12 118/4
எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும்
மற்று ஒரு சிங்கம்-தன்னை வரு முயல் கூட்டி சென்றே – விவேகசிந்தாமணி:1 47/2,3

மேல்

தீருமே (1)

தரித்திரம் என்னும் ஓர் மருந்தில் தீருமே – விவேகசிந்தாமணி:1 43/4

மேல்

தீவரை (1)

சலனம் தீவரை இடி பெரும் கால் முதல் தாபம் – நீதிநூல்:42 442/2

மேல்

தீவினை (9)

தீவினை அகற்று – ஆத்திசூடி:1 58/1
செய் தீவினை இருக்க தெய்வத்தை நொந்தக்கால் – நல்வழி:1 17/1
தீவினை அஞ்சா விறல் கொண்டு தென்புலத்தார் – நீதிநெறிவிளக்கம்:1 21/3
தீவினை கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின் மற்று – நீதிநெறிவிளக்கம்:1 67/3
சூழ் தீவினை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 57/4
தீவினை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/4
மான் ஆகி தீவினை செய் மாரீசன் ஏன் மடிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/1
துன்னற்க தீவினை பால் – திருக்குறள்குமரேசவெண்பா:21 209/4
தீவினை செய்யான் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/4

மேல்

தீவினைக்கு (1)

செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய் தீவினைக்கு ஓர் செவிலி ஆய – நீதிநூல்:40 406/3

மேல்

தீவினைகள் (2)

வழுது ஒன்றை நீக்கிடில் தீவினைகள் எலாம் நீங்கிடும் நல் வாய்மை ஒன்றே – நீதிநூல்:16 196/3
விஞ்சிய ஆவல் தீவினைகள் யாவுமே – நீதிநூல்:19 233/3

மேல்

தீவினையார் (1)

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/3

மேல்

தீவினையை (1)

ஒன்றியும் ஒன்றாதும் தான் செய்த தீவினையை
நின்று நினைந்து இரங்கற்பாற்று – அருங்கலச்செப்பு:1 115/1,2

மேல்

தீவைப்ப (1)

அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/1

மேல்

தீனர் (3)

இருநிதி பெற்ற தீனர் எண்ணிடாது இகழ்ந்தது ஒப்ப – நீதிநூல்:3 28/1
நேயர் பற்சர் தீனர் நிதியோர் என சொல் பேதமதையே நினைத்து அநீதிபுரிதல் – நீதிநூல்:21 258/1
நேர் இல்லா மா பாதகர் தீனர் நெடும் சோரம் – நீதிநூல்:25 289/3

மேல்

தீனர்க்கு (1)

தீனர்க்கு வழங்காது உறை தீயன் பசியுளரால் – நீதிநூல்:24 283/3

மேல்

தீனர்க்கும் (1)

தினமுமே நுகர்தல் இன்றி தீனர்க்கும் வழங்கல் இன்றி – நீதிநூல்:24 279/3

மேல்

தீனராய் (1)

இழையும் தீனராய் பிறந்து கற்றிட வகை இல்லா – நீதிநூல்:26 298/3

மேல்

தீனி (2)

சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர் – நீதிநூல்:36 364/2
பறவையும் விலங்கும் தீனி பசித்த பின் தேடும் நாளை – நீதிநூல்:40 418/1

மேல்