வை – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

வை (3)

போழச்செய்யாமல் வை வேல் கண் புதைத்து பொன்னே என்னை நீ – திருக்கோ:43/3
வை மலர் வாள் படை ஊரற்கு செய்யும் குற்றேவல் மற்று என் – திருக்கோ:233/1
வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண – திருக்கோ:386/3
மேல்


வைக்க (1)

பூரண பொன் குடம் வைக்க மணி முத்தம் பொன் பொதிந்த – திருக்கோ:296/1
மேல்


வைகல் (1)

இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே – திருக்கோ:305/4
மேல்


வைகலுமே (1)

மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே – திருக்கோ:331/4
மேல்


வைகி (1)

நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே – திருக்கோ:164/4
மேல்


வைகிற்று (1)

வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே – திருக்கோ:120/4
மேல்


வைகும் (1)

வேயாது செப்பின் அடைத்து தமி வைகும் வீயின் அன்ன – திருக்கோ:374/1
மேல்


வைகுவதே (1)

வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே – திருக்கோ:339/4
மேல்


வைத்த (7)

தன்-பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் – திருக்கோ:51/3
தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த
கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை – திருக்கோ:56/1,2
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் – திருக்கோ:109/1
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே – திருக்கோ:150/4
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான் – திருக்கோ:261/2
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை – திருக்கோ:298/2
மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும் – திருக்கோ:327/2,3
மேல்


வைத்தவன் (1)

வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி – திருக்கோ:26/3
மேல்


வைத்தால் (1)

மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே – திருக்கோ:146/4
மேல்


வைத்தான் (1)

மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான்
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/3,4
மேல்


வைத்து (6)

தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர் – திருக்கோ:43/1
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல் – திருக்கோ:206/3
மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான் – திருக்கோ:257/3
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின் – திருக்கோ:261/1
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற – திருக்கோ:286/2
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும் – திருக்கோ:338/2
மேல்


வையகத்தே (1)

மதி உடையார் தெய்வமே இல்லை-கொல் இனி வையகத்தே – திருக்கோ:292/4
மேல்


வையம் (2)

பரம் அன்று இரும் பனி பாரித்தவா பரந்து எங்கும் வையம்
சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே – திருக்கோ:321/3,4
வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ் – திருக்கோ:383/1
மேல்


வையமும் (1)

வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன் – திருக்கோ:46/2
மேல்


வையான் (1)

மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி – திருக்கோ:303/3
மேல்


வைவந்த (1)

வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம் – திருக்கோ:212/1

மேல்