கு – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குங்குமமும் 1
குஞ்சரம் 1
குஞ்சி 1
குட்டன் 1
குடம் 1
குடி 1
குடிக்கு 1
குடியீர் 1
குடில் 1
குடுமி 2
குடை 1
குடைந்து 3
குடைவன் 1
குணங்கள் 1
குணம் 3
குணமும் 1
குதர் 1
குதலை 2
குமிழ் 1
குமுதம் 1
குயம் 1
குயில் 4
குயிலை 1
குரம்பையர்-தம் 1
குரம்பையை 1
குரல் 2
குரவு 1
குரவே 1
குரவை 1
குரா 1
குரு 4
குருகு 1
குருட்டின் 1
குரும்பை 1
குரூஉ 3
குரை 1
குரைதருமே 1
குல 3
குல_கொடியே 1
குலத்திற்கும் 1
குலதெய்வமே 1
குலம் 5
குலமே 1
குலா 2
குலாய 3
குலை 3
குவடு 1
குவவின 1
குவளை 7
குவளைக்கு 1
குவளைகள் 1
குழல் 22
குழலாட்கு 2
குழலாய் 3
குழலார் 1
குழலாள் 4
குழலி 1
குழலிக்கு 1
குழலே 3
குழற்கு 3
குழற்கே 2
குழாங்கள் 1
குழாம் 1
குழி 2
குழியும் 1
குழீஇ 1
குழு 1
குழுமி 4
குழுவினை 1
குழை 7
குழையாம் 1
குழையே 2
குளிக்கும் 1
குளிக்கோ 1
குளித்து 1
குளிப்ப 1
குளிர் 6
குற்ற 1
குற்றம் 1
குற்றாலத்து 1
குற்றாலம் 1
குற்றேவல் 2
குற 2
குறவர் 1
குறவர்கள் 1
குறவரை 1
குறி 2
குறிப்பு 3
குறுகலர் 1
குறுகா 1
குறுகார் 1
குறுகாவகை 1
குறுகியதே 1
குறும் 1
குறை 2
குறைப்பவர்-தம் 1
குறைவிற்கும் 1
குன்ற 8
குன்றகத்து 1
குன்றத்திடை 1
குன்றம் 5
குன்றமும் 1
குன்றர் 2
குன்றவர் 1
குன்றா 1
குன்றிடத்தே 2
குன்றில் 4
குன்றின் 2
குன்றின்-நின்று 1
குன்று 5
குன்றும் 1
குனிக்கும் 3
குனிதரு 1

குங்குமமும் (1)

அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும்
மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/2,3
மேல்


குஞ்சரம் (1)

கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும் – திருக்கோ:21/1
மேல்


குஞ்சி (1)

தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி – திருக்கோ:82/1
மேல்


குட்டன் (1)

குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே – திருக்கோ:224/2
மேல்


குடம் (1)

பூரண பொன் குடம் வைக்க மணி முத்தம் பொன் பொதிந்த – திருக்கோ:296/1
மேல்


குடி (1)

மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு – திருக்கோ:284/1
மேல்


குடிக்கு (1)

குடிக்கு அலர் கூறினும் கூறா வியன் தில்லை கூத்தன தாள் – திருக்கோ:291/1
மேல்


குடியீர் (1)

விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழு குடியீர்
விழுமிய அல்ல-கொல்லோ இன்னவாறு விரும்புவதே – திருக்கோ:393/3,4
மேல்


குடில் (1)

இறால் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது எந்தை – திருக்கோ:252/2
மேல்


குடுமி (2)

ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி
திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய் – திருக்கோ:62/2,3
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி
மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே – திருக்கோ:150/2,3
மேல்


குடை (1)

வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ் – திருக்கோ:383/1
மேல்


குடைந்து (3)

திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய் – திருக்கோ:62/3
எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே – திருக்கோ:66/4
மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று – திருக்கோ:226/3
மேல்


குடைவன் (1)

இ நிறமும் பெறின் யானும் குடைவன் இரும் சுனையே – திருக்கோ:69/4
மேல்


குணங்கள் (1)

குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே – திருக்கோ:235/4
மேல்


குணம் (3)

குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள் – திருக்கோ:9/2
கோலத்தினாள் பொருட்டு ஆக அமிர்தம் குணம் கெடினும் – திருக்கோ:27/2
குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர் – திருக்கோ:283/2
மேல்


குணமும் (1)

நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட – திருக்கோ:343/1
மேல்


குதர் (1)

தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள் – திருக்கோ:369/2
மேல்


குதலை (2)

ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே – திருக்கோ:104/4
வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வாயான் – திருக்கோ:380/2
மேல்


குமிழ் (1)

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ – திருக்கோ:1/2
மேல்


குமுதம் (1)

கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/3
மேல்


குயம் (1)

குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின் – திருக்கோ:198/3
மேல்


குயில் (4)

குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/2
குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே – திருக்கோ:224/2
குயில் இது அன்றே என்னலாம் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:285/1
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப – திருக்கோ:351/3
மேல்


குயிலை (1)

குயிலை சிலம்பு அடி கொம்பினை தில்லை எம் கூத்தப்பிரான் – திருக்கோ:30/1
மேல்


குரம்பையர்-தம் (1)

குரம்பையர்-தம் இடமோ இடம் தோன்றும் இ குன்றிடத்தே – திருக்கோ:251/4
மேல்


குரம்பையை (1)

மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால் – திருக்கோ:155/1
மேல்


குரல் (2)

குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே – திருக்கோ:119/4
போதில் பொலியும் தொழில் புலி பல் குரல் பொன்_தொடியே – திருக்கோ:239/4
மேல்


குரவு (1)

குரவு அணையும் குழல் இங்கு இவளால் இ குறி அறிவித்து – திருக்கோ:360/2
மேல்


குரவே (1)

நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே – திருக்கோ:241/4
மேல்


குரவை (1)

முழங்கும் குரவை இரவில் கண்டு ஏகுக முத்தன் முத்தி – திருக்கோ:127/3
மேல்


குரா (1)

குரா பயில் கூழை இவளின் மிக்கு அம்பலத்தான் குழையாம் – திருக்கோ:362/1
மேல்


குரு (4)

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ – திருக்கோ:1/2
குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:44/1
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி – திருக்கோ:156/2
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து – திருக்கோ:161/3
மேல்


குருகு (1)

கோலி திகழ் சிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு
பாலித்து இரும் பனி பார்ப்பொடு சேவல் பயில் இரவின் – திருக்கோ:318/1,2
மேல்


குருட்டின் (1)

குருட்டின் புக செற்ற கோன் புலியூர் குறுகார் மனம் போன்று – திருக்கோ:270/3
மேல்


குரும்பை (1)

குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய் – திருக்கோ:108/1
மேல்


குரூஉ (3)

கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/3
குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குரூஉ கமலம் – திருக்கோ:221/2
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார் – திருக்கோ:225/3
மேல்


குரை (1)

குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்தவளை – திருக்கோ:33/1
மேல்


குரைதருமே (1)

கொன் நிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே – திருக்கோ:175/4
மேல்


குல (3)

கொடும் கால் குல வரை ஏழு ஏழ் பொழில் எழில் குன்றும் அன்றும் – திருக்கோ:31/1
அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும் – திருக்கோ:36/3
குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே – திருக்கோ:235/4
மேல்


குல_கொடியே (1)

குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே – திருக்கோ:235/4
மேல்


குலத்திற்கும் (1)

குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர் – திருக்கோ:266/1
மேல்


குலதெய்வமே (1)

கொழியா திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வமே – திருக்கோ:29/4
மேல்


குலம் (5)

எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து – திருக்கோ:36/1
குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/2
மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/4
குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும் – திருக்கோ:54/2
நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து – திருக்கோ:143/3
மேல்


குலமே (1)

கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே – திருக்கோ:123/4
மேல்


குலா (2)

இறை வில் குலா வரை ஏந்தி வண் தில்லையன் ஏழ் பொழிலும் – திருக்கோ:266/3
உறை வில் குலா நுதலாள் விலையோ மெய்ம்மை ஓதுநர்க்கே – திருக்கோ:266/4
மேல்


குலாய (3)

போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல் – திருக்கோ:316/1
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர் – திருக்கோ:316/2
காது குலாய குழை எழிலோனை கருதலர் போல் – திருக்கோ:316/3
மேல்


குலை (3)

தெங்கம்பழம் கமுகின் குலை சாடி கதலி செற்று – திருக்கோ:100/1
எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண் – திருக்கோ:250/1
செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல் – திருக்கோ:250/2
மேல்


குவடு (1)

பட மாசுண பள்ளி இ குவடு ஆக்கி அ பங்கய கண் – திருக்கோ:120/1
மேல்


குவவின (1)

குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய் – திருக்கோ:108/1
மேல்


குவளை (7)

குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்தவளை – திருக்கோ:33/1
குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண் – திருக்கோ:51/1
மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய் – திருக்கோ:66/3
முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள் – திருக்கோ:121/2
வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின் – திருக்கோ:162/3
மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே – திருக்கோ:170/4
பூம் குவளை பொலி மாலையும் ஊரன் பொன் தோள் இணையும் – திருக்கோ:357/1
மேல்


குவளைக்கு (1)

சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு
எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே – திருக்கோ:334/1,2
மேல்


குவளைகள் (1)

பைம் தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றனவே – திருக்கோ:363/4
மேல்


குழல் (22)

அளி சென்ற பூம் குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே – திருக்கோ:50/4
பேர் என்னவோ உரையீர் விரை ஈர்ம் குழல் பேதையரே – திருக்கோ:56/4
மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/3
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் – திருக்கோ:73/3
யாதே செய தக்கது மது வார் குழல் ஏந்து_இழையே – திருக்கோ:82/4
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/3
குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி – திருக்கோ:94/3
குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய் – திருக்கோ:108/1
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே – திருக்கோ:112/4
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின் – திருக்கோ:198/3
குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் – திருக்கோ:205/1
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே – திருக்கோ:206/4
கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே – திருக்கோ:216/4
மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு – திருக்கோ:218/2
பொய் என்பதே கருத்தாயின் புரி குழல் பொன் தொடியாய் – திருக்கோ:277/3
மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி – திருக்கோ:303/3
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே – திருக்கோ:312/4
துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று – திருக்கோ:324/3
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா – திருக்கோ:330/2
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே – திருக்கோ:333/4
குரவு அணையும் குழல் இங்கு இவளால் இ குறி அறிவித்து – திருக்கோ:360/2
மேல்


குழலாட்கு (2)

இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே – திருக்கோ:81/4
இருட்டின் புரி குழலாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே – திருக்கோ:270/4
மேல்


குழலாய் (3)

பயில் என பேர்ந்து அறியாதவன் தில்லை பல் பூம் குழலாய்
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே – திருக்கோ:224/3,4
துறு கள் புரி குழலாய் இதுவோ இன்று சூழ்கின்றதே – திருக்கோ:313/4
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே – திருக்கோ:323/4
மேல்


குழலார் (1)

வாட்டி அன்று ஏர் குழலார் மொழியாதன வாய் திறந்தே – திருக்கோ:284/4
மேல்


குழலாள் (4)

மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே – திருக்கோ:9/4
தேம்பிணை வார் குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே – திருக்கோ:38/4
விழியா வரும் புரி மென் குழலாள் திறத்து ஐய மெய்யே – திருக்கோ:261/3
வண்டினம் மேவும் குழலாள் அயல் மன்னும் இ அயலே – திருக்கோ:302/4
மேல்


குழலி (1)

பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே – திருக்கோ:14/4
மேல்


குழலிக்கு (1)

கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால் – திருக்கோ:80/3
மேல்


குழலே (3)

கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/4
முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/4
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே – திருக்கோ:314/4
மேல்


குழற்கு (3)

வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம் – திருக்கோ:119/3
இன்னன யான் கொணர்ந்தேன் மணம் தாழ் குழற்கு ஏய்வனவே – திருக்கோ:125/4
இந்தீவரம் இவை காண் நின் இருள் சேர் குழற்கு எழில் சேர் – திருக்கோ:163/3
மேல்


குழற்கே (2)

தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே – திருக்கோ:63/4
முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/4
மேல்


குழாங்கள் (1)

கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும் – திருக்கோ:142/2
மேல்


குழாம் (1)

கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும் – திருக்கோ:142/2
மேல்


குழி (2)

குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய – திருக்கோ:135/3
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா – திருக்கோ:255/2
மேல்


குழியும் (1)

எண் நீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே – திருக்கோ:345/4
மேல்


குழீஇ (1)

குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா – திருக்கோ:255/2
மேல்


குழு (1)

கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் – திருக்கோ:276/3
மேல்


குழுமி (4)

கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி
நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம் – திருக்கோ:156/2,3
சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து – திருக்கோ:173/1
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி
மா பணிலங்கள் முழுங்க தழங்கும் மண முரசே – திருக்கோ:196/3,4
முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி
வில் படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விரை மலர் தூய் – திருக்கோ:348/2,3
மேல்


குழுவினை (1)

குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான் – திருக்கோ:229/3
மேல்


குழை (7)

பாம்பு இணையா குழை கொண்டோன் கயிலை பயில் புனமும் – திருக்கோ:38/3
முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது – திருக்கோ:184/3
வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த – திருக்கோ:241/3
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா – திருக்கோ:313/1
காது குலாய குழை எழிலோனை கருதலர் போல் – திருக்கோ:316/3
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண் – திருக்கோ:325/2
பணி வார் குழை எழிலோன் தில்லை சிற்றம்பலம் அனைய – திருக்கோ:330/1
மேல்


குழையாம் (1)

குரா பயில் கூழை இவளின் மிக்கு அம்பலத்தான் குழையாம்
அரா பயில் நுண் இடையார் அடங்கார் எவரே இனி பண்டு – திருக்கோ:362/1,2
மேல்


குழையே (2)

கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே – திருக்கோ:15/4
தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/4
மேல்


குளிக்கும் (1)

மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும்
கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன் – திருக்கோ:101/2,3
மேல்


குளிக்கோ (1)

படுக்கோ பணிலம் பல குளிக்கோ பரன் தில்லை முன்றில் – திருக்கோ:63/2
மேல்


குளித்து (1)

கொல் பா இலங்கு இலை வேல் குளித்து ஆங்கு குறுகியதே – திருக்கோ:310/4
மேல்


குளிப்ப (1)

குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப
துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே – திருக்கோ:351/3,4
மேல்


குளிர் (6)

குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/2
கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர் – திருக்கோ:100/2
கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் – திருக்கோ:103/3
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி – திருக்கோ:150/2
குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள – திருக்கோ:260/2
கொல் ஆண்டு இலங்கு மழு படையோன் குளிர் தில்லை அன்னாய் – திருக்கோ:387/1
மேல்


குற்ற (1)

நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:283/3
மேல்


குற்றம் (1)

குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர் – திருக்கோ:283/2
மேல்


குற்றாலத்து (1)

குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி – திருக்கோ:94/3
மேல்


குற்றாலம் (1)

குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய – திருக்கோ:135/3
மேல்


குற்றேவல் (2)

கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ – திருக்கோ:63/3
வை மலர் வாள் படை ஊரற்கு செய்யும் குற்றேவல் மற்று என் – திருக்கோ:233/1
மேல்


குற (2)

குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ – திருக்கோ:96/3
குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் – திருக்கோ:205/1
மேல்


குறவர் (1)

உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர் – திருக்கோ:252/3
மேல்


குறவர்கள் (1)

கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா – திருக்கோ:159/2
மேல்


குறவரை (1)

குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள – திருக்கோ:260/2
மேல்


குறி (2)

குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே – திருக்கோ:334/4
குரவு அணையும் குழல் இங்கு இவளால் இ குறி அறிவித்து – திருக்கோ:360/2
மேல்


குறிப்பு (3)

ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு
சீர் வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர் தில்லை – திருக்கோ:80/1,2
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/2
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே – திருக்கோ:206/4
மேல்


குறுகலர் (1)

கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குறுகலர் ஊர் – திருக்கோ:13/1
மேல்


குறுகா (1)

குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர் – திருக்கோ:283/2
மேல்


குறுகார் (1)

குருட்டின் புக செற்ற கோன் புலியூர் குறுகார் மனம் போன்று – திருக்கோ:270/3
மேல்


குறுகாவகை (1)

கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல் – திருக்கோ:264/3
மேல்


குறுகியதே (1)

கொல் பா இலங்கு இலை வேல் குளித்து ஆங்கு குறுகியதே – திருக்கோ:310/4
மேல்


குறும் (1)

குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே – திருக்கோ:95/4
மேல்


குறை (2)

எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு – திருக்கோ:94/1
கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ் – திருக்கோ:151/1
மேல்


குறைப்பவர்-தம் (1)

கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம்
சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள் – திருக்கோ:45/1,2
மேல்


குறைவிற்கும் (1)

குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர் – திருக்கோ:266/1
மேல்


குன்ற (8)

இகல் குன்ற வில்லில் செற்றோன் தில்லை ஈசன் எம்மான் எதிர்ந்த – திருக்கோ:4/3
பகல் குன்ற பல் உகுத்தோன் பழனம் அன்ன பல் வளைக்கே – திருக்கோ:4/4
இரும் குன்ற வாணர் இளம்_கொடியே இடர் எய்தல் எம் ஊர் – திருக்கோ:15/2
பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர் – திருக்கோ:15/3
இ குன்ற வாணர் கொழுந்து இ செழும் தண் புனம் உடையாள் – திருக்கோ:68/2
அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே – திருக்கோ:68/3
பொய் குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும் – திருக்கோ:223/3
எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் ஏந்து_இழையே – திருக்கோ:223/4
மேல்


குன்றகத்து (1)

குன்றகத்து இல்லா தழை அண்ணல் தந்தால் கொடிச்சியருக்கு – திருக்கோ:92/3
மேல்


குன்றத்திடை (1)

குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே – திருக்கோ:246/4
மேல்


குன்றம் (5)

வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து – திருக்கோ:15/1
கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே – திருக்கோ:15/4
குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குரூஉ கமலம் – திருக்கோ:221/2
கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள் – திருக்கோ:231/1
குன்றம் கிடையும் கடந்து உமர் கூறும் நிதி கொணர்ந்து – திருக்கோ:268/1
மேல்


குன்றமும் (1)

தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல் – திருக்கோ:98/2
மேல்


குன்றர் (2)

கிழங்கும் அருந்தி இருந்து எம்மோடு இன்று கிளர்ந்து குன்றர்
முழங்கும் குரவை இரவில் கண்டு ஏகுக முத்தன் முத்தி – திருக்கோ:127/2,3
கான் அமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம் – திருக்கோ:274/1
மேல்


குன்றவர் (1)

குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று – திருக்கோ:280/2
மேல்


குன்றா (1)

குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று – திருக்கோ:280/2
மேல்


குன்றிடத்தே (2)

குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே – திருக்கோ:95/4
குரம்பையர்-தம் இடமோ இடம் தோன்றும் இ குன்றிடத்தே – திருக்கோ:251/4
மேல்


குன்றில் (4)

இ குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பினவே – திருக்கோ:103/4
அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின் – திருக்கோ:117/2
தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல் – திருக்கோ:225/2
புயல் மன்னு குன்றில் பொரு வேல் துணையா பொம்மென் இருள்-வாய் – திருக்கோ:395/3
மேல்


குன்றின் (2)

கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி – திருக்கோ:150/2
ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று – திருக்கோ:186/2
மேல்


குன்றின்-நின்று (1)

இருந்தனர் குன்றின்-நின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ – திருக்கோ:148/2
மேல்


குன்று (5)

பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்ப – திருக்கோ:100/3
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் – திருக்கோ:116/1
உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த – திருக்கோ:137/1
செய் குன்று உவை இவை சீர் மலர் வாவி விசும்பு இயங்கி – திருக்கோ:223/1
குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே – திருக்கோ:288/4
மேல்


குன்றும் (1)

கொடும் கால் குல வரை ஏழு ஏழ் பொழில் எழில் குன்றும் அன்றும் – திருக்கோ:31/1
மேல்


குனிக்கும் (3)

கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும்
பாம்பு அலங்கார பரன் தில்லை அம்பலம் பாடலரின் – திருக்கோ:11/1,2
ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் புலியூர் – திருக்கோ:185/2
குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான் – திருக்கோ:229/3
மேல்


குனிதரு (1)

குனிதரு திண் சிலை கோடு சென்றான் சுடர் கொற்றவனே – திருக்கோ:98/4

மேல்