ச – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

சங்கநிதி (1)

தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர் – திருக்கோ:400/3
மேல்


சங்கம் (3)

சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி – திருக்கோ:85/1
புள்ளும் திரையும் பொர சங்கம் ஆர்க்கும் பொரு கடலே – திருக்கோ:185/4
மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு – திருக்கோ:364/3
மேல்


சங்கரன் (2)

தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர் – திருக்கோ:165/2
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை – திருக்கோ:298/2
மேல்


சங்கும் (1)

சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும் – திருக்கோ:248/1
மேல்


சடை (18)

மின் எறி செம் சடை கூத்தப்பிரான் வியன் தில்லை முந்நீர் – திருக்கோ:49/3
ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண் – திருக்கோ:50/2
தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த – திருக்கோ:56/1
உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து – திருக்கோ:67/3
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல் – திருக்கோ:98/2
பொன் அனையான் தில்லை பொங்கு அரவம் புன் சடை மிடைந்த – திருக்கோ:125/1
பனி துண்டம் சூடும் படர் சடை அம்பலவன் உலகம் – திருக்கோ:132/1
சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர் – திருக்கோ:134/1
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால் – திருக்கோ:170/2
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை – திருக்கோ:203/2
புயல் அன்று அலர் சடை ஏற்றவன் தில்லை பொருப்பு அரசி – திருக்கோ:240/1
சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண் – திருக்கோ:242/1
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ – திருக்கோ:256/1
நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை – திருக்கோ:265/3
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும் – திருக்கோ:327/1
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து – திருக்கோ:336/1
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார் – திருக்கோ:396/3
ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும் – திருக்கோ:398/1
மேல்


சடைமுடியோன் (3)

மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய் – திருக்கோ:172/1
தார் உறு கொன்றையன் தில்லை சடைமுடியோன் கயிலை – திருக்கோ:176/1
ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:193/4
மேல்


சடையவன் (1)

பொன் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் – திருக்கோ:305/2
மேல்


சடையன் (1)

தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் சிற்றம்பலத்தான் – திருக்கோ:379/1
மேல்


சடையோன் (8)

புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன – திருக்கோ:83/3
பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என புரி நோய் – திருக்கோ:89/1
மின்னும் சடையோன் புலியூர் விரவாதவரின் உள்நோய் – திருக்கோ:189/2
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/3
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே – திருக்கோ:303/4
அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை ஆங்கு ஒருத்தி – திருக்கோ:360/3
மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் – திருக்கோ:366/2
அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் அமர புல்லும் – திருக்கோ:372/2
மேல்


சடையோனை (1)

வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் – திருக்கோ:317/2
மேல்


சடைவெண் (1)

மின் துன்னிய செம் சடைவெண் மதியன் விதியுடையோர் – திருக்கோ:392/1
மேல்


சந்த (5)

அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் – திருக்கோ:32/3
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் – திருக்கோ:78/2
கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு – திருக்கோ:78/3
இனி சந்த மேகலையாட்கு என்-கொலாம் புகுந்து எய்துவதே – திருக்கோ:211/4
புரை சந்த மேகலையாய் துயர் தீர புகுந்து நின்றே – திருக்கோ:299/4
மேல்


சந்தம் (2)

அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என் – திருக்கோ:78/1
தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு – திருக்கோ:128/1
மேல்


சந்தன (1)

தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார் – திருக்கோ:107/3
மேல்


சந்திரனொடு (1)

பனி சந்திரனொடு பாய் புனல் சூடும் பரன் புலியூர் – திருக்கோ:211/1
மேல்


சந்து (2)

புனை வளர் சாரல் பொதியின் மலை பொலி சந்து அணிந்து – திருக்கோ:154/2
சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே – திருக்கோ:163/4
மேல்


சந்தும் (2)

சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும் – திருக்கோ:248/1
வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே – திருக்கோ:301/3
மேல்


சரதம் (1)

சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே – திருக்கோ:57/4
மேல்


சரம் (1)

சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே – திருக்கோ:321/4
மேல்


சரிவாய் (1)

வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே – திருக்கோ:156/4
மேல்


சலக்கு (1)

சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே – திருக்கோ:57/4
மேல்


சலஞ்சலத்தின் (1)

தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின்
வன் பெடை மேல் துயிலும் வயல் ஊரன் வரம்பு இலனே – திருக்கோ:377/3,4
மேல்


சலந்தரன் (1)

கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை – திருக்கோ:209/1

மேல்