நோ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

நோக்க (1)

முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின் – திருக்கோ:363/3
மேல்


நோக்கம் (4)

உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/3
வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே – திருக்கோ:106/4
உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால் – திருக்கோ:111/3
நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல் – திருக்கோ:275/3
மேல்


நோக்கலர் (1)

நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல் – திருக்கோ:275/3
மேல்


நோக்காய் (1)

பேர்த்தும் இரைப்பு ஒழியாய் பழி நோக்காய் பெரும் கடலே – திருக்கோ:173/4
மேல்


நோக்கி (7)

தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள் – திருக்கோ:21/3
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் – திருக்கோ:41/3
மாழை மெல் நோக்கி இடையாய் கழிந்தது வந்துவந்தே – திருக்கோ:61/4
வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை – திருக்கோ:133/2
மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம் – திருக்கோ:199/1
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை – திருக்கோ:199/2
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர் – திருக்கோ:316/2
மேல்


நோக்கிய (1)

வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இ புனத்தே – திருக்கோ:61/2
மேல்


நோக்கியர் (1)

மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும் – திருக்கோ:274/2
மேல்


நோக்கின் (1)

மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ தில்லையான் அருளே – திருக்கோ:369/3
மேல்


நோக்கினவால் (1)

தகலோன் பயில் தில்லை பைம் பொழில் சேக்கைகள் நோக்கினவால்
அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/3,4
மேல்


நோக்கினள் (1)

கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே – திருக்கோ:256/4
மேல்


நோக்கினன் (1)

மத்தகம் சேர் தனி நோக்கினன் வாக்கு இறந்து ஊறு அமுதே – திருக்கோ:106/1
மேல்


நோக்கு (4)

கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள – திருக்கோ:97/1
மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும் – திருக்கோ:274/2
முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின் – திருக்கோ:363/3
இருந்தேன் உய வந்து இணை மலர் கண்ணின் இன் நோக்கு அருளி – திருக்கோ:394/2
மேல்


நோதக (1)

நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன் – திருக்கோ:139/3
மேல்


நோய் (3)

பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என புரி நோய்
என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார் – திருக்கோ:89/1,2
அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே – திருக்கோ:283/4
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறு நோய்
ஒப்புற்று எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும் – திருக்கோ:354/1,2
மேல்


நோவது (1)

எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன் – திருக்கோ:358/2

மேல்