உ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்க 1
உக 2
உகல் 1
உகளும் 1
உகிர் 1
உகிரால் 1
உகு 3
உகுத்தோன் 1
உங்கள் 1
உங்குவை 1
உங்கே 1
உங்ஙனே 1
உடல் 1
உடன் 3
உடுக்கும் 1
உடுத்த 1
உடுத்து 1
உடை 6
உடைத்து 2
உடைந்து 1
உடைய 3
உடையர் 3
உடையவர் 1
உடையவன் 1
உடையார் 3
உடையாள் 1
உடையாளையும் 1
உடையாளொடு 1
உடையான் 9
உடையோன் 4
உண் 2
உண்க 1
உண்ட 2
உண்டதாகி 1
உண்டல் 1
உண்டவன் 1
உண்டாம் 1
உண்டு 5
உண்டே 1
உண்டேல் 4
உண்டோ 4
உண்ணலாம் 1
உண்ணும் 1
உணங்கல் 1
உணங்கு 1
உணர்தல் 1
உணர்ந்தார்க்கு 1
உணர்வு 1
உணராதவன் 1
உணரானது 1
உத்தமரே 1
உதர்ந்து 1
உதவா 1
உதைப்ப 1
உந்தி 1
உந்திடம் 1
உந்து 1
உந்தும் 2
உப்பும் 1
உம்பர் 9
உம்பர்க்கு 1
உம்பரார் 1
உம்மவே 1
உமக்கு 1
உமர் 1
உமிழ் 1
உமை 1
உய்க்கும் 1
உய்ப்ப 1
உய்ப்பான் 1
உய்ய 6
உய்யுமாறு 1
உய்யேன் 1
உய்வான் 1
உய 2
உயர் 5
உயர்ந்தும் 1
உயிர் 7
உயிர்த்து 1
உயிர்ப்புற்று 1
உயிர்ப்பொடு 1
உயிரின் 1
உயிரும் 1
உயிரே 4
உரவு 1
உரவோன் 3
உரித்தது 1
உரித்து 1
உரித்தோன் 2
உரியோன் 1
உரு 4
உருக 1
உருகி 1
உருகுதலை 1
உருட்டி 1
உருட்டும் 1
உரும் 1
உருவ 1
உருவத்து 1
உருவின் 1
உருவினதே 1
உரை 3
உரை-மின்கள் 1
உரைக்கிலன் 1
உரைக்கேன் 2
உரைத்தால் 1
உரைத்தி 1
உரைத்து 1
உரைப்பது 2
உரைப்பன் 1
உரைப்பான் 1
உரையாடு-மின் 1
உரையாது 1
உரையான் 1
உரையீர் 1
உரோமம் 1
உலகம் 2
உலகியலாறு 1
உலகின் 1
உலவு 2
உலாத்தரும் 1
உலை 2
உவந்த 1
உவந்தேன் 1
உவமை 1
உவவின 1
உவவேம் 1
உவளை 1
உவை 1
உழும் 1
உழுவை 1
உழை 4
உழையாவும் 1
உள் 1
உள்நோய் 1
உள்ள 1
உள்ளத்தும் 1
உள்ளத்தை 1
உள்ளப்படுவன 1
உள்ளம் 8
உள்ளலரை 1
உள்ளவாறு 1
உள்ளி 2
உள்ளு-தொறும் 1
உள்ளும் 2
உளதால் 1
உளம் 1
உளமும் 1
உளரோ 1
உளவே 5
உளவோ 2
உற்ற 15
உற்றது 4
உற்றவர்க்கு 1
உற்றனம் 1
உற்றனிர் 1
உற்றார் 9
உற்றாரின் 1
உற்றான் 1
உற்றில 2
உற்றிலள் 1
உற்று 9
உற்றேம் 2
உற்றோ 1
உற 4
உறவாம் 1
உறா 1
உறாதவர் 3
உறார் 1
உறாரின் 2
உறாவரை 1
உறாவரையே 1
உறாள் 1
உறு 14
உறு-கால் 1
உறுதல் 1
உறும் 2
உறுவேன் 1
உறை 9
உறைக்கும் 1
உறைதரு 2
உறைவான் 1
உன் 11
உன்னலர் 1
உன்னலரின் 2
உன்னா 1
உன்னாதவர் 1
உன்னாரின் 2
உன்னி 4
உன்னிய 1
உன்னினர் 1
உன்னுங்கள் 1
உன்னும் 2
உன்னை 1
உனக்கு 1
உனை 1

உக்க (1)

நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி – திருக்கோ:119/1
மேல்


உக (2)

நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள் – திருக்கோ:345/3
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம் – திருக்கோ:394/3
மேல்


உகல் (1)

உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை ஒதுங்க – திருக்கோ:42/3
மேல்


உகளும் (1)

ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும்
வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே – திருக்கோ:350/2,3
மேல்


உகிர் (1)

சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு – திருக்கோ:334/1
மேல்


உகிரால் (1)

என வந்து அணுகும் அவள் அன்று உகிரால்
சிரம் அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் வழுத்தா – திருக்கோ:371/2,3
மேல்


உகு (3)

ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன் – திருக்கோ:16/3
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/2
வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர் – திருக்கோ:265/1
மேல்


உகுத்தோன் (1)

பகல் குன்ற பல் உகுத்தோன் பழனம் அன்ன பல் வளைக்கே – திருக்கோ:4/4
மேல்


உங்கள் (1)

விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே – திருக்கோ:148/4
மேல்


உங்குவை (1)

ஒள்வன் படை_கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ – திருக்கோ:237/3
மேல்


உங்கே (1)

வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம் – திருக்கோ:119/3
மேல்


உங்ஙனே (1)

துளி வளர் சாரல் கரந்து உங்ஙனே வந்து தோன்றுவனே – திருக்கோ:16/4
மேல்


உடல் (1)

வருமால் உடல் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர் – திருக்கோ:326/3
மேல்


உடன் (3)

ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன் வளர்ந்த – திருக்கோ:44/3
உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து – திருக்கோ:77/3
எல்லா நிதியும் உடன் விடுப்பான் இமையோர் இறைஞ்சும் – திருக்கோ:271/2
மேல்


உடுக்கும் (1)

மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி மெய்யில் கையில் – திருக்கோ:88/1
மேல்


உடுத்த (1)

விண்ணுக்கு மேல் வியன் பாதல கீழ் விரி நீர் உடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின் – திருக்கோ:162/1,2
மேல்


உடுத்து (1)

உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர ஒருங்கே – திருக்கோ:352/1
மேல்


உடை (6)

சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையா மனனே – திருக்கோ:7/3
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
பை உடை வாள் அரவத்து அல்குல் காக்கும் பைம் பூம் புனமே – திருக்கோ:48/4
மோட்டு அம் கதிர் முலை பங்கு உடை தில்லை முன்னோன் கழற்கே – திருக்கோ:156/1
உடை மணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும் இ – திருக்கோ:385/1
மேல்


உடைத்து (2)

ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து – திருக்கோ:61/1
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:64/1
மேல்


உடைந்து (1)

நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி – திருக்கோ:119/1
மேல்


உடைய (3)

நடுங்காதவனை நடுங்க நுடங்கும் நடு உடைய
விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில் – திருக்கோ:31/2,3
இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் எம் உடையர் – திருக்கோ:57/1
வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இ புனத்தார் – திருக்கோ:57/2
மேல்


உடையர் (3)

இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் எம் உடையர்
வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இ புனத்தார் – திருக்கோ:57/1,2
விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டு அது அன்றேல் – திருக்கோ:57/3
சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே – திருக்கோ:57/4
மேல்


உடையவர் (1)

இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் எம் உடையர் – திருக்கோ:57/1
மேல்


உடையவன் (1)

உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்கொள்ளுமவரில் – திருக்கோ:185/1
மேல்


உடையார் (3)

யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே – திருக்கோ:7/4
உடையார் கடவி வருவது போலும் உருவினதே – திருக்கோ:136/4
மதி உடையார் தெய்வமே இல்லை-கொல் இனி வையகத்தே – திருக்கோ:292/4
மேல்


உடையாள் (1)

இ குன்ற வாணர் கொழுந்து இ செழும் தண் புனம் உடையாள்
அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே – திருக்கோ:68/2,3
மேல்


உடையாளையும் (1)

மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான் – திருக்கோ:257/3
மேல்


உடையாளொடு (1)

ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே – திருக்கோ:246/2
மேல்


உடையான் (9)

ஏழு உடையான் பொழில் எட்டு உடையான் புயம் என்னை முன் ஆள் – திருக்கோ:7/1
ஏழு உடையான் பொழில் எட்டு உடையான் புயம் என்னை முன் ஆள் – திருக்கோ:7/1
ஊழ் உடையான் புலியூர் அன்ன பொன் இ உயர் பொழில் வாய் – திருக்கோ:7/2
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து – திருக்கோ:186/1
தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலமே – திருக்கோ:217/4
உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர் – திருக்கோ:290/2
பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக – திருக்கோ:292/2
கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின் – திருக்கோ:292/3
சிவந்த பொன் மேனி மணி திருச்சிற்றம்பலம் உடையான்
சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான் – திருக்கோ:361/1,2
மேல்


உடையோன் (4)

நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல் – திருக்கோ:275/3
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின் – திருக்கோ:313/3
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும் – திருக்கோ:326/2
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:364/2
மேல்


உண் (2)

ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண்
களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல் – திருக்கோ:122/2,3
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே – திருக்கோ:219/4
மேல்


உண்க (1)

விதியுடையார் உண்க வேரி விலக்கலம் அம்பலத்து – திருக்கோ:292/1
மேல்


உண்ட (2)

அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே – திருக்கோ:188/4
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால் – திருக்கோ:236/1
மேல்


உண்டதாகி (1)

வினை வித்தி காத்து விளைவு உண்டதாகி விளைந்ததுவே – திருக்கோ:140/4
மேல்


உண்டல் (1)

உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர் – திருக்கோ:290/2
மேல்


உண்டவன் (1)

தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா – திருக்கோ:132/2
மேல்


உண்டாம் (1)

அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது – திருக்கோ:256/3
மேல்


உண்டு (5)

எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே – திருக்கோ:66/4
எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம் – திருக்கோ:94/1,2
கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய் – திருக்கோ:141/1
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று – திருக்கோ:158/1
குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான் – திருக்கோ:229/3
மேல்


உண்டே (1)

புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை அடையார் புரங்கள் – திருக்கோ:4/2
மேல்


உண்டேல் (4)

மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/4
போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே – திருக்கோ:79/4
மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல்
உன்னுங்கள் தீது இன்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே – திருக்கோ:236/3,4
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல்
பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே – திருக்கோ:378/3,4
மேல்


உண்டோ (4)

கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/4
மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே – திருக்கோ:53/4
தினை கெட செய்திடுமாறும் உண்டோ இ திரு கணியே – திருக்கோ:141/4
பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே – திருக்கோ:378/4
மேல்


உண்ணலாம் (1)

உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா – திருக்கோ:235/3
மேல்


உண்ணும் (1)

கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய் – திருக்கோ:295/1
மேல்


உணங்கல் (1)

உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா – திருக்கோ:235/3
மேல்


உணங்கு (1)

இராப்பகல் நின்று உணங்கு ஈர்ம் கடை இத்துணை போழ்தின் சென்று – திருக்கோ:362/3
மேல்


உணர்தல் (1)

ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான் – திருக்கோ:309/3
மேல்


உணர்ந்தார்க்கு (1)

உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன் தில்லை சிற்றம்பலத்து ஒருத்தன் – திருக்கோ:9/1
மேல்


உணர்வு (1)

உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன் தில்லை சிற்றம்பலத்து ஒருத்தன் – திருக்கோ:9/1
மேல்


உணராதவன் (1)

ஒருங்கு வளை கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய் – திருக்கோ:331/3
மேல்


உணரானது (1)

உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின் – திருக்கோ:287/3
மேல்


உத்தமரே (1)

உன்னுங்கள் தீது இன்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே – திருக்கோ:236/4
மேல்


உதர்ந்து (1)

புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப – திருக்கோ:346/3
மேல்


உதவா (1)

வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:216/2
மேல்


உதைப்ப (1)

மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை – திருக்கோ:397/2
மேல்


உந்தி (1)

தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு – திருக்கோ:128/1
மேல்


உந்திடம் (1)

பொய் குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும் – திருக்கோ:223/3
மேல்


உந்து (1)

தேன் உந்து மா மலை சீறூர் இது செய்யலாவது இல்லை – திருக்கோ:147/2
மேல்


உந்தும் (2)

வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ – திருக்கோ:147/3
இறால் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது எந்தை – திருக்கோ:252/2
மேல்


உப்பும் (1)

நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே – திருக்கோ:315/1
மேல்


உம்பர் (9)

உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய – திருக்கோ:22/1
கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம் – திருக்கோ:45/1
உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம் – திருக்கோ:131/2
குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய – திருக்கோ:135/3
நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர் சென்று ஏத்தி நிற்கும் – திருக்கோ:137/2
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று – திருக்கோ:158/1
பறந்து இருந்து உம்பர் பதைப்ப படரும் புரம் கரப்ப – திருக்கோ:213/1
உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர்
பெறா அருள் அம்பலவன் மலை காத்தும் பெரும் புனமே – திருக்கோ:252/3,4
இற வரை உம்பர் கடவுள் பராய் நின்று எழிலி உன்னி – திருக்கோ:260/1
மேல்


உம்பர்க்கு (1)

சூளாமணி உம்பர்க்கு ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு – திருக்கோ:47/1
மேல்


உம்பரார் (1)

உம்பரார் அறியா மறையோன் அடி வாழ்த்தலரின் – திருக்கோ:5/2
மேல்


உம்மவே (1)

கெழி உம்மவே பணை தோள் பல என்னோ கிளக்கின்றதே – திருக்கோ:135/4
மேல்


உமக்கு (1)

நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன் – திருக்கோ:139/3
மேல்


உமர் (1)

குன்றம் கிடையும் கடந்து உமர் கூறும் நிதி கொணர்ந்து – திருக்கோ:268/1
மேல்


உமிழ் (1)

ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள் – திருக்கோ:52/3
மேல்


உமை (1)

கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர் – திருக்கோ:100/2
மேல்


உய்க்கும் (1)

துன் அற உய்க்கும் இல்லோரும் துயிலின் துறைவர் மிக்க – திருக்கோ:175/3
மேல்


உய்ப்ப (1)

புலவி திரை பொர சீறடி பூம் கலம் சென்னி உய்ப்ப
கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம் – திருக்கோ:365/1,2
மேல்


உய்ப்பான் (1)

ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான்
மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து – திருக்கோ:384/2,3
மேல்


உய்ய (6)

உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய – திருக்கோ:22/1
உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய
களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:22/1,2
ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு – திருக்கோ:106/2
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று – திருக்கோ:158/1
குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான் – திருக்கோ:229/3
தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன் – திருக்கோ:313/2
மேல்


உய்யுமாறு (1)

ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே – திருக்கோ:187/4
மேல்


உய்யேன் (1)

ஒன்றாம் இவட்கும் மொழிதல் இல்லேன் மொழியாதும் உய்யேன்
குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே – திருக்கோ:288/3,4
மேல்


உய்வான் (1)

உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து – திருக்கோ:67/3
மேல்


உய (2)

திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் – திருக்கோ:394/1
இருந்தேன் உய வந்து இணை மலர் கண்ணின் இன் நோக்கு அருளி – திருக்கோ:394/2
மேல்


உயர் (5)

ஊழ் உடையான் புலியூர் அன்ன பொன் இ உயர் பொழில் வாய் – திருக்கோ:7/2
உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின் – திருக்கோ:20/2
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி – திருக்கோ:62/2
ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு – திருக்கோ:80/1
எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே – திருக்கோ:166/4
மேல்


உயர்ந்தும் (1)

உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின் – திருக்கோ:287/3
மேல்


உயிர் (7)

உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன – திருக்கோ:18/1
உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை ஒதுங்க – திருக்கோ:42/3
உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லாதவளை – திருக்கோ:51/2
ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம் – திருக்கோ:71/2
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து – திருக்கோ:290/3
பிரியாமையும் உயிர் ஒன்றாவதும் பிரியின் பெரிதும் – திருக்கோ:311/1
இருள் தரு பூம் பொழில் இன் உயிர் போல கலந்து இசைத்த – திருக்கோ:336/2
மேல்


உயிர்த்து (1)

மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து
காவியம் கண் கழுநீர் செவ்வி வெளவுதல் கற்றனவே – திருக்கோ:384/3,4
மேல்


உயிர்ப்புற்று (1)

வெப்புற்று வெய்து உயிர்ப்புற்று தம் மெல் அணையே துணையா – திருக்கோ:354/3
மேல்


உயிர்ப்பொடு (1)

வெவ் வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்து நைந்தாள் – திருக்கோ:366/3
மேல்


உயிரின் (1)

ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன் வளர்ந்த – திருக்கோ:44/3
மேல்


உயிரும் (1)

என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும்
பொன் செய்த மேனியன் தில்லை உறாரின் பொறை அரிதாம் – திருக்கோ:278/2,3
மேல்


உயிரே (4)

மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே – திருக்கோ:36/4
மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே – திருக்கோ:39/4
இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன் உயிரே – திருக்கோ:169/4
உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே
அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால் – திருக்கோ:210/2,3
மேல்


உரவு (1)

உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த – திருக்கோ:137/1
மேல்


உரவோன் (3)

உறும் கள் நிவந்த கணை உரவோன் பொடியாய் ஒடுங்க – திருக்கோ:95/1
அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன்
செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே – திருக்கோ:155/3,4
கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவனே – திருக்கோ:237/4
மேல்


உரித்தது (1)

அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன – திருக்கோ:112/2
மேல்


உரித்து (1)

உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த – திருக்கோ:137/1
மேல்


உரித்தோன் (2)

வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து – திருக்கோ:15/1
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/2
மேல்


உரியோன் (1)

மத்த கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும் – திருக்கோ:388/1
மேல்


உரு (4)

உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே – திருக்கோ:1/4
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா – திருக்கோ:103/2
உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த – திருக்கோ:137/1
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு – திருக்கோ:307/1
மேல்


உருக (1)

ஒருவனது அன்பரின் இன்ப கலவிகள் உள் உருக
தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை – திருக்கோ:281/2,3
மேல்


உருகி (1)

உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்கொள்ளுமவரில் – திருக்கோ:185/1
மேல்


உருகுதலை (1)

உருகுதலை சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே – திருக்கோ:104/1
மேல்


உருட்டி (1)

உடை மணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும் இ – திருக்கோ:385/1
மேல்


உருட்டும் (1)

ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும்
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/1,2
மேல்


உரும் (1)

போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும் – திருக்கோ:176/3
மேல்


உருவ (1)

கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு – திருக்கோ:352/3
மேல்


உருவத்து (1)

கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை – திருக்கோ:77/2
மேல்


உருவின் (1)

அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின்
கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும் – திருக்கோ:117/2,3
மேல்


உருவினதே (1)

உடையார் கடவி வருவது போலும் உருவினதே – திருக்கோ:136/4
மேல்


உரை (3)

உள்ளப்படுவன உள்ளி உரை தக்கவர்க்கு உரைத்து – திருக்கோ:87/1
ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால் – திருக்கோ:88/2
உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே – திருக்கோ:152/4
மேல்


உரை-மின்கள் (1)

சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே – திருக்கோ:54/4
மேல்


உரைக்கிலன் (1)

என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார் – திருக்கோ:89/2
மேல்


உரைக்கேன் (2)

நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன்
தடிவார் தினை எமர் காவேம் பெரும இ தண் புனமே – திருக்கோ:139/3,4
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த – திருக்கோ:271/1
மேல்


உரைத்தால் (1)

பாங்கனை யான் அன்ன பண்பனை கண்டு இ பரிசு உரைத்தால்
ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/3,4
மேல்


உரைத்தி (1)

மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே – திருக்கோ:151/4
மேல்


உரைத்து (1)

உள்ளப்படுவன உள்ளி உரை தக்கவர்க்கு உரைத்து
மெள்ள படிறு துணி துணியேல் இது வேண்டுவல் யான் – திருக்கோ:87/1,2
மேல்


உரைப்பது (2)

மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே – திருக்கோ:151/4
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே – திருக்கோ:337/4
மேல்


உரைப்பன் (1)

குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே – திருக்கோ:288/4
மேல்


உரைப்பான் (1)

சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான்
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல் – திருக்கோ:361/2,3
மேல்


உரையாடு-மின் (1)

அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே – திருக்கோ:283/4
மேல்


உரையாது (1)

முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது
அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே – திருக்கோ:184/3,4
மேல்


உரையான் (1)

தெரியேம் உரையான் பிரியான் ஒருவன் இ தேம் புனமே – திருக்கோ:83/4
மேல்


உரையீர் (1)

பேர் என்னவோ உரையீர் விரை ஈர்ம் குழல் பேதையரே – திருக்கோ:56/4
மேல்


உரோமம் (1)

உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்கொள்ளுமவரில் – திருக்கோ:185/1
மேல்


உலகம் (2)

பனி துண்டம் சூடும் படர் சடை அம்பலவன் உலகம்
தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா – திருக்கோ:132/1,2
வீப்பான் வியன் தில்லையான் அருளால் விரி நீர் உலகம்
காப்பான் பிரிய கருதுகின்றார் நமர் கார் கயல் கண் – திருக்கோ:312/2,3
மேல்


உலகியலாறு (1)

சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான் – திருக்கோ:361/2
மேல்


உலகின் (1)

ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின் எல்லாம் – திருக்கோ:341/2
மேல்


உலவு (2)

பொங்கும் புனல் கங்கை தாங்கி பொலி கழி பாறு உலவு
துங்க மலிதலை ஏந்தலின் ஏந்து_இழை தொல்லை பல் மா – திருக்கோ:85/2,3
உலவு இயலாத்தனம் சென்று எய்தல் ஆயின ஊரனுக்கே – திருக்கோ:365/4
மேல்


உலாத்தரும் (1)

உடை மணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும் இ – திருக்கோ:385/1
மேல்


உலை (2)

அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே – திருக்கோ:250/4
உலை மலி வேல் படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி – திருக்கோ:397/3
மேல்


உவந்த (1)

கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த
தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி – திருக்கோ:389/1,2
மேல்


உவந்தேன் (1)

மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இ மேதகவே – திருக்கோ:244/1
மேல்


உவமை (1)

உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லாதவளை – திருக்கோ:51/2
மேல்


உவவின (1)

உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே – திருக்கோ:108/4
மேல்


உவவேம் (1)

பால் தான் திகழும் பரிசினம் மேவும் படிறு உவவேம்
கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே – திருக்கோ:390/3,4
மேல்


உவளை (1)

உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லாதவளை – திருக்கோ:51/2
மேல்


உவை (1)

செய் குன்று உவை இவை சீர் மலர் வாவி விசும்பு இயங்கி – திருக்கோ:223/1
மேல்


உழும் (1)

உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல் – திருக்கோ:250/3
மேல்


உழுவை (1)

தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து – திருக்கோ:72/3
மேல்


உழை (4)

உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/3
உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால் – திருக்கோ:111/3
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் – திருக்கோ:116/1
கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே – திருக்கோ:116/4
மேல்


உழையாவும் (1)

மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் – திருக்கோ:347/3
மேல்


உள் (1)

ஒருவனது அன்பரின் இன்ப கலவிகள் உள் உருக – திருக்கோ:281/2
மேல்


உள்நோய் (1)

மின்னும் சடையோன் புலியூர் விரவாதவரின் உள்நோய்
இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இரும் கழி-வாய் – திருக்கோ:189/2,3
மேல்


உள்ள (1)

நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட – திருக்கோ:343/1
மேல்


உள்ளத்தும் (1)

உருகுதலை சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே – திருக்கோ:104/1
மேல்


உள்ளத்தை (1)

என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே – திருக்கோ:231/4
மேல்


உள்ளப்படுவன (1)

உள்ளப்படுவன உள்ளி உரை தக்கவர்க்கு உரைத்து – திருக்கோ:87/1
மேல்


உள்ளம் (8)

துலங்கலை சென்று இது என்னோ வள்ளல் உள்ளம் துயர்கின்றதே – திருக்கோ:24/4
சூழ செய்தான் அம்பலம் கைதொழாரின் உள்ளம் துளங்க – திருக்கோ:43/2
தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே – திருக்கோ:65/4
வீசின போது உள்ளம் மீன் இழந்தார் வியன் தென் புலியூர் – திருக்கோ:74/2
வாழி திருத்தி தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே – திருக்கோ:186/4
வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம்
தெய்வம் தரும் இருள் தூங்கும் முழுதும் செழு மிடற்றின் – திருக்கோ:212/1,2
ஊட்டி அன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளம் எல்லாம் – திருக்கோ:284/2
உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும் – திருக்கோ:379/3
மேல்


உள்ளலரை (1)

பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை உள்ளலரை
கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை – திருக்கோ:129/2,3
மேல்


உள்ளவாறு (1)

அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான் – திருக்கோ:114/3
மேல்


உள்ளி (2)

உள்ளப்படுவன உள்ளி உரை தக்கவர்க்கு உரைத்து – திருக்கோ:87/1
உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும் – திருக்கோ:379/3
மேல்


உள்ளு-தொறும் (1)

உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும்
பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையளே – திருக்கோ:379/3,4
மேல்


உள்ளும் (2)

உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்கொள்ளுமவரில் – திருக்கோ:185/1
ஒப்புற்று எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும் – திருக்கோ:354/2
மேல்


உளதால் (1)

ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால்
தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான் – திருக்கோ:88/2,3
மேல்


உளம் (1)

உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய – திருக்கோ:22/1
மேல்


உளமும் (1)

உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன – திருக்கோ:18/1
மேல்


உளரோ (1)

ஆங்கு அணைந்தார் நின்னையும் உளரோ சென்று அகன்றவரே – திருக்கோ:179/4
மேல்


உளவே (5)

கயல் உளவே கமலத்து அலர் மீது கனி பவளத்து – திருக்கோ:35/1
அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின் – திருக்கோ:35/2
இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல் – திருக்கோ:35/3
புயல் உளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி புரள்வனவே – திருக்கோ:35/4
ஏலா பரிசு உளவே அன்றி ஏலேம் இரும் சிலம்ப – திருக்கோ:110/2
மேல்


உளவோ (2)

ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே – திருக்கோ:11/4
படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்தே – திருக்கோ:78/4
மேல்


உற்ற (15)

மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – திருக்கோ:174/1
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – திருக்கோ:174/1
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – திருக்கோ:174/2
விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழ போன்று இனி விம்மிவிம்மி – திருக்கோ:198/1
அசும்பு உற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லை அன்னாள் – திருக்கோ:198/2
பொத்திய கோலத்தினீர் புலியூர் அம்பலவர்க்கு உற்ற
பத்தியர் போல பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர் – திருக்கோ:242/2,3
களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து – திருக்கோ:254/1
பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு – திருக்கோ:254/2
ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:254/3
வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே – திருக்கோ:254/4
சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில – திருக்கோ:283/1
அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே – திருக்கோ:283/4
போதல் உற்றார் நின் புணர் முலை உற்ற புரவலரே – திருக்கோ:309/4
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறு நோய் – திருக்கோ:354/1
செப்பு உற்ற கொங்கையர் யாவர்-கொல் ஆருயிர் தேய்பவரே – திருக்கோ:354/4
மேல்


உற்றது (4)

உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும் – திருக்கோ:97/3
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – திருக்கோ:174/4
குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே – திருக்கோ:224/2
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த – திருக்கோ:271/1
மேல்


உற்றவர்க்கு (1)

ஊருணி உற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே – திருக்கோ:400/4
மேல்


உற்றனம் (1)

நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான் – திருக்கோ:246/3
மேல்


உற்றனிர் (1)

எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி – திருக்கோ:146/3
மேல்


உற்றார் (9)

விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ – திருக்கோ:218/1
உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர் – திருக்கோ:252/3
வீதல் உற்றார் தலை மாலையன் தில்லை மிக்கோன் கழற்கே – திருக்கோ:309/1
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு – திருக்கோ:309/2
ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான் – திருக்கோ:309/3
ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான் – திருக்கோ:309/3
போதல் உற்றார் நின் புணர் முலை உற்ற புரவலரே – திருக்கோ:309/4
பகை தணித்தற்கு படர்தல் உற்றார் நமர் பல் பிறவி – திருக்கோ:314/2
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர் – திருக்கோ:333/2
மேல்


உற்றாரின் (1)

அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி – திருக்கோ:218/3
மேல்


உற்றான் (1)

கடலை உற்றான் கடப்பார் இல்லை இன்று இ கடும் சுரமே – திருக்கோ:218/4
மேல்


உற்றில (2)

சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில – திருக்கோ:283/1
சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில
குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர் – திருக்கோ:283/1,2
மேல்


உற்றிலள் (1)

உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும் – திருக்கோ:97/3
மேல்


உற்று (9)

வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை – திருக்கோ:133/2
ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர்ந்துறைவர்க்கு இவளோ – திருக்கோ:174/3
மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு – திருக்கோ:218/2
செழுவின தாள் பணியார் பிணியால் உற்று தேய்வித்ததே – திருக்கோ:229/4
சிந்தாகுலம் உற்று பற்றின்றி நையும் திருவினர்க்கே – திருக்கோ:276/4
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து – திருக்கோ:290/3
கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே – திருக்கோ:290/4
ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான் – திருக்கோ:309/3
சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு – திருக்கோ:334/1
மேல்


உற்றேம் (2)

வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர் – திருக்கோ:290/1
உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர் – திருக்கோ:290/2
மேல்


உற்றோ (1)

பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே – திருக்கோ:386/4
மேல்


உற (4)

துரும்பு உற செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லை சூழ் பொழிற்கே – திருக்கோ:167/4
உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே – திருக்கோ:260/4
தணி உற பொங்கும் இ கொங்கைகள் தாங்கி தளர் மருங்குல் – திருக்கோ:359/1
பணி உற தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில் மனைக்கே – திருக்கோ:359/4
மேல்


உறவாம் (1)

மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள் – திருக்கோ:399/3
மேல்


உறா (1)

சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு – திருக்கோ:334/1
மேல்


உறாதவர் (3)

ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:254/3
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:260/3
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் – திருக்கோ:283/3
மேல்


உறார் (1)

தேன் நக்க கொன்றையன் தில்லை உறார் செல்லும் செல்லல்களே – திருக்கோ:159/4
மேல்


உறாரின் (2)

பொன் செய்த மேனியன் தில்லை உறாரின் பொறை அரிதாம் – திருக்கோ:278/3
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறு நோய் – திருக்கோ:354/1
மேல்


உறாவரை (1)

உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர் – திருக்கோ:252/3
மேல்


உறாவரையே (1)

ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே – திருக்கோ:357/4
மேல்


உறாள் (1)

குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர் – திருக்கோ:283/2
மேல்


உறு (14)

சுரும்பு உறு நீலம் கொய்யல் தமி நின்று துயில் பயின்மோ – திருக்கோ:167/1
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர் – திருக்கோ:167/3
தார் உறு கொன்றையன் தில்லை சடைமுடியோன் கயிலை – திருக்கோ:176/1
நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது – திருக்கோ:176/2
போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும் – திருக்கோ:176/3
சூர் உறு சோலையின்-வாய் வரற்பாற்றன்று தூங்கு இருளே – திருக்கோ:176/4
உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே – திருக்கோ:227/4
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின் – திருக்கோ:313/3
நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே – திருக்கோ:315/1
பொருப்பு உறு தோகை புலம்புறல் பொய் அன்பர் போக்கு மிக்க – திருக்கோ:315/2
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர் சுருங்கும் மருங்குல் – திருக்கோ:353/1
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறு நோய் – திருக்கோ:354/1
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/2
கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகையே – திருக்கோ:399/4
மேல்


உறு-கால் (1)

உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/4
மேல்


உறுதல் (1)

மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி – திருக்கோ:303/3
மேல்


உறும் (2)

உறும் கள் நிவந்த கணை உரவோன் பொடியாய் ஒடுங்க – திருக்கோ:95/1
நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே – திருக்கோ:315/1
மேல்


உறுவேன் (1)

குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே – திருக்கோ:288/4
மேல்


உறை (9)

தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர் – திருக்கோ:90/1
இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லை தண் பூம் – திருக்கோ:202/3
பொன் பணைத்து அன்ன இறை உறை தில்லை பொலி மலர் மேல் – திருக்கோ:219/3
உறை வில் குலா நுதலாள் விலையோ மெய்ம்மை ஓதுநர்க்கே – திருக்கோ:266/4
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின் – திருக்கோ:313/3
மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே – திருக்கோ:318/3
கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும் – திருக்கோ:353/3
பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ – திருக்கோ:375/3
கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை உறை காழி அன்னாள் – திருக்கோ:379/2
மேல்


உறைக்கும் (1)

பரல் வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி பரன் தில்லை அன்னாய் – திருக்கோ:119/2
மேல்


உறைதரு (2)

தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் – திருக்கோ:380/1
நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே – திருக்கோ:380/4
மேல்


உறைவான் (1)

உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின் – திருக்கோ:20/2
மேல்


உன் (11)

கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால் – திருக்கோ:80/3
வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம் – திருக்கோ:119/3
சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து – திருக்கோ:173/1
ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து அவம் நீ – திருக்கோ:173/3
அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின் – திருக்கோ:213/3
உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே – திருக்கோ:260/4
துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று – திருக்கோ:324/3
சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே – திருக்கோ:343/4
இன்று உன் திருவருள் இத்துணை சாலும்-மன் எங்களுக்கே – திருக்கோ:392/4
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/2
மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள் – திருக்கோ:399/3
மேல்


உன்னலர் (1)

உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல் – திருக்கோ:250/3
மேல்


உன்னலரின் (2)

உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியின் என் ஆதும் துறைவனுக்கே – திருக்கோ:287/3,4
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின்
துறு கள் புரி குழலாய் இதுவோ இன்று சூழ்கின்றதே – திருக்கோ:313/3,4
மேல்


உன்னா (1)

முன்னோன் அருள் முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும் – திருக்கோ:217/1
மேல்


உன்னாதவர் (1)

உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே – திருக்கோ:210/2
மேல்


உன்னாரின் (2)

ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண் – திருக்கோ:50/2
மூவாயிரவர் வணங்க நின்றோனை உன்னாரின் முன்னி – திருக்கோ:72/2
மேல்


உன்னி (4)

புணர்ந்து ஆங்கு அகன்ற பொரு கரி உன்னி புனத்து அயலே – திருக்கோ:34/2
ஏனல் பசும் கதிர் என்றூழ்க்கு அழிய எழிலி உன்னி
கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா – திருக்கோ:159/1,2
இற வரை உம்பர் கடவுள் பராய் நின்று எழிலி உன்னி
குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள – திருக்கோ:260/1,2
உலை மலி வேல் படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி
கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே – திருக்கோ:397/3,4
மேல்


உன்னிய (1)

சென்று உன்னிய கழல் சிற்றம்பலவன் தென்னம் பொதியில் – திருக்கோ:392/2
மேல்


உன்னினர் (1)

ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் – திருக்கோ:308/3
மேல்


உன்னுங்கள் (1)

உன்னுங்கள் தீது இன்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே – திருக்கோ:236/4
மேல்


உன்னும் (2)

உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம் – திருக்கோ:131/2
இரும் துதி என்-வயின் கொண்டவன் யான் எப்பொழுதும் உன்னும்
மருந்து திசைமுகன் மாற்கு அரியோன் தில்லை வாழ்த்தினர் போல் – திருக்கோ:300/1,2
மேல்


உன்னை (1)

மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி – திருக்கோ:178/3
மேல்


உனக்கு (1)

ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே – திருக்கோ:68/4
மேல்


உனை (1)

எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன் – திருக்கோ:358/2

மேல்