ஏ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏக்கற்று 1
ஏக 3
ஏகி 2
ஏகிய 2
ஏகு 2
ஏகு-மின் 1
ஏகுதல் 1
ஏகுதும் 1
ஏகையும் 2
ஏங்க 1
ஏங்கி 17
ஏங்கிய 1
ஏச்சு 1
ஏசா 1
ஏசும் 1
ஏட்டு 1
ஏட்டு_அகம் 1
ஏடு 2
ஏணியில் 1
ஏத்த 25
ஏத்தமும் 1
ஏத்தலும் 1
ஏத்தவே 1
ஏத்தாத 1
ஏத்தி 19
ஏத்திய 1
ஏத்தினர் 2
ஏத்தினாள் 1
ஏத்தும் 9
ஏதம் 6
ஏதில் 1
ஏதிலர்-தாம் 1
ஏதிலார் 1
ஏதிலார்-தாம் 1
ஏது 1
ஏந்த 1
ஏந்தி 22
ஏந்திய 15
ஏந்தினர் 15
ஏந்தினும் 1
ஏந்து 10
ஏம 1
ஏமம் 1
ஏய்ப்ப 1
ஏர் 10
ஏர்பு 1
ஏரகமும் 1
ஏரியும் 1
ஏரும் 1
ஏரொடு 1
ஏல 1
ஏலும் 1
ஏவ 4
ஏவல் 10
ஏவலன் 1
ஏவலாளர் 2
ஏவலின் 3
ஏவலும் 1
ஏவி 7
ஏவினன் 1
ஏழ் 10
ஏழக 1
ஏழினும் 1
ஏழுடன் 2
ஏழும் 1
ஏழையம் 2
ஏற்பவர் 1
ஏற்பவை 1
ஏற்பன 2
ஏற்புற 1
ஏற்ற 2
ஏற்றி 5
ஏற்றிய 1
ஏற்றின் 2
ஏற்றினார் 1
ஏற்றினான் 1
ஏற்று 2
ஏற்றுக்கொண்டு 1
ஏற்றொடும் 1
ஏற 3
ஏறலின் 1
ஏறா 1
ஏறி 10
ஏறிய 3
ஏறினள் 1
ஏறினள்-மாதோ 1
ஏறினன் 3
ஏறு 4
ஏறே 1
ஏன்று 1
ஏன 1
ஏனத்து 1
ஏனை 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஏக்கற்று (1)

புரி குழல் அளகத்து புகல் ஏக்கற்று
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து – புகார்:2/20,21

TOP


ஏக (3)

இடி உடை பெரு மழை எய்தாது ஏக
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – மது:11/27,28
என் திறம் உரையாது ஏகு என்று ஏக
தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு – மது:11/200,201
குல_முதல் தேவி கூடாது ஏக
மந்திர சுற்றம் நீங்கி மன்னவன் – மது:16/136,137

TOP


ஏகி (2)

யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி
பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – புகார்:0/24,25
வருந்தாது ஏகி மன்னவன் கூடல் – மது:14/60

TOP


ஏகிய (2)

கோவலன் ஊட கூடாது ஏகிய
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – புகார்:8/15,16
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – வஞ்சி:26/172

TOP


ஏகு (2)

என் திறம் உரையாது ஏகு என்று ஏக – மது:11/200
இடிதரும் உளியமும் இனையாது ஏகு என – மது:13/32

TOP


ஏகு-மின் (1)

மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின்
காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – மது:11/139,140

TOP


ஏகுதல் (1)

நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின் – வஞ்சி:26/101

TOP


ஏகுதும் (1)

மலயத்து ஏகுதும் வான் பேர் இமய – வஞ்சி:26/100

TOP


ஏகையும் (2)

ஏகையும் நீங்கி இயல்பின் குன்றா – மது:14/181
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த – மது:14/184

TOP


ஏங்க (1)

காம_கடவுள் கையற்று ஏங்க
அணி திகழ் போதி அறவோன்-தன் முன் – மது:15/102,103

TOP


ஏங்கி (17)

இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை – புகார்:7/212
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – புகார்:9/8
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன் – புகார்:9/23
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – புகார்:9/24
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க – மது:13/187,188
எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – மது:18/33
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – மது:18/38,39
இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ – மது:18/45
அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி – மது:19/15,16
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – மது:19/25
என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – மது:19/27
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – மது:19/64
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் – மது:23/105
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – மது:23/192,193
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி
சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – வஞ்சி:29/88,89
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – வஞ்சி:29/93,94
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – வஞ்சி:30/112,113

TOP


ஏங்கிய (1)

ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப – புகார்:3/51

TOP


ஏச்சு (1)

ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/93

TOP


ஏசா (1)

ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி – மது:20/69

TOP


ஏசும் (1)

ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – புகார்:9/16

TOP


ஏட்டு (1)

ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – மது:13/86

TOP


ஏட்டு_அகம் (1)

ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – மது:13/86

TOP


ஏடு (2)

ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – புகார்:9/77
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – மது:15/58,59

TOP


ஏணியில் (1)

மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில்
கொலை தலைமகனை கூடுபு நின்றோள் – மது:23/165,166

TOP


ஏத்த (25)

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – புகார்:1/28
குழவி திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் – புகார்:2/38,39
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த
பூதரை எழுதி மேல் நிலை வைத்து – புகார்:3/106,107
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – புகார்:10/57,58
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – புகார்:10/208
பாயல்_பள்ளி பலர் தொழுது ஏத்த
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – மது:11/38,39
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த
போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – மது:16/115,116
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – மது:17/115,116
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த
உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே – மது:17/135,136
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த
தூவி துறைபடிய போயினாள் மேவி – மது:18/4,5
அடியீடு பரசி ஏத்த
கோப்பெருந்தேவி சென்று தன் – மது:20/31,32
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – மது:23/197,198
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – வஞ்சி:24/54
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த
கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – வஞ்சி:24/119,120
எழுச்சி பாலை ஆக என்று ஏத்த
மீளா வென்றி வேந்தன் கேட்டு – வஞ்சி:26/31,32
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – வஞ்சி:26/63,64
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த
தானவர்-தம்மேல் தம் பதி நீங்கும் – வஞ்சி:26/77,78
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர் – வஞ்சி:26/90,91
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த
பாடி இருக்கை நீங்கி பெயர்ந்து – வஞ்சி:26/174,175
வழி மருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் – வஞ்சி:27/32
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த
நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த – வஞ்சி:27/150,151
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த
இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப – வஞ்சி:28/21,22
பல்லாண்டு ஏத்த பரந்தன ஒருசார் – வஞ்சி:28/54
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – வஞ்சி:29/138,139
ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – வஞ்சி:30/166,167

TOP


ஏத்தமும் (1)

ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும்
ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – புகார்:10/110,111

TOP


ஏத்தலும் (1)

உரை_சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் – புகார்:0/56,57

TOP


ஏத்தவே (1)

மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய் – மது:12/110

TOP


ஏத்தாத (1)

நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே – மது:17/156

TOP


ஏத்தி (19)

தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – புகார்:1/64
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின் இ – புகார்:10/61,62
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி
இணை மலர் சீறடி இனைந்தனள் வருந்தி – மது:12/44,45
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – மது:12/119
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி – மது:14/16,17
கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள் – மது:15/200,201
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி
கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் – மது:16/141,142
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – மது:23/195,196
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – வஞ்சி:24/111
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – வஞ்சி:24/112
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட – வஞ்சி:24/123
மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப – வஞ்சி:26/5,6
சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி
ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு – வஞ்சி:26/145,146
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் – வஞ்சி:27/162,163
உலக மன்னவன் வாழ்க என்று ஏத்தி
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை – வஞ்சி:28/7,8
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன் – வஞ்சி:28/78
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் – வஞ்சி:28/113,114
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய – வஞ்சி:30/7,8
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – வஞ்சி:30/118,119

TOP


ஏத்திய (1)

கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – மது:17/159

TOP


ஏத்தினர் (2)

பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – மது:22/137,138
ஏத்தினர் அறியா இரும் கலன் நல்கி – வஞ்சி:26/126

TOP


ஏத்தினாள் (1)

எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி – வஞ்சி:29/194

TOP


ஏத்தும் (9)

நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு – புகார்:0/15
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – புகார்:1/38
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – புகார்:1/39
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும் – புகார்:5/109,110
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – புகார்:5/139,140
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் – மது:11/93
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெரும் துணை ஆக – மது:16/86,87
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – மது:17/139
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின் – வஞ்சி:28/210

TOP


ஏதம் (6)

ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ – புகார்:10/65
இரவிடை கழிதற்கு ஏதம் இல் என – மது:13/13
ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் – மது:14/24
ஏதம் இன்று என எண்ணினள் ஆகி – மது:15/124
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து – மது:15/166
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் – மது:16/16

TOP


ஏதில் (1)

ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – வஞ்சி:30/100

TOP


ஏதிலர்-தாம் (1)

ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/38

TOP


ஏதிலார் (1)

ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/15

TOP


ஏதிலார்-தாம் (1)

ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/93

TOP


ஏது (1)

யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – வஞ்சி:30/5

TOP


ஏந்த (1)

காவும் கானமும் கடி மலர் ஏந்த
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து – மது:14/114,115

TOP


ஏந்தி (22)

புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து – புகார்:3/121,122
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி
மகர வெல் கொடி மைந்தன் திரிதர – புகார்:4/82,83
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப – புகார்:5/166,167
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – புகார்:7/50,51
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – புகார்:7/53,54
கள் வாய் நீலம் கையின் ஏந்தி
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – புகார்:7/101,102
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ் கை வாங்கி – புகார்:8/22,23
தகை பெறு தாமரை கையின் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு – மது:11/48,49
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி
வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து – மது:11/211,212
வளை உடை கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய – மது:12/60,61
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – மது:12/103
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – மது:12/107,108
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும் – மது:12/124,125
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி
முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – மது:19/2,3
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – மது:19/23
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி
ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து – மது:22/48,49
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி
விளைந்து பதம் மிகுந்து விருந்து பதம் தந்து – மது:22/81,82
கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி
செம்மையின் வரூஉம் சிறப்பு பொருந்தி – மது:22/95,96
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி
குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி – வஞ்சி:24/45,46
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவது இ ஊர் – வஞ்சி:24/94,95
முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் – வஞ்சி:26/236,237
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி
வானவன் வந்தான் வளர் இள வன முலை – வஞ்சி:27/246,247

TOP


ஏந்திய (15)

பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – மது:11/72,73
செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி – மது:14/132,133
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – மது:20/34
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/39
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/54
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் – மது:22/66
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் – மது:22/92,93
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – வஞ்சி:24/52
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – வஞ்சி:25/78
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற – வஞ்சி:26/1,2
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை – வஞ்சி:26/58
மண்ணகம் நிழல் செய மற வாள் ஏந்திய
நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது – வஞ்சி:28/2,3
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர் – வஞ்சி:28/6
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம் – வஞ்சி:28/53
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – வஞ்சி:28/169

TOP


ஏந்தினர் (15)

ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – மது:12/39
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் – மது:20/16
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர்
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் – மது:20/16,17
கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் – மது:20/18
கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர்
கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – மது:20/18,19
கொழும் திரையலின் செப்பு ஏந்தினர்
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் – மது:20/19,20
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் – மது:20/20
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர்
மான்_மதத்தின் சாந்து ஏந்தினர் – மது:20/20,21
மான்_மதத்தின் சாந்து ஏந்தினர்
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் – மது:20/21,22
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் – மது:20/22
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர்
கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் – மது:20/22,23
கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் – மது:20/23
கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர்
கூனும் குறளும் ஊமும் கூடிய – மது:20/23,24
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – வஞ்சி:28/60
சேடியர் செல்வியின் ஏந்தினர் ஒருசார் – வஞ்சி:28/64

TOP


ஏந்தினும் (1)

இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும்
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – மது:23/7,8

TOP


ஏந்து (10)

ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர் – புகார்:1/59
செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – புகார்:4/29
மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – மது:13/160
வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய – மது:14/5
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மது:22/119
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – வஞ்சி:26/229
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:27/125
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – வஞ்சி:28/10
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – வஞ்சி:28/26
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:28/133

TOP


ஏம (1)

ஏம வைகல் இன் துயில் வதியும் – மது:14/165

TOP


ஏமம் (1)

ஏமம் சாரா இடும்பை எய்தினர் – மது:14/43

TOP


ஏய்ப்ப (1)

மை இரும் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – மது:15/51,52

TOP


ஏர் (10)

ஏர் உடை பட்டடை என இசையோர் வகுத்த – புகார்:7/14
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – புகார்:7/60
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் – புகார்:10/135
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – மது:11/210
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர் – மது:12/132
வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி – வஞ்சி:26/234
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – வஞ்சி:27/147
கவடி வித்திய கழுதை ஏர் உழவன் – வஞ்சி:27/226
தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – வஞ்சி:27/230
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி – வஞ்சி:28/52

TOP


ஏர்பு (1)

விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – மது:14/104

TOP


ஏரகமும் (1)

ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே – வஞ்சி:24/48

TOP


ஏரியும் (1)

வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும்
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் – மது:13/192,193

TOP


ஏரும் (1)

ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – புகார்:10/264

TOP


ஏரொடு (1)

ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் – புகார்:10/135

TOP


ஏல (1)

ஏல வல்லியும் இரும் கறி வல்லியும் – வஞ்சி:25/41

TOP


ஏலும் (1)

ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து – மது:22/49

TOP


ஏவ (4)

திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ
இருந்து பலி உண்ணும் இடனும் காண்குதும் – புகார்:6/12,13
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – மது:16/154
வலம் படு தானை மன்னவன் ஏவ
சிலம்பு காணிய வந்தோர் இவர் என – மது:16/158,159
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – மது:21/56

TOP


ஏவல் (10)

பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் – புகார்:5/51
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – புகார்:6/41
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – மது:12/39
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – மது:13/63
ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என – மது:16/155
ஏவல் கேட்ப பார் அரசு ஆண்ட – மது:17/4
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – மது:21/52
ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது – மது:22/1
ஏவல் இளையவர் காவலன் தொழுது – மது:23/113
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் – வஞ்சி:27/120

TOP


ஏவலன் (1)

ஏவலன் பின் பாணி யாது என – புகார்:7/17

TOP


ஏவலாளர் (2)

ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – புகார்:7/229
ஏவலாளர் யாங்கணும் சென்று – மது:13/61

TOP


ஏவலின் (3)

தேவர் கோமான் ஏவலின் போந்த – புகார்:5/66
தாதை ஏவலின் மாதுடன் போகி – மது:14/46
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் – மது:15/32

TOP


ஏவலும் (1)

இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன் – மது:16/67

TOP


ஏவி (7)

பல் வேல் தானை படை பல ஏவி
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – வஞ்சி:26/252,253
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி
தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த – வஞ்சி:27/178,179
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி
திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும் – வஞ்சி:27/191,192
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி – வஞ்சி:28/194,195
வில்லவன்கோதையை விருப்புடன் ஏவி
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – வஞ்சி:28/202,203
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது – வஞ்சி:28/206,207
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி
பூவும் புகையும் மேவிய விரையும் – வஞ்சி:30/152,153

TOP


ஏவினன் (1)

கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன்
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – வஞ்சி:28/233,234

TOP


ஏழ் (10)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – புகார்:0/51
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – புகார்:3/10
ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – புகார்:3/70
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி – புகார்:3/71
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – புகார்:8/31
ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – புகார்:10/262
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் – மது:14/153
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – மது:23/174
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – வஞ்சி:25/56
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட – வஞ்சி:27/135

TOP


ஏழக (1)

ஏழக தகரும் எகின கவரியும் – புகார்:10/5

TOP


ஏழினும் (1)

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும் – புகார்:8/36,37

TOP


ஏழுடன் (2)

இந்திர_விகாரம் ஏழுடன் போகி – புகார்:10/14
இந்திர_விகாரம் ஏழுடன் புக்கு ஆங்கு – வஞ்சி:27/92

TOP


ஏழும் (1)

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்
வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும் – புகார்:5/35,36

TOP


ஏழையம் (2)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/34
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/132

TOP


ஏற்பவர் (1)

இது நீ கருதினை ஆயின் ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை – வஞ்சி:25/166,167

TOP


ஏற்பவை (1)

பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும் – வஞ்சி:27/21

TOP


ஏற்பன (2)

ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – புகார்:9/8
மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என – வஞ்சி:28/201

TOP


ஏற்புற (1)

பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன் நலம் கொண்டு தன் பதி பெயர்வோன் – மது:23/72,73

TOP


ஏற்ற (2)

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய – புகார்:3/105
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என – வஞ்சி:25/172

TOP


ஏற்றி (5)

கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது – புகார்:5/115,116
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி
வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து – புகார்:5/142,143
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி
பாவையும் கிளியும் தூவி அம் சிறை – மது:12/32,33
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி
அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – வஞ்சி:25/193,194
கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – வஞ்சி:27/4,5

TOP


ஏற்றிய (1)

ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் – புகார்:3/59

TOP


ஏற்றின் (2)

குட பால் உறையா குவி இமில் ஏற்றின்
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – மது:17/11,12
குவி இமில் ஏற்றின்
மட கண் நீர் சோர்தலும் – மது:17/18,19

TOP


ஏற்றினார் (1)

மங்கல நல் அமளி ஏற்றினார் தங்கிய – புகார்:1/66

TOP


ஏற்றினான் (1)

நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – வஞ்சி:29/127

TOP


ஏற்று (2)

மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – புகார்:5/210
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – மது:16/83

TOP


ஏற்றுக்கொண்டு (1)

வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – மது:21/19

TOP


ஏற்றொடும் (1)

கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும்
சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – புகார்:10/104,105

TOP


ஏற (3)

வான வண் கையன் அத்திரி ஏற
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – புகார்:6/119,120
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – புகார்:7/134
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற
ஆசான் பெருங்கணி அரும் திறல் அமைச்சர் – வஞ்சி:26/2,3

TOP


ஏறலின் (1)

மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின்
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – மது:23/187,188

TOP


ஏறா (1)

சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – மது:14/146

TOP


ஏறி (10)

நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி
சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – புகார்:2/27,28
வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – புகார்:3/131
தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி
விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – புகார்:3/161,162
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி
கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை – புகார்:6/120,121
வேனில் பள்ளி ஏறி மாண் இழை – புகார்:8/18
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – மது:23/165
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – மது:23/190,191
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி
வாயிலாளரின் மாடலன் கூஉய் – வஞ்சி:27/157,158
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி
திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும் – வஞ்சி:28/66,67
மா மலை மீமிசை ஏறி
கோமகள்-தன் கோயில் புக்கு – வஞ்சி:29/63,64

TOP


ஏறிய (3)

பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – மது:20/47
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர் – வஞ்சி:26/91
காரோ வந்தது காதலர் ஏறிய
தேரோ வந்தது செய்வினை முடித்து என – வஞ்சி:26/118,119

TOP


ஏறினள் (1)

வட திசை மன்னர் மணி முடி ஏறினள்
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – வஞ்சி:27/65,66

TOP


ஏறினள்-மாதோ (1)

வான ஊர்தி ஏறினள்-மாதோ
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – மது:23/199,200

TOP


ஏறினன் (3)

கட களி யானை பிடர் தலை ஏறினன்
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – வஞ்சி:26/60,61
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – வஞ்சி:27/137
மாலை திங்கள் வழியோன் ஏறினன்
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து – வஞ்சி:27/138,139

TOP


ஏறு (4)

இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – மது:16/100
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் – மது:17/48
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – வஞ்சி:28/234
ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி – வஞ்சி:30/141

TOP


ஏறே (1)

அரைசர் ஏறே அமைக நின் சீற்றம் – வஞ்சி:28/124

TOP


ஏன்று (1)

ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி – மது:11/138

TOP


ஏன (1)

ஏன படமும் கிடுகின் படமும் – மது:14/172

TOP


ஏனத்து (1)

இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளை வெண் கோடு பறித்து மற்று அது – மது:12/24,25

TOP


ஏனை (2)

ஏனை மகளிரும் கிளைவழி சேர – புகார்:3/79
ஏனை மன்னர் இருவரும் கூறிய – வஞ்சி:28/108

TOP