வை – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வை (4)

வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு – மது:16/33
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் – மது:19/58
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – வஞ்சி:28/14
வை எயிற்று ஐயையை கண்டாயோ தோழீ – வஞ்சி:29/100

TOP


வைகல் (2)

முட்டா வைகல் முறைமையின் வழாஅ – மது:14/159
ஏம வைகல் இன் துயில் வதியும் – மது:14/165

TOP


வைகல்வைகல் (1)

மருள வைகல்வைகல் மாறு அட்டு – மது:17/161

TOP


வைகலின் (1)

அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி – புகார்:3/173

TOP


வைகலும் (2)

வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – புகார்:7/128
உண்டு மகிழ்ந்து ஆனா வைகலும் வாழியர் – வஞ்சி:24/131

TOP


வைகறை (6)

இரவு தலைப்பெயரும் வைகறை காறும் – புகார்:4/80
வைகறை யாமம் வாரணம் காட்ட – புகார்:6/116
வான் கண் விழியா வைகறை யாமத்து – புகார்:10/1
வைகறை யாமத்து வாரணம் கழிந்து – மது:11/11
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – மது:13/148
புலரி வைகறை பொய்கை தாமரை – மது:14/3

TOP


வைகி (1)

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – வஞ்சி:24/1,2

TOP


வைத்த (2)

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த
ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – புகார்:1/31,32
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக – புகார்:3/104

TOP


வைத்தலின் (1)

வண்ண சே அடி மணி முடி வைத்தலின்
ஆங்கு அது வாங்கி அணி மணி புயத்து – வஞ்சி:26/65,66

TOP


வைத்து (10)

அசையா மரபின் அது பட வைத்து
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து – புகார்:3/42,43
இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு – புகார்:3/66,67
பூதரை எழுதி மேல் நிலை வைத்து
தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:3/107,108
மழலை தும்பி வாய் வைத்து ஊத – புகார்:4/16
நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு – புகார்:5/86
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – புகார்:7/226
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால் – மது:11/106,107
மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – மது:23/187
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – மது:23/190
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட – வஞ்சி:29/2

TOP


வைத்து-ஆங்கு (2)

வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை – புகார்:3/63,64
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் – புகார்:3/128,129

TOP


வைதாளீகரும் (1)

மாகத புலவரும் வைதாளீகரும்
சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த – வஞ்சி:26/74,75

TOP


வைப்ப (2)

கறை கெழு குடிகள் கை தலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி – புகார்:4/9,10
தருக என தந்து தான் முன் வைப்ப
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – மது:20/82,83

TOP


வைப்பின் (1)

பகை அரசு நடுக்காது பயம் கெழு வைப்பின்
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என – வஞ்சி:26/17,18

TOP


வைப்போடு (1)

என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு
ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும் – புகார்:10/265,266

TOP


வைம்-மின் (1)

கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – வஞ்சி:24/17

TOP


வையத்தின் (1)

கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு – புகார்:7/231

TOP


வையம் (5)

மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – புகார்:6/120
வையம் காவலர் மகிழ்தரு வீதியும் – மது:14/145
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – மது:17/68
ஈண்டு நீர் வையம் காக்கும் – மது:20/28
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – வஞ்சி:28/129

TOP


வையமும் (2)

வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – மது:14/126
வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும் – மது:14/168

TOP


வையமோ (1)

வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – புகார்:7/216

TOP


வையை (9)

வையை என்ற பொய்யா குல_கொடி – மது:13/170
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – மது:14/72
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – மது:18/4
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – மது:20/103
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – மது:23/185
வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – மது:23/212
வையை ஒருவழிக்கொண்டு – வஞ்சி:29/62
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/124,125
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் – வஞ்சி:30/108

TOP


வையை_கோன் (1)

கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன்
கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – மது:20/103,104

TOP


வையையார் (2)

வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – வஞ்சி:29/118,119
வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை – வஞ்சி:29/120

TOP