கீ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீதம் 1
கீரந்தை 1
கீழ் 9
கீழது 1
கீழாள் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கீதம் (1)

மதுர கீதம் பாடினள் மயங்கி – புகார்:8/24

TOP


கீரந்தை (1)

உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி – மது:23/42

TOP


கீழ் (9)

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ்
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – புகார்:1/51,52
திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ்
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – மது:11/1,2
கீழ் திசை வாயில் கணவனொடு புகுந்தேன் – மது:23/182
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – மது:23/191
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – வஞ்சி:24/14
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – வஞ்சி:25/57
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் – வஞ்சி:27/253
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ்
மகர கொடியோன் மலர் கணை துரந்து – வஞ்சி:28/18,19
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – வஞ்சி:29/94

TOP


கீழது (1)

மேலது உழையுளி கீழது கைக்கிளை – புகார்:3/80

TOP


கீழாள் (2)

கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – வஞ்சி:24/120
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் – வஞ்சி:24/121

TOP