கொ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கும் 1
கொங்க 1
கொங்கண 1
கொங்கணர் 1
கொங்கர் 2
கொங்கரும் 1
கொங்கு 3
கொங்கை 5
கொங்கையான் 1
கொங்கையின் 3
கொட்டமோடு 1
கொட்டி 2
கொட்டு 1
கொட்டுடன் 1
கொட்டும் 1
கொட்பின் 1
கொடார் 1
கொடி 61
கொடி-தன்மேல் 1
கொடி_அறுகும் 1
கொடி_இடையார்-தாம் 1
கொடிக்கு 1
கொடிச்சியர் 1
கொடிஞ்சியொடு 1
கொடிதோ 1
கொடிய 2
கொடியாள் 1
கொடியினும் 1
கொடியும் 1
கொடியே 1
கொடியோய் 1
கொடியோர் 1
கொடியோன் 4
கொடு 8
கொடுக்க 1
கொடுகொட்டி 1
கொடுங்கோல் 4
கொடுஞ்சி 1
கொடுஞ்சியும் 2
கொடுத்த 7
கொடுத்தல் 1
கொடுத்தாள் 1
கொடுத்து 8
கொடுத்தும் 1
கொடுந்தமிழ் 1
கொடுப்ப 3
கொடுப்போர் 1
கொடுப்போள் 1
கொடும் 17
கொடும்பாடு 1
கொடும்பை 1
கொடுமரம் 1
கொடுமை 2
கொடுவந்து 1
கொடுவரி 3
கொடுவேரி 1
கொடை 2
கொண்கன் 1
கொண்ட 19
கொண்டது 1
கொண்டதுவே 1
கொண்டலொடு 1
கொண்டன 1
கொண்டாள் 1
கொண்டான் 1
கொண்டி 1
கொண்டிருப்பாள் 1
கொண்டு 66
கொண்டு-ஆங்கு 1
கொண்டுநிலை 1
கொண்டோர் 3
கொண்டோர்-தம் 1
கொண்டோன் 1
கொண்ம் 1
கொண்மூ 1
கொணர்க 4
கொணர்ந்த 1
கொணர்ந்து 5
கொதி 3
கொந்து 2
கொம்பர் 3
கொம்பு 1
கொம்மை 3
கொய் 3
கொல் 3
கொல்ல 1
கொல்லர் 2
கொல்லரும் 2
கொல்லன் 7
கொல்லன்-தன் 1
கொல்லன்-மின் 1
கொல்லனும் 1
கொல்லனை 1
கொல்லா 1
கொல்லி 1
கொல்லை 2
கொல்வான் 1
கொல்வுழி 1
கொல்வை-மன் 2
கொலை 9
கொலை_கள 3
கொலைக்கள 1
கொலைப்படு 1
கொலையுண்ண 1
கொவ்வையும் 1
கொழு 6
கொழுந்து 3
கொழுந்துடன் 1
கொழுந்தே 1
கொழுநர் 2
கொழுநரொடு 1
கொழுநரோடு 1
கொழுநன் 3
கொழுநன்-பால் 1
கொழுநனும் 1
கொழுநனை 2
கொழுநனொடு 1
கொழும் 17
கொள் 19
கொள்-மினோ 1
கொள்க 7
கொள்கை 17
கொள்கைக் 1
கொள்கையின் 17
கொள்கையொடு 1
கொள்வர் 2
கொள்வோர் 1
கொள்ள 11
கொள்ளவும் 3
கொள்ளா 2
கொள்ளாய் 1
கொள்ளார் 4
கொள்ளாள் 1
கொள்ளான் 1
கொள்ளு-மின் 2
கொள்ளும் 12
கொள 4
கொளா 1
கொளுத்தும்-காலை 2
கொளை 3
கொற்கை 4
கொற்கையில் 1
கொற்ற 10
கொற்றத்தாள் 1
கொற்றத்து 5
கொற்றம் 15
கொற்றம்-காண் 1
கொற்றமும் 4
கொற்றமொடு 2
கொற்றவள்ளையும் 1
கொற்றவற்கு 1
கொற்றவன் 7
கொற்றவை 4
கொற்றவைக்கு 1
கொற்றவையும் 1
கொன்ற 2
கொன்றாரே 1
கொன்றான் 1
கொன்று 5
கொன்றேற்கு 1
கொன்றை 4
கொன்றையும் 1
கொன்னே 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கொக்கும் (1)

செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும்
கான_கோழியும் நீர் நிற காக்கையும் – புகார்:10/115,116

TOP


கொங்க (1)

இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – மது:12/47

TOP


கொங்கண (1)

கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும் – வஞ்சி:26/106

TOP


கொங்கணர் (1)

கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர் – வஞ்சி:25/156

TOP


கொங்கர் (2)

கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – வஞ்சி:25/153
கொங்கர் செம் களம் வேட்டு – வஞ்சி:29/5

TOP


கொங்கரும் (1)

குடக கொங்கரும் மாளுவ வேந்தரும் – வஞ்சி:30/159

TOP


கொங்கு (3)

கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – புகார்:1/2
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – புகார்:10/220
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – வஞ்சி:30/177

TOP


கொங்கை (5)

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் – புகார்:4/49
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து – புகார்:8/21
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன் – மது:22/107
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் – மது:22/124
கொங்கை பூசல் கொடிதோ அன்று என – மது:22/136

TOP


கொங்கையான் (1)

கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை – வஞ்சி:29/112

TOP


கொங்கையின் (3)

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் – புகார்:0/44
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து – மது:14/90
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து – வஞ்சி:28/219

TOP


கொட்டமோடு (1)

கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன் – மது:22/24

TOP


கொட்டி (2)

மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை – புகார்:3/151
இமையவன் ஆடிய கொட்டி சேதம் – வஞ்சி:28/75

TOP


கொட்டு (1)

கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக – புகார்:3/144

TOP


கொட்டுடன் (1)

அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர் – புகார்:3/147

TOP


கொட்டும் (1)

பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு – புகார்:3/14,15

TOP


கொட்பின் (1)

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது – புகார்:5/116

TOP


கொடார் (1)

செய் தவம் இல்லோர்க்கு தேவர் வரம் கொடார்
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – புகார்:9/17,18

TOP


கொடி (61)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – புகார்:1/24
போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – புகார்:1/62
மகர வெல் கொடி மைந்தன் திரிதர – புகார்:4/83
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – புகார்:5/40
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – புகார்:5/146
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – புகார்:5/182
அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – புகார்:6/124
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் – புகார்:6/132
மகர வெல் கொடி மைந்தன் சேனை – புகார்:8/10
கொடி மிடை சோலை குயிலோன் என்னும் – புகார்:8/12
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – புகார்:9/4
ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – புகார்:9/16
இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி – புகார்:10/38
கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து – புகார்:10/132
உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு – புகார்:10/142
காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் – மது:11/82
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – மது:11/109
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் – மது:11/136
கொடி நடுக்கு உற்றது போல ஆங்கு அவன் – மது:11/174
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – மது:12/127
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – மது:13/81
குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும் – மது:13/155
குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் – மது:13/157
வையை என்ற பொய்யா குல_கொடி – மது:13/170
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி
வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – மது:13/189,190
குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – மது:14/70
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – மது:14/82
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – மது:14/113
திருக்கும் நீங்கிய செம் கொடி வல்லியும் – மது:14/198
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் – மது:14/204
பசும் கொடி படாகை பந்தர் நீழல் – மது:14/216
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – மது:14/218
என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன் – மது:15/137
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – மது:15/217
பெண் கொடி மாதர்-தன் தோள் – மது:17/40
நன் கொடி மென்_முலை-தான் – மது:17/42
குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – மது:17/74
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – மது:19/30
விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும் – மது:20/6
பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – மது:20/47
பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி – மது:21/15
முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – மது:22/53,54
கூல மறுகும் கொடி தேர் வீதியும் – மது:22/109
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது – மது:22/113
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – வஞ்சி:24/110
கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – வஞ்சி:25/42
பைம் கொடி படலையும் பலவின் பழங்களும் – வஞ்சி:25/44
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி
பகைபுறத்து தந்தனர் ஆயினும் ஆங்கு அவை – வஞ்சி:25/153,154
விரவு கொடி அடுக்கத்து நிரய தானையோடு – வஞ்சி:26/37
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – வஞ்சி:26/139
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடி பந்தர் – வஞ்சி:26/192
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் – வஞ்சி:26/202
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – வஞ்சி:27/152
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – வஞ்சி:27/202
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய – வஞ்சி:28/49
மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – வஞ்சி:29/105
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – வஞ்சி:29/119
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – வஞ்சி:29/179
மீன கொடி பாடும் பாடலே பாடல் – வஞ்சி:29/185
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – வஞ்சி:30/177
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – வஞ்சி:30/183

TOP


கொடி-தன்மேல் (1)

பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – வஞ்சி:30/128

TOP


கொடி_அறுகும் (1)

அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – புகார்:6/124

TOP


கொடி_இடையார்-தாம் (1)

கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – புகார்:9/4

TOP


கொடிக்கு (1)

மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என – புகார்:3/166

TOP


கொடிச்சியர் (1)

குன்றக்குரவையொடு கொடிச்சியர் பாடலும் – வஞ்சி:25/24

TOP


கொடிஞ்சியொடு (1)

திண் தேர் கொடிஞ்சியொடு தேரோர் வீழ – வஞ்சி:27/37

TOP


கொடிதோ (1)

கொங்கை பூசல் கொடிதோ அன்று என – மது:22/136

TOP


கொடிய (2)

குவளை அல்ல கொடிய கொடிய – புகார்:7/96
குவளை அல்ல கொடிய கொடிய
புன்னை நீழல் புலவு திரை_வாய் – புகார்:7/96,97

TOP


கொடியாள் (1)

புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – மது:19/33

TOP


கொடியினும் (1)

கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் – மது:22/93

TOP


கொடியும் (1)

காயமும் கரும்பும் பூ மலி கொடியும்
கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – வஞ்சி:25/45,46

TOP


கொடியே (1)

பொன்னே கொடியே புனை பூம் கோதாய் – மது:16/89

TOP


கொடியோய் (1)

யாரையோ நீ மட_கொடியோய் என – மது:20/61

TOP


கொடியோர் (1)

உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு – மது:14/118

TOP


கொடியோன் (4)

மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – புகார்:5/210
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – புகார்:7/165
கோழி சேவல் கொடியோன் கோட்டமும் – மது:14/10
மகர கொடியோன் மலர் கணை துரந்து – வஞ்சி:28/19

TOP


கொடு (8)

தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – புகார்:1/64
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி – மது:11/211
கொடு வாய் குயத்து விடுவாய் செய்ய – மது:16/30
கோவேந்தன் தேவி கொடு வினை_ஆட்டியேன் – மது:21/1
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – மது:23/8
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – வஞ்சி:24/17
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – வஞ்சி:25/153
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/166

TOP


கொடுக்க (1)

கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – மது:15/59

TOP


கொடுகொட்டி (1)

இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் – புகார்:6/43

TOP


கொடுங்கோல் (4)

கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல – மது:13/15
கொடுங்கோல் உண்டு-கொல் கொற்றவைக்கு உற்ற – மது:23/111
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை – வஞ்சி:25/87
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி – வஞ்சி:25/102

TOP


கொடுஞ்சி (1)

கொடுஞ்சி நெடும் தேர் ஐம்பதிற்று இரட்டியும் – வஞ்சி:26/132

TOP


கொடுஞ்சியும் (2)

வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும்
மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும் – மது:14/168,169
நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும் – வஞ்சி:26/213

TOP


கொடுத்த (7)

கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – புகார்:5/100
பகை_புறத்து கொடுத்த பட்டி மண்டபமும் – புகார்:5/102
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் – புகார்:5/103,104
மயன் விதித்து கொடுத்த மரபின இவை-தாம் – புகார்:5/108
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – மது:23/63,64
பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம் – வஞ்சி:24/106,107
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – வஞ்சி:29/123

TOP


கொடுத்தல் (1)

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது – புகார்:5/116

TOP


கொடுத்தாள் (1)

தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – புகார்:9/28

TOP


கொடுத்து (8)

மான் அமர் நோக்கி ஓர் கூனி கை கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில் – புகார்:3/167,168
வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து
கழி பேர் ஆண்மை கடன் பார்த்து இருக்கும் – மது:11/212,213
கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி – மது:12/31,32
கோசிகமாணி காட்டு என கொடுத்து
நடுக்கம் களைந்து அவர் நல் அகம் பொருந்திய – மது:13/99,100
ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து
நல்_வழி படுத்த செல்லா செல்வ – மது:15/74,75
பால்மடை கொடுத்து பண்பின் பெயர்வோள் – மது:15/117
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – மது:22/4
பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து – வஞ்சி:27/44,45

TOP


கொடுத்தும் (1)

உய்த்து கொடுத்தும் உரையோ ஒழியாரே – வஞ்சி:24/118

TOP


கொடுந்தமிழ் (1)

செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் – வஞ்சி:30/220

TOP


கொடுப்ப (3)

தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு – புகார்:3/127,128
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – மது:14/129,130
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய் – மது:16/28,29

TOP


கொடுப்போர் (1)

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் – புகார்:5/62

TOP


கொடுப்போள் (1)

சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் – மது:12/17

TOP


கொடும் (17)

கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள் – புகார்:4/51
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு – புகார்:5/190
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – புகார்:7/55
கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை – புகார்:7/85
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள – மது:11/20
கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும் – மது:11/205
கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – மது:13/5
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – மது:13/48
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும் – மது:13/159
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – மது:16/25
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – மது:22/58
கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர் – வஞ்சி:25/156
வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர் – வஞ்சி:26/193
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – வஞ்சி:27/90
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – வஞ்சி:27/152
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி – வஞ்சி:28/119
குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த – வஞ்சி:29/74

TOP


கொடும்பாடு (1)

கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை – மது:15/121

TOP


கொடும்பை (1)

கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால் – மது:11/71

TOP


கொடுமரம் (1)

கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – மது:12/127

TOP


கொடுமை (2)

ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – புகார்:7/170
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – மது:11/178

TOP


கொடுவந்து (1)

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் – வஞ்சி:25/186

TOP


கொடுவரி (3)

கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – புகார்:5/98
கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – புகார்:6/8
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் – மது:13/31

TOP


கொடுவேரி (1)

செம் கொடுவேரி செழும் பூ பிணையல் – மது:14/91

TOP


கொடை (2)

பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என – புகார்:5/80
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – மது:23/62

TOP


கொண்கன் (1)

கொற்கை கொண்கன் குமரி துறைவன் – மது:23/11

TOP


கொண்ட (19)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – புகார்:0/25
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – புகார்:3/19
கோலம் கொண்ட மாதவி அன்றியும் – புகார்:4/34
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட
மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு – புகார்:8/75,76
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – புகார்:10/64
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – மது:12/87
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் – மது:13/145
வாரி கொண்ட வய கரி முழக்கமும் – மது:13/146
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – மது:16/127
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் – மது:16/145
தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர் – மது:17/67
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் – மது:19/52
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – மது:21/27,28
கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன் – மது:22/24
குங்கும வருணம் கொண்ட மார்பினன் – மது:22/45
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – மது:22/67
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்ட பின் – மது:23/178
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – வஞ்சி:25/183
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் – வஞ்சி:27/210

TOP


கொண்டது (1)

ஐ_வகை வகுக்கும் பருவம் கொண்டது
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – வஞ்சி:30/11,12

TOP


கொண்டதுவே (1)

பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – புகார்:7/68

TOP


கொண்டலொடு (1)

கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – மது:14/110

TOP


கொண்டன (1)

கூனும் குறளும் கொண்டன ஒருசார் – வஞ்சி:28/58

TOP


கொண்டாள் (1)

கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய் – மது:19/36

TOP


கொண்டான் (1)

வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் கங்குல் – புகார்:9/78

TOP


கொண்டி (1)

கூற்ற கொண்டி சேனை செல்வது – வஞ்சி:26/162

TOP


கொண்டிருப்பாள் (1)

கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – புகார்:9/40

TOP


கொண்டு (66)

மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு
மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் – புகார்:0/20,21
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – புகார்:1/39
மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – புகார்:3/96,97
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் – புகார்:3/98,99
சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு
கண் இடை நவ மணி ஒழுக்கி மண்ணிய – புகார்:3/115,116
அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு
முரசு எழுந்து இயம்ப பல்_இயம் ஆர்ப்ப – புகார்:3/124,125
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – புகார்:6/6
கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி – புகார்:6/7
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – புகார்:7/37
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – புகார்:7/39
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – புகார்:7/43
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – புகார்:7/54
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – புகார்:7/89
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – புகார்:7/130
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு
அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம் – புகார்:9/8,9
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு
சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – புகார்:9/19,20
இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும் – புகார்:10/25,26
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி – புகார்:10/34
வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு
பயில் பூ தண்டலை படர்குவம் எனினே – புகார்:10/66,67
காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – புகார்:10/99,100
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – புகார்:10/193,194
வட திசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – மது:11/21,22
அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின் – மது:11/86
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி – மது:11/130
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – மது:11/182
கணம் கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ – மது:12/42
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – மது:12/87
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ – மது:12/91
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ – மது:12/95
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் – மது:12/160
ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – மது:13/77
பால் புடை கொண்டு பல் மலர் ஓங்கி – மது:13/162
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க – மது:13/188
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – மது:15/14,15
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – மது:15/82
நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு
பர_கதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை – மது:15/84,85
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – மது:15/187
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – மது:16/92
துன்னிய மந்திரம் துணை என கொண்டு
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து – மது:16/143,144
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் – மது:16/186
கடை_கயிறும் மத்தும் கொண்டு
இடை முது_மகள் வந்து தோன்றும்-மன் – மது:17/9,10
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என – மது:18/31
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – மது:18/37
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – மது:18/41
மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி – மது:22/57
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு
நடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் – மது:22/58,59
நா வலம் கொண்டு நண்ணார் ஓட்டி – மது:23/71
நன் நலம் கொண்டு தன் பதி பெயர்வோன் – மது:23/73
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – மது:23/89
ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – மது:23/91
ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு
வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி – மது:23/156,157
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – மது:23/185
குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – வஞ்சி:24/9
இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – வஞ்சி:24/26
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – வஞ்சி:25/55,56
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – வஞ்சி:25/85
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – வஞ்சி:25/184
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – வஞ்சி:26/14
இறைஞ்சா சென்னி இறைஞ்சி வலம் கொண்டு
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை – வஞ்சி:26/57,58
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த – வஞ்சி:26/63
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – வஞ்சி:27/68,69
நான்மறையாளன் செய்யுள் கொண்டு
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும் – வஞ்சி:28/137,138
குணில் கொண்டு துரந்தது போல் – வஞ்சி:29/22
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – வஞ்சி:29/146
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – வஞ்சி:29/148
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின் – வஞ்சி:30/92

TOP


கொண்டு-ஆங்கு (1)

இணை நரம்பு உடையன அணைவுற கொண்டு-ஆங்கு
யாழ் மேற்பாலை இட முறை மெலிய – புகார்:3/90,91

TOP


கொண்டுநிலை (1)

கொண்டுநிலை பாடி ஆடும் குரவையை – வஞ்சி:24/129

TOP


கொண்டோர் (3)

ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து – புகார்:5/83
கொண்டோர் உறூஉம் கொள்ளா துன்பம் – மது:14/40
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர்
நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து – வஞ்சி:27/40,41

TOP


கொண்டோர்-தம் (1)

தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – வஞ்சி:28/105

TOP


கொண்டோன் (1)

கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – வஞ்சி:28/106

TOP


கொண்ம் (1)

சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார்:9/73

TOP


கொண்மூ (1)

சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – புகார்:10/105

TOP


கொணர்க (4)

கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – புகார்:0/30
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – புகார்:8/71
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும் – மது:13/62
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – மது:16/153

TOP


கொணர்ந்த (1)

வார்த்திகன் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப – மது:23/114

TOP


கொணர்ந்து (5)

தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு – மது:11/201
ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து
வெம்மையின் கொள்ளும் மடையினன் செம்மையின் – மது:22/49,50
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு – மது:22/83,84
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் – வஞ்சி:26/169,170
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – வஞ்சி:30/61

TOP


கொதி (3)

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் – புகார்:0/44
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – வஞ்சி:28/106
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து – வஞ்சி:28/219

TOP


கொந்து (2)

மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – புகார்:8/120
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – மது:22/156

TOP


கொம்பர் (3)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர்
ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – புகார்:1/23,24
கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன – மது:12/80
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் – மது:12/84

TOP


கொம்பு (1)

பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – புகார்:7/134

TOP


கொம்மை (3)

கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ – வஞ்சி:28/16
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – வஞ்சி:29/151
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – வஞ்சி:29/152

TOP


கொய் (3)

கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – மது:11/81
ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – வஞ்சி:26/134
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – வஞ்சி:30/46

TOP


கொல் (3)

மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும் – புகார்:5/29
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – புகார்:5/233
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று – மது:14/117

TOP


கொல்ல (1)

கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – வஞ்சி:29/123

TOP


கொல்லர் (2)

நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – மது:16/106
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:27/128

TOP


கொல்லரும் (2)

மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும்
கண்ணுள்_வினைஞரும் மண்ணீட்டாளரும் – புகார்:5/29,30
பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும் – புகார்:5/31

TOP


கொல்லன் (7)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – புகார்:0/22
கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – மது:12/130
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – மது:16/110
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – மது:16/120
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – மது:16/161
கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் – மது:16/165
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – மது:16/202

TOP


கொல்லன்-தன் (1)

பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – மது:20/86

TOP


கொல்லன்-மின் (1)

செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – வஞ்சி:30/191

TOP


கொல்லனும் (1)

காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும்
ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என – மது:16/154,155

TOP


கொல்லனை (1)

கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி – மது:16/108

TOP


கொல்லா (1)

கொல்லா கோலத்து உயிர் உய்ந்தோரை – வஞ்சி:28/92

TOP


கொல்லி (1)

கொல்லி ஆண்ட குடவர் கோவே – வஞ்சி:24/133

TOP


கொல்லை (2)

கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் – மது:17/75
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – மது:17/88

TOP


கொல்வான் (1)

கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை – புகார்:7/85

TOP


கொல்வுழி (1)

வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – மது:23/157,158

TOP


கொல்வை-மன் (2)

நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – புகார்:7/86
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – புகார்:7/90

TOP


கொலை (9)

கொலை_கள பட்ட கோவலன் மனைவி – புகார்:0/31
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – புகார்:7/55
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – மது:14/142
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே – மது:18/28
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – மது:20/74
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – மது:23/158
கொலை தலைமகனை கூடுபு நின்றோள் – மது:23/166
கொலை கள பட்ட கோவலன் மனைவி – வஞ்சி:27/63
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – வஞ்சி:30/189

TOP


கொலை_கள (3)

கொலை_கள பட்ட கோவலன் மனைவி – புகார்:0/31
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – மது:20/74
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – மது:23/158

TOP


கொலைக்கள (1)

அடைக்கல காதையும் கொலைக்கள காதையும் – புகார்:0/76

TOP


கொலைப்படு (1)

கொலைப்படு மகன் அலன் என்று கூறும் – மது:16/163

TOP


கொலையுண்ண (1)

குறு_மகனால் கொலையுண்ண
காவலன்-தன் இடம் சென்ற – வஞ்சி:29/44,45

TOP


கொவ்வையும் (1)

குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட – புகார்:8/75

TOP


கொழு (6)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – புகார்:0/4
தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் – புகார்:4/39
கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை – புகார்:6/121
பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு – புகார்:8/55
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – புகார்:10/21
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – மது:11/3

TOP


கொழுந்து (3)

செந்தாமரை விரிய தேமா கொழுந்து ஒழுக – புகார்:8/119
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – மது:12/48,49
ஞான கொழுந்து ஆய் நடுக்கு இன்றியே நிற்பாய் – மது:12/102

TOP


கொழுந்துடன் (1)

திருத்தகு மா மணி கொழுந்துடன் போந்தது – மது:15/93

TOP


கொழுந்தே (1)

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி – மது:16/91

TOP


கொழுநர் (2)

ஆவியம் கொழுநர் அகலத்து ஒடுங்கி – புகார்:4/45
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் – மது:19/52

TOP


கொழுநரொடு (1)

உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு
பருவம் எண்ணும் படர் தீர் காலை – மது:14/118,119

TOP


கொழுநரோடு (1)

உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – புகார்:4/68

TOP


கொழுநன் (3)

கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த – மது:21/22
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – மது:21/28
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை – மது:23/201

TOP


கொழுநன்-பால் (1)

கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய் – மது:19/36

TOP


கொழுநனும் (1)

கய மலர் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – புகார்:2/11,12

TOP


கொழுநனை (2)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம் – புகார்:0/7
காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – புகார்:5/189

TOP


கொழுநனொடு (1)

குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – வஞ்சி:24/9

TOP


கொழும் (17)

குலத்தில் குன்றா கொழும் குடி செல்வர் – புகார்:2/8
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – புகார்:6/81
அலத்தக கொழும் சேறு அளைஇ அயலது – புகார்:8/54
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி – புகார்:10/34
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – புகார்:10/106
குமரி கூட்டில் கொழும் பல் உணவு – புகார்:10/123
கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து – புகார்:10/132
கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – மது:11/81
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – மது:13/118
குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும் – மது:13/155
குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் – மது:13/157
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – மது:14/113
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – மது:14/142
கோளி பாகல் கொழும் கனி திரள் காய் – மது:16/24
கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – மது:20/19
கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – வஞ்சி:25/42
கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – வஞ்சி:25/46

TOP


கொள் (19)

மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் – புகார்:5/76
கை கொள் பாசத்து கைப்படுவோர் என – புகார்:5/132
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் – புகார்:6/158
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/29,30
நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – புகார்:7/49
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – புகார்:7/50
வடம் கொள் முலையால் மழை மின்னு போல – புகார்:7/87
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – புகார்:7/210
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – மது:11/168
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – மது:12/27
மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – மது:12/143
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே – மது:12/147
நாவி குழம்பு நலம் கொள் தேய்வை – மது:13/116
கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு – மது:22/75
களம் கொள் யானை கவிழ் மணி நாவும் – வஞ்சி:26/201
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – வஞ்சி:26/210
ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – வஞ்சி:27/47
மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் – வஞ்சி:28/148
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – வஞ்சி:29/162

TOP


கொள்-மினோ (1)

கரும கழி பலம் கொள்-மினோ எனும் – மது:15/62

TOP


கொள்க (7)

வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என – புகார்:5/85
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – புகார்:5/162
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – மது:16/28
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – வஞ்சி:26/61
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – வஞ்சி:27/176
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என – வஞ்சி:28/139
குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன் – வஞ்சி:30/63

TOP


கொள்கை (17)

கூறிய ஐந்தின் கொள்கை போல – புகார்:3/155
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் கால கணிதரும் – புகார்:5/43,44
தங்கிய கொள்கை தரு நிலை கோட்டத்து – புகார்:5/145
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு – புகார்:5/156
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை
வான் ஊர் மதியமும் பாடி பின்னர் – புகார்:6/36,37
சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – புகார்:9/69
அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய – புகார்:10/16,17
வந்த காரணம் வயங்கிய கொள்கை
சிந்தை விளக்கின் தெரிந்தோன் ஆயினும் – புகார்:10/166,167
நலம் புரி கொள்கை நான்மறையாள – மது:11/152
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து – மது:13/38
ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு – மது:13/103
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் – மது:13/104
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை
பதி எழு அறியா பண்பு மேம்பட்ட – மது:15/4,5
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன் – மது:15/12,13
அதிரா கொள்கை அறிவனும் நயந்து நின் – மது:15/172
ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர் – மது:23/67
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கை
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை – வஞ்சி:27/155,156

TOP


கொள்கைக் (1)

குன்றா கொள்கைக் கோவலன்-தன்னுடன் – மது:11/163

TOP


கொள்கையின் (17)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – புகார்:0/16
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு – புகார்:3/15
விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – புகார்:3/162
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – புகார்:5/98
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின் – புகார்:6/64,65
விதி மாண் கொள்கையின் விளங்க காணாய் – புகார்:6/67
கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள் – புகார்:6/173
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து – மது:13/14
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் – மது:13/56
கோவலன் சென்று கொள்கையின் இருந்த – மது:14/15
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின்
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – மது:14/202,203
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – மது:15/15
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – மது:15/187
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – மது:15/219
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின்
கங்கை பேர் யாற்று இருந்து – வஞ்சி:29/28,29
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார் – வஞ்சி:30/21
வரியும் குரவையும் விரவிய கொள்கையின்
புற துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய – வஞ்சி:30/211,212

TOP


கொள்கையொடு (1)

திரு மணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும் – புகார்:5/46,47

TOP


கொள்வர் (2)

ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – புகார்:7/89
உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு – மது:15/110

TOP


கொள்வோர் (1)

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் – புகார்:5/62

TOP


கொள்ள (11)

மெய் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள
கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – புகார்:3/74,75
மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – புகார்:7/169
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை – புகார்:7/208
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – புகார்:7/209
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – புகார்:9/4
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள
வட திசை கங்கையும் இமயமும் கொண்டு – மது:11/20,21
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – மது:12/120
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – மது:19/61,62
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – மது:21/12
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி – வஞ்சி:28/110,111
கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி – வஞ்சி:30/76

TOP


கொள்ளவும் (3)

குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – புகார்:10/85
புண்ணிய தானம் புரிந்து அறம் கொள்ளவும்
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – வஞ்சி:27/100,101
போதி தானம் புரிந்து அறம் கொள்ளவும்
என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின் – வஞ்சி:27/108,109

TOP


கொள்ளா (2)

கொண்டோர் உறூஉம் கொள்ளா துன்பம் – மது:14/40
திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும் – வஞ்சி:27/192

TOP


கொள்ளாய் (1)

கோல் வளை மாதே கோலம் கொள்ளாய்
காலம் காணாய் கடிது இடித்து உரறி – வஞ்சி:26/116,117

TOP


கொள்ளார் (4)

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்
உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு – புகார்:10/141,142
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்
தீது உடை வெம் வினை உருத்த-காலை – மது:14/30,31
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் – மது:14/34
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்
யாது நின் கருத்து என் செய்கோ என – வஞ்சி:30/21,22

TOP


கொள்ளாள் (1)

கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள் – வஞ்சி:25/83

TOP


கொள்ளான் (1)

வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய் – புகார்:10/169,170

TOP


கொள்ளு-மின் (2)

தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – வஞ்சி:24/12
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – வஞ்சி:24/15

TOP


கொள்ளும் (12)

நிலவுப்பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்து – புகார்:4/31
தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – புகார்:6/160
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – புகார்:8/11
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை-தன்னுடன் – மது:11/66,67
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – மது:12/127
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் – மது:15/43
கூடல் மகளிர் கோலம் கொள்ளும்
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – மது:16/9,10
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – மது:19/8
வெம்மையின் கொள்ளும் மடையினன் செம்மையின் – மது:22/50
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் – மது:22/73
கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு – மது:22/75
கண் களி கொள்ளும் காட்சியை ஆக என – வஞ்சி:26/73

TOP


கொள (4)

நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு – புகார்:5/86
வானவர் உறையும் மதுரை வலம் கொள
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – மது:13/181,182
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – வஞ்சி:27/10,11
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி – வஞ்சி:28/194

TOP


கொளா (1)

கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – மது:16/53

TOP


கொளுத்தும்-காலை (2)

கூடிய நெறியின கொளுத்தும்-காலை
பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – புகார்:3/17,18
பகுதி பாடலும் கொளுத்தும்-காலை
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் – புகார்:3/34,35

TOP


கொளை (3)

கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – புகார்:7/210
கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – மது:12/130
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – மது:17/112

TOP


கொற்கை (4)

கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – மது:14/80
வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – மது:20/42
நல் திறம் படரா கொற்கை வேந்தே – மது:20/78
கொற்கை கொண்கன் குமரி துறைவன் – மது:23/11

TOP


கொற்கையில் (1)

கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் – வஞ்சி:27/127

TOP


கொற்ற (10)

கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – புகார்:5/100
நம் கோன்-தன் கொற்ற வாயில் – மது:20/10
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – மது:22/14
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன் – மது:22/107
கோன்_முறை அறைந்த கொற்ற வேந்தன் – மது:23/131
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை – வஞ்சி:25/87
குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் – வஞ்சி:25/141
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே – வஞ்சி:26/69
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன் – வஞ்சி:27/46
குட திசை ஆளும் கொற்ற வேந்தன் – வஞ்சி:27/197

TOP


கொற்றத்தாள் (1)

கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – மது:22/159

TOP


கொற்றத்து (5)

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை – மது:12/64
வெற்றி விளைப்பது-மன்னோ கொற்றத்து
இடி படை வானவன் முடி_தலை உடைத்த – மது:17/162,163
குறைத்த செங்கோல் குறையா கொற்றத்து
இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – மது:23/52,53
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி – மது:23/80
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என – வஞ்சி:26/245,246

TOP


கொற்றம் (15)

வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என – புகார்:5/85
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – புகார்:5/162
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது – மது:15/146
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – மது:19/20
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – மது:22/58
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – வஞ்சி:25/56,57
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – வஞ்சி:25/92
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – வஞ்சி:25/150
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம்
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் – வஞ்சி:26/27,28
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – வஞ்சி:26/61
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம்
அறிந்து உரை பயின்ற ஆய செவிலியர் – வஞ்சி:27/210,211
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – வஞ்சி:28/106,107
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:28/113
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – வஞ்சி:30/6
குட திசை ஆளும் கொற்றம் குன்றா – வஞ்சி:30/204

TOP


கொற்றம்-காண் (1)

வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – மது:20/77

TOP


கொற்றமும் (4)

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழ விறல் ஊர்களும் – புகார்:10/149,150
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை – மது:15/4
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – மது:15/9,10
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்
குறு நடை புரவி நெடும் துயர் தீர – வஞ்சி:27/165,166

TOP


கொற்றமொடு (2)

உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு
மழை கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் – புகார்:10/142,143
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோல் தன்மை தீது இன்றோ என – வஞ்சி:27/160,161

TOP


கொற்றவள்ளையும் (1)

குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும்
வட்கர் போகிய வான் பனம் தோட்டுடன் – வஞ்சி:25/145,146

TOP


கொற்றவற்கு (1)

குட திசை வாழும் கொற்றவற்கு அளித்து – வஞ்சி:28/217

TOP


கொற்றவன் (7)

கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி – மது:11/60
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – வஞ்சி:28/83
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் – வஞ்சி:28/140
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – வஞ்சி:29/139
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த – வஞ்சி:29/140
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – வஞ்சி:29/146
கொற்றவன் பூம்புகார் பாடேலோர் அம்மானை – வஞ்சி:29/147

TOP


கொற்றவை (4)

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் – மது:12/64,65
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – மது:12/87
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – மது:20/48
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – மது:23/181

TOP


கொற்றவைக்கு (1)

கொடுங்கோல் உண்டு-கொல் கொற்றவைக்கு உற்ற – மது:23/111

TOP


கொற்றவையும் (1)

கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – மது:12/127

TOP


கொன்ற (2)

உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – வஞ்சி:24/45
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – வஞ்சி:24/58

TOP


கொன்றாரே (1)

கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – மது:19/8

TOP


கொன்றான் (1)

குருகு பெயர் குன்றம் கொன்றான் மடவன் – வஞ்சி:24/66

TOP


கொன்று (5)

கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – புகார்:0/30
கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் – புகார்:7/81
உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – புகார்:7/82
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – மது:16/153
கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து – வஞ்சி:26/212

TOP


கொன்றேற்கு (1)

நச்சு கொன்றேற்கு நல் நெறி உண்டோ – மது:16/66

TOP


கொன்றை (4)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – புகார்:0/40
கொன்றை அம் பூம் குழலாள் – மது:17/44
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/84
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – வஞ்சி:25/17,18

TOP


கொன்றையும் (1)

கொன்றையும் துளவமும் குழும தொடுத்த – மது:12/112

TOP


கொன்னே (1)

கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் – புகார்:7/100

TOP