கை – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 93
கை_தொழ 1
கை_தொழுது 5
கை_வளை 1
கை_அகத்தன 1
கை_அகத்து 2
கை_அகம் 2
கைக்கிளை 8
கைக்கொண்டு 2
கைக்கொள 1
கைகலந்து 1
கைகூடேன் 1
கைத்தலத்து 1
கைத்தாயும் 1
கைத்து 1
கைதை 2
கைநிமிர்த்து-ஆங்கு 1
கைப்படுவோர் 1
கைம்மிகும் 2
கைம்மை 1
கையகப்படாஅது 1
கையது 2
கையர் 1
கையள் 2
கையற்ற 1
கையற்று 4
கையறு 4
கையன் 1
கையால் 5
கையாள் 1
கையாறு 1
கையான் 2
கையில் 12
கையின் 7
கையினன் 3
கையும் 5
கையுறின் 2
கையுறை 3
கையூழ் 1
கையெறிந்து 1
கைவந்தார் 1
கைவரை 1
கைவிட்டு 1
கைவிட 1
கைவினை 6

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கை (93)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – புகார்:0/22
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – புகார்:0/26
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – புகார்:1/23
காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – புகார்:1/63
கூடை செய்த கை வாரத்து களைதலும் – புகார்:3/20
வாரம் செய்த கை கூடையில் களைதலும் – புகார்:3/21
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும் – புகார்:3/22
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் – புகார்:3/23
தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப – புகார்:3/127
மான் அமர் நோக்கி ஓர் கூனி கை கொடுத்து – புகார்:3/167
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப – புகார்:4/9
மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும் – புகார்:5/29
கை கொள் பாசத்து கைப்படுவோர் என – புகார்:5/132
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – புகார்:6/92
வருந்துபு நின்ற வசந்தமாலை கை
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி – புகார்:6/171,172
கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – புகார்:7/18
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – புகார்:7/53
மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/131,132
உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய் – புகார்:7/227
அதிரா மரபின் யாழ் கை வாங்கி – புகார்:8/23
வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி – புகார்:8/27
இட கை நால் விரல் மாடகம் தழீஇ – புகார்:8/28
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – புகார்:9/19
தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – புகார்:9/28
கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – புகார்:9/45,46
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – புகார்:10/61
காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – புகார்:10/99
கரும் கை வினைஞரும் களமரும் கூடி – புகார்:10/125
பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – புகார்:10/134
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – புகார்:10/193
வழங்கு வில் தட கை மற குடி தாயத்து – மது:12/6
கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – மது:12/9
கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து – மது:12/31
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – மது:12/44
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – மது:12/103
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – மது:12/107
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – மது:12/119
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – மது:12/124
தொடி வளை செம் கை தோளில் காட்டி – மது:13/33
காட்டியது ஆதலின் கை விடலீயான் – மது:13/85
வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – மது:13/190
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – மது:14/16
பெரும் கை யானை இன நிரை பெயரும் – மது:14/64
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – மது:15/49
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – மது:15/49
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – மது:15/50
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – மது:15/59
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – மது:15/67
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் – மது:15/79
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்து – மது:15/159
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – மது:15/186,187
ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் – மது:15/213
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – மது:16/34
கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த – மது:16/36
கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி – மது:16/108
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – மது:16/115
கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – மது:16/175
புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – மது:16/179
உடைவாள் உருவ உறை கை வாங்கி – மது:16/196
திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – மது:16/203
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – மது:16/208
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – மது:16/208
செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து – மது:17/72
மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும் – மது:17/113
கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – மது:17/133
கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை
மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே – மது:17/133,134
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – மது:19/2
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – மது:19/23
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – மது:20/48
முகிழ்த்த கை
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி – மது:22/47,48
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – மது:23/7
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – மது:23/8
வச்சிர தட கை அமரர் கோமான் – மது:23/50
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல் குறையா கொற்றத்து – மது:23/51,52
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை
திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை – மது:23/55,56
வடி வேல் தட கை வசுவும் குமரனும் – மது:23/139
படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர் – மது:23/206
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – வஞ்சி:24/7
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே – வஞ்சி:24/48
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே – வஞ்சி:24/56
செறி வளை கை நல்லாய் இது நகை ஆகின்றே – வஞ்சி:24/67
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – வஞ்சி:24/92
கண்ணெழுத்து படுத்தன கை புனை சகடமும் – வஞ்சி:26/136
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – வஞ்சி:26/222
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – வஞ்சி:26/235
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை
மன்னர் கோவே யான் வரும் காரணம் – வஞ்சி:27/66,67
கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – வஞ்சி:29/73
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – வஞ்சி:29/103,104
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – வஞ்சி:30/42
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை
குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன் – வஞ்சி:30/62,63
உறி தாழ் கரகமும் என் கை தந்து – வஞ்சி:30/90
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – வஞ்சி:30/121
கை_அகத்தன போல் கண்டனை அன்றே – வஞ்சி:30/144

TOP


கை_தொழ (1)

பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் – புகார்:10/134,135

TOP


கை_தொழுது (5)

காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – புகார்:10/61
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – மது:12/44
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – மது:14/16
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – மது:16/115
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது
நின்றேன் உரைத்தது கேள் வாழி தோழி – வஞ்சி:24/92,93

TOP


கை_வளை (1)

சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை
பரியகம் வால் வளை பவழ பல் வளை – புகார்:6/92,93

TOP


கை_அகத்தன (1)

கை_அகத்தன போல் கண்டனை அன்றே – வஞ்சி:30/144

TOP


கை_அகத்து (2)

கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து – மது:12/31
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – மது:15/49

TOP


கை_அகம் (2)

கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – மது:15/49
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – வஞ்சி:30/121

TOP


கைக்கிளை (8)

மெய் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள – புகார்:3/74
கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – புகார்:3/75
மேலது உழையுளி கீழது கைக்கிளை
வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது – புகார்:3/80,81
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – புகார்:7/204
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – புகார்:8/32
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – மது:13/109
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என – மது:17/55
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள் – மது:17/63

TOP


கைக்கொண்டு (2)

பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் – புகார்:8/55,56
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின் – மது:22/78

TOP


கைக்கொள (1)

வேக யானை வெம்மையின் கைக்கொள
ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – மது:15/47,48

TOP


கைகலந்து (1)

காமர் மனைவி என கைகலந்து நாமம் – புகார்:2/92

TOP


கைகூடேன் (1)

காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன்
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – மது:19/70,71

TOP


கைத்தலத்து (1)

துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – வஞ்சி:29/158

TOP


கைத்தாயும் (1)

கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு – புகார்:9/55

TOP


கைத்து (1)

கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை – மது:15/57

TOP


கைதை (2)

கைதை வேலி நெய்தல் அம் கானல் – புகார்:6/150
கைதை வேலி கழி_வாய் வந்து எம் – புகார்:7/187

TOP


கைநிமிர்த்து-ஆங்கு (1)

உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – வஞ்சி:29/163

TOP


கைப்படுவோர் (1)

கை கொள் பாசத்து கைப்படுவோர் என – புகார்:5/132

TOP


கைம்மிகும் (2)

காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும்
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – மது:18/12,13
நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும்
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே – மது:18/16,17

TOP


கைம்மை (1)

கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – மது:18/43

TOP


கையகப்படாஅது (1)

கல்வி பாகன் கையகப்படாஅது
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் – மது:23/38,39

TOP


கையது (2)

கன்றிய கள்வன் கையது ஆகின் – மது:16/152
உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே – வஞ்சி:30/64

TOP


கையர் (1)

சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர்
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் – வஞ்சி:26/197,198

TOP


கையள் (2)

இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று – மது:20/39,40
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே – மது:20/54,55

TOP


கையற்ற (1)

கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு – புகார்:7/231

TOP


கையற்று (4)

தாரும் மாலையும் மயங்கி கையற்று
தீரா காதலின் திரு முகம் நோக்கி – புகார்:2/35,36
கையற்று நடுங்கு நல் வினை நடுநாள் – புகார்:5/234
காம_கடவுள் கையற்று ஏங்க – மது:15/102
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – மது:23/184,185

TOP


கையறு (4)

கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும் – புகார்:4/57
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – புகார்:8/116
கையறு துன்பம் காட்டினும் காட்டும் – புகார்:10/71
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் – மது:13/91

TOP


கையன் (1)

வான வண் கையன் அத்திரி ஏற – புகார்:6/119

TOP


கையால் (5)

பவள உலக்கை கையால் பற்றி – புகார்:7/93
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – புகார்:7/137
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – மது:11/186
தண்ணீர் தெளித்து தன் கையால் தடவி – மது:16/41
இட முலை கையால் திருகி மதுரை – மது:21/43

TOP


கையாள் (1)

பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – மது:17/69

TOP


கையாறு (1)

கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் – மது:14/34

TOP


கையான் (2)

கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற – மது:19/63
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – மது:19/65

TOP


கையில் (12)

அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு – புகார்:3/124
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – புகார்:7/4
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – புகார்:7/50
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில்
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – புகார்:9/18,19
வளை உடை கையில் சூலம் ஏந்தி – மது:12/60
கல்லா களி_மகன் ஒருவன் கையில்
வெள் வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது – மது:16/212,213
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் – மது:17/102
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி – மது:17/103
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – மது:20/98
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – மது:20/103
பரிதரு செம் கையில் படு பறை ஆர்ப்பவும் – வஞ்சி:28/68
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – வஞ்சி:29/148

TOP


கையின் (7)

மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது – புகார்:2/60
கள் வாய் நீலம் கையின் ஏந்தி – புகார்:7/101
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – மது:11/48
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி – மது:13/74
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட – மது:13/82
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – மது:15/41
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – வஞ்சி:28/5

TOP


கையினன் (3)

பிரியா தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் – மது:22/32,33
என இவை பிடித்த கையினன் ஆகி – மது:22/55
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – மது:22/66,67

TOP


கையும் (5)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – புகார்:3/18
பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும்
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – புகார்:3/18,19
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – புகார்:10/203
திருவடியும் கையும் திரு வாயும் செய்ய – மது:17/150
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும்
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – வஞ்சி:24/51,52

TOP


கையுறின் (2)

காலம் கருதி அவர் பொருள் கையுறின்
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ – மது:16/184,185
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின்
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார் – மது:16/186,187

TOP


கையுறை (3)

காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – புகார்:7/37
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி – புகார்:8/22
கடகம் தோட்டொடு கையுறை ஈத்து – மது:23/97

TOP


கையூழ் (1)

கண்ணிய செலவு விளையாட்டு கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய – புகார்:7/6,7

TOP


கையெறிந்து (1)

அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த – மது:22/44

TOP


கைவந்தார் (1)

கண்டு நம் காதலர் கைவந்தார் ஆனாது – வஞ்சி:24/130

TOP


கைவரை (1)

கைவரை காணினும் காணா என் கண் – புகார்:10/199

TOP


கைவிட்டு (1)

மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு
தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – மது:21/54,55

TOP


கைவிட (1)

கவண் விடு புடையூஉ காவல் கைவிட
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த – வஞ்சி:27/218,219

TOP


கைவினை (6)

சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – புகார்:5/38
செய்வினை கம்மியர் கைவினை விளக்கமும் – புகார்:6/136
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய – மது:16/105
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கை – வஞ்சி:27/155
சித்திர விதானத்து செய் பூம் கைவினை
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – வஞ்சி:27/203,204
கைவினை முற்றிய தெய்வ படிமத்து – வஞ்சி:28/228

TOP