சு – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுட்டதும் 1
சுட்டு 2
சுட 1
சுடர் 10
சுடரொடு 1
சுடு 2
சுடுகாட்டு 1
சுடுதலின் 1
சுடுமண் 1
சுண்ணத் 1
சுண்ணத்தர் 1
சுண்ணத்து 1
சுண்ணம் 3
சுண்ணமும் 5
சுணங்கின் 1
சுணங்கு 1
சுந்தர 2
சுமத்தி 1
சுமந்த 2
சுமந்து 9
சுரக்க 3
சுரத்தலான் 1
சுரந்து 2
சுரப்ப 2
சுரம் 1
சுரவாது 1
சுரி 1
சுருங்கி 1
சுருங்கை 1
சுருண்ட 1
சுரும்பு 3
சுரும்பொடு 1
சுருள் 2
சுருள 1
சுவல் 1
சுவை 1
சுழல 1
சுளை 1
சுற்றத்து 1
சுற்றத்தோர்க்கும் 1
சுற்றம் 2
சுற்றமும் 3
சுற்றமொடு 1
சுற்றி 1
சுற்றிய 1
சுனை 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சுட்டதும் (1)

மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – வஞ்சி:25/77,78

TOP


சுட்டு (2)

சுட்டு தலைபோகா தொல் குடி குமரியை – மது:12/21
வேரி மலர் கோதையாள் சுட்டு
நெற்றி செகிலை அடர்த்தாற்கு உரிய இ – மது:17/34,35

TOP


சுட (1)

ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – மது:20/66

TOP


சுடர் (10)

அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – புகார்:2/51
சூழி யானை சுடர் வாள் செம்பியன் – புகார்:7/235
கனை சுடர் கால் சீயா முன் – புகார்:9/79
கனை சுடர் கால் சீயா முன் – புகார்:9/83
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – புகார்:10/174
சென்ற ஞாயிற்று செல்_சுடர் அமயத்து – மது:15/203
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன் – மது:22/51
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – மது:23/8
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் – மது:23/189
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – வஞ்சி:24/50

TOP


சுடரொடு (1)

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் – மது:12/140

TOP


சுடு (2)

சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – புகார்:5/84
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி – மது:16/39

TOP


சுடுகாட்டு (1)

சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – புகார்:9/20

TOP


சுடுதலின் (1)

நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று – மது:23/49

TOP


சுடுமண் (1)

சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – மது:14/146

TOP


சுண்ணத் (1)

சுந்தர சுண்ணத் துகளொடும் அளைஇ – புகார்:4/42

TOP


சுண்ணத்தர் (1)

ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை – புகார்:1/59,60

TOP


சுண்ணத்து (1)

தூ மயிர் கவரி சுந்தர சுண்ணத்து
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு – புகார்:5/155,156

TOP


சுண்ணம் (3)

சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – மது:14/92
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் – மது:20/20
சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – வஞ்சி:24/25

TOP


சுண்ணமும் (5)

வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – புகார்:5/13
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணிய பகுதியும் பகர்வோர் விளக்கமும் – புகார்:6/134,135
வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – மது:12/36
வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – வஞ்சி:27/232
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும் – வஞ்சி:28/59

TOP


சுணங்கின் (1)

பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர் – புகார்:7/198

TOP


சுணங்கு (1)

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – புகார்:7/48

TOP


சுந்தர (2)

சுந்தர சுண்ணத் துகளொடும் அளைஇ – புகார்:4/42
தூ மயிர் கவரி சுந்தர சுண்ணத்து – புகார்:5/155

TOP


சுமத்தி (1)

பேர் இமய கல் சுமத்தி
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின் – வஞ்சி:29/27,28

TOP


சுமந்த (2)

நீடி தலையை வணங்கி தலை சுமந்த
ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய – மது:21/33,34
உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப – வஞ்சி:26/34

TOP


சுமந்து (9)

கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு – புகார்:5/204
பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – புகார்:7/91,92
புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து – புகார்:8/78
தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த – மது:14/109
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு – மது:23/147,148
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து – வஞ்சி:25/33,34
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல – வஞ்சி:25/36
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – வஞ்சி:26/110
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – வஞ்சி:26/209

TOP


சுரக்க (3)

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – புகார்:5/73
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே – வஞ்சி:24/22
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – வஞ்சி:30/7

TOP


சுரத்தலான் (1)

மேல் நின்று தான் சுரத்தலான்
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் – புகார்:1/9,10

TOP


சுரந்து (2)

வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – மது:23/212
பால் சுரந்து ஊட்ட பழ வினை உருத்து – வஞ்சி:30/75

TOP


சுரப்ப (2)

சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – புகார்:10/105,106
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – மது:11/28,29

TOP


சுரம் (1)

வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி – மது:16/59

TOP


சுரவாது (1)

மற குடி தாயத்து வழி வளம் சுரவாது
அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் – மது:12/14,15

TOP


சுரி (1)

வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் – புகார்:7/142

TOP


சுருங்கி (1)

செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – மது:19/32

TOP


சுருங்கை (1)

சுருங்கை வீதி மருங்கில் போகி – மது:14/65

TOP


சுருண்ட (1)

மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட
குழலும் கோதையும் கோலமும் காண்-மார் – வஞ்சி:28/28,29

TOP


சுரும்பு (3)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை – புகார்:2/15
சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – புகார்:2/28
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – புகார்:10/83

TOP


சுரும்பொடு (1)

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து – புகார்:2/21

TOP


சுருள் (2)

இருள் பட பொதுளிய சுருள் இரும் குஞ்சி – வஞ்சி:26/108
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – வஞ்சி:27/181

TOP


சுருள (1)

கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள
திலக சிறு நுதல் அரும்பிய வியரும் – மது:14/142,143

TOP


சுவல் (1)

தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – புகார்:10/98

TOP


சுவை (1)

ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து – மது:22/49

TOP


சுழல (1)

சுழல வந்து தொழ துயர் நீங்கும் – புகார்:5/126

TOP


சுளை (1)

செம் சுளை பலவின் பரல் பகை உறுக்கும் – புகார்:10/75

TOP


சுற்றத்து (1)

ஓவிய சுற்றத்து உரை அவிந்து இருப்ப – மது:22/11

TOP


சுற்றத்தோர்க்கும் (1)

சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் – மது:15/88

TOP


சுற்றம் (2)

துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும் – மது:13/60
மந்திர சுற்றம் நீங்கி மன்னவன் – மது:16/137

TOP


சுற்றமும் (3)

அரசிளங்குமரரும் உரிமை சுற்றமும்
பரத குமரரும் பல் வேறு ஆயமும் – புகார்:6/155,156
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் – புகார்:10/149
குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் – மது:16/84

TOP


சுற்றமொடு (1)

உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – புகார்:2/88

TOP


சுற்றி (1)

சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – மது:12/22,23

TOP


சுற்றிய (1)

இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் – புகார்:5/56

TOP


சுனை (2)

அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – வஞ்சி:24/2
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – வஞ்சி:30/59

TOP