ஐ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 11
ஐ_வகை 4
ஐ_வேறு 1
ஐ_இருபதின்மரை 1
ஐ_ஈராயிரம் 1
ஐ_ஐந்து 1
ஐ_ஐந்து_இரட்டி 1
ஐஞ்ஞூற்றுவர் 3
ஐஞ்ஞூற்றுவர்க்கு 1
ஐஞ்ஞூற்றுவரும் 1
ஐஞ்ஞூறும் 1
ஐது 1
ஐந்திணை 1
ஐந்தின் 1
ஐந்தினும் 2
ஐந்து 5
ஐந்தும் 3
ஐம் 7
ஐம்_சில்_ஓதியை 1
ஐம்பத்து 1
ஐம்பத்துஇருவர் 1
ஐம்பத்துஇருவரொடு 1
ஐம்பதிற்று 1
ஐம்பதின்மர் 2
ஐம்பால் 1
ஐம்பாலோய் 1
ஐம்பெருங்குழுவும் 3
ஐய 6
ஐயம் 2
ஐயர் 6
ஐயவி 1
ஐயனும் 1
ஐயை 10
ஐயை-தன் 1
ஐயை-தன்னொடு 1
ஐயையும் 2
ஐயையை 5
ஐவர் 1
ஐவரை 1
ஐவன 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஐ (11)

ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – புகார்:5/140
ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும் – புகார்:6/17
ஐ_வகை நின்ற அருகத்தானத்து – புகார்:10/18
ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – மது:14/191
ஐ என்றாள் ஆயர் மகள் – மது:17/70
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – மது:19/25
ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – வஞ்சி:26/134
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – வஞ்சி:27/174
ஆரிய மன்னர் ஐ_இருபதின்மரை – வஞ்சி:27/177
ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – வஞ்சி:28/130
ஐ_வகை வகுக்கும் பருவம் கொண்டது – வஞ்சி:30/11

TOP


ஐ_வகை (4)

ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – புகார்:5/140
ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும் – புகார்:6/17
ஐ_வகை நின்ற அருகத்தானத்து – புகார்:10/18
ஐ_வகை வகுக்கும் பருவம் கொண்டது – வஞ்சி:30/11

TOP


ஐ_வேறு (1)

ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – மது:14/191

TOP


ஐ_இருபதின்மரை (1)

ஆரிய மன்னர் ஐ_இருபதின்மரை
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – வஞ்சி:27/177,178

TOP


ஐ_ஈராயிரம் (1)

ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – வஞ்சி:26/134

TOP


ஐ_ஐந்து (1)

ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – வஞ்சி:28/130

TOP


ஐ_ஐந்து_இரட்டி (1)

ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை – வஞ்சி:27/174,175

TOP


ஐஞ்ஞூற்றுவர் (3)

எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:26/167
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:27/128
கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:27/188

TOP


ஐஞ்ஞூற்றுவர்க்கு (1)

ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – வஞ்சி:25/162

TOP


ஐஞ்ஞூற்றுவரும் (1)

கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் – வஞ்சி:26/138

TOP


ஐஞ்ஞூறும் (1)

கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும்
ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – வஞ்சி:26/133,134

TOP


ஐது (1)

ஐது மண்டிலத்தால் கூடை போக்கி – புகார்:3/152

TOP


ஐந்திணை (1)

ஐந்திணை மருங்கின் அறம் பொருள் இன்பம் – வஞ்சி:30/221

TOP


ஐந்தின் (1)

கூறிய ஐந்தின் கொள்கை போல – புகார்:3/155

TOP


ஐந்தினும் (2)

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் – புகார்:8/36
அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் – மது:11/128

TOP


ஐந்து (5)

பத்து துவரினும் ஐந்து விரையினும் – புகார்:6/76
பணை ஐந்து ஓங்கிய பாசிலை போதி – புகார்:10/11
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து – வஞ்சி:26/26
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – வஞ்சி:27/174
ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – வஞ்சி:28/130

TOP


ஐந்தும் (3)

இ ஆறு_ஐந்தும் – புகார்:0/86
எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – புகார்:3/176
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி – புகார்:10/19

TOP


ஐம் (7)

ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – புகார்:10/42
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – புகார்:10/43
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – மது:11/109
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – மது:11/195
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த – மது:15/97
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – மது:23/69
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – வஞ்சி:28/42

TOP


ஐம்_சில்_ஓதியை (1)

ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – மது:11/195

TOP


ஐம்பத்து (1)

நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – வஞ்சி:26/128

TOP


ஐம்பத்துஇருவர் (1)

ஐம்பத்துஇருவர் கடும் தேராளரொடு – வஞ்சி:26/223

TOP


ஐம்பத்துஇருவரொடு (1)

ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு – வஞ்சி:26/146

TOP


ஐம்பதிற்று (1)

கொடுஞ்சி நெடும் தேர் ஐம்பதிற்று இரட்டியும் – வஞ்சி:26/132

TOP


ஐம்பதின்மர் (2)

அந்தரசாரிகள் ஆறு_ஐம்பதின்மர் – வஞ்சி:27/93
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – வஞ்சி:29/167

TOP


ஐம்பால் (1)

பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – புகார்:7/68

TOP


ஐம்பாலோய் (1)

வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் – புகார்:7/142

TOP


ஐம்பெருங்குழுவும் (3)

அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும்
தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப – புகார்:3/126,127
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – புகார்:5/157
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – வஞ்சி:26/38

TOP


ஐய (6)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – புகார்:7/34,35
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – புகார்:7/38,39
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – புகார்:7/42,43
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – புகார்:7/128,129
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – புகார்:7/132,133
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – புகார்:7/136,137

TOP


ஐயம் (2)

ஐயம் இன்றி அறிந்தன போல – மது:13/186
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – வஞ்சி:29/97

TOP


ஐயர் (6)

கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர்
உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – புகார்:7/81,82
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர்
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – புகார்:7/89,90
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – புகார்:10/160
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர்
தலைநாளை வேட்டத்து தந்த நல் ஆன் நிரைகள் – மது:12/128,129
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர்
கரந்தை அலற கவர்ந்த இன நிரைகள் – மது:12/132,133
கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர்
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – மது:12/136,137

TOP


ஐயவி (1)

ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் – மது:15/213

TOP


ஐயனும் (1)

அன நடை மாதரும் ஐயனும் தொழுது – மது:13/175

TOP


ஐயை (10)

காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – புகார்:10/99
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – மது:11/151
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – மது:12/4
ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை – மது:12/69
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ – மது:12/91
ஐயை காணீர் அடித்தொழிலாட்டி – மது:16/12
ஐயை தன் மகளை கூஉய் – மது:17/8
மை அறு சிறப்பின் ஐயை கோயில் – மது:23/107
ஐயை அவள் மகளோடும் – வஞ்சி:29/61
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – வஞ்சி:29/162,163

TOP


ஐயை-தன் (1)

ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – மது:11/216

TOP


ஐயை-தன்னொடு (1)

வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – மது:16/33,34

TOP


ஐயையும் (2)

காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும் – புகார்:10/246
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி – மது:16/52

TOP


ஐயையை (5)

காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – புகார்:10/45
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – புகார்:10/61
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – மது:14/16
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – மது:15/119
வை எயிற்று ஐயையை கண்டாயோ தோழீ – வஞ்சி:29/100

TOP


ஐவர் (1)

ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – வஞ்சி:29/167

TOP


ஐவரை (1)

ஐவரை வென்றோன் அடி இணை அல்லது – புகார்:10/198

TOP


ஐவன (1)

ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும் – மது:11/80

TOP