மு – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 9
மு_தீ 3
மு_நூல் 2
முக 11
முகங்கள் 1
முகத்தாய் 1
முகத்தாள் 1
முகத்தாளை 1
முகத்தி 1
முகத்தில் 1
முகத்து 10
முகத்தை 2
முகந்து 1
முகம் 28
முகமே 3
முகவை 1
முகில் 4
முகிலோடும் 1
முகிழ்த்த 2
முகை 1
முச்சி 1
முசுண்டையும் 1
முட்டா 5
முட்டினும் 1
முட்டும் 1
முடங்கல் 4
முடங்கலும் 1
முடங்கி 1
முடங்கு 1
முடமே 1
முடி 31
முடி-மேல் 1
முடி_தலை 2
முடி_முதல் 1
முடிக்கு 5
முடித்த 13
முடித்ததன் 1
முடித்து 6
முடித்தோர் 1
முடிந்த 1
முடிந்தது 1
முடிந்தோர் 1
முடிநவும் 1
முடிய 1
முடியால் 1
முடியொடு 1
முடிவில் 1
முடிவு 1
முடிவு_உலகு 1
முடுக்கர் 1
முடுக்கரும் 1
முண்டக 1
முத்த 1
முத்தம் 7
முத்தமும் 1
முத்தமொடு 1
முத்தரை 1
முத்தின் 1
முத்து 11
முத்தும் 4
முத்தே 1
முத்தைக்கு 1
முத்தொடு 1
முதல் 22
முதல்வ 1
முதல்வர் 1
முதல்வன் 9
முதல்வன்-தன்னொடும் 1
முதல்வனும் 2
முதல்வனை 2
முதல்வி 1
முதல்விக்கும் 1
முதல்வியொடு 1
முதலவர் 1
முதலா 1
முதலாக 1
முதலிய 1
முதலையும் 1
முதியோர் 1
முதியோன் 1
முதிர் 8
முதிர்ந்த 1
முதிரா 5
முதிராது 1
முது 21
முது_குறை 1
முது_நீர் 2
முது_மகள் 6
முதுகு 1
முதுகுரவர் 2
முதுகுறைவிக்கு 1
முந்த 1
முந்தி 1
முந்துற 1
முந்தை 4
முந்நீரினுள் 1
முப்பத்து 2
முப்பத்து_இரு 2
மும் 2
முயக்கத்து 1
முயல் 1
முயன்று 1
முரச 1
முரசம் 5
முரசமும் 1
முரசமொடு 3
முரசு 4
முரசும் 1
முரசே 1
முரல் 1
முரி 2
முருக்கி 1
முருக்கிய 1
முருகு 2
முருந்து 1
முரைசொடு 1
முல்லை 7
முல்லையில் 1
முல்லையும் 3
முல்லையொடு 1
முலை 33
முலை-தான் 1
முலை_முகம் 2
முலைச்சி 1
முலையால் 1
முலையினர் 1
முலையினால் 1
முலையே 3
முலையை 1
முலையோ 1
முழக்கத்து 2
முழக்கமும் 2
முழங்க 1
முழங்கு 3
முழம் 1
முழவம் 1
முழவமும் 1
முழவின் 3
முழவு 1
முழவும் 1
முழவே 1
முழவொடு 1
முழு 8
முழு_மதி 2
முழுகினர் 1
முழுத்தம் 1
முழுது 4
முழுநெறி 2
முழுவதும் 6
முள் 5
முளி 1
முளை 4
முற்பகல் 2
முற்றத்து 2
முற்றம் 1
முற்றி 1
முற்றிய 5
முற்றிழை 1
முற்றிற்று 3
முற்றும் 1
முறம் 1
முறி 2
முறுவல் 2
முறுவற்கு 1
முறை 50
முறை_முறை 1
முறைபட 1
முறைமையில் 1
முறைமையின் 9
முறையாக 3
முறையான் 1
முறையின் 3
முறையுளி 1
முறையோ 4
முன் 46
முன்_துறை 1
முன்கை 1
முன்கைக்கு 1
முன்பின் 1
முன்பொடு 1
முன்றில் 11
முன்றிலின் 1
முன்றிலும் 1
முன்றிலே 3
முன்னதன் 1
முன்னம் 1
முன்னர் 8
முன்னரே 2
முன்னிய 2
முன்னியது 1
முன்னிலை 1
முன்னே 1
முன்னை 4
முனி 4
முனியாதே 1
முனிவர் 1
முனிவரும் 1
முனிவன் 1
முனிவு 1
முனை 4
முனை_அகத்து 1
முனை_இடம் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மு (9)

திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ் – மது:11/1
மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ – மது:22/34
மு_தீ செல்வத்து நான்மறை முற்றி – மது:23/68
இரு_மு காவதத்து இடைநிலத்து யாங்கணும் – மது:23/145
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – வஞ்சி:25/127
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – வஞ்சி:25/127
முதிராது அ நீர் மு திற மகளிரை – வஞ்சி:30/66
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – வஞ்சி:30/119
வலமுறை மு முறை வந்தனன் வணங்கி – வஞ்சி:30/155

TOP


மு_தீ (3)

மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ – மது:22/34
மு_தீ செல்வத்து நான்மறை முற்றி – மது:23/68
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – வஞ்சி:25/127

TOP


மு_நூல் (2)

மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – வஞ்சி:25/127
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – வஞ்சி:30/119

TOP


முக (11)

மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம் – புகார்:1/36
ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – புகார்:3/109
ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – புகார்:3/109
அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும் – புகார்:5/170
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – புகார்:6/41
படு கடன் இது உகு பலி முக மடையே – மது:12/151
பரி முக அம்பியும் கரி முக அம்பியும் – மது:13/176
பரி முக அம்பியும் கரி முக அம்பியும் – மது:13/176
அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும் – மது:13/177
புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும் – வஞ்சி:25/29
திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – வஞ்சி:25/155

TOP


முகங்கள் (1)

அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – வஞ்சி:24/51

TOP


முகத்தாய் (1)

புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – புகார்:7/181

TOP


முகத்தாள் (1)

தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – புகார்:7/127

TOP


முகத்தாளை (1)

உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய் – புகார்:7/227

TOP


முகத்தி (1)

குவளை உண்கண் தவள வாள் முகத்தி
கடை எயிறு அரும்பிய பவள செ வாய்த்தி – மது:23/2,3

TOP


முகத்தில் (1)

அலம்வந்த மதி முகத்தில்
சில செம் கயல் நீர் உமிழ – வஞ்சி:29/39,40

TOP


முகத்து (10)

தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து
புரி குழல் அளகத்து புகல் ஏக்கற்று – புகார்:2/19,20
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து
செம் கடை மழை கண் இரண்டா ஈத்தது – புகார்:2/51,52
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – புகார்:5/149
மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை – புகார்:5/230
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – புகார்:7/47
மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு – புகார்:8/76
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – புகார்:8/111
முதிரா முலை முகத்து எழுந்த தீயின் – வஞ்சி:25/76
ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க – வஞ்சி:26/71
மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட – வஞ்சி:28/28

TOP


முகத்தை (2)

வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை
கானல் பாணிக்கு அலந்தாய் காண் – புகார்:8/125,126
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – மது:21/20,21

TOP


முகந்து (1)

வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – புகார்:7/137

TOP


முகம் (28)

முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி – புகார்:0/34
தீரா காதலின் திரு முகம் நோக்கி – புகார்:2/36
திசை முகம் பசந்து செம் மலர் கண்கள் – புகார்:4/5
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய – புகார்:4/52
நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி – புகார்:5/221
செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – புகார்:7/58
ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் – புகார்:8/52
திரு_முகம் போக்கும் செவ்வியள் ஆகி – புகார்:8/53
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி – புகார்:9/72
எதிர் முகம் நோக்கிய இன்ப செவ்வியை – மது:15/171
திரு முகம் வியர்த்தது செம் கண் சேந்தன – மது:16/31
நறு மென் சாயல் முகம் என்கோ யாம் – மது:17/96
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் – மது:17/102
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி – மது:17/103
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம்
கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற – மது:19/62,63
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – மது:21/21
கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த – மது:21/22
ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது – மது:22/1
காவல் தேய்வம் கடை_முகம் அடைத்தன – மது:22/2
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள – மது:22/15
வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி – மது:23/18
மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு – மது:23/36
செம் தீ பரந்த திசை முகம் விளங்க – வஞ்சி:27/145
குடி புறந்தரும்-கால் திரு முகம் போல – வஞ்சி:28/38
திரு முகம் வியர்த்தனள் செம் கண் சிவந்தனள் – வஞ்சி:30/41
தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து – வஞ்சி:30/72
மாடல மறையோன் தன் முகம் நோக்க – வஞ்சி:30/117
முலை_முகம் திருகிய மூவா மேனி – வஞ்சி:30/150

TOP


முகமே (3)

முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – புகார்:7/71
மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே
இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே – புகார்:7/75,76
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே
இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே – புகார்:7/79,80

TOP


முகவை (1)

பெரும் செய் நெல்லின் முகவை பாட்டும் – புகார்:10/137

TOP


முகில் (4)

கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு – புகார்:5/204
முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் – மது:14/98
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – வஞ்சி:28/18
பொடி ஆடிய கரு முகில் தன் – வஞ்சி:29/41

TOP


முகிலோடும் (1)

திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என – மது:18/31

TOP


முகிழ்த்த (2)

முளை குட நிரையினர் முகிழ்த்த மூரலர் – புகார்:1/61
முகிழ்த்த கை – மது:22/47

TOP


முகை (1)

பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு – புகார்:8/55

TOP


முச்சி (1)

நறு மலர் அவிழ்ந்த நாறு இரு முச்சி
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – மது:22/122,123

TOP


முசுண்டையும் (1)

குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும்
விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும் – மது:13/155,156

TOP


முட்டா (5)

முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு – மது:11/97
முட்டா கூவியர் மோதக புகையும் – மது:13/123
முட்டா வைகல் முறைமையின் வழாஅ – மது:14/159
முட்டா இன்பத்து முடிவு_உலகு எய்தினர் – மது:15/197
வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டா
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – மது:22/132,133

TOP


முட்டினும் (1)

முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும் – புகார்:10/73

TOP


முட்டும் (1)

முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும்
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து – புகார்:10/73,74

TOP


முடங்கல் (4)

முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – புகார்:8/49
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் – மது:13/76
என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல்
பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது – மது:13/96,97
மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு – வஞ்சி:26/171

TOP


முடங்கலும் (1)

கருப்ப துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கும் நீங்கிய செம் கொடி வல்லியும் – மது:14/197,198

TOP


முடங்கி (1)

மறி முடங்கி ஆடாமையும் – மது:17/21

TOP


முடங்கு (1)

பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – மது:15/50

TOP


முடமே (1)

பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து – புகார்:3/46,47

TOP


முடி (31)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – புகார்:0/40
முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது – புகார்:0/61
கடி மலர் களைந்து முடி நாறு அழுத்தி – புகார்:10/127
முடி உடை வேந்தர் மூவருள்ளும் – புகார்:10/249
முடி வளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று – மது:11/26
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய – மது:11/72
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – மது:11/148
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – மது:12/23
அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு – மது:12/144
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை – மது:14/147
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – மது:16/114
இடி படை வானவன் முடி_தலை உடைத்த – மது:17/163
முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு – மது:22/39
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன் – மது:22/64
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – மது:23/51
முடி கெழு வேந்தர் மூவருள்ளும் – மது:23/205
புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – வஞ்சி:25/126
வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை – வஞ்சி:26/13
வண்ண சே அடி மணி முடி வைத்தலின் – வஞ்சி:26/65
முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி – வஞ்சி:26/236
முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி – வஞ்சி:26/242
கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி – வஞ்சி:27/4
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – வஞ்சி:27/39
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – வஞ்சி:27/51
வட திசை மன்னர் மணி முடி ஏறினள் – வஞ்சி:27/65
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன் – வஞ்சி:28/37
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – வஞ்சி:28/169
எம் போலும் முடி மன்னர் – வஞ்சி:29/17
அவர் முடி_தலை அணங்கு ஆகிய – வஞ்சி:29/26
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – வஞ்சி:29/67
முடி உடை வேந்தர் மூவருள்ளும் – வஞ்சி:30/203

TOP


முடி-மேல் (1)

நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – வஞ்சி:29/127

TOP


முடி_தலை (2)

இடி படை வானவன் முடி_தலை உடைத்த – மது:17/163
அவர் முடி_தலை அணங்கு ஆகிய – வஞ்சி:29/26

TOP


முடி_முதல் (1)

முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு – மது:22/39

TOP


முடிக்கு (5)

கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து – மது:12/109
மதி_முடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும் – வஞ்சி:25/134
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் – வஞ்சி:26/20
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து – வஞ்சி:26/51
தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் – வஞ்சி:27/36

TOP


முடித்த (13)

முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே – புகார்:1/19
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் – புகார்:2/39
இன்னவை முடித்த நல் நிற சென்னியன் – மது:22/20
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி – மது:22/70
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி – வஞ்சி:26/54
மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன் – வஞ்சி:26/247
வில்லவன்கோதையொடு வென்று வினை முடித்த
பல் வேல் தானை படை பல ஏவி – வஞ்சி:26/251,252
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை – வஞ்சி:27/112,113
முண்டக கோதையொடு முடித்த குஞ்சியின் – வஞ்சி:27/235
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – வஞ்சி:28/10
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:28/133
கேள்வி முடித்த வேள்வி மாக்களை – வஞ்சி:28/192
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு – வஞ்சி:30/213

TOP


முடித்ததன் (1)

நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – வஞ்சி:28/199

TOP


முடித்து (6)

ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என – மது:16/155
தேரோ வந்தது செய்வினை முடித்து என – வஞ்சி:26/119
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன் – வஞ்சி:26/123
வாள் வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் – வஞ்சி:27/30
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன் – வஞ்சி:27/45,46
வட திசை தும்பை வாகையொடு முடித்து
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு – வஞ்சி:27/198,199

TOP


முடித்தோர் (1)

அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்
உத்தர_குருவின் ஒப்ப தோன்றிய – புகார்:2/9,10

TOP


முடிந்த (1)

துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – புகார்:9/30

TOP


முடிந்தது (1)

முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் – புகார்:0/45

TOP


முடிந்தோர் (1)

வாள் வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்
குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து – வஞ்சி:27/30,31

TOP


முடிநவும் (1)

வம்பின் முடிநவும் மாலையின் புனைநவும் – மது:14/175

TOP


முடிய (1)

மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய
தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – மது:17/143,144

TOP


முடியால் (1)

நில அரசர் நீள் முடியால்
பலர் தொழு படிமம் காட்டி – வஞ்சி:29/33,34

TOP


முடியொடு (1)

முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செம் கூதாளம் – மது:22/39,40

TOP


முடிவில் (1)

குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – மது:18/6

TOP


முடிவு (1)

முட்டா இன்பத்து முடிவு_உலகு எய்தினர் – மது:15/197

TOP


முடிவு_உலகு (1)

முட்டா இன்பத்து முடிவு_உலகு எய்தினர் – மது:15/197

TOP


முடுக்கர் (1)

உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி – வஞ்சி:27/154

TOP


முடுக்கரும் (1)

முழவு கண் துயிலாது முடுக்கரும் வீதியும் – புகார்:5/187

TOP


முண்டக (1)

முண்டக கோதையொடு முடித்த குஞ்சியின் – வஞ்சி:27/235

TOP


முத்த (1)

முத்த பூணூல் அத்தகு புனை கலம் – மது:23/96

TOP


முத்தம் (7)

தவள முத்தம் குறுவாள் செம் கண் – புகார்:7/94
தவள முத்தம் குறுவாள் செம் கண் – புகார்:7/95
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – புகார்:7/129
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து – வஞ்சி:27/244,245
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம்
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – வஞ்சி:29/177,178
பாடல்_சால் முத்தம் பவழ உலக்கையான் – வஞ்சி:29/182
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம்
வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால் – வஞ்சி:29/187,188

TOP


முத்தமும் (1)

ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும் – புகார்:8/95

TOP


முத்தமொடு (1)

ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் – புகார்:2/70

TOP


முத்தரை (1)

பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ் – புகார்:6/87

TOP


முத்தின் (1)

நாகு இள முத்தின் நகை நலம் காட்டி – புகார்:8/81

TOP


முத்து (11)

முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி – புகார்:0/34
திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – புகார்:2/71
மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும் – புகார்:4/62
விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – புகார்:4/71
கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து – புகார்:5/150
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – புகார்:7/128
வெண் முத்து உதிர்த்து வெண்_நிலா திகழும் – மது:11/185
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – மது:11/186
இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப – மது:14/136
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே – மது:20/81
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – வஞ்சி:27/202

TOP


முத்தும் (4)

மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் – புகார்:5/19
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/36
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும் – புகார்:8/19
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும்
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து – வஞ்சி:26/168,169

TOP


முத்தே (1)

மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே
காசு அறு விரையே கரும்பே தேனே – புகார்:2/73,74

TOP


முத்தைக்கு (1)

முத்தைக்கு நல் விளரி-தான் – மது:17/64

TOP


முத்தொடு (1)

கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – மது:14/80

TOP


முதல் (22)

இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும் – புகார்:3/87
செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின் – புகார்:4/22
குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் – புகார்:5/35
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – புகார்:8/32
உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும் – புகார்:8/37
குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் – புகார்:8/38
சாரணர் வாய்மொழி கேட்டு தவ முதல்
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – புகார்:10/192,193
தென்னவன் குல முதல் செல்வன் தோன்றி – மது:13/18
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – மது:13/109
தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – மது:15/16
குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் – மது:16/84
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – மது:16/114
குல_முதல் தேவி கூடாது ஏக – மது:16/136
குட முதல் இடமுறையா குரல் துத்தம் – மது:17/54
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – மது:20/89
முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு – மது:22/39
குல முதல் கிழத்தி ஆதலின் அலமந்து – மது:23/13
தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி – மது:23/86
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற – வஞ்சி:26/2
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:27/125
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின் – வஞ்சி:27/134
கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி – வஞ்சி:29/164

TOP


முதல்வ (1)

மா மறை முதல்வ மதுரை செம் நெறி – மது:11/58

TOP


முதல்வர் (1)

கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் – வஞ்சி:26/138

TOP


முதல்வன் (9)

மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ – புகார்:5/174
தரும முதல்வன் தலைவன் தருமன் – புகார்:10/178
விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – புகார்:10/189
முடி வளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று – மது:11/26
மறை முது முதல்வன் பின்னர் மேய – மது:12/164
வேத_முதல்வன் பயந்தோன் என்பது – மது:14/48
மா மறை முதல்வன் மாடலன் என்போன் – மது:15/13
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு – மது:22/35
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே – வஞ்சி:27/172

TOP


முதல்வன்-தன்னொடும் (1)

தண்ணுமை முதல்வன்-தன்னொடும் பொருந்தி – புகார்:3/62

TOP


முதல்வனும் (2)

அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும்
சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை – புகார்:3/55,56
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும்
கோவலன்-தனக்கு கூறும்-காலை – மது:15/113,114

TOP


முதல்வனை (2)

மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி – மது:15/165
முன் தேர் குரவை முதல்வனை வாழ்த்தி – வஞ்சி:26/240

TOP


முதல்வி (1)

புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி – மது:13/2

TOP


முதல்விக்கும் (1)

புன மயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
என் திறம் உரையாது ஏகு என்று ஏக – மது:11/199,200

TOP


முதல்வியொடு (1)

முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு
பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர் – மது:13/135,136

TOP


முதலவர் (1)

கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:27/188

TOP


முதலா (1)

சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற – வஞ்சி:26/137

TOP


முதலாக (1)

சிலம்பு முதலாக சென்ற கலனொடு – புகார்:9/74

TOP


முதலிய (1)

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் – வஞ்சி:28/80

TOP


முதலையும் (1)

அரவும் சூரும் இரை தேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா – மது:13/7,8

TOP


முதியோர் (1)

முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ – வஞ்சி:30/115

TOP


முதியோன் (1)

செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக – வஞ்சி:27/7

TOP


முதிர் (8)

முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் – புகார்:0/45
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் – புகார்:2/30
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – புகார்:8/49
முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும் – புகார்:10/73
சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – புகார்:10/105
தீவினை முதிர் வலை சென்று பட்டு இருந்த – மது:16/156
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி – மது:23/80
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை – வஞ்சி:28/158

TOP


முதிர்ந்த (1)

பகல் செல முதிர்ந்த படர் கூர் மாலை – வஞ்சி:27/144

TOP


முதிரா (5)

முதிரா கிளவியின் முள் எயிறு இலங்க – புகார்:10/40
முதிரா முலை குறைத்தாள் முன்னரே வந்தாள் – மது:22/160
முதிரா முலை முகத்து எழுந்த தீயின் – வஞ்சி:25/76
முது குடி பிறந்த முதிரா செல்வியை – வஞ்சி:25/133
முதிரா முலை பூசல் கேட்டு ஆங்கு – வஞ்சி:29/58

TOP


முதிராது (1)

முதிராது அ நீர் மு திற மகளிரை – வஞ்சி:30/66

TOP


முது (21)

மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட – புகார்:1/54
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ – புகார்:5/174
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – புகார்:7/41
முள் உடை காட்டின் முது நரி ஆக என – புகார்:10/232
மா முது மறையோன் வந்திருந்தோனை – மது:11/31
நயன் இல் மொழியின் நரை முது தாடி – மது:12/138
மறை முது முதல்வன் பின்னர் மேய – மது:12/164
மா முது கணிகையர் மாதவி மகட்கு – மது:15/25
ஆயர் முது_மகள் மாதரி என்போள் – மது:15/118
தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள் – மது:15/122
முளை இள வெண் பல் முது_குறை நங்கையொடு – மது:15/202
இடை முது_மகள் வந்து தோன்றும்-மன் – மது:17/10
இடை முது_மகள் இவர்க்கு – மது:17/52
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் – மது:17/108
ஆயர் முது_மகள் ஆடிய சாயலாள் – மது:18/2
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – வஞ்சி:25/123
முது குடி பிறந்த முதிரா செல்வியை – வஞ்சி:25/133
முது நீர் உலகின் முழுவதும் இல்லை – வஞ்சி:25/167
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – வஞ்சி:27/51
முது_நீர் உலகின் முழுவதும் இல்லை – வஞ்சி:28/182
ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல் – வஞ்சி:30/132

TOP


முது_குறை (1)

முளை இள வெண் பல் முது_குறை நங்கையொடு – மது:15/202

TOP


முது_நீர் (2)

முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – வஞ்சி:27/51
முது_நீர் உலகின் முழுவதும் இல்லை – வஞ்சி:28/182

TOP


முது_மகள் (6)

ஆயர் முது_மகள் மாதரி என்போள் – மது:15/118
தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள் – மது:15/122
இடை முது_மகள் வந்து தோன்றும்-மன் – மது:17/10
இடை முது_மகள் இவர்க்கு – மது:17/52
ஆயர் முது_மகள் ஆடிய சாயலாள் – மது:18/2
ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல் – வஞ்சி:30/132

TOP


முதுகு (1)

மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட – வஞ்சி:26/82

TOP


முதுகுரவர் (2)

எம் முதுகுரவர் என் உற்றனர்-கொல் – மது:16/60
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன் – மது:16/67

TOP


முதுகுறைவிக்கு (1)

சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன் – மது:16/68

TOP


முந்த (1)

முந்த சென்று முழு பலி_பீடிகை – புகார்:5/78

TOP


முந்தி (1)

தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – மது:21/31

TOP


முந்துற (1)

முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி – வஞ்சி:26/236

TOP


முந்தை (4)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – புகார்:0/46
முந்தை நில்லா முனிவு இகந்தனனா – மது:16/76
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் – மது:17/108
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – மது:23/152

TOP


முந்நீரினுள் (1)

முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான் – மது:17/127

TOP


முப்பத்து (2)

முப்பத்து_இரு வகை ஓமாலிகையினும் – புகார்:6/77
பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ் – புகார்:6/87

TOP


முப்பத்து_இரு (2)

முப்பத்து_இரு வகை ஓமாலிகையினும் – புகார்:6/77
பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ் – புகார்:6/87

TOP


மும் (2)

வந்தனை மும் முறை மலை வலம் செய்தால் – மது:11/107
வல_முறை மும் முறை வாரா அலமந்து – மது:21/44

TOP


முயக்கத்து (1)

பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் – மது:14/112

TOP


முயல் (1)

கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு – புகார்:5/204

TOP


முயன்று (1)

பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று
துறந்தோர்-தம் முன் துறவி எய்தவும் – வஞ்சி:27/94,95

TOP


முரச (1)

காலை முரச கனை குரல் ஓதையும் – மது:13/140

TOP


முரசம் (5)

வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – புகார்:5/141,142
காலை முரசம் கனை குரல் இயம்ப – மது:14/14
காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின் – மது:17/6
காலை முரசம் கடைமுகத்து எழுதலும் – வஞ்சி:26/53
இடி குரல் முரசம் இழுமென் பாண்டில் – வஞ்சி:26/194

TOP


முரசமும் (1)

வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர் – மது:22/150

TOP


முரசமொடு (3)

புள் வாய் முரசமொடு பொறி மயிர் வாரணத்து – புகார்:4/77
மயிர் கண் முரசமொடு வான் பலி ஊட்டி – புகார்:5/88
மயிர் கண் முரசமொடு மாதிரம் அதிர – வஞ்சி:26/196

TOP


முரசு (4)

முரசு இயம்பின முருகு அதிர்ந்தன – புகார்:1/46
முரசு எழுந்து இயம்ப பல்_இயம் ஆர்ப்ப – புகார்:3/125
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ – மது:23/130
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப – வஞ்சி:26/35

TOP


முரசும் (1)

வாளும் குடையும் மயிர் கண் முரசும்
நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ – புகார்:5/91,92

TOP


முரசே (1)

தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – மது:17/164

TOP


முரல் (1)

மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – புகார்:7/41

TOP


முரி (2)

முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – புகார்:7/71
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – வஞ்சி:28/18

TOP


முருக்கி (1)

வட திசை மன்னர் மன் எயில் முருக்கி
கவடி வித்திய கழுதை ஏர் உழவன் – வஞ்சி:27/225,226

TOP


முருக்கிய (1)

முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – புகார்:10/247,248

TOP


முருகு (2)

முரசு இயம்பின முருகு அதிர்ந்தன – புகார்:1/46
முருகு விரி தாமரை முழு மலர் தோய – வஞ்சி:27/236

TOP


முருந்து (1)

முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர் – மது:12/132

TOP


முரைசொடு (1)

முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி – மது:22/53

TOP


முல்லை (7)

இல் வளர் முல்லை மல்லிகை மயிலை – புகார்:5/191
அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை
நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த – புகார்:9/1,2
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி – மது:13/120,121
அருவி முல்லை அணி நகை_ஆட்டி – மது:13/165
முல்லை அம் பூம் குழல்-தான் – மது:17/38
முல்லை தீம் பாணி என்றாள் – மது:17/76
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/90

TOP


முல்லையில் (1)

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு – புகார்:4/15

TOP


முல்லையும் (3)

எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் – புகார்:5/214
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து – மது:11/64
தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் – மது:14/76

TOP


முல்லையொடு (1)

இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த – புகார்:4/27

TOP


முலை (33)

ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – புகார்:0/5
முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி – புகார்:0/34
திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – புகார்:2/69
அலர் முலை ஆகத்து அடையாது வருந்த – புகார்:4/63
அலைநீர் ஆடை மலை முலை ஆகத்து – புகார்:5/1
பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – புகார்:7/91
ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும் – புகார்:8/95
சீர் இள வன முலை சேராது ஒழியவும் – மது:13/20
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை
கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய் – மது:13/163,164
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள் – மது:15/201
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் – மது:17/15
இட முலை கையால் திருகி மதுரை – மது:21/43
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
மை தடம் கண்ணார் மைந்தர்-தம்முடன் – மது:22/119,120
முதிரா முலை குறைத்தாள் முன்னரே வந்தாள் – மது:22/160
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி – மது:23/14
முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே – வஞ்சி:24/4
ஒரு முலை இழந்த நங்கைக்கு – வஞ்சி:24/21
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே – வஞ்சி:24/56
தான் முலை இழந்து தனி துயர் எய்தி – வஞ்சி:25/58
முதிரா முலை முகத்து எழுந்த தீயின் – வஞ்சி:25/76
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை
கரும் கயல் நெடும் கண் காரிகையாரோடு – வஞ்சி:26/110,111
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – வஞ்சி:27/129
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – வஞ்சி:27/185
வானவன் வந்தான் வளர் இள வன முலை
தோள் நலம் உணீஇய தும்பை போந்தையொடு – வஞ்சி:27/247,248
கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ – வஞ்சி:28/16
மேகலை ஒலியாது மென் முலை அசையாது – வஞ்சி:28/72
தட முலை பூசல்_ஆட்டியை – வஞ்சி:29/35
முதிரா முலை பூசல் கேட்டு ஆங்கு – வஞ்சி:29/58
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – வஞ்சி:29/84
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – வஞ்சி:29/151
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – வஞ்சி:29/152
புணர் முலை விழுந்தன புல் அகம் அகன்றது – வஞ்சி:30/16
முலை_முகம் திருகிய மூவா மேனி – வஞ்சி:30/150

TOP


முலை-தான் (1)

நன் கொடி மென்_முலை-தான் – மது:17/42

TOP


முலை_முகம் (2)

முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி – புகார்:0/34
முலை_முகம் திருகிய மூவா மேனி – வஞ்சி:30/150

TOP


முலைச்சி (1)

துளை எயிற்று உரக கச்சு உடை முலைச்சி
வளை உடை கையில் சூலம் ஏந்தி – மது:12/59,60

TOP


முலையால் (1)

வடம் கொள் முலையால் மழை மின்னு போல – புகார்:7/87

TOP


முலையினர் (1)

ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர் – புகார்:1/59

TOP


முலையினால் (1)

முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் – வஞ்சி:24/104

TOP


முலையே (3)

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – புகார்:7/48
பழுது அறு திரு மொழியே பணை இள வன முலையே
முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – புகார்:7/70,71
இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே – புகார்:7/80

TOP


முலையை (1)

மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து – மது:21/45

TOP


முலையோ (1)

மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் – புகார்:7/83

TOP


முழக்கத்து (2)

உயிர் பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து
மயிர் கண் முரசமொடு வான் பலி ஊட்டி – புகார்:5/87,88
உயிர்_பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து
மயிர் கண் முரசமொடு மாதிரம் அதிர – வஞ்சி:26/195,196

TOP


முழக்கமும் (2)

போரில் கொண்ட பொரு கரி முழக்கமும்
வாரி கொண்ட வய கரி முழக்கமும் – மது:13/145,146
வாரி கொண்ட வய கரி முழக்கமும்
பணை நிலை புரவி ஆலும் ஓதையும் – மது:13/146,147

TOP


முழங்க (1)

படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்கு தூது – மது:17/155

TOP


முழங்கு (3)

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் – புகார்:2/3
பழம் கடன் உற்ற முழங்கு வாய் சாலினி – மது:12/7
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி – வஞ்சி:28/206

TOP


முழம் (1)

நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – புகார்:10/210

TOP


முழவம் (1)

தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல் – மது:22/140

TOP


முழவமும் (1)

வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் – மது:13/144,145

TOP


முழவின் (3)

பண் அமை முழவின் கண் எறி அறிந்து – புகார்:3/61
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும் – புகார்:10/139
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் – வஞ்சி:25/6

TOP


முழவு (1)

முழவு கண் துயிலாது முடுக்கரும் வீதியும் – புகார்:5/187

TOP


முழவும் (1)

மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும் – வஞ்சி:28/55

TOP


முழவே (1)

பின் வழி நின்றது முழவே முழவொடு – புகார்:3/141

TOP


முழவொடு (1)

பின் வழி நின்றது முழவே முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை – புகார்:3/141,142

TOP


முழு (8)

முழு நீர் வார முழு மெயும் பனித்து – புகார்:4/6
முழு நீர் வார முழு மெயும் பனித்து – புகார்:4/6
முந்த சென்று முழு பலி_பீடிகை – புகார்:5/78
எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ – புகார்:5/226
முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – புகார்:7/71
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே – புகார்:7/79
எழுவும் சீப்பும் முழு விறல் கணையமும் – மது:15/215
முருகு விரி தாமரை முழு மலர் தோய – வஞ்சி:27/236

TOP


முழு_மதி (2)

முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – புகார்:7/71
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே – புகார்:7/79

TOP


முழுகினர் (1)

அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி – புகார்:5/119

TOP


முழுத்தம் (1)

முழுத்தம் ஈங்கு இது முன்னிய திசை மேல் – வஞ்சி:26/30

TOP


முழுது (4)

முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே – புகார்:1/19
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – புகார்:1/31
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி – புகார்:3/38
விரி கதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட – புகார்:4/1

TOP


முழுநெறி (2)

கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை – புகார்:2/14
கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ – புகார்:2/34

TOP


முழுவதும் (6)

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் – புகார்:2/3
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் – புகார்:2/30
முது நீர் உலகின் முழுவதும் இல்லை – வஞ்சி:25/167
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – வஞ்சி:27/202
முது_நீர் உலகின் முழுவதும் இல்லை – வஞ்சி:28/182
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி – வஞ்சி:28/230

TOP


முள் (5)

முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப – புகார்:4/78
முதிரா கிளவியின் முள் எயிறு இலங்க – புகார்:10/40
முள் உடை காட்டின் முது நரி ஆக என – புகார்:10/232
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் – மது:12/10
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர் – மது:13/42

TOP


முளி (1)

பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் – மது:11/76

TOP


முளை (4)

முளை குட நிரையினர் முகிழ்த்த மூரலர் – புகார்:1/61
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே – புகார்:7/79
முளை வெண் திங்கள் என்ன சாத்தி – மது:12/26
முளை இள வெண் பல் முது_குறை நங்கையொடு – மது:15/202

TOP


முற்பகல் (2)

முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – மது:21/3
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின் – மது:22/78

TOP


முற்றத்து (2)

நிலவுப்பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்து
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு – புகார்:4/31,32
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து
இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது – வஞ்சி:25/34,35

TOP


முற்றம் (1)

வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் – வஞ்சி:25/9

TOP


முற்றி (1)

மு_தீ செல்வத்து நான்மறை முற்றி
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – மது:23/68,69

TOP


முற்றிய (5)

நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை – மது:15/12
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – மது:16/105,106
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன் – வஞ்சி:27/46
கைவினை முற்றிய தெய்வ படிமத்து – வஞ்சி:28/228
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும் – வஞ்சி:30/234,235

TOP


முற்றிழை (1)

முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி – வஞ்சி:28/230

TOP


முற்றிற்று (3)

புகார் காண்டம் முற்றிற்று – புகார்:10/268
மதுரை காண்டம் முற்றிற்று – மது:23/221
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று – வஞ்சி:30/217

TOP


முற்றும் (1)

சிலப்பதிகாரம் முற்றும் – வஞ்சி:30/235

TOP


முறம் (1)

முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய – புகார்:10/247

TOP


முறி (2)

தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் – புகார்:4/39
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி
செம் தளிர் மேனி சேராது ஒழியவும் – மது:13/23,24

TOP


முறுவல் (2)

தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – புகார்:7/127
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி – புகார்:9/72

TOP


முறுவற்கு (1)

வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – மது:16/80

TOP


முறை (50)

முறை எழுந்தன பணிலம் வெண்குடை – புகார்:1/47
அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – புகார்:2/49
இறு முறை காணும் இயல்பினின் அன்றே – புகார்:2/50
ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – புகார்:3/70
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது – புகார்:3/83
யாழ் மேற்பாலை இட முறை மெலிய – புகார்:3/91
குழல் மேல் கோடி வல முறை மெலிய – புகார்:3/92
ஆறும் நாலும் அ முறை போக்கி – புகார்:3/154
பின்னையும் அ முறை பேரிய பின்றை – புகார்:3/156
விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – புகார்:3/162
முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப – புகார்:4/78
முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப – புகார்:4/78
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும் – புகார்:5/45
பயில் தொழில் குயிலுவர் பல் முறை கருவியர் – புகார்:5/52
எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன – புகார்:5/239
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால் – மது:11/107
வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும் – மது:11/129
விதி முறை பிழையா விளங்கிய சாதியும் – மது:14/187
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு – மது:16/45
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம் என்று – மது:17/7
முன்னை ஆம் என்றாள் முறை
மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – மது:17/60,61
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் – மது:17/108
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – மது:17/143
முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – மது:19/3
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – மது:20/38
வல_முறை மும் முறை வாரா அலமந்து – மது:21/44
வல_முறை மும் முறை வாரா அலமந்து – மது:21/44
கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – மது:22/103
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது – மது:22/104
யாம் முறை போவது இயல்பு அன்றோ என – மது:22/106
புறவு நிறை புக்கோன் கறவை முறை செய்தோன் – மது:23/58
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – மது:23/70
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – மது:23/101
அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் – மது:23/116
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – மது:23/117
கோன்_முறை அறைந்த கொற்ற வேந்தன் – மது:23/131
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – மது:23/132
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்ட பின் – மது:23/178
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – வஞ்சி:24/110
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – வஞ்சி:24/111
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – வஞ்சி:24/112
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற – வஞ்சி:26/2
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப – வஞ்சி:26/6
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின் – வஞ்சி:27/134
குரல் குரலாக வரு முறை பாலையின் – வஞ்சி:28/33
துத்தம் குரலா தொல் முறை இயற்கையின் – வஞ்சி:28/34
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது – வஞ்சி:28/207
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – வஞ்சி:29/115
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை – வஞ்சி:29/141
வலமுறை மு முறை வந்தனன் வணங்கி – வஞ்சி:30/155

TOP


முறை_முறை (1)

முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப – புகார்:4/78

TOP


முறைபட (1)

நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – மது:11/69

TOP


முறைமையில் (1)

சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி – புகார்:6/33

TOP


முறைமையின் (9)

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு – புகார்:3/86
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப – புகார்:3/129,130
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து – மது:11/64
முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு – மது:13/135
முட்டா வைகல் முறைமையின் வழாஅ – மது:14/159
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் – மது:16/162
மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ – மது:22/34
கூத்து உட்படுவோன் காட்டிய முறைமையின்
ஏத்தினர் அறியா இரும் கலன் நல்கி – வஞ்சி:26/125,126
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி – வஞ்சி:28/193,194

TOP


முறையாக (3)

ஒரு முறையாக பெற்றனள் அதுவே – புகார்:3/163
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி – மது:11/130
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் – மது:22/105

TOP


முறையான் (1)

தொன்று படு முறையான் நிறுத்தி – மது:17/51

TOP


முறையின் (3)

வந்த முறையின் வழிமுறை வழாமல் – புகார்:3/146
அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர – வஞ்சி:26/47
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என – வஞ்சி:28/139

TOP


முறையுளி (1)

மூ வகை இயக்கமும் முறையுளி கழிப்பி – புகார்:8/42

TOP


முறையோ (4)

அரசர் முறையோ பரதர் முறையோ – மது:23/160
அரசர் முறையோ பரதர் முறையோ
ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என – மது:23/160,161
ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என – மது:23/161
ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என – மது:23/161

TOP


முன் (46)

ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி – புகார்:0/42,43
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு – புகார்:3/128
வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – புகார்:3/131
தேர் முன் நின்ற திசைமுகன் காண – புகார்:6/44
நீர் திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற – புகார்:6/50
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும் – புகார்:6/53
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – புகார்:7/33
அடுத்து_அடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம் – புகார்:8/107
கனை சுடர் கால் சீயா முன் – புகார்:9/79
கனை சுடர் கால் சீயா முன் – புகார்:9/83
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய – புகார்:10/247
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன்
மாதவி மயங்கி வான் துயர் உற்று – மது:11/178,179
கணம் கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ – மது:12/42
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – மது:12/127
முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு – மது:13/135
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – மது:14/72
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள் – மது:15/29
ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – மது:15/86
அணி திகழ் போதி அறவோன்-தன் முன்
மணிமேகலையை மாதவி அளிப்பவும் – மது:15/103,104
காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன்
மாட மதுரை மா நகர் புகுக என – மது:15/111,112
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன்
திருவில் இட்டு திகழ்தரு மேனியன் – மது:15/155,156
யாப்புறவு இல்லை என முன் போந்து – மது:16/122
யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன்
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – மது:19/43,44
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன்
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ – மது:19/47,48
சென்றாள் அரசன் செழும் கோயில் வாயில் முன் – மது:19/75
நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய் – மது:20/60
தருக என தந்து தான் முன் வைப்ப – மது:20/82
முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி – மது:21/6
முன் நிறுத்தி காட்ட அவனை தழீஇக்கொண்டு – மது:21/14
நாஞ்சில் அம் படையும் வாய்ந்து உறை துலா முன்
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – மது:22/80,81
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன்
நால் பால் பூதமும் பால்_பால் பெயர – மது:22/107,108
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – மது:22/155,156
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன்
மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க – வஞ்சி:24/2,3
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – வஞ்சி:24/38
மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன்
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – வஞ்சி:24/91,92
செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன்
உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என – வஞ்சி:25/96,97
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – வஞ்சி:25/123
தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன்
உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் – வஞ்சி:26/181,182
முன் தேர் குரவை முதல்வனை வாழ்த்தி – வஞ்சி:26/240
துறந்தோர்-தம் முன் துறவி எய்தவும் – வஞ்சி:27/95
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்து அறம் கொள்ளவும் – வஞ்சி:27/99,100
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – வஞ்சி:29/94
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த – வஞ்சி:29/140
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன்
கடவுள் மங்கலம் காணிய வந்த – வஞ்சி:30/46,47
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன்
குதலை செ வாய் குறும் தொடி மகளிர் – வஞ்சி:30/113,114
பகல் செல் வாயில் படியோர்-தம் முன்
அகலிட பாரம் அகல நீக்கி – வஞ்சி:30/179,180

TOP


முன்_துறை (1)

முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – வஞ்சி:25/123

TOP


முன்கை (1)

வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி – வஞ்சி:27/246

TOP


முன்கைக்கு (1)

அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து – புகார்:6/94

TOP


முன்பின் (1)

சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – வஞ்சி:27/3

TOP


முன்பொடு (1)

கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி – மது:11/211

TOP


முன்றில் (11)

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் – புகார்:4/49
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – புகார்:7/53
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப – புகார்:7/168
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து – புகார்:8/21
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – புகார்:9/57,58
நல் யாழ் பாணர்-தம் முன்றில் நிறைந்தன – மது:12/131
புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன – மது:12/135
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன – மது:12/139
எல் படு பொழுதின் இள நிலா முன்றில்
தாழ்தரு கோலம் தகை பாராட்ட – மது:14/83,84
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பை காழ் ஆரம் பரிந்தன பரிந்த – மது:22/124,125
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ – வஞ்சி:30/115

TOP


முன்றிலின் (1)

இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர – மது:14/103

TOP


முன்றிலும் (1)

வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – வஞ்சி:28/43

TOP


முன்றிலே (3)

பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – மது:12/78,79
திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே
மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் – மது:12/82,83
திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – மது:12/86,87

TOP


முன்னதன் (1)

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு – புகார்:3/86

TOP


முன்னம் (1)

பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு – மது:16/128

TOP


முன்னர் (8)

மூவா மருந்தின் முன்னர் தோன்றலின் – புகார்:2/46
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு – புகார்:9/50
காதலன் முன்னர் கண்ணகி நடுங்க – புகார்:10/230
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் – மது:13/87
பால் நாறு செ வாய் படியோர் முன்னர்
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது – மது:23/92,93
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இரு நில மடந்தைக்கு திரு மார்பு நல்கி அவள் – மது:23/120,121
வலம் படு தானை மன்னன் முன்னர்
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – வஞ்சி:25/71,72
செம் சிலம்பு எறிந்து தேவி முன்னர்
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி – வஞ்சி:25/73,74

TOP


முன்னரே (2)

மாதர் தகைய மடவார்கள் முன்னரே
காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று – மது:19/9,10
முதிரா முலை குறைத்தாள் முன்னரே வந்தாள் – மது:22/160

TOP


முன்னிய (2)

முன்னிய திசையின் முறை மொழி கேட்ப – வஞ்சி:26/6
முழுத்தம் ஈங்கு இது முன்னிய திசை மேல் – வஞ்சி:26/30

TOP


முன்னியது (1)

மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – வஞ்சி:30/119

TOP


முன்னிலை (1)

முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி – மது:23/16

TOP


முன்னே (1)

உலக மன்னவன் நின்றோன் முன்னே
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும் – வஞ்சி:30/156,157

TOP


முன்னை (4)

அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – புகார்:9/24,25
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – புகார்:10/244
முன்னை ஆம் என்றாள் முறை – மது:17/60
அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை
குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – மது:17/73,74

TOP


முனி (4)

தெய்வ மால் வரை திரு முனி அருள – புகார்:3/1
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – புகார்:8/8
அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி
பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள் – புகார்:10/187,188
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – வஞ்சி:27/68

TOP


முனியாதே (1)

முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – வஞ்சி:24/4,5

TOP


முனிவர் (1)

விசும்பு இயங்கு முனிவர் வியல் நிலம் ஆளும் – வஞ்சி:26/93

TOP


முனிவரும் (1)

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் – மது:12/140

TOP


முனிவன் (1)

மா தவ முனிவன் மலை வலம் கொண்டு – மது:15/14

TOP


முனிவு (1)

முந்தை நில்லா முனிவு இகந்தனனா – மது:16/76

TOP


முனை (4)

அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு – புகார்:2/42
இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – புகார்:5/59
வெல் போர் வேந்தர் முனை_இடம் போல – புகார்:10/118
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி – மது:16/59

TOP


முனை_அகத்து (1)

அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு – புகார்:2/42

TOP


முனை_இடம் (2)

இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – புகார்:5/59
வெல் போர் வேந்தர் முனை_இடம் போல – புகார்:10/118

TOP