தொ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்கு 1
தொகு 1
தொகுதியர் 1
தொகுதியும் 4
தொகை 4
தொடக்கும் 1
தொடங்க 1
தொடங்கும்-மன் 2
தொடர் 2
தொடர்ந்த 2
தொடர்பு 1
தொடி 37
தொடி-தனக்கு 1
தொடியோயே 1
தொடியோள் 1
தொடீஇ 2
தொடு 4
தொடு-மின் 2
தொடுத்த 7
தொடுத்து 3
தொடுநர் 1
தொடுப்பு 1
தொடுப்போன் 1
தொடை 1
தொடையல் 1
தொண்டகம் 1
தொண்டியோர் 1
தொண்ணூற்று 1
தொய்யகம் 1
தொய்யில் 1
தொல் 9
தொல்லை 1
தொல்லோர் 3
தொலைச்சிய 1
தொலைந்த 1
தொலைந்தனர் 1
தொலையாத 1
தொலைவு 1
தொழ 5
தொழலும் 2
தொழார் 1
தொழாஅள் 1
தொழில் 27
தொழில்_ஆட்டியேன் 1
தொழிலவும் 2
தொழிலியர் 1
தொழு 9
தொழு_தகவு 1
தொழுதனர் 2
தொழுதனள் 1
தொழுதனன் 1
தொழுதார் 1
தொழுது 24
தொழுதேம் 5
தொழுதேன் 2
தொழும் 2
தொழுவாள் 1
தொழுவாளை 1
தொழுவிடை 1
தொழுனை 3
தொளியுள் 1
தொன்மைத்து 1
தொன்றி 1
தொன்று 2
தொன்றுபட 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தொக்கு (1)

ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – புகார்:2/6

TOP


தொகு (1)

தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த – மது:14/109

TOP


தொகுதியர் (1)

கவர் பரி புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி – புகார்:5/159,160

TOP


தொகுதியும் (4)

கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதி பாடலும் கொளுத்தும்-காலை – புகார்:3/33,34
அல்லிய தொகுதியும் அவுணன் கடந்த – புகார்:6/48
அணைவுற கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – புகார்:10/261,262
வந்த நீர்மைய வட்ட தொகுதியும்
கருப்ப துளையவும் கல்லிடை முடங்கலும் – மது:14/196,197

TOP


தொகை (4)

வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – மது:14/199
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை
ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது – வஞ்சி:26/215,216
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – வஞ்சி:27/8
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட – வஞ்சி:27/12

TOP


தொடக்கும் (1)

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் – மது:15/211

TOP


தொடங்க (1)

மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க
தீது இயல் கானம் செலவு அரிது என்று – மது:11/203,204

TOP


தொடங்கும்-மன் (2)

மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – புகார்:7/20
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – புகார்:7/114

TOP


தொடர் (2)

சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – புகார்:6/99
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – வஞ்சி:27/202

TOP


தொடர்ந்த (2)

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி – புகார்:6/107
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல் – மது:14/78,79

TOP


தொடர்பு (1)

சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் – மது:15/88

TOP


தொடி (37)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – புகார்:0/46
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – புகார்:3/178
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – புகார்:9/67
தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என – புகார்:10/63
தொடி வளை தோளும் ஆகமும் தோய்ந்து – புகார்:10/128
தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – புகார்:10/250
தொடி வளை தோளி ஒருத்தி தோன்றி – மது:11/111
பாய் கலை பாவை பைம் தொடி பாவை – மது:12/70
பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ – மது:12/88
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – மது:12/89
ஆய் தொடி நல்லாள் தவம் என்னை-கொல்லோ – மது:12/96
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – மது:12/97
தொடி வளை செம் கை தோளில் காட்டி – மது:13/33
பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – மது:14/23
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து – மது:14/131
பொன் தொடி மாதராள் தோள் – மது:17/36
தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – மது:17/164
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – மது:21/27
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – மது:21/56
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும் – மது:22/10
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி – மது:23/24
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – மது:23/152
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – மது:23/181
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – வஞ்சி:24/126
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – வஞ்சி:25/8
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் – வஞ்சி:25/67
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் – வஞ்சி:25/70
கோல் தொடி மடரொடு குடகர் தோன்ற – வஞ்சி:26/121
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – வஞ்சி:26/235
தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – வஞ்சி:26/243
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி – வஞ்சி:27/246
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – வஞ்சி:28/5
தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/70
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/80
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம் – வஞ்சி:29/116
பருவம் அன்றியும் பைம் தொடி நங்கை – வஞ்சி:30/35
குதலை செ வாய் குறும் தொடி மகளிர் – வஞ்சி:30/114

TOP


தொடி-தனக்கு (1)

பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – புகார்:8/110

TOP


தொடியோயே (1)

உரையும் உண்டே நிரை தொடியோயே
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு – மது:23/137,138

TOP


தொடியோள் (1)

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் – புகார்:8/1

TOP


தொடீஇ (2)

தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – புகார்:9/52
நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – புகார்:9/54

TOP


தொடு (4)

தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி – புகார்:6/9
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – மது:12/142
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு
படு கடன் இது உகு பலி முக மடையே – மது:12/150,151
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன் – வஞ்சி:30/116

TOP


தொடு-மின் (2)

தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – வஞ்சி:24/16
தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின்
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – வஞ்சி:24/16,17

TOP


தொடுத்த (7)

ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – புகார்:3/70
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து – புகார்:10/82
விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி – புகார்:10/133
கொன்றையும் துளவமும் குழும தொடுத்த
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – மது:12/112,113
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் – மது:22/42
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை – வஞ்சி:25/139
போந்தையொடு தொடுத்த பருவ தும்பை – வஞ்சி:26/219

TOP


தொடுத்து (3)

குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி – வஞ்சி:24/46
குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து
வழி மருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் – வஞ்சி:27/31,32
பாட்டொடு தொடுத்து பல் யாண்டு வாழ்த்த – வஞ்சி:27/213

TOP


தொடுநர் (1)

துறை மிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – வஞ்சி:24/88,89

TOP


தொடுப்பு (1)

தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – வஞ்சி:27/230

TOP


தொடுப்போன் (1)

புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர – வஞ்சி:26/46,47

TOP


தொடை (1)

தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ – புகார்:7/205

TOP


தொடையல் (1)

போது விரி தொடையல் பூ அணை பொருந்தி – மது:13/121

TOP


தொண்டகம் (1)

தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – வஞ்சி:24/16

TOP


தொண்டியோர் (1)

வங்க ஈட்டத்து தொண்டியோர் இட்ட – மது:14/107

TOP


தொண்ணூற்று (1)

தொண்ணூற்று அறு வகை பாசண்ட துறை – வஞ்சி:26/130

TOP


தொய்யகம் (1)

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி – புகார்:6/107

TOP


தொய்யில் (1)

திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – புகார்:2/69

TOP


தொல் (9)

தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும் – புகார்:3/134
பண்டை தொல் வினை பாறுக என்றே – புகார்:10/164
சுட்டு தலைபோகா தொல் குடி குமரியை – மது:12/21
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு – மது:14/21
சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – மது:17/145
துத்தம் குரலா தொல் முறை இயற்கையின் – வஞ்சி:28/34
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/125
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/129
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – வஞ்சி:30/83

TOP


தொல்லை (1)

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர் – வஞ்சி:29/122

TOP


தொல்லோர் (3)

துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – புகார்:5/107
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் – மது:15/134
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் – மது:16/72

TOP


தொலைச்சிய (1)

வெம் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும் – புகார்:10/131

TOP


தொலைந்த (1)

குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன – புகார்:9/70,71

TOP


தொலைந்தனர் (1)

தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி – புகார்:6/9

TOP


தொலையாத (1)

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – புகார்:2/93

TOP


தொலைவு (1)

நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – புகார்:3/44

TOP


தொழ (5)

சுழல வந்து தொழ துயர் நீங்கும் – புகார்:5/126
பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – புகார்:10/134
தமர் தொழ வந்த குமரி கோலத்து – மது:12/72
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை – வஞ்சி:28/8
உலகு தொழ தோன்றிய மலர் கதிர் மதியம் – வஞ்சி:28/39

TOP


தொழலும் (2)

காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும்
உருவும் குலனும் உயர் பேர் ஒழுக்கமும் – புகார்:10/45,46
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும்
ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும் – மது:15/119,120

TOP


தொழார் (1)

தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – வஞ்சி:29/193

TOP


தொழாஅள் (1)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை – மது:23/201

TOP


தொழில் (27)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – புகார்:3/18
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் – புகார்:3/55
விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – புகார்:3/113
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி – புகார்:5/33
பயில் தொழில் குயிலுவர் பல் முறை கருவியர் – புகார்:5/52
ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது – புகார்:5/220
காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – புகார்:6/58
வில் தொழில் வேடர் குலனே குலனும் – மது:12/90
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – மது:16/120
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – மது:16/154
கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் – மது:16/165
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – மது:16/202
குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர – மது:20/25
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/54
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – மது:22/58
உழவு_தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கை – மது:22/85
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – மது:23/69
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – மது:23/70
செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் – மது:23/74
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – மது:23/101
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – மது:23/153
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – மது:23/192
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – வஞ்சி:26/149
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – வஞ்சி:26/203
செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக – வஞ்சி:27/7
செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக – வஞ்சி:27/7
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:27/128

TOP


தொழில்_ஆட்டியேன் (1)

தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – மது:23/192

TOP


தொழிலவும் (2)

செம்பின் செய்நவும் கஞ்ச தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையின் புனைநவும் – மது:14/174,175
வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவின் புனைநவும் – மது:14/176,177

TOP


தொழிலியர் (1)

சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப – புகார்:8/97

TOP


தொழு (9)

தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – மது:11/149
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – மது:14/4
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மது:15/158
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – மது:19/65
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – மது:23/164
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – மது:23/194
பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த – வஞ்சி:24/106
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – வஞ்சி:25/104
பலர் தொழு படிமம் காட்டி – வஞ்சி:29/34

TOP


தொழு_தகவு (1)

துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – வஞ்சி:25/104

TOP


தொழுதனர் (2)

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த – புகார்:3/106
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – மது:22/137

TOP


தொழுதனள் (1)

சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி – மது:16/39

TOP


தொழுதனன் (1)

சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி – புகார்:6/33

TOP


தொழுதார் (1)

காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு – புகார்:9/60

TOP


தொழுது (24)

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – புகார்:1/28
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – புகார்:7/4
ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் – புகார்:8/52
இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – புகார்:10/25
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – புகார்:10/61
அந்தரம் ஆறா படர்வோர் தொழுது
பந்தம் அறுக என பணிந்தனர் போந்து – புகார்:10/212,213
பாயல்_பள்ளி பலர் தொழுது ஏத்த – மது:11/38
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து – மது:11/105,106
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – மது:12/44
அன நடை மாதரும் ஐயனும் தொழுது
பரி முக அம்பியும் கரி முக அம்பியும் – மது:13/175,176
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – மது:14/16
சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு – மது:15/161
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – மது:16/14,15
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – மது:16/115
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – மது:17/115
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – மது:17/135
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – மது:17/139
இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – மது:20/93
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது – மது:23/33
ஏவல் இளையவர் காவலன் தொழுது
வார்த்திகன் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப – மது:23/113,114
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – வஞ்சி:24/92
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த – வஞ்சி:24/119
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே – வஞ்சி:28/83,84
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின் – வஞ்சி:28/210

TOP


தொழுதேம் (5)

இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – மது:12/141,142
மணி உருவினை நின் மலர் அடி தொழுதேம்
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – மது:12/145,146
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – வஞ்சி:24/81,82
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம்
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே – வஞ்சி:24/84,85
அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம்
துறை மிசை நினது இரு திருவடி தொடுநர் – வஞ்சி:24/87,88

TOP


தொழுதேன் (2)

இரும் துயர் உற்றோள் இணை அடி தொழுதேன்
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி – மது:13/73,74
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன்
கோசிகமாணி காட்டு என கொடுத்து – மது:13/98,99

TOP


தொழும் (2)

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும்
அமரி குமரி கவுரி சமரி – மது:12/66,67
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – மது:23/202

TOP


தொழுவாள் (1)

பத்தினி பெண்டிர் பரவி தொழுவாள் ஓர் – வஞ்சி:24/115

TOP


தொழுவாளை (1)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – மது:23/201,202

TOP


தொழுவிடை (1)

தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் – மது:17/48

TOP


தொழுனை (3)

தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை – மது:16/50
தொழுனை துறைவனோடு ஆடிய பின்னை – மது:17/91
வஞ்சம் செய்தான் தொழுனை புனலுள் – மது:17/97

TOP


தொளியுள் (1)

உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய – புகார்:10/120

TOP


தொன்மைத்து (1)

தொன்றுபட வரூஉம் தொன்மைத்து ஆதலின் – மது:14/45

TOP


தொன்றி (1)

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் – வஞ்சி:30/141,142

TOP


தொன்று (2)

தொன்று படு முறையான் நிறுத்தி – மது:17/51
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை – வஞ்சி:30/140

TOP


தொன்றுபட (1)

தொன்றுபட வரூஉம் தொன்மைத்து ஆதலின் – மது:14/45

TOP