தா – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 2
தாக்கு 1
தாங்க 1
தாங்கவும் 1
தாங்கா 2
தாங்கினன் 1
தாங்கு 1
தாங்கு-மின் 1
தாங்கும் 1
தாங்குறூஉம் 1
தாசியர் 1
தாடி 2
தாது 16
தாதுபடு 1
தாதை 3
தாதையை 1
தாபத 1
தாபதர் 1
தாம் 10
தாமத்து 1
தாமம் 3
தாமரை 17
தாமும் 1
தாமே 1
தாய் 3
தாய்-பால் 1
தாய்மார் 1
தாய 1
தாயத்தாரோடும் 1
தாயத்து 2
தாயர் 2
தாயர்க்கும் 1
தாயும் 1
தார் 16
தார 1
தாரகை 1
தாரத்து 2
தாரம் 2
தாரமும் 3
தாரமொடு 1
தாரன் 1
தாராது 1
தாரான் 1
தாருகன் 1
தாரும் 3
தாரோன் 1
தால 1
தாலி 1
தாலும் 1
தாவா 1
தாவிய 1
தாழ் 23
தாழ்தரு 4
தாழ்ந்த 2
தாழ்ந்து 2
தாழ்வரை 1
தாழி 3
தாழும் 1
தாழை 6
தாள் 10
தாள்_செறி 1
தாளொடு 1
தாறும் 2
தான் 30
தான 1
தானத்து 5
தானம் 10
தானம்-தன்னால் 1
தானமா 1
தானமும் 1
தானவர்-தம்மேல் 1
தானும் 1
தானை 16
தானையன் 1
தானையும் 1
தானையொடு 8
தானையோடு 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தா (2)

படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – புகார்:9/19
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – மது:15/82

TOP


தாக்கு (1)

தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு – மது:14/160

TOP


தாங்க (1)

போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – வஞ்சி:27/81

TOP


தாங்கவும் (1)

தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா – புகார்:10/93

TOP


தாங்கா (2)

வேங்கட_மலையும் தாங்கா விளையுள் – புகார்:6/30
தாங்கா விளையுள் நல் நாடு-அதனுள் – மது:23/60

TOP


தாங்கினன் (1)

தாங்கினன் ஆகி தகைமையின் செல்வுழி – வஞ்சி:26/67

TOP


தாங்கு (1)

தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – மது:15/136

TOP


தாங்கு-மின் (1)

தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின்
செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – வஞ்சி:30/190,191

TOP


தாங்கும் (1)

இடுக்கண் செய்யாது இயங்குநர் தாங்கும்
மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி – மது:11/146,147

TOP


தாங்குறூஉம் (1)

கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – மது:19/52,53

TOP


தாசியர் (1)

மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப – புகார்:6/125

TOP


தாடி (2)

நயன் இல் மொழியின் நரை முது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன – மது:12/138,139
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – வஞ்சி:27/181

TOP


தாது (16)

தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – புகார்:2/19
தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை – புகார்:3/7
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – புகார்:5/165
உள்ளக நறும் தாது உறைப்ப மீது அழிந்து – புகார்:5/235
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – புகார்:6/68
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் – புகார்:6/177
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – புகார்:7/46
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – புகார்:7/230
கோதையும் குழலும் தாது சேர் அளகமும் – புகார்:8/94
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் – புகார்:10/69
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – மது:13/21
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு – மது:13/119
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல் – மது:14/79
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – மது:16/102
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – மது:17/116
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – வஞ்சி:27/74

TOP


தாதுபடு (1)

தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் – புகார்:4/39

TOP


தாதை (3)

தாதை ஏவலின் மாதுடன் போகி – மது:14/46
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – வஞ்சி:27/90
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து – வஞ்சி:27/98

TOP


தாதையை (1)

தாதையை கேட்கின் தன் குலவாணர் – மது:15/126

TOP


தாபத (1)

தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த – வஞ்சி:27/179

TOP


தாபதர் (1)

இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – வஞ்சி:26/9

TOP


தாம் (10)

தாம் இன்புறுவர் உலகத்து தையலார் – புகார்:9/61
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – மது:15/27
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி – மது:19/16
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட – மது:19/29
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள – மது:22/15
கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – மது:22/159
தாரும் தாரும் தாம் இடை மயங்க – வஞ்சி:26/204
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – வஞ்சி:26/229
வருக தாம் என வாகை பொலம் தோடு – வஞ்சி:27/43
தம்மின் துன்பம் தாம் நனி எய்த – வஞ்சி:30/31

TOP


தாமத்து (1)

மாலை தாமத்து மணி நிரைத்து வகுத்த – புகார்:2/22

TOP


தாமம் (3)

மாலை தாமம் வளையுடன் நாற்றி – புகார்:3/112
கோதை தாமம் குழலொடு களைந்து – வஞ்சி:27/107
கோதை தாமம் குழலொடு களைந்து – வஞ்சி:30/27

TOP


தாமரை (17)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை
வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ – புகார்:2/15,16
தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் – புகார்:4/39
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல் – புகார்:4/74
பொய்கை தாமரை புள் வாய் புலம்ப – புகார்:6/115
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – புகார்:6/148
பழன தாமரை பைம் பூம் கானத்து – புகார்:10/113
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – மது:11/48
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் – மது:11/134
தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு – மது:11/201
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – மது:12/107
புலரி வைகறை பொய்கை தாமரை
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – மது:14/3,4
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று – மது:22/19
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – மது:23/7
திரு மலர் தாமரை சே அடி பணியும் – வஞ்சி:26/29
பயில் இளம் தாமரை பல் வண்டு யாழ்செய – வஞ்சி:27/194
முருகு விரி தாமரை முழு மலர் தோய – வஞ்சி:27/236
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள – வஞ்சி:28/110

TOP


தாமும் (1)

தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும் – புகார்:7/143

TOP


தாமே (1)

அளிய தாமே சிறு பசும் கிளியே – புகார்:2/57

TOP


தாய் (3)

வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – புகார்:7/123
தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – புகார்:9/28
தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – மது:21/31

TOP


தாய்-பால் (1)

பார்ப்பனி-தன்னொடு பண்டை தாய்-பால்
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – வஞ்சி:30/82,83

TOP


தாய்மார் (1)

சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – வஞ்சி:24/55

TOP


தாய (1)

தாய வேந்தர்-தம்முள் பகையுற – மது:23/144

TOP


தாயத்தாரோடும் (1)

தாயத்தாரோடும் வழக்கு உரைத்து தந்தைக்கும் – புகார்:9/31

TOP


தாயத்து (2)

வழங்கு வில் தட கை மற குடி தாயத்து
பழம் கடன் உற்ற முழங்கு வாய் சாலினி – மது:12/6,7
மற குடி தாயத்து வழி வளம் சுரவாது – மது:12/14

TOP


தாயர் (2)

தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – வஞ்சி:29/75
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர் – வஞ்சி:29/76

TOP


தாயர்க்கும் (1)

தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – புகார்:9/32

TOP


தாயும் (1)

தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – மது:15/136

TOP


தார் (16)

கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – புகார்:1/2
தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து – புகார்:6/118
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – மது:19/44
அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் – மது:23/142
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – வஞ்சி:24/74
ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – வஞ்சி:26/19
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும் – வஞ்சி:26/80
தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் – வஞ்சி:27/36
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – வஞ்சி:27/62
சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை – வஞ்சி:28/95
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – வஞ்சி:28/122
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – வஞ்சி:29/150
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார்
பாழி தட வரை தோள் பாடலே பாடல் – வஞ்சி:29/179,180
வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – வஞ்சி:29/186
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – வஞ்சி:29/189
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – வஞ்சி:30/177

TOP


தார (1)

வன்மையின் கிடந்த தார பாகமும் – புகார்:3/72

TOP


தாரகை (1)

தாரகை கோவையும் சந்தின் குழம்பும் – மது:13/19

TOP


தாரத்து (2)

தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் – புகார்:10/263
அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – வஞ்சி:24/24

TOP


தாரம் (2)

தளரா தாரம் விளரிக்கு ஈத்து – புகார்:3/76
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என – மது:17/55

TOP


தாரமும் (3)

மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் – புகார்:6/153
மலை பல் தாரமும் கடல் பல் தாரமும்
வளம் தலைமயங்கிய துளங்கு கல_இருக்கை – புகார்:6/153,154
மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும்
வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் – மது:17/61,62

TOP


தாரமொடு (1)

குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு
கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும் – புகார்:10/106,107

TOP


தாரன் (1)

தாரன் மாலையன் தமனிய பூணினன் – மது:15/157

TOP


தாராது (1)

இழுக்கம் தாராது இதுவும் கேட்டி – மது:23/41

TOP


தாரான் (1)

கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் – வஞ்சி:25/130

TOP


தாருகன் (1)

கான்_அகம் உகந்த காளி தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் – மது:20/51,52

TOP


தாரும் (3)

தாரும் மாலையும் மயங்கி கையற்று – புகார்:2/35
தாரும் தாரும் தாம் இடை மயங்க – வஞ்சி:26/204
தாரும் தாரும் தாம் இடை மயங்க – வஞ்சி:26/204

TOP


தாரோன் (1)

மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் – புகார்:2/83

TOP


தால (1)

தால புல்லின் வால் வெண் தோட்டு – மது:16/35

TOP


தாலி (1)

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி – மது:12/28

TOP


தாலும் (1)

சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – மது:22/81

TOP


தாவா (1)

தாவா நல் அரம் செய்திலர் அதனால் – வஞ்சி:30/125

TOP


தாவிய (1)

தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – மது:17/144

TOP


தாழ் (23)

மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – புகார்:1/50
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – புகார்:2/80
தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் – புகார்:3/27
தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த – புகார்:4/13
கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும் – புகார்:5/113
தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி – புகார்:10/32
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – மது:11/3
வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும் – மது:11/83
தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு – மது:11/89
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – மது:13/72
தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் – மது:14/76
தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து – மது:15/11
தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – மது:15/16
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – மது:16/151
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – மது:19/37
தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி – வஞ்சி:25/191
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – வஞ்சி:26/168
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற – வஞ்சி:28/184
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – வஞ்சி:28/197
உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே – வஞ்சி:30/64
உறி தாழ் கரகமும் என் கை தந்து – வஞ்சி:30/90
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – வஞ்சி:30/113
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற – வஞ்சி:30/169

TOP


தாழ்தரு (4)

தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா – புகார்:10/93
தாழ்தரு கோலம் தகை பாராட்ட – மது:14/84
தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல் – மது:22/140
தாழ்தரு கோலத்து தமரொடு சிறந்து – வஞ்சி:26/122

TOP


தாழ்ந்த (2)

தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் – மது:20/85
சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி – மது:23/1

TOP


தாழ்ந்து (2)

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி – மது:16/141
சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி – வஞ்சி:26/145

TOP


தாழ்வரை (1)

நிறம் கிளர் அருவி பறம்பின் தாழ்வரை
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – வஞ்சி:24/13,14

TOP


தாழி (3)

தாழி குவளையொடு தண் செங்கழுநீர் – புகார்:4/64
தாழி குவளை சூழ் செங்கழுநீர் – புகார்:5/192
முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி
தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – வஞ்சி:26/242,243

TOP


தாழும் (1)

மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் – மது:17/153

TOP


தாழை (6)

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு – புகார்:2/17
கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – புகார்:6/166,167
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – புகார்:6/175
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – புகார்:8/49
வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல் – மது:22/68
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – வஞ்சி:27/237

TOP


தாள் (10)

வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – புகார்:6/97
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – புகார்:7/10
வரை தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் – மது:11/115
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் – மது:11/134
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – மது:11/137
தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – மது:11/149
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – மது:16/74,75
கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – வஞ்சி:25/46
தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – வஞ்சி:29/193
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை – வஞ்சி:30/174

TOP


தாள்_செறி (1)

வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து – புகார்:6/97,98

TOP


தாளொடு (1)

தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின் – புகார்:10/7

TOP


தாறும் (2)

கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும்
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் – வஞ்சி:25/46,47
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும்
ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் – வஞ்சி:25/47,48

TOP


தான் (30)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – புகார்:0/25
மேல் நின்று தான் சுரத்தலான் – புகார்:1/9
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – புகார்:7/224
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – புகார்:10/205
தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் – புகார்:10/263
தான் நலம் திருக தன்மையில் குன்றி – மது:11/63
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – மது:13/72
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் – மது:13/171
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – மது:13/182
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் – மது:15/20
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – மது:15/65
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – மது:15/170
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – மது:16/102
சொல்லாடும் சொல்லாடும் தான்
எல்லா ஓ – மது:18/10,11
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – மது:19/30
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – மது:20/66
தருக என தந்து தான் முன் வைப்ப – மது:20/82
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – மது:21/12
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – மது:21/21
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – மது:23/132
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – வஞ்சி:24/52
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – வஞ்சி:24/62
வேலன் மடவன் அவனினும் தான் மடவன் – வஞ்சி:24/69
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – வஞ்சி:24/73
தான் முலை இழந்து தனி துயர் எய்தி – வஞ்சி:25/58
மாசாத்துவான் தான் துறப்பவும் – வஞ்சி:29/50
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – வஞ்சி:29/159
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த – வஞ்சி:29/168
அவ்வியம் அறிந்தன அது தான் அறிந்திலள் – வஞ்சி:30/13
தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து – வஞ்சி:30/72

TOP


தான (1)

தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என – மது:15/185

TOP


தானத்து (5)

தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய – புகார்:3/3
இரு மருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – மது:11/44,45
வரன்முறை வந்த மூ_வகை தானத்து
பாய் கலை பாவை பாடல்_பாணி – மது:13/110,111
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது – மது:15/34
இட்ட தானத்து எட்டியும் மனைவியும் – மது:15/196

TOP


தானம் (10)

புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் – மது:15/30
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் – மது:15/43
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி – மது:15/72
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு – மது:15/176
பெரு விறல் தானம் பலவும் செய்து ஆங்கு – மது:15/181
புண்ணிய தானம் புரிந்து அறம் கொள்ளவும் – வஞ்சி:27/100
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – வஞ்சி:27/101
போதி தானம் புரிந்து அறம் கொள்ளவும் – வஞ்சி:27/108
சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – வஞ்சி:29/89
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – வஞ்சி:29/94

TOP


தானம்-தன்னால் (1)

சாயலன் மனைவி தானம்-தன்னால்
ஆயினன் இ வடிவு அறி-மினோ என – மது:15/188,189

TOP


தானமா (1)

மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – வஞ்சி:27/91

TOP


தானமும் (1)

புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும்
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால் – புகார்:5/180,181

TOP


தானவர்-தம்மேல் (1)

தானவர்-தம்மேல் தம் பதி நீங்கும் – வஞ்சி:26/78

TOP


தானும் (1)

தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – புகார்:7/112

TOP


தானை (16)

வலம்படு தானை மன்னர் இல்வழி – புகார்:4/11
வலம் படு தானை மன்னவன் ஏவ – மது:16/158
வலம் படு தானை மன்னன் முன்னர் – வஞ்சி:25/71
நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து – வஞ்சி:25/178
தானை தலைவர்-தம்மொடு குழீஇ – வஞ்சி:26/4
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம் – வஞ்சி:26/7
அரும் படை தானை அமர் வேட்டு கலித்த – வஞ்சி:26/48
கடல் அம் தானை காவலன் உரைக்கும் – வஞ்சி:26/157
தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன் – வஞ்சி:26/181
அடும் தேர் தானை ஆரிய அரசர் – வஞ்சி:26/211
பல் வேல் தானை படை பல ஏவி – வஞ்சி:26/252
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – வஞ்சி:27/11
வலம் படு தானை மன்னவன் தன்னை – வஞ்சி:27/72
மா பெரும் தானை மன்ன_குமரர் – வஞ்சி:27/180
தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன் – வஞ்சி:28/94
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை
செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க – வஞ்சி:30/177,178

TOP


தானையன் (1)

நிலன் அகழ் உளியன் நீல தானையன்
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று – மது:16/204,205

TOP


தானையும் (1)

ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த – வஞ்சி:30/166

TOP


தானையொடு (8)

பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி – மது:13/17
ஆலும் புரவி அணி தேர் தானையொடு
நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – வஞ்சி:26/84,85
நிலம் திரை தானையொடு நிகர்த்து மேல்வர – வஞ்சி:26/187
காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப – வஞ்சி:26/191
செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – வஞ்சி:27/13,14
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து – வஞ்சி:27/199,200
நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து – வஞ்சி:28/118
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – வஞ்சி:30/213,214

TOP


தானையோடு (2)

விரவு கொடி அடுக்கத்து நிரய தானையோடு
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – வஞ்சி:26/37,38
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – வஞ்சி:28/143

TOP