மொ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மொத்துண்டு (1)

மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – புகார்:7/41

TOP


மொய் (2)

முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி – மது:21/6
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – வஞ்சி:29/84

TOP


மொழி (36)

மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து – புகார்:3/43
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து – புகார்:5/199
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி – புகார்:5/222
மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும் – புகார்:6/143
படையுள்படுவோன் பணி மொழி கூற – புகார்:8/13
சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப – புகார்:8/97
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – புகார்:8/99
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – புகார்:9/36
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – புகார்:10/130
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – புகார்:10/208
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – புகார்:10/229
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி
மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – மது:11/7,8
என்று அ மறையோற்கு இசை மொழி உணர்த்தி – மது:11/162
தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – மது:11/177
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என – மது:11/191
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – மது:13/93
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – மது:15/27
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – மது:15/174
குறு மொழி கோட்டி நெடு நகை புக்கு – மது:16/64
அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ – மது:16/77
தே_மொழி உரைத்தது செவ்வை நல் மொழி – மது:20/80
தே_மொழி உரைத்தது செவ்வை நல் மொழி
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே – மது:20/80,81
இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – மது:20/93
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – வஞ்சி:25/54
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப – வஞ்சி:26/6
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் – வஞ்சி:27/187
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – வஞ்சி:28/109
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட – வஞ்சி:29/2
ஒன்று_மொழி நகையினராய் – வஞ்சி:29/12
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர் – வஞ்சி:30/34
மடித்து எயிறு அரும்பினள் வரு மொழி மயங்கினள் – வஞ்சி:30/40
உலறிய நாவினள் உயர் மொழி கூறி – வஞ்சி:30/44
மட மொழி நல்லார் மாண் இழையோருள் – வஞ்சி:30/48
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் – வஞ்சி:30/130
தன் திறம் உரைத்த தகை_சால் நல் மொழி
தெரிவுற கேட்ட திரு தகு நல்லீர் – வஞ்சி:30/184,185
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – வஞ்சி:30/192

TOP


மொழி-தன்னொடும் (1)

தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – புகார்:10/44

TOP


மொழி_பெயர்_தேஎத்தர் (1)

மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும் – புகார்:6/143

TOP


மொழிக்கு (1)

இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது – புகார்:10/206

TOP


மொழிந்தனள் (1)

பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று – மது:12/51

TOP


மொழிந்து (2)

மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – மது:11/8
புரை தீர் வேலி இல் என மொழிந்து
மன்றத்து இருத்தி சென்றீர் அவ்வழி – மது:23/45,46

TOP


மொழிப்பொருள் (1)

மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – புகார்:10/100

TOP


மொழிப்பொருள்_தெய்வம் (1)

மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – புகார்:10/100

TOP


மொழியின் (2)

நயன் இல் மொழியின் நரை முது தாடி – மது:12/138
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ – வஞ்சி:30/115

TOP


மொழியினார் (1)

பண் தேய்த்த மொழியினார் ஆயத்து பாராட்டி – புகார்:1/37

TOP


மொழியே (1)

பழுது அறு திரு மொழியே பணை இள வன முலையே – புகார்:7/70

TOP