யா – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாஅத்து 1
யாக்கை 12
யாக்கையர் 1
யாக்கையும் 1
யாங்கணும் 13
யாங்கள் 1
யாங்களும் 1
யாங்கு 4
யாங்கும் 1
யாண்டு 7
யாண்டும் 1
யாத்த 2
யாது 11
யாதும் 1
யாப்பின் 1
யாப்பு 1
யாப்புறவு 2
யாம் 28
யாமத்து 6
யாமத்தும் 1
யாமம் 1
யார் 9
யார்க்கும் 1
யாரும் 2
யாரை 1
யாரையோ 1
யாரோ 1
யாவதும் 14
யாவரும் 2
யாவிரோ 1
யாவும் 2
யாழ் 13
யாழ்-இடை 1
யாழ்செய 2
யாழ்செயும் 1
யாழில் 1
யாழின் 1
யாழினும் 1
யாழும் 5
யாழே 1
யாற்றினும் 1
யாற்றினுள் 1
யாற்று 9
யாறு 4
யான் 41
யானும் 4
யானே 1
யானை 19
யானையர் 1
யானையின் 5
யானையும் 1
யானோ 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யாஅத்து (1)

தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி – மது:13/107,108

TOP


யாக்கை (12)

பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – புகார்:5/169
கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான் – புகார்:10/121
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – புகார்:10/201
நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – புகார்:10/223
இன் உயிர் இழந்த யாக்கை என்ன – மது:13/59
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை – மது:15/45
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – வஞ்சி:27/94
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய் – வஞ்சி:28/150
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை – வஞ்சி:28/158
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர் – வஞ்சி:28/161
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர் – வஞ்சி:28/163
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – வஞ்சி:28/172

TOP


யாக்கையர் (1)

மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்கு-மின் பரி புலம்பினர் என – புகார்:10/225,226

TOP


யாக்கையும் (1)

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா – வஞ்சி:30/199

TOP


யாங்கணும் (13)

நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும்
கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து – புகார்:5/149,150
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை – புகார்:10/94,95
ஏவலாளர் யாங்கணும் சென்று – மது:13/61
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும்
அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – மது:13/63,64
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும்
மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – மது:13/159,160
பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் – மது:15/46
இரு_மு காவதத்து இடைநிலத்து யாங்கணும்
செரு வெல் வென்றியின் செல்வோர் இன்மையின் – மது:23/145,146
இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப – வஞ்சி:25/32
இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது – வஞ்சி:25/35
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும்
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே – வஞ்சி:26/68,69
திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும்
பரம்பு நீர் கங்கை பழன பாசடை – வஞ்சி:27/192,193
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும்
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை – வஞ்சி:28/131,132
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும்
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என – வஞ்சி:28/203,204

TOP


யாங்கள் (1)

நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் – வஞ்சி:25/62

TOP


யாங்களும் (1)

நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – மது:11/161

TOP


யாங்கு (4)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/34
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/38
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/132
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/136

TOP


யாங்கும் (1)

ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ – புகார்:10/65

TOP


யாண்டு (7)

யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – புகார்:2/89
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என – புகார்:4/4
பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் – மது:14/112
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று – மது:14/117
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – வஞ்சி:25/150
பாட்டொடு தொடுத்து பல் யாண்டு வாழ்த்த – வஞ்சி:27/213
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – வஞ்சி:28/129,130

TOP


யாண்டும் (1)

யாண்டும் மதியும் நாளும் கடிகையும் – வஞ்சி:27/9

TOP


யாத்த (2)

கடை கால் யாத்த மிடை மர சோலை – புகார்:5/61
எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – புகார்:8/48,49

TOP


யாது (11)

வினை விளை காலம் என்றீர் யாது அவர் – புகார்:0/37
ஏவலன் பின் பாணி யாது என – புகார்:7/17
மதுரை மூதூர் யாது என வினவ – புகார்:10/41
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என – மது:11/191
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – மது:13/54
யாது நீ உற்ற இடர் ஈது என் என – மது:15/64
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – மது:15/162
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/39
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – வஞ்சி:27/55
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – வஞ்சி:30/5
யாது நின் கருத்து என் செய்கோ என – வஞ்சி:30/22

TOP


யாதும் (1)

யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – மது:11/32

TOP


யாப்பின் (1)

இழுக்கா யாப்பின் அகனும் புறனும் – வஞ்சி:30/225

TOP


யாப்பு (1)

யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் – மது:14/30

TOP


யாப்புறவு (2)

யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – புகார்:0/24
யாப்புறவு இல்லை என முன் போந்து – மது:16/122

TOP


யாம் (28)

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – புகார்:0/60
அமரர் தலைவனை வணங்குதும் யாம் என – புகார்:6/27
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/38
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – புகார்:9/62
பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால் – மது:15/144
இந்திர_குமரரின் யாம் காண்குவமோ – மது:16/173
குரவை ஆடுதும் யாம் என்றாள் – மது:17/31
அணி நிறம் பாடுகேம் யாம்
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி – மது:17/92,93
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்
அறுவை ஒளித்தான் அயர அயரும் – மது:17/94,95
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்
வஞ்சம் செய்தான் தொழுனை புனலுள் – மது:17/96,97
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் – மது:17/98,99
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்
தையல் கலையும் வளையும் இழந்தே – மது:17/100,101
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி – மது:17/102,103
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்
கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் – மது:17/104,105
என்று யாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – மது:17/158,159
மன்னவற்கு யாம் உரைத்தும் என – மது:20/15
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே – மது:20/81
யாம் முறை போவது இயல்பு அன்றோ என – மது:22/106
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – வஞ்சி:24/90
நிலை ஒன்று பாடுதும் யாம்
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – வஞ்சி:24/107,108
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – வஞ்சி:24/108
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – வஞ்சி:24/109
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – வஞ்சி:24/111
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – வஞ்சி:24/112
என்று யாம்
கொண்டுநிலை பாடி ஆடும் குரவையை – வஞ்சி:24/128,129
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று – வஞ்சி:26/154
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – வஞ்சி:26/185
வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் – வஞ்சி:27/249

TOP


யாமத்து (6)

வான் கண் விழியா வைகறை யாமத்து
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க – புகார்:10/1,2
வைகறை யாமத்து வாரணம் கழிந்து – மது:11/11
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது – மது:14/55
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – மது:15/28
நனவு போல நள்ளிருள் யாமத்து
கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என – மது:15/105,106
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – வஞ்சி:27/78

TOP


யாமத்தும் (1)

அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் – புகார்:4/81

TOP


யாமம் (1)

வைகறை யாமம் வாரணம் காட்ட – புகார்:6/116

TOP


யார் (9)

அ இடத்து அவரை யார் காண்கிற்பார் – மது:16/183
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார் – மது:16/187
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – மது:21/52
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – மது:22/143
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – வஞ்சி:25/61
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என – வஞ்சி:25/109
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – வஞ்சி:29/134
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – வஞ்சி:29/139
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – வஞ்சி:29/144

TOP


யார்க்கும் (1)

பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும்
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – மது:12/160,161

TOP


யாரும் (2)

யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – மது:19/43
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – வஞ்சி:30/100

TOP


யாரை (1)

யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – மது:23/19

TOP


யாரையோ (1)

யாரையோ நீ மட_கொடியோய் என – மது:20/61

TOP


யாரோ (1)

அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – புகார்:10/54,55

TOP


யாவதும் (14)

வினை விளை காலம் ஆதலின் யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – புகார்:0/27,28
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – புகார்:5/232,233
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் – மது:11/159
கல் அதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என – மது:16/57,58
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் – மது:16/62
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் – மது:16/81,82
வினை விளை காலம் ஆதலின் யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – மது:16/148,149
நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும்
புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – மது:16/178,179
மறை நா ஓசை அல்லது யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே – மது:23/31,32
அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல் என மொழிந்து – மது:23/44,45
இடும்பை யாவதும் அறிந்தீ-மின் என – மது:23/112
சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும்
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின் – மது:23/126,127
எம் உறு துயரம் செய்தோர் யாவதும்
தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே – மது:23/167,168
வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை – வஞ்சி:28/214,215

TOP


யாவரும் (2)

மருந்தில் பட்டீர் ஆயின் யாவரும்
பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – மது:16/170,171
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின் – வஞ்சி:28/149

TOP


யாவிரோ (1)

முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே – வஞ்சி:24/4

TOP


யாவும் (2)

வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும்
சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – புகார்:9/68,69
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும் – மது:21/2

TOP


யாழ் (13)

வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு – புகார்:3/63
யாழ் மேற்பாலை இட முறை மெலிய – புகார்:3/91
குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – புகார்:3/139
பண் யாழ் புலவர் பாடல் பாணரொடு – புகார்:5/185
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி – புகார்:5/222
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி – புகார்:6/172
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – புகார்:7/4
கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – புகார்:7/18
கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி – புகார்:7/111
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – புகார்:7/226
அதிரா மரபின் யாழ் கை வாங்கி – புகார்:8/23
நல் யாழ் பாணர்-தம் முன்றில் நிறைந்தன – மது:12/131
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் பாணியொடு – மது:22/141

TOP


யாழ்-இடை (1)

யாழ்-இடை பிறவா இசையே என்கோ – புகார்:2/79

TOP


யாழ்செய (2)

இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய
அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் – வஞ்சி:26/112,113
பயில் இளம் தாமரை பல் வண்டு யாழ்செய
வெயில் இளம் செல்வன் விரி கதிர் பரப்பி – வஞ்சி:27/194,195

TOP


யாழ்செயும் (1)

அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும்
திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே – மது:12/85,86

TOP


யாழில் (1)

செந்திறம் புரிந்த செங்கோட்டு_யாழில் – மது:13/106

TOP


யாழின் (1)

அணைவுற கிடந்த யாழின் தொகுதியும் – புகார்:10/261

TOP


யாழினும் (1)

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் – புகார்:5/35

TOP


யாழும் (5)

குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் – புகார்:2/58
யாழும் குழலும் சீரும் மிடறும் – புகார்:3/26
வாங்கிய வாரத்து யாழும் குழலும் – புகார்:3/50
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – மது:22/81
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும்
பண் கனி பாடலும் பரந்தன ஒருசார் – வஞ்சி:28/55,56

TOP


யாழே (1)

குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – புகார்:3/139

TOP


யாற்றினும் (1)

கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – வஞ்சி:25/120

TOP


யாற்றினுள் (1)

தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை – மது:16/50

TOP


யாற்று (9)

பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – புகார்:10/140
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று
நீரணி_மாடத்து நெடும் துறை போகி – புகார்:10/214,215
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – வஞ்சி:25/12
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – வஞ்சி:25/160
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – வஞ்சி:27/14
கடும் புனல் கங்கை பேர் யாற்று வென்றோய் – வஞ்சி:28/121
கங்கை பேர் யாற்று கரை போகிய – வஞ்சி:29/6
கங்கை பேர் யாற்று இருந்து – வஞ்சி:29/29
கங்கை பேர் யாற்று கரை போகிய – வஞ்சி:30/215

TOP


யாறு (4)

மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும் – புகார்:10/26
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – மது:13/174
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – மது:13/174
கங்கை பேர் யாறு கடத்தற்கு ஆவன – வஞ்சி:26/164

TOP


யான் (41)

யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் – புகார்:0/11
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – புகார்:0/54
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – புகார்:6/68
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – புகார்:7/224
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு – புகார்:9/50
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற – புகார்:9/53
உரையாட்டு இல்லை உறு தவத்தீர் யான்
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் – புகார்:10/50,51
தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – மது:11/149
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – மது:11/195
வன_சாரிணி யான் மயக்கம் செய்தேன் – மது:11/198
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் – மது:13/87
சிறுமை உற்றேன் செய் தவத்தீர் யான்
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு – மது:14/20,21
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – மது:14/22
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது – மது:15/33,34
இம்மை செய்தன யான் அறி நல்வினை – மது:15/91
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் – மது:16/62
என் பாராட்ட யான் அகத்து ஒளித்த – மது:16/78
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – மது:16/83
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – மது:16/92
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – மது:16/114
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – மது:16/123
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – மது:16/127
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என – மது:16/129
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன் – மது:16/209
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – மது:18/37
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – மது:18/41
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – மது:19/71
வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – மது:21/26
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – மது:21/28
யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – மது:21/41
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – மது:21/42
கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு – மது:23/23
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – மது:23/192
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – வஞ்சி:24/6
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – வஞ்சி:24/101
மன்னவன் செல்வுழி செல்க யான் என – வஞ்சி:25/84
மன்னர் கோவே யான் வரும் காரணம் – வஞ்சி:27/67
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் – வஞ்சி:29/108
பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல் – வஞ்சி:30/69
யான் பெறு மகளே என் துணை தோழீ – வஞ்சி:30/102
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – வஞ்சி:30/107

TOP


யானும் (4)

போதுவல் யானும் போது-மின் என்ற – புகார்:10/60
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் – மது:21/36
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும்
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – வஞ்சி:28/171,172
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – வஞ்சி:30/171

TOP


யானே (1)

யானோ அரசன் யானே கள்வன் – மது:20/87

TOP


யானை (19)

யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – புகார்:1/43
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – புகார்:5/142
சூழி யானை சுடர் வாள் செம்பியன் – புகார்:7/235
பெரும் கை யானை இன நிரை பெயரும் – மது:14/64
வேக யானை வெம்மையின் கைக்கொள – மது:15/47
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்வி பாகன் கையகப்படாஅது – மது:23/37,38
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ – மது:23/130
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும் – வஞ்சி:25/31
யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் – வஞ்சி:25/37
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – வஞ்சி:25/175
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி – வஞ்சி:25/193
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய – வஞ்சி:26/39
கட களி யானை பிடர் தலை ஏறினன் – வஞ்சி:26/60
யானை வீரரும் இவுளி தலைவரும் – வஞ்சி:26/76
கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும் – வஞ்சி:26/133
களம் கொள் யானை கவிழ் மணி நாவும் – வஞ்சி:26/201
கச்சை யானை காவலர் நடுங்க – வஞ்சி:26/231
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – வஞ்சி:27/220
யானை வெண் கோடு அழுத்திய மார்பும் – வஞ்சி:28/11

TOP


யானையர் (1)

வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர் – வஞ்சி:26/199

TOP


யானையின் (5)

ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க – வஞ்சி:26/71
வேக யானையின் வழியோ நீங்கு என – வஞ்சி:27/222
வேக யானையின் மீமிசை பொலிந்து – வஞ்சி:27/254
கயம் தலை யானையின் கவிகையின் காட்டி – வஞ்சி:28/101
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின் – வஞ்சி:28/114,115

TOP


யானையும் (1)

ஆடு இயல் யானையும் தேரும் மாவும் – வஞ்சி:26/86

TOP


யானோ (1)

யானோ அரசன் யானே கள்வன் – மது:20/87

TOP