பி – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிஞ்ஞை 2
பிஞ்ஞையும் 1
பிஞ்ஞையோடு 1
பிடர் 4
பிடர்த்தலை 4
பிடவமும் 1
பிடி 1
பிடித்த 2
பிடித்தனன் 1
பிடித்தோள் 1
பிடிப்பாள் 1
பிண்டம் 1
பிண்டி 4
பிண்டியில் 1
பிண்டியும் 1
பிணங்கு 2
பிணம் 4
பிணி 2
பிணிக்கும் 1
பிணித்து 1
பிணிப்பு 1
பிணிமுக 1
பிணிமுகம் 1
பிணியும் 1
பிணையல் 7
பிணையலின் 1
பிணையலும் 2
பித்திகை 1
பித்தையன் 1
பிரிதல் 1
பிரிந்த 3
பிரிந்தார் 1
பிரிந்து 3
பிரிந்தோன் 1
பிரிய 1
பிரியா 3
பிரியாது 1
பிரியாமல் 1
பிலத்தின் 1
பிலம் 3
பிழாவும் 1
பிழை 5
பிழைத்த 5
பிழைத்தது 2
பிழைத்தவோ 1
பிழைத்தான் 1
பிழைத்து 1
பிழைத்தேன் 1
பிழைத்தோர்க்கு 2
பிழைத்தோன் 1
பிழைப்பார் 1
பிழைப்பு 2
பிழையா 3
பிள்ளை 1
பிள்ளையும் 1
பிளந்து 3
பிற்பகல் 1
பிற்பட 1
பிற்பாடு 2
பிற 1
பிறக்கிட்டு 1
பிறக்கிட 1
பிறக்கு 2
பிறங்கிய 1
பிறங்கு 1
பிறத்தல் 1
பிறத்தலும் 1
பிறந்த 14
பிறந்தவர் 1
பிறந்து 1
பிறந்தேன் 1
பிறந்தோர்க்கு 3
பிறப்ப 1
பிறப்பர் 1
பிறப்பாளனை 1
பிறப்பில் 7
பிறப்பின் 1
பிறப்பினர் 1
பிறப்பு 7
பிறர் 5
பிறர்க்கு 1
பிறவா 4
பிறவி 1
பிறவியர் 1
பிறவும் 2
பிறவோர் 1
பிறழ 2
பிறழா 5
பிறழும் 1
பிறன் 2
பிறிது 2
பிறை 5
பிறையுடன் 1
பிறையும் 1
பின் 37
பின்_நாள் 1
பின்பகல் 1
பின்றா 1
பின்றை 2
பின்றையும் 1
பின்றையை 1
பின்னர் 15
பின்னரும் 1
பின்னரே 1
பின்னிய 1
பின்னிலை 1
பின்னும் 1
பின்னை 3
பின்னை-தான் 1
பின்னையும் 2
பின்னையொடும் 1
பின்னோர் 1
பின்னோர்க்கு 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பிஞ்ஞை (2)

கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள் – மது:17/63
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – மது:17/107

TOP


பிஞ்ஞையும் (1)

மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – மது:17/61

TOP


பிஞ்ஞையோடு (1)

வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – மது:17/30

TOP


பிடர் (4)

அந்தி போதகத்து அரும் பிடர் தோன்றிய – புகார்:8/58
பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – மது:20/47
கட களி யானை பிடர் தலை ஏறினன் – வஞ்சி:26/60
முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி – வஞ்சி:26/242

TOP


பிடர்த்தலை (4)

இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – புகார்:5/97,98
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – புகார்:5/142
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – மது:15/52
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – வஞ்சி:30/55

TOP


பிடவமும் (1)

பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த – மது:13/158

TOP


பிடி (1)

மற வெம் களிறும் மட பிடி நிரைகளும் – மது:22/117

TOP


பிடித்த (2)

பிரியா தருப்பை பிடித்த கையினன் – மது:22/32
என இவை பிடித்த கையினன் ஆகி – மது:22/55

TOP


பிடித்தனன் (1)

பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – புகார்:9/46

TOP


பிடித்தோள் (1)

வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள்
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – மது:23/8,9

TOP


பிடிப்பாள் (1)

மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் – மது:17/80

TOP


பிண்டம் (1)

பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – வஞ்சி:26/43

TOP


பிண்டி (4)

பிண்டி செய்த கை ஆடலில் களைதலும் – புகார்:3/22
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – புகார்:10/21
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – மது:11/3
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – மது:15/152

TOP


பிண்டியில் (1)

ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் – புகார்:3/23

TOP


பிண்டியும் (1)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – புகார்:3/18

TOP


பிணங்கு (2)

பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – புகார்:7/68
பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த – மது:13/158

TOP


பிணம் (4)

படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – புகார்:9/19
இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி – புகார்:9/21
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – வஞ்சி:26/207
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – வஞ்சி:26/209

TOP


பிணி (2)

கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – புகார்:5/81
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – மது:11/182

TOP


பிணிக்கும் (1)

அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும்
கலவை கூட்டம் காண்வர தோன்றி – மது:13/128,129

TOP


பிணித்து (1)

மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – மது:11/29

TOP


பிணிப்பு (1)

பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – மது:15/100

TOP


பிணிமுக (1)

பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – வஞ்சி:30/55

TOP


பிணிமுகம் (1)

பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – வஞ்சி:24/53

TOP


பிணியும் (1)

பசியும் பிணியும் பகையும் நீங்கி – புகார்:5/72

TOP


பிணையல் (7)

கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ – புகார்:2/34
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – மது:12/113
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல்
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – மது:13/21,22
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல்
கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – மது:14/79,80
செம் கொடுவேரி செழும் பூ பிணையல்
சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – மது:14/91,92
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் – மது:20/22
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – மது:22/123

TOP


பிணையலின் (1)

பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து – புகார்:5/193

TOP


பிணையலும் (2)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – புகார்:3/18
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும்
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – வஞ்சி:28/59,60

TOP


பித்திகை (1)

பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு – புகார்:8/55

TOP


பித்தையன் (1)

காட்டிய பூவின் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி – மது:22/94,95

TOP


பிரிதல் (1)

பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் – மது:14/35

TOP


பிரிந்த (3)

காதலர் பிரிந்த மாதர் நோதக – புகார்:4/58
அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல – மது:13/65
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – வஞ்சி:30/158

TOP


பிரிந்தார் (1)

பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல் – புகார்:7/211

TOP


பிரிந்து (3)

காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – புகார்:5/189
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி – புகார்:8/102
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன் – வஞ்சி:27/60

TOP


பிரிந்தோன் (1)

காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி – மது:14/52

TOP


பிரிய (1)

கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – மது:13/48

TOP


பிரியா (3)

பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே – மது:14/59
பிரியா தருப்பை பிடித்த கையினன் – மது:22/32
காவல் வஞ்சி கடைமுகம் பிரியா
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – வஞ்சி:25/174,175

TOP


பிரியாது (1)

கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – வஞ்சி:25/159,160

TOP


பிரியாமல் (1)

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – புகார்:1/63

TOP


பிலத்தின் (1)

காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – மது:11/140

TOP


பிலம் (3)

பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – மது:11/92
ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – மது:11/104
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – மது:11/153

TOP


பிழாவும் (1)

ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – புகார்:10/111

TOP


பிழை (5)

தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – மது:11/177
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – மது:14/56
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – வஞ்சி:24/89
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – வஞ்சி:25/101
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – வஞ்சி:30/195

TOP


பிழைத்த (5)

மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – மது:21/50
கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – மது:22/103
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – மது:23/132
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – மது:23/198
தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த
மா பெரும் தானை மன்ன_குமரர் – வஞ்சி:27/179,180

TOP


பிழைத்தது (2)

என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – மது:20/89
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – மது:23/117

TOP


பிழைத்தவோ (1)

குடையும் கோலும் பிழைத்தவோ என – வஞ்சி:27/77

TOP


பிழைத்தான் (1)

கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான்
அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள் – வஞ்சி:27/75,76

TOP


பிழைத்து (1)

பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – வஞ்சி:30/194

TOP


பிழைத்தேன் (1)

இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன் – மது:16/67,68

TOP


பிழைத்தோர்க்கு (2)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – புகார்:0/55
செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்தி காலம் உரையீரோ என – புகார்:10/239,240

TOP


பிழைத்தோன் (1)

இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – மது:20/38

TOP


பிழைப்பார் (1)

ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – மது:21/52

TOP


பிழைப்பு (2)

இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது – மது:13/90
வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது – மது:15/145

TOP


பிழையா (3)

பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – புகார்:8/31
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – மது:11/28
விதி முறை பிழையா விளங்கிய சாதியும் – மது:14/187

TOP


பிள்ளை (1)

பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக – மது:15/54

TOP


பிள்ளையும் (1)

பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – வஞ்சி:25/53,54

TOP


பிளந்து (3)

மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – மது:12/27
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – மது:23/188
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – வஞ்சி:24/57,58

TOP


பிற்பகல் (1)

பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – மது:21/4

TOP


பிற்பட (1)

நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – மது:23/66

TOP


பிற்பாடு (2)

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி – மது:13/1,2
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு
விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் – மது:15/182,183

TOP


பிற (1)

என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – புகார்:10/265

TOP


பிறக்கிட்டு (1)

பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – மது:11/182

TOP


பிறக்கிட (1)

பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து – வஞ்சி:27/44

TOP


பிறக்கு (2)

அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – புகார்:5/95
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – வஞ்சி:30/214

TOP


பிறங்கிய (1)

பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ் – புகார்:6/87

TOP


பிறங்கு (1)

புறஞ்சிறை பொழிலும் பிறங்கு நீர் பண்ணையும் – மது:14/1

TOP


பிறத்தல் (1)

மன்பதை காக்கும் நன் குடி பிறத்தல்
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – வஞ்சி:25/103,104

TOP


பிறத்தலும் (1)

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை – வஞ்சி:30/139,140

TOP


பிறந்த (14)

வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – புகார்:4/37
தென் மலை பிறந்த சந்தனம் மறுக – புகார்:4/38
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – புகார்:10/106
பிறந்த பிறப்பில் காணாயோ நீ – மது:11/157
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – மது:12/89
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த
வில் தொழில் வேடர் குலனே குலனும் – மது:12/89,90
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – மது:12/93
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த
எய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/93,94
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – மது:12/97
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த
வேய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/97,98
மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் – மது:21/35
வீயா திருவின் விழு குடி பிறந்த
தாய வேந்தர்-தம்முள் பகையுற – மது:23/143,144
முது குடி பிறந்த முதிரா செல்வியை – வஞ்சி:25/133
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – வஞ்சி:27/94

TOP


பிறந்தவர் (1)

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் – வஞ்சி:30/139

TOP


பிறந்து (1)

வட பேர் இமய மலையில் பிறந்து
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த – வஞ்சி:29/68,69

TOP


பிறந்தேன் (1)

மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன்
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் – மது:21/35,36

TOP


பிறந்தோர்க்கு (3)

ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு
இழுக்கம் தாராது இதுவும் கேட்டி – மது:23/40,41
இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – மது:23/53
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று – வஞ்சி:25/124,125

TOP


பிறப்ப (1)

காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – மது:14/122

TOP


பிறப்பர் (1)

போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – புகார்:9/62

TOP


பிறப்பாளனை (1)

ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – மது:15/48,49

TOP


பிறப்பில் (7)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – புகார்:0/46
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – புகார்:3/6
பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – புகார்:9/56
பிறந்த பிறப்பில் காணாயோ நீ – மது:11/157
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை – மது:15/186
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – மது:23/152
போய பிறப்பில் பொருந்திய காதலின் – வஞ்சி:30/133

TOP


பிறப்பின் (1)

இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் – மது:11/156

TOP


பிறப்பினர் (1)

ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் – வஞ்சி:30/68

TOP


பிறப்பு (7)

உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் – புகார்:2/40
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் – புகார்:10/241
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் – மது:11/101
குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – மது:13/89
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – வஞ்சி:25/56
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – வஞ்சி:27/94
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – வஞ்சி:30/97

TOP


பிறர் (5)

சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – புகார்:5/38
அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர் – புகார்:5/130
பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – புகார்:7/91
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – மது:12/165
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – வஞ்சி:30/195

TOP


பிறர்க்கு (1)

வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – புகார்:1/33

TOP


பிறவா (4)

மலை-இடை பிறவா மணியே என்கோ – புகார்:2/77
அலை-இடை பிறவா அமிழ்தே என்கோ – புகார்:2/78
யாழ்-இடை பிறவா இசையே என்கோ – புகார்:2/79
பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – புகார்:5/169

TOP


பிறவி (1)

போதார் பிறவி பொதி_அறையோர் என – புகார்:10/191

TOP


பிறவியர் (1)

பண்டை பிறவியர் ஆகுவர் ஆதலின் – வஞ்சி:30/60

TOP


பிறவும் (2)

கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – மது:15/216,217
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்
ஆரிய மன்னர் அழகுற அமைத்த – வஞ்சி:27/21,22

TOP


பிறவோர் (1)

பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – வஞ்சி:30/194

TOP


பிறழ (2)

கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ
தாரும் மாலையும் மயங்கி கையற்று – புகார்:2/34,35
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/165

TOP


பிறழா (5)

பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் – புகார்:10/47
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை – புகார்:10/162
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – மது:14/130
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா
கட களிறு அடக்கிய கருணை மறவ – மது:15/52,53
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – வஞ்சி:26/87

TOP


பிறழும் (1)

கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின் – வஞ்சி:28/23

TOP


பிறன் (2)

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – புகார்:0/26
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – மது:21/3

TOP


பிறிது (2)

பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல் – புகார்:2/64
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் – புகார்:4/50

TOP


பிறை (5)

அந்தி வானத்து வெண் பிறை தோன்றி – புகார்:4/23
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய – மது:11/72
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – மது:22/87
அந்தி செக்கர் வெண் பிறை தோன்ற – வஞ்சி:27/146
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – வஞ்சி:27/147

TOP


பிறையுடன் (1)

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் – மது:12/155

TOP


பிறையும் (1)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி – மது:23/1

TOP


பின் (37)

குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின்
முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு – புகார்:3/85,86
பின் வழி நின்றது முழவே முழவொடு – புகார்:3/141
ஏவலன் பின் பாணி யாது என – புகார்:7/17
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – புகார்:7/37
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின்
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/107,108
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – புகார்:9/29
பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின்
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – புகார்:10/243,244
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – மது:11/137
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – மது:12/39
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல – மது:15/55
செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின்
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – மது:16/37,38
நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – மது:16/106
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின்
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – மது:16/126,127
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – மது:21/12
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – மது:23/19
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – மது:23/163,164
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்ட பின்
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – மது:23/178,179
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – மது:23/179
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – மது:23/193,194
வாடா வஞ்சி மா நகர் புக்க பின்
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – வஞ்சி:25/180,181
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய – வஞ்சி:26/1
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – வஞ்சி:26/166
பின் தேர் குரவை பேய் ஆடு பறந்தலை – வஞ்சி:26/241
கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின்
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – வஞ்சி:27/2,3
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – வஞ்சி:27/114
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின்
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – வஞ்சி:28/82,83
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – வஞ்சி:28/96
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின்
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை – வஞ்சி:28/115,116
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – வஞ்சி:28/199
வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும் – வஞ்சி:28/214
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – வஞ்சி:29/36
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – வஞ்சி:29/79
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின்
தேவந்திகையை செவ்விதின் நோக்கி – வஞ்சி:30/2,3
தலைக்கோல் ஆசான் பின் உளன் ஆக – வஞ்சி:30/20
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின்
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – வஞ்சி:30/37,38
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – வஞ்சி:30/38
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின்
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – வஞ்சி:30/170,171

TOP


பின்_நாள் (1)

கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள்
கண்ணகி-தன் கோட்டத்து – வஞ்சி:29/36,37

TOP


பின்பகல் (1)

பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன் – மது:22/29

TOP


பின்றா (1)

பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் – வஞ்சி:25/144

TOP


பின்றை (2)

வந்த வாரம் வழி மயங்கிய பின்றை
ஆறும் நாலும் அ முறை போக்கி – புகார்:3/153,154
பின்னையும் அ முறை பேரிய பின்றை
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – புகார்:3/156,157

TOP


பின்றையும் (1)

பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – மது:11/165

TOP


பின்றையை (1)

பின்றையை பாட்டு எடுப்பாள் – மது:17/81

TOP


பின்னர் (15)

மண்ணிய பின்னர் மாலை அணிந்து – புகார்:3/122
அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர்
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து – புகார்:3/147,148
காவிரி நாடும் காட்டி பின்னர்
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி – புகார்:6/31,32
வான் ஊர் மதியமும் பாடி பின்னர்
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – புகார்:6/37,38
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர்
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – புகார்:7/229,230
துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – புகார்:9/30
மறை முது முதல்வன் பின்னர் மேய – மது:12/164
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர்
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி – மது:13/29,30
வாலாமை நாள் நீங்கிய பின்னர்
மா முது கணிகையர் மாதவி மகட்கு – மது:15/24,25
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – வஞ்சி:26/91,92
ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர்
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – வஞ்சி:26/104,105
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – வஞ்சி:26/172
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு – வஞ்சி:27/159,160
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர்
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் – வஞ்சி:28/79,80
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர்
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – வஞ்சி:30/85,86

TOP


பின்னரும் (1)

ஆங்கனம் பாடிய ஆய்_இழை பின்னரும்
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – புகார்:7/203,204

TOP


பின்னரே (1)

பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – புகார்:9/64

TOP


பின்னிய (1)

காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – புகார்:6/89,90

TOP


பின்னிலை (1)

முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி – மது:23/16

TOP


பின்னும் (1)

ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும்
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – வஞ்சி:28/130,131

TOP


பின்னை (3)

பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – மது:17/59
தொழுனை துறைவனோடு ஆடிய பின்னை
அணி நிறம் பாடுகேம் யாம் – மது:17/91,92
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – மது:17/111

TOP


பின்னை-தான் (1)

பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – மது:17/69

TOP


பின்னையும் (2)

பின்னையும் அ முறை பேரிய பின்றை – புகார்:3/156
பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர் – மது:13/136

TOP


பின்னையொடும் (1)

மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும்
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – மது:17/113,114

TOP


பின்னோர் (1)

அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின் – மது:15/109

TOP


பின்னோர்க்கு (2)

தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – மது:14/21,22
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் – மது:16/44

TOP